புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
57 Posts - 72%
heezulia
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
224 Posts - 75%
heezulia
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
8 Posts - 3%
prajai
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
2 Posts - 1%
Barushree
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நகரங்கள் (5) Poll_c10நகரங்கள் (5) Poll_m10நகரங்கள் (5) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரங்கள் (5)


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 14:04

தமிழ்நாடு


சென்னை ( Chennai-Madras )


முன்னூறு வருட சரித்திரம். கடலோர கிராமங்களுக்கிடையில் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இறங்கி கி.பி. 1639ல் விஜயநகரின் கடைசி அரசர் சந்திரகிரி அளித்த நிலத்தில் மதராஸ்பட்டினத்தை ஸ்தாபித்தனர்.

1644ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நிறுவிய பின்னர் அதைச் சுற்றிலும் திட்டமில்லாமலே மெட்ராஸ் வளர ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்களின் பிடியில் முழுமையாக தென்னிந்தியா வந்த பின் மெட்ராஸ் அவர்களது நிர்வாக மற்றும் வியாபார தலைநகரானது.


தொடர்ந்து மிக வேகமாக வளர்ந்து இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மெட்ராஸ் என்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர் 1996ல் சென்னை என்று அதிகார பூர்வ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகர் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த சென்னப்ப நாயக்கரின் நினைவாக இப்பெயர் அமைந்தது.


நகர வழக்கங்கள்:

குளிர்காலத்தில் கூட 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவதில்லை. கடல் காற்றின் ஈரப்பதத்தால் கசகசப்பு இருந்தாலும் மா‍லை 4 மணிக்கு ‍மேல் கடலில் இருந்து நிலத்திற்கு வரும் காற்று இரவின் வெம்மையை வெகுவாக குறைக்கிறது. வருடம் முழுவதற்கும் வேனிர்கால உடைகளே போதுமானவை.


நாட்டின் பெரிய மெட்ரோக்களில் ஒன்று, ஆனாலும் கட்டுப்பெட்டித்தனமான நகரம் என்றிருந்த பெயர் தற்போது மாறி வருகிறது. இங்கு பேசப்படும் தமிழ் மற்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கே புரியாத அளவு மொழி மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இந்த பேச்சு வழக்கு சமூகத்தின் அடிமட்ட மக்களிடம் மட்டுமே பரவலாக உள்ளது.


நகரின் அமைப்பு:

நகரம் வடக்கு தெற்காக முதலில் விரிவடைந்தது, தற்போது மேற்கில் விரிவடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அகலமான சாலைகளைக் கொண்ட நகரமாக இருந்தாலும் நகரின் வளர்ச்சியினால் மிகுந்த நெரிசலும் புகை மாசும் நிறைந்த நகரமாக இருக்கிறது.


50களில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) கட்டப்பட்ட 14மாடி கட்டிடமே இன்றும் சென்னையின் அடையாளம். தற்போது தான் அதை விட அதிக மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டபட்டு வருகின்றன.



முக்கிய இடங்கள்:

மெரினா கடற்கரை:

உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை, தற்போது அளவுக்கதிகமான கூட்டத்தாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் 5 கி.மீ. நீளத்திற்கு மிக லேசான வளைவுடன் இருக்கும் கடற்கரையின் அழகு அவற்றையும் மீறி வசீகரிக்கிறது. இதன் வடகோடியில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ளது.


மாமல்லபுரம் (மகாபலிபுரம்):

சென்னையிலிருந்து தெற்கு கடற்கரையோர சாலையில் சுமார் 60கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவ காலத்தில் செய்யப்பட்ட அற்புதமான பழங்காலச் சிலைகள் இந்த சிற்றூர் முழுதும் காணலாம். ஊர் முழுதும் பல்வேறு சிலை செய்யும் ஸ்தாபனங்கள் முளைத்துள்ளன. சிறப்பான சிற்பக் கலைஞர்கள் நிறைந்த ஊர். மாமல்லபுரம் செல்லும் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் (Theme Parks) திறக்கப்பட்டுள்ளன.


வண்டலூர் மிருகக்காட்சி சா‍லை:

நகரின் மையத்தில் முன்பு அமைந்திருந்த மிருகக்காட்சி சாலை தற்போது நகரின் வெளியே பரந்த இடத்தில் மிருகங்கள் இயற்கையாக உலவும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் கண்டு களிக்க ஏற்ற இடம்.


வள்ளுவர் கோட்டம்:

திருவள்ளுவரின் பெயரால் தமிழக அரசு அமைந்த கூடம். தேர் போன்ற வெளிப்புற அமைப்பு காணத்தக்கவை, உள்ளே திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:

திருப்பதி (120 கி.மீ. வடக்கு):

புகழ் பெற்ற ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம்.

திருக்கழுக்குன்றம் (75 கி.மீ. தெற்கு):

குன்றின் மீதமைந்த கோவில். தினமும் சரியாக மதியம் 12மணிக்கு கோவிலில் உணவருந்த இரண்டு பருந்துகள் வந்தமர்வது காண வேண்டிய காட்சி.

காஞ்சிபுரம் (75 கி.மீ. தென்மேற்கு):

காமாட்சி அம்மன் கோவில். சங்கராச்சாரியார் மடாலயம்.

பழவேற்காடு (60 கி.மீ. வடக்கு)

பாண்டிச்சேரி (130 கி.மீ. தெற்கு):

யூனியன் பிரதேசம். அரவிந்தர் வாழ்ந்த ஆரோவில். இந்திய-பிரெஞ்சு கலாசாரம்.

திருவண்ணாமலை (130 கி.மீ. தென்மேற்கு):

குன்றின் மீதமைந்த ஜோதி வடிவான சிவன் கோவில். ரமணர் வாழ்ந்த இடம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 15:26

மதுரை ( Madurai )

நகர வழக்கங்கள்:

Madurai தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் மிகப் பெரியது (ஜனத்தொகையில் மட்டும்). தூங்கா நகரம், கூடல் நகரம் என்று பெயர் பெற்றது.
நகரின் தூங்கா இயக்கத்திற்கு சீதோஷ்ணமும், நடைபாதைக் கடைகளும் முக்கிய காரணங்கள். குளிர்காலம் என்பது டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை மட்டுமே. அதுவும் கம்பளி தேவைப்படாத அளவிற்கு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவைகளை உபயோகிப்பதே இல்லை.

அதே போல் குடைகளையும் பொதுவாக வயதானோர் மட்டுமே வெயிலுக்கு பயன்படுத்துகிறார்கள். மழை சாதாரணமாக 1/2 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரத்திற்கு மேல் பெய்வதில்லை, அதுவும் சில நாட்கள் மட்டும். மதுரை மக்களுக்கு மழை என்பது ஒதுங்கி நிற்கும் தருணம். ரெயின் கோட், ரப்பர் சூ, குடைகள் போன்றவை பள்ளிச் சிறார்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நகரின் அமைப்பு:

நகரின் வாழ்க்கை 2500 வருட சரித்திரச்சின்னங்களோடு உரசிக் கொண்டு இயங்கி வருகிறது. நகரின் நடு நாயகமாக மீனாட்சி அம்மன் கோவில். பாண்டிய மன்னர்களும், தொடர்ந்து நாயக்க மன்னர்களும் கோவில் திருப்பணிகளை தாராளமாக செய்து வந்ததால் கோவில் பல மடங்கு விரிவடைந்து நான்கு புறமும் ஆடி வீதிகளை உள்ளடக்கி நிற்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் கட்டத்துவங்கிய ராஜகோபுரம் கோவிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகளையும், அதையடுத்த ஆவணி மூல வீதிகளையும் தாண்டி நிற்கிறது. இந்த வேலை நிறைவு பெற்றிருந்தால் இந்த வீதிகளும் கோவிலுக்குள் அடங்கி நின்றிருக்கும்.

கோவிலைச் சுற்றி சதுரம் சதுரமாக விரிவடைந்து கொண்டே வரும் வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் தான். கோவிலுக்குள் ஆடி, கோவிலுக்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என மூன்று சதுர வீதிகளுக்குப் பின் 'வெளி வீதி'கள். இவையனைத்தும் நகரின் மையப்பகுதியான பின்கோட் எண் 625001ல் அடங்கிய பகுதிகள் மட்டுமே. ஆனால் சரித்திரச் சின்னங்கள் நகரின் தற்போதைய எல்லையைத் தாண்டியும் பரவலாக உள்ளன.

நகர வரலாறு:

Meenakshi Temple - Golden Lotus Tankவைகை நதியின் கரையில் அமைந்திருக்கும் மதுரை பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. பாண்டிய மன்னன் குலசேகரன் மீனாட்சி அம்மன் கோவிலை நகரின் மையத்தில் ஸ்தாபித்து அதைச் சுற்றி தாமரை வடிவிலான நகரை அமைத்தான். இந்த நகரில் சிவபெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. இன்றும் கூட சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நகரின் அதிமுக்கிய திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இது மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி நடைபெறுவதால் தொடர்ந்து இரு வாரங்களுக்கு நகர் முழுவதும் விழாப் கோலத்தில் இருக்கும். இந்தத் திருவிழா சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் முஸ்லிம்களையும் பங்கு கொள்ளச் செய்கிறது.

முக்கிய இடங்கள்:

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்:

புராதனமான, நன்கு கட்டப்பட்ட கோவில். இந்தியாவில் எல்லாப் பகுதியிலும் மதுரை தெரிந்த பெயராக இருக்கக் காரணமானது. நகரின் மையத்தில் இருக்கிறது. ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள், கலைப்பொருட்கள் மியூசியம் ஆகியவை கோவிலில் பார்க்க வேண்டியவை.

திருமலை நாயக்கர் மஹால்:

Thirumalai Nayakar Mahalஇந்தோ-சார்செனிக் கட்டிட அமைப்பில் அமைந்த அரண்மனை. 1523ம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்போது மிச்சமிருப்பது கால் பங்கிற்கும் குறைவு. மற்ற பகுதிகள் வீடுகளாகவும் தெருக்களாகவும் மாறி விட்டன.

மஹாலுக்கு பின்புறம் சற்றுதூரம் தள்ளி அரண்மனையின் பெரும் தூண்கள் மட்டும் ஒரு சிறிய சந்தின் (சந்தின் பெயர்: பத்துத் தூண் சந்து) வரிசையாக நிற்கின்றன.
தெப்பக்குளம்:

Teppakulam மதுரையின் கிழக்குப் பகுதியில் பரந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இணையான நிலப்பரப் பில், மன்னர் திருமலை நாயக்கரால் 1646ல் அமைக்கப்பட்ட குளத்தின் நடுவில் தீவு போல மரங்களும் மைய மண்டபமும் உள்ளது.

முன்பு வைகை நதியிலிருந்து தெப்பக்குளத்திற்கு நீர் வரும் வழிகள் இருந் ததாக சொல்லப்படுகிறது. தற்போது தெப்பத் திருவிழா தவிர மற்ற சமயங்களில் காலியாக இருக்கும்.

கூடல் அழகர் கோவில்:

மிகப் பழமையான கோவில். 108 திருப்பதிகளில் ஒன்று. பெரியார் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள இக்கோவில் பாண்டியர் காலத்தில் மதுரையை அடுத்த கிராமமாக இருந்ததாக கூறுவர்.

காந்தி மியூசியம்:

Gandhi Museum ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையில் அமைந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தெளிவான வரலாற்றையும், காந்தியைப் பற்றி பல அரிய விஷயங்களையும் அறியலாம். காந்தி சுடப்பட்டு இறக்கும் போது அணிந்திருந்த (இரத்தக் கறை படிந்த) மேல் துண்டு இங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள்ளேயே மாநில அரசின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம்:

முருகனின் ஆறு படை வீடுகளில் முதலாவது. குடைவரைக் கோவில். மதுரையின் தெற்குப் பகுதியில் 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

அழகர் கோவில்:

Alagar Koilமதுரையிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் ரம்மியமான சூழ்நிலையில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியே சித்திரைத் திருவிழாவில் முக்கிய அம்சமாகும்.

பழமுதிர் சோலை:

அழகர் கோவில் மலையில் அமைந்துள்ளது. அழகர் கோவிலில் இருந்து மலை மீது சுமார் 1 1/2 கி.மீ. செல்ல வேண்டும். வேன் வசதி உண்டு. முருகனின் ஆறு படை வீடுகளில் ஆறாவது படை வீடு இது.

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:

கொடைக்கானல் - (120 கீ.மீ வடமேற்கு.):

மலை வாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 2130மீ. உயரம்.

பழனி - (118 கி.மீ. வட மேற்கு.):
குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று
.

பெரியார் வனவிலங்கு சரணாலயம் (தேக்கடி) - (140 கி.மீ. மேற்கு.):
தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான சரணாலயம். சிறந்த காலம் அக்டோபர் - ஜூன்
.


மேகமலை (130 கி.மீ. மேற்கு):
மேற்குத் தொடர்ச்சி மலையில் டீ எஸ்டேட்டுகள் நிறைந்த இடம்.


சுருளி அருவி - (123 கீ.மீ. மேற்கு):
தேக்கடிக்குச் செல்லும் வழியில் பசுமையான இயற்கைச் சூழ்நிலையில்.


குற்றாலம் - (155 கி.மீ. தெற்கு-தென்மேற்கு):
பிரபலமான நீர்வீழ்ச்சிகள் நிறைந்த ஆரோக்கிய ஓய்வுத் தலம்.


கன்னியாகுமரி - (255 கி.மீ. தெற்கு):
நாட்டின் தெற்கு முனை. விவேகானந்தர் பாறை.


திருச்செந்தூர் - (160 கி.மீ. தெற்கு-தென்கிழக்கு):
கடலோர முருகன் கோவில். ஆறுபடை வீடுகளில் ஒன்று.


ராமேஸ்வரம் - (175 கி.மீ. கிழக்கு):
மிகப் பழமையான கோவில். ராமாயண கால வரலாறு உண்டு.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 15:31

கோயம்புத்தூர் (Coimbatore )


நகர வழக்கங்கள்:

கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரம். பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற நகரில் சுமார் 30,000 சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. துணி மில்கள், பம்ப் செட்டுகள், கிரைண்டர்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஆகியவற்றில் இந்திய அளவில் கோவைக்கு தனி இடம் உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக்காட்டு இடைவெளி வழியே வரும் காற்று நகரின் இதமான க்ளைமேட்டுக்கு காரணமாக இருக்கிறது. ஆனால் மழை மிகக் குறைவு.

கோவையில் விநியோகிக்கப்படும் சிறுவாணி நதியின் நீருக்குத் தனி சுவை.

முக்கிய இடங்கள்:

பேரூர் பட்டீஸ்வரஸ்வாமி கோவில்:

பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவன், பட்டீஸ்வரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ளார்கள். கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை.

மருதமலை முருகன் கோவில்:

நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள கோவில் முருகனின் ஆறு படை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற கோவிலாகும்.

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்:

நகர் மத்தியில் வைசியாள் தெருவில் அமைந்துள்ளது. நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

கோவைக் குற்றாலம்:

கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.

வ.உ.சி. பூங்கா:

வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன.

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:

ஊட்டி (90 கி.மீ. வட மேற்கு):
மிகப் பிரபல மலை வாசஸ்தலம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.


குன்னூர்:
ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாசஸ்தலம். சிம்ஸ் பார்க் பிரபலம்.

முதுமலை சரணாலயம்:
ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம்.

மலம்புழா அணை:
பாலக்காடு அருகில்.

ஆனைமலை:
பழனி - (100 கி.மீ., தெற்கு):

குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.


அமராவதி அணை:
திருமூர்த்தி அருவி


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 15:33



சிட்னி ( Sydney )


ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது? என்று கேட்டால் பலர் உடனே 'சிட்னி' என்று தான் சொல்வார்கள். ஆஸ்திரேலியா ஒரு நாடாக உருவாகிய வருடத்தில் (1788-ல்) உருவாக்கப்பட்ட சிட்னி, அதன் தலைநகர் இல்லை என்பது வியப்பிற்குரியது தான்.

கான்பெர்ரா தான் தலைநகர் என்றாலும் பலருக்கும் சிட்னி தான் உண்மையான தலைநகரம்.

2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ், நகரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நகரின் போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு எல்லாமே கிட்டதட்ட புதிதாய் அமைக்கப்பட்டது. ஏராளமான புதிய ஹோட்டல்கள், அபார்ட்மெண்ட்கள் நகரின் அழகையும் இயல்பையும் கெடுத்து விட்டது என்பது உள்ளூர்வாசிகளின் புகார். ஆம், 4 கோடி மக்கள் வாழும், பிரபலமான வர்த்தக நகராக இருந்தாலும், கவர்ச்சிகரமான, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு நகர இயல்பு இங்கு உண்டு.


போர்ட் ஜாக்ஸன் எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுக பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் ஓபரா ஹவுஸும் உலகம் முழுவதும் அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கை துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுக கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இது போதாதென்று பாரமட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் (டிசம்பர் - ஜனவரி) சிட்னியின் கடற்கரை நிரம்பி வழியும்.


நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி.

நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் டவுன் ஹால் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம்.

ட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய மியூசியம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது.

ஓபரா ஹவுஸ் அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் கானலாம். ஆஸ்திரேலியாவிலேயே பழங்குடியினர் அதிகம் வாழும் நகரம் சிட்னி தான்.

நகரிலிருந்து சிறிது நேர படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் கொஞ்சி விளையாடும் இடம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 15:34

அதிக மக்கள் வாழும் 50 நகரங்கள் ( 50 Populous Cities )



உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் முதலில் வருவது டோக்கியோ (சுமார் 3.5 கோடி பேர்).
நியூயார்க் இரண்டாமிடத்திலும் (2.02 கோடி), தென்கொரியாவின் தலைநகர் சியோல் மூன்றாவது
இடத்திலும் (1.99 கோடி) இருக்கிறது.
தெற்காசியா

தெற்காசியாவில் அதிக மக்கள் வாழும் நகரம் மும்பை. 1.79 கோடி மக்கள் வசிக்கும் மும்பை உலகில்
ஆறாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து, 14-வது இடம்
கொல்கத்தா (கல்கத்தா)
16-வது இடம்
கராச்சி
19-வது இடம்
டெல்லி
24-வது இடம்
தாகா, பங்களாதேஷ்
34-வது இடம்
சென்னை
35-வது இடம்
ஹைதராபாத், இந்தியா
36-வது இடம்
லாகூர்
43-வது இடம்
பெங்களூர்


ஆகிய இடங்களில் இருக்கிறது.
தென் கிழக்கு ஆசியா

தென்கிழக்காசியாவில் முதலாவதாக மணிலா உலகின் 10வது இடத்திலும் (1.35 கோடி). தொடர்ந்து, 15-வது இடம்
ஜகார்த்தா, இந்தோனேசியா
31-வது இடம்
பாங்காக், தாய்லாந்து


ஆகிய இடங்களில் இருக்கிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகியவை முதல் 50க்குள் வரவில்லை.
ஆஸ்திரேலியா, ஐரோப்பா

இந்த பட்டியலில் முற்றிலும் விடுபட்டுப் போன கண்டம் ஆஸ்திரேலியா. ஐரோப்பாவின் அதிக மக்கள் வாழும்
நகரமான மாஸ்கோ உலக அளவில் 12-வது இடத்தில் தான் இருக்கிறது.
முழுப் பட்டியலையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 15:35

இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் டிசம்பர் 2008ல் 1ம் தேதி எடுக்க பட்டது....


கொஞ்சம் மாரி இந்தால் கோபிக்க கூடாது....

இவைகள் அனைத்தும், மற்றும் நான் இன்று போட்ட மொத்த பதிவும் இவருடையது தான்...

http://www.kalanjiam.com/


நன்றி - ஆக்கம்: viggie

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக