புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
25 Posts - 69%
heezulia
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
361 Posts - 78%
heezulia
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருவின் கதை - Page 4 Poll_c10கருவின் கதை - Page 4 Poll_m10கருவின் கதை - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவின் கதை


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:03 pm

First topic message reminder :

பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.


1 முதல் 4 வாரம் வரை


சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது

நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:40 pm

23-வது வாரம்

இந்த வாரத்தில் குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 8 இஞ்ச் நீளமும், கிட்டத்தட்ட 1 பவுண்டு எடையும் இருக்கும். உடம்பை பொறுத்தமட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளைப் போலவே இருந்தாலும், இன்னும் அதிகம் எடை கூட வேண்டி இருப்பதால் தோல் சுருக்கங்களுடனே காணப்படும். உடம்பின் மேற்பகுதியில் காணப்படும் லாங்கோ என்ற மென்மையான மஞ்சள் நிற முடி சில சமயம் கறுப்பு நிறத்துக்கு மாறும்.

உங்களுடைய வயிறு உருண்டையாக இருக்கும். உடல் எடை 12 முதல் 15 பவுண்டு கூடும். பிறப்பு உறுப்பில் இருந்து வெள்ளை முதல் மஞ்சளான ஒருவித திரவம் வெளிப்படும். அந்த திரவத்தின் குறிப்பிட்ட கலர் பற்றி மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் சில குறிப்பிட்ட நிறங்கள் தொற்றுநோய்கள் இருப்பதன் அறிகுறியாக கூட வெளிப்படலாம். லேசான முதுகு வலி இன்னமும் இருக்கும். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு சூடான தண்ணீர் பாட்டல், அல்லது சூடநீரில் அமிழ்த்தி எடுத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வலி கேட்கும்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

தோலில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தோல் வறண்டும், சில சமயம் அரிக்கவும் செய்யும். லோஷன்களை பயன்படுத்தினால் இது சரியாகி விடும்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:41 pm

24-வது வாரம்

இந்த வாரத்தில் 22-வது வாரமாக குழந்தை வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். 8.4 இஞ்ச் நீளமும், 1.2 பவுண்டுகள் எடையும் இருக்கும். குழந்தையின் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை ரத்த செல்கள் உருவாகும். உங்களுடைய தொடுதல் மற்றும் ஒலிகளுக்கு தகுந்தபடி குழந்தையிடம் மாற்றங்கள் தென்படும். குழந்தை குறுக்கும் நெடுக்குமாக நகருவதை இதுவரை உணர முடியாதவர்கள், இந்த வாரத்தில் குழந்தை குதிப்பதை உணர முடியும்.

தொப்புளுக்கு 1.5 முதல் 2 இஞ்சுக்கு மேலே கருப்பை இருக்கும். இந்த மாதத்தில் வாரத்துக்கு 1 பவுண்டு வீதம் உங்களுடைய எடை அதிகரிக்கும். இந்த வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள் குழந்தைக்கு குளூக்கோஸ் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

இதுவரை குழந்தையின் அசைவுகள், செல்லச் சேட்டைகளை நீங்கள் மட்டுமே அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பீர்கள். அந்த சந்தோஷத்தை உங்களுடைய கணவரும் இந்த வாரத்தில் அனுபவிக்க முடியும். ஆம். உங்கள் கணவரை உங்களுடைய அடிவயிற்றின் அருகே நெருக்கமாக காதை வைக்கச் சொல்லுங்கள். இப்போது அவருடைய முகம் பூவாக மலரும். ஏனெனில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை அவரால் தெளிவாக கேட்க முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:41 pm

25-வது வாரம்


குழந்தை தலை முதல் கால் வரை 8.8 இஞ்ச் நீளம் இருக்கும். எடை 1.5 பவுண்டுகள் வரை இருக்கும். தோல் இதுவரை மென்மையாக இருந்தது அல்லவா? அது இந்த வாரத்தில் இருந்து கடினமாகத் தொடங்கும். இருந்தாலும் தோலில் சுருக்கங்கள் காணப்படும். ஸ்டெத்தாஸ்கோப் மூலமாக குழந்தையின் இதயத் துடிப்பை கேட்க முடியும். அல்லது குழந்தையின் இருப்பிடத்துக்கு தகுந்தவாறு அடிவயிற்றில் காதை வைத்தும் இதயத் துடிப்பை கேட்கலாம்.

கருப்பை மேல்நோக்கி வளரத் தொடங்கம். அடிவயிற்றின் இரண்டு புறங்களிலும் அதனுடைய சைஸ் அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு மூல உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஆசன வாய் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் விரிவடைவதன் காரணமாகவும், மலச்சிக்கல், சீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் ஆகியவைகள் இதற்கு காரணமாகும். ஆகையால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்;.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

மூலப் பிரச்சினையை சமாளிக்க ஆசன வாய் பகுதியில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்ச நேரம் அமர்ந்து இருக்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்து- மாத்திரைகளை சாப்பிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பேதி மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:42 pm

26-வது முதல் 30-வது வாரம் வரை

7-வது மாதத்தின் முடிவில் குழந்தையின் உடம்பில் கொழுப்பு சேரத் தொடங்கும். குழந்தையைப் பொறுத்தவரை 14 இஞ்ச் நீளமும், 2 முதல் 4 பவுண்டு எடையும் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தையின் காது கேட்கும் திறன் முழுமையாக இயங்கத் தொடங்கி விடுவதால், வெளிப்புறத்தில் காணப்படும் ஒலிக்கு தகுந்தாற் போல குழந்தை யானது தாயின் வயிற்றுக்குள் அங்குமிங்குமாக நகரும்.

அம்னியோடிக் திரவம் குறையத் தொடங்கும். ஒருவேளை குறைப் பிரசவமாக அமைந்தால், 7-வது மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:42 pm

வாரம் -26

குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 9.2 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தையின் கேட்கும் அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். ஆகையால் அதற்கு தகுந்தாற்போல குழந்தை அங்குமிங்குமாக நகரும். நுரையீரல்கள் இன்னும் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கும். அது இன்னும் பூரணமாகி இருக்காது. அதி முக்கிய உறுப்பான மூளை தூங்குவது, விழிப்பது போன்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் நீங்கள் வாரத்துக்கு 1 பவுண்டு எடை கூடுவீர்கள். குழந்தை வளருவதாலும், கருப்பை மேல்நோக்கி வளர்ச்சி பெறுவதாலும் உங்களுக்கு விலா எலும்பில் வலி இருக்கும். இது தவிர விலா எலும்பு வலிப்பதற்கு நெஞ்செரிச்சல் மற்றும் ஜீரணக் கோளாறு காரணமாக இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் உள்ள தசைகள் சுருங்குவதால் உங்களுடைய அடி வயிற்றில் ஊசி குத்துவது போல சுருக் சுருக்கென்ற வலி இருக்கும்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

நீங்கள் ஏதாவது வேலை செய்கிறவராக இருக்கிற பட்சத்தில், அந்த இடத்தில் போதிய வசதிகள் கிடைக்குமா? என்று செக் பண்ணுங்கள். வசதிகள் இல்லையென்றால் வேலைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:43 pm

வாரம் 27

இந்த வாரத்தில் குழந்தை 9.6 இஞ்ச் நீளமும், 2 பவுண்டுகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலான எடையும் இருக்கும். கைகள் முழுமையாக இயங்கும் நிலைக்கு வந்து விட்டிருப்பதால், கை விரல்களைக் கொண்டு வந்து வாயில் வைத்துக் கொள்ள முடியும். ஆம்! குழந்தைகள் கருப்பையிலேயே விரல் சூப்ப தொடங்கி விடுகின்றன. விரல் சூப்புவதால் குழந்தையின் கன்னம் மற்றும் தாடை வலுவாகும். இந்த நேரத்தில் குழந்தையால் அழ முடியும்.

அடிவயிற்றில் சுருக் சுருக்கென்ற வலிகள் போன வாரத்தைக் காட்டிலும் இன்னும் அதிகரிக்கும். பெரும்பாலான பெண்கள் 16 முதல் 22 பவுண்டுகள் வரை உடல் எடை அதிகரிப்பார்கள்;.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

பிரசவம் பற்றி மருத்துவர் அல்லது மருத்துவச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பிரசவ வலி வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நல்ல தரமான மருத்துவமனையை தெரிவு செய்து அங்கு முன்னமேயே பதிவு செய்து கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:43 pm

வாரம் 28

இதுவரை குழந்தையின் நீளத்தை கணக்கிடும் போது தலை முதல் பின் பாகம் வரை மட்டுமே சொல்லி வந்துள்ளோம். ஆனால் முதன்முறையாக இந்த வாரத்தில் குழந்தையின் தலை முதல் கால் பாதம் வரை நீளத்தை கணக்கிட முடியும். இந்த வாரத்தில் தலை முதல் பின்பாகம் வரை 10 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை 15.75 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.4 பவுண்டுகளை ஒட்டி இருக்கும். உங்களுடைய குழந்தை கனவு காண ஆரம்பிக்கும். ஆம், இதை குழந்தையின் மூளையில் உண்டாகும் அலைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கண் இமைகள் திறக்கும். நுரையீரலின் பல்வேறு பாகங்களும் நன்றாக வளரும். இதனால் ஒருவேளை குறைப் பிரசவத்தில் குழந்த பிறக்க நேர்ந்தாலும் அதன் உயிருக்கு ஆபத்து இல்லை.

குழந்தையின் உருவம் பெரிதாவதால், கருப்பையானது உங்களுடைய தொப்புளுக்கு மேலே நீண்டு கொண்டு செல்லும். இந்த மாதத்தில் குழந்தை பெரிதாக வளருவதாலும், உறுப்புகள் வலுவடையும் என்பதாலும் உங்களுக்கு பல்வேறு சிரமங்கள் உண்டாகும். காலில் சுளுக்கு, மூட்டுக்களில் மெலிதான வீக்கம், தூங்குவதில் சிரமம், வேக வேகமாக மூச்சு விடுதல், அடி வயிற்றில் வலிகள் போன்ற வேதனை கள் உண்டு. அடிக்கடி சிறுநீர் கழியும். இதற்கு கருப்பையால் சிறுநீர்பை அழுத்தப்படுவதுதான் காரணம். அதாவது உங்களுடைய கருப்பை பிரசவத்துக்கு ஒத்திகை பார்ப்பது போல வலுவாகவும், பின்னர் தளர்வாகவும் மாற்றம் அடையும்.

இந்த தருணத்தில் ஒரு கைதேர்ந்த மருத்துவச்சியின் உதவி அவசியம் தேவைப்படும். அவர்கள் மருத்துவ உதவிகள் எதையும் செய்யா விட்டாலும் இதுமாதிரியான நேரத்தில் உங்களுக்கு பேருதவியாக இருப்பார்கள். மருத்துவச்சியின் உதவியைப் பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வலியை குறைக்கும் மருந்துகள், கொக்கி போட்டு குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய நிலை, சிசேரியன் நிலை போன்ற வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:44 pm

வாரம் 29

குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 10.4 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை மொத்தமாக 16.7 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.7 பவுண்டுகளாக இருக்கும். குழந்தைகள் கண்கள் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நேரத்தில் கருப்பை சுவரின் துணை யுடன் செயற்கை ஒளி, சூரிய ஒளி ஆகியவற்றை குழந்தையால் வேறுபடுத்தி பார்க்க முடியும். குழந்தை நிறையவே உதைக்கும். மேலும் பல்வேறு உடல் இயக்கங்களை வெளிப்படுத்தும்.

கருப்பை தொப்புளில் இருந்து 3.5 இஞ்ச் முதல் 4 இஞ்ச் மேலே காணப்படும். நீங்கள் 19 முதல் 25 பவுண்டு வரை எடை கூடுவீர்கள். இந்த தருணத்தில் பிரசவம் ஏற்பட்டு குழந்தை வெளியே வந்தாலும் புதிய சூழ்நிலையில் அதனால் எந்தவித சிரமமும் இல்லாமல் உயிர் வாழ முடியும். இதனால் பிரசவம் எப்படி இருக்குமோ? குழந்தைக்கு என்ன ஆகுமோ? என்பது போன்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவேளை குறைப் பிரசவம் ஆக வாய்ப்பு இருக்குமானால் மாத விலக்கு போல ரோஸ் அல்லது பிரவுன் நிறத்தில் திரவம் வெளிப்படும். சில நேரம் திரவப் போக்கு அதிகமாக இருக்கும்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

7-வது மாத வாக்கில் உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோ மேடிக்காக அதிகரிக்கும். அது இயல்பானதுதான். ஆனால் கடுமை யான தலைவலி, பார்வை மங்குதல், கைகள், கால்கள், பாதம் ஆகிய இடங்களில் வீக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பது எடை கூடுவது போன்ற பிரச்சினை கள் இருந்தால் உடனடியாக உங்களுடைய மருத்துவரை அணுகுங்கள். இந்த பிரச்சினைகள் அனைத்தும் பிரி-எக்லம்ப்சீயா எனப்படும் பிரசவ கால உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:44 pm

வாரம் 30

இந்த வாரத்தில் உங்களுடைய குழந்தை தலை முதல் பாதம் வரை 17 இஞ்ச் நீளமும், 3 பவுண்டு எடையும் இருக்கும். இப்போது குழந்தையால் தன்னுடைய உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியும். கண் இமைகள், கண் புருவங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். இதுவரை மென்மையாக இருந்த தலைமுடி கெட்டியாக மாற ஆரம்பிக்கும். கைகள் முழுமை பெற்று கை விரல்களில் நகங்கள் கூட வளர ஆரம்பிக்கும்.

தற்போது உங்களுடைய கருப்பை தொப்புளில் இருந்து 4 இஞ்ச் மேலே காணப்படும். இன்னும் 10 வாரங்கள் குழந்தையின் இன்ப உதைகளையும், அது செய்யும் சேட்டைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று நினைக்கும் போது உங்களுக்கு கவலை உண்டாகலாம். அதற்கு ஏற்றாற் போல அடி வயிற்றிலும், இடுப்புப் பகுதியிலும் அசவுரியங்கள் இருக்கும். உங்களுடைய எடை இந்த வாரத்தில் மட்டும் 1 பவுண்டு வரை கூடலாம்;.

டிப்ஸ்

வழக்கமாக பிரசவ வலி தோன்றும் போதுதான் பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும். ஆனால் ஒருவேளை குறைப்பிரசவமாக இருந்தால் உடைய வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நேரங்களில் தொற்று நோய்களால் நீங்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் அப்படியொரு நிலை இருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:45 pm

31 வது முதல் 34 - வது வாரம் வரை

இந்த 4 வாரங்களின் முடிவில் உங்களுடைய குழந்தை 5 பவுண்டு எடை இருக்கலாம். உடல் கூடுதலான கொழுப்புச் சத்துக்களை தாய் மூலமாக பெற்றுக் கொண்டு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். செல்ல உதைகள் அதிகரிக்கும். குழந்தையின் மூளை இதுவரை இல்லாத அளவுக்கு வெகு வேகமான வளர்ச்சியை நோக்கி செல்லும். இப்போது குழந்தையால் வெளியில் நடப்பதை தெளிவாக கேட்க முடியும். குடல் உள்ளிட்ட ஜீரண உறுப்புகள் நன்றாக வளர்ந்து விட்ட போதிலும் நுரையீரல்கள் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக