புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
73 Posts - 77%
heezulia
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
238 Posts - 76%
heezulia
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கவிராயர்கள்! - Page 2 Poll_c10கவிராயர்கள்! - Page 2 Poll_m10கவிராயர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிராயர்கள்!

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:38 am

First topic message reminder :

1. திரிகூடராசப்பக் கவிராயர்
இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

2. சீகாழி அருணாசலக் கவிராயர்
இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை இவருடைய நண்பர். சிதம்பரம் பிள்ளை, பள்ளு நூல் ஒன்றை இயற்றியிருந்தார். அது நிறைவு செய்யப்படாமல் இருக்க, அதை நிறைவு செய்துதரும்படி அருணாசலக் கவிராயரைக் கேட்டுக்கொண்டார். அருணாசலக் கவிராயரும் அதை நிறைவுசெய்து கொடுத்தார். தில்லையாடியில் வசித்துவந்த அருணாசலக் கவிராயர் சிதம்பரம் பிள்ளையின் வேண்டுகோளின்படி சீகாழியில் குடியேறினார். அன்றிலிருந்து "சீகாழி அருணாசலக் கவிராயர்' என்ற பெயர் பெற்றார். இவர் சீகாழிப்புராணம், சீகாழிக்கோவை, அசோமுகி நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ், இராமநாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

3. அமிர்த கவிராயர்
இவர் சிவகங்கையைச் சார்ந்த 'பொன்னங்கால்' எனும் ஊரில் பிறந்தவர். சேது நாட்டை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் வாழ்ந்தவர். ஒருமுறை திருமலை சேதுபதி "அகத்துறையில் ஒரு துறையை பல பாடல்களால் பாட முடியுமா?' என்று கேட்க, "நான் நூறு' பாடுவேன் என்றார் அமிர்தகவி. அவைப் புலவர்கள் "கவிராயர் "நானூறு' பாடல்கள் பாடவேண்டும்' என்றனர். அமிர்த கவிராயரும் "நாணிக் கண்புதைத்தல்' எனும் துறையை எடுத்துக்கொண்டு நானூறு பாடல்களைப் பாடினார். அதைக்கேட்ட அரசர், கவிராயரின் ஊராகிய பொன்னங்காலையே அவருக்குக் கொடையாக வழங்கினார்.

4. முகவூர் கந்தசாமிக் கவிராயர்
இவர் சேற்றூருக்கு அருகில் உள்ள "முகவூரில்' பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகரோடு, தாண்டவராயத் தம்பிரானிடம் கல்வி கற்றவர். முகவூரில் விநாயகர் கோயில் அமைத்து வழிபாடுகளை ஏற்படுத்தியவர்.

நன்றி- தினமணி - முனைவர் அ.சிவபெருமான்

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 18, 2013 8:01 pm

மொத்தமாக இங்கே பதியப்பட்டுள்ளது சிவா!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 28, 2013 12:17 pm

முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:08 pm

Dr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை  எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
உங்கள் தமிழ் பணி சிறக்க இந்த சிறியவனின் வாழ்த்துகள் அய்யா :வணக்கம்: :வணக்கம்: 

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 28, 2013 6:35 pm

Dr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
:வணக்கம்:  உங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா , உங்கள் வருகை எங்களுக்கு பெருமை நன்றி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 28, 2013 10:31 pm

Dr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !

தமிழை காக்க ஆளுண்டு, வீழ்த்த யாருமில்லை.
நம் தமிழுக்கு நிகர் எதுவுமில்லை
உங்களை போன்றவர்கள் இருக்கின்றவரை அந்நிய மொழிகள் ஆயிரம் வந்தாலும் என் அன்னை தமிழுக்கு ஆபத்து வர சாத்தியமில்லை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 9:10 am

54. மேலகரம் பண்டாரக் கவிராயர்
இவர் திரிகூடராசப்பக் கவிராயரின் மகன். "இலஞ்சி உலா' என்ற நூலை இயற்றியுள்ளார்.

55. தேவர்பிரான் கவிராயர்
இவர், குமரகுருபர சுவாமிகளின் பாடல்களை ஒரு நிலைமண்டில ஆசிரியப்பாவால் பாடியுள்ளார்.

56. செங்கோட்டை கவிராஜ பண்டாரத்தையா
இவர் செங்கோட்டையைச் சேர்ந்தவர். "திருமலைக்குமரன் பிள்ளைத்தமிழ்' என்ற நூலை இயற்றியுள்ளார்.

57. கல்லிடைக்குறிச்சி சிதம்பரநாதக் கவிராயர்
இவர் கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்தவர். நீதிகேதனம், திருநெல்வேலி மும்மணி மாலை, திருவுருமாமலை பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

58. நெல்லை முத்துச்சாமிக் கவிராயர்
இவர் நெல்லையைச் சேர்ந்தவர். திருப்புடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதி, இரட்டைமணி மாலை, மும்மணி மாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

59. கமலக் கவிராயர்
இவர், நவநீதகிருட்டிண சுவாமி வாகனமாலை, கோமதியம்மை சதகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

60. சாந்தக் கவிராயர்
இவர் பிறைசையில் பிறந்தவர். "இரங்கேச வெண்பா' என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவுக்கும் ஒரு திருக்குறளையும், அக்குறளுக்கு ஏற்ற ஒரு கதையையும் அமைத்து இயற்றியுள்ளார். இதை "சூடாமணி' என்றும் கூறுவர்.

61. காசி கலியன் கவிராயர்
இவர் வரதுங்கராம பாண்டியரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். அம்பல அரசனின் முடிசூட்டு விழாவில் "மங்கலம்' பாடியவர்.

62. திருவேங்கடாசலக் கவிராயர்
திருவண்ணாமலையில் வாழ்ந்த இவர், சைவ எல்லப்ப நாவலரின் மாணவர். "வல்லாள மகாராசன் கதை' என்ற நூலை இயற்றியுள்ளார்.

63. பொ.மீ. இராமலிங்கக் கவிராயர்
இவர், மதுரை திருமங்கலத்தைச் சார்ந்த பேரையூரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் அட்டாவதானம் மீனாட்சிசுந்தரக் கவிராயரும் பாட்டனார் பொன்னுகூட கவிராயரும் அவதானிகள் ஆவர். இவரும் அட்டாவதானங்களைப் பாடியுள்ளார். பேரையூர் பெருநிலக்கிழாரால் பாராட்டப்பெற்றவர்.

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 9:13 am

64. நடராஜக் கவிராயர்
இவர் முத்தீசுவரர் பதிகம், சீகாழி சட்டைநாதசுவாமி சரச சல்லாபப் பதிகம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.

65. அம்பலவாணக் கவிராயர்
இவர் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களை 1812-இல் அச்சில் கொண்டு வந்தவர். இவரால் அச்சிடப்பெற்ற நூல்களில் மெய்யெழுத்துக்கு மேல் புள்ளி இருக்காது.

66. வேலாயுதக் கவிராயர்
இவர் கொங்குநாட்டு ஆனைமலையில் பிறந்தவர். "நவராத்திரி நாடகம்' (1876) என்ற நூலை இயற்றியுள்ளார்.

67. தெய்வசிகாமணிக் கவிராயர்
இவர் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குலசேகரன்பட்டினத்தில் பிறந்தவர். அவ்வூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகியம்மை மீது பிள்ளைத் தமிழ் நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.

68. சங்கரமூர்த்திக் கவிராயர்
இவர் இராஜபாளையத்தில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான முனிவரிடம் இலக்கண, இலக்கிய, சைவ சித்தாந்தங்களைப் பயின்றவர். கன்னிவாடி மலையாண்டி சுப்பையநாயக்கர் மீது ஐந்திணைக் கோவை, மாலைமாற்று, சித்திரக்கவி மற்றும் சேற்றூர் இராமலிங்கத் தேவர் மீது பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

69. சரவணப் பெருமாள் கவிராயர்
இவர், பாண்டிய நாட்டுப் பரமக்குடியில் பிறந்தவர். அருணாசலக் கவிராயரின் மகன்; அட்டாவதானம் சரவணக் கவிராயரின் பெயரன். இராமநாதபுரம் மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். மதுரை சிலேடை வெண்பா, மகரவந்தாதி, கழுகுமலை ஓரெழுத்து அந்தாதி கந்த வருக்கச் சந்த வெண்பா, திருச்சுழியில் ஓரெழுத்து அந்தாதி, பனசைத் திரிபு அந்தாதி, புவனேந்திரன் அம்மானை, கயற்கண்ணி மாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

70. திருமேனி இரத்தினக் கவிராயர்
இவர் தென்திருப்பேரையில் வாழ்ந்தவர். பெரியகாரி இரத்தினக் கவிராயரின் மகன். வடமலையப்பப் பிள்ளை மீது புலவராற்றுப்படை பாடியுள்ளார். திருப்பேரைத் திருமண மாலை, மாறன் அலங்கார உரை, தொல்காப்பிய நுண்பொருள் மாலை, பரிமேலழகர் நுண் பொருள் மாலை, திருக்குறள் நுண் பொருள் மாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவரைக் காரி இரத்தினக் கவிராயர் என்றும் அழைப்பர்.

71. தில்லையம்பல சந்திரசேகரக் கவிராயர்
இவர் தம்முடைய ஆசிரியர்களான விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் ஆகியோர் இயற்றிய "பால போத இலக்கணம்', "நன்னூல் கண்டிகை உரை', "ஐந்திலக்கண வினா-விடை' ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும், நன்னூல் விருத்தியுரை, செய்யுட்கோவை, பழமொழித் திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரத நூல் முதலான பழைய நூல்களை ஏட்டிலிருந்து அச்சில் கொண்டுவந்தவர். தனிப்பாடல்கள் பலவற்றைத் திரட்டித் தொகுத்துள்ளார்.

72. கவிராச பண்டிதர்
இவர் பாண்டிய நாட்டு வீரசோழன் ஊரைச் சேர்ந்தவர். "வீரைக் கவிராச பண்டிதர்' என்றும் அழைக்கப்பட்டார். ஆதிசங்கரர் பாடிய செüந்தரியலஹரி, ஆனந்தலஹரி என்னும் வடமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 6:59 pm

Dr.S.Soundarapandian wrote:முனைவர் அ.சிவபெருமான் , சாமி ஆகியோர்க்கு நன்றி! தேவையான தொகுப்பு ! மறைந்து ஒழிவதற்கு முன் இவை காக்காப்படவேண்டும் ! தமிழர்களின் கடமை இது ! இந்தக் கவிராயர்களில் சிலருக்கே அரச வெகுமதி கிடைத்தது ! பெரும்பாலான கவிராயர்கள் வறுமையில்தான் வாடினார்கள் ! அவர்கள் நமக்காகத் தியாகம் செய்தவர்கள் ! தமிழை விளம்பரம் இல்லாது வளர்த்த சான்றோர்கள் அவர்கள் ! சில கவிராயர்களின் படைப்புகள் ஓலைச்சுவடிகளில் முடங்கியிருந்ததைக் கண்டு , அவற்றை எடுத்துப் பதிப்பித்து அரசு வெளியீடாக வெளிட்டவன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது !
உங்களின் சாதனை மகிழ்ச்சியாக உள்ளது அய்யா!
புத்தகம் கைவசம் உள்ளதா? கிடைக்குமா?

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக