புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்!
Page 1 of 1 •
தந்தானே தானனன்னே! - நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார் ஆசிரியர் தவமணி.
அறிவியல் என்றாலே அரை கிலோமீட்டர் தூரத்துக்கு தலை தெறிக்க ஓடுவதுதான் மாணவர்களின் வழக்கம். புரியாத பெயர்களையும், அறியாத சூத்திரங்களையும் கொண்ட அறிவியல் பாடம் அகப்படாமல் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் பலர். ஆனால் கொட்டாம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கோ அறிவியல் பாடம் என்றாலே தேன் போல இனிக்கிறது. காரணத்தை அறிந்து கொள்வதற்காக அந்தப் பள்ளிக்குச் சென்றோம்.
தந்தானே தானனன்னே" என்கிற நாட்டுப்புறப் பாடல் பள்ளியிலிருந்து ஒலித்ததும், ஏதோ கலை நிகழ்ச்சிதான் நடக்கிறது என்று நினைத்து நாம் உள்ளே சென்றுபார்க்க, விழா நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பாடல் ஒலி வந்த வகுப்பறையை நோக்கி நடந்தால் மாணவர்கள் ஆர்வத்துடன் அமர்ந்திருக்க... அறிவியல் ஆசிரியர் தவமணி நாட்டுப்புறப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். பாடவேளையில் பாடல் எதற்கு? எனக் குழம்பிப்போய் உற்றுக் கவனித்தால் அது பாடல் அல்ல, பாடம் என்பது புரிந்தது!
தனிம வரிசை அட்டவணையை அழகான நாட்டுப்புறப் பாடலில் அவர் பாட, மாணவிகளும் திரும்பப் பாடுகின்றனர். மாணவி ஒருவரிடம் அவர் கேள்வி கேட்க, நொடி நேரமும் தாமதிக்காமல் வரிசையாக வந்து விழுகிறது 20 வேதியியல் தனிமங்களின் பெயர்கள். பாடத்தைப் பாடலாக்கிய ஆசிரியர் தவமணி, வகுப்பு முடிந்ததும் தன்னுடைய புதிய முயற்சி குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய சொந்த ஊர் கொட்டாம்பட்டி அருகிலுள்ள நாகப்பன் செவல்பட்டி என்கிற சிற்றூர். பள்ளிப் படிப்பு முழுவதும் அரசு பள்ளிகளில்தான். எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லாததால் தினமும் எட்டு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்வேன். பின்னர் பட்டப்படிப்பு முடித்ததும் ஆசிரியர் பணியிலிருந்த ஆர்வம் காரணமாக 1989-இல் பி.எட். படித்தேன். படிக்கும்போதே நாட்டுப்புற இசையில் ஆர்வம் இருந்தது. நண்பர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த, அகில இந்திய வானொலியில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடத் தொடங்கினேன். பல ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தாலும், வானொலியில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்தேன்.
இந்தச் சூழலில் 1996-ஆம் ஆண்டு பெற்றோர்-ஆசிரியர் கழக ஆசிரியராக மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் பள்ளியில் அறிவியல் பாடம் எடுக்கும்போது மாணவர்கள் ஆர்வமின்றி இருந்ததைப் பார்த்தேன். எனவே நாட்டுப்புற பாடல் மூலம் அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கலாம் என்று ஒரு மாற்று முயற்சியில் இறங்கினேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதையே இப்போதுவரை தொடந்து பின்பற்றி வருகிறேன்" என்கிறார் ஆசிரியர் தவமணி.
அறிவியல் பாடங்களில் கடினமான பகுதியாகக் கருதப்படும் தனிம வரிசை அட்டவணை, காரங்கள்-அமிலங்கள், அணுவியல், வேதியியல் சமன்பாடுகள் போன்ற பகுதிகளை எளிமையான நாட்டுப்புற மெட்டில் பாட்டாகப் பாடி அசத்துகிறார் இவர். திரைப்படங்களில் வரும் நாட்டுப்புறப் பாடல், பக்திப் பாடல் மெட்டுக்களும் இந்த வரிசையில் சேரும். அறிவியல் ஆசிரியராக இருந்தாலும் ஆங்கிலம், கணித சூத்திரங்கள் என அனைத்தையும் நாட்டுப்புற மெட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
எந்தத் தலைப்பில் பாடல் எழுதச் சொன்னாலும் உடனே எழுதி விடுவேன். மாணவர்கள் கடினம் என்று நினைக்கும் பாடங்கள் எவை என்பதை அவர்களிடமே கேட்டு அதற்கேற்ப பாடல் எழுதுவேன். முதலில் அறிவியல் பாடங்களுக்கு மெட்டமைத்து வந்தேன். மாணவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க மற்ற பாடங்களிலும் பாடல்கள் தயார் செய்தேன். பாடல்கள் மூலம் பாடம் படிப்பதால் மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் எளிதாகவும், விரைவாகவும், குழப்பமின்றியும் பாடம் படிக்கின்றனர். இதனால் தொடர்ந்து என் பாடத்தில் 100 சதவீதத் தேர்ச்சியும் கிடைக்கிறது. சக ஆசிரியர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமியும் என்னை ஊக்கப்படுத்துவதோடு தேவையான ஒத்துழைப்பும் அளித்து வருகின்றனர்" என்கிறார்.
2005-இல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி பாதித்த கிராமம் ஒன்றில் இடைநிலை பட்டதாரி ஆசிரியராக தவமணி பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சுனாமியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாயிருந்த மாணவர்கள் மத்தியில் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பாடம் நடத்தியிருக்கிறார். சுனாமி பாதித்த அதிர்ச்சியிலிருந்து மாணவர்கள் மீளவில்லை. ஆர்வமின்றி ஏதோ கடமைக்கு பள்ளிக்கு வந்தோம் என்றுதான் அமர்ந்திருந்தனர். சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் மீன் பிடிக்கச் சென்றுவிடுவர். எனவே மாணவர்களை உற்சாகப்படுத்த நாட்டுப்புற மெட்டில் பாடல் நடத்தினேன். மாணவர்களுக்கும் இந்த முறை பிடித்துப்போக, பாடம் நடத்துவதை ஆர்வத்தோடு கவனித்தனர். மீன் பிடிக்கச்சென்ற மற்ற மாணவர்களிடம் நான் பாடம் நடத்தும் விதம் குறித்து எடுத்துக்கூறி அவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்தனர். இதனால் முழு வருகை கிடைத்ததோடு தேர்ச்சி விகிதமும் அதிகரித்தது" என்று தனது அனுபவத்தை விவரித்தார் தவமணி.
அறிவொளி இயக்கம், எய்ட்ஸ் விழிப்புணர்வு எனப் பல நிகழ்ச்சிகளை நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நிகழ்த்தியுள்ளார் இவர். பொதுவாக கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் மாணவர்களும் கவனத்தோடு படிப்பதில்லை. எனவே, என் வகுப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனி அக்கறை எடுத்துக்கொள்கிறேன். நானும் கிராமப்புறப் பள்ளியில் படித்ததால் அவர்களின் பிரச்சினைகள் குறித்து நன்றாகத் தெரியும். அதற்கேற்ப அவர்களை அன்புடன் கையாளுவேன். கிராமப்புற மாணவர்களிடையே போட்டித் தேர்வு குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், பெரும்பாலான போட்டித்தேர்வு வினாக்கள் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. எனவே போட்டித் தேர்வு வினாக்களை வகுப்பறையில் வாசிக்கச் செய்து, ‘நீ இப்போது படிக்கும் பாடங்கள்தான் உன் வாழ்வை உயர்த்தப் போகிறது’ எனக் கூறி பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பேன்" என்கிறார் தவமணி.
அரசாங்க வேலைக்கு நான் 15 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால் தற்போது அதிக அளவில், அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அதை இளைஞர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். போட்டித் தேர்வுக்குப் பயன்படும் பள்ளிப் பாடங்களையெல்லாம் நாட்டுப்புறப் பாடலாக்கி கேசட் வடிவில் வெளியிட வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம். இது போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். என்னை அணுகினால் போட்டித் தேர்வுகள் குறித்த வகுப்புகளை இலவசமாக நடத்தவும் தயாராக இருக்கிறேன்" என்கிறார் தவமணி ஆர்வத்துடன்.
நன்றி - எம்.செந்தில்குமார் - புதிய தலைமுறை

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|