புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
prajai
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Rutu
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
18 Posts - 2%
prajai
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Rutu
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
இராம காவியம் - Page 10 Poll_c10இராம காவியம் - Page 10 Poll_m10இராம காவியம் - Page 10 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:23 am

சூடாமணி்

பின்னர் தன் மடியில் முடித்து வைத்திருந்த சூடாமணியை எடுத்து அடையாளமாக கொடுத்தாள் அம்மணி. இளம் ஞாயிறுபோல் அது ஒளி செய்தது. இதனை அநுமார் தொழுது வாங்கினார். கண்களில் ஒற்றிக் கொண்டார். அதனை துணியில் முடிந்து பத்திரப்படுத்திக் கொண்டார். சூடாமணி என்பது செய்யா என்ற வாய் பாட்டின்படி சூடுகின்ற மணி எனக் கருதுக.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்துடன் சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி என்ற மூன்று மணிகள் தோன்றின. சிந்தாமணியை இந்திரன் அடைந்தான். இந்திரன் விநாயகருடைய திருக்கரத்தில் இருக்கும் தங்கக் கலசத்தில் பதித்து விநாயகருக்கு ஈந்தான். அந்தச் சிந்தாமணியுடன் கூடிய தங்கக் கலசத்தால் விநாயகர் நாள்தோறும் அம்மையப்பரை வழிபடுவார்.

இரண்டாவது கௌஸ்துபமணியை நாராயணர் திருமார்பில் அணிந்து கொண்டார். மூன்றாவது சூடாமணியை, பாற்கடல் கடையத் துணிந்த ஙநிமிங என்ற மன்னனுக்கு அளித்தார்கள். இவன் பூசித்து வந்தான். இவன் மரபில் வந்த சீரத்துவச ஜனகர், தமக்கு வேறு ஆண் சந்ததி இல்லாமையால் இதைத் தலையில் சூடும் அணிகலனாகச் செய்து, தம் தவப்புதல்வி சீதா தேவிக்குத் தந்தார். இந்த மணியை உயிரினும் உயர்ந்ததாக எண்ணிச் சீதா தேவி இதனைப் பூசித்து வந்தாள். இந்த மணியைத்தான் இப்போது மாருதியிடம் தேவி தந்தாள்.

சூடாமணி மிகுந்த மகத்துவம் உடையது. இந்தச் சூடாமணி போல் முருகப் பெருமானுடைய திருமேனி ஒளி வீசும் என்று அருணகிரிப் பெருமான் கூறுகின்றார்.

அசோக வனத்தை அழித்தல்

அநுமார் பிராட்டியாரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். நாம் வந்து திருடனைத் தேள் கொட்டியது போல் வெறுமையாகத் திரும்பிப் போவது நன்றன்று. அந்த அசோகவனத்தை அழித்தால் அரக்கர்கள் வருவார்கள், அரக்கரை அழித்தால் இராவணன் வருவான். அவனைக் கண்டு உரையாடி மீளலாம் என்று கருதினார்.

வானோங்கி வளமோங்கிச் செழித்திருக்கின்ற பூமரங்களையும், மாமரங்களையும் வேராடு அழித்துப் பிடுங்கி வீசினார். சில மரங்களில் தூக்கணாங்குருவி கூடு கட்டியிருந்தன. அம்மரங்களைப் பிடுங்கி வானிலே வீசிய போது அக்குருவிகள் கூட்டுடன் சுவர்க்கத்தை அடைந்தன. புண்ணியம் செய்தவர்கள் கூண்டுடன் கைலாசம் போவார்கள் என்பது பழமொழி. இங்கே இப்பொழுது அநுமார் சீற்றத்துடன் செய்த செய்கையே குருவிகளுக்குக் கூட்டுடன் சுவர்க்கம் கிடைத்தது. அவர் கருணையோடு அருளியிருந்தால் என்ன கிடைக்காது?

மாருதி ஓர் ஓம மண்டபத்தைப் பிடுங்கி இலங்கை மீது எறிந்தார். அதனால், அரக்கர்கள் பலர் மாண்டார்கள். காவல் செய்கின்ற தேவர்கள் இராவணனிடம் ஓடி வணங்கி, ஞமன்னர் பெருமானே, ஒரு வானரம் வந்து அசோக வனத்தை முற்றிலும் அழித்துவிட்டதுஞ என்று கூறினார்கள். ஆதித்தனும் நுழையாத அசோக வனத்தை ஒரு குரங்கு அழித்தது என்று மூடரும் மொழியார். நீங்கள் என்ன கனவு கண்டீர்களா? என்று தோள் குலுங்கச் சிரித்தான் இராவணன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:26 am

கிங்கரர் வதை

கிங்கரர் என்ற ஒருவகை அரக்கர்களை அழைத்து, நீங்கள் சென்று அக்குரங்கை உயிருடன் பிடித்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். கடல் கொந்தளித்துக் கரை கடந்து வருவது போல் கிங்கிரர் அநுமார் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள். போர் என்றால் அவர்கட்குத் தேன் போல இனிக்கும். இடி போல முழங்குவார்கள். சக்கரம், உலக்கை, தண்டாயுதம், வாளாயுதம், இரும்புவளைத்தடி, சம்மட்டி, பிண்டிபாலம், சூலம், வச்சிராயுதம், குந்தம், மழு முதலிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வந்தார்கள்.

அநுமார் அந்த அரக்கர் சேனையைக் கண்டு அதிக மகிழ்ச்சியடைந்தார். விண்ணளாவிய ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி நான்கு திசைகளிலும் சக்கரம்போல் சுழற்றிப் போர் புரிந்தார். தாள்களால் சிலரைக் கொன்றார். தடக்கையால் சிலரைக் கொன்றார். தோள்களால் பலரை மாய்த்தார். அரக்கர் கரங்களில் இருந்த வாள்களால் பலரைக் கொன்றார். அரக்கர் அனைவரும் மாண்டு ஒழிந்தாரகள். தேவர்கள் மகிழ்ந்து அநுமன்மீது மலர்மழை பொழிந்தார்கள். காவல் புரியும் தேவர்கள் இராவணன் முன்சென்று அரக்கர்கள் மாண்டார்கள் என்று சொல்ல அஞ்சினார்கள். வாய் குழறினார்கள். பூமியில் கால் தோயாது கையால் காட்டி உரைத்தார்கள்.

இராவணன் பெருஞ் சீற்றம் அடைந்து, ஜம்புமாலி என்ற சேனைத் தலைவனை, நீ சென்று அந்த வானரத்தை உயிருடன் பிடித்து வா என்று பணித்தான்.

ஜம்புமாலி இராவணனுடைய கட்டளையைக் கேட்டு இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே. இத்தனை வீர்கள் இருந்தும் என் தலைவன் என்னை மதித்து இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கினானே? நான் பெரிய பாக்கியசாலி என்று எண்ணி உள்ளம் உவந்து சேனைகள் சூழப் போருக்குப் புறப்பட்டான்.

தோமரம், மழு, வச்சிராயுதம், அங்குசம், வேலாயுதம், சக்ராயுதம், வில், தண்டாயுதம் முதலிய ஆயுதங்களைத் தாங்கிய வீரம் மிகுந்த அரக்கர்கள் அவனைச் சூழ்ந்து சென்றார்கள். தேர் வீரர்கள் பதினாயிரவர், யானை வீரர்கள் இருபதினாயிரவர், குதிரை வீரர்கள் நாற்பதினாயிரவர், காலாட்கள் எண்பதினாயிரவர், அவனைச் சூழ்ந்து ஆரவாரஞ் செய்து மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

அநுமார் தோரண கம்பத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார். ஆழமான குளத்தைக் கண்டால் நீந்துகின்றவனுக்கு மகிழ்ச்சி, பெருங் கூட்டத்தைக் கண்டால் பிரசங்கம் செய்கின்றவருக்கு மகிழ்ச்சி. அதுபோல், போரில் மிகுந்த சேனைகளைக் கண்டால் வீரனுக்கு மகிழ்ச்சி. அநுமார் இராமருடைய திருவடியைச் சந்தித்து அங்கு ஒரு பக்கம் இருந்த தண்டாயுதத்தை எடுத்தார். இயமனைப் போல் சுழன்றார். பானைகளை உடைக்கும் கைத்தடியானைப் போலச் சேனைகளைக் கொன்று குவித்தார். பிணமலை குவிந்து உதிர ஆறுகள் ஓடின. ஜம்புமாலி தனித்து நின்றான். அநுமார் அவன்மீது கருணை கொண்டு, அறிவில்லாத வீரனே! உனக்கு உயிர்ப் பிச்சை தருகின்றேன். போ! என்றார். ஜம்புமாலி அநுமாருடைய கருணைத்திறத்தைக் கண்டு வியந்தான். அநுமாரை எதிர்த்துப் போர் புரிந்து மாண்டான். ஒரு தூதன் இராவணனிடம் ஓடிப் போய் ஜம்புமாலி மாய்ந்ததைக் கூறினான். அரசர் தலைவா! குரங்கு ஒன்றுதான் அசுர சேனைகளை அழித்தது என்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 1:26 am

பஞ்ச சேனாதிபதிகள்

இதனைக் கேட்ட இராவணன் எரி மலைபோல் சீறினான். என்னுடைய இலங்கை ஆட்சி நன்று, நன்று, இலைகளையும் மலர்களையும் உண்ணுகின்ற ஒரு குரங்கு இலங்கை வந்து என்னுடைய பலநாள் வளர்த்த அசோகவனத்தை அழித்துக் கிங்கிரர்களையும் ஜம்புமாலியையும் கொன்று ஊருக்கும் போகாமல் இன்னும் போருக்கு என்று இருக்குமானால், இதனைவிடப் புதுமை என்ன இருக்கின்றது? தேரைக் கொண்டு வருக. நானே போர் புரியச் செல்லுவேன் என்றான்.

அவனுடைய சீற்றத்தைக் கண்டு அனைவரும் அஞ்சினார்கள். அப்போது, பஞ்சசேனாதிபதிகள் விருட்பாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிராசன், பாசகர்ணன் என்று பேருள்ளவர்கள் இராவணனைப் பணிந்து, எங்கள் தனிப் பெருந்தலைவா! ஓர் எறும்பைக் கொல்ல மாவீரன் தண்டாயுதத்தைத் தாங்கிப் புறப்பட்டுப் போவதுபோல், ஒரு குரங்கைக் கொல்லப் போவது தங்கள் வீரத்துக்கு இழுக்கல்லவா? எங்களுக்கு அநுமதி கொடுங்கள். புழுவைக் காலால் தேய்ப்பதுபோல அக்குரங்கை அழித்து வருவோம் என்றார்கள்.

இராவணன் புன்முறுவல் பூத்து, நன்று கூறினீர்கள் நல்லது. சென்று வென்று அக்குரங்கைப் பற்றிக் கொண்டுவாருங்கள் என்றான். பஞ்ச சேனாதிபதிகள் சதுரங்கசேனையுடன் போருக்குப் புறப்பட்டுச்சென்றார்கள். அவ்வாறு, அரக்க வீரர்கள் போருக்குப் போகும்போது, அவர்களின் மனைவி மார்களும் புதல்வர்களும் அவர்களை இடைமறித்து அழுது தொழுது, போருக்குப் போக வேண்டாம் போனால் திரும்பி வரமாட்டீர்கள். வந்திருப்பது வானரம் அன்று. இலங்கையை அழிக்க வந்த பூதமாகும். காதலால் கூறுகின்றோம், போகவேண்டாம் என்று கூறிப் புலம்பினார்கள்.

அசுரர்கள் அவர்கட்குச் சமாதானம் கூறிப் போர்க்களம் போனார்கள். சேனாதிபதிகள், அந்த வானரம் எங்கே? என்று கேட்டார்கள்.

அங்கிருந்த தூதர்கள், அதோ, அந்தக் தோரணத் தூணின் மீது இருக்கின்றது பாருங்கள். அது குரங்கன்று. அசுர குலத்தை அழிக்க வந்த கடவுளாகும் என்றார்கள். பஞ்சனோதிபதிகளுடன், ஐம்பதாயிரம் தேர்கள், ஐம்பதினாயிரம் யானைகள், ஒரு லட்சம் குதிரைகள், இரண்டு லட்சம் பதாதிகள், கடல் போல் முழங்கியபடி வந்தன. உதிரச்சேற்றில் தேர்கள் வேகமாகச் செல்ல முடியாமல் தவித்தன.

அநுமார் பேருருக்கொண்டு யானையுடன் மற்றொரு யானையை மோதியும், தேருடன் மற்றொரு தேரை மோதியழித்தும், அவர்கள் கையில் உள்ள ஆயுதங்களைப் பறித்தும், அந்த ஆயுதங்களாலேயே அவர்களைக் கொன்றும், ஊழிக் காலத்தில் எழுகின்ற அக்கினியைப்போல் அந்த அசுர சேனைகளை அழித்து, ஐந்து சோனதிபதிகளையும் உதைத்து வதைத்தார்.

சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களையும் ஞானி ஒருவரே அடக்குவது போல அநுமார் ஒருவரே பஞ்சசேனாதிபதிகளையும் வதைத்தார். ஆன்மாக்களாகிய நமக்கு மிக்க அல்லல் தருவது இந்த ஐம்புலன்களேயாகும். ஐம்புல வேடரின் அயர்ந்தனை என்பது சிவஞானபோதம். வளைத்து நின் றைவர் கள்வர் மனத்திடை துயரம் செய்து.. . என்கிறார் அப்பர்பெருமான்.

ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார் மலர் இட்டுனதாள். சேரவொட்டார் ஐவர் செய்வதென்யான் என்கின்றார் அருணகிரிநாதர். பஞ்ச சேனாதிபதிகள் ஐம்புலன்களை ஒத்தார், அநுமார் அறிவைஒத்தார்.

காவல் வீரர்கள் ஓடி இராவணனைப் பணிந்து துக்கப்படுவார் போல் நடித்து, வேந்தே, சேனைகளுடன் சென்ற ஐம்பெருஞ் சேனைத் தலைவர்கள் அக்குரங்கினால் கொல்லப் பட்டார்கள். அந்த வானரம் சோம்பி இருக்கின்றது என்றார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 1:44 am

அட்ச குமாரன்

இலங்கை முழுவதும் மாதர்களின் அழுகை ஒலி நிறைந்தது. மகன் மாண்டான் என்றும், மணவாளன் மாண்டான் என்றும், உடன் பிறந்தான் இறந்தான் என்றும் அரக்கியர்கள் வாய்விட்டு அழுதார்கள்.

பரம பதிவிரதையாகிய சீதாதேவி ஒருத்தியை அழவைத்த பாவம் இன்று இலங்கையே அழுகின்றது.

பஞ்சசேனாதிபதிகள் மாண்டார்கள் எனக் கேட்ட இராவணன் பெருஞ்சீற்றத்தை அடைந்தான். மீண்டும் தானே போருக்கு ஆயுத்தமானான். அப்போது அவனுடைய கடைசி மகன் அட்ச குமாரன் தந்தையை வந்தனம் புரிந்து, தந்தையேஸ நான் ஒருவன் இருக்கின்றேன் என்ற எண்ணமே இல்லையா? இந்த வாய்ப்பை எனக்கு கொடுங்கள். தூணிலே இருந்து வந்த நரசிங்கனே என்றாலும், உலகை ஒரு பந்துபோலத் தன் தந்தத்தால் தூக்கிய வராகமேயானாலும் நான் கொல்ல வல்லேன். என் ஆற்றலை உலகம் அறிந்து பாராட்டும், எனக்கு கட்டளையிடும். ஓரு நொடியில் குரங்கைப் பற்றி வருவேன் என்றான்.

இராவணன் மகனை மார்புறத் தழுவி விடை கொடுத்து அனுப்பினான்.

அட்ச குமாரன் தேரில் ஏறியபோது அவனுடன் பன்னீராயிரம் இளம் புதல்வர்களும், மந்திரிகளின் மைந்தர்களும், சேனைத் தலைவர்களின் மைந்தர்களும், வேறு வேறு பதவியில் உள்ளவர்களின் மைந்தர்களும், இராவணனுக்குத் தேவமாதர்களின் வயிற்றில் பிறந்தவர்களும், நான்கு லட்சம் இளம் வீரகுமாரர்கள் அட்ச குமாரனைச் சூழ்ந்து சென்றார்கள்.

இவ்வாறு செல்லுகின்ற மைந்தர்கட்குப் பின்னே காகங்களும், கழுகுகளும், பேய்களும், அந்த அரக்கர்கள் எண்ணிலாத காலமாகச் செய்து வந்த தீவினையும் தொடர்ந்து சென்றன. போர்ப் பறைகள் முழங்கின. மாதர்களின் அழுகை ஒலியும், போர்ப்பறை ஒலியும் எங்கும் முழங்கின. இராக்கதர்கட்கு இடத் தோள்களும் இடக்கண்களும் துடித்தன.

தோரணத் தூணின் உச்சியில் அமர்ந்து ராம் ராம் ராம் என்று ஜபித்துக் கொண்டிருந்த அநுமார் அட்சகுமாரன் சேனைகள் சூழ வருகின்ற காட்சியை கண்டார். இவர் இந்திரஜித்தோ? இராவணனோ? என்று ஐயுற்றார்? பல தலைகள் இல்லாமையால் இராவணன் அல்லன், இவன் மிக்க இளமையாக இருப்பதனால் இந்திரஜித்தும் அன்று, இன்று நமக்கு நல்ல வேட்டைதான்! என்று எண்ணினார். அந்தச் சேனைகளை நோக்கித், தன் அழகிய தோள்களை நோக்கி, இராமபிரானை அகக் கண்களால் நோக்கித் தொழுதார்.

அட்ச குமாரன் அநுமாரைப் பார்த்து, அலட்சியமாகத் தோள் குலுங்க நகைத்தான். இந்தச் சிறு குரங்கா இத்தனை வீரர்களைக் கொன்றது? என்று கூறினான்.

அட்ச குமாரனுடைய சாரதி, ஐயனே! இதனைக் குரங்கென்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். உங்கள் தந்தையாரை வாலால் கட்டியடக்கிய வாலியுங் குரங்குதானே? வீரம் எங்கெங்கோ இருக்கும் என்றான்.

காய்ந்து உலர்ந்த புல்வனத்தில் கனல் நுழைந்தது போல் அநுமார் சேனைக்கூட்டத்தில் நுழைந்து, அவர்கள் ஏந்தியிருந்த ஆயுதங்களை பிடுங்கி, அவற்றினாலேயே அவர்களைக் கொன்று அழித்தார். அத்தனைப் பேர்களின் உயிரைப் பற்றிக் கொண்டு போக இயமனுக்கு ஆயிரம் கோடி தூதர்கள் இருப்பர் போலும். அரக்கர் சேனைகளை அழித்துவிட்டு, அட்சகுமாரன் தேர்மீது தாவிக் குதித்து, அவன் வில்லைப் பறித்து நிலத்தில் இட்டுத் தமது பாதத்தால் தேய்த்துக் கொன்றார். அப்படித் தேய்த்துக் கொன்றவர், உலகம் தேய்ந்து அழியினும் தேயாத மாருதி என்று உணர்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 1:44 am

தேவியைக் கண்டேன்

உலகில் உயிர் என்றால் வெல்லம்போல் இனிக்குந்தானே!

சில அரக்கர்கள் உயிர்விடத் துணியாதவராகிக் கடலில் மீன் உருவாகி மறைந்தார்கள். சிலர் பசுக்களாய்ப் புல் மேயலானார்கள், சிலர் பறவைகள் ஆனார்கள். சிலர் அந்தணர் வடிவங் கொண்டார்கள்.

சிலர் பெண்கள் வடிவங்கொண்டு கூந்தலை வகிர்ந்து பின்னல் இடுவராயினார்கள். சிலர் மாருதியே சரணம் சரணம் என்றார்கள். சிலர் கழுத்தில் ஜெபமாலையணிந்து கையில் ஜால்ராவை வைத்துத் தாளம் போட்டு அரி பஜனை செய்தார்கள். சாவதற்கு அஞ்சி, பாவத்துக்கு அஞ்சாத அரக்கர் இத்தனை வேடங்கள் போட்டு உயிர் தப்பினார்கள். இதனை எண்ணுந்தொறும் சிரிப்பு வருகின்றது. உயிர் என்றால் யாருக்குத்தான் இனிக்காது?

சாதலின் இன்னாத தில்லை என்றார் தெய்வப் புலவர். அரக்கர்களின் கள்ள வடிவைக் கண்டு மாருதி புன்னகை பூத்து அவர்கட்கு உயிர்ப்பிச்சைத் தந்தார்.

காவல் தேவர்கள் இராவணன் முன்னேபோய், களிக்கும் சிந்தையுடன் வேந்தரே! நமது கடைக்குட்டி அட்சகுமாரர் வீர சுவர்க்கம் சேர்ந்தார்! என்றார்கள்.

இதனைக் கேட்ட மயன் மகளாகிய வண்டோதர் வாய் விட்டுப் புலம்பியழுதாள். இராவணன் அழுதான். இலங்கையே அழுதது. அந்த அழுகையொலி கடல் ஒலியை அடக்கியது. கண்ணீரும் புண்ணீரும் ஓடின.

இந்திரஜித்து தன் மனைவியருடன் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் இன்ப வெள்ளத்தில் முழுகியிருந்தான். செவியில் இலங்கை மாதர்களின் அழுகை ஒலி கேட்டது. அருகில் இருந்தவரைப் பார்த்து, எங்கும் அழுகை ஒலி கேட்கின்றதே. இதற்கு என்ன காரணம்? என்று வினவினான்.

அவனுடைய ஏவலர்கள், வேந்தரே! பாரத நாட்டில் இருந்து ஒரு வாநரம் வந்து அசோக வனத்தை அழித்தது. தங்கள் ஆட்சியைப் பழித்தது. கிங்கரர், ஜம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகளின் உயிர்களை ஒழித்தது. தங்கள் கடைசித் தம்பி அட்ச குமாரரையும் கொன்றுவிட்டது. இதனால், இலங்கை மாநகரமே துன்புறுகின்றது என்றார்கள்.

இதனைக் கேட்டு இந்திரஜித்து அதிர்ச்சியடைந்தான். ஒரு குரங்கா இத்தனை பேரையும் வதைத்தது? அசுர ஆட்சி மாட்சி அழிந்ததே. இது அமரர்கள் சூழ்ச்சியாகும் என்று எண்ணித் தேர்மீது ஏறி இராவணனுடைய பொன் மாளிகையை அடைந்தான். தந்தையாரைப் பணிந்தான். தந்தையே, உமக்கு அறிவு கூர் மழுங்கிவிட்டது போலும். தீயின் முன்னே பஞ்சு மூட்டைகளை அனுப்புவதுபோல் அனுப்பி, அத்தனை பேரையும் அழித்து ஒழிந்து போகுமாறு செய்தீர். அரக்கர்களைக் குரங்கு கொல்லவில்லை. நீர்தான் கொன்றுவிட்டீர். அசுர குலத்துக்கு அடங்காப் பழியை உண்டாக்கிவிட்டீர்! அது வாநரம் அன்று. இலங்கையை அழிக்க வந்த பூதமாகும். நான் போய்க் கட்டியிழுத்து வருவேன் என்று சீறி, வெற்றித் தேர்மீது ஏறி அசுர சேனைகள் புடைசூழப் புறப்பட்டான்.

போர்களத்தில் சென்று மாண்ட சேனைகளின் உடம்புகள் மலை போலவும், உதிர ஆறுகளையும் கண்டான். இத்தனை வீரர்களையும் ஒருவனாக நின்று போர் செய்து அழித்த அந்த வாநரத்தின் வீரம் மிகவும் பாராட்டுதற்குரியது. உகாந்த காலத்து ருத்திரமூர்த்திக்கு நிகரான அவ்வாநரத்தின் ஆற்றல் அளவிட முடியாதது. தன் தம்பி அட்ச குமாரன் நிலத்திலே கருவேப்பிலைத் துவையல் போல் தேய்ப்புண்டிருப்பதைக் கண்டு உதிரக் கண்ணீர் வடித்தான். என் தம்பியா தேய்ந்தான்? இல்லை, என் தந்தையாரின் புகழ் தேய்ந்தது. இனி எனக்கு என்ன வாழ்வு? என்றெல்லாம் எண்ணினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 1:44 am

அநுமார் விசுவ ரூபத்தை எடுத்து இந்திரஜித்தின் சேனைகளைக் கொன்றார். இந்திரஜித்து அநுமாருடைய பேருருவைக் கண்டு மயங்கினான். வாநரமே, நீ நல்லை, நல்லை. உனக்கு நிகரானவர் இல்லை, இல்லை. யாருடனும் போர் செய்ய வல்லை, வல்லை. இன்று உன் ஆயுளுக்கு எல்லை, எல்லை என உணர்க என்றான்.

அநுமார் இந்திரஜித்தின் வார்த்தைகளைக் கேட்டு அண்டங்கள் குலுங்க ஆர்த்தார். திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளைப் போல் சிரித்தார். ஏ மூடனே! உங்கள் வாழ்நாளுக்கு எல்லையும் நீங்கள் தொடர்ந்து உலகங்கட்கு செய்த கொடுமைக்கு எல்லையும், உங்கள் ஆட்சிக்கு எல்லையும் கொண்டு வந்திருக்கிறேன் என்றார்.

சிறியதாய் சொன்ன திருமொழியைச் சென்னியில் சூடி, நெறியில் நின்ற இராமபிரானுடைய புகழ்போல், விண்ணளவும் வளர்ந்து தன் யோக சக்தியால் பேருருக்கொண்டு நின்ற அநுமாரை, இந்திரஜித்து தலை நிமிர்ந்து எட்டி எட்டிப் பார்த்தான். பாதிக்குமேல் திருமேனியைக் காணவில்லை.

அநுமார் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்று, அவனுடைய வில்லை முறித்து எறிந்தார். ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி அவன் தலையில் அடித்தார். அவனுடைய தேர்களை யெல்லாம் அழித்தார்.

இந்திரஜித்து பிரமாஸ்திரத்தை எடுத்து, வில்லில் தொடுத்து, மானசீகமாக, அப்படைக்கலத்துக்குத் தூப தீப நிவேதனங்கள் செய்து அநுமார் மீது ஏவினான். அப்படைக்கலம் பெரிய பாம்பு வடிவாகி அநுமாரைப் பிணித்தது. ஆஞ்சநேயர் மேருமலைபோல் சாய்ந்தார். அவர் முயன்றால் அந்த அஸ்திரத்தை அழித்திருப்பார். அயன் படையை அலட்சியப் படுத்தக்கூடாது. கட்டுண்டு அடங்கிப் போவது நல்லது.

அன்றி இராவணனைக் கண்டு, அவனுக்கு அறநெறிகளைக் கூறலாம். அதனால், அவன் திருந்தி, செய்த பிழைக்கு வருந்தி, சீதா தேவிக்காக எம்பெருமானை பொறாது உய்வு பெறக்கூடும் என்று கருதி, அரக்கர்கள் பாசத்தைப் பற்றிக் கொண்டுவரச் சென்றார்.

அநுமார், தான் வீசிய மரங்களாலும், வீரர்களை எறிந்ததாலும் அழிந்திருந்த இலங்கையைப் பார்த்துக் கொண்டே சென்றார்.

அரக்கியர்கள் அநுமனைக் கண்டு, இந்தக் குரங்குதான் என் கணவனைக் கொன்றது. இந்தக் குரங்குதான் என் மகன்களைக் கொன்றது, இந்தக் குரங்குதான் என் தந்தையைக் கொன்றது என்று கூறி இகழ்ந்தார்கள்.

இந்தக் குரங்கை அடியுங்கள், கடியுங்கள், குட்டுங்கள் உதையுங்களஞ் என்று சில அரக்கியர் ஆரவாரஞ் செய்தார்கள். இந்தச் செய்தியைக் கேட்ட சீதாதேவி பெரிதும் வருந்தி அழுது மூர்ச்சித்தனள். அநுமாருடைய நலத்துக்காக இறைவனை வேண்டிக் கொண்டனள்.

அநுமாரைக் கட்டி இழுத்துக்கொண்டு மேகநாதன் வரும் செய்தியை உரைத்தவர்கட்கு இராவணன் பரிசு தந்தான்.

இந்திரஜித்து இராவணனுடைய அதி அற்புதமான அ,ழகிய அரண்மனைக்கு அநுமனை அழைத்துச் சென்று. அநுமாரைக் காட்டி வணங்கி, தந்தையே! இந்த வாநரம் குரங்கு அன்று. சிவமூர்த்தியோ, திருமாலோ வாநரவடிவில் வந்திருக்கின்றார்கள் என்று கூறினான்.

உறங்கும்போது கண்ட இராவணனை இப்போது அநுமார் விழித்திருக்கும்போது காண்கின்றார். ஆலகாலம் போலச்சீற்றம் எழுந்தது. அவனுடைய தலைகளைப் பாதத்தால் பனம்பழம்போல் உருட்டிப்பதைக்கப் பதைக்க வதைக்கட்டுமா? இவன் எலும்புகளை ஒடிக்கட்டுமா? என்று எண்ணினார். பின்னர், தம் கருத்தை மாற்றிக் கொண்டார். இவன் சிவனிடம் வரம் பல பெற்றவன். இவனைக் கொல்வது அரிது. இவனாலும் என்னைக் கொல்வது அரிது. போர் புரிவதால் நாள் வீணே கழியும். சீதாதேவி இன்னும் ஒரு மாதந்தான் இலங்கையில் இருப்பேன். பின்னர் உயிர் விடுவேன். என்று கூறியுள்ளார். ஆதலால், நாம் காலத்தை வீணாகக் கழிக்கக் கூடாது. என்று எண்ணிக் கரைகடவாத திரைகடல் போல் நின்றார்!.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 29, 2010 12:30 am

இராவணனும் அநுமாரும்

இராவணன் மாருதியை நோக்கி வினவுகின்றான். ஏ வாநரமே? நீ சக்கராயுதமா? வஜ்ராயுதமா? மூலாயுதமா? பிரமதேவனா? பூமியைத் தாங்குகின்ற ஆயிரந் தலைகளையுடைய ஆதிசேஷனா? இந்த இலங்கையில் போர் புரிந்து அழிக்கும் பொருட்டுப் பேரையும் வடிவத்தையும் மறைத்து வந்திருக்கின்றாய். உயிர்களைக் கவர்கின்ற நீலநிறமுடைய காலனா? சிரவுஞ்ச மலையைப் பிளந்த வேலேந்திய முருகக் கடவுளா? தென்திசையில் வாழ்கின்ற அகத்திய முனிவரா? எண்திசைக் காவலரில் நீ யாவன்? அந்தணர்கள் அபிசார வேள்வி செய்து இலங்கையை அழிக்க அனுப்பிய அஞ்சாமையுடைய பூதமா? பிரமதேவன் அனுப்பிய வலிமை மிகுந்த தெய்வமா? நீ யார்? உன்னை யார் இங்கே அனுப்பியவர்? உண்மையை உரைப்பாயாக என்று வினவினான்.

அநுமார், இரக்கமில்லாத அரக்கனே நீ கூறிய அனைவரும் அல்லன். அந்த அற்பமான வலிமையுடையவர்க்கு ஏவல் புரிகின்றவன் நான் அல்லன், தாமரைக் கண்ணாகிய ஒரு சமானமில்லாத வில்லாளியின் தூதன் யான். இலங்கை எய்தினேன். அந்த வில்லாளி யார் என்று அறிய விரும்புகின்றாயா? தேவர், மனிதர், முனிவர் முதலிய அனைவராலும் முடிக்க முடியாத அரிய செயலைச் செய்பவர். இராவணா நீ பலகாலமாகச் சம்பாதித்த வலிமையையும், தேவர்கள் அளித்த வரங்களையும் , உன் சேனைகளையும் உன் பெருமிதமான வாழ்வையும் ஒரு கணையால் அழிக்க வல்லவர்.

அறிவில்லாதவனே, ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள். எக்காலமும் கடந்த மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, மூலத்தையும் கமண்டலத்தையும், சக்கரத்தையும் துறந்து, ஆலம் இலையும் மலரையும் கைலையையும் விடுத்து வந்துள்ளார். தருமத்தை எங்கும் நிலை நிற்கச் செய்து, மக்கள் மீதுள்ள கருணையால் வேதங்கள் கூறிய நீதி நெறிகளை மக்கள் தெரிந்து ஒழுகும்படி, அவர்களைச் செந்நெறியில் செலுத்தித் தீயவரை அழித்துத் தூயவருடைய துன்பத்தைத் தொலைத்துத், தன் திருவடியைச் சிந்திப்பாருடைய பிறப்பை அறுக்கும் பரமாத்மா பிறந்தார். எங்கே பிறந்தார். கிணற்றிலே வீழ்ந்தவனைக் காக்கத் தாமும் கிணற்றில் வீழ்ந்து தூக்கிக் காப்பதுபோல் அப்பரமாத்மா வந்து பிறந்தார் என உணர்க.

அசுர வேந்தனே அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து ஓருருவாகி, அயோத்தியில் அவதரித்த இராமபிரானுக்கு அடியவன் யான், என் பேர் அநுமான். சீதாதேவியைத் தேடி வந்த அங்கதனுடைய தூதன்.

இராவணன் தோள் குலுங்க நகைத்து, அங்கதன் தூதனே, என் நண்பனாகிய வாலி சுகமா? வாலியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றதா? என்று கேட்டான்.

அநுமார், அரக்கனே, பயப்பட வேண்டாம். இராமபிரானுடைய ஒரு கணையால் வாலி மாண்டுவிட்டான். இனி பிழைத்து வரமாட்டான். உன்னைக் கட்டி, எண் திசைகளிலும் தாவி, உன்னை வேதனைப்படுத்திய வாலும், தீயில் மூழ்கி விட்டது. இப்போது மூரிய குமாரனாகிய சுக்ரீவன் ஆட்சி புரிகின்றான். நான் இராமருக்கும் சுக்ரீவனுக்கும் இனிய அன்பன். உனக்கு அறிவுரை கூற வந்தேன். உன்னை எனக்குக் காட்டுவார் இல்லாமையால் அசோகவனத்தை அழித்தேன். விளக்கில் வீழ்ந்து மின்மினிப் பூச்சிகள் அழிவதைப்போல் உன்னுடைய படை வீரர்கள் என்பால் போர் புரிந்து மாண்டார்கள்.

புலத்தியன் மரபில் வந்த நீ ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்கம் உயிரினும் உயர்ந்தது. பிறன் மனைவியை விரும்புவோனைப் பழியும் பாவமும் சேரும், நரகமே வாய்க்கும். அதனால் பெருந்துயர் அடைவான். உனக்குப் பல மனைவியர்கள் இருக்கின்றனர். போக மாதர்கள் பலர் இருக்கின்றார்கள். இத்தனை இருந்தும் பரதாரத்தை நீ விரும்புவது அறிவுடைமையாகுமா? வீட்டில் பசியாற அன்னமிருக்க, இன்னொருவன் மனையில் உண்ண அன்னத்தைத் திருடலாமா? நீ அரசனா? கள்வனா? சீதாதேவியை இராம பிரானிடம் ஒப்புவித்தால் அப்பரம கருணாநிதி உன்னை மன்னிப்பார். வாழ்வும் வரமும் தருவார். காமத்தால் அறிவிழந்து அசுர குலத்தையே அழிக்காதே. செய்த பிழைக்கு வருந்து, உள்ளந் திருந்து. இராமபிரான் திருவடியைப் பொருந்து. அடைக்கலம் புகுந்தவரை ஆதரிப்பது இராமபிரானுடைய பரம்பரை சொத்து. அடைக்கலம் புகுந்த அற்பப் புறாவுக்கு உடல் தசையை அறுத்துத் தந்த சிபிச் சக்ரவர்த்தியின் பேரன். இராமச்சந்திர மூர்த்தி உன்னை மன்னித்துக் கருணை புரிவார். அவரைப்போன்ற கருணா மூர்த்தியை உலகத்தில் காண்பது அரிது என்று அநுமார் கூறினார்.

இராவணன் இதைக் கேட்டு பெருஞ்சீற்றம் அடைந்தான். அற்பக் குரங்கே, நீ எனக்கு அறிவுரை கூறுவதா? உன்னை இப்போதே நமன் உலகுக்கு அனுப்புவேன் என்று கூறி, மிகவும் சீறி, அநுமாரைக் கொல்லுவதற்கு வாளை எடுத்தான்.

அப்போது விபீஷணர் இராவணனைத் தடுத்து அண்ணா, மாதரையும், தூதரையும் கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் நமது புலத்தியர் குலத்திற்கு இழுக்காகும். ஆகவே, கொல்லாதே என்று கூறினன்.

இராவணன், நன்று கூறினாய். தூதரைக் கொல்லுவது பாவம் என்று சீற்றம் ஆறி. இந்தக் குரங்கின் வாலில் கயிறுகளைச் சுற்றி, நெய்யில் நனைத்துத் தீவைத்துச் சுட்டு அனுப்புங்கள் என்று கட்டளையிட்டான்.

இந்திரஜித் அநுமாரைப் பிடித்துப் பாசத்தை அகற்றினன். இலங்கையில் உள்ள தாம்புக்கயிறு, ஊஞ்சல் கயிறு, கொடிக்கயிறு முதலிய எல்லாக் கயிறுகளையும் கொண்டு வந்து அநுமாருடைய வாலில் சுற்றினார்கள். அரக்கிமார்கள் தாலிக் கயிற்றை மட்டும் வாங்கவில்லை. கயிறுகளைச் சுற்றச் சுற்ற வால் நீண்டு கொண்டே இருந்தது. ஒரு லட்சம் அரக்கர்கள் வாலைப் பற்றி நின்றார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 29, 2010 12:30 am

இராவணன், சேவர்களே, இந்த குரங்குக்கு நான் செய்த தண்டனையை மக்கள் உணர்ந்து மகிழவேண்டும். அதனால் வீதிகள் தோறும் சுற்றிக் காட்டிவிட்டு, வடக்குக் கடலோரம் தீ வையுங்கள் என்று பணித்தான்.

இச்செய்தியைக் கேள்வியுற்ற சீதாதேவி, ஏ, அக்கினி பகவானே! நீ உலகுக்குச் சாட்சியாக இருப்பவன், நான் கற்பில் தூயவள் என்பது உண்மையானால் என் மகன் அநுமனைச் சுடாதே.

அரக்கர்கள் அநுமாருடைய வாலில் தீயிட்டார்கள். அந்த நெருப்பு அவரைச் சிறிதும் சுடாமல் சந்தனம் போல் குளிர்ந்திருந்தது. அநுமார் அந்த அற்புதத்தைக் கண்டு, இது அன்னையின் அருள் என்று அன்னை இருந்த திசையை நோக்கித் தொழுதார்.

அநுமாருடைய வாலில் அக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. அநுமார் உயர்ந்த ஒரு கோபுரத்தின் மீது ஏறி, இலங்கை முழுவதும் வாலை நீட்டி அந்நகர் முழுவதையும் கொளுத்தினார்.

நகர் முழுவதும் தீயினால் எரியலாயிற்று. மாதர்களும், குழந்தைகளும், தீயில் விழுந்து மடிந்தனர்.

அப்போது இலங்கையில் அழுகை ஒலி எங்கும் எழுந்தது.. . எங்கும் புகைப் படலம் மூடியது. இராவணனுடைய அரண்மனை எரிந்தது. இராவணன் முதலியோர் விமானம் ஏறி விண்ணில் இருந்து பிழைத்தார்கள்.

இலங்கை எரியக் காரணம் என்ன? என்று கேட்டான் இராவணன்.

சேவர்கள் அவனைத் தொழுது, குரங்கின் வாலில் நாம் இட்ட தீ நமக்கு வந்துவிட்டது என்றார்கள்.

அந்தக் குரங்கைப் பற்றிக் கொண்டு வாருங்கள் என்றான். பல அரக்கர்கள் வெப்பம் தாங்காமல் கடலில் மூழ்கினார்கள்.

அநுமார் தன்னைப் பற்ற வந்த ஐம்பதாயிரம் அரக்கர்களை வாலில் உள்ள தீயினால் எரித்து, வானத்தில் இளம் ஞாயிறு போல், ஒளிரச் செய்து அசோக வனத்தை அடைந்து பிராட்டியாரைத் தொழுதார்.

அன்னை, அநுமாருடைய வீரச் செயலைக் கண்டு மகிழ்ச்சி கொண்டு அநுமாரை வாழ்த்தினார்.

அநுமார் வந்த காரியம் இனிது முடிந்ததென மகிழ்ந்து வானத்தில் ஓங்கி வடதிசை நோக்கிப் பாய்ந்தனர்.

இடையில் மைந்நாக மலையில் தங்கி, அம்மலையரசன் உபசாரத்தைப் பெற்று, மிக்க வேகத்துடன் பாய்ந்து மகேந்திர மலையில் குதித்தார். தாயின் வரவைக் கண்ட பறக்க இயலாத இளமட பறவையின் குஞ்சுகளைப் போன்ற வாநரங்கள்; அநுமாரைப் கணடு அகமகிழ்ந்தார்கள்.

சில வாநரர் அநமாரைக் கண்டு அழுதனர். சிலர், அவர் முன்னின்று ஆரவாரஞ் செய்தார்கள். சிலர், வணங்கினார்கள். சிலர், ஆடினார்கள், சிலர், பாடினார்கள் சிலர் அவரை அள்ளி விழுங்குவதுபோல் பார்த்து நின்றார்கள். சிலர் கிழங்கு காய் முதலிய இனிய உணவுகளைத் தேடிக் கொணர்ந்து அவர் முன்னே உண்ணுமாறு வைத்தார்கள்.

தேவியைக் கண்டு வந்தார் என்று அவர் திருமுகக் குறிப்பே சொல்ல உணர்ந்து கொண்டார்கள்.

அவருடைய தாள்களிலும், மார்பிலும் தோள்களிலும், போரில் ஆயுதங்களில் ஏற்பட்ட புண்களை நோக்கிப் பெருமூச்சுவிட்டு வருந்தினார்கள்.

அநுமார் முதலில் அங்கதனை வணங்கினார். பின்னர், ஜாம்பவானை வணங்கினார்.

எல்லாருக்கும் தேவியினுடைய வாழ்த்துரையைக் கூறினார். வாநரங்கள் மீண்டும் மீண்டும் அவரை வணங்கி போய்வந்த விவரத்தையும், தேவியைத் தரிசித்ததையும் கூறுமாறு வேண்டினார்கள்.

அநுமார், இராமனடியார்களே, உங்களுக்கு வணக்கம் இராமபிரானுடைய திருவருளினாலும் உங்கள் ஆசியினாலும் இலங்கை மாநகரம் சென்று, தேவதேவனுடைய பத்தினியாகிய சீதா தேவியைக் கண்டு, அடையாளங்களைக் கூறினேன். இலங்கையில் பிராட்டியார் மெலிந்து, நலிந்து, தவநெறியில் இருக்கக் கண்டேன். அம்மையார் கொடுத்த அடையாளத்துடன் இங்கு மீண்டும் வந்தேன். என்று கூறினார்.

அரக்கரோடு போர் புரிந்ததையும் வெற்றி பெற்றதையும் இலங்கையில் தீ வைத்ததையும் சொன்னாரில்லை. சொன்னால் தற்புகழ்ச்சியாகும் என்று எண்ணி மறைத்துவிட்டார்.

ஆனால், போர் புரிந்ததை அநுமாருடைய உடம்பிலிருந்த புண்கள் தெரிவித்தன. அவர் திரும்பி வந்ததே வெற்றியைத் தெரிவித்தது. அங்கு வானத்தில் எழும் புகையே இலங்கை எரிவதைத் தெரிவித்தது. அங்குள்ள அரக்கரின் பெருமை, தேவி உடன் வராமையே தெரிவித்தது.

அநுமார் வாநர வீரர்களைக் கண்டு, எம்பிராட்டியார் இலங்கையில் ஒரு மாதந்தான் உயிரோடு இருப்பேன். பின்னர் மாண்டுபோவேன். என்று மிகுந்த வருத்தத்தோடு கூறினார். ஆதலால், நாம் தாமதம் செய்யாமல் புறப்பட வேண்டும் என்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 29, 2010 12:36 am

மதுவனம்

சீதாதேவியைக் காண அநுமார் இலங்கைக்கு போனபின் மகேந்திர பர்வதத்தில் இருந்த வாநர வீரர்கள் அநுமார் தேவியைக் கண்டு வரவேண்டும் என்று இராமபிரானுடைய திருவடியை நினைந்து உண்ணாமலும், உறங்காமலும், ஙஇராம இராம இராமங என்று நாம பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால், எல்லாரும் பசியினால் வாடி வதங்கி இருந்தார்கள். வழியில் மதுவனத்தைக் கண்டார்கள். மதுவனம் இந்திரனுக்கு உரியது. அதனை அந்திரன் மகனாகிய வாலி அடைந்தான். வாலியின் மறைவுக்குப் பின் அம்மதுவனம் சுக்ரீவனுடைய ஆட்சிக்கு வந்தது. அதனை இப்பொழுது ததிமுகன் என்ற வாநர வீரன் தன் ஏவலர்களுடன் காவல் புரிந்தான்.

வாநர வீரர்கள், அடங்காப் பசியுடன் சோர்ந்து அங்கதனைப் பணிந்து, இந்த மதுவனத்தில் உள்ள மதுவை நாங்கள் பருக அனுமதி தரவேண்டும் என்றார்கள். அங்கதன் அவ்வாறே அனுமதி தந்தான். வாநரங்கள் மதுவை ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் பருகி மகிழ்ந்தார்கள்.

ஒருவர் வாயில் விட்டு, இட்டு உண்ணும் தேனை, இன்னொரு வாநரம் குடித்துவிட்டுச் செல்லும். ஒருவர் கையில் உள்ள தேனை மற்றொரு வாநரம் பிடுங்கிக் கொண்டுபோய் உண்ணும் ஒரே குரங்கின் மீது ஏறி மற்றொரு குரங்கு அமர்ந்து தேனை உண்ணும். ஒருவரை ஒருவர் தழுவியும், ஒருவரை ஒருவர் ஏசியும், மதுவை உண்டு மகிழ்ந்தார்கள். காவல் செய்யும் வாநரங்கள் தடுக்க அவர்களை இவர்கள் அடித்தார்கள். அவர்கள் போய்த் ததிமுகனிடம் முறையிட்டார்கள். ததிமுகன் என்ற வாநர வீரன் அங்கதனிடம் போரிட்டான். அவனை அவன் நையப்புடைத்தான். துன்பப்பட்ட ததிமுகன் சுக்ரீவனை நாடிச் சென்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 29, 2010 12:37 am

இராமரின் துயர்

இராமபிரான் ரிசியமூக பர்வதத்தில் துன்பக் கடலில் மூழ்கியிருந்தார். சுக்ரீவன் அவரைத் தேற்றிக் கொண்டிருந்தான். இராமர், சுக்ரீவா, நாம் அனுப்பிய எல்ல வாநரங்களும் சீதையைக் காணாமல் திரும்பி வந்துவிட்டன. தென் திசைக்குப்போன அநுமன் முதலியோர்கள் வந்தார்களில்லை. சீதையைக் காணாத வருத்தத்தால் மாண்டு போனார்களோ, இராவணனைச் சந்தித்து அவனிடம் போர் புரிந்து கொண்டிருக்கிறார்களோ? அவன் அவர்களை எங்காவது சிறையில் வைத்துவிட்டானோ! சீதையைக் காணாது வெந்து நொந்து உள்ளம் உலைந்து தவம் புரிந்துகொண்டிருக்கின்றார்களோ! என்றெல்லாம் கூறி வருந்திக் கொண்டிருந்தார்.

ததிமுகன் அங்கதனால் அடிப்பட்ட புண்களுடன் சுக்ரீவனை அணுகித் தொழுது நடந்ததை நவின்றான். இதைக் கேட்ட சுக்ரீவன் மகிழ்ந்தான். வாநரங்கள் தேவியைக் கண்டு வந்த மகிழ்ச்சியினால் மதுவனத்தை அழித்து இருக்கிறார்கள். ஆதலால், இராம கைங்கர்யம் நிறைவேறி இருக்க வேண்டும் ததிமுகனே, அங்கதன் இளவரசன், மதுவனத்துக்கு உரியவன் அவனை நீங்கள் எதிர்க்கலாமா? நீ அங்கு போய் அங்கதனைச் சரணம் அடைவாயாக! என்று கூறிவிட்டு இராமபிரானைப் பார்த்துச் சொல்லுகின்றான். ஐயனே! பிராட்டியைக் கண்ட மகிழ்ச்சியினால் வாநரங்கள் மதுவனத்தை அழித்து மகிழ்கின்றார்கள். ஆதலால், தாங்கள் வருந்த வேண்டாம் என்று கூறினான்.

அநுமார் திருவடி தொழுதல்

ஆஞ்சநேயர் அந்த நேரத்தில் இராமபிரானிடம் வந்து தேவியிருக்கும் திசை நோக்கி இராமபிரானுக்கு நேரே கால்கள் நீட்டித் தென் திசை நோக்கி கைகூப்பி வணங்கினார். இக்குறிப்பை நோக்கி ராமபிரான் சீதாதேவி இலங்கையில் கற்பு நெறியில் நிற்கின்றாள் என்பதை உணர்ந்தார்.

அநுமார், கண்டனன் கற்பினுக்கு அணிகலத்தைக் கண்டனன். அப்பிராட்டியின் கண்களினால் அவளைக் கற்பினுக்கு அணிகலன் என்று கண்டுகொண்டேன். தென் கடலில் இலங்கை மாநகரில் அத்தேவி தவம் இருக்கக் கண்டேன்.

ஐயனே, தேவரீருடைய தேவியென்னும் தன்மைக்கும் தசரத ராஜாவுடைய மருகியென்னும் வாய்மைக்கும், ஜனக ராஜாவினுடைய மகள் என்னும் தன்மைக்கும் உரியவளாக எம்பிராட்டியைக் கண்டேன்.

பொன்னுக்குப் பொன்தான் உவமை. தேவிக்குத் தேவிதான் உவமை. உமக்கு நீரே உவமை. எனக்கு நானே உவமை என்று என்னை யெனக்குத் தந்தார். இராகவா, உமது ஆதித்தன் குலத்தைத், தான் தவமிருந்து உயர்த்தி, உமக்கே உரியதாகக் செய்தாள். புகழ் நிறைந்த தான் பிறந்த ஜனக மாமன்னரின் குலத்தைப் பெருமைப்படுத்தினாள். தன்னைத் தனிமை செய்து கொண்டு கொடிய அரக்கர் குலத்தை இயமனுக்குத் தந்தாள். தேவகுலத்தை வாழ்வித்தாள். என் குலத்தை எனக்கே தந்தாள்.

யார் எந்தக் குரங்கைப் பார்த்தாலும் அநுமார் போகிறார் என்பது உலக வழக்கு.

கோதண்டம் ஏந்திய கோமகனே! கடல் சூழ்ந்த இலங்கையில் நல்ல தவம் செய்கின்ற ஒரு நங்கையைப் பார்த்தேன் என்று எண்ண வேண்டாம். குடிபிறப்பு என்ற குணமும், பொறுமை என்ற குணமும், கற்பு என்ற குணமும் இந்த மூன்று குணங்களும் சேர்ந்து ஒன்றையொன்று பற்றிக்கொண்டு மகிழ்ச்சியினால் நடனம் புரியக் கண்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக