புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் சொன்ன கதைகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 8:13 am

First topic message reminder :


சென்னையில் சிறந்த காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நீதிக்கதைகள் வருமாறு:-

ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறு வேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி அந்த வீட்டின் உரிமையாளருக்கு பரிசுப் பொருள் வழங்குவது வழக்கம்.

ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்கு கை நிறைய பொற்காசுகளை வழங்கினார் ராஜா. இந்த பொற்காசுகளை வழங்கிவிட்டு ராஜா வெளியே வந்தவுடன் மாடு ஒன்று, அவரை முட்டி கீழே தள்ளிவிட்டது. இதனால் ராஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் ராஜாவின் காவலாளிகள் ராஜாவை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தத் தகவலை அமைச்சருக்கு தெரிவித்த காவலாளிகள் ராஜா இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு காரணம் அந்த விவசாயி தான் என்றும், அந்த விவசாயியை ராஜா பார்த்ததால் தான் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்றும் எடுத்துக் கூறினர். அமைச்சரும் அந்த விவசாயியை வரவழைத்து மன்னர் முன் நிறுத்தினார்.

மன்னர் அந்த விவசாயிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தனக்கு மரண தண்டனை என்று கேள்விபட்டதும் அந்த மனிதர் சிரித்தார்.

உடனே மன்னர் “இன்று மாலை, உனக்கு மரண தண்டனை. நீ இப்படிச் சிரிக்கிறாயே?” என்று அந்த மனிதரைப் பார்த்து வினவினார்.

அதற்கு அந்த மனிதர் நிதானமாக பதில் கூறினார். “நீங்கள் என்னை பார்த்ததால் உங்களுக்கு தலையில் அடிபட்டுவிட்டது. அப்படிப்பட்ட சனியன் பிடித்த முகம் எனக்கு. என்னை பார்த்ததால் இந்த அளவோடு போய்விட்டது. ஆனால், நான் இன்றைக்கு முதல் தடவையாக உங்கள் முகத்திலே முழித்தேன். அதன் பலன் என்ன? என் உயிரே போகப் போகிறது. இது தான் மன்னராகிய உங்களின் முக லட்சணம்!” என்று கூறினான் அந்த மனிதன்.

இதைக் கேட்ட ராஜாவின் முகம் மாறியது. அந்த மனிதருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். ராஜாவையே எதிர்த்துக் கேட்கக் கூடிய துணிச்சல் அந்த மனிதருக்கு இருந்ததால் அவர் உயிர் பிழைத்தது.
துணிச்சலுடன் ஈடுபாடும் சேர்ந்து விட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

முதலமைச்சர் கூறிய மற்றொரு நீதிக்கதை வருமாறு:-

ஞானியின் இயல்பு:

ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரைத் தேடி சில பேர் சென்றார்கள். “என்ன சுவாமி? எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு அந்த ஞானி “நான் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

“உங்கள் கொள்கை என்ன?” என்று ஞானியிடம் கேட்டனர்.

“தியானம் செய்வது, பசி எடுத்தால் சாப்பிடுவது. தூக்கம் வந்தால் தூங்குவது. இது தான் என் கொள்கை” என்றார் ஞானி.

இதைக் கேட்டவுடன் அந்த நபர்களுக்கு ஆச்சரியம். “என்ன சுவாமி இப்படி சொல்கிறீர்கள்? உங்கள் செயலில் எந்தத் தனித்தன்மையும் இருப்பதாகத் தெரியவில்லையே?” என்று கேட்டனர்.

“ஆமாம்” என்றார் அந்த ஞானி.

“என்னங்க இது? பசித்தால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது என்பது எல்லோரும் செய்வது தானே?” என்று அந்த நபர்கள் கேட்டனர். இதைக் கேட்டதும் ஞானி சிரித்தார்.

“நீங்கள் சாப்பிடும் போது, உங்கள் மனது சாப்பாட்டில் இருக்காது. நடந்ததையும் நடக்கப் போவதையும் நினைத்துக் கொண்டு சாப்பிடுவீர்கள். உங்கள் மனம் அலைபாயும். நான் அப்படி இல்லை. தியானம் செய்யும் போது எனது மனம் தியானத்தில் தான் இருக்கும். சாப்பிடும் போது எனது சிந்தனை சாப்பாட்டில் தான் இருக்கும். அதே போல் தூங்க வேண்டும் என்றால் தூங்குவேன். எதைச் செய்கிறேனோ நான் அதுவாகி விடுவேன். அது தான் என் இயல்பு. இது தான் எனக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிற வேறுபாடு” என்று கூறினார் ஞானி. இதிலிருக்கும் நீதி என்னவென்றால் செய்யும் தொழிலில் நாம் ஒன்றிப்போய் விடும் போது அந்தத் தொழில் முழுமை பெறுகிறது. அந்தத் தொழிலில் உள்ள சுமை சுமையற்றதாகி அதுவே இனிமையானதாகி விடுகிறது.

பாவேந்தர் பாரதிதாசனிடம் சென்ற ஒருவர் “கவிதை இயற்றுவது எப்படி?” என்று கேட்டார்.

“கவிதையை இயற்றவெல்லாம் முடியாது. புல்லைப் பற்றி பாட வேண்டுமென்றால் புல்லுக்கிட்ட போய் விட வேண்டும். அது சொல்வதை எழுத வேண்டும். அது தான் கவிதை” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அதாவது, புல்லைப் பற்றி பாட வேண்டுமென்றால் புல்லாக மாற வேண்டும். அப்போது தான் கவிதை வரும் என்பது இதன் அர்த்தம். செய்யும் தொழிலே தெய்வம் என்று ஆகிவிட்ட பிறகு எண்ணம், இயக்கம் எல்லாம் அதில் ஒன்றிப் போய்விடும்.

இது போன்ற ஈடுபாட்டினையும் துணிச்சலையும் நீங்கள் உங்கள் பணிகளில் செலுத்தினால் குற்றங்கள் மேலும் குறைக்கப்படும். சட்டம்-ஒழுங்கு இன்னும் சிறப்போடு நிலைநாட்டப்படும். இந்தச் சமூகம் உங்களைப் பாராட்டும். மக்கள் ஆனந்தப்படுவர். நானும் தொடர்ந்து, பெருமிதம் அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 11:26 pm

கதைகள் நன்றாக இருக்கிறது.



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Aug 21, 2014 10:42 am

எல்லாம் நன்மைக்கே.... அருமை...
  முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 21, 2014 6:05 pm

சிவா wrote:

ஜெயலலிதா மக்கு, மடையர், எருமை, கழுதை என்று யாரைக் குறிப்பிட்டார் என்பது புரிகிறதா உங்களுக்கு...??




தெரியுமே ! தெரியுமே !! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 21, 2014 6:14 pm

சிவா, எல்லா கதைகளும் நல்லா இருக்கு, ஆனால் ராம் அண்ணாவும் நீங்களும் ஒரே கதையை (2) போட்டிருக்கிங்களே??????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 12:24 am

முல்லை பெரியாறு அணியின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதற்காக மதுரையில் பாசன விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா தனது சாதனையை விளக்கும் விதமாகவும் அதே சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்யும் வகையிலும் குட்டிக் கதைகளைக் கூறினார்.


குட்டிக்கதை 1: அலைகளாகவும் கரையாகவும் செயல்பட்ட அரசு:

நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டுமென்றால், அதற்குரிய உறுதியும், விடாமுயற்சியும் தேவை.

ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோரம் அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியினை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

ஒரு சீடனைப் பார்த்து, “உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டார் குரு.

அதற்கு அந்தச் சீடன், “திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது” என்றான்.

இதே கேள்வியை மற்றொரு சீடனிடம் கேட்டார் குரு.

அதற்கு அந்தச் சீடன், “துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் துன்பங்கள் சிதறிப் போகும்” என்றான்.

இவற்றை கேட்ட குரு “சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு” என்று சொன்னார்.

இந்த கதையில் வருவது போல், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில், எனது தலைமையிலான அரசு அலைகளாயும், கரையாயும் இருந்து செயல்பட்டதால் தான் இன்று நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.




 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 12:25 am

குட்டிக்கதை 2 : மன்னர்... யானை... இளைஞன்

ஒரு மன்னர் யானை மீது நாட்டை சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

ஒவ்வொரு முறையும் மன்னர் ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு போகும் போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேலே நடக்க முடியாமல் நின்று விடுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.

அந்த இளைஞன் குறித்து மன்னர் விசாரித்த போது, அந்த இளைஞன் சிறு சிறுவேலைகளை செய்து, கிடைப்பதை உண்டு கவலை ஏதுமின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பலம் வாய்ந்த யானையை, ஒரு சாதாரண இளைஞன் எப்படி இழுத்து நிறுத்துகிறான் என்று மன்னர் அமைச்சரிடம் வினவினார்.

அதற்கு அமைச்சர், இதற்கு காரணம் அவனது மன வலிமை என்றார்.

அவனது மன வலிமையை எப்படி மாற்றுவது என மன்னர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சர், “தினமும் அவனுக்கு ஒரு தங்கக் காசு சம்பளம் கொடுங்கள். மாலையில் அருகில் உள்ள திருக்கோயிலில் விளக்கு ஏற்றுவது உன் பணி என்றும், அதற்கான சம்பளமே இந்த தங்கக் காசு என்றும் சொல்லுங்கள்” என்று கூறினார். அந்த இளைஞனுக்கு அவ்வாறே விளக்கு ஏற்றும் பணி வழங்கப்பட்டது. தினமும் தங்கக் காசு சம்பளம் பெற்றவுடன், எவ்வளவு தங்கக் காசுகள் தன்னிடம் சேர்ந்து இருக்கின்றன என்றும், 100 காசுகள் சேர்க்க இன்னும் எத்தனை நாட்கள் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு மாதம் கழித்து அவ்வழியாக மன்னர் யானை மீது சென்றார். அப்போதும் அந்த இளைஞன் யானை வாலைப் பிடித்து இழுத்தான். ஆனால் யானையை நிறுத்த முடியவில்லை. வாலைப் பிடித்தபடியே யானையின் இழுப்பில் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான்.

இது எவ்வாறு நடந்தது என்று மன்னர் வினவினார். அதற்கு அமைச்சர், “காசைச் சேர்க்க ஆரம்பித்த உடன் அவனது கவனம் சிதறிவிட்டது. அவனுடைய மனம் பணத்தின் பக்கம் போய்விட்டது. எனவே, அவனது பலம் போய்விட்டது” என்றார்.

இந்தக் கதையில் வருபவரைப் போல் கருணாநிதியின் மனம் ஸ்பெக்ட்ரம் பக்கம் இருந்ததால், தமிழர் நலன் பற்றி கருணாநிதி கவலை கொள்ளவில்லை.



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 12:25 am

குட்டிக்கதை 3 : மயங்கி விழுந்த கடவுள்

ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு, “பணம், செல்வம், தங்கம், வைரம்” என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை.

உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது.

ஆனால் ஏழை எதுவும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது. அப்போதும் அந்த ஏழைக்கு திருப்தி ஏற்படவில்லை.உடனே, கடவுள் அந்த அறையில் இருந்த அத்தனைப் பொருட்களையும் வேக வேகமாக தங்கமாக்கினார்.அப்போதும் அந்த ஏழை சிரிக்கவில்லை.சோர்ந்து போன கடவுள், “இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும்?”என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழை, “எனக்கு அந்த விரல் வேண்டும்” என்றான். அந்த ஏழையின் பேச்சைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்துவிட்டார்.

இந்தக் கதையில் வருவதைப் போல், வாழ்வளித்த தமிழர்களை அழிக்க நினைத்தவர் கருணாநிதி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

என்று தனது உரையில் 3 குட்டிக் கதைகளைக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Aug 23, 2014 2:29 am

 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 3838410834  முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 3838410834  முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 3838410834 



நேர்மையே பலம்
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 5no
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 3:24 am

மூன்று கதைகள் .-நன்றாகவே இருக்கின்றன .
அதன் மூலம் மக்களுக்கு தெரியபடுத்துகிற கருத்து ஒன்றுதான்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 23, 2014 10:37 am

குட்டிக்கதை 3 : மயங்கி விழுந்த கடவுள் - இந்த கதையை இன்று காலை ஜெயா டிவியில் அம்மா வாயாலேயே கேட்டேன்.

அதுசரி இந்த கதையெல்லாம் யார் இவருக்கு எழுதி தர்றாங்க..?  ஒன்னும் புரியல



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 முதல்வர் சொன்ன கதைகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக