புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_m10 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் சொன்ன கதைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 8:13 am

First topic message reminder :


சென்னையில் சிறந்த காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நீதிக்கதைகள் வருமாறு:-

ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறு வேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி அந்த வீட்டின் உரிமையாளருக்கு பரிசுப் பொருள் வழங்குவது வழக்கம்.

ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்கு கை நிறைய பொற்காசுகளை வழங்கினார் ராஜா. இந்த பொற்காசுகளை வழங்கிவிட்டு ராஜா வெளியே வந்தவுடன் மாடு ஒன்று, அவரை முட்டி கீழே தள்ளிவிட்டது. இதனால் ராஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் ராஜாவின் காவலாளிகள் ராஜாவை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தத் தகவலை அமைச்சருக்கு தெரிவித்த காவலாளிகள் ராஜா இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு காரணம் அந்த விவசாயி தான் என்றும், அந்த விவசாயியை ராஜா பார்த்ததால் தான் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்றும் எடுத்துக் கூறினர். அமைச்சரும் அந்த விவசாயியை வரவழைத்து மன்னர் முன் நிறுத்தினார்.

மன்னர் அந்த விவசாயிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தனக்கு மரண தண்டனை என்று கேள்விபட்டதும் அந்த மனிதர் சிரித்தார்.

உடனே மன்னர் “இன்று மாலை, உனக்கு மரண தண்டனை. நீ இப்படிச் சிரிக்கிறாயே?” என்று அந்த மனிதரைப் பார்த்து வினவினார்.

அதற்கு அந்த மனிதர் நிதானமாக பதில் கூறினார். “நீங்கள் என்னை பார்த்ததால் உங்களுக்கு தலையில் அடிபட்டுவிட்டது. அப்படிப்பட்ட சனியன் பிடித்த முகம் எனக்கு. என்னை பார்த்ததால் இந்த அளவோடு போய்விட்டது. ஆனால், நான் இன்றைக்கு முதல் தடவையாக உங்கள் முகத்திலே முழித்தேன். அதன் பலன் என்ன? என் உயிரே போகப் போகிறது. இது தான் மன்னராகிய உங்களின் முக லட்சணம்!” என்று கூறினான் அந்த மனிதன்.

இதைக் கேட்ட ராஜாவின் முகம் மாறியது. அந்த மனிதருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். ராஜாவையே எதிர்த்துக் கேட்கக் கூடிய துணிச்சல் அந்த மனிதருக்கு இருந்ததால் அவர் உயிர் பிழைத்தது.
துணிச்சலுடன் ஈடுபாடும் சேர்ந்து விட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

முதலமைச்சர் கூறிய மற்றொரு நீதிக்கதை வருமாறு:-

ஞானியின் இயல்பு:

ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரைத் தேடி சில பேர் சென்றார்கள். “என்ன சுவாமி? எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு அந்த ஞானி “நான் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

“உங்கள் கொள்கை என்ன?” என்று ஞானியிடம் கேட்டனர்.

“தியானம் செய்வது, பசி எடுத்தால் சாப்பிடுவது. தூக்கம் வந்தால் தூங்குவது. இது தான் என் கொள்கை” என்றார் ஞானி.

இதைக் கேட்டவுடன் அந்த நபர்களுக்கு ஆச்சரியம். “என்ன சுவாமி இப்படி சொல்கிறீர்கள்? உங்கள் செயலில் எந்தத் தனித்தன்மையும் இருப்பதாகத் தெரியவில்லையே?” என்று கேட்டனர்.

“ஆமாம்” என்றார் அந்த ஞானி.

“என்னங்க இது? பசித்தால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது என்பது எல்லோரும் செய்வது தானே?” என்று அந்த நபர்கள் கேட்டனர். இதைக் கேட்டதும் ஞானி சிரித்தார்.

“நீங்கள் சாப்பிடும் போது, உங்கள் மனது சாப்பாட்டில் இருக்காது. நடந்ததையும் நடக்கப் போவதையும் நினைத்துக் கொண்டு சாப்பிடுவீர்கள். உங்கள் மனம் அலைபாயும். நான் அப்படி இல்லை. தியானம் செய்யும் போது எனது மனம் தியானத்தில் தான் இருக்கும். சாப்பிடும் போது எனது சிந்தனை சாப்பாட்டில் தான் இருக்கும். அதே போல் தூங்க வேண்டும் என்றால் தூங்குவேன். எதைச் செய்கிறேனோ நான் அதுவாகி விடுவேன். அது தான் என் இயல்பு. இது தான் எனக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிற வேறுபாடு” என்று கூறினார் ஞானி. இதிலிருக்கும் நீதி என்னவென்றால் செய்யும் தொழிலில் நாம் ஒன்றிப்போய் விடும் போது அந்தத் தொழில் முழுமை பெறுகிறது. அந்தத் தொழிலில் உள்ள சுமை சுமையற்றதாகி அதுவே இனிமையானதாகி விடுகிறது.

பாவேந்தர் பாரதிதாசனிடம் சென்ற ஒருவர் “கவிதை இயற்றுவது எப்படி?” என்று கேட்டார்.

“கவிதையை இயற்றவெல்லாம் முடியாது. புல்லைப் பற்றி பாட வேண்டுமென்றால் புல்லுக்கிட்ட போய் விட வேண்டும். அது சொல்வதை எழுத வேண்டும். அது தான் கவிதை” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அதாவது, புல்லைப் பற்றி பாட வேண்டுமென்றால் புல்லாக மாற வேண்டும். அப்போது தான் கவிதை வரும் என்பது இதன் அர்த்தம். செய்யும் தொழிலே தெய்வம் என்று ஆகிவிட்ட பிறகு எண்ணம், இயக்கம் எல்லாம் அதில் ஒன்றிப் போய்விடும்.

இது போன்ற ஈடுபாட்டினையும் துணிச்சலையும் நீங்கள் உங்கள் பணிகளில் செலுத்தினால் குற்றங்கள் மேலும் குறைக்கப்படும். சட்டம்-ஒழுங்கு இன்னும் சிறப்போடு நிலைநாட்டப்படும். இந்தச் சமூகம் உங்களைப் பாராட்டும். மக்கள் ஆனந்தப்படுவர். நானும் தொடர்ந்து, பெருமிதம் அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 28, 2014 4:24 pm

கதை நன்று



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Sat Jun 28, 2014 7:09 pm

அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.....இது குடும்பதில் மட்டுமல்ல உண்மை  உலகிலும் கூட ....   



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:11 am

மாணிக்கம் நடேசன் wrote:சூப்பர் கதைகள். நன்றி மாமா அங்கள். அது சரி, ஒன்னும் இல்லாததுக்கா வீட்ல கணவன் மனைவி சண்ட போடுராங்க, வீட்ல சண்டைக்கு காரணமே, இந்த வீட்டுக்கார அம்மாக்கள் தான். இது எனது 41 ஆண்டு உண்மையா அனுபவம். சில சமயங்கள்ல மண்ட ஒடைஞ்ச அனுபவமும் இருக்கில்ல.

மண்டையை உடைத்தாலும் நம் மனைவிதானே என்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும், அதுதான் வாழ்க்கை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 01, 2014 3:14 pm



மன்னரிடம் பரிசு கேட்டு இரு புலவர்கள் சேர்ந்து
வந்தனர். மன்னர் இருவரையும் தனித் தனியாக
அழைத்துப் பேசினார். முதல் புலவரிடம்,
“உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்?
என்று கேட்டார் மன்னர்.
-
அதற்கு முதல் புலவர், “அவர் ஒரு மக்கு. எருமை”
என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர், “நன்றி
புலவரே, நாளை காலை அரசவைக்கு வாருங்கள்”
என்று கூறினார்.
-
பின்னர் இரண்டாவது புலவரை அழைத்து,
“உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்?”
என்று மன்னர் கேட்டார். அதற்கு இரண்டாவது புலவர்,
“அவர் ஒரு மடையர், கழுதை” என்றார்.
-
இதைக் கேட்ட மன்னர், “நன்றி புலவரே. நாளை காலை
அரச சபைக்கு வாருங்கள்” என்று கூறி இருவரையும்
அனுப்பி வைத்தார். மறுநாள் சபை கூடியது.

இரு புலவர்களும் வந்து காத்திருந்தனர். “புலவர்களே,
உங்களில் ஒருவரை மற்றவர் எருமை என்றும்,
கழுதை என்றும் நீங்கள் சொன்னீர்கள். எருமைக்கு
பரிசு கொடுத்தால் கழுதைக்கு கோபம் வரும்.
கழுதைக்குப் பரிசு கொடுத்தால் எருமைக்கு கோபம்
வரும்.
-
நானோ மனிதர்களில் சிறந்த புலவர்களுக்குப் பரிசு
தருபவன். இங்கே எருமைக்கும், கழுதைக்கும் வேலை
இல்லை” என்று கூறினார் மன்னர்.
-
---------------------------------------
முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 01, 2014 3:14 pm



முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி
புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள்
இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம்
இருக்கும்?” என்ற வினா எழுந்தது. உடனே அரச
சபையை கூட்டி அனைவரிடமும் இதற்கான
விடையை வினவினார் மன்னர்.
-
யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை.
இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு
வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார்.
-
அந்த முனிவரிடம், “கடவுள் எவ்வளவு தூரத்தில்
இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
என்று வினவினார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், “கடவுள் கூப்பிடுகிற
தூரத்தில் தான் இருக்கிறார்” என்று பதில் அளித்தார்.

“அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே
வந்து விடுவார் அல்லவா?” என்று கேட்டார் மன்னர்.
அதற்கு அந்த முனிவர், “எந்த இடத்தில் கடவுள்
இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது”
என்றார்.

“புரியும்படி கூறுங்கள்” என்று அந்த மன்னர் கேட்டுக்
கொண்டார்.

இதற்கு பதில் அளித்த முனிவர், “துரியோதனன்
சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது,
“வைகுண்ட வாசா! காப்பாற்று” என்று கிருஷ்ணரை
அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை.

“துவராகை நாயகனே!” என்னை காப்பாற்று என்று
அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன்
வரவில்லை. “இதயத்தில் இருப்பவனே!” என்று
கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான்
கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக்
காத்தார்.

கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு
தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார்.
எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல்
கடவுளுக்கு கேட்கும்.

உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால்
உடனே வந்து அருள் பாலிப்பார்” என மன்னருக்கு
விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.

கடவுளைப் போலத் தான் மக்களும். அதனால் தான்,
“மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றார்
பேரறிஞர் அண்ணா.
-
முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 01, 2014 3:54 pm

முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், "கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?" என்ற வினா எழுந்தது. உடனே அரசவையை கூட்டி அனைவரிடமும் இதற்கான விடையை வினவினார் மன்னர்.

யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார்.

அந்த முனிவரிடம், "கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், "கடவுள் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறார்" என்று பதில் அளித்தார்.

"அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே வந்து விடுவார் அல்லவா?" என்று கேட்டார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், "எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது" என்றார்.

"புரியும்படி கூறுங்கள்" என்று அந்த மன்னர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த முனிவர், "துரியோதனன் சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது, "வைகுண்ட வாசா! காப்பாற்று" என்று கிருஷ்ணரை அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை. "துவராகை நாயகனே!" என்னை காப்பாற்று என்று அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன் வரவில்லை. "இதயத்தில் இருப்பவனே!" என்று கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான் கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக் காத்தார்.

கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார். எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல் கடவுளுக்கு கேட்கும். உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால் உடனே வந்து அருள் பாலிப்பார்" என மன்னருக்கு விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.

கடவுளைப் போலத் தான் மக்களும். அதனால்தான், "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படியானால், மக்களாகிய நீங்கள் தானே மகேசன்? மகேசனாகிய மக்கள் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். உங்கள் இதயங்களிலும் நான் என்றென்றும் குடிகொண்டு இருக்கிறேன். அதனால் தான், மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அமோகமான வெற்றியை நீங்கள் அளித்தீர்கள். மூன்றாண்டு கால ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க அயராது பாடுபடுவேன்.



 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 01, 2014 3:57 pm

குறை சொல்லி திரிபவர்கள் என்றவுடன் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

மன்னரிடம் பரிசு கேட்டு இரு புலவர்கள் சேர்ந்து வந்தனர். மன்னர் இருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார்.

முதல் புலவரிடம், "உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்? என்று கேட்டார் மன்னர்.

அதற்கு முதல் புலவர், "அவர் ஒரு மக்கு, எருமை" என்று கூறினார்.

இதைக் கேட்ட மன்னர், "நன்றி புலவரே, நாளை காலை அரசவைக்கு வாருங்கள்" என்று கூறினார்.

பின்னர் இரண்டாவது புலவரை அழைத்து, "உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்?" என்று மன்னர் கேட்டார்.

அதற்கு இரண்டாவது புலவர், "அவர் ஒரு மடையர், கழுதை" என்றார்.

இதைக் கேட்ட மன்னர், "நன்றி புலவரே. நாளை காலை அரச சபைக்கு வாருங்கள்" என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார்.

மறுநாள் சபை கூடியது. இரு புலவர்களும் வந்து காத்திருந்தனர்.

"புலவர்களே, உங்களில் ஒருவரை மற்றவர் எருமை என்றும், கழுதை என்றும் நீங்கள் சொன்னீர்கள். எருமைக்கு பரிசு கொடுத்தால் கழுதைக்கு கோபம் வரும். கழுதைக்குப் பரிசு கொடுத்தால் எருமைக்கு கோபம் வரும். நானோ மனிதர்களில் சிறந்த புலவர்களுக்குப் பரிசு தருபவன். இங்கே எருமைக்கும், கழுதைக்கும் வேலையில்லை" என்று கூறினார் மன்னர்.

இந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு இந்த மன்னர் கூறிய தீர்ப்பு போல் அமைந்துள்ளது. அதாவது, கடமையைச் செய்பவர்களை, உரிமையைத் தட்டிக் கேட்பவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்துள்ளீர்" என்று பேசினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மக்கு, மடையர், எருமை, கழுதை என்று யாரைக் குறிப்பிட்டார் என்பது புரிகிறதா உங்களுக்கு...??






 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:25 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா, 20.8.2014 அன்று சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், அனைத்திந்திய திராவிடக் கழக குடும்பங்களின் திருமணங்களை நடத்தி வைத்து ஆற்றிய வாழ்த்துரையில், இன்று இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ள மணமக்கள், கரும்பைப் போல இனிப்பாய், காற்றைப் போல சுகமாய், இயற்கையைப் போல ரம்யமாய், ஊர் போற்றும் அளவுக்கு, வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்க்கையில் முன்னேறும் போது பல தடைகள் வரலாம். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தடைகளைக் கண்டதும் மலைத்துப் போய் மனம் தளர்ந்து விடுபவர்களால் வெற்றியை அடைய முடியாது. தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய மனப்பாங்கினை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். வாழ்க்கை என்றால் அதில் தொல்லை இருக்கும்; கவலை இருக்கும்; இவற்றிக்கு இடையே இன்பமும் இருக்கும். அப்படி இருந்தால் தான், அந்த வாழ்க்கை முழுமையானதாக, சுவையானதாக, பயனுள்ளதாக இருக்கும்.

தோல்வி காணாத மனிதன் முழு மனிதன் அல்ல என்றார் அறிஞர் அறிஸ்டோட்டில். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும், துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். கடவுள் மீதும், உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை வைத்தால் துன்பங்களை முறியடித்து வெற்றியை எட்டுவது நிச்சயம். ‘எல்லாம் நன்மைக்கே’ என்று எடுத்துக் கொள்ளும் பக்குவம் ஏற்பட்டால், தடைகளைத் தாண்டி, இலக்கை நோக்கி பயணம் செய்ய அது வழி வகுக்கும். நிச்சயம் நன்மையைப் பெறலாம்.


முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர், தனது அமைச்சரையும், சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மன்னரின் கூரிய போர்வாள், அவருடைய கையின் கட்டை விரலை துண்டித்தது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இருந்த மன்னர், தன் விதியை நொந்து கொண்டார். அப்போது, அருகில் இருந்த அமைச்சர் “எல்லாம் நன்மைக்கே” என்றார்.

அமைச்சரின் இந்த வார்த்தையைக் கேட்ட உடன் மன்னருக்கு கோபம் வந்தது. தன்னுடைய வீரர்களை அழைத்து, “அமைச்சரை கைது செய்யுங்கள்! விடியும் வரை சிறையில் அவரை, தலைகீழாக தொங்க விடுங்கள்! பின்னர் நாளை காலை தூக்கில் இடுங்கள்!” என்று கட்டளையிட்டார்.

அமைச்சரை வீரர்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மன்னர் தனியே மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில், காட்டுவாசிகள் சிலர் தெய்வத்திற்கு நரபலியிட வேண்டி, ஒரு மனிதனை தேடினர். அவர்கள் கண்ணில் மன்னர் அகப்பட்டார். அவர்கள் மன்னரை சிறைபிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். நரபலியிடத் தயாராகும் நேரத்தில், மன்னரின் கை கட்டை விரல், துண்டிக்கப்பட்டுள்ளதைக் கண்டனர். அடிபட்ட ஒருவரை அங்கஹீனம் உள்ள ஒருவரை நரபலியிடுவது முறையல்ல என்று கூறி மன்னரை விடுவித்தனர். உடனே மன்னருக்கு ‘எல்லாம் நன்மைக்கே’, என்ற அமைச்சரின் வார்த்தை நினைவிற்கு வந்தது. தன்னுடைய கை கட்டை விரல் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால், தான் உயிருடன் இருந்து இருக்க முடியாது, என்பதை உணர்ந்தார் மன்னர். அமைச்சருக்கு தவறுதலாக தண்டனை அளித்ததை எண்ணி மனம் வருந்திக் கொண்டே, சிறைச்சாலைக்குள் சென்று அமைச்சரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

உடனே அமைச்சர், மன்னரைப் பார்த்து ‘எல்லாம் நன்மைக்கே’ என்றார். மன்னர் அமைச்சரைப் பார்த்து, உங்களை ஒரு நாள் சிறையில் அடைத்து, மரண தண்டனை விதித்தேன். இதில் என்ன நன்மை இருக்கிறது?” என்று வினவினார். அதற்கு அமைச்சர் சிரித்துக் கொண்டே, “மன்னா ஒரு வேளை நீங்கள் என்னை சிறையில் அடைக்காமல், உங்களுடனேயே அழைத்துச் சென்றிருந்தால், அந்த காட்டுவாசிகள் விரல் இழந்த காரணத்தால் உங்களை விடுவித்து என்னை நரபலி கொடுத்து இருப்பார்கள்! அதனால் தான் எல்லாம் நன்மைக்கே என்றேன்” என்றார்

இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்கள், பிரச்சனைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும். அதனை அப்படி நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அடுத்த பணியை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும்.

எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும் என்பதை உணர்ந்து; அதற்கேற்றப்படி தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.




 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:26 pm

ஏழை சிறுவன் ஒருவன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த காரை, வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட காரின் உரிமையாளர், அந்த சிறுவனை காரில் உட்கார வைத்து கொஞ்ச தூரம் காரை ஓட்டிக் காட்டினார். அப்போது அந்தச் சிறுவன், “வாகனம் மிகவும் அருமையாக இருக்கிறது. என்ன விலை?” என்று கேட்டான். அதற்கு காரின் உரிமையாளர், “தெரியவில்லை. இது எனது சகோதரர் எனக்கு பரிசாக கொடுத்தது” என்று கூறினார். அதற்கு அந்த சிறுவன், “உங்கள் சகோதரர் மிகவும் நல்லவர்” என்றான்.

உடனே காரின் உரிமையாளர் அந்தச் சிறுவனைப் பார்த்து, “நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். உனக்கும் என் சகோதரனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று நினைக்கிறாய் அல்லவா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழைச் சிறுவன், “இல்லை. நான் உங்களின் சகோதரனைப் போல் இருக்க வேண்டும், என்று நினைக்கிறேன்” என்றான். அதாவது வாங்கக் கூடிய இடத்தில் இல்லாமல், கொடுக்கக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற தன் உள்ளக்கிடக்கையை தெரிவித்தான்.

இந்தச் சிறுவனிடம் இருக்கும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் உங்கள் வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்று கூறினார்.




 முதல்வர் சொன்ன கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 20, 2014 9:57 pm

முதல்வர் /சிறுவன் /கார் கதை நன்றாக இருக்கிறது . எல்லோரும் இதை மனதில் கொண்டு ,உழைக்க ஆரம்பித்தால் , நன்றாக இருக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக