புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
1 Post - 1%
mruthun
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னேறு... முன்னேறு... முன்னேறு...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Jun 2013 - 9:28

முன்னேறு... முன்னேறு... முன்னேறு... E_137110

இந்திய விடுதலைப் போரில் மக்களிடையே பெரும் தேசிய எழுச்சியை விளைவித்த நிகழ்ச்சிகளில் சில, வைசிராய் கர்சன் பிரபுவால் வ்நத வங்காளப் பிரிவினை (1905), ஜாலியன்வாலாப் படுகொலை (1919), ஒத்துழையாமை இயக்கம் (1920), தண்டி யாத்திரையும் உப்பு சத்தியாகிரகமும் (1930) வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) முதலியனவாகும். இந்நிகழ்ச்சிகளின் பின்விளைவுகள் மகத்தானவை.

வங்கப் பிரிவினையால் நாடு ஒன்றுபட்டது. சுதேசியம், அந்நியப் பொருள்கள் பகிஷ்காரம், தேசியக் கல்வி என்ற முப்பெரும் செல் திட்டங்கள் வலுப்பெற்றன.

பஞ்சாப் படுகொலையை அடுத்து 1920ஆம் ண்டில் ஒத்துழையாமை இயக்கம் தோன்றியது. ஏதோ ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்ததால், 1922ல் மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்திவிட்டார்.

உப்பு சத்தியாகிரகம் மீண்டும் ஒத்துழையாமை இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்து, விடுதலைப் போர் முன்னிலும் தீவிரமாக நடக்க உதவியதால், அதுவே “வெள்ளையனே வெளியேறு’ இயக்கமாக வெடித்தது.

ஆனால் இந்த இயக்கங்களால் ஆங்கில அரசாட்சியின் அடக்கு முறைகள் மேலும் கடுமையாயின. தேசபக்தர்கள் வெஞ்சிறையில் வாடினர். நாடெங்கும் அராஜகம் நிலவியது. பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் பறிபோயின. சிறைகள் நிரம்பின. 1946ல்தான் தேசபக்தர்கள் விடுதலை பெற்றனர்.

இந்த சூழ்நிலையில் 1930ஆம் ஆண்டில் குஜராத்தின் சௌராஷ்டிராப் பகுதியில் தண்டுகா என்ற சிற்றூரிலுள்ள நீதிமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம். குற்றவாளிக் கூண்டில் கத்தியவாரின் பரம்பரை உடையும், பெரிய முண்டாசும் தரித்த ஒரு முப்பது வயது மனிதர் நின்று கொண்டிருந்தார். அப்போதுதான் நீதிபதி அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை என்று தன் தீர்ப்பைப் படித்து முடித்திருந்தார். அது ராஜநிபந்தனையாகப் பேசிய பேச்சுக்கான தண்டனை.

ஆனால் மேகானீ அப்பேச்சைத் தான் நிகழ்த்தவேயில்லை என்றும், அந்த நாளில் அந்த நேரத்தில் ரான்பூரில் தன் வீட்டில்தான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் ஏற்கெனவே மறுத்திருந்தார்.

ஆனால் அதைப் பற்றி வெள்ளை அரசாங்கம் கவலைப் படவே இல்லை; ஒரு தேசபக்தரைச் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்றால் உடனே வழக்கமான சாட்சிகளை கொண்டு வழக்கு ஜோடித்து விடும் போலீஸ். அக்காலத்தில் இது மிக சகஜமாக நடந்து வந்தது.

உண்மையில் பிறகு தெரிய வந்தது. அப்படிப் பேசியவர் ஜோடானி என்று வேறொருவர். குற்றப் பத்திரிகை எழுதியவர் எழுத்தறிவில்லாத ஒரு குமாஸ்தா. அவர் எழுதிய கையெழுத்தை மேகானி என்று படித்து வழக்குத் தொடர்ந்தது. ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர் விடுதலையடைந்தார்.

மேகானீ அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. குற்றத்தை மறுத்துத் தன் பதிலைத் தான் இயற்றிய ஒரு கவிதை வடிவிலே நீதி மன்றத்திலேயே அவர் பாடினார்.

முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Jun 2013 - 9:28

“நத்தி ஜான்யுன் அமாரே பந்தா ஸி ஆஃபடா கடிச்சே! கபராசே டெலிகே மாதா- நி ஹக்கலா படீச்சே!’ என்று தொடங்கும் ஒரு பாடலை மிகுந்த உணர்ச்சியோடு அவர் பாடினார்.

“எத்தனை இடர்கள், எத்தனை துன்பவங்கள்
எங்கள் பாதையில் என்றறிவோம்
அனைத்தையுமிழந்து அடிமையாய் வாழும்
பார்க்கெலாம் திலகம் பாரத அன்னை
அழைப்பதை மட்டுமே நாங்கள் அறிவோம்’
- என்ற இந்த வரிகளைக் கவிஞர் பாடியபோது நீதிமன்றம் முழுவதிலும் சத்தம் அடங்கி ஒரே நிசப்தம்.

பாமர மக்கள் பேச்சு வழக்கில் அமைந்த இப்படால் கேட்போரது இதயங்களில் எதிரொலித்தது. அவர்களின் கண்களிலிருந்து உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வடிந்தது... நீதிபதியின் கண்களும் குளமாயின.

அன்று மேகானி பாடிய பாடல் அன்றிலிருந்த சூழலையும் சுதந்திரம் இழந்து அனைத்தும் இழந்த மக்களது அவல நிலையையும், நாட்டு விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர் துறக்கவும் மக்கள் சித்தமாக இருந்த நிலையையும் காட்டியது. மேகானீயின் பாடல் இதோ:

ஆயிரம் ஆண்டுத் தொடர்கதை எங்கள் துன்பம், அந்த பயங்கரக் கதைகள் இதயத்தைப் பிளக்கும், சென்று மறைந்தவர் ரத்தம், இன்று வாழ்வோரின் கண்ணீர் இவற்றை உனக்களிக்கின்றோம், இறைவா! இதுவே எங்கள் இறுதிக் காணிக்கை. ஏற்றுக்கொள், இழந்து விட்ட சுதந்திரத்தை மீண்டும் தா, இன்னும் ஏதேனும் வேண்டுமா? கேள், தருகிறோம். ஆனால், இறைவா, நீ எங்களோடு இரு, இதுவே எங்களது இறுதிப்போர். எங்களது ரத்தமும் கண்ணீரும் கழுவிய எங்கள் பிரார்த்தனை உனக்குக் கேட்கிறதா? நாங்கள் விடுதலை வீரர்கள் உன்னருள் வேண்டுகிறோம். எங்களது திறந்த இதயங்களைப் பார் காயங்களினின்று வரும் ரத்த ஓடைகளைப் பார். அநீதித் தீக்கங்குகள் கனன்று நிற்பதைப் பார். இவற்றை உனக்கு அர்ப்பணிக்கிறோம். அருகிலிருந்த இறைவா நீ ஒளி காட்டினால் இரவின் காரிருள் மேலும் கூடட்டும், பயமில்லை. கடைசி வாய்த் தண்ணீர் நீ தருவாயானால் போர்க்களம் எங்கள் மரணப் படுக்கையாகட்டும். போரில் ஆயுதங்கள் உரசும் பேரோசை ஒலிக்கட்டும். இறப்போர்க்காகக் குழலின் மெல்லொலி கேட்கட்டும். விண்ணளாவிய எம் ஆசைக் கோட்டைகள் சரிகின்றன. அச்சுறுத்தும் ஆயிரம் புதிய தீ நாக்குகள் எழுகின்றன. ஆயினும் இழந்த சுதந்திரம் மீண்டும் பெரும் வரை எங்கள் அர்ப்பணங்கள் தொடரும்.

பாரதியாரின் வார்ப்பில் வந்த மேகானீ 1897ஆம் ஆண்டு சுரேந்திர நகர் மாவட்டத்தில் சோட்டிலா என்ற ஊரில் காளிதாஸ் தோலிபாய் இருவருக்கும் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அடிக்கடி மாற்றலாகும் ஒரு பணியில் இருந்தார். எனவே மேகானீ இளம் பருவத்திலேயே சௌராஷ்டிரத்தில் பல இயற்கை அழகுகளையும், மக்களது எளிய வாழ்க்கை இயல்புகளையும், கிராமீயச் சூழ்நிலைகளையும் நன்கு கண்டறிந்து நினைவுகளாகத் தன் கவியுள்ளத்திலே தேக்கி வைத்தவர்.

மேகானீ ராஜ்கோட்டில் தொடங்கிப் பல ஊர்களில் படித்து, 1916ல் பாவ்நகர் சாமல்தாஸ் கல்லூரியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் இரண்டும் கற்று, பி.ஏ. பட்டம் பெற்றார். பாரதியாரைப் போல் ஒரு சில மாதங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு இந்தியாவின் அன்றையத் தலைநகராக இருந்த கல்கத்தா சென்று, ஜீவன்லால் அலுமினியம் கம்பெனியில் பணியாற்றினார். மூன்றே ஆண்டுகளில் ஹெளராப் பகுதியில் அமைந்த ஜீவன்லால் அலுமினியம் தொழிற் சாலையின் மேலாளர் பதவிக்கு உயர்ந்தார். கம்பெனி உரிமையாளருடன் லண்டன் சென்று வந்தார். வங்கத்தில் இருந்த நாட்களில் வங்காளி இலக்கியம், பிரம்ம சமாஜ் பற்றியும் நன்கு அறிந்தார். ஆனால் அவருக்கு எப்போதும் தன் தாய் மண்ணான சௌராஷ்டிரா நினைவுதான். கல்கத்தாவில் அலுவலகத்திலும் கத்தியவார் முண்டாசோடுதான் போவாராம். அதனால் கீழ் நிலைச் சிப்பந்திகள் அவரைப் பகடி (முண்டாசு) பாபு என்றே அழைத்தனர். அப்போதே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

1921-22ல் ஜீவன்லால் கம்பெனி வேலையைத் துறந்துவிட்டு, குஜராத்திற்குத் திரும்பினார். அம்ருதலால் சேத் என்பவர் ரான்பூரில் தொடங்கியிருந்த “சௌராஷ்ட்ரா’ என்ற பத்திரிகையில் சேர்ந்தார். உடனேயே சிறு கதைகள், நாடோடி இலக்கியக் கதைகள், பாடல்கள் முதலியவற்றை எழுதத் தொடங்கினார்.

1922ல் தாகூரின் கதா-ஓ-காஹினி என்ற கதைகளை குர்பானி-நி-கதா என்ற தலைப்போடு வெளியிட்டார். பத்திரிகைப் பணியும் ஒருநாள் அலுத்துவிட்டது.

முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Jun 2013 - 9:28

பாரத அன்னையின் அழைப்பு அவருக்கு ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் விளைவாக, ஏராளான தேசபக்தி பொங்கித் ததும்பும் பாடல்களை எழுதினார். ராஜ நிந்தனை வழக்கில் நீதிமன்றத்திலேயே தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட அனைவரும் கண்ணீர்விட்ட பாடலை முன்னமேயே பார்த்தோம். மற்றொரு பாடலில் விடுதலை என்ற லட்சியத்தை நோக்கி அயராது முன்னேற நாட்டு மக்களை அழைக்கிறார்:

“முன்னேறு, முன்னேறு, முன்னேறு.
உண்ண உணவின்றித் தவித்தாலும்,
தொண்டை வறண்டு உலர்ந்தாலும்,
உடல்வலி குன்றித் தேய்ந்தாலும்,
கடலலையோ காயும் பாலைவனமோ,
மலை உச்சியோ மையிருட்டுக் கானகமோ,
இடியோ புயலோ பெருமழையோ,
பகையோ, நட்போ, பயங்கரத் தீமையோ,
எதுவானாலும் எதிர்த்துச் செல்வோம்.
வழியில் நிற்பதால் வரும் பயனில்லை,
திரும்பிச் செல்ல வழியேதுமில்லை
முன்னேறு, முன்னேறு, முன்னேறு,
இலக்கை இன்னும் எட்டினோமில்லை.
இவை நம் பாவத்தின் இறுதி மூச்சாகும்,
தீமையின் முடிவு தூரத்திலில்லை.
உளத்தின் தவிப்பு உறுதியாய் நீங்கிடும்.
பாரத மாதா படுந்துயர் தீர்க்க
விரும்பியே ஏற்றோம் விடுதலைப் போரை
எரிமலை யுச்சியில் வாழ இசைந்தோம்.
ஆவி உட்பட அனைத்தையும் துறப்போம்.
முன்னேறு, முன்னேறு, முன்னேறு.’

மேகானியின் தேச விடுதலைப் பாடல்கள் ஸிந்து தோ என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இன்னும் ஆங்கில மொழி பெயர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை.

அவரது நாடோடி இலக்கியத் தேடல், மொழி பெயர்ப்பு முயற்சிகளைப் பாராட்டும் வகையில் 1928ல் ரஞ்சித்ராம் தங்கப் பரிசு வழங்கப்பட்டது. 1933ல் மனைவி இறந்தார்.

மேகானீ பம்பாய் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது “ஜன்ம பூமி’ என்ற பத்திரிகையில் எழுதினார். அப்போது நூல் மதிப்புரைகள் நிறைய எழுதினார். அவருடைய இலக்கிய நேர்மை, சீரிய உள்ளம் இவற்றால் குஜராத்தின் தலை சிறந்த அறிஞர், கவிகள், எழுத்தாளர் அனைவரையும் அச்சமின்றி விமர்சித்தார். பம்பாயிலிருந்து மீண்டும் ரான்பூருக்குத் திரும்பி, ஃபூல் சாப் என்ற இதழின் ஆசிரியரானார்.

1932லிருந்து அவர் புதினங்கள் எழுதத் தொடங்கினார். பத்திரிகை உலகோடு நெருங்கிய தொடர்பு இருந்ததால், இதழ்களில் தொடர் கதைகளாக இப்புதினங்களை வெளியிட்டார். அவர் மறைந்த 1947ஆம் ஆண்டு வரை 14 புதினங்களை எழுதினார். அவை சமூகம், வரலாறு என்ற இரு வகையிலும் அமைந்தவை.

1937லிருந்து சுமார் நூறு சிறு கதைகளை அவர் எழுதினார். அவரது புதினங்களிலும் சிறு கதைகளிலும் சமூகக் குறைபாடுகளும் சிறுமைகளும் நீங்கி, ஆரோக்கியமான ஒரு சமூகமாக நாடு வாழ வேண்டும் என்று காட்டினார்.

வரலாற்றுப் புதினங்கள் பாரதம், குஜராத் இவற்றின் பழம் பெருமைகள் பின்னிப் பிணைந்து சுவையானவை. அவரது மிகப் பெரிய வியக்கத் தக்க பணி ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ள குஜராத்தி நாடோடி இலக்கியமே. அதை மேலும் தொடரும் பொருட்டு ராஜ்கோட் சௌராஷ்டிரா பல்கலைக் கழகத்தில் சென்ற 2012ஆம் ஆண்டில் ஜாவேர் சந்த் மேகானி இருக்கையும் மையமும் துவங்கப்பட்டுள்ளன.

காந்திஜி 1931ல் வட்ட மேஜை மகாநாட்டுக்குச் சென்றபோது மேகானீ இயற்றிய “செல்லோ கடோரா’ (கடைசிக் கோப்பை விஷம்) என்ற பாடலைப் படித்த மகாத்மா, தன் உள்ளத்தின் நிலையை அது அப்படியே பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். காந்திஜி மேகானீயை “தேசியக் கவி’ என்று பாராட்டினார்.

“தன் உணர்ச்சி மிக்க சொல்வன்மை, கம்பீரமாகப் பாடும் குரல்வளம், தேசபக்தி இவற்றால் படித்தவர்களையும், பாமரர்களையும் தட்டியெழுபபி உள்ளங்கவர்ந்தவர் மேகானீ. தற்கால குஜராத்திய இலக்கியத்தில் அவருக்கு இணையான ஜனரஞ்சக மக்கள் கவிஞர் வேறு எவருமில்ø’ என்று எழுதுகிறார் குஜராத்தி இலக்கிய வரலாறு எழுதிய மன்சுக்லால் ஜாவரி.

- மு. ஸ்ரீனிவாஸன்

முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக