புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 2 I_vote_lcapஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 2 I_voting_barஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 2 I_vote_lcapஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 2 I_voting_barஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jul 05, 2013 8:54 pm

First topic message reminder :

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், மிரட்டினார், கடத்தினார் என்ற எந்த பழியையும் இளவரசன் மீது திவ்யா போடவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், எனது தாயாரின் நலன் கருதி அவருடன் வாழ்வேன், இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று நீதி மன்றத்தில் திவ்யா கூறினார். ஆனால் இளவரசனை வெறுத்து விலகியதாகக் கூறவில்லை. திவ்யா தன்னை முற்றிலும் வெறுத்திருக்கும் பட்சத்தில் இளவரசன் தற்கொலை முயற்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திவ்யா தன்னுடன் வாழப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் அவர் எனக்குக் கிடைப்பார், நம்பிக்கை இருக்கிறது. திவ்யாவைச் சுற்றி இருப்போர் அவரை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று சலமில்லாமல் தனது கடைசிப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

2. இளவரசனின் முந்தய பேட்டிகளைப் பார்த்தல் அவரின் தெளிவும், தைரியம் நமக்குத் தெரியும். அதோடு திவ்யாவை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள இளவரசனுக்கு திவ்யா வெறும் காதலியல்ல, மனைவி. தனக்குச் சொந்தமானவள். திவ்யா வார்த்தையளவில் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் தனது மனைவி என்பதால் சட்டம் இருக்கிறது எப்படியும் சேரமுடியும் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு இருந்திருக்கும்.

3. அப்படியே திவ்யாவின் வார்த்தைகளால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வைத்துக் கொண்டாலும், புகைப்படங்களில் காணப்படும் இளவரசனின் உடல், ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், அவ்வளவு வேகமாக வரும் ரயிலின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பரின் உடல் இவ்வாறு சில காயங்களுடன் தப்பி இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்க முகமும், தலையும் மட்டும் காயம் அடைந்திருக்கிறது, சட்டைகூட பெரிதாக கசங்கவில்லை என்று செய்திகளில் படிக்க முடிகிறது. ரயில் விபத்தில் பெருத்த காயங்கள் இல்லாமல், சட்டை கசங்காமல் தலையில் மட்டும் காயங்களுடன் சாவது பெரும் ஆச்சர்யத்திற்குரியது.

4. சாதிய சக்திகள் ஒன்றுகூடி இளவரசனுடன் வாழபோவதில்லை என்று திவ்யாவைக் கூற வைத்த பிறகு, அவர்களின் அடுத்த நோக்கம் தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு ஆணிற்கு அந்தப் பெண்ணை கூடியவிரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன்-திவ்யாவின் திருமணம் நாடறிந்தது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அது சட்டப்படி செல்லக்கூடிய திருமணம்.

மறுமணம் செய்து வைக்க வேண்டுமானால் விவாகரத்துப் பெறவேண்டும். அதற்கு அந்தப் பெண்ணை ஒத்துக் கொள்ளவைத்தாலும், இளவரசன் இருந்த நிலைப்பாட்டில் அவர் திவ்யாவைப் பிரிய ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படியே ஒத்துகொண்டாலும் குறைந்தது ஒருவருடம் விவாகரத்திற்காக காத்திருக்கவேண்டும். அதற்குள் திவ்யா மீண்டும் தனது மனதை மாற்றிக்கொண்டு இளவரசனுடன் போனால் இதுவரை தங்கள் சாதியைக் காக்க செய்த போராட்டங்கள் வீணாகிவிடும் என்று அவர்கள் கருதி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இளவரசன் இறந்துவிட்டால் உடனடி மறுமணம் சாத்தியம் என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கலாம். அதனால் இந்த அவலமும் அரங்கேற்றப் பட்டிருக்கலாம்.

திவ்யா தனது தாயுடன் போக மிக முக்கியமான காரணம் அவர் தந்தையின் இறப்பு. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஒரு காரணத்தை வைத்தே சாதிய சக்திகள் திவ்யாவை உணர்வுப் பூர்வமாக அணுகி, அவரது சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். இளவரசனோடு போனால் நானும் இறந்துவிடுவேன் என்று அவரது தாயும் பயமுறுத்தி இருப்பார். என்ன செய்வதென்று தெரியாத பேதையாய், மன அழுத்தம், சாதிய நிர்பந்தம் இவற்றிற்கிடையே வேறு வழியில்லாமல் திவ்யா இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று வார்த்தையளவில் மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.

இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இல்லை இது தற்கொலையானால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை சாதிய/அரசியல் ஈடுபாடில்லாத, முறையான விசாரணை நடத்தப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்குமா என்பதும், அப்படியே நடத்தாலும் விசாரணையை முடிக்க எத்தனை வருடங்கள் இழுப்பார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறியே !

"சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/07/blog-post_5.html

அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 06, 2013 12:13 pm

வயது முதிர்ச்சியால் ஒருவன் சிந்தனை பெறுவான் என்று நான் சொல்லவில்லை. இளங்கன்று பயம் அறியாதது. விளைவுகள் யோசிக்காது. அவர்கள் செய்த பிரச்சனை எத்தனை பேருக்கு தலைக் குனிவு பொருளாதார இழப்பு என்று பார்க்கவேண்டும். சமுதாயம் திருந்தும்வரை பொறுமை வேண்டும். ஏன் அந்த பையன் நீங்கள் சொன்ன மாதிரி ஒரு காவலர் வேலைக்கு சேர்ந்தவுடன் கல்யாணம் செய்து இருக்கலாமே அவசரம் எவ்வளவு பிரச்சனைகளை இழப்புகளை உருவாகி விட்டது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Jul 06, 2013 12:46 pm

இரண்டு உயிர்கள் பலி...பெரும் சோகந்தான்...

ஆனால் , நான் ஒன்று கூற விரும்புகிறேன்...சட்டத்தின் பார்வையிலும் , மற்ற எந்தப் பார்வையிலும் இந்தத் திருமணம் ஏற்கப்பட முடியாதது என்பதுதான்...

திருமணம் நடந்த போது - எங்கே , யார் முன்னர் , எப்படி...??? - இளவரசன் வயது 18 தான்..!

பொருளில்லார்க்கு இவ்வுலகு நிச்சயம் இல்லை..!

அவ்ர்கள் காதலில் நிதானம் காட்டி இருவருமே பொருளாதார ரீதியிலும் , சமூக எதிர்ப்புகளையும் மீறி , தாங்கள் நிலைத்து நிற்க முடியும் என்றதன் பின் தான் அவர்கள் திருமணம் பற்றியே யோசித்திருக்க வேண்டும்...

ஆண்களைவிட பெண்களுக்கே மன முதிர்வு அதிகம் ...பொதுவாக இதுதான் எதிர்பார்க்கக் கூடியது...ஆனால் இவ்விடயத்தில் அவ்வாறு இல்லாமல் போனதே பெரும் இன்னலைக் கொண்டு சேர்த்திருக்கிறது...

இனிமேலாவது காதலர்கள் வாழ்க்கைப்பாதையில் உள்ள சிககல்களைப் பற்றி முன் கூட்டி சிந்தித்து திட்டமிடுவார்களா...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 06, 2013 1:38 pm

தர்மா wrote:வயது முதிர்ச்சியால் ஒருவன் சிந்தனை பெறுவான் என்று நான் சொல்லவில்லை. இளங்கன்று பயம் அறியாதது. விளைவுகள் யோசிக்காது. அவர்கள் செய்த பிரச்சனை எத்தனை பேருக்கு தலைக் குனிவு பொருளாதார இழப்பு என்று பார்க்கவேண்டும். சமுதாயம் திருந்தும்வரை பொறுமை வேண்டும். ஏன் அந்த பையன் நீங்கள் சொன்ன மாதிரி ஒரு காவலர் வேலைக்கு சேர்ந்தவுடன் கல்யாணம் செய்து இருக்கலாமே அவசரம் எவ்வளவு பிரச்சனைகளை இழப்புகளை உருவாகி விட்டது.
சூப்பருங்க உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் அண்ணா.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 06, 2013 2:03 pm

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் பாலின ஈர்ப்பின் விளைவில் வரும் உறவுக்கு தற்காலத்தில் இந்த வேலைகளை செய்பவர்கள் வைத்துள்ள பெயர் தான் காதல். அந்த உறவை கண்டிக்கும் அம்மா அப்பா மற்றும் உறவினர்களை பேச விடாமல் பயன்படுத்தும் ஆயுதம் தான் ஜாதி என்ற சொல் ஆயுதம்.

இப்படி தான் இன்று காதல் சென்றுகொண்டுள்ளது.திருமணம் செய்ய வேண்டிய வயதை அடையாமலே அப்படி என்ன காதல் கருமாதி தேவைபடுகிறது இன்றைய இளைய தலைமுறைக்கு. இந்த அவலங்களுக்கு காரணம் இன்று சமூகத்தை சீரழித்து கொண்டிருக்கும் மேற்கத்திய கலாச்சார ஊடுருவல் மற்றும் திரைபடங்கள் தான்.

மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்ய நான் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு முழு உரிமையும் உண்டு. அதை அந்தந்த உரிய பருவத்தில் தான் செய்யவேண்டும். அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒன்றும் செய்யமுடியாது.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 06, 2013 2:09 pm

நன்றி ராஜா தம்பி. ஆப்பிள் கம்பனியின் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது போல பயம் அவமானம் கவலை அனைத்தும் சாவின் முன் சாஷ்டாங்கடமாக வீழ்ந்து கிடக்கும். ஆகவே அனைவரும் ஒரு நாள் இறக்கவேண்டியவர்களே. திவ்யாவின் தந்தையும் தவறு இளவரசன் செய்ததும் தவறு. இவர்கள் வாழ்க்கயை வெறும் விளயாட்டாக எடுத்துக்கொண்டவர்கள். ஒரு முறை அடயாறு புற்று நோய் மருத்துவமனை சென்று பார்த்தால் தெரியும் எத்தனை உள்ளங்கள் வாழ மாட்டோமா என்ற பயத்துடன் சாவின் விளிம்பில் மரண பயத்துடன் ஒவ்வொரு நிமிடமும் மேலும் அதை ஏற்றுக்கொண்டு போராடி மீண்டு வர பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 06, 2013 2:25 pm

ராஜு சரவணன் wrote:ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் பாலின ஈர்ப்பின் விளைவில் வரும் உறவுக்கு தற்காலத்தில் இந்த வேலைகளை செய்பவர்கள் வைத்துள்ள பெயர் தான் காதல். அந்த உறவை கண்டிக்கும் அம்மா அப்பா மற்றும் உறவினர்களை பேச விடாமல் பயன்படுத்தும் ஆயுதம் தான் ஜாதி என்ற சொல் ஆயுதம்.

இப்படி தான் இன்று காதல் சென்றுகொண்டுள்ளது.திருமணம் செய்ய வேண்டிய வயதை அடையாமலே அப்படி என்ன காதல் கருமாதி தேவைபடுகிறது இன்றைய இளைய தலைமுறைக்கு. இந்த அவலங்களுக்கு காரணம் இன்று சமூகத்தை சீரழித்து கொண்டிருக்கும் மேற்கத்திய கலாச்சார ஊடுருவல் மற்றும் திரைபடங்கள் தான்.

மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்ய நான் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு முழு உரிமையும் உண்டு. அதை அந்தந்த உரிய பருவத்தில் தான் செய்யவேண்டும். அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒன்றும் செய்யமுடியாது.
ஆழ்த்த முதிர்ச்சியான கருத்துக்கள் , சூப்பருங்க 

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Jul 06, 2013 2:25 pm

// அவர்கள் செய்த பிரச்சனை எத்தனை பேருக்கு தலைக் குனிவு // கொஞ்சம் இதைத் தெளிவு படுத்துங்கள் தோழர்... இது சாதி வெறியால் வந்த இழப்பா ? காதலால் வந்த இழப்பா ? அடிப்படை காரணம் என்ன என்று பாருங்கள்... காதலால் வந்த இழப்பு என்றால், ஏன் மற்ற யாரும் காதல், கலப்புத் திருமணம் செய்துகொண்டு வாழவில்லையா ? அவர்கள் மேல் ஏன் பழிபோட முயற்சிக்க வேண்டும்... மாறவேண்டியது சாதி வெறியர்கள்... சாதிவெறியால் காதல் கொல்லப்பட்டதே தவிர, காதலால் சாதிவெறி அரங்கேற்றப்படவில்லை என்ற அடிப்படையை உணர்வது அவசியம்...

யாருக்குத் தலைகுனிவு ? என்ன தலைகுனிவு ? தனக்குப் பிடித்த ஒரு தமிழனோடு ஒரு தமிழச்சியை வாழவிடாமல் வதை செய்ததற்கு சாதி தலைகுனிய வேண்டும், தமிழ்ச் சமூகம் தலைகுனிய வேண்டும்... இது அவர்களால் வந்தது அல்ல...

// சமுதாயம் திருந்தும்வரை பொறுமை வேண்டும் // பொறுமை காத்துக் கொண்டுதான் இருக்கிறோம், பாரதி காலம் தொட்டு, பெரியார் காலம் முடிந்து 21 ஆம் நூற்றாண்டு வரை... ஒருவனுக்கு பிடித்த பெண்ணை, திருமணம் செய்ய இந்த சமதாயம் மாறும் மாறும் என்று எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க முடியும்...?

//  ஏன் அந்த பையன் நீங்கள் சொன்ன மாதிரி ஒரு காவலர் வேலைக்கு சேர்ந்தவுடன் கல்யாணம் செய்து இருக்கலாமே  //
அவன் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறான். அத்தப் பெண்ணிற்கு திருமணம் செய்ய அவர்கள் பெற்றோர் தீரிவிரமாக இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று,. அதோடு அவன் பதினெட்டு வயதைக் கடந்தவன்... சுய முடிவு எடுப்பது அவனது தனிப்பட்ட உரிமை... நாம் எடுக்கும் சில முடிவுகளுக்கு சில காரணங்கள் இருக்கும் அதில் யாருடைய கேள்விகளையும் நாம் விரும்பமாட்டோம்.. அதேபோல் இது அவனது சொந்த விடயம் அதில் நாம் தலையிட முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து..

சாதியத்தால் அதனால் ஏற்பட்ட பேரிழப்பு இது, அதை முறைபடுத்த முற்படவேண்டும், சிந்தனை மாற்றத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்ற அடிப்படையை விட்டுவிட்டு மற்ற காரணங்களை தேட முயற்சிக்கிறோம் என்பதே எனது கருத்து தோழரே. இது சாதியத்திற்கான மறைமுக ஆதரவாகவே பார்க்க முடிகிறது ...

அவனது வயதை மீண்டும் மீண்டும் குறைசொல்லும் நாம், அதே வயதில்தான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகும் அளவிற்கு முன்னேறி இருக்கிறான். ஒரு குறைந்த பட்ச பாராட்டிக்கூட பதிவு செய்து நாம் ஊக்குவிக்க மறந்துவிட்டு, சதி வெறியால் ஏற்பட்ட இந்த இழப்பை அவர்கள் மேல் திணிக்க அடுக்கடுகாய் காரணங்களைத் தேடுகிறோம்... சாதிவெறியைக் கண்டிக்கக் கூட தவறுகிறோம்...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 06, 2013 2:28 pm

தர்மா wrote:நன்றி ராஜா தம்பி. ஆப்பிள் கம்பனியின் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது போல பயம் அவமானம் கவலை அனைத்தும்  சாவின் முன் சாஷ்டாங்கடமாக வீழ்ந்து கிடக்கும்.  ஆகவே அனைவரும் ஒரு நாள் இறக்கவேண்டியவர்களே. திவ்யாவின் தந்தையும் தவறு இளவரசன் செய்ததும் தவறு. இவர்கள் வாழ்க்கயை வெறும் விளயாட்டாக எடுத்துக்கொண்டவர்கள். ஒரு முறை அடயாறு புற்று நோய் மருத்துவமனை  சென்று பார்த்தால் தெரியும் எத்தனை உள்ளங்கள் வாழ மாட்டோமா என்ற பயத்துடன்   சாவின் விளிம்பில் மரண பயத்துடன் ஒவ்வொரு நிமிடமும் மேலும் அதை ஏற்றுக்கொண்டு போராடி மீண்டு வர பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று
நன்றி அதே அடையாறு மருத்துவமனையில் உயிரின் விலையை , மதிப்பை நானும் 6 வருடங்களுக்கு முன்னர் உணர்ந்திருக்கிறேன் அண்ணா, கேட்பதும் காண்பதும் கனவாக இருக்க கூடாதா என பல நாள் நினைதிருக்கிறேன்.

ஆனால் இவர்களுக்கு தெரியாது

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 06, 2013 3:11 pm

கண்டிப்பாக தம்பி.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 06, 2013 3:22 pm

நாம் அனைவரும் சமுதாய விலங்குகள். அப்படித்தான் வாழ முடியும். எல்லைக்கோட்டை தண்டும்போது விளைவுகளை யோசிக்கவேண்டும். அது அந்த இளைஞனின் மற்றும் பெண்ணின் முளு சுதந்திரம் அந்த சுதந்திரம் எப்போது என்றால் அது இரு தரப்பட்ட மக்களுக்கு இடையே மிக பெரிய காயத்தை ஏற்படுத்ததா வரை. நீங்கள் அவர்கள் இருவரையும் பார்க்கிறீர்கள் நான் அந்த பக்கம் இதனால் பாதிக்கப்பட்ட அன்றாட மக்களின் நிலையில் இருந்து சொன்னேன். எத்தனை மக்கள் வீடிளந்து பொருள் இழந்து நித்தம் நித்தம் பயந்து பயந்து வாழ்ந்துகொண்டும் போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த பெண் கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு அம்மாவுடன் தான் வாழ்வேன் சாகமாட்டேன் என்று கூறி தனது வயதிற்குரிய முதிர்ச்சியை காட்டிவிட்டார். இந்த இளைஞன் அது புரியாமல் வீணாக வாழ்க்கையை முடித்து கொண்டார். இதை தான் நான் சொன்னேன் தவிற வேறொன்றும் இல்லை. மற்றபடி இளவரசன் வாழ்கயில் நன்றாக வரக்கூடிய நேரத்தில் இப்படி செய்துவிட்டாரே என்று தான் வருத்தம். அன்று கூட வந்த பெண் இன்று வர மாட்டேன் என்று சொல்ல துணிகிறார் என்றால் நாளை கூட வருவேன் என்று கூட சொல்லலாம். இவர் எதர்க்காக அவசர படவேணும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக