புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 72 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 10:44 am

விபத்தின் போது உதவாத,'ஸ்மார்ட்' போன்!

சமீபத்தில், வாகனத்தில் பயணிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, விழுந்து கிடந்தார். அவரது மொபைல் போனை எடுத்து அவரது உறவினருக்கு தகவல் கூற நினைத்தால், அந்த, 'ஸ்மார்ட்' போன், 'லாக்' ஆகி இருந்தது. அதனால், எங்களால், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துப் போனோம்.
இன்று பலர், மொபைல் போனை, 'லாக்' செய்து, உபயோகிக்கின்றனர். இதனால், இம்மாதிரி சமயங்களில், பிறரால் அதில் பதிவு செய்துள்ள எண்களை பார்க்க முடியாது.

இப்பிரச்னையை தீர்க்க, சில தற்காப்பு வழிமுறைகள் உள்ளன. அவை:

'ஸ்மார்ட்' போனில் தொடர்பு எண்களை, 'ஜி - மெயில்' அக்கவுண்டில் தான் பெரும்பாலானோர் பதிவு செய்கின்றனர். அதை தவிர்த்து, சில முக்கிய எண்களை, 'சிம்' கார்டில், பதிவு செய்ய வேண்டும். அதனால், இம்மாதிரியான விபத்துகளின் போது, 'சிம்' கார்டை மற்ற போனில் மாற்றி, நம்பர்களை தொடர்பு கொள்ள இயலும்.

மேலும், ஆண்ட்ராய்டு போன் பயனீட்டாளர்கள், தங்கள் போன், 'செட்டிங்ஸ்' மூலம், குறிப்பிட்ட நம்பரை, 'லாக்' செய்த பின்பும், போனில், 'டிஸ்ப்ளே' செய்ய முடியும். இந்த செட்டிங்கை பயன்படுத்தி, பெயர், நம்பர், ரத்த வகை போன்ற தகவல்களை, 'டிஸ்ப்ளே' செய்யலாம்.

வயதானவர்கள் முதல் படிக்காதவர் வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் இச்சூழ்நிலையில், விவரம் அறிந்தவர்கள், இதை, அவர்கள் போன்களில், 'செட்' செய்வதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'ஸ்மார்ட்' போனை, 'ஸ்மார்ட்'டாக பயன்படுத்த தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

ஸ்ரீரகுராம், கருவம்பாளையம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:16 pm

பட்டா படுத்தும் பாடு!

இன்று, மக்கள் பட்டா வாங்குவதற்கு படும் பாடும் இருக்கிறதே... அதை வாங்குவதற்குள் நாயாய், பேயாய் அலைய வேண்டியுள்ளது.

இந்த பட்டா எப்படி வந்தது தெரியுமா?

மன்னர் ஆட்சி காலத்தில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் மழைநீரை பயன்படுத்தினர் மக்கள். அதற்காக, வாய்க்கால்களை பராமரிக்க, மக்களிடம் தீர்வை (வரி) வசூலிக்கப்பட்டது.

மேலும், நஞ்சை, புஞ்சை நிலங்களில் பயிர் செய்வதற்கேற்ப, வரி வசூல் செய்யப்பட்டது. அதை பராமரிக்க, சிட்டா கொண்டு வரப்பட்டு, எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ, அதற்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டது.

பிற்காலத்தில், கிணறு, ஆழ்துளை கிணறு, இன்ஜின் மற்றும் மின் மோட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ அதற்கு மட்டும் வரி வசூல் செய்வதற்கு பதில், பயிர் செய்யப்படாத நிலத்திற்கும், வரி வசூலித்தது அரசு.

அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், அதே தவறையே செய்வதுடன், அதையே பட்டா என்ற பெயரில், மக்களை படாதபாடு படுத்துகின்றனர்.

இலவச மனை கொடுத்தால், அதற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது சரி. விலைகொடுத்து வாங்கிய நிலத்தை, அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கு வரி கட்டப்பட்ட பின், மறுபடியும் பட்டா என்ற பெயரில், ஒரு விலை கொடுக்க வேண்டுமா?

ஒரு பொருள் விலைகொடுத்து வாங்கிய பின், அதன் ரசீது உடையவருக்கு, அந்தப் பொருள் சொந்தம். பின், அதற்கு எதற்கு பட்டா என்ற பெயரில், மற்றொரு விலை?

இரண்டாவது சர்வே முடிந்த நிலையிலும், இன்னும் புறம்போக்கு நில அளவையை, சொல்ல முடியாத நிலையில் தான் அரசு உள்ளது.

மக்களுக்கு உரிய சேவை செய்ய, 'பட்டா மாற்றம்' என்பதை கட்டாயமாக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச மனை பெறுவோருக்கு மட்டும் பட்டா கொடுத்தால் போதும்!

வீரா, புதுச்சேரி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:30 pm

பெற்றோர் தினம் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் தானா?

என் மகள் பணிபுரியும் நிறுவனத்தில், முதன் முதலாக, பெற்றோர் - நிறுவனர்கள் சந்திப்பு விழா என்று அழைப்பு விடுத்திருந்தனர். நானும், என் மனைவியும், மகளின் அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். எங்களைப் போல், 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களும், ஊழியர்களும் அன்புடன் எங்களை உபசரித்து, உள்ளே அழைத்துச் சென்று குளிர்பானம் மற்றும் ஸ்வீட் தந்தனர்.

பின், என் மகள் என்னென்ன வேலை செய்கிறார் என்று விளக்கினர். மாலை, 5:30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிகளுக்கு இடையே, 'க்விஸ்' நிகழ்ச்சி நடத்தி, அதில் பெற்றோரை பங்கு பெற வைத்து, பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தனர்.

அத்துடன் நிகழ்ச்சி முடிந்ததும், உணவு கொடுத்து ஆச்சரியப்படுத்தினர். அவர்களின் இந்த அணுகுமுறையை பெற்றோர் அனைவரும் பாராட்டினர். ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு செய்தால், ஊழியர்கள் மற்றும் நிறுவனர்களிடையே நல்ல உறவு ஏற்படுவதுடன், ஊழியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.
இதுபோல பல நிறுவனங்களும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
உற்சாகத்துடன் ஊழியர்களும் வேலை செய்வரே!

வே.முருகேசன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:35 pm

இது நல்லா இருக்கே !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் வேலை செய்யும் இடத்தை பார்த்து பிரமித்து , பூரித்து போவார்கள் புன்னகை .....நல்ல முயற்சி !......வாழ்த்துகளும் பாராட்டுகளும் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:18 am

மனிதாபிமானம்!

ஓட்டல் நடத்தும் நண்பருடன் அவரது ஓட்டலில் அமர்ந்து சமீபத்தில், பேசிக் கொண்டிருந்தேன்.
நான் அங்கிருந்த ஒரு மணி நேரத்தில், கைக்குழந்தையுடன் ஒரு பெண், 'பசிக்கிறது...' என்றும், இளைஞன் ஒருவன், 'ஏதாவது தர்மம் செய்யுங்க...' என்றும், வயதான ஒரு முதியவர், 'ஒரு டீயாவது குடுங்கப்பா...' என்றும் கேட்டு வந்தனர்.

ஆனால், யாருக்கும் எதுவும் கொடுக்காமல் விரட்டி விட்டார் நண்பர். இதுபற்றி கேட்டதற்கு, 'இவங்க எல்லாம் இந்த ஏரியா தான்; தினமும் இதே தொந்தரவு...' என்று அலுத்துக் கொண்டார்.

அந்நேரத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக தடியின் உதவியுடன் ஓட்டலுக்கு வந்து, 'ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் விக்குறோம்; ஏதாவது வாங்குங்க சார்...' என்று பணிவுடன் கேட்டனர்.

உடனே, ஒவ்வொன்றிலும் ஐந்து பாக்கெட் தருமாறு கேட்டு வாங்கியதோடு, அவர்களுக்கு டிபன் கொடுத்து அனுப்பினார். 'இப்படி அவசரப்பட்டு வாங்கிட்டீங்களே... அந்த பொருட்களோட தரம் எப்படி இருக்குமோ...' என்றேன்.

'கை, கால்கள் நல்லா இருந்தும், உழைத்து சாப்பிட மனம் இல்லாமல், ஓசியில் சாப்பிட நினைக்கும் சோம்பேறிகளை விரட்டினேன்; பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், உழைத்து சாப்பிடணும் என்று நினைக்கிற அவங்க நல்ல நோக்கத்தை உற்சாகப்படுத்தவே உதவி செய்தேன்...' என்று விளக்கமளித்தார். நண்பரை மனமார பாராட்டினேன்.

எஸ்.சிவகுருநாதன், அலிவலம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:20 am

அது சரி, இதை படித்ததும், 'ஆஹா புது business..'.. என்று நினைத்thu , இது போல உள்ளவர்களிடம் தங்களின் பொருட்களை கொடுத்து அனுப்பாமல் இருந்தால் சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:21 am

திருட்டை தடுக்கும் மொபைல் போன்!

அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நானும், என் மனைவியும், சென்னை அருகிலுள்ள மறைமலைநகரில், வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.

சமீபத்தில், இரவு, 1:00 மணிக்கு, யாரோ பின்வாசல் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு, விழித்துக் கொண்டேன். மனைவியை எழுப்பி விஷயத்தை சொன்னதுடன், முன் வாசல் வழியே வெளியில் வந்து, கூச்சல் போடாமல், எதிர் வீட்டினர், வீட்டு சொந்தக்காரர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு மொபைல் போனில் தகவல் கொடுக்க, அவர்கள் அனைவரும் வெளியில் வந்து, வீட்டைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்டனர்.

அத்துடன், பதற்றப்படாமல், 100 மற்றும் 108க்கு போன் செய்தேன். அவர்களும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களும் பொறியில் சிக்கிய எலிகளாய் மாட்டிக் கொண்டனர். வீட்டில் சிறிதளவே இருந்த பணமும், நகையும் தப்பியது; அனைவரும் என்னைப் பாராட்டினர்!

முதலில், மொபைல் போன் எண்ணை கொடுக்க மறுத்த அக்கம் பக்கத்தினருக்கு, இப்போது விஷயம் புரிந்தது. எனவே, அருகில் குடியிருப்போர் அனைவரும் அவரவர் வீட்டு மொபைல் போன் எண்ணைக் குறித்து கொண்டால், அவசரம் மற்றும் ஆபத்து நேரங்களில் உதவிகரமாக இருக்கும். சிந்திப்பரா?
.கண்ணன், மறைமலைநகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:21 am

சொந்த இடத்தில் தான் மரம் நட வேண்டுமா?

சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.

அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!

.அருணாசலம், தென்காசி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:22 am

enga இடத்தில் எண்டா குப்பை போடறீங்க என்று சண்டைக்கு வராமல் இருந்தால் சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:23 am

'பேஸ்புக்'கில் இருக்கும் பெண்களா நீங்கள்?

பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் இருக்கும் என் தோழி, 'பேஸ்புக்'கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறாள். ஆனால், அவளது, 'ப்ரொபைல்'லில் படித்த இடம், பிறந்த ஊர் போன்ற எந்த விவரமும் இருக்காது. பல்கலைக்கழகத்தின் பெயர் மட்டும் தான் இருக்கும். அவளுடைய புகைப்படமும் இருக்காது.

'சாதாரணமா இருக்கிறவங்க கூட எல்லா விவரமும் போடுறாங்க; நீ ஏன் இப்படி?' என்று கேட்டதற்கு, 'காரணம் இருக்கு... நான் படிக்கும் போது சில பேர் என்கிட்ட, 'லவ் ப்ரபோஸ்' செய்தாங்க. என் குடும்ப சூழ்நிலை, படிச்சு வேலைக்கு போகணும்ன்னு இருந்ததால, அந்த காதல்களை எல்லாம் கண்டுக்கவே இல்ல.

என் ஆசைப்படியே இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்கேன். நான் வேண்டாம்ன்னு சொன்னவங்களுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி, குழந்தைகளும் இருக்கும். ஆனாலும் கூட, நம்மளை கண்டுக்காம போனவ, இப்ப எப்படி இருக்கான்னு பாக்கத் தோணலாம். குறையா சொல்லல; ஆனா, மனுஷனோட மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது இல்லயா... 'பேஸ்புக்' மூலமா இப்ப யாரை வேணும்ன்னாலும் கண்டுபிடிச்சி, தொடர்பு கொள்ள முடியுமே!

'நம்மை பத்தின எல்லா தகவல்களும் இருந்தா, ஈசியா நம்மை தொடர்பு கொள்ள முடியும். எதுக்கு வேலில போற ஓணான மடியில எடுத்துக் கட்டிக்கணும். ஆபிஸ் காரணங்களுக்காக, 'பேஸ்புக்'ல இருக்கேன் அவ்வளவு தான்! நம்மை பற்றிய சரியான தகவல் இல்லாததால, ஒரு சில நண்பர்கள் நம்மை தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அதனால என்ன... பக்கத்தில் இருக்கும் உறவுகள் கிட்ட, நாம நல்லவிதமா பழகினோலே போதும். சில பெண்கள், 'பேஸ்புக்'ல எல்லா விவரத்தையும் கொடுத்துட்டு, எப்படியெல்லாமோ கஷ்டப்படுறாங்க தெரியுமா...' என்றாள்.

யோசித்து பார்த்தால், அவள் சொல்வது சரி தான் என தோன்றியது. பெண்கள் முன் இருந்ததை விட, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது!


எம்.கவிதா, ஜமீன் பல்லாவரம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக