புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
90 Posts - 71%
heezulia
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
255 Posts - 75%
heezulia
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
8 Posts - 2%
prajai
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_m10சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:12 pm

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,

இது சௌபார்னிகா இன்னும் கதை தொடர்....
எனக்கு பிடித்த கதைகளின் வரிசையில் இதுவும் ஒன்று...
வித்தக கவிஞர் பா.விஜய் குங்குமம் இதழில் (4.1.2010) எழுதிய அழகிய தொடர்க்கதை...


கி.மு 110-ல் நடக்கும்  கதை


சல் சல் என்று முகில் புனைந்து கொண்டிருந்த அடர்த்தியான சாரல்..... மண்ணைக் கிளறி உள்ளே கை நுழைத்து குப் குப் என்று ஒரு வாசத்தை ஈரக்காற்றில் தடவுகின்ற பொழுது!

சௌபார்னிகா குளிக்கும் காட்சி !

(முதலிலேயே முன்மொழிந்து விடுகிறேன் சௌபார்னிகா கன்னி...
கனிகளால் ஆன கன்னி !)

ஏகாந்த காடு; எங்கும் சுழ்மாறங்கள்; மூங்கில் முரட்டுத்தனத்தோடு  முதிர்ந்த தேக்கு இலைகள்; துளசிச் செடிகள் நிரம்பிய கானகம்; மலைப்பாம்புகள் ஊர்ந்து ஊர்ந்து சென்ற தடங்களை பிரதிபலித்தது ஈரமான  சதுப்பு நீளம்; செஞ்சிவப்பு காப்பிய சேறு; அதை இன்னும் லிளப்பியது சாரல்! குளீருட்டும் காற்று ! காற்றின் முதுகில் ஏறிக்கொண்ட நெடிய பனைமரங்களின் கீற்றுகள்!

சூரிய அடுப்பில் நிலாவை தூள் தூளாக உடைத்து சாம்பிராணி போட்டது மாதிரி, அந்த மந்தார மலையின் கணவாயில் இருந்த பழைய வசமாடிக்கும் பச்சைப்பகுதி எங்கும் ஒரே வெண்பனி  புகை மூட்டம்!

ஆதவ ஒளியாலும் உல்புகமுடியா நெருக்கமான புகை. நெருக்கம் அதிகரித்துவிட்டால் நடுவே ஒலி-ஒளி எதுவும் புகாதோ!?

அப்பனிப் பிரதேசத்தை ரம்மிய குடிலாக்க இன்னும் கருவறை விட்டு கண் விழித்து மலரா மலர்கள்!

மலர்கள் என்றால் அசாதாரண மலர்ப்பிறவிகள்..... ஆம்பல், செங்கோடு, வேவி மணிச்சிகை, வெட்சி, உந்தூள், கூவிளம், பைநீ, பசும்பிடி,குறிஞ்சி, கலிமா, பல்லிளம், அராலி, மல்லிகை, பிடவம், முல்லை என அதீருப மலர்க் குவியலும் மலர்களுக்குத் தேவையான கொடிகளும் செடிகளும் அவற்றுக்கு ஆஸ்தியானா வேர்களும் விதைகளும், அவற்றுக்கும் அமையாததுமான மண்ணுன்னி புழுக்களும் உயிரணுக்களும் .... இன்னும் படலம் படலமாக படிந்து படிந்துருவான  பூமியின் சமத்கார மடியில் குடிக்கொண்ட ரசாயனக் கற்களும் திரவியங்களுமாக... ஒரே ஆபத்தான அழகுமாயம் அங்கே குடிகொண்டிருந்தது!

மந்தார மலை என்பது மிக பழமையான மலை அல்ல... இறுகி ஒரு படிவப்பாறையின் மேல் படிந்து படிந்து பல பாறைகளினால் அலுந்தி உட்கார அதுவே புதியதோர் மலை தான். தோன்றியே இருபதாம் ஆயிரம் ஆண்டுகளுக்குள் தான் ஆகியிருக்கும்! ஆனால், மந்தார மலையின் வேர் மிக ஆழமானது. அதன் தலை தான் வெளியே காட்டிக் கொண்டு இருக்கிறது. உடம்பு மொத்தமும் சயன நிலையில் உலக உருண்டைக்குள்ளே!

ஆறு அடுக்கு நிலங்கள் கொண்ட மத்தியஸ்த கோபுரம் மாதிரி தான் மந்தார மலையும்... பூமியை பொருத்தமட்டிலும் அது புதிய மலைத்தொடர் என்பதால், அதீத தாவர வகைகளும் அதிசய மூலிகை வாசங்களுமாகா சதா கமகமத்தது !

மலையின் இரண்டாம் தொடரின் கணவாயினுள் பனிபொசிவெல்லாம் கலந்து கலந்து துளித் துளியாய் சேர்ந்த பேரருவி ஒன்று அனுபவ ஞானிபோல்  வெள்ளை வெளேர் என்று உயரத்திலிருந்து இறங்கி கொண்டிருந்தது

அந்த அருவிக்கும் பெயர் உண்டு. பெயரில்லாதது எவ்வுலகில் ஏது?
பெயரில்லாதது ஒன்று உண்டெனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள் ! ஒன்றுமில்லாத இடம் வெற்றிடம் எனலாம். அவ்வெற்றிடத்தின் உள்ளிலும்  உள்ளதல்லவா வெறுமை என்னும் ஒன்று!

மந்தார மலையின்  பச்சையைக் கிழித்தபடி தாய்ப்பாலின் தடிமனில் பொழிந்து கொண்டிருந்த அருவி குமுகியருவி. அதில் தான் குளித்துக் கொண்டிருக்கிறாள் சௌபார்னிகா..!

சௌபார்னிகா என்பவள் சௌந்தர்களின் மொத்தமான தவம்!

குளியலில் சிறந்தது நிர்வாணக் குளியலே! நிர்வாணமே நிஜத்தின் கரு என்பதால் தெளிவின் ஆதர்ஸம் என்பதால் யோகிகளின், 18 சித்தர்களின் ஆடையே நிர்வாணம்தான். நிர்வாணமாகத் தன்னைத்தானே காண தைரியம் உடைய மனம் அஞ்ஞானத்தை அடையாளம் காணும்!

குண்டலினி அடிவயிற்றை விட்டு உம்பி மேல் எழும்பி சிறகு சக்கரத்தில் நிலை வரும் போது ஆடையை ஆத்மா உதறி விடுகிறது அல்லவா? அந்த முக்தி நிலை பத்தாவது அடுக்கெனில் ஒன்பதாவது நிலை தான் நிர்வாணக் குளியல்!

சௌபார்னிகா எப்போதுமே அப்படி தான். தான் மீது சுற்றியிருந்த நிறம் தோய்ந்த துணியை சரசரவென உருவி, அருகே கைநீட்டிக் கொண்டுருந்த, ஆலங்கிளையில் விசிறினாள். அது மிகச்சரியாக கிளையில் தொற்றியதோடு கீழே ஈரம் சுட்டி தழைக்கும் வேப்பங்கொழுந்துகளின் மீதும் படிந்தது! வேப்பங்கொளுந்து தமது கசப்புத்தன்மையை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்தன!

இரு கைகளாலும் ஒடுங்கி தன் உடலை மறைத்த வண்ணம், சட்டென்று பேரிரைச்சலின்  மொழியாக பேசிக்கொட்டும் குமுகி அருவியினுள் குடியேறினாள்.

சற்று உயரத்திலிருந்து ஊற்றும் நீர் வருமென்பதால் வேகத்திம் வீச்சை ஒவ்வொரு துளியும் தாங்கி வந்தது. மட்..மட்... என மண்டையில் தெறித்து படபடவென தேகத்தை துவைத்தது. அப்படியே விழிகளை மூடிக்கொண்டாள். அருவி நீருக்குள் தியான நிலை, திவ்ய மனோநிலையினுள்  இதயம் உருண்டு ஓடிக்கொண்டே இருந்தது.

கருங்கூந்தல் பிய்த்துக்கொண்டு ஒடும்படி அதிர்ந்து முதுகு பகுதிப் பகுதி எங்கும் அருவி வழிந்தது. பேரருவிகள் எப்போதும் மலையை ஒட்டி விழுவதில்லை. உயரத்தில் இருந்து ஓர்  எடுப்பு மேலே எடுத்து துள்ளி விழுவதால், அருவிக்கும், மாலைசுவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி ஏற்படும். அந்த இடைவெளியினுள் உடல் ஊன்றி நின்று சிதறி வரும் சிலு சிலு துளியை உணர்வது, ஆஹா.. அருவியின் முதுகை காண்கிற தருணம் அது!

தன் முதுகு பகுதியை நன்கு அழுத்தி, பாசி கோர்த்துப் வழவழப்புக் காட்டிய மாலைச்சுவரில் படித்துக்  கொண்டு கொட்டும் நீர்த்தாண்டவத்தை ரசித்தாள். பிறகு விளையாட்டாக தலையை மட்டும் அருவியினுள் நீட்ட, தடதடவென யாரோ கல் கூடையை கொட்டி அடிப்பது மாதிரி வலிக்க ஆரம்பித்தது.

வெள்ளை வெளேர் என்று மயிர்க்கால்களே இல்லாத கால்களில் கெண்டைக்கால் வரை அறிவியினுள் நீட்ட பெரிதாக நோகவில்லை. கொஞ்சம் நேரம் குளித்து விளையாடியவள், பின்புறம் இருந்த பாறையின் மீது விரல் வைத்து தேய்த்தாள். பாசி உரித்துக் கொண்டு வந்தது. அதை நன்கு குதப்பி உடம்பு முழுக்க தடவி கொண்டாள்.மீண்டும் அருவியினுள் நிற்க, சுத்தமான சுகந்தமானாள்.

குளித்து முடிந்து பிறகு ஓட்டமும், நடையுமாய் காட்டினுள் இறங்கினால். ஏற்றமும் இறக்கமுமான மந்தாரமாலையில் ஓடியும் படுத்தும் இறங்கியவள், சற்று துரத்திலே தேடி வந்த ஜீவனை கண்டுகொண்டால்.

"ஏய் கிழவா..." என்று தனக்கு முதுகு காட்டி நின்ற ஒரு வயோதிக ஆத்மாவை அழைத்தால்.

ஒடிசலான தேகமும் கறுப்பை அப்பிய நிறமுமாக முதுகுத்தண்டு துருத்திக் கொண்டு வெளியே தெரியும் வண்ணம் நின்று கொண்டிருந்த அவ்வுருவம் திரும்பியது. முகமெங்கும் வெள்ளை, கருப்பு கலந்த முடி சதைபோட்டு தொங்கியது. தாடியும் மீசையும்  ஒன்றி கிடந்தன. இறுகி கிடந்த கேசமும் சடையும் அழுக்கு படிந்த கழுத்தில் புரள, ஒடுங்கிய முகமும், இடுங்கிய விழியும், ஆனால் சகக்கோடி பிரகாசம் கொண்ட கண்களுமாக அந்த உருவம் திரும்பி சௌபார்னிகாவை பார்த்தது...

முக்காலம் அறிந்த முனிவர் அவன்... ஆம் பெயர் விசாட  முனிபுங்கன்!

ஏதோ ஒன்றை கீழே தள்ளி என்னமோ செய்து கொண்டிருந்தது அந்த கிழம்!

"என்ன செய்கிறாய்?" என்று விசாட முனிபுங்கன் அருகே சென்றாள் சௌபார்னிகா

ஒரு முழு மனித உடம்பை போட்டு முக்கால் வாசிக்கு மேல் அந்த உடம்பின் தோலை உரித்து கொண்டிருந்தான் அம்முனிவன். தோல் உரித்த உடம்பு சொரணை மரத்துப் போயி சிவசிவப்புக வெளிறிக் கிடந்தது

கிழவன் உளறினான்.. " சௌபார்னிகா நீராடும்போது இந்த ஜந்து பார்த்து வந்தது சில நாளாக "
என்ற படி இறுகிய முகத்துடன் தொடர்ந்து அந்த வேலையை முடிக்க எத்தனித்து கீழே குனிந்தது அக்குறுமுனி உருவம்..

                                                                                                     
(சௌபார்னிகா வருவாள்)




சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Mசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Aசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Dசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Hசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  U



சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 02, 2013 5:49 pm

அட சௌபார்னிகா கலஞ்சர் கதை சாயலில் இருக்கே ! புன்னகை

அது சரி கலஞ்சரின் யூத் தானே இந்த விஜய் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 5:53 pm

 
ராஜு சரவணன் wrote:அட சௌபார்னிகா கலஞ்சர் கதை சாயலில் இருக்கே ! புன்னகை

அது சரி கலஞ்சரின் யூத் தானே இந்த விஜய் புன்னகை
ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை



சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Mசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Aசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Dசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  Hசௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  U



சௌபார்னிகா - கவிஞர் பா.விஜய்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக