புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணல் நபிகள் நடந்த பாதையில்! (குட்டிக் கதைகள்)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நட்புக்கு இலக்கணமான நண்பர்.
துன்பம் என்று வருகின்ற போது தூரப்போகும் நண்பர்கள் உண்மையான நண்பர்களா? மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் துன்பத்தை, துக்கத்தை பகிர்ந்துகொள்ள முன் வருபவரே உண்மையான நண்பராக ஒருவருக்கு திகழுவார்.
மக்கா நகரில் இஸ்லாத்தின் மகத்துவங்களை எடுத்துச் சொல்லிவந்தார் நபிகள் நாயகம்(ஸல்). விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நபிகள் நாயகத்திற்கு விவரிக்க இயலாத துன்பங்களையும் தொல்லைகளையும் விளைவித்தனர்.
நபிகளுக்கெதிராக பகைவர் கூட்டம் உருவானது. அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்து ஒரு கூட்டம் புறப்பட்டது. தகவலறிந்த நபிகள் நாயகம் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது.
இறைக் கட்டளையின்படி மக்காவிலிருந்து மதீனா செல்ல முடிவெடுத்தார்கள் நபிகள் நாயகம்.
பகைவர்களின் கண்களிலிருந்து தப்பிக்க எண்ணி, இரவோடிரவாக யாரும் அறியாமல் மக்காவை விட்டு கிளம்ப எண்ணிய நபிகள் நாயகம் அவர்களுக்குத் துணையாக அவரின் இனிய நண்பர் அபூபக்கர் சென்றார். எதிரிகள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் வழியாக அபூபக்கர் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார். அப்படி அவர் அழைத்துச் சென்றபோது,
நபிகள் நாயகத்திற்கு முன்புறமாகக் கொஞ்ச நேரமும், பின்புறம் கொஞ்சநேரமும் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். பின்னர் நபிகள் நாயகத்தின் வலப்பக்கமாக கொஞ்ச நேரமும், இடப்பக்கம் கொஞ்ச நேரமும் ஓட்டமும் நடையுமாகப் போனார்.
வழி நெடுகிலும் இதேபோல நபிகள் நாயகத்திற்கு அரணாக முன்பாகவும், பின்புறமாகவும், இடவலப் பக்கங்களிலுமாக மாறிமாறி அபூபக்கர் சென்றார். நண்பர் இப்படி மாறி, மாறி ஓடிச் செல்வதைக் கண்ட நபிகள் நாயகம்,
"அபூபக்கரே, சிலசமயம் என் முன்பாக ஓடுகிறீர். சிலசமயம் என் பின்னால் வருகின்றீர்கள். திடீரென்று வலப்புறமாகவும் பிறகு இடப்புறமாகவும் மாறிமாறி வருகின்றீர்கள்? ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்?” என்று வினவினார்.
அதற்கு மறுமொழியளித்த சித்திக் அபூபக்கர்,"இறைத்தூதரே! எம் உயிரினும் மேலானவரே!
நபிகள் நாயகமே! நான் அப்படி நடக்கக் காரணம், நீங்கள் இந்த வழியாகத்தான் வருகிறீர்கள் என்பதை எதிரிகள் ஒருவேளை அறிந்து உங்களைத் தாக்க ஒளிந்திருப்பார்களோ என்று உங்களுக்கு முன்பாகச் செல்கிறேன். ஒருவேளை நம்மைப் பின்தொடர்ந்து வந்து உங்களைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது என்று பின்னால் வருகிறேன். ஒருவேளை எதிரிகள் பாதையின் வலப்புறம் மறைந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழும்போது வலப்பக்கமாக வருகிறேன். இடப்பக்கம் மறைந்திருந்து எதிரிகள் தாக்கினால் என்ன செய்வது என்று எண்ணி இடப்புறமாக நடந்து வருகிறேன்," என்றுரைத்தார்.
இதைக் கேட்ட நபிகள், "நீரல்லவா எனது உண்மையான நண்பர்," என்று சொல்லி அபூபக்கரைக் கட்டித் தழுவிக்கொண்டார். இப்போதும் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒரு துறவி சிரமத்தை விட்டு தன் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினார். கொஞ்ச தூரம் சென்றிருப்பார்.
ஒருவன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடிவந்து, “சாமீ நீங்க பாட்டுக்கு கெளம்பீட்டீங்க, வழியில திருட்டுப்பயம் அதிகம்; நான் உங்க துணைக்கு வருவேன்” என்றான்.
"ஒனக்கு எதுக்குப்பா சிரமம்ன்னார்", துறவி.
"வருஷக் கணக்குல பழகினதுக்கு நான் இது கூடச் செய்யலைன்னா? எப்படி?", என்று துறவியின் முன்னால் கொஞ்ச நேரமும், பின்னால கொஞ்ச நேரம் என்று மாறிமாறி நடந்து வந்தான் அந்த ஆள்!
"எதுக்குப்பா, இப்படி சிரமப்படுற? என் முன்னாடியும் பின்னாடியும் வந்து ஏன் கஷ்டப்படுறே?", என்றார் துறவி.
"நான், எதுக்கு முன்னாடி ஓடுறேன்னா தூரத்துல திருடங்க வர்றாங்களான்னு பாக்கிறதுக்கு; ஒருவேளை பின்னாடி வந்து உங்க மூட்டை முடிச்சை பறிச்சுட்டுப் போயிட்டா என்னா செய்யிறதுன்னு பின்னாடி வர்றேன்னான் அந்த ஆள்"
"எவ்வளவோ பேர் என்னோட ஆசிரமத்துக்கு வந்து போய் பழகியிருந்தாலும் ஒன்ன மாதிரி ஒரு ஆள் கெடைச்சதுக்கு நான் அதிர்ஷ்டம் செஞ்சுருக்கணும்", என்றார்ர் துறவி.
"அவங்களுக்கெல்லாம் உங்ககிட்ட வெலை உயர்ந்த பொருள் இருக்குன்னு தெரியாதே", என்றான் அந்த ஆள்!
"என்னிடம் அப்படி என்ன பணங்காசு இருக்கு? மடியில கனமும் இல்ல; வழியில பயமும் இல்ல", என்றார் துறவி.
"என்ன இப்படிச் சொல்லீட்டீங்க? மஞ்சச் சுருக்குப் பையில ஒரு வைரமாலை வச்சிருக்கீங்களே, அது வேற யாரு கையிலயும் சிக்கியிறக் கூடாது பாருங்க...அதாங்கிறான்..."

சூரியக் கதிர்கள் இரவின் மடியில் சற்றே தலை சாய்த்துத் துயிலத் துவங்கிய சமயமது! தம் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பள்ளிவாயிலை விட்டு எம்பெருமானார் வெளியே வருகின்றார்கள்! எம்பெருமானாரைச் சுற்றிலும் ஒரு கூட்டம் சூழ்ந்துகொள்ள, அந்த அற்புதப் பொழுதில் எம்பெருமானார் போதனைகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தனர், கூடியிருந்தோர்!
எம்பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள், உதிர்க்கின்ற நல் முத்துக்களை சிந்தாமல் சிதறாமல் செவிகளில் வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழத் துவங்குகின்றது! கந்தலான ஆடை, கலைந்த கேசம், பஞ்சடைந்த கண்கள், ஒட்டிய வயிறு, எலும்புக்கூடு ஒன்று நடந்து வருவது போல் ஒருவர் தள்ளாடியபடியே அண்ணல் நபிகள் அமர்ந்திருந்த கூட்டத்தை நோக்கி வருகின்றார்! நேராக எம்பெருமானிடம் சென்று, சொல்லுகின்றார். அவர் நா அசைகின்றது; வார்த்தைகளோ வெளிவரவில்லை; கைகளைத் தூக்கிச் சைகை செய்ய முனைகின்றார். கை உயரே எழும்ப மறுக்கின்றது; அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று புரியாமல் அங்கிருந்த பலரும் குழப்பத்தோடு அவரையும் நபிகளையும் மாறிமாறிக் கவனிக்கின்றனர். ஆனால் நபிகள் நாயகமோ வறுமையின் கோரப் பிடிகளில் சிக்கித் தவிக்கின்ற அந்தமனிதனை வாட்டும் நோய் என்ன என்பதை அறிந்து கொண்டார். நபிகள் நாயகம், உடனே அருகிலிருந்த ஒருவரை அழைத்துத் தம் வீட்டிற்குச் சென்று அந்த மனிதருக்கு உணவளிக்கும் பொருட்டு எதாவது வாங்கி வரும்படிக் கட்டளையிடுகின்றார்கள்; சற்று நேரத்தில் திரும்பி வந்த அந்த மனிதர் வீட்டில் உணவு ஏதும் மீதம் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றார். நபிகள் நாயகம் அவரைத் தமது மற்ற மனைவியர் இல்லங்களுக்கும் சென்று இருக்கும் உணவை விரைந்து பெற்று வரும்படி பணிக்கின்றார்கள்!
அங்கிருந்தும் திரும்பி வந்த அவர், அருந்துவதற்கு தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் உணவுப் பதார்த்தங்கள் ஏதும் மீந்திருக்கவில்லை என்பதை நபிகளிடம் சொல்லுகின்றார். ஏழ்மையில் இனிமை கண்ட ஏந்தல் எம்பெருமானார் இல்லங்களில் உணவைச் சேமித்து வைக்கின்ற பழக்கமோ, வழக்கமோ இருந்ததில்லையாதலால், தம்மைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கிச் சொல்லுகின்றார்,
"உங்களில் யார் இந்த மனிதருக்கு உணவு அளிக்கின்றாரோ அவருக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்..!" என்றார்கள். நபிகள் சொல்லி முடிக்கும் முன்பாகத் துள்ளி எழுந்தார் அபூதல்ஹா என்பவர்!
"உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கின்றேன்," என்றார் மெத்தப்பணிவோடு! நபிகளின் அனுமதி கிடைத்ததும் எலும்புக்கூடாயிருந்த அந்த மனிதரைக் கைத்தாங்கலாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார், அபூதல்ஹா! இல்லத்தை அடைந்ததும் தம் இல்லாளிடம் (மனைவியிடம்) கேட்கின்றார். சாப்பிடுவதற்கு என்ன இருக்கின்றது? இந்த மனிதருக்கு நாம் உணவு படைத்தாகவேண்டும், என்கிறார். அவரின் உள்ளம் அறிந்த உள்ளத்தாள் உள்ளதை உள்ளவாறே உரைக்கின்றாள்.
"இன்று நம் இல்லில் குழந்தைகளுக்கு மட்டுமே உண்பதற்கு உள்ளது. தாங்கள் என்ன செய்யச் சொல்கின்றீர்களோ செய்யச் சித்தமாயிருக்கின்றேன்" என்கிறார் அபூதல்ஹாவின் உள்ளம் கவர்ந்த உள்ளத்தரசி! குழந்தைகளைச் சமாதானம் செய்து தூங்கவைத்துவிடு. உணவருந்துமிடத்தில் எல்லாவற்றையும் தயாராக வைத்துவிட்டுக் கைவிளக்கை சற்றே மங்கலாக இருக்குமாறு வைத்துவிடு. அவரோடு நாமும் சாப்பிடுவது போல பாவனை செய்து சமாளித்துக் கொள்வோம், என்கிறார் அபூதல்ஹா! அபூதல்ஹாவின் மனையாளும் அவ்வாறே உணவை எடுத்து வைத்துவிட்டு விளக்குத் திரியைச் சரி செய்வது போல மங்கச் செய்துவிடுகின்றார். விருந்தினருக்குப் பரிமாறிவிட்டுத் தாங்களும் உணவருந்துவது போலப் பாசாங்கு செய்ய விருந்தாளியாக வந்தவரோ வயிறார உண்டுவிட்டு நன்றி கூறி விடை பெற்றார். அன்று அபூதல்ஹாவின் குடும்பமே இராப்பட்டினி ! விருந்தாளியாக வந்தவர் மீண்டும் நபிகள் நாயகத்தைச் சந்தித்துத் தாம் திருப்தியாக உணவருந்த ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துப் போனார். அபூதல்ஹாவின் ஏழ்மை நிலை அறிந்தவர்கள் அவரின் விருந்தோம்பும் தன்மைகுறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டனர். ஆனால் அபூதல்ஹா விருந்தாளிக்கு உணவளித்துவிட்டுப் பசியோடு இரவைக் கழித்ததை அவர்கள் எவரும் அறியார், எம்பெருமானாரைத் தவிர!
மறுநாள் அபூதல்ஹா நபிகள் நாயகத்தைச் சந்தித்தபோது, " நேற்று இரவு நீங்களும் உங்கள் உள்ளத்தாளும் நடந்துகொண்ட விதம் குறித்து இறைவன் மிக மகிழ்ச்சி அடைந்தான், என்று கூறி அபூதல்ஹாவைப் பாராட்டுகிறார். "தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட பிறருக்கு முன்னுரிமை வழங்குகின்றார்கள்" என்ற அருட்குரானின் திருவசனத்தின் பிரதிபலிப்பாக அபூதல்ஹா தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
ம்ம்ம்.. இந்தக் காலத்தில் எல்லோர் இல்லங்களிலும் இப்படி உள்ளத்தரசிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்னுடன் பணிபுரியும் ஒரு நண்பர். மாலை மணி ஐந்து எப்போது அடிக்கும் என்று காத்திருந்தது போல இருந்துவிட்டு மணி ஆனதும் மனிதர் அரக்கப் பரக்க வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்.
"அப்படி என்ன அவசரம்?", என்று ஒரு நாள் கேட்டேன். " என் மனைவி எனக்காகக் காப்பி குடிக்காமல் காத்துக் கொண்டிருப்பாள், அதான்" என்றார்.
"உங்க பேரில் அவ்வளவு மரியாதையா? உங்க மனைவிக்கு என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டேன்.
"அப்படியெல்லாம் இல்லைங்க..... நான் போய்த்தான் காப்பி போட்டு அவளுக்கும் கொடுத்துவிட்டு நானும் குடிப்பது வழக்கம்...!?" என்கிறார்.

தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் அண்டைவீட்டார் ஆகியோர் விசயத்தில்
ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்குத் தொழுகை, தர்மம் ஆகியன பரிகாரம் ஆகின்றன. ''
-திருக்குரான்.
பால்காரர் வந்துவிட்டார்.....!அபூபக்கர் சித்திக்! மக்கா நகரின் மகத்தான மனிதர்!! இறைத் தூதர் முகம்மது நபி (ஸல் ) அவர்களின் இதயம் கவர்ந்த இனிய நண்பர்; அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற பெருந்தகையாளர் ஆவார். செல்வந்தர் என்ற கர்வமோ, அகம்பாவமோ மருந்துக்கும் இல்லாத பேராளர்! ஏழை எளியோர்க்கு எப்போதும் உதவுகின்ற பேராளர்! அபூபக்கர் சித்தீக் அவர்களின் இல்லத்துக்கு அருகே வசித்தவர்கள் ஏழை எளியவர்களாகவும் முதியவர்களாகவும் அனாதைகளாகவும் இருந்தனர்; அவர்களின் அன்றாடத் தேவைகளைத் தனது பணியாட்களைக் கொண்டு நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அபுபக்கரோ தானே தினமும் சென்று அவர்களின் சுய தேவைகளை நிறைவேற்றி வந்தார். எப்படி என்றால், சிலருக்கு மாவு அரைத்துக் கொடுப்பார். சிலருக்குத் தானே ரொட்டி சுட்டுக் கொடுப்பார். சிலருக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார்.
வயதான மூதாட்டி (வயதானால்தான் மூதாட்டி என்று உடனே யாரும் வரிந்து கட்டிகொண்டு வந்துவிடவேண்டாம்!?) ஒருவருக்கு ஆடு ஒன்று இருந்தது. மூதாட்டியின் வீட்டிற்குக் காலையிலும் மாலையிலும் அபூபக்கர் சென்று பால் கறந்து கொடுத்து வருவது உட்படப் பல வேலைகளைத் தானே செய்து உதவி வந்தார். நபி அவர்கள் மரணமெய்திய பிறகு மக்கள் அபூபக்கர் அவர்களையே தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதாவது அரசுத் தலைவராக ( கலீ·பாவாக ) தேர்ந்தெடுத்தனர். இந்தச் செய்தி அபூபக்கரின் இல்லத்துக்கு அருகில் வசித்தவர்களுக்குத் தெரியவந்தபோது ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் மனக் கவலையுங் கொண்டனர். இனிமேல், அபூபக்கர் அரசுப் பணிகளில் மூழ்கிவிடுவார், நம்மை எங்கே கவனிக்கப் போகிறார்? அதற்கு அவருக்கு நேரமும் கிடைக்காதே என்பதுதான் அவர்களின் கவலைக்குக் காரணமாக இருந்தது.
ஆட்சித்தலைவர் பொறுப்பேற்ற பிறகும் அபூபக்கர் தம் அண்டை அயலாரை மறக்கவில்லை; வழக்கம் போல அபூபக்கர் அதிகாலையில் முதல் வேலையாக மூதாட்டி வீட்டிற்குச் சென்றார். மூதாட்டியின் வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்த சிறுமி ஒருத்தி வேகமாக வீட்டிற்குள் ஓடி, " பாட்டீ...பால்காரர் வந்துவிட்டார் " என்று பெருங் குரல் கொடுத்துக்கொண்டே ஓடினாள். பாட்டிக்கு மட்டுமல்ல,அபூபக்கரின் வழக்கமான சேவைகளைப் பெறுகின்ற எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. இனிமேல் கிடைக்காது அவரின் சேவை என்றெண்ணியிருந்த அவர்களுக்கு மகிழ்வு ஏற்படாதா என்ன?
அபூபக்கர் சம்பவத்தை எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் சொன்னேன்.
அவர் அரசாங்கத்தில் ஒரு பெரிய அதிகாரியாக இருப்பவர். "இந்தக்காலத்தில் சாதாரண நிலையிலிருந்த ஒருவருக்குப் பெரிய பதவி கிடைத்தால் பழசை மறக்காமல் செய்வது என்பது அபூர்வம் என்று சொன்னேன். அதற்கு நண்பர் தன்னோட சோகமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். அபூபக்கர் காலம் அந்தக்காலம்! இந்தக்காலத்தில் நல்லது என்று எண்ணி யாருக்காவது உதவி செய்தால் நாம்தான் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டியதாகிவிடுகின்றது என்றார்.
அவரோட அனுபவம் என்ன என்று விசாரித்தேன்.அவரும் நடந்ததைச் சொன்னார்.
ஒரு நாள் என்னைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆள் வந்தார். வந்த ஆள் கேட்டார், "சார், போன மாசம் வந்த பெரிய வெள்ளத்தில் நான் மாட்டிக்கிட்டு தத்தளிச்சப்ப என்னைக் காப்பாத்திக் கரை சேத்தது நீங்கதானா சார், " என்று கேட்டார். "ஆமாம்! அதனால் என்னப்பா, அது என்னுடைய கடமை.
இதற்குப் போய் நன்றி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை " என்று சொன்னேன்.
அதற்கு வந்த ஆள் சொன்னார்: -
" அதற்கு இல்லை சார்! அன்னைக்குச் சட்டைப் பையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு வச்சிருந்தேன்.
அதக் காணோம்! அதான் உங்களக் கேட்டுட்டுப் போகலாம்ன்னு வந்தேன்," கிறான்!?

வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை அடக்கிக்கொள்வார்கள்....மேலும் மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள்.. இத்தகைய உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..." -அருட்குரான்.
மதீனா நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது போன்று இருந்தது. காரணம், அந்தநகரில் மார்க்க மேதைகளும், அறிஞர் பெருமக்களும், சமுதாயத்தின் பிரபலமான பெரியோர்களும், அரசு அதிகாரிகள் என்று அவ்வளவு பேர்களும் ஓரிடத்தில் குழுமியிருந்ததுதான் காரணம். அவர்கள் குழுமியிருந்த இடம் பெரும் மாளிகை! அந்த அரண்மனை போன்ற மிகப்பெரிய மாளிகையில் விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றது.
விருந்தினர்களோடு விருந்தினராக அந்த மாளிகைக்குச் சொந்தக்காரரும் உணவருந்த அமர்ந்திருந்தார். விருந்தினர்களுக்கு அவருடைய இல்லப் பணிப்பெண் பரிமாறிக்கொண்டிருந்தாள். சோள ரொட்டி, கறிக்குழம்பு, பேரித்தம் பழம் போன்றவற்றைக் கொண்டு வந்து பரிமாறுவது அவளின் வேலையாக இருந்தது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது!?
பாத்திரம் கீழே விழுந்த சத்தமும், பணிப்பெண்ணின் அலறலும் விருந்தினர்கள் அனைவரையும் ஒருங்கே ஈர்த்தது. விருந்தினர்களின் பார்வைகள் ஒட்டுமொத்தமாகக் குவிந்திருந்தது அந்த வீட்டு உரிமையாளர் மீது!
ஆம்! பணிப்பெண் கையில் பிடித்திருந்த கறிக்குழம்புப் பாத்திரம் கைதவறி விழுந்த அதிர்ச்சியில் அலறியது அந்தப் பணிப்பெண்தான். சுடச்சுடக் குழம்பும் கறியும் கொட்டியது அந்த உரிமையாளரின் முகத்தில்!
அவரின் முகத்திலும் தாடியிலும், தூய வெண்ணிற ஆடையிலும் கொட்டி வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கறிகுழம்பின் சூடும், காரத்தன்மையும் அவரின் முகம், மூக்கு என்று எரிந்து கொண்டிருந்தது. அதைத் துடைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணைச் சுட்டெரிப்பது போல அவர் பார்த்தார். அந்தப் பணிப்பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, தம் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத்துவங்கி விட்டாள். விருந்து ஸ்தம்பித்தது! அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று விருந்தினர்கள் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒரே அமைதி!
அந்த நேரத்தில்.....
அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்தப் பணிப்பெண் அருட் குரானின் திருவசனத்தை ஓத ஆரம்பித்தாள். பயம், துக்கம், பீதி, குற்ற உணர்வுகளால் அவளது குரல் தழுதழுத்தது. அப்படி அவள் குரல் நடுங்கி ஓதியபோதிலும் உச்சரிப்பு குன்றாமல் வெகு நேர்த்தியாக ஓத ஆரம்பித்தாள். "இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் செல்லும் பாதையில் விரைந்து செல்லுங்கள். அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறை அச்சமுடையோருக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது...." ஏற்ற இறக்கங்களோடு நிதானமாக
ஓதத் துவங்கினாள்.
அது, அந்தச் சூழலையே மாற்றிவிட்டது. உரிமையாளரின் முகத்திலிருந்த சுட்டெரிக்கும் பார்வை மறைந்தது. சாந்தம் மெல்ல, மெல்ல அவரின் முகத்தில் குடியேறியது. அவர் தன் கண்களை மூடிக்கொண்டு பணிப்பெண் ஓதுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கலானார். " .... அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை அடக்கிக்கொள்வார்கள்...." பணிப்பெண் இவ்வாறு ஓதிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு குரல் கணீரென்று கேட்டது.
" நான் எனது கோபத்தை அடக்கிக்கொண்டேன்.... உரிமையாளர் தன் எரிச்சல் மறைந்த நிலையில் சொன்னார். பணிப்பெண் அதன்பிறகும் ஓதினாள்...." மேலும் மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள்...."
" நான் உன்னை மன்னித்துவிட்டேன்.... அவர் உரக்கக் கூவினார். கூடியிருந்த விருந்தினர்கள் முகத்தில் மலர்ச்சி! சிரிக்க மறந்த முகங்கள் புன்னகை பூத்தன! பணிப்பெண் முகத்தில் பரவசம்!
அந்தப் பரவசத்தில் தொடர்ந்து ஓதுகின்றாள். ".... இத்தகைய உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..."

பணிப்பெண் ஓதி முடிக்கவில்லை. சிலிர்த்தெழுந்தார் அவர்! " போ... உன்னை நான் விடுதலை செய்துவிட்டேன். சுதந்திரமாக நீ செல்லலாம்; என்றார். அது மட்டுமல்ல அந்தப் பணிப்பெண்ணுக்கு ஏராளமான வெகுமதிகளைக் கொடுத்து அனுப்பினார். அங்கிருந்த விருந்தினர் முகங்கள் உவகையால் மகிழ்ச்சி பொங்கிப் பூத்தது. சந்தோச சாம்ராஜ்யத்தில் மிதப்பது போன்று பணிப்பெண் உணர்ந்தார்.
இப்பவும் கூட சிலர் இருக்காங்க... எப்டீங்கிறீங்களா? ஆடம்பரமான விருந்து நடந்து கொண்டிருந்தது. சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள் எல்லாம் அங்கிருந்தனர். அந்த விருந்தை நடத்துபவர் அரசியல்வாதியிலிருந்து, அதிகாரவர்க்கம் வரை செல்வாக்கு படைத்தவர்; ஆளும்கட்சியில் பெரும் பொறுப்பு வகிப்பவர். தடபுடலாய் விருந்து நடந்து கொண்டிருந்தது. சீருடை அணிந்த வேலைக்காரர்கள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். விருந்துச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். விருந்தில் கடைசியாக நெய் மணக்கும் பாயாசம் பரிமாறப்பட்டது. அப்போதுதான், அந்தச் சத்தம் கேட்டது; எல்லோரும் திடுக்கிட்டு சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். கண்ணைப் பறிக்கும் வெள்ளுடையிலிருந்த ஒரு பிரமுகர் முகத்திலிருந்து பாயாசம் வழிந்து சட்டை வேட்டி எல்லாம் பாயாசமாய்க் காட்சியளிக்க பணியாள் "அய்யோ கை தவறி....நடந்து போச்சு... மன்னிச்சுருங்கய்யா" என்று சொல்லி முகத்தை துடைத்துக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த விருந்தை ஏற்பாடு செய்தவர், தாம் சாப்பிடுவதை விட்டுவிட்டு அந்தப் பிரமுகரை நோக்கி விரைந்து சென்றார். எல்லோரும், என்ன நடக்கப் போகுதோ என்று ஒருவித அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ஏண்டா, அறிவு கெட்டவனே, ஒனக்கு கண்ணில்ல.. இப்படியா... மொதல்ல நீ, வெளிய போ...யாருப்பா... அங்க.. இவங்களை அழைச்சிட்டு உள்ள போய் புது துணி குடுத்து மாத்திக்க ஏறப்பாடு செய்" என்று இரைந்தார்.
" சரி...சரி.. பாவம்...கை தவறி விழுந்துருச்சு... நீங்க போய் சாப்புடுங்க" என்று முகத்திலிருந்த பாயாசத்தை ஆயாசமாய் துடைத்துக்கொண்டே சொன்னார் அந்த ஆள்!
விருந்து எல்லாம் முடிந்தது, வந்தவங்கள்ளாம் கெளம்பினாங்க. விருந்து கொடுத்த அந்த மனிதரும் அவருக்கு வேண்டப்பட்ட ஒருத்தரும் மட்டும் அங்க இருந்தாங்க. எங்க அவன்? கூப்புடு.... என்று கூப்பாடு போட்டார் அந்தப் பெரிய மனிதர்.
"அய்யா.... தெரியாம... கைதவறி நடந்து போச்சு மன்னிச்சுருங்க அய்யா....என்றவாறே, சரி நம்ம சீட்டுக் கிழிஞ்சுது இன்னையோட என்ற முடிவோட வந்தான், அந்தப் பணியாள்.
"சரி..சரி.. கை தவறி விழுந்ததுக்கு நீ, என்ன பண்ணுவே, எல்லாருக்கும் முன்னாடிதிட்டிட்டனேன்னு வருத்தப்படாதே இந்தா...இதச் செலவுக்கு வச்சுக்க... ஒருவாரம் லீவு..ஊருக்குப் போயிட்டுவா?"என்று ஆயிரம் ரூபாயை நீட்டினார். பணியாள் ரூபாயை வாங்கிக்கொண்டு.
"அப்ப வர்றனுங்க", என்று சொல்லிக் கிளம்பினான் முகமெல்லாம் சந்தோசம் சுடர்விட!
பெரியமனிதருக்கு அருகிலிருந்தவர், "என்னாங்க கூப்புட்டு சீட்டைக் கிழிச்சு வூட்டுக்கு அனுப்பப் போறீங்கன்னு நெனைச்சேன். செலவுக்கு கைநெறையா காசும் குடுத்து அனுப்புறீங்களே. உங்க பெருந்தன்மையே.. பெருந்தன்மைங்க..." என்றார்.
"அட, நீ வேற... அந்தாளு என்னை எதிர்த்துப் பேசுற முக்கியமான எதிர்கட்சியாளு. எனக்கு கூப்புட இஷ்டமே இல்லை; ஒருவகையில கூப்புட்டு மூக்கறுத்தமாதிரி இப்டியானதுல எனக்கு உள்ளூர சந்தோசம்.... அதான் இவனுக்கு ஒருவார லீவும் பணமும் குடுத்தேன்" அப்டீங்கிறார்...!?

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2