புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
1 Post - 1%
prajai
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
தேனு.... தேனு - கௌசிகன் I_vote_lcapதேனு.... தேனு - கௌசிகன் I_voting_barதேனு.... தேனு - கௌசிகன் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனு.... தேனு - கௌசிகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 5:02 pm


அன்று வழக்கம் போல காலையில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்ரீராமின் காதில் “தேனு, தேனு’ என்ற குரல் கேட்டது. ஓர் ஆசாமி மொபெட்டின் பின்னால் அலுமினியப் பாத்திரம் வைத்துக்கொண்டு வந்தான்.

“என்னப்பா இது?’ என்று வினவினான் ஸ்ரீராம்.

“தேனு, சாமி, தேனு, சுத்தமான மலைத்தேனு’

“எங்கிருந்து வர்றேப்பா?’

“பச்சைமலை சாமி, பெரம்பலூர பக்கம்’

அவன் சற்று சந்தேகத்துடன் பார்த்ததும், “சாமி, என்னை நம்புங்க. நான் கும்படற காளி ஆத்தாள் மேல சத்தியமா இது சுத்தமான தேனு தான். நாங்க, காட்டுல தேன் எடுக்க லைசன்ஸு வச்சுருக்கோம். பாருங்க, என் கையில பச்சை குத்தியிருக்கேன்.’ கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. ஸ்ரீராமுக்குச் சற்று நம்பிக்கை வரத் தொடங்கியது. ஆனாலும் உள்ளூர சந்தேகம், அது தேன்தானா என்று.

ஸ்ரீராமின் முக பாவத்தை பார்த்த அந்த ஆசாமி, “சாமி, போய் ஒரு நியூஸ் பேப்பர் கொண்டு வாங்க’ என்றான்.

அவன் கொண்டு வந்த பேப்பரில், ஒரு தேக்கரண்டி அளவு தேனை ஊற்றினான். பின் பேப்பரைப் பொட்டலமாக மடித்தான். “இதை இன்னும் அச்சு நிமிஷம் கழிச்சுப் பாப்போம். சாமி, இப்ப ஒரு கிளாசில் தண்ணி கொண்டு வாங்க’ என்றான்.

ஆஃபீஸுக்கோ நேரம் ஆகிறது. இருந்தும், தேனின் கவர்ச்சியால் உந்தப்பட்டு, அந்த ஆசாமி கேட்டபடி, ஒரு எவர்சில்வர் தம்பளரில் தண்ணீர் கொண்டு வந்தான் ஸ்ரீராம்.

தேன் விற்பவன் “தண்ணீரைக் குடிச்சுப் பாருங்க’ என்றான். இதில் என் அதிசயம், வெறும் தண்ணீர் சுவைதானே என்று நினைத்துக் கொண்டு அருந்தினான். பிறகு, அந்த ஆசாமி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவுதேனை ஊற்றினான். “இப்ப குடிங்க, என்ன டேஸ்ட் இருக்கு பாருங்க.’

தண்ணீர் தண்ணீராகத்தான் சுவைத்தது. தித்திப்பாக இல்லை.

“சரி சாமி, தீக்குச்சியும் பெட்டியும் கொண்டு வாங்க’ என்று மீண்டும் பணித்தான். ஆர்வத்தால் மீண்டு உள்ளே சென்று, தீப்பெட்டி கொண்டு வந்தான். தீக்குச்சி ஒன்றை தேனில் தோய்த்துப் பெட்டியின் பக்கவாட்டில் உரசினான். உடனேயே நெருப்புப் பற்றிக்கொண்டது.

“வெறும் வெல்லப்பாகானால் தீப்பற்றுங்களா?’ என்று கேட்டான்.

“அந்தப் பேப்பரைப் பாருங்க, இருக்கா.’

ஒரு துளி கூட உறிஞ்சவில்லை.

அறிவியலைப் பாடமாகப் படித்திருந்த ஸ்ரீராம், அதற்கு மேலும் சோதனை செய்ய நாட்டமில்லாதவனாய், “என்ன விலை’ என்றான்.

“நூறு மில்லி அறுபதுங்க. ஒரு லிட்டர் கொடுக்கட்டுமா?’

“ஒன்றரை லிட்டர் கொடப்பா.’

“நல்ல ஏனம் வேணும். ஒரு வருஷம் ஆனாலும் கெடாத பொருளுங்க.’

மீண்டும் ஒர நடை உள்ளே சென்று, ஒரு எவர்சில்வர் தூக்கைத் தேடி கண்டுபிடித்துக் கொண்டு வந்தான், வெளியே கடைக்குப் போன தன் மனைவி ஏன் இன்னமும் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே.
“இது மருந்து சாமி, காலைல வெறும் வயித்துல வெந்நீரோடு குடிச்சா ஒடம்பு இளைக்கும். ராத்திரி பாலோடு குடிச்சா ஒடம்பு பெருக்கும். நல்ல கரண்டியா உபயோகப்படுத்துங்க. கெடாது’

ஸ்ரீராம் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு, சரியாகக் கணக்குப் பார்த்து மீதி நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான். மலைவாழ் மக்களின் முன்னேற்றத்தைக்கண்டு அவன் வியந்து கொண்டிருக்கும்போது, அவன் மனைவி துளசி வந்தாள். அவளை பார்த்தவுடன், “அம்மா கொளந்தைக்குத் தூளி கட்டணும். ஏதாச்சும் பழைய நூல் சேலை இருந்தால் தாங்க’ என்றான். கணவனின் கண் ஜாடையின் அர்த்தத்தை உணர்ந்த அவள், இரண்டு பழைய, கிழியாத நூல் புடைவைகளைக் கொடுத்தாள்.

“மவராசியாய் இருங்க. சாமி, நான் நாலு மாசம் கழிச்சு வரேன்’ என மனமார வாழ்த்திவிட்டுப் போனான் அந்த மலை வாழ் ஆசாமி.

“சுத்தமான தேன்தானா? எவ்வளவு வாங்கினீங்க? என்ன விலை?’ சற்று அதட்டலாகக் கேட்டாள். சொன்னான்.

“ஆங்க். ஒண்ணரை லிட்டரா? யாருக்காவது தேனாபிஷேகமா? அதுவும் தொள்ளாயிரம் ரூபா கொடுத்து? தேனுன்னு நம்பி எதை வாங்கினீங்களோ! வயத்த என்ன பண்ணுமோ? அவ்வளவும் எப்படிச் செலவழியுமோ?’

“இங்க பார் துளசி, எங்கப்பா தேனை டெஸ்ட் பண்ணச் சில முறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கார். அந்த ஆசாமி செஞ்சதெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன். பயப்படாதே. நம்ம சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் வினியோகம் பண்ணினாப் போச்சு. தேனில், அன்னாசிப்பழம், பலாப்பழம், வாழைப்பழம் உறவச்சுச் சாப்பிடலாம். அம்மா, அப்பா ஸ்ராத்தத்தில் உபயோகப்படுத்தலாம். ஏன், நீ கூட உடம்பு இளைக்கச் சாப்பிடேன். அவன் சொன்ன மாதிரி’ என்றவன், அவளது கனலெனும் பார்வையைத் தவிர்த்து, தொடர்ந்தான்:

“நம்ப மாதிரி ஆட்களெல்லாம் பெரிய பெரிய மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஷாப்பிங் செய்து, பிராண்ட் நேமை நம்பி பொருளை வாங்கி ஏமாறுவோம். வயிற்றுப் பிழைப்புக்காக நல்ல பொருளை விற்கும் ஏழையைச் சந்தேகப்படுவோம். அவன் வறுமையைப் பார். அவன் விற்றது தேனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஓர் ஏழையிடம் ஏமாந்து போறதுல எனக்குப் பெருமைதான்!’

என்னதான் துளசியிடம் வீராப்பாகப் பேசினாலும், ஸ்ரீராமுக்கு உள்ளூர சந்தேகம். மறுநாள் ஒரு சின்ன பாட்டிலில், அந்தத் தேனை ஊற்றி ஆஃபீஸுக்கு எடுத்துப் போனான். உணவு இடைவேளையில், சகாக்களுக்குக் கொடுத்தான். அனைவரும் அது சுத்தமான தேன்தான் என்று சான்றிதழ் கொடுத்தனர். சிலர், அந்த ஆசாமி மீண்டும் வந்தால் தத்தம் வீடுகளுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

பின்னர், அவர்களது வீட்டுக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் அவர்கள் அளித்தத் தேனின் இன்சுவையில் மயங்கினர். ஸ்ரீராம் தனது தந்தையையும் அடிக்கடி நினைத்துக்கொண்டான். எத்தனை நாள் தேனில் ஊறவைத்த அன்னாசிப்பழத்தை வாயில் ஊட்டிவிட்டிருக்கிறார்?

மறுமாதம் அப்பாவின் திவசம் பண்ணும்போது, பித்ரு ஸ்வரூபமாக வந்த வாத்தியார், கலத்தில் வாழைப்பழம் மீதுத் தேனை ஊற்றும்போது ஸ்ரீராமின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைக் கவனிக்கத் தவறவில்லை அவனது அன்பு மனைவி.

“தேனு... தேனு...’ வெகு தொலைவில் ஒரு குரல் மெலிதாக கேட்டது.





தேனு.... தேனு - கௌசிகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 10:21 am

அருமையான பதிவு ....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக