புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
14 Posts - 70%
heezulia
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_m10இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன?


   
   
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Wed Sep 11, 2013 12:20 am

அனைவருக்கும் வணக்கம்.

இங்கு நான் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் ஒரு கருத்தை சமர்ப்பிக்கிறேன்.

இங்கு நான் சமர்பிக்கும் கருத்துக்கள் யார்மனத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆன்மீகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு, என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி விஷயத்திற்கு வருகிறேன்.

விதியை வெல்ல முடியுமா? அல்லது எல்லாமே விதிப்படிதான் நடக்குமா?

ஆன்மீகத்திற்கும், விதி, கர்மா போன்றவைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்றால், பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆனால் ஜோதிடத்திற்கும், விதி,கர்மா இவைகளுக்கும் தொடர்பு உண்டு, என்றால் யாரும் மறுக்கவும் மாட்டார்கள்.

பொதுவாக நாம் அனைவருமே தங்களுடைய கர்ம வினையிலிருந்து, அல்லது ஜாதகப்படி உள்ள தீய விதியிலிருந்து விடுபடுவதற்காக தங்களால் முடிந்த அளவுக்கு பரிகாரங்கள் செய்துவருகிறோம்.

அதாவது நமக்கு வேண்டிய நன்மைகளை இறைவனை பிரார்த்தனை செய்து அடைந்துவிடுவதாகவும்

அதற்க்கு நன்றிக்கடனாக நாம் ஏதாவது பரிகாரத்தையோ, காணிக்கையா நேர்த்திக்கடனாக செய்துவிடுகிறோம்

அதாவது இறைவன் அருளால் நமது தீவினைகள்(பாவங்கள்) தீர்க்கப் படுகின்றன என்பது நம்மில் பெரும்பாலானோர் கோட்பாடு.

இதில் நியாயம் இருக்கிறதா?

இந்தக் கேள்வியை ஒரு உதாரணத்துடன் கேட்டால், இந்தக் கேள்வியில் உள்ள நியாயம் புரியும்.

கொலைக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது
(இன்னும் வழங்கப்படவில்லை)

இந்த சமயத்தில் குற்றவாளி நீதிபதியிடம் " அய்யா நான் கொலை செய்தது உண்மைதான்.

நீங்கள் பெரியமனது வைத்து என் குற்றத்தை மன்னித்து என்னை விடுதலை செய்ய வேண்டும்.

நானும் எனது குடும்பத்தாரும் உங்களை எங்கள் குலதெய்வமாக வணகுவோம்.

மேலும் உங்களுக்கு நன்றிக்கடனாக (நேர்த்திக்கடனாக) எனது சொத்தில் பாதியை உங்களுக்கு தந்துவிடுகிறேன்.

அரசாங்கத்திற்கும் ஒரு தொகையை அபராதமாக செலுத்திவிடுகிறேன். தயவுசெய்து என்னை விடுதலை செய்து காப்பாற்றுங்கள்.

என்று கேட்டால்...

நீதிபதியும் குற்றவாளியின் பிரார்த்தனையை ஏற்று, சரி உன்னை மன்னித்து விடுகிறேன்.

நீயும், நீ கொடுத்த வாக்கை காப்பாற்று. என்று சொன்னால்....

இதுபோல எத்தனையோ அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் அவர்களுடைய துதிபாடிகளுக்குத் தேவையான நன்மைகளை செய்தால்....

அதாவது பிழைக்கத் தெரிந்தவர்கள் துதிபாடி (மாமூல் பாடி) பிழைத்துக் கொள்வதும். மற்றவர்கள் துன்பப்படுவதும் ......

இறைவனிடத்தும் இதே அணுகுமுறைதானா???

பரிகாரங்கள் பிரார்த்தனை செய்தால்தான் இறைவன் நமக்கு நன்மை செய்வாரா???

பரிகாரங்கள் பிரார்த்தனை செய்யாவிட்டால் நமது துன்பத்தை கலையமாட்டாரா??? துன்பங்கள் தொடருமா???

இறைவனும் தற்கால அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் போலத்தான் செயல்படுகிறாரா???

நமக்கு வாழ்வில் நல்லவைகள் நடக்கவேண்டுமானால், இறைவனை பிரார்த்தனை செய்து,

அபிஷேக ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து, இப்படி இன்னும் பலவாறாக இறைவனை மகிழ்விக்க

வேண்டுமா???

இந்த இடத்தில் ஒரு வேடிக்கையான (அனைவருக்கும் தெரிந்த) கதையை .....

ஒரு புலவர் தனது வறுமையை போக்க அரசனிடம் சென்றார். மன்னனைப் புகழ்ந்து ஒரு கவிதை பாடினார்.

மன்னனும் மனமகிழ்ந்து இந்த அருமையான கவிதை 1000 பொன் பரிசளிக்கத் தகுந்தது என்று கூறினார்.

புலவரும் மகிழ்சியடைந்து மேலும் ஒரு அழகான கவிதையை பாடினார். அரசனும் மனமகிழ்ந்து

பரித்தொகையை கூட்டினார். இப்படி புலவர் பாடப்பாட மன்னனும் பரிசுத்தொகையை கூட்டிக்கொண்டே

போனதில் பரிசுத்தொகை புலவருக்குத் தேவையான அளவுக்கு வந்ததும் புலவர் பாடுவதை நிறுத்தினார்.

புலவர் பரிசுக்காக காத்திருந்தார்.

மன்னன் சரி புலவரே போய்வாருங்கள் என்று கூறினார்.

புலவர் சற்று அதிர்ச்சியுடன், மன்னா, பரிசில் பொன்.... என்று மெதுவாக இழுத்தார்.

மன்னனும், ஓ.. அதுவா? நீர் என்னை மகிழ்விக்க ஏதேதோ பாடினீர், நானும் உம்மை மகிழ்விக்க ஏதேதோ சொன்னேன். இரண்டுக்கும் சரியாகிவிட்டது. நீர் போகலாம். என்று கூறி வழியனுப்பினார்.

இப்படி இறைவனும் செய்தால் நாம் இறைவனை ஏற்றுக்கொள்வோமா???

புகழ்ச்சிக்கும், வேண்டுதல்களுக்கும் மயங்கும் சாதாரண மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்.???

ஊழல பேர்வழிகளுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்???

சபலபுத்தி கொண்ட சராசரி மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்???

இறைவனின் நிலைதான் என்ன???

நமக்கு நல்வினைகளையும் பிராப்தங்களையும் இறைவனிடம் பிரார்த்தித்து (யாசித்து) பெறவேண்டுமா?

அவராக மனமிறங்கி நமக்கு (தன் குழந்தைகளுக்கு) நமை செய்ய மாட்டாரா???

நமக்கும் இறைவனுக்கும் உள்ள பந்தம் இவ்வளவுதானா?

இப்படி எதோ ஒன்று மனதை நெருடுகிறதே????

நிச்சயமாக இறைவனைப் பற்றிய மேற்படி வியாய்க்கியான விஷயங்கள் எதுவும் உண்மையாக இருக்க

முடியாது.என்பதுமட்டும் உண்மை.

அப்படியென்றால் உண்மை என்ன???????

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உண்மையான பந்தம் என்ன??????????

அடுத்த பதிவில்

அன்புடன்....




மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Wed Sep 11, 2013 12:21 am

இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம்... (தொடர்ச்சி 1)

எல்லாம் அவன் செயல்.....

அவனன்றி ஓர் அணுவும அசையாது....

இறைவனே கர்த்தா. நாம் வெறும் கருவியே.....

பம்பரத்தைச் சுற்றும் சாட்டை அவனே. நாம் வெறும் பம்பரம்தன்....

பொம்மலாட்டத்தின் சூத்திரதாரி இறைவனே. நாம் வெறும் பொம்மைகள் தான்....

நமதென்று எந்த செயலும் கிடையாது. அனைத்தும் அவன் திருவிளையாடலே...

இவையெல்லாம் உண்மையா???

அவன்தான் நம்மை ஆட்டுவிக்கிறானா???

நாம் வெறும் கருவிதானா???

நமக்கென்று சுயமாக எந்த செயலும் கிடையாதா???

இப்படி இன்னும் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்...

அனைத்து செயல்பாடுகளுக்கும், அனைத்துநிகழ்வுகளுக்கும் கரணம் இறைவன் என்றால்

உலகில் நிகழும் அனைத்து அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டியவராகிறார்.

ஒரு சிலரை நல்லநிலையில் ஆரோக்கியமாகவும், இன்னொரு சிலரை ஆரோக்கியமற்றவராகவும் படைப்பது இறைவன் என்றால் ....இது எந்த விதத்தில் நியாயம்???

ஒருசிலரை செல்வந்தர்களாகவும், இன்னொரு சிலரை ஏழ்மை துன்பத்தில் வாடுபவர்களாகவும் படைத்தது
இறைவன் என்றால்.... அவனுக்கு ஏன் இந்த பாகுபாடு???

இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்

என்று சொல்வதெல்லாம்...........

இறைவன் கருணை உள்ளவனாக, தருமவானாக இருந்தால் இப்படியெல்லாம் செயல்படுவாரா???

இப்படிப்பட்ட கேள்விக் கணைகளை தாங்க முடியாது என்ற காரணத்தினால்தான்

இறைவன் யார்கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து இருக்கிறாரா???

இங்கு இரண்டு புராணக்கதைகளை நிணைவு படுத்த விரும்புகிறேன்.

கதை 1

முனிவர் ஒருவர் தனது ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்..

ஒருநாள் அவர் கிழிந்து போன தனது ஆடையை தைத்துக் கொண்டிருந்தார்.

இப்படி தவத்தில் சிறந்த முனிவர் ஆடை கிழிந்து அதை தைத்து அணியும் அளவிற்கு ஏழ்மையில்

இருப்பதைக் கண்ட இறைவன் முனிவர் முன்பு தோன்றி "அப்பனே உனக்கு வேண்டிய வரத்தை தருவதற்காகவே வந்திருக்கிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

இந்த முனிவரோ "இறைவா!!! தங்களின் வருகைக்கும். அடியேனுக்கு வேண்டும் வரம் தர இருப்பதற்கும்
மிக்க நன்றி.

ஆனால் தனக்கு எந்தக் குறையும் இல்லை.அதனால் எனக்கு எதுவும் தேவைப் படவில்லை.

எனவே தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்." என்று இறைவனிடம் கூறினார்.

ஆனால் இறைவனோ விடவில்லை.

"மகனே நான் எவர முன்பாவது தோன்றினால் வரம் கொடுக்காமல் போக மாட்டேன். எனவே உனக்கு

வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

முனிவருக்கு என்ன வரம் கேட்பது என்று புரியவில்லை.

வேறுவழியில்லாமல் ஒருவரத்தைக் கேட்டார்.

"இறைவா நான் எனது கிழிந்த ஆடையை ஊசியில் நூலை கோர்த்து தைத்துக் கொண்டிருக்கிறேன்.

இது போல நான் தைக்கும் போதெல்லாம், ஊசியின் பின்னாலேயே நூலும் வரவேண்டும்."

என்று கேட்டார்.

ஏற்கனவே ஊசியின் பின்னால்தானே நூல் வந்துகொண்டிருக்கிறது, இதில் நான் வரம் தந்து ஆவது எதுவும் இல்லையே! என்றார்.

உடனே முனிவரும் "இறைவா இதுமட்டுமல்ல எல்லாமே இப்படித்தான் நிகழ்கிறது.

இதில் நீங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது??? என்று முனிவர் திருப்பிக் கேட்டதும் இறைவன் மறைந்தார்.

கதை 2

ஒரு முனிவர் தவமிருந்தார். அவரின் தவத்தை மெச்சி இறைவன் காட்சி தந்து வேண்டும் வரத்தைக் கேள்

என்றார். முனிவரும் தனக்கு குறை ஏதும் இல்லை எனவே தன்னை மன்னிக்கும்படி இறைவனை
வேண்டினார். இறைவனும் தான் வரம் தந்தே ஆகவேண்டும் என்று நிற்கிறார்.

வேறுவழி இல்லாமல் முனிவரும் ஒரு வரம் கேட்டார்.

முனிவருடைய இடது முழங்காலில் ஒரு தழும்பு இருந்தது. அதை தனது வலதுகாலுக்கு மாற்றித் தருமாறு கேட்டார்.

உடனே இறைவன் "மகனே இது உன்னுடைய பிராப்த கர்மாவால் உருவானது. என்னால் மாற்ற முடியாது

என்று கூறி மறைந்தார்.

மேற்படி இரண்டு கதைகளும் இறைவன் சக்தி அற்றவன் என்று கூறுகின்றனவா???

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று கூறுகின்றனவா???

விதியையும் பிராப்ததத்தையும் மாற்றியமைக்க இறைவனால் கூட முடியாது என்று கூறுகின்றனவா???

இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் தான் என்ன????

அடுத்தப் பதிவில்...

அன்புடன்




மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Wed Sep 11, 2013 12:22 am

இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம்... (தொடர்ச்சி 2)

இறைவனை கடவுள் என்றும் குறிப்பிடுவதுண்டு.

கடவுள் என்றால் அனைத்தையும் கடந்து நிற்றல், என்று சிலர் கூறுகின்றனர்.

அதாவது அனைத்தையும் கடந்து (துறந்து) நிற்பதுதான், துறவு கொள்வதுதான் கடவுள் தன்மையா?

இன்னும் சிலர் கடந்து உள்ளே செல்லுதல் என்று கூறுகின்றனர்.

இப்படி தன்னைகடந்து உள்ளே செல்லுதல் என்பது சமாதி நிலை ஆகும்.

எந்தவிதமான செயல்பாடு இல்லாத சமாதி நிலைதான் இறைத்தன்மையா????

இன்னும் சிலர்

கடந்து செல்லுதல் என்பது துறவரத்தையோ, சமாதி நிலையையோ குறிப்பதல்ல,

இப்பூவுலகமானது திடபொருளாக, ஸ்தூல (பஞ்சபூத) அம்சமாக இருக்கிறது.

இது அனைவருக்குமே பொதுவான விஷயம்.

இப்பூவுலகில் வாழும் மனிதர்களாகிய நம் அனுபவங்கள் மாறுபடுகின்றன.

எனவே உலகம் என்பது திடபொருளாக, ஸ்தூல (பஞ்சபூத) அம்சமாக இருந்தாலும், ஒவ்வொரு

தனினபரைப் பொருத்தவரை அவருடைய மனம் சார்ந்த அம்சமாக இருக்கிறது.

ஆகவே கடந்து செல்வது என்பது மனதோடு தொடர்புடையது.

அதாவது மனதை கடந்து அல்லது ஊடுருவி செல்வது.

அதாவது எதிலும் தங்கியிருக்காத நிலை என்று கடவுள் பற்றி விளக்கம் தருகிறார்கள்.

இன்னும் சிலர் கடவுள் நம்முள்ளேதான் இருக்கிறது. என்றும் கூறுகிறார்கள்.

இப்படி கடவுளைப்பற்றி ஏராளமான கருத்துக்கள் உள்ளன.

ஒவொன்றையும் தனித்தனியாக யோசிக்கும்போது எல்லாமே சரியாகவே இருக்கிறது.

ஆனாலும் இத்துடன் நாம் திருப்தி அடைந்துவிட முடிகிறதா???

மற்றவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்களும், அனுபவங்களும் நம்மை திருப்தி படுத்திவிடுமா???

அதாவது கடவுள் என்பது மனம் சார்ந்த ஒன்று என்றால், கடவுள் வெறும் மனக்கற்பிதம் என்று கூறிவிட முடியுமா???

அவரவர் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றால், அனுபவங்கள் எல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்று கூறிவிடமுடியாது. அதே சமயத்தில் அனுபவங்களை நிரூபிக்க முடியாது.

நிரூபிக்க முடியவில்லை என்பதாலேயே பொய் என்றும் கூறிவிடமுடியாது.

இந்த இடத்தில் மூன்று நிலைப்பாடு இருக்கிறது.

1) கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று மறுப்பவர்கள்.

இவர்களுடைய கருத்துக்கள் அனைத்தும் கடவுள் இருக்கிறது என்று கூறுபவர்களை மறுதளிப்பதாகவோ,

விமர்சனம் செய்வதாகவோ தான் இருக்கும்.

இவர்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டுகொள்ளத் தேவையில்லை.

காரணம் இல்லவே இல்லை என்ற எதிமறை கொள்கை உடையவர்கள்

அதாவது முடிவை முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டு ஒரு ஆய்வை மேற்கொள்ளும்போது அந்த முடிவுக்கு

மேல் ஆய்வு செய்ய முடியாது.

2) கடவுள் இருக்கிறது, இதற்க்கு மேல் நான் "கடவுளுக்கு எதிரான எந்த விதமான சிந்தனைக்கும் ஆய்வுக்கும் இடம் இல்லை" என்று கூறுபவர்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை.

காரணம் இவர்களும் தனக்கேற்பட்ட சில (நிரூபிக்க முடியாத) அனுபவங்களை மட்டுமே வைத்துக் கொண்டு

தங்களுடைய நிலைப் பாட்டிலிருந்து மாற முடியாதவர்கள்.

கடவுள் இருக்கிறது என்றோ, இல்லை என்றோ ஒரு முடிவை எடுத்துவிட்டு எப்படி ஆய்வை செய்வது???

நாம் ஒரு முடிவை எடுத்துவிட்டு ஆய்வு செய்வோமானால், நமது முடிவுக்கு அப்பால் நமது ஆய்வு செல்லாது.

ஒரு கயிற்றில் கட்டப்பட்ட மாடு ஒரு எல்லைக்குள் மட்டுமே மேய முடியும். அதற்க்கு அப்பால்

செல்ல முடியாது.

எனவே மூன்றாம் நிலைப்பாட்டிளிருக்கும் நாம் ஆய்வை தொடருவோம்.

அதென்ன சார் மூன்றாம் நிலைப்பாடு???

இறைவன் இருக்கிறான். ஆனால்

1) எப்படி இருக்கிறான்???

2) அவன் வேலை என்ன???

3) அவனுக்கும் நமக்கும் இடையே உள்ள பந்தம், உறவு என்ன???

இப்படி நேர்மறையான சிந்தனையுடன் ஆய்வை தொடர்ந்தால் நிச்சயம் ஒரு நல்ல பதில் கிடைக்கும்.

அன்புடன்.......




மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 11, 2013 6:38 am

நல்ல தகவல், நன்றி ஐயா.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 7:45 am

நல்ல பயனுள்ள தொடர் நன்றி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 11, 2013 9:37 am

கடவுளை பற்றிய மனித கண்ணோட்ட தொடர் அருமை நண்பரே புன்னகை

தொடருங்கள் புன்னகை

விரும்பினேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 10:26 am

ரொம்ப அருமையான தொடர் arumai: இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? 3838410834 இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? 3838410834 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க .................. அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன் புன்னகை

உங்களின் 3 பதிவுகளையுமே விரும்பினேன் புன்னகை வி.பொ.பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 11, 2013 5:04 pm

நண்பரே நீங்கள் சொல்வது நியாயம் தான் ஆனால் பரிகாரம் நாம் செய்வது.
விதி கடவுள் செய்தது இதில் எல்லோரும் சமம் தான் தவறுக்கு தண்டனை உண்டு

Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Wed Sep 11, 2013 9:56 pm

மாணிக்கம் நடேசன் ஐயா,
செம்மொழியான் பாண்டியன்,
ராஜூ சரவணன்,
கிருஷ்ணாம்மா,
எம்.பாலசரவணன்
ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எம். பாலசரவணன் wrote:நண்பரே நீங்கள் சொல்வது நியாயம் தான் ஆனால் பரிகாரம் நாம் செய்வது.
விதி கடவுள் செய்தது இதில் எல்லோரும் சமம் தான் தவறுக்கு தண்டனை உண்டு
விதியை கடவுள் செய்கிறாரா?

ஒருவன் கொலையுண்டு மரணம் அடைகிறான், அதுதான் அவன் விதி என்றால், இன்னாரல் இன்னவன் கொலையுண்டு மரணம் அடைவான் என்ற விதியை செய்த கடவுள் குற்றவாளியா? அந்த கொலையை செய்தவன் குற்றவாளியா? யாருக்கு தண்டனை கொடுப்பது?

விதியை கடவுள் செய்கிறார், என்றால் "உன் வாழ்க்கை உன் கையில்" என்ற சான்றோர்கள் வாக்கை என்ன செய்யலாம்?

பரிகாரத்தின் பலன் என்ன? பரிகாரத்தை கடவுள் ஏற்றுக் கொள்கிறாரா?

ஏற்றுக்கொண்டால் தண்டனை எதற்கு?

தவறுக்கு தண்டனை உண்டு என்றால் பரிகாரம் செய்யவேண்டிய அவசியம் என்ன?

இப்படி நிறைய கேள்விக் கணைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனவே உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மன்னிக்கவும்.
மீண்டும் ஒருமுறை பின்னூட்டம் தந்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்,




மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 1:31 pm

நண்பரே நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக