புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
39 Posts - 72%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
375 Posts - 78%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
8 Posts - 2%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:50 pm

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 2:02 pm

பதிவுக்கு நன்றி .

இவன்
அனைத்து உலக இட்லி பேரவை..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 2:02 pm

ஆகா... அருமையான எழுத்து நடை. வித்தியாசமான முறையில் ரத்னா கபே இட்லியின் சுவையை சுவைபடக் கூறிய கார்திக்கு வாழ்த்துக்கள்.

(ஒரு சின்ன சந்தேகம் - ஆமா இது நீங்களே எழுதியதா இல்ல ஓட்டல்ல யாராவது எழுதிக்கொடுத்ததை இங்க வந்து பரிமாறறீங்களா?)

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 2:04 pm

வை.பாலாஜி wrote:பதிவுக்கு நன்றி .

இவன்
அனைத்து உலக இட்லி பேரவை..

இது வெறும் இட்லியை பத்தியது ரவா இட்லியல்ல சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 2:07 pm

யாதுமானவள் wrote:ஆகா... அருமையான எழுத்து நடை. வித்தியாசமான முறையில் ரத்னா கபே இட்லியின் சுவையை சுவைபடக் கூறிய கார்திக்கு வாழ்த்துக்கள்.

(ஒரு சின்ன சந்தேகம் - ஆமா இது நீங்களே எழுதியதா இல்ல ஓட்டல்ல யாராவது எழுதிக்கொடுத்ததை இங்க வந்து பரிமாறறீங்களா?)

இல்ல இது பற்றி ஏற்க்கனவே எழுதணுமுணு நினைச்சிருந்தேன் மாவு சரியாக அரைபடாமல் இருந்தது இப்போதான் வார்க்கமுடிஞ்சுது.

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 2:07 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:பதிவுக்கு நன்றி .

இவன்
அனைத்து உலக இட்லி பேரவை..

இது வெறும் இட்லியை பத்தியது ரவா இட்லியல்ல சிரி சிரி

இது போல மொக்கை போடுவதால் இன்று முதல் பாலா கார்த்தி ஈகரையின் மொக்கைசாமி என்று அழைபடுவார்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 2:11 pm

உலக இட்லி பேரவை..

இது வெறும் இட்லியை பத்தியது ரவா இட்லியல்ல சிரி சிரி ---

ஹஹ்ஹா... கார்தீ... great sense of humor!

மாவு சரியாக அரைபடாமல் இருந்தது இப்போதான் வார்க்கமுடிஞ்சுது. - ஆஹா அதிகமா புளிக்காம சுவையாகத்தான் வார்த்திருக்கே... வாழ்த்துக்கள் !

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 2:14 pm

யாதுமானவள் wrote:உலக இட்லி பேரவை..

இது வெறும் இட்லியை பத்தியது ரவா இட்லியல்ல சிரி சிரி ---

ஹஹ்ஹா... கார்தீ... great sense of humor!

மாவு சரியாக அரைபடாமல் இருந்தது இப்போதான் வார்க்கமுடிஞ்சுது. - ஆஹா அதிகமா புளிக்காம சுவையாகத்தான் வார்த்திருக்கே... வாழ்த்துக்கள் !

அக்கா கொஞ்சம் தீய கம்மி பன்னிக்கோங்க நான் வெறும் தி தான் சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 2:20 pm

தெரிஞ்சு தான் தீ ன்னு எழுதறேன்...

காரணம் என்னன்னா.... உன்னோட காமெடி தீயை விட வேகமா பரவி எல்லாரையும் சிரிக்கவைக்குது... அதான் கார்தீ....

(ஹைய்யோ ... இதுக்கென்ன பதில் வச்சிருக்கியோ? )

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 2:34 pm

இப்போ இட்லி சாம்பாரை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இட்லியை சாம்பாருடன் சாப்பிடுவதே சாலச்சிறந்தது என்பதை ரத்னா கஃபே இலக்கணமாக்கினாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பதை அவரவர் விருப்பதிற்கு விட்டுவிடுவது நுகர்வோரை மதிக்கும் நிர்வாகத்தின் பண்பை பறை சாற்றுகிறது.கபினி அணையிலிருந்து பொங்கி வழியும் காவிரி ஆற்றைப் போல் தட்டில் நுங்கும் நுரையுடன் வந்து விழும் சாம்பாரை ஆசைத் தீர துழாவிவிட்டு இட்லியின் சரிந்த பகுதியில் ஸ்பூனால் ஒரு வெட்டு வெட்டி ,மேற்படி இட்லித்துண்டைத் தண்ணீர்த் தொட்டியில் தலையை அமுக்கி கொலை செய்யும் வெறியனைப் போல் அல்லாது சாம்பாரில் மெல்ல மெல்ல முக்கி எடுத்து,கிண்ணென்றும் இல்லாமல் சொதசொதவென்றும் இல்லாமல் நடுநிலையில் அத்துண்டினை ஸ்பூனால் ஆசையுடன் வாரி எடுத்து உச்சி மோர்ந்து உண்ணுவது உத்தம முறையாக பரிந்துரைக்கபடுகிறது.

சாம்பாருடன் தட்டில் இரண்டர கலந்து விட்ட இட்லியை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற மமதையுடன் நோஞ்சான் ஸ்பூனினால் கை தேர்ந்த சமையற்கலைஞர் அடுக்கிய கொத்தவரங்காய் பிஞ்சுகளை "டக்‍டக்‍டக்‍டக்‍டக்‍" என்ற காலப் பரிமாணத்தின் சீரான அளவில் வெட்டுவதுப் போல் வெட்டிவிட்டு இட்லித்துண்டங்கள்‍சாம்பார்க் கலவையை கட்டுமான தொழில் புரியும் கொத்தனார் இரும்பு பான்டில் சிமென்ட்,மணல்,தண்ணீர் கலவையைக் கொல்லர் உதவியுடன் லாவகமாக கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து மறுபடியும் கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து பின்னர் கலவையைப் பூச உபயோகிப்பது போல ஸ்பூனால் எடுத்து வாய்க்குள் செலுத்துவது ஜனரஞ்ச செயலாகும்.

சிலர் உபரியாக உளுந்து வடை ஒன்றையும் சேர்த்து துண்டங்கள் அங்கிங்கென்னாதபடி எங்கும் பரவி இட்லியின் துணுக்குகளுடன் இரண்டரக் கலந்து இருக்கும் வகையில் வெட்டி அமைத்துக் கொள்வது, இக்கலவைக்கு இன்னும் உறுதி அளித்தால் என்ன என்று எழுப்பிய கேள்விக்கு அளித்துக் கொள்ளும் வடையாகும்..அதாவது விடையாகும்.

வெறும் இட்லி மாத்திரம் சுவையான,நிலையான டிபன் ஆயிடுமா? அதற்கு சாம்பார், வெள்ளைச் சட்டினி, வெங்காயச் சட்டினி, புதினா சட்டினி போன்ற மற்றக் கட்சிகளுடன் கூட்டணித் தேவைப்படுகிறது.தட்டின் மத்தியில் கூட்டு சேர்ந்த சிவப்புக் கார சட்டினி இட்லியை நாட வைக்குமா அல்லது ஆட வைக்குமா? கிரிஷ்ணமாதான் பதில் கூற‌ வேண்டும். :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக