உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
4 posters
பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
இந்தியர்கள் திறமையானவர்கள், கடும் உழைப்பாளிகளாக இருந்தாலும், வளர்ந்து வரும் பிற உலக நாடுகளை விட நிர்வாகத் திறமையிலும், புதிய நிர்வாகக் கொள்கைகளைஏற்பதிலும்,துறை சார்ந்த அறிவு வளர்ச்சியிலும் சற்று பின் தங்கியுள்ளனர். முப்பது கோடி இந்திய மக்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர 3000 ஆங்கிலேயர்கள் போதுமானதாக இருந்தது.சங்க காலத்தில் பல திறமைகள் பெற்றிருந்தாலும், இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல எம்என்சி நிறுவனங்கள் அவர்களின்தாய் நிறுவனங்களின் கட்டுக்குள் தான் இயங்குகிறது. அதாவது சொல்வதைச் செய்யும் கிளிப் பிள்ளைகளாகத் தான் நம்மை அவர்கள் பார்க்கும் சூழல் நிலவுகிறது. இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளும் வெளிநாட்டுத் தொடர்புடன் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்கின்றனர்.
ஆகையால் நாம் திறமைகளை வளர்ப்பது அவசியமாகிறது. வெளிநாட்டு தொடர்பில்/ நிறுவனங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய (அல்லது மறந்து போன) திறமைகள் என்ன என்ன என்று விவாதிப்பதே இத்திரியின் நோக்கம்..
இங்கு பலர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அடுத்த இந்திய தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை
யோசிக்கவே இத்திரி. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன் .
வேலை மட்டுமல்ல குழந்தை வளர்ப்பு, கல்வி என்ற பிற விஷயங்களையும் விவாதிக்கலாம்.

Last edited by சதாசிவம் on Mon Jun 17, 2013 3:07 pm; edited 1 time in total
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் சொல்லும் பாணியில்(செய்முறை,வடிவமைப்பு) அவனது வேலைகளை செய்து கொடுக்கும் அடிமைகள் தான் நாம். அவர்கள் பயன்படுத்தும் பாணியை விட புதியதொரு பாணியை உருவாக்கி அவர்களுக்கு சவால்விடும் திறமை நமக்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.
2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.
3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.
1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.
2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.
3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.
Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை முதலில் நாம் உணரவேண்டும். (நல்லவை எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வதில் தவறில்லையே) பலர் இந்த அடிப்படையையே ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப் பல விடயங்கள் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தாலும், அடிப்படையான சிலவற்றை முதலில் விவாதிக்கத் தொடங்கலாம்.
1) நேர மேலாண்மை - வெளிநாடுகளில் சென்று பணியாற்றிய அல்லது பணியாற்றிக்கொண்டிருக்கும் அல்லது அவர்கள் மூலம் கேள்விப்பட்ட அனைவருக்கும் தெரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நேரம் தவறாமையை எப்படித் தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக கருதுகிறார்கள் என்று. ஒன்பது மணிக்கு அலுவலகம் வரவேண்டுமென்றால் மிகச்சரியாக வந்து நிற்பார்கள். அலுவலகத்திற்கு என்று மட்டும் இல்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களூடான சந்திப்பானாலும் சரி, சொன்ன நேரத்தில் சரியாக வந்து சேர்வார்கள். நம் நாட்டினர் இவ்விடயத்தில் எப்படி என்று அனைவருக்கும் தெரியும்.
2) போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்தல் - வெளிநாடுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாவதும், போக்குவரத்து நெரிசல் எளிதில் சமாளிக்கப்படுவதும், எவ்வாறு சாத்தியப்படுகிரதென்றால், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறைதான் அடிப்படைக் காரணம். மேற்கூறிய நேர மேலாண்மைக்கு அவர்களுக்குக் கை கொடுப்பது இந்த விடயமும் தான்.
3) திட்டமிட்ட கடின உழைப்பு - கடின உழைப்பிற்கும் திட்டமிட்ட கடின உழைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம்மவர்களும் கடினமாக உழைக்கத் தெரிந்தவர்கள் என்கிறபோதும், அதைத் திட்டமிடாமல் செய்வதால் அக்கடின உழைப்பின் பலன் பெரும்பாலான நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. ஜப்பானியர்களை இந்த விடயத்தில் நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி ராஜு.ராஜு சரவணன் wrote:என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் சொல்லும் பாணியில்(செய்முறை,வடிவமைப்பு) அவனது வேலைகளை செய்து கொடுக்கும் அடிமைகள் தான் நாம். அவர்கள் பயன்படுத்தும் பாணியை விட புதியதொரு பாணியை உருவாக்கி அவர்களுக்கு சவால்விடும் திறமை நமக்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.
2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.
3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.
தாய்மொழி கல்வி அவசியம், ஆயினும் முழுக்க தமிழ் வழியில் படித்தவர்கள் கூட, அவர்கள் படிப்பதை புரிந்து படிப்பதில்லை. கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். குழந்தை வளர்ப்பு
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
பார்த்தீபன், தங்களின் பதிவுக்கும் நன்றி.
உங்கள் கருத்தை முழுவதும் ஏற்கிறேன், திறமை எங்கிருந்தாலும் ஏற்க வேண்டும்.
திறமைகளின் மூலம், அவர்களின் சமூக ஒழுங்குமுறைகளின் அடிப்படை என்ன என்று ஆராய்வது தான் நாம் செய்ய வேண்டியது.
மேலும் தொடர்வோம்.
உங்கள் கருத்தை முழுவதும் ஏற்கிறேன், திறமை எங்கிருந்தாலும் ஏற்க வேண்டும்.
திறமைகளின் மூலம், அவர்களின் சமூக ஒழுங்குமுறைகளின் அடிப்படை என்ன என்று ஆராய்வது தான் நாம் செய்ய வேண்டியது.
மேலும் தொடர்வோம்.
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
தாய்மொழி கல்வி அவசியம், ஆயினும் முழுக்க தமிழ் வழியில் படித்தவர்கள் கூட, அவர்கள் படிப்பதை புரிந்து படிப்பதில்லை. கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். குழந்தை வளர்ப்பு
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
ramubabu- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
மதிப்பீடுகள் : 22
Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்
ஒரு நாடு வளம் பெற சிறந்த, சுயசிந்தனை மிக்க மக்கள் அவசியம். சிறந்த மக்களை உருவாக்க சீரான அரசியல் கட்டமைப்பும், முறைகேடற்ற அதிகாரிகளும் அவசியம். பல நேரங்களில் அரசியலையும், அதிகாரத்தை மட்டும் குறை சொல்ல முயலும் நாம், இவர்கள் அனைவரும் நம்மில் இருந்து புறப்பட்டவர்களே என்பதை மறந்து விடுகிறோம். மக்களுக்கு எந்த அளவுக்கு விழிப்புணர்வு, தகவலின் உண்மையை பகுத்துணரும் திறமையும் இருக்கிறதோ அந்த அளவுக்கு ஊழல் குறைந்திருக்கும்.
நாம் தாய் மொழியில் பேசினாலும், சிந்தித்தாலும் ஒரு விஷயத்தை தமிழ்மொழியிலே எழுத, பேச முயலும் பொழுதும் நம்மால் அதை சரி வர கோர்வையாக செய்ய இயலுவதில்லை. திறமைக்குறைவுக்கு பயிற்றுமொழி மட்டும் காரணமில்லை. அடிப்படையை புரிந்து கொள்வதிலிருந்து இது ஆரம்பம் ஆகிறது.
ஒரு மனிதரின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது அவர் கற்கும் கல்வி, பெறும் அனுபவம், பகுத்தறியும் அறிவு ஆகிய மூன்று விஷயங்கள் தான். கல்வியும், பெற்றோரும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி முறையை உடனடியாக மாற்ற இயலாது, ஆயினும் பெற்றோரின் அணுகுமுறையை மாற்றுவது சுலபம்.
இந்தியா மட்டுமல்ல பல ஆசிய நாடுகளும் புரிதலற்ற கல்வியை போதிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த மேலாண்மை பல்கலைக்கழகங்கள் ஒரு சிறந்த நிர்வாகிக்கு என்ன என்ன திறமை வேண்டும் என்று நினைக்கிறதோ, அவற்றை குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாய் அமைத்திருப்பதே வளர்ந்த பிறநாடுகளின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இவ்வகை திறமைகளில் பட்டியலிட்டு அவைகளின் ஆணிவேர் என்னவென்று தேடுவது தான் நாம் செய்ய வேண்டியது. அதில் ஒரு சில
Analytic Skills
Conceptual thinking
Communication Skills
Decision Making
Job Delegation
Leadership
Planning and Organising
Problem solving
Response to situation
Strategic thinking
Time management
Social Behavior
வெற்றிக்கான இந்தக் காரணிகள் நமக்கு புதிதல்ல, திருக்குறள், மகாபாரதம், பஞ்ச தந்திரக்கதைகள், நம்நாட்டு இலக்கியங்களில் இவைகள் புதைந்துள்ளது. மறந்த இவற்றை புதுப்பித்தாலே போதும், நம் திறமை அடுத்தவரை சவால்விடும் அளவுக்கு வளர்ந்துவிடும்.
இத்திறமைகளைப் பற்றி விரிவாக விவாதிப்போம்.

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|