புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 6%
Barushree
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_m10பர்மாவில் தமிழர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மாவில் தமிழர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 03, 2013 2:01 pm

First topic message reminder :

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 01 - தொடர் அறிமுகம்



பிபிசி தமிழோசை வானொலியில், ஆகஸ்டு 18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், பர்மா (மியன்மார்) தமிழர்களின் வாழ்க்கை குறித்த புதிய பெட்டகத்தொடர் ஒலிபரப்பாகிறது.
இந்தப் பெட்டகத்தொடர் பர்மா தமிழர்களின் தற்போதைய வாழ்நிலையை ஆராய்வதுடன், அவர்களின் வரலாற்று ரீதியான நினைவுகள், அன்றாட வாழ்க்கை, மாறிவரும் பர்மாவில் தங்கள் எதிர்காலம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவைகளைப் பற்றி பேசுகிறது.
பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் கூறுகின்றன. அவர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள்.
அவர்களது மூதாதையர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலத்தில் பர்மாவுக்கு வந்து, நிதி, வணிகம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பணியாற்றினார்கள்.
பர்மாவில் 1948ல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்களின் நிலை சரியத்தொடங்கியது. 1960களில் பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டபோது ,பர்மிய தமிழர்களில் பலர் பர்மாவை விட்டு வெளியேற நேர்ந்தது. ஆனால் அவர்களில் கணிசமானோர் பர்மாவிலேயே தங்கிவிட்டனர்.
பர்மாவில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ள பிபிசியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுவாமிநாதன் நடராஜன், அங்கு வசிக்கும் வணிகர்கள், சமுதாயத் தலைவர்கள், விவசாயிகள் என்று பல தரப்பட்ட தமிழர்களை சந்தித்து பேட்டிகளை எடுத்தார்.
அவர்களது கலாசார அடையாளம் குறித்து இந்தப் பெட்டகத்தொடரில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த தொடரின் முதல் பகுதியில், தமிழகத்தில் இருந்து பர்மாவுக்கு தமிழர்கள் எந்த ஆண்டு வந்தார்கள் என்பது குறித்து விரிவாக ஆராயப்படுகிறது.

இன்னும் தொடரும்.

நன்றி ; பி.பி.சி தமிழோசை


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 04, 2013 4:09 pm

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 04, 2013 4:20 pm

பர்மா பார்ப்பதற்கு அழகான நாடு.
பௌத்த மதகுருமார் அதிகம் தென்படுவர். இனிமையான மக்கள். மழைக்காலம் (வசந்தகாலம்) ஆரம்பிக்கும் பொழுது, மழை திருவிழா நடைபெறும். ஆண்கள் பெண்கள் சிறுவசிறுமிகள் , வயதானோர் பலரும் மழை பொழிய ஆரம்பித்தவுடன் , தெருவில் வந்து ஆடிப்பாடி மழையை வரவேற்பார்கள் .
ஸீதி(பெரிய அளவு இலந்தை பழத்தை ) வெள்ளப்பாகில் வேகவைத்து கொடுப்பார்கள். உண்ணுவதற்கு நன்றாகவும் தெம்பாகவும் இருக்கும். ஈபே சாலா ( வறுத்த வேர்க்கடலை)
கலர் ஏற்றப்பட்ட பட்டாணி , மிகவும் பிரசித்தம். குழந்தைகள் இதை வாங்கி ,உதட்டுகளில் அதை தடவ , லிப்ஸ்டிக் போட்டுக்கொண்ட மாதிரி இருக்கும். "சாயா" என்றால், பாடம் கற்பிக்கும் வாத்யார்.
பர்மாவில் பிறந்து , சண்டையின் போது 1941 இல் இந்தியா ( அப்போது எல்லாம் , இந்தியா பர்மா பாகிஸ்தான் எல்லாமே ஒரே நாடுதான்)கடைசி கப்பலில் திரும்பி வந்து, மீண்டும் 1945 இல் பர்மா சென்று 1947 டிசெம்பரில் இந்திய குடிமுறை வேண்டி இந்திய வந்தவன் நான்.
எனது தகப்பனார் , நிலவழி நடையாக , ரங்கூன், மாண்டலே, அஸ்ஸாம் வழியாக நடந்து வந்தவர்.
சிறுவனாக 1945-47 கமாயூட் என்ற ஊரில் இருந்த நாட்கள் ,இன்றும் பசுமையாக உள்ளன.
தேக்கு மரத்தால் ஆன மாடி வீடு, ஐராவதி நதி கரையோரம் , ( ஐராவதியில் வெள்ளப்பெருக்கு எடுத்தால் ,தேக்கு மர foundation , நீரில் மூழ்கி இருக்கும்.) வீட்டின் எதிர்பக்கத்தில் பெரிய ஏரி, அதை ஒட்டி ரயில்வே பாதை. வண்டி போகும்போது அதன் பிம்பம் தலைகீழாய் போவதை ரசித்த காலங்கள் பல.
நினைவு பெட்டகத்தை திறக்க வைத்த , மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு நன்றி.

ரமணியன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 06, 2013 8:55 am

அனுபவங்களை எங்களோடு பகிர்ந்த உங்களது உணர்வுகளை எங்களாலும் உணர முடிகிறது. மீண்டும் தாங்கள் பர்மா சென்று அங்குள்ள மாற்றங்களைப் பற்றி எங்களுக்கு எழுதலாமே. உங்களது பழைய அனுபவங்களையும் புதிய பயணக் கட்டுரையையும் அன்புடன் எதிர்ப்பார்க்கிறோம் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 06, 2013 9:28 am

மறுமுறை போக ஆசைதான்.
செல்வி ஸ்யு கீ அவுங்க்ஸான் தகப்பனார் போஜோ அவுங்க்ஸான் முதல்வராக இருந்து மிலிடரியால் சுட்டுக்கொள்ளப்பட்ட போது, நான் சிறுவனாக அங்கு இருந்தேன்.

ரமணியன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 04, 2015 1:43 pm

பகுதி 02 –
இரண்டாம் உலகப் போரின் தாக்கம்


தங்க மண்ணில் தங்கிய தமிழர்களின் வாழ்வில் இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இரண்டாம் பாகம் அலசுகிறது ( பசுபதி ஐயரும் மகன் வெங்கட் ராமனும்)
. பர்மாவில் 19 ஆம் நூற்றூண்டில் குடியேறி, கடின உழைப்பால் சமூகத்தில் முன்னேற்றமடைந்திருந்த தமிழர்களின் வாழ்நிலையை இரண்டாம் உலகப்போரும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் கடுமையாக பாதித்தன

அமெரிக்காவின் பர்ல் துறைமுகத்தை 1941 ஆம் ஆண்டு இறுதியில் தாக்கிய ஜப்பான், தென் கிழக்கு ஆசியா மீதான தரைவழித் தாக்குதல்களை துவக்கியது.
மலேசியா, தாய்லாந்து. சிங்கப்பூர் என பல நாடுகள் அடுத்தடுத்து ஜப்பான் வசம் விழுந்தன. 1942 இன் ஆரம்பத்தில் பர்மாவின் பல பகுதிகள் ஜப்பான் வசம் போயின.
பிளவுபடாத பிரிட்டிஷ் இந்தியாதான் போர் தயாரிப்புக்களுக்கு முக்கியப் பின்தளமாக இருந்து வந்தது.
ஜப்பானிடம் இந்தியா விழக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரிட்டிஷ் நிர்வாகம் செயல்பட்டது. இதனால், இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையேயான எல்லையில் கொட்டும் மழையில் அடர்ந்த காடுகளில் கடும் போர் நடைபெற்றது.
இந்தப் போர் பர்மாவை சின்னாபின்னமாக்கியது. ஆசியாவின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக - ஸ்வர்ண பூமியாக – வளம் கொழிக்கும் தங்க பூமியாக அறியப்பட்ட பர்மா வறுமையில் விழுந்தது.
பர்மியத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தப் போர் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியது. பர்மாவில் ஜப்பானியர்கள் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாக சீர் குலைந்தது.
இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.
போரால் இந்தியாவுக்குப் போகும் வான் மற்றும் கப்பல் போக்குவரத்து முற்றாக தடைபட்டுவிட்டதால், லட்சக் கணக்கானோர் நாட்டின் வடக்கேயுள்ள அடர்ந்த காடுகள் வழியாக பல நூறு மைல்கள் நடந்து வட கிழக்கு இந்தியாவை அடைய முனைந்தனர். வழியில் பலர் புலிகளாலும், பாம்புகளாலும் கொல்லப்பட்டனர். மலேரியா போன்ற நோய்களும், திடிரென ஏற்படும் காட்டு வெள்ளமும் உயிரைப் பறித்தன.

டவுன்ஜி ஹாக்கி ஆணியில் பசுபதி ஐயர்
பர்மாவின் டவுன்ஜியில் இருந்த பசுபதி ஐயர் தனது நான்கு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இந்தியாவை நோக்கிய நீண்ட நடை பயணத்தை துவக்கினார்.
மூன்று மாதம் நடந்த பிறகு தனி ஆளாகத்தான் அவர் இந்தியா வந்தார். அவரின் நான்கு பெண்களும், மனைவியும் வழியிலேயே மாண்டனர். அவர்களுக்கு இறுதிக் கிரியைகள் கூட செய்ய முடியாத சூழலில் இருந்த பசுபதி ஐயர் தனது கடும் பயண நினைவுகளை 'பர்மாவிலிருந்து நடையாய் நடந்து' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
தற்போது சென்னையில் வசிக்கும் அவரின் 80 வயது மகன் வெங்கட்ராமன், இந்த நடை பயணமானது பசுபதி ஐயரை முற்றாக மாற்றிவிட்டதாகவும், அந்த நினைவுகளை நினைக்கும்போது தனது தந்தை சோகத்தில் முழ்கிவிடுவார் என்றும் தெரிவித்தார்.
போராக்குப் பின் பர்மா 1948 இல் சுதந்திரம் பெற்றது. புதிய நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் 1962 இல் இராணுவம் ஆட்சியைப் பிடித்து விட்டது. அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இந்தியர்களின் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர். அங்கே இருந்த தமிழ் மொழிப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டதால் அங்குள்ள தமிழர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் பர்மியர்களுக்கு கொடுக்கப்பட்டன. இதனால் தமிழ் கிராமங்களின் தன்மை மாறியது. தேசியமயத்தால் தமிழ் சமூகம் நிலை குலைந்தது என்றுதான் சொல்லவேண்டும். பர்மிய மொழிக்கு கொடுக்கப்பட்ட முதலிடம் காரணமாக தமிழர்கள் அரசு வேலைகளில் இருந்து ஒரங்கட்டப்பட்டனர். தற்போது கூட தமிழர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் – வர்த்தகர்களாகவுமே இருக்கின்றனர்.


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 04, 2015 1:46 pm

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 04, 2015 1:49 pm

http://www.mediafire.com/listen/g10dz6bii7agxt7/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2.ம்ப்3

கேட்கும் போதே எனது கண்கள், கண்ணீரால் நனைந்தன.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 4:43 pm

பர்மாவில் இருந்து மாண்டலே வழியாக நடைபாதையில் தான் எந்தன் தந்தையும் வந்தார் .
கிளம்பியது தெரியும் . 3 மாதங்கள் வரை ,கிணற்றில் போட்ட கல் போன்று , இருக்காரா இல்லையா என்று தெரியாது . நான் சிறு குழந்தை அப்போது . வீட்டில் ,எந்தன் தாயார் , தாத்தா, பாட்டி அவர்கள்
மனநிலை எப்பிடி இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக