புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_m10ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலியன்வாலாபாக் - ஒரு பின்னோக்கிய பயணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:44 am

திலகர், அன்னிபெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான ஹோம்ரூல் இயக்கம் மக்களிடையே எழுச்சிமிகு இயக்கமாக வேகம் பெற்றது. மறுபுறம் காந்திஜி தலைமையிலான போராட்டங்களும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட உந்துதலை எழுச்சியை ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். ரௌலட் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் மைதானத்தில் திரண்டது பெருங்கூட்டம். மார்ச் 30 அன்று பெரும் ஹார்த்தால் நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன.

ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் ஹர்த்தால் நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர்.

மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன.

ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டம் தான் ஏப்ரல் 13 ஜலியன்வாலாபாக் படுகொலை. ஜலியன்வாலாபக்கை நினைவுகூறும் வகையில் 1919 ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 1919 எப்ரல்13 வரை நடைபெற்ற சமபவங்களை ஒரு பின்னோக்கிய பயணமாக அந்தந்த தேதிவாரியாக தொகுக்கப்படுகிறது.

ரத்தன் தேவி

13 ஏப்ரல் 1919 மாலை, துப்பாக்கிச்சூடு நடந்து முடிந்த தறுவாயில், ரத்தன் தேவியெனப் பெயருடைய ஒரு பெண்மணி தன் கணவனைத் தேடிக் கொண்டு ஜாலியான்வாலா பாக்கை அடைந்தாள். அவள் அங்கு காணப் பெற்றதென்ன, பின் அவளுக்கு நேர்ந்ததென்ன எனும் விவரம் பின்வருமாறு:

நான் ஜாலியான்வாலா பாக் அருகாமையிலுள்ள என் வீட்டிலிருந்தேன். துப்பாக்கிகள் சுடும் சப்தம் கேட்டது. அஞ்சிப் பதறி எழுந்தேன். ஏனெனில் என் கணவர் அங்குதான் போயிருந்தார். எல்லை கடந்த பயம் கவ்வ, கதறியழுது கொண்டே, இன்னும் இரு பெண்களுடன் அங்கே போய்ச் சேர்ந்தேன். அவ்விடம் பிணங்கள் குவியல் குவியலாயிருக்கக் கண்டேன். ஒரு குவியலைத் தாண்டியவுடன் என் கணவரின் உடல் கிட்டியது. நான் ரத்தக்களறியில் பிணங்கள் நடுவே முன்னேறிச் செல்ல வேண்டியிருந்தது.

சற்றுப் பின் அங்கு லாலா ஸ¤ந்தர் தாஸின் பிள்ளைகள் இருவரும் வந்தனர். என் கணவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒரு கட்டில் கொண்டு வரும்படி அவர்களை வேண்டினேன். இரு பையன்களும் போய்விட்டனர். அப்போது வேளை மாலை எட்டுமணியடிக்க இருந்தது. ஊரடங்கு சட்டத்துக்கு அஞ்சி ஓர் ஆள்கூட வீட்டுக்கு வெளியே தலைகாட்டவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தேன், எதிர்நோக்கிக் காத்தவாறு, அழுதவாறு.

ஏறத்தாழ எட்டரைமணி. ஒரு சர்தார்ஜி அங்கு வந்து சேர்ந்தார். இன்னும் சில மனிதர்களும் வந்தனர். வந்து பிணக்குவியல்களிடையே ஏதோ தேடியவாறு சென்றனர். அந்த சர்தார்ஜியிடம் நான் வேண்டிக் கொண்டேன் - என் கணவரின் உடலை அப்புறப்படுத்தி ஏதேனும் உலர்ந்த இடத்தில் வைக்க உதவக் கேட்டேன். ஏனெனில் அவர் உடல் கிடந்த இடத்தில் ஒரே ரத்தப் பெருக்காயிருந்தது. அவர் சவத்தின் தலையின் கீழாகக் கை கொடுக்க, நான் கால்மாட்டிலிருந்து தூக்க, மரக்கட்டைகளின் மேல் வைத்தோம்.

இரவு பத்துமணி வரை நான் லால சுந்தர் தாஸின் மகன்களுக்கு காத்திருந்தேன். ஆனால் எவனும் வரவில்லை. நான் எழுந்து கட்ரா ஆப்லோவாவின் திசையில் போகத் தொடங்கினேன். டாக்குர் துவாராவில் வசிக்கும் மாணவர்களிடம் சென்று உதவி கேட்கலாமென்று எண்ணம். சில அடிகள் தான் சென்றிருப்பேன். ஒரு வீட்டில் ஜன்னலருகே அமர்ந்திருந்த ஒரு மனிதர் என்னைப் பார்த்து, இத்தனை இரவில் எங்கே போகிறாயென்று கேட்டார். என் கணவரின் உடலைத் தூக்கிச் செல்ல யாரிடமாவது உதவி கேட்கலாமே என்று செல்வதாகச் சொன்னேன்.அதற்கு அவர், 'மணி எட்டு ஆகிவிட்ட பின் உதவிக்கு யாரும் வர மாட்டார்களே' என்றார். நான் கட்ராவை நோக்கி மேலும் ஒரு சில அடிகள் நகர்ந்தேன். அங்கு ஒரு ஓரத்தில் ஹ¤க்காப்புகை பிடித்தவாறு அமர்ந்திருந்த முதியவர் தென்பட்டார். அவரருகே இரண்டு மூன்று ஆட்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

எனக்கு நேர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி அவரிடமும் உதவி கேட்டுக் கை கூப்பி வேண்டினேன். அவரும் அதே பதிலைத்தான் சொன்னார் - மணி பத்தாகிவிட்டது. இங்கு யாரும் குண்டுக்கு இரையாகத் தயாராக இல்லை!


நான் திரும்பிச் சென்று என் கணவரின் சவத்தருகே உட்கார்ந்தேன். அதிருஷ்டவசமாக என் கைக்குக் கிட்டிய ஒரு மூங்கில் பாளச்சைக் கொண்டு இரவு முழுதும் நாய்களை விரட்டியபடி அங்கேயே அமர்ந்திருந்தேன். அவ்விடத்தில் மூன்று பேர் வலி தாங்காமல் அலறி அரற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகேயே ஓர் எருமையும் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. இன்னும் அங்கு பன்னிரண்டு வயது பையனொருவன், வலியின் வேதனையில் 'ஐயோ என்னை விட்டுப் போய்விடாதீர்கள்' என்று அரற்றினான். 'என் புருஷன் உடலைவிட்டு நான் எங்கேடா போகப் போகிறேன்' என்று நான் அவனிடம் குளிர்கிறதா என்று கேட்டேன். என் துப்பட்டா. மார்புத் துணி கொண்டு அவனுக்குப் போர்த்திவிட முடிந்தது. சிறுவன் தண்ணீர் கேட்டான். ஆனால் அங்கு ஏது தண்ணீர்?

மணிக்கொரு முறை பெரிய கடிகாரத்தின் 'டண் டண்' ஒலி கேட்கும். இரவு மணி இரண்டிருக்கும். குண்டுக் காயம்பட்ட ஓர் ஆள் - அவனுடைய ஒரு கால் பிணங்களின் குவியலில் மாட்டிக் கொண்டிருந்தது. அதை விடுவித்துத் தூக்கிவிடும்படி அவன் என்னைக் கெஞ்சி வேண்டினான். ஸ¤ல்தான் எனப்படும் கிராமத்திலிருந்து வந்த ஜாட் வகுப்பு ஆசாமியாம் அவன். நான் எழுந்தேன். இரத்தம் தோய்ந்த அவன் உடையைப் பற்றியபடி அவன் காலை மேலே இழுத்துத் தூக்கிவிட்டேன். அதற்குப் பின் காலை ஐந்தரை மணி வரை அங்கு ஒருவரும் வந்தபாடில்லை. ஆறு மணி சுமாருக்கு லாலா சுந்தர் தாஸ் தன் பையன்களுடன் வந்தார். கூடவே எங்கள் தெருவைச் சேர்ந்த சிலர் ஒரு கட்டில் கொண்டு வந்தார்கள். என் புருஷனின் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். என் புருஷனின் உடலை வீட்டுக்குக் கொண்டு சேர்த்தேன். திடலில் இன்னும் பலர் தத்தம் உற்றார் உறவினர்களைத் தேடிக் கொண்டிருந்தனர். இரவு முழுதும் நான் அங்கு கழித்திருக்கிறேன். என்னுள் எழுந்த உணர்ச்சிகளை விவரிப்பது இயலாது. குவியக் குவிய பிணஙகள் என்னைச் சுற்றிலும் - அவற்றிடையே ஒரு சில அறியாப் பாலகர்கள். இரவு முழுதும் அந்தத் 'தண்ணியில்லாக் காட்டில்' நாய்கள் குரைப்பதும் கழுதைகள் கத்துவதும் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை.... இதைவிட வேறென்ன சொல்வது - அந்த இரவை நான் எப்படிக் கழித்தேன் என்பது எனக்குத் தெரியும். அந்த பகவானுக்குத் தெரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:45 am

1919 ஏப்ரல் 5

ஹர்த்தால் மீண்டும் ஏப்ரல் 6ந் தேதி நடக்கவிருந்தது. அது நடக்கவிடக்கூடாது என்பதில் முழுதும் முனைந்திருந்தார் மைக்கேல் ஓ ட்வையர். ஒரு கூட்டத்திலும் பேசக் கூடாதென்று டாக்டர் கிச்லூவுக்குத் தடை விதித்தார். பஞ்சாபில் நுழையக் கூடாதென்று காந்திஜிக்குத் தடை விதித்தார். ஏப்ரல் 5 அன்று அமிருத்ஸர் நகரின் டெபுடி கமிஷனர் ராய் பகதூர், கான் பகதூர் என்று அரசாங்கப் பட்ச வாதிகளை வைத்து ஓர் அவை கூட்டினார். ஏப்ரல் 6 ஹர்த்தால் நடக்காது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆங்கிலேயே டெபுடி கமிஷனர் வந்திருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர்களின் ஒப்புதலும் கிட்டி விடவே நகர முழுதும் நாளை ஹர்த்தால் நடக்காதென்று செய்தி பரவிவிட்டது.



இப்படியொரு செய்தியைக் கேட்ட காங்கிரஸ் தொண்டர்களான இளைஞர்கள் பதறிப்போயினர். உடனே அவர்கள் கூடி ஆலோசித்து, வீட்டுக்கு வீடு சென்று மக்களிடம் ஹர்த்தால் ரத்து செய்யப்படவில்லையென்றும் கட்டாயம் நடக்கவிருக்கிறதென்றும் சொல்ல முயன்றனர். அன்று ஓரிடத்தில் கிரிக்கெட் மாட்ச் நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான பேர் கூடியிருந்தனர். அந்த இடத்துக்கு டாக்டர் கிச்லூவும் ஸத்யபாலும் வந்து சேர்ந்து பார்வை யாளர்களூடே சென்று சென்று அறிவித்து மறுநாள் ஹர்த்தால் உண்டு. நிச்சயம் நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியச் செய்தனர். ஆக நடந்ததும் அதுதான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:46 am

1919 ஏப்ரல் 6

ஹர்த்தால் வெகு 'ஜோராக' நடந்தது - எத்தனை ஜோராக என்றால், சின்னச் சின்ன கடைக்காரர்களும் பால் -தயிர் விற்பவர்களும் கூடைக்காரர்களுங்கூட 'கடையடைப்பு' செய்து ஹர்த்தாலைப் பரிபூரண அமைதி மிக்க முறையில் செய்தனர்.

அன்றே மாலை ஜாலியான்வாலா பாக் வெளியில் ஐம்பதாயிரம் பேர் சேர ஒரு பொதுக்கூட்டம் கூடிற்று. சொற்பொழிவுகள் கவிதைகள் எல்லாம் தவிர மூன்று விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவது, ரெளலட் சட்டத்தை நீக்குமாறு பிரிட்டிஷ் பேரரசருக்கு மனு. இரண்டாவது, டாக்டர் கிச்லூக்கும் டாக்டர் ஸத்யபாலுக்கும் விதித்த வாய்ப்பூட்டை அகற்றுமாறு பஞ்சாப் லெ·ப்டினெண்ட் கவர்னருக்கு கோரிக்கை. மூன்றாவதாக சத்தியாக்கிரக இயக்கத்தை மிக மிக உயர்த்திப் புகழ்ந்ததோடு ஒரு சத்தியாக்கிரகக் குழுமம் நிறுவப்பட வேண்டும் என்று யோசனை முன் வைக்கப்பட்டது.

இறுதியில் பாரிஸ்டர் பதர்-உல்-இஸ்லாம் அலிகான் அவர்கள் தன் தலைமையுரையில் சொன்னார் :-

மகாத்மா காந்தி நமக்கு சொல்லிக் கொடுத்தபடி நாம் முழு தைரியத்துடன் பொறுமையுடனும் எவ்விதமான துக்கத்தையும் துன்பத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். பொய் நாசமுறும், சத்தியம் வெற்றியுறும். இதோ நீங்கள் அமைதியைக் காத்தால், தைரியத்தைக் கைவிடாதிருந்தால், பொறுத்துக் கொள்ளும் சக்தியைப் பேணி வைத்திருந்தால் அது எல்லோருக்கும் ஆழ்ந்த நற்பயனைத் தரும். இல்லை, எங்காவது ஒரு சிறு சண்டை பூசல்கூட ஏற்பட்டு விட்டால் யாரோ இரண்டே பேர் என்றாலுங்கூட அதன் தீப்பயன், இந்த அவைக் கூட்டமே பலனற்றதாகிவிடும். நான் வேண்டிக் கொள்கிறேன். அமைதியாகக் கலைந்து செல்வோம். எல்லாரும்; ஊர்வலம் கீர்வலம் என்று ஓர் அணிவகுப்பும் செய்ய வேண்டாம்; ஒரு ஆர்ப்பாட்டமும் வேண்டாம்.

ஏப்ரல் ஆறாந் தேதி நாடெங்குமான ஹர்த்தாலுக்குப் பின் ஏழாந் தேதி தன் சத்தியாகிரகத்தைத் துவக்கப் போவதாக காந்திஜி சொல்லியிருக்கிறார். ஏப்ரல் 6 ஹர்த்தால் அமைதியுடனும் வெற்றி பெறுகிறது. ஆனால் சத்தியாக்கிரகம் தொடங்கிய மூன்றாம் நாளே அமிருதஸரசில் நிலைமை மோசமாகத் தொடங்கிற்று. இதில் முக்கியமான உட்கை ஆங்கிலேய லெ·ப்டினெண்ட் கவர்னருடையதாகும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:48 am

1919 ஏப்ரல் 7

ஏப்ரல் 7 அன்று காந்திஜி 'சத்தியாக்கிரகி' என்ற பெயருள்ள ஒரு பத்திரிகை ஏடு வெளிக்கொணர்ந்தார். இந்த ஏட்டுக்குச் சர்க்கார் அனுமதி வாங்கப்பட்டிருக்கவில்லை. பத்திரிகை பதிவு செய்யப்படவும் இல்லை. இந்திய அச்சுப் பத்திரிகைச் சட்டத்தை மீறியதாகும் இது. எதிர்காலச் சத்தியாக்கிரகிகளும் பொது மக்களும் படிக்கத்தக்கவையென்று நான்கு புத்தகங்களை இப்பத்திரிகையில் காந்திஜி பரிந்துரைத்திருந்தார். Civil Disobedience எனப்பட்ட சட்டமீறல் பற்றி தீவிரமாக எழுதியிருந்த அப்புத்தகங்கள் மீது சர்க்கார் தடை விதித்திருந்தார்கள். புத்தகங்களாவன : ஹிந்த் ஸ்வராஜ்ய (இந்தியச் சுய ஆட்சி), ஹர்வோதய அதவா விச்வவ்யாப ப்ரபாத் (சர்வோதயம் அதாவது உலகு தழுவிய விடிவு), ஸத்யாக்ரஹ கீ கஹானீ (சத்தியாக்கிரகத்தின் கதை) மற்றும் முஸ்த·பா கமால் பாஷா கீ ஜீவனீததா யோகதான் (முஸ்தபா கமால் பாஷா வாழ்க்கையும் சாதனைகளும்)

இந்நூல்கள் அவர் தேர்ந்தெடுத்ததன் உட்கருத்து என்னவெனில், சத்தியாக்கிரகிகள் தொண்டில் ஈடுபடும் போது நேரும் இடர்களுக்கு எப்படி விடை காண்பது என்பது பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல்கள் பயன்படும். மேலும் சத்தியாக்கிரகக் கொள்கைகளுக்கு உகந்தவை. எவ்வித வன்முறைக்கும் ஏற்போ ஊக்கமோ அளிக்காதவை.

அன்றைய தினம் பஞ்சாப் லெ·ப்டினெண்ட் கவர்னர் லாகூர் சட்டசபை கெளன்ஸிலில் கலந்து கொண்டான். பத்திரிகைககளையும் அரசியலில் ஈடுபட்டிருக்கும் நபர்களையும் அச்சுறுத்தும் ஓர் எச்சரிக்கை விடுத்தான். அவர்கள் எழுதியும் பேசியும் வரும் விஷயங்களக்கு மன்னிப்பு கிட்டப் போவதில்லை என்பதே எச்சரிக்கை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:50 am

1919 ஏப்ரல் 8

அங்கே ஏப்ரல் 8 அன் அமிருத்ஸர் டெபுடி கமிஷனர் லாகூர் கமிஷனருக்கு அமிருத்ஸரில் நிலவும் நிலைமை பற்றி ஒரு நீண்ட கடிதம் எழுதினான். கடிதத்தின் ஒரு பிரதியை லெ·ப்டினெண்ட் கவர்னர் மைக்கேல் ஒ ட்வையருக்கு அனுப்பினான். இக்கடிதத்தின் ஒரு பகுதி :

நாம் நம் அதிகாரத்தை வலுவாக நிலை நாட்ட, இன்றன்றேல் நாளை, யாதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் ஹர்த்தால்களுக்குத் தடை விதிக்க முடியும். அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று தோன்றும் ஊர்வலங்களை மறிக்க முடியும். ஆனால் அதற்கெல்லாம் ராணுவ பலத்தைக் கொண்டுவருவது மிக அவசியமாகிறது. அமிருங்தஸரில் யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்று ஜனங்களுக்கு நாம் பளிச்சென்று காட்ட வேண்டும். அவசியம் நேரும் போது ஆறு மணி நோட்டீசில் ராணுவப் படை நமக்கு வந்து சேருமாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்... நம் இந்த ராவ்பகதூர்களும், கான் பகதூர்களும் வெறும் உதவாகரைகள் என நிரூபணமாகிவிட்டது - அவர்கள் உயிரிருந்தும் இல்லாத வெற்றுப் பிணங்களே....என்று தற்போதைய பிரயத்தனம் இந்தப் புதிய தலைவர்மாருடன் தொடர்பு ஏற்படுத்தி வைத்துக் கொள்வதே. அந்த டாக்டர் கிச்லூவை நம் பக்கம் இழுத்துக் கொண்டு விடலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். ஆனல் அந்த ஆளோ புரட்சியிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:50 am

1919 ஏப்ரல் 9

அமிருத்ஸரில் அமைதி நிலவி வந்தது என்றால் காரணம், இந்து-முஸ்லீம் ஒற்றுமையும் மிகப் பெரிய அளவில் இருந்தது. ஒரு ஒற்றுமைப்பட்ட தேசம் பற்றிய உணர்வு மக்கள் யாவரையும் பிணைத்து நின்றது. இவ்வுணர்ச்சியின் அப்பட்டமான உதாரணம் மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 6 அன்று காணக் கிடைத்து.

ஏப்ரல் 9ம் நாள் ஸ்ரீராமநவமிப் பண்டிகை, அமித்ஸர் மக்கள் இதை ''நாட்டின் ஒற்றுமை நாள்'' என்று கொண்டாட எண்ணியிருந்தனர். பிற்பகலில் ஒரு ஊர்வலம் புறப்பட்டது. முஸல்மான்களும் பங்கு கொண்டனர். இந்து தெய்வங்களுக்கு இட்ட ஐயகோஷங்களுடன் 'மகாத்மா காந்திக்கு ஜே!'' இந்து முஸ்லீமுக்கு ஜே! என்ற கோஷங்களும் விண்ணைப் பிளந்தன.

இந்த இயக்கத்தில் மக்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதைக் காட்டும் ஒரு வினோத நிகழ்ச்சி. அமிருத்ஸரின் டெபுடி கமிஷனர், ஆங்கிலேயன், அலகாபாத் வங்கிக் கட்டட வராந்தாவில் ராமநவமி ஊர்வலத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். அப்போது ஊர்வலத்தில் போன பாண்டு வாத்ய கோஷ்டிகள் அவனை அடையாளம் கண்டு கொண்டதும் கொண்டதும் உடனே அங்கேயே சற்று நின்று god save the king என்ற பிரிட்டிஷ் தேசிய கீதத்தை இசைத்து சென்றன ! இதினின்று என்ன தெரிகிறது? இந்தியர்களுக்கு ஆங்கிலேயர் மீது துவஷே பாவம் ஒன்றும் கிடையாது என்பதால்தானே ஆங்கிலேயனுக்கு அவன் நாட்டுப் பண்ணை மரியாதையுடன் வாசித்துக் காட்டினார்கள்?

ஊர்வலம் அமைதியுடனேயே முடிவடைந்தது. பல தலைவர்களுக்குப் பேச்சுத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஓரிடத்திலும் ஒரு அசாம்பாவிதமும் நேரவில்லை. ஐரோப்பியர்கள் அநேகர் அமிருத்ஸர் தெருக்களிலே பகிரங்கமாகவே நடமாடிக் கொண்டிருந்தனர். யாரும் ஒரு தொந்தரவும் கொடுக்கவில்லை.

ராமநவமி நிகழ்ச்சிகள் அமைதியுடன் நிறைவேறின தாகலெ·ப்டினெண்ட் கவர்னருக்குச் செய்தி போயிற்று. அப்படியிருந்தும் அவன் டாக்டர் கிச்லூவையும் டாக்டர் ஸத்யபாலையும் கைது செய்ய ஆணை பிறப்பித்தான். அவர்களை (இமாசலப் பிரதேசத்து மலைவாசஸ்தலமான) தர்மசாலாவில் சிறை வைக்க முடிவு செய்தான். இப்படி ஒரு கொதித்தெழச் செய்யும் நடவடிக்கை எடுத்தால் அமிருத்ஸர் மக்கள் தடுமாறி ஏதேனும் செய்வார்கள், அவர்களை ஏதாவது செய்யத் தனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது அவன் உள்ளெண்ணம். ஏப்ரல் 13க்குள் அமிருத்ஸரில் ராணுவப் படைகளை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தான் - ஒரு கடும் பயங்கரம் நகரின் நடுவ எழப்போகிற தினம்!

இடத்துக்கு இடம் போலீஸ் பந்தோபஸ்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:52 am

1919 ஏப்ரல் 10

ஏப்ரல் 10ம் நாளே டாக்டர் கிச்லூவும் டாக்டர் ஸத்ய பாலும் கமிஷனர் இல்லத்துக்கு வரச் சொல்லப்பட்டனர். அங்கிருந்தே காரில் ஏற்றி தர்மசாலாவை நோக்கி அனுப்பப்பட்டனர்.

மைக்கேல் ஓ ட்வையர் நிச்சயமாக இருந்த இன்னொரு விஷயம் - காந்திஜிக்கு அமிருத்ஸரிலும் தில்லியிலும் நுழைய அனுமதி தரப்படமாட்டா தென்பது. இன்னொரு உத்தரவின் மூலம் காந்திஜி பம்பாயை விட்டு வெளிச் செல்லக்கூடாதென்று தடையறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டளைகளெல்லாம் இருந்தும் காந்திஜி பஞ்சாபை நோக்கிப் பயணமானார். வழியில் தடுக்கப்பட்டபோது அவர் அக்கட்டளைகளை ஏற்க மறுத்தார். அவர் சொன்னது: "பஞ்சாபில் கொந்தளிப்பைக் கூட்டுவதற்காக அல்ல, தணிப்பதற்காக வேண்டி எனக்கு வந்துள்ள வற்புறுத்தலான அழைப்பின் பேரில் அங்கே போக வேண்டியிருக்கிறது. ஆகவே இந்த உத்தரவுக்குப் பணிய முடியாததற்கு வருந்துகிறேன்''.

பல்வல் ரயில் நிலையத்தில் காந்திஜி இறக்கப்பட்டார். பம்பாய் நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்த வண்டியில் ஏற்றப்படும் தறுவாயில் நாட்டு மக்களுக்கு அவர் ஓர் 'அப்பீல்' விட்டார் - நான் கைது செய்யப்பட்டது பற்றி வெகுளாதிருங்கள். அசத்தியமும் வன்முறையும் கறைப்படுத்தும் யாதொரு செயலிலும் இறங்காதீர்கள்.

காந்திஜியின் கைதுச் செய்தியால் மக்களிடையே கலவரம் ஏற்படும், எங்கேனும் ஏதேனும் வன்முறை நடக்கும் என்ற சாக்கில் அதிகாரிகள் ஏற்கெனவே தங்கள் எதிர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வைத்திருந்தனர். அமிருத்ஸர் கோட்டையில் பீரங்கிகளைச் சரியாக முகந்திருப்பி வைக்க ஆணை பிறந்தது - ''கூட்டம் கோட்டைப் பக்கம் திரும்பினாலும் சரி, ரயில் நிலையம் நோக்கித் திரும்பினாலும் சரி, தயங்காமல் சுடுக!'' - டாக்டர் கிச்லூவைம் ஸத்ய பாலும் கைதான செய்தி பரவியது தான் தாமதம். நகரெங்கும் ஹர்த்தால். கடைகளையெல்லாம் அடைத்துவிட்டு அட்சிஸன் பார்க்கில் கூடும்படி மக்களை காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக் கொண்டார்கள். டெபுடி கமிஷனர் இல்லம் சென்று தலைவர்கள் இருவரையும் விடுதலை செய்யக் கோரலாம் என்பது அவர்கள் எண்ணம்.

பதினொன்றரை மணி சுமாருக்குக் கடைகள் மூடப்பட்டன. மக்களும் ஹால்-பஜாரில் ஒன்று கூடி ஹால் - தர்வாஜா வழியாக ஹால் பாலம் வரை வந்தடைந்தனர். அங்கு மறுமுனையில் குதிரையேறிய போலீஸின் ஒரு பிரிவு தயாராக நின்று கொண்டிருந்தது.

இதுவரை ஓரிடத்திலும் ஒரு தகராறும் நிகழவே இல்லை. கூட்டம் டவுன்ஹாலுக்கு அருகே போகையில் சில ஆங்கிலேயர்கள் எதிர்ப்பட்ட போதும் ஒருவரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அத்தனை அமைதியான கூடத்தைப் பாலத்தின் மறுபுறமிருந்த குதிரைப் போலீஸ் குறுக்கே நின்று தடுத்தபோது ஒரு சிலர் மீறி முன்னேற முயன்றனர். கூட்டத்தில் பிற சிலர் இவர்களை தடுக்கவும் முயன்றனர். இவ்வளவில், டெபுடி கமிஷனர் இர்விங்கும் காப்டன் மேஸியும் சமயத்துக்கு அங்கு வந்து சேர்ந்தனர். இன்னொரு போலீஸ் பிரிவும் வந்து சேர்ந்தது. அப்போதே இரு ராணுவத்து ஆட்கள் குதிரை விட்டிறங்கினர். ஒருபுறமாக எதிரித் தாக்குதல் தோரணையில் நின்று கூட்டத்தை நோக்கி குண்டு செலுத்தினர். ஒரு சிலர் அங்கேயே திரண்டு குவிய, சிலர் காயமுற்றனர். கூட்டம் இருந்த இடத்திலேயே உறைந்து நின்றது.

ஒரு மணியிருக்கும், டெபுடி போலீஸ் சூப்பரின்டெண்ட் ப்லோமர் அவ்விடம் வந்து சேர்ந்தார். கூடவே போலீஸ் சிப்பாய் 24 பேர். குதிரை யறியவர்கள் 7 பேர் வந்தனர். கூட்டத்தை நோக்கி போலீஸ் நகரத் தொடங்கிற்று. அவர்களின் துப்பாக்கிகளின் 'குதிரை' விசைகள் தயார் நிலையில் கொக்கி போடப்பட்டிருந்தன. கூட்டம் சற்று பின்வாங்கத் தொடங்கிற்று. அந்தவேளை பார்த்து காலாட்படைப் பிரிவுகளும் அங்கு வந்தடைந்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:52 am

மக்கள் திரள் அதற்குள் உணச்சிகள் கொதிக்கும் நிலையை எட்டியிருந்தது. தங்கள் தலைவர்களை விடுவிக்க முடியாது போவது ஒரு புறம், அதற்கு மேல் கூட்டாளிகள் அடிபட்டுச் சாவுக்கிரையாகிக் கொண்டிருப்பது இன்னொரு புறம். அவர்கள் நெஞ்சினிலே தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த நிலையிலும் அவர்கள் ஒன்றும் பேசாமல் அடிபட்ட தங்கள் கூட்டாளிகளைச் சுமந்தவாறு ஹால்பஜார்ப் பக்கம் நகர்ந்தனர். அப்போது கிட்டியது, நகரெங்கம் வழியிலே தடுப்புக்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற சேதி. இதனால் இன்னும் கொதிப்பேறிய கூட்டம் கேரேஜ் பாலத்தின் பக்கம் திரும்பியது. இப்போது மக்கள் கம்பு கழிகளுடன் காணப்பட்டனர்.

பாலத்தின் ஒருபுறம் கொதித்தெழுந்து நிற்கும் கூட்டம். அக்கரைமுனையில் டெபுடி கமிஷனர் இர்விங், ஆயுதந் தாங்கிய படையாட்களுடன், நெருக்கடி நேரம் என்று உணர்ந்த இரு வக்கீல்கள் - ஸலாரியாவும் மக்பூல் மஹ்மூதும் மக்கள் கூட்டம் அதிகாரிகள் இரு பக்கத்தாரையுமே அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் கூட்டத்திலிருந்த சிலர் படையினர் மீது கற்களும் கட்டைகளும் எறிந்தனர். அவ்வளவுதான் - உடனே படையினர் குண்டுகள் சுட, இருபது பேர் அடிபட்டிருந்தனர். காயமுற்றவர் கணக்கு இதைவிட மிக மிக அதிகம். குண்டுகள் செலுத்துமுன் ஒரு எச்சரிக்கையும் தரப்படவில்லை. அவ்விரு வக்கீல்கள் உயிர் பிழைத்தது மயிரிழையில். மக்பூல் மஹ்மூது ஓட்டமும் நடையுமாகச் சிவில் ஆஸ்பத்திரியை அடைந்து காய முற்றோரை மருத்துவமனை சேர்க்க ஸ்டிரெச்சர்களுக்கான ஏற்பாடு செய்யப் போனார். ஆனால் ஆங்கிலேய அதிகாரி ப்லோமர், ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு உதவியும் தரக்கூடாதென்று ஆணையிட்டுவிட்டான்.

மக்களின் சினம் வெறி நிலையை எட்டிற்று. சிலர் தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தந்தி அதிகாரியை அவர் இல்லத்திலிருந்து வெளியே இழுத்து வந்தனர். ஆனால் ரயில் நிலையத்திலிருந்து ஒரு படைப்பிரிவு தந்தி அலுவலகத்தைக் காக்க அனுப்பப்பட்டு, தந்தி அதிகாரி காப்பாற்றப்பட்டார்.

அதே நேரத்தில் சில மக்கள் ரயில்வே சரக்குக் கிடங்கை முற்றுகையிட்டனர். ஸ்டேஷன் சூப்பரின்டென்டென்ட் எப்படியோ தப்பிப் பிழைத்தார். ஆனால் ஒரு கார்டு கூட்டத்தின் கையிலகப்பட்டுச் செத்துப் போனார். இன்னும் மூன்று பேர் நேஷனல் வங்கியில் மரணமடைந்தனர். கூட்டம் வங்கிக் கட்டடத்துக்குத் தீ வைத்தது. துணிகள் கட்டுகட்டாக வைத்திருந்த வங்கிக் கிடங்கு சூறையாடப்பட்டது. அலயன்ஸ் பாங்க், என்பதன் ஆங்கிலேய மானேஜர் கொல்லப்பட்டார். வங்கியின் பணக்காப்பகம் கொள்ளையடிக்கப்பட்டது. சார்ட்டர்டு வங்கி மீதும் தாக்குதல் நடந்தது. ஆனால் மானேஜரும் அவர் உதவியாளரும் இந்திய ஊழியர்களால் காப்பாற்றப்பட்டு பிழைத்தனர். அதே போல ஷேர்வுட் என்ற ஓர் ஆங்கிலேய பெண்மணி தாக்குதலுக்கு ஆளானார். இன்னும் சில கட்டடங்கள் தீக்கொளுத்தப்பட்டன. கொள்ளை நடந்தது. சில உயிர்களும் போயின.

இப்போது எழும் கேள்வி - என்ன, இப்படி மக்கள் மேல் துப்பாக்கியால் சுட்டது சரிதானா?

துப்பாக்கிச் சூடு நிகழும் முன்னால் கூட்டத்தில் ஆங்கிலேயர் மீது யாதொரு விரோத உணர்ச்சியும் இல்லை என்று அமிருத்ஸர் டெபுடி கமிஷனர் இர்விங்கே பின்னொரு சமயம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கூட்டத்தின் மீது சுட்டது தப்புதான் என்று தாகே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மக்கள் ஆங்கிலேயரைக் தாக்க முற்பட்டது திடீரென, எதிர்பார்க்காமல், நடந்ததுதான். அந்த வெறி அவர்களுக்கு ஏற்பட்டது துப்பாக்கிச் சூடு தொடங்கிய பின்புதான். இதைத் தவிர்த்து, குதிரைப் போலீஸையும் படையையும் கொண்டேகூட்டத்தைத் தடுத்துச் சமாளித்திருக்க முடியும்.

ஆயிற்று, தட தடவென்ற சேனைப்படைகள் அமிருத்ஸரில் வந்து சேரத் தொடங்கின. நடந்தவற்றின் செய்தித் தொகுப்பு லெ·ப்டினெண்ட் கவர்னர் கைக்கு ஏப்ரல் 10ந் தேதி கிட்டியது. உடனே அமிருத்ஸருக்கு செல்லும்படி கமினர் கிக்சினுக்கு உத்தரவாயிற்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:53 am

1919 ஏப்ரல் 11

ஏப்ரல் 11ந் தேதி அமிருத்ஸரில் மார்ஷல் லா விதிக்கப்பட்டது. அதன்படி, எந்த ஒரு பிணத்துடனும் பாடையுடனும் நாலுக்கு மேற்பட்ட மக்கள் போகக் கூடாது. (இவ்வெண்ணிக்கை பின்னர் எட்டாக உயர்த்தப்பட்டது). எங்கு நாலுக்கு மேற்பட்ட புள்ளிகள் நின்றாலும் அவர்கள் சுடப்படலாம். இறந்தவர்களின் பாடைகளை பதினைந்து பதினைந்து நிமிட இடைவெளி விட்டு விட்டு அதிகபட்சம் எட்டு பேர் ஈமக்கிரியைக்குக் கொண்டு செல்லலாம்....

மக்களிடையே கொந்தளிப்பு. இறந்தவர்களின் பாடைகளை உற்றார் உறவினர் புடைசூழ ஈமத்துக்கு எடுத்துச் செல்ல அவர்கள் விரும்பினர். ஆனால் ஆட்சிக்காரர்கள் முகதோரணையோ வேறு. ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டு விட்டார்களே அதற்குப் பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம் என வாங்க வேண்டும். எங்கெங்கே அதிகாரம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் சேனை பலத்தை உபயோகிக்க வேண்டும். அமிருத்ஸர் மீது விமானத்திலிருந்து வெடிகுண்டு போடக்கூடத் தயக்கமிருந்திருக்காது என்ற அளவுக்கு அவர்கள் ஆத்திரமாக இருந்தனர்.

மிஸ்டர் வாத்தன் என்றொரு கல்லூரி முதல்வர் கட்டுப்பாடுடனும் விவேகத்துடனும் அரசு செயல்பட வேண்டுமென்றார். அதற்கு டெபுடி கமிஷனர் இரைந்து சொன்ன பதில் - ''மூடு வாயை ! நம்மவர்களின் பாதியெரிந்த பிணங்களை நான் பார்த்திருக்கிறேன் தெரியுமா? நாம் பழையபடி இல்லை. இனி நடந்து கொள்வதே வேறே!''

இருந்தும் பின்னர் அவன் சற்று காரம் குறைந்து தான் நடந்து கொண்டான். அப்போது கூட இப்படியொரு ஆணை. ஈமக்கிரியைகள் எல்லாமே பிற்பகல் 2 மணிக்குள் முடிக்கப்பட்டு விடவேண்டும் என்றும், இரண்டு மணிக்கு பியூகில் ஊதும் ஒலிகேட்கும், பதினைந்து நிமிடத்தில் கூட்டம் கலையவில்லையென்றால் சுடப்படுவார்கள் என்றும் ஆணை.

ஏப்ரல் 11 மாலை, பிரிகேடியர் ஜெனரல் ஆர்.ஈ.எச்.டையர், ஜாலந்தர் பிரிகேடியன் கமாண்டர், அமிருத்ஸர் சேர்ந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:54 am

1919 ஏப்ரல் 12

அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 12 அன்று ஜெனரல் டையர் என்பவன் 125 ஆங்கிலேய மற்றும் 310 இந்தியப் படையாட்களை நகரிலே அணி வகுத்து 'மார்ச்' செய்யவிட்டான். வழியிலேயே ஓரிடத்தில் கூட்டத்தைக் கலைப்பதில் சிறிது கடினம் ஏற்பட்டது. எனினும் விரைவிலேயே மக்கள் விலகிச் சென்று விட்டனர்.

பிற்பகல் 4 மணிக்கு இந்து சபாஉயர்நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஓர் அவை கூடிற்று. இச்சபையில் மறுநாளன்று ஜலியான்வாலா பாக் மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூட்ட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. டாக்டர் ஸத்ய பால் மற்றும் டாக்டர் கிச்லூவிடமிருந்து கிடைத்துள்ள கடிதங்கள் அப்போது படித்துக் காட்டப்படும் என்று தீர்மானம் ஆயிற்று.

மக்கள் இன்னும் பல தியாகங்கள் புரிய ஆயத்தமாயிருக்க வேண்டும் என்றும், மறுநாளும் ஹர்த்தால் உண்டு என்றும் தலைவர்கள் டாக்டர் கிச்லூவும் டாக்டர் ஸத்ய பாலும் விடுதலை செய்யப்படும் வரை ஹர்த்தால் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக