புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
29 Posts - 58%
heezulia
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
14 Posts - 28%
Barushree
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 2%
nahoor
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
83 Posts - 74%
heezulia
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_m10தமிழ் பழமொழிகள்...! - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பழமொழிகள்...!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 7:32 pm

First topic message reminder :

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.

[You must be registered and logged in to see this link.]

avatar
Bharathinesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 27/10/2009

PostBharathinesan Tue Oct 27, 2009 9:52 pm

[You must be registered and logged in to see this image.]
பழமொழிகள் அருமை
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

இதில் குலம் வருமா அல்லது குணம் வருமா.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 10:04 pm

பணந்தானே பேசுவிக்கும் - பணமே (பேசாதவரையும்) பேசுமாறு
செய்யும், பார்மீதில் பணந்தானே பந்தியிலே குலந்தானே குப்பையிலே
படுக்கும் - உலகிலே பணம் பந்தியிலும் குலம் குப்பையிலும் சேரும்.

[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 10:13 pm

வணக்கம்
அனுமதி அளித்தமைக்கு நன்றி

ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

இந்தப் பழமொழி இவ்வாறு இருக்க வேண்டும்

ஆறு கெட நாணல் இடு, காடு கெட ஆடு எடு
ஊரு கெட் பூணூல் எடு மூன்றும் கெட முதலி எடு

(ஆற்றின் திசையை நாணல் தடுத்து மாற்றி விடும், வெள்ளாடு வாய் வைத்தால் அச்செடி மீண்டும் முளையாது, ஒழுக்கம் கெட்ட அந்தணனைக் கிராமத்தில் வைத்தால் அவ்வூரே கெட்டுவிடும் இந்த மூன்றையும் கெடுக்க வேண்டுமானால் மூர்க்கத்தனமான முதலியாரைக் கொண்டு வந்து வை. (கைக்கோள முதலியார் பற்றியது, விவரம் வேண்டினால் தருகிறேன்)

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆனை கருப்பாகத்தான் இருக்கும்

ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
என்று இருக்க வேண்டும்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

ஈக்கு விடம் தலையில் எய்தும் இருந்தேளுக்கு
வாய்த்த விடம் கொடுக்கில் வாழுமே- நோக்கரிய
பைங்கண ரவுக்குவிடம் பல்லளவே துர்ச்சனர்க்கு
அங்கமுழு தும்விடமே யாம்

உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.
உள்ளது சொல்ல ஊருமில்லை நல்லது சொல்ல நாடுமில்லை

(உள்ளதைச் சொன்னால் ஊர்ப் பகை ஏற்படும் நல்லது சொனால் நாட்டுப் பகை ஏற்படும்)

எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம்
காயா திருந்தென்ன காய்த்துப் பலனென்ன கைவிரித்துப் போய்
யாசகம் என்றிரந்தார்க்கு இல்லையென்று சொல்லாது
ஓயாமல் ஈந்தவன் மால் சீதக்காதி வரோதயனே.

(சீதக்காதி
என்பவரின் இயற்பெயர் செய்யது காதிர், இவர் காயல் பட்டினத்திலிருந்த ஒரு இஸ்லாமிய தனவந்தர், தமிழில் ஆறாத பற்றுள்ளவர் தம்மிடம் வரும் புலவர்க்கு இல்லையென்னாது வழங்கிய வள்ளல். அவர் இறந்த பின் ஒரு புலவர் வந்து ஒரு கவி சொல்ல சமாதியிலிருந்து ஒரு விரல் அதிலிருந்த மோதிரத்தை நீட்டியது, அப்போது பாடிய பாடல் தான் அது

எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி. (இந்தப் பழ மொழிக்கு வேறொரு சிறந்த பொருள் கொண்ட விளக்கம் உள்ளது அதனை விஞ்ஞான முறைப்படி விளக்க வேண்டும்)

எறும்புந் தன் கையால் எண் சாண்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென
உற்ற கலைமகள் ஓதுகின்றால் மெத்த
வெறும்பந் தயம் கூறவேண்டாம் புலவீர்
எறும்பும் தன்கையா லெண்சாண்

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் அவைப் புலவர், ஏதோ ஒரு காரணத்தால் புகழேந்திப் புலவர் சிறையிலடைக்கப் பட்டார், அதனால் மனத்துயருற்ற சோழன் மனைவி ஊடல் கொண்டு கதவத்தை
மூடி விட்டாள்,. சோழவரசன் ஒட்டக்கூத்தரை அழைத்து அவர் பாட்டுத் திறத்தால் கதவைத்
திறக்க வேண்டினான், அப்போது அவர்

நானேயினி உன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்
தேனே கபாடம் திறந்து விடாய் செம்பொன் மாரி பொழி
வானேறனைய விரவி குலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்கும் நின்கைம் மலராகிய தாமரையே

என்று பாடினார்,

புகழேந்திப் புலவர் சிறையிலிருக்கக் கதவைத் திறவேன் என்று கூறி ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டனள் என்பது புலவர் சரிதத்தால் அறிய முடிகிறது,

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

இந்தப் பழ மொழி ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்தில் சனி என்றிருக்க வேண்டும்

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

இந்தப் பாடலை ஏற்கனவே கூறி
இருக்கிறேன் (எறும்பும் தன் கையால் எண் சாண்)

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னரிற் கற்றோன் சிறப்புடையன் மன்னர்க்குத்
தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு

கெட்டும் பட்டணம் சேர்.

இந்தப் பழமொழி கெட்டும் பட்டும் இனம் சேர்மருவி கெட்டும் பட்டணம் சேர் என்றாயிற்று

கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

இந்தப் பழமொழி கைப் பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்று இருக்க வேண்டும் . பூண் ஆபரணம். பெண்கள் கழுத்து மற்றும் முகத்தில் அணியும் ஆபரணங்களைக் கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொள்வர், ஆனால் கையில் அணியும் வளை கடகம் போன்றவற்றுக்குக் கண்ணாடி எதற்கு என்று பொருள்

கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயில்
எல்லோரும் வந்தங்கெதிர் கொள்ளுவர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றேடுத்த தாய்வேண்டாள்
செல்லாத வன்வாயிற் சொல்

மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

இந்தப் பழமொழி மண் குதிரை நம்பி
ஆற்றில் இறங்காதே. குதிர் என்பது ஆற்றின் நடுவே தோன்றும் திட்டு, அதன் இரண்டாம்
வேற்றுமை குதிரை, குதிரையை என்பது தவறும்
மண் குதிரை நிலத்திலும் நடவாது

(எழுத்தில் குற்றம் கண்டால் சுட்டிக் காட்டப் பெறின் திருத்திக் கொள்வேன்)
அன்புடன்
நந்திதா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 10:19 pm

மண் குதிர்ரய் நம்பி ஆற்றில் இறங்காதே என்பது சரியா அல்லது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது சரியா?
மண் குதிர் - ஆற்று புதைமணல் என நினைக்கிறேன் அல்லது மிதக்கும் தாவரமாக இருக்கலாம்
மண் குதிரை - மண்ணால் செய்யப்பட்ட குதிரை

[You must be registered and logged in to see this link.] hight="150" width="500" border="0"/>
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 10:34 pm

வணக்கம்
அதைத் தானே எழுதி இருக்கிறேன்

ஆற்றில் இறங்காதே. குதிர் என்பது ஆற்றின் நடுவே தோன்றும் திட்டு, அதன் இரண்டாம் வேற்றுமை குதிரை,
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 27, 2009 10:38 pm

வணக்கம்
பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே ,மற்றும் பணம் பந்தியிலே குலம் குப்பையிலே என்பதும் சரியாகத்தான் இருக்கின்றன,

நற்குலத்தில் பிறந்தவனும் நல்ல குணம் படைத்தவனும் இரண்டாம் இடத்தில் தான் அமர்த்தப் படுவார்கள், பணம் உள்ளவருக்குத்தான் பந்தியிலே முதல் இடம்
அன்புடன்
நந்திதா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 10:42 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] hight="150" width="500" border="0"/>
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 27, 2009 11:12 pm

அருமையான விளக்கங்கள் அக்கா.. [You must be registered and logged in to see this image.]

தாங்களால் ஈகரை இன்னும் ஜொலிக்கிறது... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 11:23 pm

தமிழன் அண்ணா..பழமொழிகளை தந்தார்..அக்கா அவற்றுக்கு அழகா விளக்கங்களை தந்தார் (என்னை போல உள்ளவங்களுக்கு பலதுக்கு... பொருள் விளங்காதவர்களுக்கு பேருதவி அக்கா )
ரொம்ப நன்றிகள்..அன்புடன் உங்க மீனு

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 27, 2009 11:29 pm

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக