புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
90 Posts - 71%
heezulia
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
255 Posts - 75%
heezulia
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
8 Posts - 2%
prajai
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_m10அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 6:10 pm


திடீரென்று முழு நிலவு மேகங்களுக்குள் ஒளிந்து கொள்கிறது. அந்தி மயங்கிய இருளில் தட்டுத் தடுமாறி வழி தேடுகிறேன். ரப்பர் மரக் கன்றுகள் நிரம்பிய குன்றின் சரிவில் அடுத்த அடியை எவ்வாறு எடுத்து வைக்க...? கூட வந்த வளரிளம்பருவ பட்டாளம் குன்றின் உச்சியை அடைந்துவிட்டது தெரிகிறது. சிரிப்பும் குதூகலமும் நிறைந்த குரல்கள் அங்கிருந்து தென்றலாகத் தவழ்ந்து வருகின்றன. இளம் ரப்பர் மரத்துக்கு அண்டை கொடுத்து நிறுத்திய மூங்கில் கழி ஒன்று விழுந்து கிடக்க, அதனை எடுத்து ஊன்றிக் கொண்டே மேலே முன்னேற முயற்சி செய்கிறேன். ஒரு கட்டத்தில் அதுவும் இயலாமல் போக, குரல் உயர்த்தி, “உதவி! உதவி!’ என்று அலறுகிறேன்! (அடேயப்பா! இத்தøனை பலமான குரலா எனக்கு?) உச்சியிலிருந்து, எதிர்த்திசையில் வேறு பாதை வழியே கீழே இறங்கிப்போய்க் கொண்டிருக்கின்றனர் குழந்தைகள். இதை உணர்த்த மட்டும் சற்றே வெளிப்பட்ட நிலவு என்னை பரிகசித்துச் சிரித்து விட்டு மீண்டும் மறைகிறது. “உதவி!’ இம்முறை என் டார்ஜான் குரல் உச்சியை எட்டுகிறது! குழுவின் ஒரு பிரிவினர் என்னை நோக்கி வோகமாக இறங்கி வருகின்றனர். “இதோ வந்துவிட்டோம். கவலை வேண்டாம்...’

“இப்படி வாருங்கள், இங்கே பிடிமானம், இந்த இடத்தில் உட்கார்ந்தபடி கீழே சறுக்கி இறங்குங்கள்’ என்றெல்லாம் வழிகாட்டியபடி செல்கின்றனர். ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடி இறங்கிவிட முடியாது! (ஏறவும் தான்!) காட்டப்படும் வழியில் நமது முயற்சியையும் ஆற்றலையும் கொண்டு ஒரு தனி மார்க்கத்தை சிருஷ்டித்தபடிதான் பயணப்பட வேண்டும். அதோ தெரிகிறது வெளிச்சம், மின் விளக்குகள், சமதரை... அப்பாடி! முழு நிலவு சாவகாசமாக மீண்டும் வெளிப்படுகிறது! பந்தலின் கீழ் அமைந்த மேடையிலிருந்து இனிய ஆலாபனை கேட்கிறது. மிச்சமிருக்கும் என் படபடப்பை விரட்டி ஒத்தடம் கொடுக்கிறது!

சென்றதென்னவோ சங்கீத ஷிபிரத்துக்கு... பெற்றதென்னவோ இப்படியொரு அரிய குன்றேறும் அனுபவம்!

சங்கீத பயிற்சி என்பதும் மலையேறும் அனுபவம் போலத்தான். ஓரளவுக்குத்தான் கற்றுத்தர முடியும். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ததும்பும் கலையாற்றலும் அழகியலும் ரசனையும் விழிப்புற வேண்டும்; இருள் போல் தோன்றும் ஒலிக்காட்டில் ஆன்ம ஒளியின் துணையுடன் வழியமைத்த முன்னேற வேண்டும். நமக்கு முன் சென்ற மகானுபாவர்கள் வகுத்த பாøயைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதில் தனித்துவத்துடன் நடைபோட்டுச் செல்கையில் தென்படும் அழகுகளையும் புதிர்களையும் சவால்களையும் உள்ளது உள்ளவாறே ஏற்றாக வேண்டும்.

சொன்னால் சட்டென்று புரியாத இந்தத் தத்துவத்தை யதார்த்தத்தில் உணர்த்தத்தானோ என்னவோ, விட்டல் ராமமூர்த்தி ஒரு வார சங்கீத பயிற்சி முகாமில் இப்படி மலையேறும் அனுபவத்தையும் புகுத்தியிருக்கிறார்.

வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் முக்கிய சிஷ்யர் விட்டல் ராமமூர்த்தி. இவரது சொந்த ஊர் மங்களூர் (கர்நாடக மாநிலம்) நகரத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள நிட்லே என்கிற சிறு கிராமம். தமிழக கிராமங்களைப் போல் நான்கு வீதி அமைப்பு கொண்டவை அல்ல இப்பகுதி கிராமங்கள். மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகளில், அங்கேயொரு ரப்பர் தோட்டம் இங்கே ஒரு பாக்கு தோப்பு, அதோ கொஞ்சம் முந்திரி மரங்கள். இதோ பலா, மா... ஆஹா கோக்கோ பண்ணை, காப்பி தோட்டமும் கூட! என்ற வளத்தை வஞ்சனையின்றிப் பொழியும் அடர்மரப் பகுதிகள். அவற்றின் இடையே சௌக்கியமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அழகான ஓட்டு வீடுகள்.

விட்டலின் பண்ணைத் தோட்டம் “கருன்பிதில்’ கரும்புத் தோட்டம் என்று பொருள். இப்போது பெரும்பாலும் கோக்கோவும் ரப்பரும்தான் பயிரிடுகிறார்க். ஆனாலும், அடிக்கரும்பின் இனிமையுடன் பழகி உபசரிக்கிறது இவரது குடும்பம். சென்னை வாசம், அமெரிக்காவில் சில மாதங்கள் முகாம் என்று வயலின் வாசிக்கவும் பயிற்றுவிக்கவும் கருன்பிதிலை விட்டுச் சென்றுவிட்டாலும், வேர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார் விட்டல். பதிமூன்று ஆண்டுகளாக கருன்பிதிலில் இசைப் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை பூர்விக இல்லத்தில் பூஜை, ஹோமங்கள், அப்படியே கொஞ்சம் சங்கீதம் என்று ஆரம்பித்த இந்த நிகழ்வு, இன்று இத்தகைய முகாம்களுக்கான ஒரு சிறந்த முன்னுதாரணமாக வளர்ந்து பெயரெடுத்திருக்கிறது. பங்கேற்கும் குழந்தைகள், சுற்றுவட்டாரத்து கிராமங்கள், சிற்றூர்கள், நகரங்களிலிருந்தே வருகிறார்கள். இணையதள அறிவிப்பைப் பார்த்துவிட்டு எங்களைப் போல் சென்னையிலிருந்து சென்றவர்களும் உண்டு; கடல் கடந்து வந்தவர்களும் உண்டு. ஐந்தாறு வயது குழந்தைகள் முதல் ஐம்பதறுபது வயதினர் வரையிலான பல்வேறு பருவத்தினர். அத்தனை பேரையும் அரவணைத்துக் கொண்டது கருன்பிதில்! அது மட்டுமல்ல, ஜூனியர் முதல் சூப்பர் சீனியர் வரையிலான அந்தஸ்தில் ஒரு டஜன் இசைக் கலைஞர்கள் பயிற்றுவிக்க வந்துபோக, அவர்களையும் வரவேற்று, விருந்தோம்பி, தாங்கி நின்றது.

இரண்டு மலைச் சரிவுகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் நூறு வயதைக் கடந்த வீடு. கொல்லைப் பக்கத்தில் குளியலறை இத்யாதி வசதிகள்; வாசலிலே பந்தலிட்டு சங்கீத முகாம்; பக்கவாட்டுப் பந்தலின் கீழ் வேளா வேளைக்குச் சமையல். அருகேயிருக்கும் மாட்டுக் கொட்டிலிலிருந்து அவ்வப்போது கறந்து வரும் பாலில் சூடாக... ம்ஹூம், காபி இல்லை; கஷாயம்! வீட்டுத் தாவாரத்திலும் பந்தலிலும் தங்கி, உறங்கி எழும் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

சங்கீத முகாமில், ஒவ்வொரு நாளும் ஒரு வித்வான் வந்து புதிய கீர்த்தனைகள் பயிற்றுவிக்கிறார். அவற்றைப் பாடம் செய்து, நன்றாக மெருகேற்றிக் கொண்டு மறுநாளே பாடிக் காட்டிவிட வேண்டும். பயிற்சி வகுப்புகளுடன் செயல்முறை விளக்கங்கள், கச்சேரிகள் என்று நாள் முழுவதும் சங்கீதத்துடன் கைகோர்த்தபடி நகர்கிறார்கள். மாலையில் நடை பயிற்சி, குன்று ஏறுதல், பின் மாலையில் அத்தனை குழந்தைகளுக்கும் மேடையில் பாட (தனித் தனியாகவோ குழுக்களோகவோ) வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஒலிபெருக்கி அமைப்பு ப்காவாக இருக்கிறது. பந்தலில் மின்விசிறிகள் சுழல்கின்றன. மின்வெட்டைச் சமாளிக்க மலைப்பாதையில் டீசல் ஜெனரேட்டர் உட்கார்ந்திருக்கிறது!

குழந்தைகள் கண் விழித்ததுமே பாட்டு பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்கள்! அருமையாகப் பாடுகிறார்கள். விதூஷி சௌம்யா “யாருக்குத்தான் தெரியும்’ பயிற்றுவித்திருக்கிறார்; தோடி பதம்கூட கற்றுக் கொடுத்திருக்கிறார்! லால்குடி ஜெயராமனுக்கு நினைவாஞ்சலியாக இவ்வாண்டு ஷிபிரம் அமைகிறது. லால்குடியுடைய சிஷ்யர் எஸ்.பி.ராமின் சிஷ்யர் நாராயணன். இவர் லால்குடியின் கீர்த்தனைகளைப் பயிற்றுவிக்கிறார். மோகன கல்யாணியையும் ஆஹீர் பைரவையும் அனாயாசமாக கற்றுக் கொள்ளும் மாணவர்கள் மறுநாளே ஜி.ரவிகிரண் (இவர் டி.எம். கிருஷ்ணாவின் சிஷ்யர்) கற்றுத் தரும் கனமான தீஷிதர் கீர்த்தனைகளை கவனமாக உள்வாங்கிக் கொள்கின்றனர். அடுத்த நாள் வித்வான் உமயாள்புரம் சிவராமன் மிருதங்க வாசிப்பின் நுணுக்கங்களை விளக்க, குழந்தைகள் ரசித்துப் புரிந்து கொள்கிறார்கள். நாராயணன், பட்டாபிராம் பண்டிட், சாகேதராமன் ஆகியோரின் கச்சேரிகளைத் தலையாட்டி ரசிக்கிறார்கள். உமையாள்புரம் சிவராமனின் விரல்கள் மிருதங்கத்தில் பறப்பதையும் விளையாடுவதையும் கண் இமைக்காமல் பார்க்கிறார்கள்.

நாள் முழுதும் பந்தலில் சம்மணமிட்டு அமரும் குழந்தைகள் சலிப்படையாத வகையில் விட்டல் குடும்பத்தினர் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளனர். குழந்தைகளின் ஆரோக்கியமும் குதூகலமும் பேணும் வகையில் உணவு தயாரிப்பும் திட்டமிடப்பட்டிருக்கிறது. காலையில் உப்பும் நெய்யும் சேர்த்து உண்ணும் மணமான புழுங்கலரிசி கஞ்சி. மதிய உணவுக்கு முன்பான இடைவேளையில் பசும்பால், வெல்லம் சேர்த்த மல்லி - ஜீரக கஷாயம். சாதம் - குழம்பு - ரஸம் - பொரியலுடன் பாயசம் அல்லது பழரசாயனம் (மா - வாழை - வெல்லம் - தேங்காய்ப்பால் கலவை) பிற்பகலில். மாலை கஷாயத்துடன் சிற்றுண்டி; இரவில் பிற்பகலைப் போலவே முழு உணவு... சில நண்பர்களின் ஆதரவுடன் விட்டலின் குடும்பம் செலவுகளை ஏற்கிறது.

ஆசையுடன் பாடவும் கேட்கவும் வரும் குழந்தைகள் அதே ஆவலுடன் உணவுத் தட்டுகளைத் தூக்கி வந்து பரிமாறப்படும் உணவைப் பெற்றுச் செல்கிறார்கள். சிலர் பரிமாற முன்வந்து கரண்டி பிடிக்கிறார்கள். எப்போதும் யாரேனும் சிலர் பாடிக் கொண்டேயிருக்கிறார்கள்... தப்பித் தவறி ஏற்படும் இடைவெளியில், “அம்மா’ என்று அழகாக ஒலி எழுப்பும் பசு மாட்டின் குரல்கூட சங்கீதமாகத்தான் தொனிக்கிறது!





அடிக்கரும்பு அனுபவம்! - சீதா ரவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக