புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 23 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 23 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 23 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 44%
mohamed nizamudeen

5 Posts - 5%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 8:01 pm

பார்த்திபன் wrote:[link="/t102241p210-topic#1060009"]
krishnaamma wrote:[link="/t102241p195-topic#1056807"]மிச்சம் வைத்தால் தான் கவுரவமா?

என் நண்பனுக்கு, 'பிரமோஷன்' கிடைத்ததால், 'ட்ரீட்' கொடுக்கிறேன் என்று, மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு, அழைத்து சென்றான். பல உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்தான். சாப்பிட்டு முடிக்கும் போது, நண்பன், ஒரு பரோட்டாவையும், 'சிக்கன் ரோஸ்ட்'டின் ஒரு பகுதியையும் அப்படியே வைத்து விட்டான். 'ஏன் இப்படி அனாவசியமாக உணவு பொருட்களை வீணாக்குகிறாய்?' என்று கேட்டேன். 'முழுவதையும் சாப்பிட்டு, 'கிளீன்' செய்தால், அது, 'பிரஸ்டீஜ்' இல்லை...' என்றான்.

இதைக் கேட்டதும், எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. விலை கொடுத்து வாங்கிய உணவுப் பொருளை, இப்படி மிச்சம் வைப்பது, நமக்கு தான் நஷ்டம். இதில், கவுரவம் என்ன வேண்டி இருக்கிறது. மிச்சம் வைப்பது எல்லாம், போலி நாகரிகம். இதை தவிருங்கள் நண்பர்களே!

— அ.கிருஷ்ணகுமார், பெருங்களத்தூர்.

பயபுள்ள கழுத்து வரைக்கும் கட்டு கட்டுன்னு கட்டியிருக்கு! அதுக்கு மேல அதால முடியல, மிச்சம் வச்சதுக்கு வெட்டி பில்டப்பு காரணம் சொல்லி சமாளிச்சிருச்சு. அவ்வளவுதான்!

இருக்கும் ...இருக்கும் புன்னகை ஜாலிஜாலிஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 8:01 pm

இவர்களுக்கு யார் பாடம் புகட்டுவது?

என் பையன், தனியார் மெட்ரிக் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அந்தப் பள்ளியில் கல்விக் கட்டணத்தை, திடீரென்று இரண்டு மடங்காக்கி விட்டனர். இது குறித்து, நிர்வாகத்திடம் பேச, எங்களை அனுமதிக்கவில்லை. எனவே, சில பெற்றோர் சேர்ந்து, கல்வித் துறையில், புகார் அளித்தோம். விசாரணையும் நடந்தது; பின், பள்ளி நிர்வாகம் எங்களை அழைத்து, சில ஆயிரம் குறைத்துக் கட்டுமாறு கேட்டுக் கொண்டது. வேறு வழியின்றி, சம்மதித்தோம்.
ஆனால், அதன்பின், என் பையனின், 'ஹோம் வொர்க்' எதுவும் சரியாக திருத்தப்படவில்லை. வாரா வாரம் நடத்திய, 'டெஸ்ட்' விவரங்கள், ஒரு நோட்டில் இருக்கும். அதை, பையனிடம் தராமல், பள்ளியிலே வைத்துக் கொண்டனர். இதனால், அவன் எப்படி படிக்கிறான் என்று, எங்களால், தெரிந்து கொள்ள இயலவில்லை. இதைவிடவும் பெரிய கொடுமை, கட்டணம் தொடர்பாக கேள்வி கேட்ட பெற்றோரின் பிள்ளைகள், எந்தவொரு கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 'அவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும், கண்டுகொள்ள வேண்டாம்...' என்று, வகுப்பாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிள்ளைகள், வகுப்பில் எதையாவது கேட்டால், 'க்ளாஸ் ரூம்ல ரப்பர் தொலைஞ்சுடுச்சுன்னு உங்க பெத்தவங்க போராட்டம் செய்திடுவாங்க...' என்று, ஆசிரியர்களின் கேலி வேறு. இதையெல்லாம் கூறி, 'நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்...' என்று, என் பிள்ளை அழுத போது, எனக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை. போராடியது நாங்கள்; ஆனால், குழந்தைகளிடம், சில்லரைத்தனமாக நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம்? படிப்பை சொல்லி கொடுக்கும் இந்த மேதாவிகளுக்கு, யார் பண்பைக் கற்றுக் கொடுப்பது? என்னைப் போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெற்றோர்களும், குழந்தைகளை இந்த ஆண்டு வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்து விட்டோம்.
அரசுப் பள்ளிகள், எல்லா விதத்திலும் தரமாக இருந்தால், நாங்கள், ஏன் இப்படி தனியார் பள்ளியிடம், பிச்சைக்காரர்களைப் போல, நிற்க போகிறோம்?

அரசாங்கம், டாஸ்மாக் நிர்வாகத்தில் காட்டுகிற அக்கறையில், பத்து சதவீதமாவது, பள்ளிகள் விஷயத்தில் காட்டினால், லட்சக்கணக்கான பெற்றோர், மகிழ்ச்சியுடன் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியிலேயே படிக்க வைப்பர்.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 08, 2014 7:04 pm

விளையாட்டு ஐடியா!

என் தோழி, புறநகர்பகுதியில், புதிதாக வீடு கட்டி, குடி புகுந்திருந்தாள். அண்மையில், அவளைப் பார்க்க, அவள் வீட்டுக்கு சென்ற போது, அவள் கணவன் மற்றும் பிள்ளைகளுடன், வாசலில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
அவளைப் பார்த்து, 'என்னடி இளமை திரும்புதா? சின்னப்புள்ள மாதிரி விளையாடுறியே...' என்று, கேலியுடன் கேட்டேன். 'இந்தப் பகுதியில், என் பசங்களோடு, விளையாடுவதற்கு ஆளில்ல. அதனால், நாங்க அவங்க விளையாட்டிற்கு, கம்பெனி கொடுக்கிறோம். இப்படி விளையாடுறதுனால, சில நன்மைகள் இருக்கு.

நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க என்கிறதால, எங்களுக்கு, உடற்பயிற்சி செய்ய நேரம் கெடைக்கிறதில்ல. இப்படி பிள்ளைங்க கூட விளையாடுறதுனால, உடலுக்கு, ஆரோக்கியமும், மனதுக்கு உற்சாகமும் கிடைக்கிறது.
'இதோட சடுகுடு, கில்லி மற்றும் பம்பரம் போன்ற, பாரம்பரிய விளையாட்டுகளையும், இடையிடையே கற்றுக் கொடுக்கிறோம். இதை, என் பசங்க, அவங்க வகுப்பு பசங்களிடம் பகிர்ந்துக்கிறாங்க. நம்ம பாரம்பரிய விளையாட்டுகள் மறையாமல் காக்க, எங்களோட சிறுபங்கு இது...' என்று, ஒரு சிற்றுரையே நிகழ்த்தி விட்டாள்.
தோழியின் ஐடியாவை நாமும் பின்பற்றலாமே!

— மு.சுலைஹா, கீழக்கரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 08, 2014 7:04 pm

காலம் மாறிப் போச்சு!

நாங்கள் சிறு வயதாக இருந்த போது, எங்கள் வீட்டுக்கு, ஜட்கா வண்டியில், உறவினர்கள், முன் அறிவிப்பு இன்றி வருவர். எதிர்பாராத இந்த விருந்தாளிகளால், நாங்கள் மகிழ்ச்சியில், திக்குமுக்காடிப் போவோம். அது ஒரு காலம்!
அதுபோலவே, இப்போதும் செய்தால், எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று நினைத்து, மதுரைக்கு சுற்றுலா சென்றிருந்த போது, அங்கு வசிக்கும், என் ஒன்று விட்ட தங்கை வீட்டுக்கு போயிருந்தேன். முதல் முறை செல்வதாலும், விலாசம் மட்டுமே தெரிந்த நிலையில், சற்று திண்டாடிப் போனோம். ஊரிலிருந்து, தொலைவில் இருந்தது அவர்கள் வசிக்கும் காலனி. ஆட்டோவில் சென்றதால், பெரிய தொகை பழுத்து விட்டது.

அவர்கள், எங்களை வரவேற்று உபசரித்தாலும், தற்செயலாக, என் தங்கையின் கணவர் பேசுவதைக் கேட்க நேரிட்டது... 'என்ன இது, திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறாங்க. வர்றோம்ன்னு ஒரு போன் கூடவா செய்ய முடியாது. என்ன சிக்கனமோ... முதல் தடவை வந்திருக்காங்க, புடவை, வேஷ்டி வாங்கி தரணும்ன்னு வேற அடம் பிடிக்கறே... இங்கே ஏது கடை... டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும். எனக்கு, 'ஷிப்ட்'டுக்கு டைம் ஆயிடுச்சு. நீயே, ஆட்டோ பிடிச்சு, போயி வாங்கிட்டு வா...' என்று, கடுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டதும், மனசு கனத்து விட்டது.
இனி, யார் வீட்டுக்கு போனாலும், முன்கூட்டி சொல்லி, அவர்கள் சவுகரியத்தை தெரிந்த கொண்ட பின் தான், போவது என்று முடிவு செய்தோம்.

ஹும்... காலம் ரெம்பவே மாறிவிட்டதுங்கோ!

— ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 6:56 pm

மனைவி என்பவள்!

என் நண்பர்கள் மூவரை, தெருவில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, நண்பர்களில் ஒருவர், காய்கறி வாங்கி வர, தன் மனைவி சொல்லியதாக குறிப்பிட்டு, புறப்பட்டார். உடனே, மற்றொரு நண்பர், 'இதெல்லாம் லேடீசுங்க வேலைப்பா... உன் மனைவியே செய்யச் சொன்னாலும், 'அது என்னோட வேலை இல்ல'ன்னு சொல்லுவியா... அதை விட்டுட்டு, பொண்டாட்டி சொன்னான்னு மார்க்கெட்டுக்கு போறியே...' என்றார். அருகிலிருந்த மற்றொருவரோ, அவர் சொன்னதை ஆமோதிப்பது போல, 'நானெல்லாம் இதுவரைக்கும் என் மனைவி சொல்லி, எதுவுமே கேட்டதில்லை...' என்று, பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆமாம்... மனைவின்னா அவ்வளவு இளக்காரமா? செக்சுக்கு மனைவி வேண்டும்; வீட்டு வேலைகள் செய்றதுக்கும், பிறந்த வீட்டை மறந்துட்டு, கணவனுக்கு பணிவிடை செய்யவும் மனைவி வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, வேலைக்கு செல்லும் மனைவி என்றால், அவளது சம்பளம், கவருடன் வேண்டும். ஆனால், வீட்டு வேலைகளில், மனைவிக்கு ஒத்தாசை செய்வதும், அவளின் சொல்லை கேட்பதும், கேவலமா போச்சா?

ஆணாதிக்கம் கொண்டவர்களே... வீண் ஜம்பம் பேசி, குடும்ப வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்!
— சி.ராமநாதன், மேலூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 6:57 pm

ஏழ்மையை ஏளனம் செய்யாதே!

நான் அலுவலகம் செல்லும் வழியில், அரசு மகளிர் கல்லூரியும், தனியார் மகளிர் கல்லூரி ஒன்றும் உள்ளது. நான் செல்லும் பேருந்தில், வழியெங்கும், இரண்டு கல்லூரியை சேர்ந்த மாணவியரும் பேருந்தில் ஏறுவதுண்டு. அரசு கல்லூரி மாணவியருக்கு, அரசின் சலுகையால், இலவச பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் என்ன கஷ்டம் என்று புரியவில்லை. அரசு கல்லூரி மாணவியரிடம் மட்டும், 'பாஸை எடு...' என, விரட்டுவதும், 'பாஸ் தானே... எழுந்து இடம் கொடு...' என, மிரட்டுவதும், ஸ்டாப்பை விட்டு தள்ளி, பேருந்தை நிப்பாட்டுவதும், தாங்க முடியவில்லை.

தனியார் கல்லூரி மாணவியரின் உடையையும், ஆங்கிலத்தையும் பார்த்து, பணிவு காட்டுவது கூடுதல் எரிச்சல். பள்ளி மாணவ, மாணவியரிடமும், இதே நிலைதான். கல்வி என்பது அழியாத செல்வம். அது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி, கல்வி கற்க ஊக்கப்படுத்துகின்றது.

பேருந்து நடத்துனர்களே... இதில் எத்தனையா பேர் நாளைய டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ, அரசு ஊழியர்களாகவோ ஆகி, வீட்டையும், நாட்டையும் மேம்படுத்த போகின்றனர் என்பதை மனதில் வைத்து, ஏழ்மையை, ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்.

— என்.சாந்தினி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 6:58 pm

இளம் தாயில் வேதனை!

எனக்கு இரு ஆண் குழந்தைகள்; என் கணவர், வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அனைத்து வெளி வேலைகளையும், நான் தான் கவனிக்க வேண்டும். சமீபத்தில், என் குழந்தைகளுக்கு முடி வெட்ட, அவர்களை சலூனுக்கு அழைத்துப் போயிருந்தேன். சலூனுக்கு வெளியே நின்றிருந்த, நான்கைந்து வாலிபர்கள், 'டேய்... பொம்பளைங்க எந்த வேலைய செய்யணும்ன்ற விவஸ்தையே இல்லையா... எல்லா இடத்துக்கும் வந்துடுறாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல, ஆண்கள் செய்யும் முக்கியமான வேலையையும், இவங்களே செய்துடுவாங்க போலிருக்கு...' என்றும், சில சொல்லக் கூடாத வார்த்தைகளையும் பேசி, கேலி செய்தனர். நான் கூனிக் குறுகி, அவமானத்துடன் திரும்பி விட்டேன்.

அனைத்து துறையிலும், பெண்கள், அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும், இது போன்ற வெட்டிப் பேச்சு பேசும் ஆண்கள் இருக்கின்றனரே என நினைத்து, மனம் வேதனையடைந்தது. ஆண்களே... உங்கள் வீட்டிலும் பெண்கள் உண்டு என்பதை மனதில் வைத்து, பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 6:59 pm

பெண்களே...சப்தமாக பேசி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில், ஒரு அழகான இளம்பெண், அமர்ந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமிருந்தது. அப்பெண், என்னிடம், தான் திண்டுக்கல்லுக்கு புதிது என்றும், அங்குள்ள பெண்கள் கல்லூரி பெயரைக் கூறி, அக்கல்லூரிக்கு எப்படிப் போவது என்ற விவரங்களை சற்று சத்தமாக கேட்டாள். இது போதாதா... இந்தக் கால ரோமியோக்களுக்கு!

என் அடுத்த இருக்கையிலிருந்த இளைஞன் ஒருவன், 'எனக்கு தெரியும். நான் கூட்டிச் செல்கிறேன்...' என்று, வலிய வந்து, 'ஜொள்ளு' விட்டான். அப்போதும், இந்த பெண் சுதாரிக்கவில்லை. இதை கவனித்த நான், 'என் வீட்டருகில் தான் உள்ளது. நான், உன்னை கல்லூரியில விட்டுட்டு போகிறேன்...' என்றேன். இது, அவனுக்கு பிடிக்கவில்லை. 'ஆன்டி, உங்களுக்கேன் சிரமம்...' என்றான். உடனே நான், 'என் மகள் போன்ற பெண்ணுக்கு, தாய் ஸ்தானத்திலிருந்து செய்ய வேண்டியது என் கடமை. அதனால், நானே அவளை காலேஜுல விட்டுட்டு போறேன்...' என்றேன். உடனே, அவன் முகம் மாறி விட்டது. அவன் இறங்க வேண்டியது கொடைரோடு என்பதை, அவன், 'டிக்கெட்' வாங்கும் போதே கவனித்திருந்ததால், ஏதோ கெட்ட எண்ணத்துடன் பொய் சொல்கிறான் என்று நினைத்து தான், அவனிடம் இப்படி கூறினேன்.

பெண்களே... புது இடங்களில் பயணம் செய்யும் போது, குறிப்பாக, ரயில் அல்லது பஸ்சில், ஊருக்கு புதியவள் என்பதை பிரகடனப்படுத்தி, கயவர்களுக்கு இடங்கொடுத்து, அவஸ்தைப்படாதீர்கள். அதே போல், பஸ்சில் மொபைல் போனில் உரக்க பேசுவதையும் தவிருங்கள். ஏனெனில், இதுபோன்ற செயல்கள், ஆபத்தை, நாமே விலை கொடுத்து வாங்குவதை போன்றது.

— ஜெ.மீனா, திண்டுக்கல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 9:38 am

உண்மை.  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 23 103459460 

கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 12:04 pm

krishnaamma wrote:[link="/t102241p225-topic#1062508"]ஏழ்மையை ஏளனம் செய்யாதே!

நான் அலுவலகம் செல்லும் வழியில், அரசு மகளிர் கல்லூரியும், தனியார் மகளிர் கல்லூரி ஒன்றும் உள்ளது. நான் செல்லும் பேருந்தில், வழியெங்கும், இரண்டு கல்லூரியை சேர்ந்த மாணவியரும் பேருந்தில் ஏறுவதுண்டு. அரசு கல்லூரி மாணவியருக்கு, அரசின் சலுகையால், இலவச பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் என்ன கஷ்டம் என்று புரியவில்லை. அரசு கல்லூரி மாணவியரிடம் மட்டும், 'பாஸை எடு...' என, விரட்டுவதும், 'பாஸ் தானே... எழுந்து இடம் கொடு...' என, மிரட்டுவதும், ஸ்டாப்பை விட்டு தள்ளி, பேருந்தை நிப்பாட்டுவதும், தாங்க முடியவில்லை.

தனியார் கல்லூரி மாணவியரின் உடையையும், ஆங்கிலத்தையும் பார்த்து, பணிவு காட்டுவது கூடுதல் எரிச்சல். பள்ளி மாணவ, மாணவியரிடமும், இதே நிலைதான். கல்வி என்பது அழியாத செல்வம். அது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி, கல்வி கற்க ஊக்கப்படுத்துகின்றது.

பேருந்து நடத்துனர்களே... இதில் எத்தனையா பேர் நாளைய டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ, அரசு ஊழியர்களாகவோ ஆகி, வீட்டையும், நாட்டையும் மேம்படுத்த போகின்றனர் என்பதை மனதில் வைத்து, ஏழ்மையை, ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்.

— என்.சாந்தினி, மதுரை.
பள்ளிப் பிள்ளைகளை மோசமாக இவன்கள் விரட்டுவது. மோசமான வார்த்தைகளால் திட்டுவது.

இது மிகவும் வேதனையான விசயம் நானே கண்முன் கண்டிருக்கிறேன்....

Sponsored content

PostSponsored content

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக