புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
7 Posts - 64%
heezulia
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
8 Posts - 2%
prajai
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
4 Posts - 1%
mruthun
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
படைத்தவன் யாரோ? Poll_c10படைத்தவன் யாரோ? Poll_m10படைத்தவன் யாரோ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைத்தவன் யாரோ?


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 2:18 pm

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

புலவர் புலமைப் பித்தன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

”மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி

அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
………………..
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
………………..
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்
…………………
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு
வாடா வாடா பையா

இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
படம் – உயிருள்ளவரை உஷா
பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் & இசை – டி.ராஜேந்தர்
பாடலின் சுட்டி – https://youtu.be/1S3XGSA4qTk

பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
படம் – ஜீன்ஸ்
பாடல் – வைரமுத்து
பாடியவர் – ஹரிஹரன்
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – https://youtu.be/_QzDFtWVf3c

பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
படம் – எல்லோரும் நல்லவரே
பாடல் – புலவர் புலமைப்பித்தன்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – வி.குமார்
பாடலின் சுட்டி – https://youtu.be/qamttiCClsc

பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
படம் – தேவதையைக் கண்டேன்
பாடல் – பா.விஜய்
பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
இசை – தேவா
பாடலின் சுட்டி – https://youtu.be/lrCW8fOcXVQ

பாடல் – அண்ணாமல அண்ணாமல
படம் – அண்ணாமலை
பாடல் – வைரமுத்து
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை – தேவா
பாடலின் சுட்டி – https://youtu.be/OQ3RdFU5vsQ

பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
படம் – வழக்கு எண் 18/9
பாடல் – நா.முத்துக்குமார்
பாடகர் – தண்டபாணி
இசை – ஆர்.பிரசன்னா
பாடலின் சுட்டி – https://youtu.be/a-ohRTF8CeI

பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
படம் – ஜெமினி
பாடல் – வைரமுத்து
இசை – பரத்வாஜ்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலின் சுட்டி – https://youtu.be/XNiS5Zxj_RY

பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
படம் – கச்சேரி ஆரம்பம்
பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
இசை – டி.இமான்
பாடலின் சுட்டி – https://youtu.be/ho-4PCJnQ6k

பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
படம் – பிரியமான தோழி
பாடல் – பா.விஜய்
பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

பாடல் – மணியே மணிக்குயிலே
படம் – நாடோடித் தென்றல்
பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
பாடல் & இசை – இளையராஜா
பாடலின் சுட்டி – https://youtu.be/UNIb8Pblu7w

பாடல் – ஒரு பொன் மானை நான் காண
படம் – மைதிலி என்னைக் காதலி
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் & இசை – டி.ராஜேந்தர்
பாடலின் சுட்டி – https://youtu.be/S-XvP9p9mOs

பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
படம் – இந்தியன்
பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
பாடல் – வைரமுத்து
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – https://youtu.be/SfHbknfOOuA

அன்புடன்,
ஜிரா
நன்றி
நாலு வரி நோட்டு



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:02 pm

பிரம்மனுக்கும் கோவில் உண்டு. கும்பகோணத்தில் மற்றும் புஷ்கர் - ராஜஸ்தான் எனும் இடங்களில் கோவில் உள்ளது.

அதுவும் பிரம்மானை பற்றி சொல்ல இந்த கட்டுரையாளருக்கு திரைப்பட பாடல்கள் தான் கிடைத்ததா? புன்னகை

அதுசரி திரைப்படம் எனும் ஒன்றோடு வைத்து சொன்னால் தான் மக்கள மனதில் இதுபோன்ற தகவல்கள் பதியும் என எண்ணி இருக்கலாம். புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 8:23 pm

ராஜு சரவணன் wrote:பிரம்மனுக்கும் கோவில் உண்டு. கும்பகோணத்தில் மற்றும் புஷ்கர் - ராஜஸ்தான் எனும் இடங்களில் கோவில் உள்ளது.

அதுவும் பிரம்மானை பற்றி சொல்ல இந்த கட்டுரையாளருக்கு திரைப்பட பாடல்கள் தான் கிடைத்ததா? புன்னகை

அதுசரி திரைப்படம் எனும் ஒன்றோடு வைத்து சொன்னால் தான் மக்கள மனதில் இதுபோன்ற தகவல்கள் பதியும் என எண்ணி இருக்கலாம். புன்னகை

திரைப்பட படல்கள் என்ன அவ்வளவு கேவலமா ....பல கவிஞர்களை வாழவைத்த ஒரு தொழில் .....
இந்த கட்டுரை பிரம்மா பற்றியது அல்ல தமிழ் கவிஞர்கள் எவ்வாறு படைப்புகளை வர்ணித்தார்கள் என்பதை கூற சிறு முயற்சி அவ்வளவு தான் ....
என்னைப் பொருத்த வரை சினிமா என்பது நவீன கால காப்பியங்கள் ( அல்லது கதை,கவிதை மற்றும் கட்டுரைகளை மறுவடிவமைப்பு ).......



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக