புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
2 Posts - 6%
heezulia
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 29, 2013 7:50 am

பிறந்ததிலிருந்து கேட்டும் பேசியும் வரும் மொழி தாய்மொழி தமிழ். கணிசமான குழந்தைகளுக்கு தெலுங்கு, சில குழந்தைகளுக்கு கன்னடம், மலையாளம், உருது...

அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்ற பிறகு "ஏ, பி, சி, ஆப்பிள், பிஸ்கட், கேட்...' என்று முதலில் புரியாத புதுமொழியாக இருக்கிறதே என்று குழப்பம். ஏன் வீட்டில் பேசும் மொழி இங்கு இல்லை என்ற ஏக்கம்.

பிறகு, போனால் போகிறது என்று ஒரு தமிழ்ப் பாடம். அதுவும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து.

அதற்குள் ஆங்கிலத்தில் பாடல்களை அரைகுறையாகப் பாடும் குழந்தைகளின் நாக்கு ல, ழ, ள, ர, ற, ன, ண என்ற எழுத்துகளுக்கு மடங்காமல் அடம்பிடிக்க - ஏற்கெனவே சில, பல வருடங்களுக்கு அடம் பிடித்த நாக்கால் தமிழைக் கற்றுவந்த தமிழ் ஆசிரியர்களின் நாவும் அதே குழப்பத்துடன் சொல்லிக்கொடுக்க, கூடுதலாக எ, ஏ, ஒ, ஓ... ஓசை எழுத்துகளை எப்படி எழுதுவது என்று தெளியாத குழப்பத்துடன் இன்றைய தமிழ்நாட்டுக் குழந்தைகள் தலைமுறைக்கு தாய்மொழியே அன்னியமாகிப் போனதுதான் மிச்சம். (இதில் நல்ல திறமை வாய்ந்த, ஆர்வமுள்ள தமிழ் ஆசிரியர்களின் மனப் போராட்டமும் அடங்கும்). இவ்வாறு கற்கும் குழந்தைகளில் நாளை எத்தனைபேர் தமிழ் ஆசிரியர்களோ? தமிழ் நூல்களின் வளர்ச்சியின் நிலை ஒரு பெரிய ?.

"சிறுதுளி பெருவெள்ளம்' என்பது சேமிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல அழிவுக்கும் பொருந்துமே!

இப்படி அழித்தது யார்? யாரின் பொறுப்பு என்ற விவாதத்துக்குள் போய் நேரத்தைப் போக்குவதைவிட அடுத்து என்ன செய்வது என்பதும் அதையும் உடனே விரைவாகச் செய்வதும்தான் மிக முக்கியம்.

குடும்பத்தின் மீது பிடிப்பு வேண்டுமெனில் தாய் மற்றும் தந்தையின் அன்பு, பாசம், அரவணைப்பு, அக்கறை இவை யாவும் குழந்தைகள்பால் எவ்வளவு ஆழப்படுத்தப்படுகிறதோ, அத்துணை அளவு அவை யாவும் குழந்தைகளிடமிருந்து பீறிட்டுவரும் என்பதே உண்மை.

அதுபோல் நாம் பிறந்த மண் வளம், மண்ணின் வரலாறு, மண்ணின் முக்கியத்துவம், அவசியம் போன்றவை தெரியவில்லை என்றால் மனிதர்களின் மனதை எப்படி புரிந்துகொள்ளும் வரும் தலைமுறை? மண் என்றால் மண் சார்ந்த மொழி, இலக்கியம், உணவு, உணர்வு என அனைத்துமே. இன்றைய பெற்றோர்களான மூத்த தலைமுறைக்கே இந்த சிந்தனை இல்லையெனில் பிறகு குழந்தைகளை - வருங்காலத் தலைமுறையைக் குறை சொல்லி என்ன பயன்?

எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஒருவர் கற்றுக்கொண்டு பேசலாம், ஆனால் அதன் அடிப்படை தாய்மொழியாகத்தானே இருக்க வேண்டும். எனவே இன்றைய அவசர, அவசியமானது பெற்றோர்களின் விழிப்புணர்வு.

இன்றைய சூழ்நிலையில், துளிர், தளிர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே இருக்க வேண்டும். 4, 5-ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்தில் எழுத்துகளையும் வார்த்தைகளையும் மட்டும் கற்பிக்கும் ஒரு பாட வகுப்பாக ஆங்கிலம் இருத்தல் வேண்டும். அதற்குள் குழந்தைகள் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.

6 - 7 ஆம் வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும். அப்போது ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி அளிக்க வேண்டும். கூடுதலாக ஹிந்தி எழுத்துகளையும் வார்த்தைகளையும் கற்பிக்கும் ஒரு பாட வகுப்பும் இருத்தல் வேண்டும்.

8-ஆம் வகுப்பு வரும்போது தமிழ் மிக நன்றாகவும் ஆங்கிலம் ஓரளவுக்கு நல்ல பயிற்சியுடனும், ஹிந்தி அறிமுகப் பயிற்சியுடனும் வரும் குழந்தைகள் தங்களது வயதின் பக்குவத்தால் பத்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் முறையே மிகமிக நன்றாகவும், மிக நன்றாகவும், நன்றாகவும் பேச, எழுத, படிக்க தெரிந்துகொள்வார்கள் என்பது நிச்சயம்.

11, 12-ஆம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியா, ஆங்கிலவழிக் கல்வியா என்பதை மாணவர்களே தேர்ந்தெடுக்கும் நிலை வரவேண்டும்.

அதே சிந்தனைத் தெளிவோடு கல்லூரியிலும் தமிழ்வழிக் கல்வியா, ஆங்கிலவழிக் கல்வியா எனத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் மிகத் தெளிவாய் இருப்பார்கள்.

அவ்வாறு கல்லூரியில் தமிழ்வழிக் கல்வி என்றால் அனைத்துப் பாடப்பிரிவுகளும் தமிழில் இருக்கும்படி பாட புத்தகங்களை அறிவாக, நிறைவாக, தெளிவாக, உண்மையாக தயாரிக்க முடியாதா என்ன?

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைவாய்ந்த பெரும் அறிஞர்கள் உள்ள இந்தக் காலத்திலேயே இதைச் செய்ய முடியவில்லை என்றால் வருங்காலத்தில் அத்தகைய அறிஞர்களைக் கண்டுபிடித்துப் பணியில் ஈடுபடுத்துவது மிகக் கடினமான பணியாகிவிடும். கலை, இலக்கியம், அறிவியல், பொறியியல்,மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் பாட நூல்களைத் தமிழில் தரத்துடனும் நல்ல சுவையுடனும் தயாரிக்க இதுவே உற்ற தருணம். தாய்மொழி வழிக் கல்விக்கு மிகுந்த முனைப்பு காட்ட வேண்டிய காலகட்டம் இது. இதைச் செய்யாவிடில் குழந்தைகளின் ஏக்கங்களும் குழப்பங்களும் எதிர்காலத்தில் போராட்டங்களாக மாறினாலும் வியப்பில்லை.

நன்றி- தினமணி - இந்துமதி வசந்தகுமார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 10:38 am

நல்ல ஆராய்ச்சி கட்டுரை - யதார்த்தத்தில் தாய் மொழி எப்படி மறக்கடிக்கப் படுகிறது என்று அறிய முடிகிறது.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 29, 2013 12:12 pm

சாமி wrote:6 - 7 ஆம் வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும். அப்போது ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி அளிக்க வேண்டும். கூடுதலாக ஹிந்தி எழுத்துகளையும் வார்த்தைகளையும் கற்பிக்கும் ஒரு பாட வகுப்பும் இருத்தல் வேண்டும்.

8-ஆம் வகுப்பு வரும்போது தமிழ் மிக நன்றாகவும் ஆங்கிலம் ஓரளவுக்கு நல்ல பயிற்சியுடனும், ஹிந்தி அறிமுகப் பயிற்சியுடனும் வரும் குழந்தைகள் தங்களது வயதின் பக்குவத்தால் பத்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் முறையே மிகமிக நன்றாகவும், மிக நன்றாகவும், நன்றாகவும் பேச, எழுத, படிக்க தெரிந்துகொள்வார்கள் என்பது நிச்சயம்.

அப்படியே கொஞ்சம் தெலுங்கு, மலயாளம், கன்னடம், பஞ்சாபி என கற்று கொடுத்தால் இன்னும் நல்ல தான் இருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக