புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டெர்லைட் நடப்பது என்ன்ன?
Page 1 of 1 •
ஜுராஸிக் பார்க் படம் பார்த்திருப்பீர்கள். எங்கோ ஒரு காட்டுக்குள் ஒரு விஞ்ஞானி டைனோசர்களை உருவாக்கியிருப்பார். அவை உலவும் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு கருதி, உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சியிருப்பார்கள். ஒரு மழைநாளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட டைனோசர்கள் வேலி தாண்டிவிடும். அதன் பிறகு நடந்த களேபரங்களை சினிமா என்றபோதும் நகத்தைக் கடித்தபடியே பார்த்திருப்போம். நம் ஊருக்குள்ளும் கொலை வெறி கொண்ட டைனோசர்கள் பதுங்கி இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
போபாலில் மிக மோசமான விபத்து நடந்ததும் அதிகார, அரச வர்க்கங்களின் அதற்குப் பிந்தைய அலட்சியச் செயல்பாடுகளும் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தூத்துக்குடி இன்னொரு போபால் ஆகக்கூடும். தூத்துக்குடியில் ரத்த வெறியுடன் மின்வேலிக்கு அப்பால் உறுமிக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட் டைனோசர்.
சத்தீஸ்கரில் பால்கோ, ஒடிஸாவில் வேதாந்தா அலுமினியம், கோவாவில் சேசா கோவா, சில்வாசாவில் தாமிர உருக்காலை என இந்தியாவின் பல பகுதிகளில் தொழிற்சாலைகளை இயக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் அங்கம்தான் ஸ்டெர்லைட். பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து வளம் கொழிக்கும் இந்நிறுவனங்களின் உரிமையாளர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான அனில் அகர்வால்.
அனில், தாமிர உருக்காலை அமைக்க முதலில் குஜராத்தைத்தான் தேர்ந்தெடுத்தார். முதலில் ஆதரவு தெரிவித்த குஜராத் அரசு அதன் அபாயத்தை அறிந்து பின்வாங்கியது. அடுத்து கோவாவைக் குறிவைத்தார். மிகப்பெரும் எதிர்ப்பு உருவானதையடுத்து அனில் தேர்வு செய்தது மகாராஷ்டிராவை. மகாராஷ்டிர அரசு ஸ்டெர்லைட்டை இருகரம் கூப்பி வரவேற்றது. பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதார வளர்ச்சி என்றெல்லாம் கவர்ச்சிகரமான வார்த்தைகளை அவிழ்த்துவிட்டது ஸ்டெர்லைட்.
12 டிசம்பர் 1989 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்துவந்த நிலையில், இந்த ஆலையினால் ஏற்படவிருக்கும் தீமைகளை உணர்ந்து கொண்ட மகாராஷ்டிர விவசாயிகள் கொதித்தெழுந்தனர். மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சிய மகாராஷ்டிர முதல்வர் சரத் பவார், மே 1994ல் கட்டுமானப் பணிக்கு தடைவிதித்ததோடு ஸ்டெர்லைட்டுடனான ஒப்பந்தத்தையும் விலக்கிக்கொண்டார்.
அடுத்ததாக ஸ்டெர்லைட்டின் பார்வை தமிழகத்தின் மேல் விழுந்தது. தூத்துக்குடி சிப்காட்டில் 428 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதா தான் 1994 அக்டோபரில் இந்தத் தாமிர உருக்கு தொழிற்சாலையின் கட்டுமானப்பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். 1996 இறுதியில் முதல்வர் கருணாநிதி ஸ்டெர்லைட் உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளித்து பெருமை தேடிக்கொண்டார்.
ஸ்டெர்லைட் ஆலையின் பிரதான உற்பத்திப் பொருள் தாமிரம். ஆதிகாலத்தில் மனித இனத்தின் வளர்ச்சிக்கு இரும்பு எப்படிப் பங்காற்றியதோ, அதே அளவுக்கு நவீன தொழில்நுட்பத்துக்கு தாமிரம் அத்தியாவசியமானது. ஆனால், சூழலியலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதும் இதுதான். தாமிரத்தாது எனப்படும் அடர் கரைசலை உருக்கியே தாமிரத்தகடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலி மெட்டலர்ஜிக்கல், ஹைட்ரோ மெட்டலர்ஜிக்கல் ஆகிய முறைகளில் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தாதுவை உருக்கி தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, கந்தக டை ஆக்ஸைடு வாயுவும் ஆர்சின் போன்ற வாயுக்களும் அதிக அளவில் வெளிப்பட்டு காற்றை மாசுபடுத்துகின்றன. தாமிர உற்பத்தியின்போது வெளியாகும் கழிவுநீரில் காரியம், காட்மியம், துத்தநாகம், பாதரசம் போன்ற நச்சுத்தன்மை மிகுந்த உலோகங்கள் கலந்துள்ளன. இவை கடல் நீரையும் நிலத்தடி நீரையும் நேரடியாக மாசுபடுத்துகின்றன.இன்னொரு புறம், ஜிப்சம் போன்ற திடக்கழிவுகள் காரணமாக நிலம் மாசுபடுகிறது.
பல வளர்ந்த நாடுகள் தாமிர உற்பத்தியை வெகுவாகக் குறைத்து இறக்குமதி மூலம் தங்கள் தேவையை நிறைவு செய்துகொள்கின்றன. உற்பத்தி செய்யும் நாடுகளும் மாசைக் கட்டுப்படுத்தவும், சூழலியல் பாதிப்புகளைக் குறைக்கவும் போதிய அளவில் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் இந்த அபாயகரமான தொழிற்சாலைகளை பெருமளவில் அமைத்து, அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்துகொள்வதை வளர்ந்த நாடுகள் வழக்கமாக வைத்துள்ளன. தாமிரம் அவர்களுக்கு. அழிவு மூன்றாம் உலக நாடுகளுக்கு!
1992ல் இந்தியாவில் தாமிர உற்பத்தி தனியார் முதலீட்டுக்கு திறந்துவிடப்பட்டது. 1996ல் 62 ஆயிரம் டன்னாக இருந்த தாமிர உற்பத்தி 2007ல், 9.97 லட்சம் டன்னாக அதிகரித்தது. இந்தியாவின் தாமிரத்தேவை ஆண்டுக்கு 4 லட்சம் டன். மீதமிருக்கும் உற்பத்திகள் தாமிரமாகவும், தாமிரப்பொருட்களாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1000 நிரந்தரத் தொழிலாளர்கள், 2000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆக வெறும் மூவாயிரம் பேருக்கு மட்டுமே நேரடி வேலை கொடுத்துவிட்டு, தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கும் அநீதிக்கு அளவே இல்லை.
பெருகும் விதிமீறல்கள்
ஸ்டெர்லைட் தொடக்கம் முதலே ஏராளமான விதிமீறல்களைச் செய்துள்ளது. அரசு தரப்பிலும் பல தவறுகள். 50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீட்டில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்படும்போது, அதனால் ஏற்படவுள்ள சூழலியல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். தொழிற்சாலை அமையவுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் மக்களின் கருத்துக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. மீனவர்கள், சூழலியல் பாதுகாப்பு அமைப்புகளின் குரலுக்கும் மதிப்புத்தரவில்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகளோடு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 35ல் 1வது பிரிவின் கீழ் மத்திய அரசால் உயிர்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டவை. தமிழக அரசும் வன உயிரியல் பூங்காவாக அத்தீவுகளை அறிவித்துள்ளது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கடல் உயிரினங்களும், பவளப்பாறைகளும், தாவர வகைகளையும் நிறைந்த பகுதி. இப்பகுதிக்கு பாதிப்பு நேராவண்ணம், மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து 25 கி.மீக்கு அப்பால் ஆலை நிறுவப்பட வேண்டும். அதேபோல், தொழிற்சாலையின் மொத்த நிலப்பரப்பில் 25% பரப்பளவுக்கு பசுமை வளையம் உருவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையுமே ஸ்டெர்லைட் மீறியுள்ளது.
எதிர்ப்புகள் ஆரம்பம்
உற்பத்தி தொடங்குவதற்கு முன்பே போராட்டங்கள் தொடங்கிவிட்டன. 1996 மார்ச்சில் தாமிர அடர் கரைசல் தாதுவை சுமந்துகொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த ஒரு கப்பலை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு சென்று ஆழ்கடலில் தடுத்தனர். அதனால் அந்த கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 1996 ஏப்ரலில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் கடலில் கலப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஸ்டெர்லைட்டுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரியும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஸ்டெர்லைட் கழிவுகள் கடலில் விடப்படாது என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. அதன்பிறகு உண்ணாவிரதம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு, 1996 ஜூனில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதே ஆண்டு நவம்பரில் தூய சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை சார்பாக வழக்கறிஞர் பிரகாஷ், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கனகராஜ், அப்பாத்துரை மூவரும் இணைந்தார்கள். ஒரு பக்கம் மக்கள் போராட்டம், இன்னொரு பக்கம் சட்டப் போராட்டம்.
ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் தம் அரசியல் பலத்தின்மூலம் எதிர்ப்பை நசுக்கப் பல்வேறு யுத்திகளைக் கையாண்டது. அரசியல் தலைவர்களை நிர்வாகக் குழுவில் இடம்பெறச் செய்தது. கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி நடவடிக்கைகள் மூலம் என்ஜிஓக்களை வளைத்து, மக்கள் மத்தியில் சாதகமான எண்ணத்தை வளர்க்க முயன்றது. மீனவர் சங்க தலைவர்கள் சிலரையும் ஆதரவு வளையத்துக்குள் கொண்டுவந்தது.
1996ன் இறுதியில் உற்பத்தியைத் தொடங்கியது ஸ்டெர்லைட். அதற்கான உற்பத்தி இலக்காக, மாசுகட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் தாமிரம் மட்டுமே அனுமதியளித்தது. ஆனால், 1.70 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்ப்புக்குழுவினர்.
விபத்து
ஆலை தொடங்கிய சில வாரங்களிலேயே முதல் விபத்தைச் சந்தித்தது ஸ்டெர்லைட். 1997 ஜனவரியில் ஆலையின் சில சிலிண்டர்கள் வெடித்தன. யாருக்கும் பாதிப்பில்லை. மே மாதம் கந்தக அமிலக்குழாய் வெடித்ததில் ஒருவர் இறந்தார். ஜூலை மாதம் ஏற்பட்ட இன்னொரு விபத்தில் வெளியேறிய கந்தக டை ஆக்ஸைடு நச்சுப்புகையால் ஆலைக்கு அருகில் இருந்த ரமேஷ் பிளவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 165 பெண்கள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு கருச்சிதைவும் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் மேலும் உச்சம் பெற்றது. 2 மார்ச் 1999 அன்று கந்தக டைஆக்ஸைடு வாயுக்கசிவால் அருகில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் 11 பேர் மயங்கி விழுந்தார்கள்.
இதையடுத்து, ஆலையை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்குமாறு நாக்பூரைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுமையத்தைப் பணித்தது உயர்நீதிமன்றம். டாக்டர் கண்ணா தலைமையிலான குழு, ஸ்டெர்லைட் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிலம், நீர், காற்று மாசுபாட்டைச் சுட்டிக்காட்டியது. அதன் அடிப்படையில் நவம்பர் 1998ல் ஆலையை மூட உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம். பின்னர், நீதிமன்றத்தின் வெறோரு அமர்வு டிசம்பர் 25ம் தேதி ஆலை மீண்டும் இயங்கவும், தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுமையம் மீண்டும் விரிவாக ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.
மீண்டும் ஆய்வுசெய்து அறிக்கை அளித்த தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுமையம், ‘ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளன’ என்றது.
விரிவாக்கப் பணிகளும் புகார்களும்
இதற்கிடையே, 391 டன்னாக இருந்த அன்றாட உற்பத்தியை 900 டன்னாக உயர்த்துவதற்கான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. காப்பர்ஸ் மெல்டர்ஸ், ரீஃபனைரி, சல்ஃப்யூரிக் ஆசிட் பிளாண்ட் என சூழலுக்கு சவாலான பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டபோது, மாசு கட்டுப்பாட்டுத்துறை அனுமதியோ, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோ பெறவில்லை.
இது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு குழுவை நியமித்தது. 2004, செப்டம்பர் 21ம் தேதி அந்தக்குழு ஆலையை ஆய்வு செய்தது. ‘உற்பத்தித் திறனுக்கு ஏற்ப கழிவுகளைச் சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை, அதனால் ஆலையின் விரிவாக்கப்பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவளிக்கக்கூடாது. முன்னரே இசைவளித்திருந்தால் அதை திரும்பப்பெற வேண்டும்’ என்றும் அக்குழு உச்சநீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது.ஆனால் இக்குழு ஆய்வு மேற்கொண்ட மறுநாளே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், ஏற்றுமதி செய்யாமலேயே செய்ததாகக் கூறி சலுகைபெற்று 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஸ்டெர்லைட் மீது புகார் கூறப்பட்டது. 2010 ஜூலையில் ஸ்டெர்லைட் நிறுவன துணைத்தலைவர் வரதராஜன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிலையில், வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார் வரதராஜன். போராட்டம் வலுப்பெற்றது.
இந்நிலையில், 2010 செப்டம்பர் 28ம்தேதி உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்றம், 2 வாரத்துக்குள் ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுநீரை அகற்றவும், மாசைக் கட்டுப்படுத்தவும் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும், அதுவரை ஆலையை மூடத்தேவையில்லை என்றும் இடைக்கால உத்தரவிட்டது.
கடந்த மாதம் மீண்டும் கந்தக டைஆக்ஸைடு கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாசு கட்டுப்பாட்டுத்துறை ஆலைக்கு சீல் வைத்துள்ளது. ஆலையின் மின்சார இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும், உரிய அனுமதியைப் பெறாமல் ஆலையை நடத்தியதற்காகவும் 100 கோடி ரூபாயை ஸ்டெர்லைட் நிர்வாகம் அபராதமாகக் கட்டவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கும் வேலை வாய்ப்புகள், அரசுக்குச் செலுத்தும் வரித்தொகைகள், அது உற்பத்தி செய்து நாட்டுக்கு வழங்கும் தாமிரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில்கொண்டே அபராதம் செலுத்திவிட்டு ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கிறோம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலைக்கு சீல் வைத்திருப்பதால் உடனடியாக ஆலையை திறக்க முடியவில்லை. இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தது ஆலை நிர்வாகம். ஆலையை ஆய்வு செய்து விஷவாயு பரவியதை உறுதிசெய்த மாவட்ட ஆட்சியர் பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது ஆஜராகவோ அறிக்கை தாக்கல் செய்யவோ வரவில்லை. இந்தச்சூழலில் நிபுணர் குழு ஆய்வு செய்து 29ம்தேதி தம் அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஏகப்பட்ட விதிமீறல்களைச் செய்திருக்கிறது என்பதற்கு வெளிப்படையான ஆதாரங்கள் இருக்கின்றன. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன் தாமிரம் மட்டுமே ஸ்டெர்லைட் உற்பத்தி செய்யவேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் லண்டன் பங்குச்சந்தையில் வேதாந்தா குழுமம் கொடுத்துள்ள அறிக்கையில் ஆண்டுக்கு 1, 80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளது. இதெல்லாம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் பார்வைக்கு வராமல் போனது ஏன்?
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதன் பின்னணி என்ன? இவ்வளவு அபாயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, மாவட்ட நிர்வாகம் ஏன் அமைதி காக்கிறது? ஸ்டெர்லைட் விஷயத்தில் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?
நிறுவனங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாகாது. மேற்கு நாடுகள் சொர்க்கமாகத் திகழவேண்டும் என்பதற்காக மூன்றாம் உலக நாடுகள் நரகமாக்கப்படுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது.
தூத்துக்குடி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சுவாசக்கோளாறு, புற்றுநோய், கண்ணெரிச்சல், நுரையீரல் சார்ந்த நோய்கள், மலட்டுத்தன்மை, சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. புற்றுநோயாளிகளும் அதிகரிக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையில் வெளியாகும் ‘ஸ்லாக்’ கழிவுகள், ஜிப்சம் போன்றவை அகற்றப்படாமல் குவிக்கப்பட்டுள்ளன. அக்கழிவுகளைக் கொண்டு சாலை போடுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்தமுடியாத அளவுக்கு பாழ்பட்டுவிட்டது.
1994ல், தூத்துக்குடி, சிப்காட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று 1996ல் தூய சூழலுக்கான தேசிய அமைப்பு உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்கைத் தாக்கல் செய்தது.தமிழ்மாந்தன் தலைமையில், அமல்ராஜ், ராஜேஷ், இளங்குமரன், சற்குணம், ஜான்சன் உள்ளிட்ட பலர் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினர்.
1997ல் வைகோ ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து, தூத்துக்குடி வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.28 செப்டம்பர் 2010 அன்று காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டது உயர்நீதி மன்றம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். 2012ல் வழக்கு விசாரணைக்கு வந்தது.23 மார்ச் 2013 அதிகாலை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து, விஷவாயு கசிந்தது. சுற்று வட்டார மக்கள் கண்ணெரிச்சலாலும் மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்பட்டார்கள். ஆலையில் பணியாற்றிய ஒரு தொழிலாளி இறந்தார். 28ம் தேதி வைகோ, நல்லக்கண்ணு உள்ளிட்டோர் ஆலையை முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். 30ம்தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
100 கோடி ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மாசுகட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை காரணமாக ஆலையைத் திறக்க முடியவில்லை. மாசுகட்டுப்பாட்டுத்துறையின் தடையை நீக்கக்கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட்.
நன்றி ஆழம்.இன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|