புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
336 Posts - 79%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 17, 2013 6:10 pm

மதுமிதா wrote:பாடல் 38

என்ன விலையழகே...
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்... ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

உயிரே உனையே நினைந்து
விழி நீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல
சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

என்ன விலையழகே...
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

**************************************************************************

படம் : காதலர் தினம் (1999)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னி மேனன்
பாடல்வரிகள் : வாலி
**************************************************************************

இந்தப் பாடல் வந்த புதிதில் இது வைரமுத்துவின் பேனா வழியவிட்ட கவிதை என்றுதான் நினைத்திருந்தேன். பின்புதான் தெரிந்தது வாலியின் வாலிப வரிகள் இவையென. மலரும் நினைவுகளை மறுபடி எழுப்பிய மதுமிதாவிற்கு நன்றிகள்!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Dec 17, 2013 6:28 pm

மிக்க நன்றி அனைவருக்கும்  எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 1571444738 எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 1571444738 எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 1571444738 எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 1571444738 எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 1571444738 எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 1571444738 

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 18, 2013 10:47 am

அதிகம் பிரபலமாகாவிட்டாலும் நான் சோர்வுறும் பெரும்பாலான நேரங்களில் கேட்கும் பாடல் ஒன்று உள்ளது. மது அனுமதிப்பார் என்கிற நம்பிக்கையில் அவரது திரியில் இணைக்கிறேன்.

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
புயல் வந்து மையம் கொண்டாலும்
பூவில் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது

ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச
ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

ம்ம்ம்.... ம்ம்ம்....

எந்த பூவில் தேன் துளி உண்டு?
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை
யே... இருட்டை பார்த்து மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் வேலை தன்னை அகலும் செய்து விடும்

மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்
பட்டாம் பூச்சி அழுவது கிடையாது
உன் நெஞ்சிலே சாந்தி கொள்
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
வாழும் ஆளை சார்ந்தது வாழ்க்கை என்பது

ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச
ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

சய்ய சக்கா... சய்ய சக்கா... சம்ம சக்கா...
சம்ம சக்கா... சய்ய சக்கா... சய்...

பூத்து சிரிக்கும் பூக்களினோடு
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு
வானம் பொழியும் மழையின் ஷவரில் நாளும் நீராடு
ஆ... உன்னை கடந்து போகிற போது
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு
பூவை உடைக்கும் காற்றை போல புகுந்து விளையாடு

இந்த ஜீவிதம் ஆனந்தம்
கவலைகள் என்று ஒன்று கிடையாது
வெண்ணிலா தேயலாம்
வெளிச்சத்தை வெட்டி கொள்ள முடியாது
மனித ராசி ஒன்றுதான் சிரிக்க தெரிந்தது

ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச
ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
புயல் வந்து மையம் கொண்டாலும்
பூவில் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது
****************************************************
படம்: என்னவளே (2000)
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், கிருஷ்ணராஜ்
பாடல்வரிகள்: வைரமுத்து
****************************************************

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 18, 2013 10:59 am

தன் காதலை ஊருக்கே உரைத்தபின்னும் சொல்லவேண்டிய காதலியிடம் சொல்லாத விந்தையை அழகான வார்த்தைகளால் சொல்லும் பாடல் ஒன்று.

ஹே நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப் போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்

காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை (நெஞ்சாங்கூட்டில்)

ஹே விண்ணைத் துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னைத் தேடி மண்ணில் வரவழைத்து
உன்னைக் காதலிப்பதை உரைத்தேன்

இன்று பிறக்கிற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும்
சொல்லவில்லையே இல்லையே

லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தை சொல்லும் சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே (நெஞ்சாங்கூட்டில்)

சின்னச் சின்னச் செல்லக் குறும்பும் சீனிச் சிரிப்பும்
என்னை சீரழிக்குதே
விறுவிறு என வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே

உன்னைக் கரம் பற்றி இழுத்து வளை உடைத்து
காதல் சொல்லிடச் சொல்லுதே
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து என்னைக்
குத்திக் குத்தியே கொல்லுதே

காதலெந்தன் வீதி வழி கையை வீசி வந்தபின்னும்
கால்கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
பெப்ரவரி மாதத்திற்கு நாளு ஒன்னு கூடிவர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே (நெஞ்சாங்கூட்டில்)
*********************************************************
படம்: டிஸ்யூம் (2005)
இசை: விஜய் ஆன்டனி
பாடியவர்கள்: ஜயதேவ், ராஜலக்ஷ்மி
பாடல்வரிகள்: வைரமுத்து
*********************************************************

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Dec 18, 2013 11:02 am

" காதலெந்தன் வீதி வழி கையை வீசி வந்தபின்னும்
கால்கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
பெப்ரவரி மாதத்திற்கு நாளு ஒன்னு கூடிவரும்
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போல "

மிக கூர்மையான சிந்தனை வரிகள் !

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 2:05 pm

பாடல் 91

இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா

அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனு அனுவாய் கலந்துவிட்டாய் (2)

இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து
வானில்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று
என்ன செய்ததோ பிழை

அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
(2)

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 3:43 pm

பாடல் 92

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது அது தவழ்கிறதே
கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 3:46 pm

பாடல் 94

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே என

(ஆருயிரே)

வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம் காற்றினில் மாறுதே ஓ … ஓ …
சுவாசத்தில் சேருதோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பெனே
உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன்

(ஆருயிரே )

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 3:57 pm

பாடல் 95

காதல் ஒரு தேவதையின் கனவா
தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா
காதல் நம்மைத் தூக்கிச் செல்லும் சிறகா
காலடியில் சறுக்கிடும் சருகா

காதல் கண் ரெண்டும் சந்தித்துப் பேசும் மொழியா
இல்லை காணாத ஊருக்குப் போகும் வழியா
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறைக் கதவா

காதல் ஒரு தேவதையின் கனவா
தொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா

காதல் அனல் தரும் வெயிலா
புனல் தரும் மழையா
பயம் தரும் புயலா
இந்தக் காதல்
வனம் தரும் அகிலா
மறைந்திடும் திகிலா
மாயம் தானா
காதல் மின்னலின் துகளா
மிரட்டிடும் இருளா
மாயவன் செயலா
இந்தக் காதல் மலர்களின் திடலா
முட்களின் தொடலா
காயம் தானா

கானல் அலையா
வெறும் காட்சிப் பிழையா
இல்லை கங்கையிலே
பொங்கி வரும் தண்ணீர் இதுவா
தூண்டில் வலையா
நெஞ்சைத் தாக்கும் கொலையா
இருந்தும் வாழ வைக்கும்
மருந்தா விருந்தா

காதல் ஒரு ....

காதல் கனவதன் கனவா
தவங்களின் தவமா
வரங்களின் வரமா
இந்தக் காதல் கடவுளின் இனமா
அசுரனின் குணமா
விடைகள் இல்லை

காதல் பிறவியின் பயனா
துரத்திடும் கடனா
உளரிடும் திறனா
இந்தக் காதல் இம்சையின் மகனா
ரசித்திடும் முரணா
சொல்வார் இல்லை

பூக்கள் கடையா
உயிர் வாங்கும் கதையா
இது வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்றாய் மோதும் படையா
ஞான நிலையா
பொய் பேசும் கலையா
தூரல் நின்று பின்பும் தூறும் நிலையா

காதல் ஒரு ....

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Dec 18, 2013 4:01 pm

பாடல் 96

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி

இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி

ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பாத்திருந்தோம்

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக