புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
87 Posts - 65%
heezulia
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
3 Posts - 2%
sram_1977
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
2 Posts - 1%
Shivanya
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
1 Post - 1%
Guna.D
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
423 Posts - 76%
heezulia
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
6 Posts - 1%
prajai

3 Posts - 1%
Anthony raj
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_m1060000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60000 வீட்டுகளை(பிளாட்) வாங்க ஆள் இல்லே

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 01, 2013 9:57 am

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதியில் ஏறத்தாழ 60000 அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படாத நிலையில் இருக்கின்றது.. இவற்றை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.. பத்திரிகைகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள்.. பில்டர்களில் விளம்பரங்களில் சதுரஅடிக்கு 100 முதல் 400 வரை குறைத்து விற்பனை செய்வதாக அறிவிக்கின்றனர்.. அப்போதும் விலை போகவில்லை. ஏன் இந்தத் தொய்வு என்பதை ஆராய்ந்து பார்த்ததில் சில காரணங்களை கண்டறிய முடிந்தது..

1. சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் காலி மனைகள் மற்றும் அடுக்குமாடிக்குடியிருப்புகளின் விலைகள் எக்கச்சக்கமாக எகிறிவிட்டது.. சென்னை புறநர்ப்பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், வண்டலூர், ஊரப் பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டுப்பாக்கம், போரூர், பூந்தமல்லி, மேடவாக்கம், பெரும்பாக்கம், கெளரிவாக்கம், செம்பாக்கம், மதனபுரம் , முடிச்சூர் போன்ற பகுதிகளில் கூட அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை சதுர அடி ரூ.3200 முதல் ரூ.4500க்கு சென்றுவிட்டது. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், வேலையாட்களுக்கு கொடுக்கும் அதிகப்படியான தினக்கூலி இவை எல்லாமே இந்த விலை உயர்விற்கு கூடுதல் காரணங்களாக சொல்லப்படுகின்றது. சென்னை நகரின் மையப்பகுதியில் அடுக்குமாடிக்குடியிருப்புகளின் விலை முறையே ரூ.15000 முதல் 25 ஆயிரம் வரை ஒரு சதுர அடி விற்பனையாகின்றது. 

2. இது தவிர கார்பார்க்கிங் முன்னரெல்லாம் இந்த விலையிலேயே அடங்கிப்போனது. ஆனால் இப்போது கார்பார்க்கிங் என தனியாக ரூ.1.50 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை தனியாக கொடுக்கவேண்டியுள்ளது.. மின்சார மும்முனை இணைப்பு முன்பெல்லாம் அதிக பட்சமாக ரூ.25ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போதோ அது 50 ஆயிரம் முதல்ஒரு இலட்சம் வரை சென்றுவிட்டது.. இது தவிர பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கினால் (பாதாள சாக்கடை இல்லாத இடங்களில்) எஸ்.டி.பி (Sewage treatment plant) சார்ஜஸ் என ஒரு 50ஆயிரம், கார்ப்பஸ் பண்ட் என சதுரஅடிக்கு ரூ.50முதல் 100 வரை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சர்வீஸ் டாக்ஸ் 2.9 பர்சென்ட் குடியிருப்பின் விலையில் செலுத்த வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிளாட் வாங்கி அங்கு குடியமர்ந்து விட்டால் மெயின்ட்டனன்ஸ் சார்ஜஸ் என்று சில ஆயிரங்களை செலுத்தவேண்டும்.

3. பிளாட் வாங்கும் போது யு.டி.எஸ்.(undividable share of the property) எத்தனை சதுரஅடியோ அதற்கு அந்த இடத்தின் அரசின் கைடுலைன் வேல்யூ ஒரு சதுர அடிக்கு என்னவோ அதற்குண்டான கட்டணத்திற்கு 7சதவீதம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி பத்திரப்பதிவு செய்யவேண்டும்.. 1 சதவீதம் டி.டி. பத்திரப்பதிவு துறைக்கு எடுத்துக்கொடுக்கவேண்டும். இப்போது கைடுலைன் வேல்யூ கூடிவிட்டதால் பல ஆயிரங்கள் கூடுதல் செலவு.

4. இவ்வளவிற்கும் மேலாக வங்கியில் கடன் வாங்கும் போது பிராஸசிங் கட்டணம் பாயின்ட் 2 சதவீதம் முதல் பாயின்ட் 3 சதவீதம் வரை செலுத்தவேண்டும்.. சரி இவை எல்லாம் முன்னர் இல்லையா என்ற கேள்வி எழலாம். ஆனால் 2000 வருடத்தில் ஐடி பணியில் சேர கேம்பஸ் இன்டர் வியூவில் தேர்வானவர்கள், நேரிடையாக தேர்வானவர்களுக்கு சம்பள பேக்கேஜ் வருடத்திற்கு 3.2 இலட்சம் முதல் 3.6 இலட்சம் வரை ஐடி நிறுவனங்கள் வழங்கின. அன்றைய நிலவரப்படி ஒரு மாத சம்பளம் பிடித்தமெல்லாம் போக 22 ஆயிரம் முதல் 30 வரை ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. அப்போது சென்னை புறநகர்களில் 1000 ச.அடி கொண்ட ஒரு பிளாட்டின் விலை 8 இலட்சம் முதல் அதிக பட்சமாக 12 இலட்சம் வரையே விற்கப்பட்டது. அப்போது இந்த மாதச் சம்பளத்தின் அடிப்படையை வைத்துப் பார்க்கும் போது ஐடிதுறையில் பணிபுரியும் நபருக்கு அதிகபட்ச மாக 15 இலட்சம் வரை வீட்டுகடன் வழங்க வங்கிகள் முன்வந்தன. 90 சதவீதம் வரை கடனுதவி. 

5. அரசுப்பணியில், வங்கிகளில், தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றோர்களுக்கும் இந்தவிலை என்பது அவர்களுக்கு கிடைத்த ஓய்வுகால பிராவிடன்ட் பண்ட் மற்றம் இதர அலவன்சுகளின் மூலம் பெறப்பட்ட பணத்தில் வாங்க முடிந்தது. 

6. ஐடி துறையில் பணிபுரிந்தோருக்கு, அதாவது அவர்களின் மாத சம்பளத் தில் 50 மடங்கு வரை அதிகபட்சமாக வங்கிகள் கடன் வழங்கின. உதாரணமாக ஒருவர் 25000 ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றார் என்றால் அவருக்கு வங்கிகள் ரூ.1250000 வரை கடன் வழங்கின. அந்த கடனில் ஒருவர் எளிதாக அடுக்குமாடிக்குடியிருப்பை வாங்க முடிந்தது.. ஆனால் இப்போது படித்துவிட்டு ஐடி துறைக்கு பணிக்கு போவோருக்கும் இதே பேக்கேஜ் தான் எல்லா ஐடி நிறுவனங்களும் வழங்குகின்றன. 13 வருடங்களாக சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

7. 2000 த்தில் வாங்க முடியாதவர்கள் அதன்பின்னர் விலை ஏறினாலும் அவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் சம்பள உயர்வு மற்றும் பிரமோஷன் அடிப்படையில் கடந்த சில வருடங்களில் குடியிருப்புகளின் விலை ஏறினாலும் வாங்க முடிந்தது. சென்னையில் வீடு வாங்குவது என்பது இவர்களுக்கு சாத்தியமானது.. கூடிய வரை வாங்கவேண்டும் என்று நினைத்தவர்கள் கடந்த 12, 15 வருடங்களில் எளிதாக வாங்கிவிட்டனர்.. இன்னும் அவர்கள் வாங்கிய வீட்டிற்கு கடனை கட்டிக்கொண்டிருப்பார்கள்.. இன்றைக்கு சம்பளம் அவர்களுக்கு 60ஆயிரம் முதல் 1 இலட்சம் என்றாலும் கூட மாதாந்திர தொகை அதிகபட்சமாக 25ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கட்டவேண்டியிருக் கும். இது அவர்களுக்கு எளிதானதும் கூட..

8. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் ஐடி துறைக்கு புதிதாகப் போனவர்கள் வீடு வாங்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.. காரணம் டபுள் பெட்ரூம் கொண்ட பிளாட்டின் விலை தற்போது 30 இலட்சத்திற்கும் மேல் போய்விட்டது.. அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் முதல் 12 இலட்சம் வரைதான் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மீதமுள்ள தொகையை இவர்களால் எப்படி செலுத்தமுடியும்? முன்னரெல்லாம் 90 சதவீதம் ரை கடனுதவி அளித்துவந்த வங்கிகள் 10 சதவீதத்தை குறைத்து இப்போது 80 சதவீதம் வரை மட்டுமே வழங்குகின்றன. அன்றைய நிலவரப் படி பிராசசிங் கட்டணம், பத்திரப்பதிவு எல்லாமே சில ஆயிரங்களில் முடிந்து போனது. ஆனால் இன்றைய நிலையில் எல்லாமே இலட்சங் களுக்கும் பல ஆயிரங்களுக்கும் சென்றுவிட்டது. இதுதவிர இப்போது வாங்கும் பிளாட்டிற்கு சர்வீஸ் டாக்ஸ் வேறு கூடுதலாக செலுத்தவேண்டும்.. 

9. 3 வருடங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்தவர்களிடம் எப்படி 20 சதவீத முன்பணத்தொகை சேமிப்பாக இருக்கும்? அதாவது 30 இலட்சம் ஒரு பிளாட்டின் விலை அடக்கமென்றால் இவர்கள் அதில் 20 சதவீதம் அதாவது 6 இலட்சம் ரூபாய் செலுத்தவேண்டியது கட்டாயமாகிறது.. 6 இலட்சத்தை சென்னையில் வாடகைவீட்டில் இருந்து கொண்டு ஐடி பணியில் இருந்தாலும் சேமிப்பது என்பது இயலாத காரியம். வருடத்திற்கொருமுறை இன்க்ரிமென்ட் என்பது 40ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகின்றது. இவர்கள் வீடு வாங்கவேண்டுமென்றால் குறைந்த பட்சம் 8 இலட்ச ரூபாய் பேக்கேஜ் ஆண்டிற்கு இருக்கவேண்டும்.. அப்போதுதான் 40 இலட்ச ரூபாய் வரை வங்கிக் கடன் கிடைக்கும்.. இந்த பேக்கேஜிக்கு செல்ல குறைந்தபட்சம் இவர்களுக்கு இன்னும் ஏழெட்டு வருடங்கள் ஆகலாம்.. ஆனால் அப்போது வீடுகளின் விலை கோடிகளுக்கு சென்றுவிடும்.

10. பொதுவாக பில்டர்கள் எல்லாம் ஐடி துறையில் பணிபுரிவோர்களையே டார்கெட்டாக வைத்து கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான குடியிருப் புகளை விற்றுத் தீர்த்தனர்.. இப்படி வாங்கியவர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐடி துறையில் பணிபுரிந்தோர்கள் தான் என ஒரு புள்ளி அறிக்கை கூறுகின்றது. மீதமுள்ள 35 சதவீதம், யாரென்று பார்த்தால் வெளிநாடுகளில் பணிபுரிந்த என்.ஆர்.ஐக்கள், டாக்டர்கள், ஆடிட்டர்கள், அரசு உயர்பதவி வகித்துவிட்டு ஓய்வு பெற்றவர்கள், வங்கி அதிகாரிகள்..

11. ஆனால் கடந்த சில வருடங்களில் இப்படி விலை ஏகத்துக்கும் எகிறிப்போனதால் வீடு வாங்கவேண்டும் என்று நினைத்தாலும் ஐடி துறையில் இருப்பவர்களாலேயே வாங்க முடியாமல் முடங்கிப்போய் உள்ளனர். 

12. திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஐடிதுறையில் பணி புரியும் நிலையில் இருவரின் சம்பளத்தை கணக்கிட்டு சேர்ந்து வாங்கவேண்டுமென்றாலும் இருவரின் சம்பளத்திலும் சரி பாதி லோனுக்கு போய்விடும். இன்றைய விலைவாசியில் மிச்சம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சென்னையில் குடும்பம் நடத்துவது என்பது மிகப்பெரிய சிரமம். இன்னும் குழந்தைகள் பிறந்து பள்ளிக்கு அனுப்பவேண்டுமென்றால் அதற்கு கூடுதலாக செலவு செய்யவேண்டும். இந்நிலையில் இவர்களே இப்படித் தடுமாறும் போது அரசு பணியில் பத்தாயிரத்திற்கும் 20 ஆயிரத்திற்கும் சம்பளம் வாங்குவோர்கள் சென்னையில் பிளாட்டுகளை எப்படி வாங்க முடியும்? 

13. 2000 ஆண்டு முதல் 2010 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பிராவிடன்ட் பண்டு மற்றும் இதர படிகள் எல்லாமும் சேர்த்து 5 இலட்சம் முதல் அதிக பட்சமாக 12 இலட்சம் வரை கிடைத்தது.. இதனைக்கொண்டு இருக்கும் சேமிப்பினை வைத்து இவர்களால் அந்த தொகையில் வீடு வாங்க முடிந்தது.. ஆனால் இப்போது ஒரு உயர் அதிகாரி ஓய்வு பெற்றாலும் கூட அதிக பட்சமாக 15 இலட்சம் முதல் 22 இலட்சம் வரையே எல்லா நிலுவைத்தொகையும் கிடைக்கும்.. இவர்களால் எப்படி 30 இலட்சம் முதல் 40 இலட்சம் வரையுள்ள பிளாட்டுகளை வாங்க முடியும்?

14. விற்காமல் இருக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புகளை எப்படி விற்பது என்று பில்டர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். வாங்கும் ஆசை இருந் தாலும் நம்மால் சென்னையில் ஒரு பிளாட் வாங்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் கடந்த மூன்று வருடத்தில் ஐடி துறையில் பணிக்கு சென்றவர்கள் ஒரு புறம் இருக்கு, ரிட்டையர்டு ஆகி கிடைக்கும் செட்டில் மென்ட் பணத்தில் ஒரு பிளாட்கூட வாங்கமுடியவில்லையே என அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், தனியார் கம்பெனிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர்கள் ஏக்கப்பெருமூச்சு விடும் அளவிற்கு இன்று நிலைமை இருக்கின்றது. 

இதற்கெல்லாம் என்ன தான் வழி? 

ஒன்று சென்னையில் அடுக்குமாடிக்குடியிருப்புகளின் விலைகள் குறையவேண்டும். அல்லது புதிதாக ஐடி துறையில் பணிக்கு சேர்வோர்களின் சம்பள பேக்கேஜ் அதிகரிக்க வேண்டும்.. 

இவை இரண்டும் சாத்தியம்தானா? இரண்டுமே சாத்தியமில்லாமல் போகும் போது கட்டி முடிக்கப்பட்டுள்ள பிளாட்டுகளின் நிலை? அதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த பில்டர்களின் நிலை?  

மின்னஞ்சல்  

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 10:01 am

புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு மாதிரி அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்யறதுக்கு முன்னாடி நாம ஆக்கிரமிச்சிடலாம் டெக்லஸ் - ஒரு ஆயிரம் பிளாட்ஸ் போதும்ல நமக்கு புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 01, 2013 10:10 am

யினியவன் wrote:புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு மாதிரி அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்யறதுக்கு முன்னாடி நாம ஆக்கிரமிச்சிடலாம் டெக்லஸ் - ஒரு ஆயிரம் பிளாட்ஸ் போதும்ல நமக்கு புன்னகை
 
நீங்க சொல்வதுபோல் அரசியல்வாதி கைக்கு தான் பெருவாரியான வீட்டுமனைகள் போகபோகிறது. 

பாஸ் இங்கே பொலப்பு ஒட்டுறது ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஒருவன் கடன் வாங்காம வாழ்க்கையா ஓட்டுனாலே அதிசயம்...
இந்த நிலையில் சென்னையில் வீடு ரொம்ப கஷ்டம் ... புன்னகை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 10:53 am

ராஜு சரவணன் wrote:
சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதியில் ஏறத்தாழ 60000 அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படாத நிலையில் இருக்கின்றது.. இவற்றை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.. பத்திரிகைகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள்.. பில்டர்களில் விளம்பரங்களில் சதுரஅடிக்கு 100 முதல் 400 வரை குறைத்து விற்பனை செய்வதாக அறிவிக்கின்றனர்.. அப்போதும் விலை போகவில்லை. ஏன் இந்தத் தொய்வு என்பதை ஆராய்ந்து பார்த்ததில் சில காரணங்களை கண்டறிய முடிந்தது..
நானும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை பார்த்துக்கொண்டு தான் உள்ளேன் , இந்த மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கான ரூபாயை விளம்பரத்திற்கு செலவழிப்பதற்கு பதில் , ஃப்ளாடின் விலையை முடிந்த வரை குறைந்த லாபம் வைத்து குறைத்து விற்பனை செய்தால் கண்டிப்பாக விற்பனை ஆகும்.

இவ்வளவு வீடுகள் விற்க முடியாமல் கிடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது , இதே நிலை பகல் கொள்ளை அடிக்கும் தங்கநகை வியாபாரிகள் என்னும் பெருச்சாளிகளுக்கும் வர வேண்டும்.

கடையை திறந்து வைத்துக்கொண்டு யாராவது வாடிக்கையாளர்கள் வரமாட்டார்களா என்று உட்கார்ந்துருக்கும் நிலையை நம் மக்கள் ஏற்படுத்தவேண்டும்.

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 01, 2013 11:45 am

ராஜா wrote:நானும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை பார்த்துக்கொண்டு தான் உள்ளேன் , இந்த மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கான ரூபாயை விளம்பரத்திற்கு செலவழிப்பதற்கு பதில் , ஃப்ளாடின் விலையை முடிந்த வரை குறைந்த லாபம் வைத்து குறைத்து விற்பனை செய்தால் கண்டிப்பாக விற்பனை ஆகும்.

இவ்வளவு வீடுகள் விற்க முடியாமல் கிடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது , இதே நிலை பகல் கொள்ளை அடிக்கும் தங்கநகை வியாபாரிகள் என்னும் பெருச்சாளிகளுக்கும் வர வேண்டும்.

கடையை திறந்து வைத்துக்கொண்டு யாராவது வாடிக்கையாளர்கள் வரமாட்டார்களா என்று உட்கார்ந்துருக்கும் நிலையை நம் மக்கள் ஏற்படுத்தவேண்டும்.

விரைவில் இந்த நிலை வரவேண்டும்..!!

சூப்பருங்க  சூப்பருங்க 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 12:02 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு மாதிரி அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்யறதுக்கு முன்னாடி நாம ஆக்கிரமிச்சிடலாம் டெக்லஸ் - ஒரு ஆயிரம் பிளாட்ஸ் போதும்ல நமக்கு புன்னகை
 
நீங்க சொல்வதுபோல் அரசியல்வாதி கைக்கு தான் பெருவாரியான வீட்டுமனைகள் போகபோகிறது. 

பாஸ் இங்கே பொலப்பு ஒட்டுறது ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஒருவன் கடன் வாங்காம வாழ்க்கையா ஓட்டுனாலே அதிசயம்...
இந்த நிலையில் சென்னையில் வீடு ரொம்ப கஷ்டம் ... புன்னகை புன்னகை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 12:04 pm

ராஜா wrote:
நானும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை பார்த்துக்கொண்டு தான் உள்ளேன் , இந்த மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கான ரூபாயை விளம்பரத்திற்கு செலவழிப்பதற்கு பதில் , ஃப்ளாடின் விலையை முடிந்த வரை குறைந்த லாபம் வைத்து குறைத்து விற்பனை செய்தால் கண்டிப்பாக விற்பனை ஆகும்.

இவ்வளவு வீடுகள் விற்க முடியாமல் கிடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது , இதே நிலை பகல் கொள்ளை அடிக்கும் தங்கநகை வியாபாரிகள் என்னும் பெருச்சாளிகளுக்கும் வர வேண்டும்.

கடையை திறந்து  வைத்துக்கொண்டு  யாராவது வாடிக்கையாளர்கள் வரமாட்டார்களா என்று உட்கார்ந்துருக்கும் நிலையை நம் மக்கள் ஏற்படுத்தவேண்டும்.  

ஆமாம் .....இப்படி விற்காமல் இருந்தால் தான் விலை குறையும், இங்கு பங்களூரில் கூட வீடு வாங்கிடலாம் அங்கு கஷ்டம்தான்.............. என்றாலும் நான் அங்கு வீடு விற்க பார்த்துக்கொண்டிருக்கேன்  இன்னும் முடியலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 12:09 pm

krishnaamma wrote:ஆமாம் .....இப்படி விற்காமல் இருந்தால் தான் விலை குறையும், இங்கு பங்களூரில் கூட வீடு வாங்கிடலாம் அங்கு கஷ்டம்தான்.............. என்றாலும் நான் அங்கு வீடு விர்க்க பார்த்துக்கொண்டிருக்கேன் இன்னும் முடியலை புன்னகை
விற்கமுடியலையா எங்க கிட்ட கொடுங்க நாங்க வாங்கிக்கறோம் சிரி சிரி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 12:22 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ஆமாம் .....இப்படி விற்காமல் இருந்தால் தான் விலை குறையும், இங்கு பங்களூரில் கூட வீடு வாங்கிடலாம் அங்கு கஷ்டம்தான்.............. என்றாலும் நான் அங்கு வீடு விர்க்க பார்த்துக்கொண்டிருக்கேன் இன்னும் முடியலை புன்னகை
விற்கமுடியலையா எங்க கிட்ட கொடுங்க நாங்க வாங்கிக்கறோம் சிரி சிரி 

ஜஸ்ட் 32 லக்ஷம்தான்....கொடுத்துட்டு வாங்கிக்கொங்க புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 12:23 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:ஆமாம் .....இப்படி விற்காமல் இருந்தால் தான் விலை குறையும், இங்கு பங்களூரில் கூட வீடு வாங்கிடலாம் அங்கு கஷ்டம்தான்.............. என்றாலும் நான் அங்கு வீடு விர்க்க பார்த்துக்கொண்டிருக்கேன் இன்னும் முடியலை புன்னகை
விற்கமுடியலையா எங்க கிட்ட கொடுங்க நாங்க வாங்கிக்கறோம் சிரி சிரி 

ஜஸ்ட் 32 லக்ஷம்தான்....கொடுத்துட்டு வாங்கிக்கொங்க புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
எங்கே இடம் சொல்லுங்க ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக