புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
jairam
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
8 Posts - 5%
prajai
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
viyasan
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_m10Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 53 matches for பிரம்ம_ரிஷியார்

ஒரு கிலோ கோதுமைக்கு பாகிஸ்தான் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், இந்நேரமும் திருந்தவில்லை, உக்ரேனுக்கு ஆயுதம் விற்று கிடைத்த பணத்தில் மக்களுக்கு என்ன செய்கின்றதோ இல்லையோ காஷ்மீரில் இன்னும் தீவிரவாதத்தை தூண்டுவதும் மேலும் மேலும் இந்தியாவினை சீண்ட நவீன விமானங்களை வாங்குவதுமாக இருக்கின்றது.


காஷ்மீரில் நேற்று இந்திய படையினர் சென்ற வாகனத்தை தீவிரவாதிகள் தகர்த்து ஐவரை கொன்ற நேரம் பாகிஸ்தான் விமானப்படை துருக்கியிடம் இருந்து வாங்கும் 24 ஆளில்லா நவீன தாக்குதல் விமானங்களை பற்றி அறிவிக்கின்றது, இனி எதிரியினை தொலைப்போம் என்கின்றது.

பாகிஸ்தானுக்கு ஒரே எதிரி இந்தியா எனும் வகையில் இது இந்தியாவுக்கான எச்சரிக்கை, துருக்கியின் ஆளில்லா விமானங்கள் கொஞ்சம் பலமானவை எனும் வகையில் இது இந்தியாவுக்கான எச்சரிக்கை.

துருக்கி அதிபர் எர்டோகன் பழைய ஓட்டோமன் சாம்ராஜ்ய கனவில் இருப்பதால் அப்படியே பழைய கனவில் இருக்கும் பாகிஸ்தானுக்கு சலுகை விலையிலோ அல்லது இலவசமாகவோ இதனை வழங்கியிருக்கலாம்.

சமீபகாலமாகவே இந்த பாகிஸ்தான் துருக்கி நெருக்கம் இப்போது இந்தியாவுக்கு சவாலாக மாறியுள்ளது.

இந்தியாவிடமும் அமெரிக்க தயாரிப்பு ஆளில்லா விமானம் உண்டு, கூடுதல் விமானம் வாங்கவும் பேச்சு நடக்கின்றது இதனால் இங்கு பாகிஸ்தான் கை ஓங்காது.

இந்திய பாகிஸ்தான் எல்லை காஷ்மீரில் மலைப்பாங்கானது என்பது இந்தியாவுக்கு அனுகூலம், பஞ்சாப் எல்லையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் போதும்.

பாகிஸ்தான் வறுமையில் வாடும்நேரமும் இந்திய துவேஷத்தில் ஆயுதம் வாங்குவது புதிதல்ல, முன்பு ஜூபிக்ர் அலி பூட்டோ காலத்தில் கடும் வறுமையில்தான் அவர்கள் அணுஆயுத தயாரிப்பு தொடங்கினார்கள், அது சர்ச்சையாயிற்று.

அப்போதும் பூட்டோ "எம்மக்கள் புல்லை தின்றும் நாட்டை காப்பார்கள்" என்றார், இப்போதோ புல் கூட இல்லை என்பதுதான் விஷயம்.


பாகிஸ்தான் இந்தியாவுடன் மும்முறை மோதி ஹாட்ரிக் தோல்வி அடைந்த நாடு, பலமுறை தொடக்கத்திலே விக்கெட் இழந்து ஓடிய சம்பவமும் உண்டு. ஒவ்வொரு முறையும் யுத்தத்தை யார் தொடங்குவார்கள் என்றால் அவர்கள்தான், இந்தியா முடித்துமட்டும் வைக்கும்.

அப்படி இன்னொரு முறையும் தோல்வி பெற தயாராகின்றார்கள், தோற்று நீண்டநாள் ஆகிவிட்டால் அப்படி ஒரு ஆசை வருவது ஒன்றும் ஆச்சரியமல்ல, வரட்டும் வழக்கம்போல பெறுவதை பெற்றுச் செல்லட்டும்.


இந்தியாவின் விண்வெளி நிறுவணம் இஸ்ரோவின் வர்த்தக போட்டியாளராகலாம் என கருதப்படும் அமெரிக்காவின் எலன் மஸ்க் என்பரின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவிய சில வினாடிகளில் வெடித்திருக்கின்றது.

இது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் வெடித்து சிதறுவது முதல்முறை இல்லை என்றாலும் இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

200 மீட்டர் உயரத்துக்கு மேல் கொண்ட அந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தினை தொடர்பு கொள்ள அனுப்பபட்டது என்கின்றன செய்திகள்.

சர்வதேச விண்வெளி திட்டத்தில் அமெரிக்காவின் நாசா எந்த ராக்கெட்டையும் பெரிதாக செலுத்தவில்லை. அங்கு செல்ல ரஷ்யாவின் சோயுஸ் மட்டுமே இப்போது உண்டு.

ஒருவகையில் ரஷ்ய ராக்கெட்டுக்கள் பாதுகாப்பானவை, விபத்து அதிகமில்லா சாதனையினை கொண்டிருப்பவை, எலன் மஸ்க் ரஷ்ய விண்வெளி ஆதிக்கத்தை தகர்க்க உருவாக்கப்பட்டவர் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌.

இப்போது மறுபடியும் அவர் சறுக்கியிருக்கின்றார், இனி விண்வெளி தேவைக்கு ரஷ்யாவினைத்தான் உலகம் நம்ப வேண்டும், என்னதான் உக்ரைன் தொடர்பாக ரஷ்யாமேல் பல நடவடிக்கை என்றாலும் இன்றும் விண்வெளி அமைப்பில் ரஷ்யாவினை விலக்கி வைக்க யாருக்கும் வழியில்லை.

இந்தியாவின் ராக்கெட்டுகள் நம்பகமானவை என்றாலும் சர்வதேச நிலையத்துடன் இணையும் அளவு இந்தியா அந்த பக்கம் தன் ஆய்வை திருப்பவில்லை, அது வர்த்தக செயற்கை கோள்களை ஏவுவதோடு நிற்கின்றது, விரைவில் இந்த ஆய்வு பக்கம் செல்லலாம்.

2030ல் செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்து செல்வேன் என சொல்லிகொண்டிருப்பவர் எலன் மஸ்க், அவரின் இந்த சிறிய முயற்சியே சொதப்பிய நிலையில், அடிக்கடி அவர் ராக்கெட் வெடிக்கும் நிலையில் இனி செவ்வாய் கேள்விகுறிதான்


சீர்காழியில் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய செப்பு பட்டயங்கள் தேவாரம் பாடிய வரிகள் செதுக்கபட்ட பட்டயங்கள் கிடைத்திருக்கின்றன‌

ஆனால் ஒரு தமிழனால் இதனை இன்று வாசிக்க முடியுமா என்றால் முடியாது, இவ்வளவுக்கும் தமிழில் தமிழர்களால் எழுதபட்ட தமிழ் பட்டயம்

ஆனால் சுமார் 3 ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய சீன கல்வெட்டை சீனரால் வாசிக்க முடியும் அதையே தம் தம் நாடுகளில் இத்தாலிகாரனால் லத்தீனையும், யூதனால் ஹீப்ரூ மொழியினையும் பல்லாயிரம் வருடத்துக்கு முந்தைய வடிவில் இருந்தாலும் படிக்க முடியும்

தமிழனால் அது முடியாது

காரணம் அய்யா ராம்சாமி செய்த எழுத்து சீர்திருத்தம் அவருக்கு வழிகாட்டிய அந்த பெஸ்கி எனும் இத்தாலிகாரனும் செய்த சதியும் அப்படி

தமிழன் தன் தொன்மையினை படிக்க முடியாமல் போக செய்யபட்ட சதி அது, இதோ அந்த சதி சரியாக வேலை செய்கின்றது, நம் மொழியினை நம்மாலே படிக்கமுடியவில்லை

எவ்வளவு பெரிய வீழ்ச்சி இது?

விரைவில் திராவிடத்துக்கு முடிவு கட்டி சங்ககால தமிழை மறுபடியும் கொண்டுவரவேண்டியது அவசியம்

அது ஒன்றும் சிக்கலே அல்ல, முதலில் கடினமாகத்தான் இருக்கும், ஓரிரு தலைமுறை திணறும் ஆனால் வருங்கால தலைமுறை முன்னோர்கள் கண்ட தமிழுடன் இணைந்துவிடும்

அதை அவசியம் செய்தல் வேண்டும்

தமிழுக்கு தலைவைத்தார்கள் , தமிழ்மொழி காக்க 100 பேர் செத்தார்கள், மொழிபோர் என்றெல்லாம் அரசியல் செய்யபடும் தமிழகத்தில் தமிழ் இப்படித்தான் வாழ்ந்திருக்கின்றது

தஞ்சையில் மராட்டியன் கட்டிவைத்த சரஸ்வதி மாளிகையும், அவன் சேகரித்த சுவடிகளையும் நோக்கும் போது, மராட்டியனுக்கிருந்த தமிழ் ஆர்வம் கூட இந்த தமிழ் திராவிட கோஷ்டிக்கு இல்லை என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது

காரணம் அவன் இந்து எனும் வகையில் தமிழ் சுவடிகளை இந்து சொத்துக்களாய் சேகரித்தான், இவர்களுக்கோ அடிப்படையிலே இந்துவெறுப்பு

அந்த வெறுப்பில்தான் தமிழை சிதைத்தார்கள்

எவவளவு பெரிய பாவத்தை இந்த அபலை இனம் மேல் சூட்டியிருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது , இதனையெல்லாம் களைய நம்மிடம் ஒரு தலைவன் இல்லை எனும் பொழுது நெஞ்சம் விம்முகின்றது

"விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

தமிழச் சாதி எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?"

என அழுத பாரதிதான் நினைவுக்கு வருகின்றான்

அந்த சுவடிகளை கையில் ஏந்தி ஆசை தீர படித்து கொண்டாடி, நம் குலசொத்து நம் பாரம்பரிய சொத்து என கொண்டாட வேண்டிய தமிழகம், ஊமை தாயினை கண்ட குருட்டு குழந்தை போல அருமை சுவடிகள் கிடைத்தும் வாசிக்க முடியாமல் தலை குனிந்து இயலாயமையில் கதறி நிற்கின்றது

#பிரம்ம_ரிஷியார்
அண்ணாமலையின் திமுகவின் சொத்துபட்டியலை தினமலர் தவிர‌ உள்ளிட்ட சில ஊடகங்களை தவிர எந்த ஊடகமும் சொல்லவில்லை என்பது ஆச்சரியமல்ல‌

காரணம் தமிழக பிரதான ஊடகங்கள் பல தங்கள் ஊழலை மறைக்க பல அரசியல்வாதிகளால் நடத்தபடுபவை அவை அப்படித்தான் இருக்கும்

மக்களும் இதனால் அந்த ஊடகங்களில் விளம்பரம், சினிமா, சீரியல் என்பதோடு நிறுத்துகின்றார்கள், மனது கனத்திருந்தால் அந்த டிவிக்களை பார்த்து சிரிக்கின்றார்கள்

உதாரணத்துக்கு அண்ணாமலை அந்த பரபரப்பு அறிக்கையினை தரும்போது சில ஊடகங்களில் ஊறூகாய் செய்வது எப்படி என சீரியசாக விளக்கி கொண்டிருந்தார்கள், சில ஊடகங்கள் ஆன்மீகம் பேசிகொண்டிருந்தன, சில ஊடகம் கோலம்போடுவது எப்படி என சொல்லிகொண்டிருந்தன‌

இதனால் மக்கள் வாய்விட்டு சிரித்தார்கள், இவ்வளவுதான் தமிழக ஊடகங்கள்

திமுகவினர் பலர் மேல் அண்ணாமலை கைகாட்டிய நிலையில் அவர்கள் வாயே திறக்கவில்லை மாறாக அந்த பட்டியலில் இல்லா ஆர்.எஸ் பாரதி மட்டும் குதித்துகொண்டிருந்தார்

அதற்கும் காரணமிருக்கலாம்

தனக்கு பின் அரசியலுக்கு வந்த உதயநிதி, அன்பில் மகேஷ் , துரைமுருகன் பையனுக்கெல்லாம் பல்லாயிரம் கோடி சொத்து அறிவிக்கபட்ட நிலையில் நீண்டகால தொண்டரான தனக்கு அப்படி சொத்து இல்லையே எனும் ஏக்கத்தில் சீறியிருக்கலாம்

தன் கட்சியினை பழிவாங்க அவர் இன்னும் பல விஷயங்களை செய்யலாம்

அண்ணாமலை இந்த பட்டியலை ஊழல் பட்டியல் என சொல்லவில்லை மாறாக திமுகவினர் குவித்த இமாலய சொத்தும் அதற்கான மூலபணம் எங்கிருந்து வந்தது எனும் கேள்வி ஒன்றையே அவர் எழுப்பியிருக்கின்றார்

அந்த அந்நிய நிதி 200 கோடி ஸ்டாலினுக்கு கொடுக்கபட்டதுதான் விஷயம்

இதுபற்றி வாய்திறக்க வேண்டியவர் ப.சிதம்பரம், காரணம் அன்றைய மத்திய நிதி அமைச்சராக அவர் சம்பந்தபட்ட விவகாரம் இது

ஆக விவகாரம் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வெடிவைக்கும் நோக்கிலும் செல்கின்றது, காங்கிரசார் இதனாலேதான் மகா அமைதி

அண்ணமலையின் அறிக்கை எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்பதெல்லாம் அரசியல் அறிவற்றவர்க்கள் சொல்வது

அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இதன் வீரியம் அதிகம், ஓசைபடாமல் சுனாமி போல அது தாக்கும் போதுதான் விஷயம் தெரியும்

அதுவரை கடல் பதுங்கிவிட்டது வற்றிவிட்டது என கடலோரம் விளையாடுபவர்கள் ஆடட்டும், அவர்களை நினைத்து பரிதாபடுவதைவிட ஒன்றும் செய்யமுடியாது

#பிரம்ம_ரிஷியார்
தான் சொன்னபடியே திமுக மேலான பட்டியலை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை

இது அரசு நிர்ணயித்த விலை மதிப்பில் வெளியிடபட்ட பட்டியல் நிஜத்தில் இந்த சொத்துமதிப்பு மிகபெரிதாக இருக்கலாம், மிக பாதுகாப்பாக இந்த பட்டியலை தயாரித்துள்ளார் அண்ணாமலை

விஷயம் சொல்வது இதுதான்

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் திமுக சல்லிகாசு செலவழிக்காதபடி அடித்து முடக்க கிளம்பிவிட்டார்கள், தமிழகத்தின் மிகபெரிய சீர்கேடான பண அரசியலுக்கு முடிவுகட்ட இறங்கிவிட்டார்கள்

மிகபெரிய திட்டத்துடன் பாஜக கால் வைத்திருப்பது தெரிகின்றது, பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அடித்து ஆடி தேசிய அரசியலில் திமுகமேல் ஒரு பிம்பம் விழவும் வழியினை தொடங்கிவிட்டார்கள்

பணம் ஒன்றுதான் திமுகவின் பலம் அதை முறித்தால் திமுக காற்றுபோன பலூனாகும் என்பதை சரியாக உணர்ந்துவிட்டார்கள்

அண்ணாமலை தன் நடைபயணத்திற்கு மிகபெரிய விஷயத்தை மக்கள் முன்னால் வைத்துகொண்டு கிளம்புகின்றார், ஒரு வகையில் நல்ல வியூகம் இது

எல்லா விஷயத்தையும் சொத்துகுவிப்பு என காட்டும் அண்ணாமலை ஷெல் கம்பெனி ஸ்டாலினாருக்கு கொடுத்த 200 கோடி விவகாரத்தை மட்டும் கையில் எடுக்கின்றார்

இதுபற்றி தானே சிபிஐ அமைப்பிடம் இதுபற்றி புகார் அளிப்பதாக சொல்வதுதான் திமுகவுக்கு கொஞ்சம் சிக்கலான விஷயம்

மற்றவை மக்கள் உணர்ந்து கொள்ளலாம் அல்லது பாஜக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கலாம்

நிச்சயம் இந்த சொத்துபட்டியல் அதிர்ச்சிதான் இந்நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் தமிழகம் பீஹார் போன்ற மாகாணம், மெக்ஸிகோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் சில ஆப்ரிக்க நாடுகள் போல எல்லாமே ஊழல், பணம், அடிதடி என சட்டம் ஒழுங்கு இழந்த பிரதேசமாகலாம் வாய்ப்பு இல்லாமல் இல்லை

திமுகவின் பெரும் தலைகள் சில பதில்களை தந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன, உதயநிதி ஸ்டாலினார் அதனில் முக்கியமானவர்
தமிழகத்தை ஆளும் கட்சியாக இதனை திமுக மவுனமாக கடந்து செல்லமுடியாது என்பது நிதர்சனம்

திமுக இதனை எப்படி எதிர்கொள்ளும் என்பது இனிதான் தெரியும், அண்ணாமலை மிக துணிச்சலான காரியத்தை தொட்டிருக்கின்றார்

அந்த ஷெல் கம்பெனியின் 200 கோடி பணம் திமுகவுக்கு கொஞ்சம் சவாலான விஷயம்தான்

2011ல் இது நடந்ததாக அவர் சொல்கின்றார், அப்பொழுது காங்கிரஸின் மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தது கவனிக்கதக்கது
அவ்வகையில் காங்கிரஸ் கட்சிக்க்கும் இது கொஞ்சம் சிக்கலே

அது என்ன ராசியோ தெரியவில்லை , 200 ரூபாய் 200 கோடி என்பதெல்லாம் ஒரு திமுக சென்டிமென்ட், அந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கலைஞர் டிவி வழக்கும் 200 கோடி பரிமாற்றத்தில்தான் தொடங்கிற்று...

#பிரம்ம_ரிஷியார்
ஏதோ மிக கடுமையாக உழைத்து, தன் குடும்பம் பந்தம் எல்லாம் துறந்து, வாழ்வை துறந்து மிக தீவிரமாக உழைத்து பாஜகவுக்கு 40 எம்பியும், 200 எம்.எல்.ஏவும் பெற்று கொடுத்தது போலவும், அதை மதிக்காமல் மோடி செயல்படுவது போலவும் தமிழகத்தில் சிலர் பொங்கி கொண்டிருக்கின்றார்கள்

இணையத்தில் இம்மாதிரி மனநோயாளிகள் அதிகம்

கொஞ்சம் இணையமும் சில பதிவுகளும் இட்டுவிட்டால் மோடி ஏன் தன்னை கேட்டு தமிழகம் வரவில்லை, ஸ்டாலினார் கையினை எப்படி பிடிக்கலாம், ஆளுநர் ஏன் இப்படி செய்தார் என கடும் கண்டனங்கள்

ஆனானபட்ட காஷ்மீரை விடுவித்து சவால் மிகுந்த வடகிழக்கு மாகாணம், சிக்கல் நிறைந்த காசி, தொட்டாலே எரியும் ராமர்கோவில் சிக்கல் என எல்லாம் தீர்த்தவர்களுக்கு, எவ்வளவோ மலைகளை தகர்த்தவர்களுக்கு திமுக எனும் மடுவினை எப்படி கையாள்வது என்பது தெரியாமலா இருக்கும்?

நிச்சயம் இருக்கும்

பாஜகவினை புரிந்துகொள்ளாதோர்தான் இப்படி புலம்புகின்றார்கள், பாஜகவின் அடிப்படை தன்மையே தான் மட்டும் ஆளவேண்டும் எதிரிகள் இருக்கவே கூடாது , ஆட்சியும் நம் பலமும் மட்டுமே திரும்பும் இடமெல்லாம் இருக்கவேண்டும் என்ற கொள்கை அல்ல‌

அவர்களுக்கு நாடு முக்கியம், நாட்டின் இயக்கம் முக்கியம், ஒவ்வொரு மாகாணத்தின் அமைதி முக்கியம், சட்ட மீறல் இருக்க கூடாது, தேவையென்றால் புது சட்டமியற்றலாம் எனும் அந்த மனப்பான்மை முக்கியம்

எங்கும் எதிலும் தவறான முன்னுதாரணம் காட்டிவிட கூடாது என்பதில் சரியாக இருப்பார்கள்

அதே நேரம் நாட்டிற்கு எது ஆபத்தோ அதை தீவிரமாக எதிகொள்வார்கள், எது உடனடி ஆபத்தில்லையோ அதனை கொஞ்சம் தள்ளிவைப்பார்கள்

அவர்கள் கணிப்புபடி திமுக நாட்டுக்கு உடனடி ஆபத்து அல்ல, அதன் ஒரே கொள்கை பணம், பணம் , பணம் ஒன்றே

இதற்காக அந்நிய தீவு போராளிகளை தமிழர்கள் என்றாலும் கைவிடுவார்கள், திராவிட நாட்டை கைவிடுவார்கள், இந்தி பள்ளிகளை நடத்துவார்கள் இன்னும் என்னென்னவோ செய்வார்கள்

சிறுபான்மை பாதுகாப்பு அது இது என்பார்கள் அதே நேரம் என்.ஐ.ஏ கைது நடந்தால் அவர்களே பிடித்தும் கொடுப்பார்கள்

பாஜகவினை கடுமையாக விமர்சிப்பார்கள் மோடி வந்தால் ஓடிசென்று கைபிடிப்பார்கள்

அவர்களின் வெற்று கூச்சலெல்லாம் சிறுபான்மை வோட்டுகான நாடகம் என்பதும் எல்லோரும் அறிந்தது

இதனால் பாஜக திமுகவினை கொஞ்சம் தள்ளிதான் வைக்கும், அதிமுக அழிந்துகொண்டிருக்கும் நேரம் தன்னை வலுபடுத்த திமுக எதிர்ப்பை பிரதானமாக எடுக்காது, அதாவது ஆட்சி ரீதியாக எடுக்காது

ஆனால் அரசியல் ரீதியாக திமுகவின் ஒரே கொள்கையான பணத்தை ஊழலை மக்களுக்கு தெரிவிக்க அது கட்சி ரீதியான ஏற்பாடுகளை அண்ணாமலை மூலமாக செய்யும்

இதுதான் அவர்கள் நிலைப்பாடு, தற்போது நடப்பது

இது புரியாதவனுக்கு அரசியல் புரியவில்லை பாஜக கடந்துவந்த பாதையும் அவர்கள் அரசியலும் புரியவில்லை என பொருள்

பொதுவாக தமிழன் எம்ஜிஆர், ரஜினி, விஜயண்ணா படங்களை பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டான் , இந்த ஹரி படங்கள் இன்னும் நிலமையினை மோசமாக்கிவிட்டன‌

அதனால் அவன் எதிர்பார்ப்புபடி ஆளுநர் சட்டசபையில் நுழைந்து எல்லோரையும் வீசி சிலரை தூக்கி செல்வது, அண்ணாமலை பறந்து பறந்து சுட்டு ஆட்சியினை பிடிப்பது, மோடி தனி ஆளாக வந்து ஸ்டாலினை விமானத்தில் கொண்டு செல்வது போன்றவை எல்லாம் ஒரு காலமும் நடக்காது

இது அரசியல், ஒவ்வொரு அசைவுக்கும் பொறுமை நிதானம் அவசியம், நாட்டு நிலை மாகாண நிலை என ஒவ்வொரு அசைவும் அவசியம், மக்கள் மனநிலை அதைவிட அவசியம்

அதனால் தாங்கள் பலம்குறைந்த தமிழகத்தில் எப்படி மெல்ல மெல்ல தங்களை பலபடுத்தவேண்டுமோ அப்படித்தான் செய்வார்கள் அதை நாட்டுக்கும் மாகாணத்துக்கும் சிக்கல் வராதபடி செய்வார்கள்

அதுசரியாக நடக்கும், மெல்லத்தான் நடக்கும்

மற்றபடி இரண்டுமணிநேர சினிமா சாகசத்தை இங்கு எதிர்பார்த்தால் நடக்காது, அதெல்லாம் சாத்தியமில்லை

சரி, இங்கே மோடி பாஜக என பலத்த கருத்து சொல்பவன் யாராவது தெருவில் இறங்கி உழைத்திருப்பானா? நாலுபேரை கட்சியில் சேர்த்திருப்பானா? கட்சிக்காக ஏதும் செய்தானா என்றால் இல்லை

இவர்களெல்லாம் ரஷ்ய புட்டீனுக்கே இங்கிருந்து போர்வியூகம் சொல்லிகொடுப்பவர்கள் அதையே மோடிக்கும் சொன்னால் மோடி அசையமாட்டார், அவர் நாட்டுக்கும் கட்சிக்கும் மாகாணத்துக்கும் எது சரியோ அதைத்தான் செய்வார், காலம் அதை காட்டும்

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 J2gW8ih

அண்ணாமலை பாரதியாரை பற்றி வியந்து பேசியது நல்ல விஷயம், ராஜாஜி உள்பட எந்த பிரபல அரசியல்வாதியும் பாரதியினை தொடவே இல்லை விலக்கித்தான் வைத்தார்கள்

அதனை காமராஜர் தொடர்ந்தார், அண்ணா முதல் பழனிச்சாமி வரை தொடர்ந்தார்கள்

இங்கு பாரதியினை புரிந்துகொண்டு விலக்கி வைத்தவர் ராஜாஜி முதல் அண்ணா, கருணாநிதி என சில கொஞ்சம் புத்திசாலிகள், இவர்களுக்கு பாரதி நன்றாக புரிந்தான்

ஆனால் காங்கிரசின் எதிரி என ராஜாஜி தள்ளிவைத்தார் , அண்ணா கருணாநிதி பற்றி கேட்கவே வேண்டாம்  பிராமணன் என விரட்டி வைத்தார்கள்

இங்கே பன்னீர் பழனிச்சாமி பற்றியெல்லாம் சொல்லவே முடியாது அவர்களுக்கு ஏதும் புரியாது

இப்படிபட்ட தமிழகத்தில் அண்ணாமலை பாரதியினை முழுக்க புரிந்தது மகிழ்ச்சி

பாரதியின் "காக்கை குருவி" எங்கள் சாதி என அவன் அத்வைத கருத்தை கொண்டாடியதை சொன்ன அண்ணாமலை , மாபெரும் ஞான்சித்தமாக அவர் சொன்ன "நிற்பதுவே நடப்பதுவே" என பாடியதை கிட்டதட்ட ஐன்ஸ்டீனும் அகத்தியனும் கலந்த பிம்பமாக பாடியதை ஏனோ சொல்லவில்லை

அப்படியே அவர் சொல்லாமல் விட்ட விஷயம், 1903 வரை தன் இலக்கு எது என தெரியாமல் ஆசிரியபணி இன்னும் பலவகை பணிகளில் சுற்றிதிரிந்த பாரதியின் வாழ்வு சகோதரி நிவேதிதையினை சந்தித்தபின்பே மாறிற்று

ஆம், என்று சுவாமி விவேகானந்தரை தன் ஞானகுருவாக ஏற்றாரோ அந்த நொடியில்தான் அவர் முழுக்க மாறினார் தன் சுதர்மத்தை உணர்ந்தார்

இதனை அண்ணாமலை ஏன் சொல்லவில்லை என தெரியவில்லை

இதெல்லாம் தமிழகத்தில் மறைக்கபட்ட பக்கங்கள் பாரதி விவேகானந்தரையும் வீரசிவாஜியினையும் முழுக்க கொண்டாடியவன்

ஆனால் அவன் பிறந்த எட்டயபுர வீட்டில் சுவாமி விவேகானந்தருக்கோ வீரசிவாஜிக்கோ ஒரு படம் கூட இல்லை, காணவே இல்லை

ஏன் வைக்கவில்லை? சுவாமி விவேகானந்தர் எனும் அவர் ஞானகுருவினை தமிழக மக்களிடம் இருந்து மறைத்த சக்தி எது என்பது பற்றி தெரியவில்லை

வீரசிவாஜியினை அவ்வளவு கொண்டாடிய பாரதியினை பற்றி மக்களுக்கு தெரியவிடாமல் மறைத்தவர்கள் யார்?

அண்ணாமலை இதனையெல்லாம் குறித்து கொள்வது நல்லது...

#பிரம்ம_ரிஷியார்
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Fb_img25


அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம்

ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று

அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த திராவிட பெரும் சதிக்கு அவனும் தப்பவில்லை

பிராமணன் எல்லோரும் சாதிவெறியர்கள் என்ற ஈரோட்டு ராம்சாமியின் பொய்க்கு அவரும் தப்பவில்லை

வ.வே.சு அய்யர் எனப்படும் வ.வே.சுப்பிரமணிய அய்யர். அவருக்கு வர்னாஸ்ம வெறியர் என ஈரோட்டு ராம்சாமி எனும் தேசவிரோதி பட்டம் சூட்டியது அவரின் அந்திம காலத்திலே

ஆனால் ஈரோட்டு ராம்சாமி இங்கு மைனராகவும் ஒரு மாதிரி ஆசாமியாகவும் சுற்றி கொண்டிருந்த பொழுதே இந்நாட்டுக்கு போராடி முடித்துவிட்டுத்தான் சேரன்மகாதேவி குருலத்துக்கு வந்தார் அய்யர்

அவரை குற்றம் சொல்லும் தகுதி கொஞ்சம் கூட ஈரோட்டு ராம்சாமிக்கோ அவரின் கோஷ்ட்டிகளுக்கோ அறவே கிடையாது

வ.வேசு அய்யர் திருச்சியில் 1881ல் பிறந்தார், அங்கே பள்ளி முடிந்து மணமும் செய்துவிட்டு பின் ரங்கூனில் சில காலம் இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்

அவருக்கு கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் என 6 மொழிகள் தெரிந்திருந்தது

லண்டன் அவரின் வாழ்வினை மாற்றியது, மிக பெரும் தேசபக்தர்களும் போராளிகளுமான சாவர்க்கர், திங்காரா, பிபின் சந்திரபால் போன்ற பெரும் பிம்பங்களோடு பழகினார், இவர்கள் தங்கியிருந்த வீட்டில் லண்டனில் அபிநவபாரத் சங்கம் தொடங்கபட்டது.

இந்தியாவினை வெள்ளையன் ஆள்கின்றான், அவன் வழியில் அவனை ஒழிக்க வேண்டும் என்ற முடிவில் துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் போன்ற போர் பயிற்சிகள் அந்த சங்கத்தால் வழங்கபட்டன, 30 பேர் அதில் இருந்தார்கள்

ஒருபக்கம் ஆயுத பயிற்சி என்றாலும் இன்னொரு பக்கம் எழுத்தாற்றல் அய்யருக்கு அழகாய் வந்தது, அங்கிருந்து பாரதியாரின் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதினார். அதற்கு பெரும் வரவேற்பும் இருந்தது

1909 அவரின் வாழ்வில் திருப்புமுனையான ஆண்டு, முதன் முதலாக இந்திய தேசிய விழா என ஒன்றை தொடங்கி அதை தசரா அன்று கொண்டாடினார், இந்தியா இந்துநாடு என்பதில் மாற்றமே இல்லை அக்காலமுமில்லை இக்காலமுமில்லை

அதைத்தான் அன்றே கொண்டாடினார் அய்யர், அதற்கு பேச அழைக்கபட்டார் காந்தி. அய்யரின் புகழ் பரவியது

இதே ஆண்டில் இன்னொரு வீரசம்பவம் நடந்தது, ஆம் கர்சான் லில்லி என்றொரு ஆங்கில கமாண்டர் இருந்தான் கொடுங்கோலன், 1900 வங்க பஞ்சத்தில் அவனால் செத்த இந்தியர் ஏராளம். அவனால் அழிந்த குடும்பங்கள் ஏராளம், ஜெனரல் டயர் போன்றவன் அவன்

அவனை லண்டனில் அசால்ட்டாக போட்டு தள்ளினான் மதன்லால் திங்காரா, பிரிட்டிஷ் தளபதியினை லண்டனிலே நாயினை போல் சுட்டு கொன்றதில் அதிர்ந்த பிரிட்டன் அபிநவபாரத் சங்கத்தை தேடி ஒழிப்பதில் இறங்கியது

சாவர்க்கர் கைதானார், அய்யர் பெயர் பட்டியலில் இல்லை ஆனால் பிரிட்டிஷ் எதிர்ப்பினை கைவிட்டு வாய்மொழியும் கைசாத்தும் வைத்தால் மட்டுமே "பாரிஸ்டர்" பட்டம் என பிரிட்டன் சொன்னது

அதை ஏற்க மறுத்து பட்டம் முக்கியமல்ல நாடு முக்கியம் என பட்டம்பெறாமலே வெளியேறினார் அய்யர், இவர் மிக ஆபத்தானவன் என முத்திரை குத்தி தேடதொடங்கியது பிரிட்டன்

பின் சீக்கியர் போல் வேடமிட்டு பிரான்சுக்கு தப்பி கொழும்பு வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு 1910ல் வந்தார், பிரிட்டன் கைது செய்யும் அபாயம் இருந்ததால் பாண்டிச்சேரியில் தங்கினார்.

ஆம் பிரிட்டிஷாரை எதிர்க்கமாட்டேன் என சொல்லியிருந்தால் பாரிஸ்டர் பட்டத்தோடு வந்து கோடி கோடியாக சம்பாதித்திருக்க கூடிய அய்யர், தேசத்துக்காக தலைமறைவாய் அனாதையாய் திரிந்து பாண்டிச்சேரியில் சாமான்யனாய் நின்றிருந்தார்

அங்கும் குருகுலம் ஆரம்பித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார், அதில் ஒருவன் வாஞ்சிநாதன், ஆஷ்துரையினை சுட்ட வாஞ்சிநாதனின் துப்பாக்கி பிரான்ஸ் தயாரிப்பு,அதை கொடுத்தது அய்யர் என்றாலும் பிரிட்டனிடம் ஆதாரமில்லை என்பதால் அவர்மேல் நடவடிக்கை இல்லை

இந்நிலையில் முதல் உலகப்போர் தொடங்கிற்று, அய்யரை ஆப்ரிக்காவின் அல்ஜீரியாவுக்கு நாடு கடத்த சொன்னது பிரிட்டன், பிரான்ஸ் மறுத்தது. அய்யர் பாண்டிச்சேரியிலே தங்கினார்

பாரதியார் பத்திரிகை, திருவிக பத்திரிகை என தொடர்ந்து எழுதினார், பின்னாளில் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் என அறியபட்ட அய்யரின் எழுத்துக்கள் அங்குதான் சீரடைந்தன‌

முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டன் வெற்றிபெற, யாரும் அசைக்கமுடியா சாம்ராஜ்யமான ஓட்டொமன் துருக்கி ராஜ்ஜ்ஜியமே சிதற பிரிட்டன் எதிர்ப்பாளர்களுக்கு பெரும் சோகமும் சலிப்பும் உண்டாயிற்று

நிச்சயம் ஒரு போர் வரும் பிரிட்டன் மண்ணை கவ்வும் என்றுதான் ஆயுத வழியில் சாவர்க்கர் , அய்யர், திங்காரா, வாஞ்சிநாதனெல்லாம் வந்தார்கள் ஆனால் காலம் கைவிட்டபின் மனம் நொடிந்தார்கள்

அவர்களுக்கு கொஞ்ச நாளில் இரண்டாம் பெரு யுத்தம் வருவதோ நேதாஜி எழும்புவதோ தெரியாது தெரிந்திருந்தால் அந்த முடிவுக்கு வந்திருக்கமாட்டார்கள்

ஆம், இரண்டாம் உலகபோரில் ஜெர்மனோடு சேர்ந்து நேதாஜி செய்ததைத்தான் முதல் உலகபோரில் இந்த கோஷ்டி ஆட்டோமன் சாம்ராஜியம் ஜெர்மனுடன் சேர்ந்து ரகசியமாக செய்ய பார்த்து தோற்றது

ஆனால் அவர்களின் முயற்சியும் தியாகமும் வீரவரலாறு, வாழ்த்துகுரியது

இப்படி மனமுடைந்த நிலையில்தான் இனி ஆயுதபோராட்டம் சாத்தியமில்லை என அமைதிவழிக்கு திரும்பினார்கள், சாவர்க்கரின் மன்னிப்பு கடிதமெல்லாம் இக்காலத்தில் நடந்ததே

அய்யரும் அப்படி பொது மன்னிப்பு பெற்று பிரிட்டிஷ் இந்தியாவின் திருச்சிக்கு வந்தார், ஆம் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து , நாட்டு விடுதலைக்காய் பரதேசியாய் திரிந்த அவர் 15 வருடம் பின்புதான் தோற்றுவிட்ட கணவனாய் மனைவியினை பார்த்தார்

பாரிஸ்டர் பட்டமுமில்லை, கையில் காசுமில்லை ஆனால் விடுதலை கனவு மட்டும் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்தது, அந்த அற்புதமான எழுத்தாளனின் எழுத்து அணலை மூட்டி கொண்டே இருந்தது

ஒரு கட்டத்தில் சில கட்டுரைகளுக்காக அவரை பெல்லாரி சிறையில் அடைத்த பிரிட்டன் அரசு அவரை பழி தீர்த்து ரசித்தது

பின் வெளிவந்த அய்யர் பாரதியாருடன் பல புரட்சிகளை செய்தார்

அய்யர் பாரதியாருடன் சேர்ந்து கனகலிங்கம் எனும் தலித்துக்கு பூனூல் அணிவித்து நீ இந்தியன் என கட்டி தழுவிய காட்சிகளெல்லாம் வரலாற்றில் உண்டு

ஆம், அவர் சாதிவெறியர் என்பதெல்லாம் ராம்சாமி சொன்ன பச்சைபொய்.

பாரதியின் கடைசி காலங்களில் அவரோடு இருந்தவர் அய்யர், "பாரதி, மருந்தை எடு. நாட்டின் சுதந்திரத்தை பார்க்க உயிரோடு இரு, அதற்காகவாது எழு" என தழுதழுத்த குரலில் அடிககடி சொன்ன அய்யர் பாரதியின் கடைசி கால பக்கங்களில் கண்ணீர் நினைவாய் நிற்கின்றார்

கதர் வேட்டியும் மேலே கதர் துண்டுமாக போர்த்தி கொண்டு நடந்த‌ அந்த அய்யர், பெரும் நண்பனும் அறிவாசானுமான பாரதியின் மறைவுக்கு பின் சென்னையில் இருக்க முடியாமல் தவித்தார்

ஒரு நல்ல இடம் , தனிமையான இடம் பரபரப்பில்லா இடம் அவருக்கு தேவைபட்டது, அப்படித்தான் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு வந்தார், அங்கு ஒரு குருகுலம் அமைத்தார்

அந்த தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், தொழிலும் உடல்வலிவுப் பயிற்சிகளும் அழகு ஆங்கிலமும் இதர மொழிகளும் போதிக்கப்பட்டன.

தேசபற்றும் பன்மொழி புலமையும் மிக சிறந்த சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்களை அவர் உருவாக்கி கொண்டிருந்தார்

அவர் கையில் காசு இல்லை, மாணவர்களின் பெற்றோரும் மற்றவர்களும் கொடுக்கும் காசில்தான் குருகுலம் இயங்கிற்று, அதில் பிராமண மாணவர்களுக்கு சைவமும் இதர மாணவர்களுக்கு அசைவமும் கொடுக்கபட்டது அது தனி தனியாக கொடுக்கபட்டது

பெற்றோர் விருப்படிதான் கொடுக்கபட்டது, இதில் தவறேதுமில்லை எல்லா பள்ளி கல்லூரிகளிலும் இன்றளவும் சைவ அசைவ மெஸ்கள் தனி தனியேதான் உண்டு.

ஆனால் தேசபற்று மிக்க மாணவர்களை அய்யர் உருவாக்குகின்றார் , அவர் குருகுல மாணவர்களுக்கு தேச உணர்வு வருகின்றது என்ற கவலை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டாயிற்று

ஏற்கனவே லண்டனில் கர்ணல் கர்சன் கொலை, ஆஷ்துரையின் கொலையில் அவர்மேல் சந்தேகம் இருந்ததால் ரகசிய கண்காணிப்பும் இருந்தது, அய்யர் குருகுலத்தில் இன்னொரு வீரன் உருவாகிவிட கூடாது எனும் அச்சமும் பிரிட்டன் அரசுக்கு இருந்தது

ஆனால் அவனால் குழப்பமுடியாது, சட்டத்தில் இடமில்லை. என்ன செய்யலாம் என யோசித்த அவனுக்கு தன் அடிப்பொடி ஈரோட்டு ராம்சாமியின் நினைவு வந்தது

அவன் கண் காட்டியதும் ஈரோட்டு ராம்சாமி சேரன்மகாதேவி ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் என பெரும் ஆர்ப்பாட்டம் செய்து, பிராமண வெறி அது இது என குதித்து குத்தாட்டம் போட்டது

சேரன்மகாதேவியில் இருந்து 20 கிமீ தொலைவில் வடக்கன்குள கிறிஸ்தவ ஆலய சாதி சண்டைக்கு ராம்சாமி செல்லவில்லை ஏனென்றால் அது வெள்ளையன் ஆசிபெற்ற இடம் அங்கு செல்லமாட்டார்

இப்படி தன் ஏவலாளை வைத்து அய்யரை பழிவாங்கினான் பிரிட்டிஷ்காரன், ஆனாலும் அய்யர் மனம் தளரவில்லை

அவருக்கு அப்பொழுது 44 வயதுதான் ஆகியிருந்தது. அதற்குள் பெரும் காரியங்களை செய்திருந்தார்

திருகுறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், கீதைக்கு ஆங்கில உரை, கம்பனை ஆங்கிலத்துக்கு மாற்றியது என ஏராளம் , அவர் கம்பனை வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தோடு ஆய்வு செய்து அதை நுணுக்கமாக எழுதினார்

மிக சிறந்த ராமயண ஆய்வு அதுவே

நெப்போலியன் வரலாற்றையும் கரிபால்டி வரலாற்றையும் இங்கு கொண்டு வந்தவர் அவரே, தமிழ் இலக்கிய உலகின் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவர்தான்

ரவுத்திரம் பழகிய அய்யராக, ஆயுதம் தாங்கிய அய்யராக, பக்தி இலக்கியம் தேசபற்று என பல் முகங்களுடன் வலம் வந்த அய்யருக்கு விதி மகள் வடிவில் வந்தது

அய்யர் பெண்ணுரிமைக்கு பாரதி போல் முன்னுரிமை கொடுத்தார், இதனால் செல்லும் இடமெல்லாம் தன் மகளை அழைத்து சென்றார்

பாபநாசம் அருவி பக்கம் ஒரு சிற்றோடையில் மாணவர்களுக்கு தாண்டு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார், அந்த பயிற்சியினை மகளுக்கும் கொடுத்தார்

அந்த சிறுமி தாண்டும் பொழுது தவறி அருவியில் விழுந்தார், மகளை தாங்கிபிடிக்க விழுந்த அய்யர் அங்கே பலியானார்

திருச்சியில் பிறந்து லண்டனுக்கு சென்று அங்கு பிரிட்டிஷ்காரனை அலறவிட்டு வாழ்வினை தொலைத்து பின் தாயகம் திரும்பி எழுச்சியும் தேசபற்றுமிக்க ஒரு தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட அந்த மாமனிதன் பாபநாசம் அருவியில் 44ம் வயதில் மகளோடு செத்து கிடந்தான்

அவன் செய்த தவறு என்ன? பிரிட்டிஷ்காரனை எதிர்ப்பேன் என உறுதியாய் சொன்னது நாட்டுக்காய் கடைசிவரை பாடுபட்டது

அந்த மாமனிதனைத்தான் ஈரோட்டு ராம்சாமி எனும் தேசத்வேஷி வர்னாசிரம வெறியன் என திட்டி தீர்த்தார், தீரா பழிசுமத்தினார்.

இன்று அந்த வ.வே.சு அய்யரின் பிறந்த‌ நாள்,

இந்தியாவின் மிக சிறந்த விடுதலை போராட்ட வீரரும், மிக சிறந்த எழுத்தாளரும் தேசத்துகாக வாழ்வினை அர்பணித்த அந்த மாமனிதனுக்கு அஞ்சலிகள்

ஆயுதம் அறவழி என எல்லா வழிபோராட்டத்திலும் அவர் பெயர் இருக்கும். சாவர்க்கர், திங்காரா, வாஞ்சிநாதன் போன்றோர் பெயர் இருக்கும் வரை அய்யரும் இருப்பார்

பாரதிபெயர் ஒலிக்குமிடமெல்லாம் அவரும் இருப்பார்

நிச்சயம் அவர் தேசபற்றும் மதபற்றும் உணர்ச்சியுமிக்க ஒரு நல்ல தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட்டார், அவரின் கனவு இப்பொழுது நிறைவேறி கொண்டிருக்கின்றது

மத அபிமானமும் தேசாபிமானமும் கொண்ட மாபெரும் இளைய தலைமுறை உருவாகி கொண்டிருக்கின்றது

ஒரு நாள் விரைவில் வரும் அன்று அவரை விமர்சித்து பழிசுமத்தியோர் அடையாளம் கடலில் எறியபடும், மாமனிதனும் தேசபற்றாளனும் தேசத்தின் குரலுமான வ.வே.சு அய்யரின் புகழும் அடையாளமும் அழியா இடம்பெறும்

பாபநாசம் மலையிலோ இல்லை சேரன்மகாதேவி பக்கமோ அவருக்கு நினைவிடம் ஏதுமில்லை, விரைவில் மிகபெரிய அடையாளம் அம்மாமனிதனுக்கு அமைக்கபடும், காலம் அதை செய்யும்

#பிரம்ம_ரிஷியார் #வ.வே.சு.அய்யர்
உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு

தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது

ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட‌

சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா மகா புண்ணிய ஷேத்திரமுமானது அந்த ஆரூர்.

சர்வதோஷங்களுக்கும் பரிகார தலம் அதுவே

63 நாயன்மார்களில் அந்த ஆலயம் தொழாத நாயன்மார்கள் மிக மிக குறைவே, அவர்கள் வாழ்வின் அதிசயமெல்லாம் அங்குதான் நடந்தது

கைலாயத்தை அடுத்து சிவனுக்கு பிரசித்தியான இடம் அதுதான் என்ற அளவில் அதன் பெருமை உண்டு, சிவபெருமான் எக்காலமும் வாழும் ஆலயம் அது

"திருவாரூரில் பிறந்தாலே முக்தி" என்பார்கள் ஆன்றோர்கள்

அந்த ஆலயத்தின் பெருமையினை போலவே மிக பிரசித்தி பெற்றது அந்த ஆழிதேர், அதன் வரலாறும் தொன்மையும் பிரமாண்டமானது

இன்றும் உலகின் மிகபெரிய தேர் அதுதான், ஆசியாவின் மிகபெரிய தேர் அது என சொல்வதில் நியாயமில்லை, பாரதம் தாண்டி எங்கே தேரோட்டம் உண்டு? தேர் வழிபாடு உண்டு?

ஆக அந்த தேரினை உலகின் மிகபெரிய தேர் என்றே ஏற்றுகொள்ளலாம் உண்மையும் அதுவே

அந்த தேர் எப்படி செய்யபட்டது என்பதற்கு முன் அந்த திருவாரூரின் பொற்காலம் அறிதல் அவசியம்

ராஜ ராஜ சோழனுக்கு பெரியம்மா செம்பியன் மாதேவிதான் இங்கு செங்கல் ஆலயத்தையெல்லாம் கற்றளி எனும் கல் ஆலயமாக மாற்றினாள், அவள் வழி வந்த ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அந்த திருவாரூர் ஆலயத்தையே மாற்றி வைத்தார்கள்

அதுவும் ராஜேந்திர சோழன் அந்த கருவறையினையும் கோபுரத்தையும் தங்கத்தாலே அலங்கரித்து மகிழ்ந்தான்

ஆம் தஞ்சை பெரியகோவில் கோபுரம் முழுக்க தங்கத்தால் வேயபட்டது போல் திருவாரூர் கோவிலிலும் இருந்தது

"உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய்
மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான்" எனும் அவன் கீர்த்தி அதை சொல்கின்றது இது கல்வெட்டிலும் உண்டு.

ராஜேந்திரனின் நாயகி பரவை அந்த ஊரை சார்ந்தவள் எனும் வகையில் அவளும் ராஜேந்திரனும் ஏற்றிவைத்த விளக்கு இன்றும் அங்கு உண்டு

உண்மையில் சோழர்களின் வரலாற்றை சொல்வது திருவாரூர் ஆலய கல்வெட்டுகளே, ராஜராஜன் ஐப்ப்சி சதயத்திலும், ராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரையிலும் பிறந்தான் என்பதை அதுதான் சொல்லிற்று,

அக்கல்வெட்டுகள் இன்றும் அங்கு உண்டு

ஆப்கானிய கில்ஜியின் ஆப்ரிக்க கொள்ளையன் மாலிக்காபூர் காலத்தில் அந்த ஆலயத்தின் தங்கமெல்லாம் சுரண்டபட்டு வெறும் கற்சுவர் மட்டும் இப்பொழுது நிற்கின்றது, சோழர்கள் இப்படி பல ஆலயங்களை பொன்னால் வேய்ந்தார்கள், அதில் இன்று சிதம்பரம் ஆலயம் மட்டும் தப்பி நிற்கின்றது

பெரிதிலும் பெரிது இறைவனுக்கு கொடுத்து வந்த சோழ இனம் அதை தஞ்சை கோவிலில் செய்தது, அங்கே லிங்கத்தில் செய்தது, அப்படியே இங்கே திருவாரூர் தேரிலும் செய்தது

அந்த பழைய தேர் அக்கால பிரமாண்ட வாகனங்களின் சாயலாய் இருந்தது, தஞ்சை கோவிலை கட்டவும் பிரமாண்ட ஆலயங்களை கட்டவும் இப்படியெல்லாம் வண்டி இருந்திருக்கலாம் என்பதை அதுதான் சொல்லிற்று

ஆம் அந்த தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன, இடபுறம் 5 வலபுறம் ஐந்து என பெரிய சக்கரங்கள் இருந்தன

இந்துக்களின் விஷேஷ எண்ணும், சிவ வழிபாட்டில் ஒரு சுழற்சியினை சொல்லும் 108 எனும் எண்ணை குறிப்பதாக 108 அடி உயரம் வரை இருந்தது

மிக உறுதியான மரங்களாலும் இரும்பு உள்ளிட்ட வார்ப்பு பொருட்களாலும் அது மகா உறுதியாய் இருந்தது

சோழநாட்டு இந்துக்களின் சிவபக்தியினை உலகுக்கு சொல்லும் மாபெரும் அடையாளமாய் அதிசயமாய் அது விளங்கிற்று , ஒரு வகையில் அது உலக அதிசயமுமாயிற்று

சுமார் 500 டன் எடையில் 108 அடி உயரத்தில் பத்து சக்கரங்களுடன் வலம் வந்த, பெரும் யானைகளால் இழுக்கபட்ட அந்த தேர் அன்று அதிசயமே

அவ்வளவு பெரும் தேரை எப்படி இழுத்தார்கள், எப்படி திருப்பினார்கள் என்பதெல்லாம் இன்றுவரை அதிசயமே

அரண்மையும் தேரும் என்பது அரச அடையாளம் என கருதபட்ட காலத்தில், அரசனனுக்கெல்லாம் அரசன் சிவனுக்காய் பெரும் ஆலயம் அமைத்த அந்த இந்து அரசர்கள் அந்த தேரினையும் அமைத்தார்கள்

பொதுவாக நகர்வலம் என்பது மன்னன் மக்களின் சுபிட்சத்தை காணவும், நடக்க முடியாதோர் நோயுற்றோர்களுக்கு காட்சி தந்து நம்பிக்கையளிக்கவும் செய்யபட்ட ஏற்பாடு

அதை தெய்வத்துக்கும் கொடுத்தார்கள் இந்துக்கள், கோவிலுக்குள் வரமுடியாதவர்களெல்லாம் தெருவில் வணங்க அதை இழுத்து வந்தார்கள்

அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கோவிலுக்குள் நுழையத்தான் சிலருக்கு சில கட்டுபாடுகள் உண்டே தவிர, தேரில் வரும் தெய்வத்தை வணங்க யாருக்கும் எந்த கட்டுப்பாடும் அன்று இல்லை

தேர் இழுப்பு என்பதை ஊர் ஒற்றுமையாகவும் செய்தமதம் இந்துமதம், ஊர் கூடி தேர் இழுத்தல் என்பது மிகபெரிய உளவியல் மகிழ்வும் மக்களிடம் ஒற்றுமையும் பக்தியும் ஏற்படுத்தும் விஷயமாயிற்று

பெரும் பக்தியும் அப்பகுதி முழுக்க ஒற்றுமை ஏற்படவுமே அந்த பிரமாண்ட தேரை செய்தார்கள் மன்னர்கள், ஆம் சோழநாடே கூடி இழுத்த தேர் அது

“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடியது அந்த தேரை கண்டே.

மகா உற்சாகமாக அந்த விழா அன்று தொடங்கிற்று, பல காலம் தொடர்ந்தும் வந்தது, சில நூறு ஆண்டுகளில் சோழ வம்சம் வீழ்ந்து டெல்லி சுல்தானிய கொள்ளையர்களால் சில பாதிப்புகள் வந்தன, பின் நாயக்க மன்னர்கள் காலத்தில் அதன் உலா தொடங்கிற்று

பின் வெள்ளையன் காலத்திலும் நடந்தது

சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஓடிய அந்த தேருக்கு முதல் சோதனை 1926ம் ஆண்டு வந்தது, ஆம் ஒரு பங்குனி உத்திரத்தில்தான் வந்தது

அது என்னவோ தெரியவில்லை பல நூறு ஆண்டுகள் எரியாமலும் உடையாமலும் இருந்த இந்து ஆலயங்களெல்லாம் 18ம் 19ம் நூற்றாண்டில் திடீர் திடீரென எரிந்தன‌

தென்காசி கோவில் முதல் பல கோவில்கள் அப்படி எரிந்தன‌

எவ்வளவுதான் இந்துக்களை ஒழித்தாலும் கோவிலும் தேரும் அவர்களை மீண்டெழ வைக்கின்றது என சில சக்திகள் கவலைபட்ட காலங்கள் அவை

அந்த கொடிய காலங்களில் தான் 1926ம் ஆண்டு ஒரு தேரோட்டத்தின் பொழுது எரிந்தது, ஆம் முற்றிலும் எரிந்தது

கீழரத வீதிவழியாக கிளம்பிய தேர் தேர் கமலாலயம் கரையில் மாற்றுரைத்த விநாயகர் கோவில் கடந்து சென்ற பொழுது தீ பற்றி எரிய துடங்கியது

அந்த தேர் இரு நாட்களாக எரிந்தது, பெரும் நகரம் தீபற்றி எரிவது போல் எரிந்தது, பல கிமி தொலைவில் இருந்தும் பார்க்கும் படி எரிந்தது

காணகிடைக்காத அந்த தேர் எரியும் பொழுது இந்துக்கள் கண்ணீர் விட முடிந்ததே தவிர அதை காக்க முடியவில்லை, அந்நாளைய பிரிட்டிஷ் அரசும் அதற்கு பெருமுயற்சி எடுக்கவில்லை இன்றுள்ள தொழில்நுட்பமுமில்லை

கிட்டதட்ட 3 நாட்களாக எரிந்து முடிந்தது அந்த கலை பொக்கிஷம், அக்னி தேவனுக்கு அந்த தேரை அவ்வளவு பிடித்து போயிற்று எடுத்து கொண்டான்

இந்துக்கள் மனம் தளரவில்லை, சோழநாட்டு தனவான்களெல்லாம் கூடி மறுபடியும் தேரை செய்தார்கள் 1928ல் தொடங்கி 1930ல் அது முடிந்தது, அதுவும் 10 சக்கரம் கொண்ட தேர்

ஆனால் 1948க்கு பின் அது ஓடவில்லை, இந்தியாவில் நடந்திருந்த அரசியல் மாற்றம், உலக குழப்பம், வறுமையான இந்தியா, அதை தாண்டி அந்த தேரால் ஏற்பட்ட உயிர்பலி என பல விஷயங்கள் அதை நிறுத்தின‌

அப்பொழுது திருவாரூர் பகுதியில் பரவியிருந்த கம்யூனிச திக கருத்துக்கள் அதை இன்னும் முடக்கின‌

ஆளில்லா வீடும், ஓடாத கப்பலும் தேரும் வீணாகும் என்பதை போல் பூட்டி வைக்கபட்ட அந்த தேர் 1975 வரை ஓடவிலை பழுதடைந்தது

சுமார் 28 ஆண்டுகாலம் தேர் இல்லாமலே திருவிழா நடந்தது

அதை ஓடவைத்திருக்கலாம், ஆனால் நடக்கவில்லை ஏன் என்றால் காங்கிரஸின் காமராஜரும் நேருவும் ஒரு நாத்திக கோஷ்டி, பசும்பொன் தேவர் போன்றவரெல்லாம் தேரோட்டம் வேண்டுமென்றால் அதை வேண்டுமென்றே தவிர்த்த கோஷ்டி

இதனால் தேரோட்டத்தில் அரச தலையீடும் இல்லை மக்கள் சொன்னாலும் அவர்கள் கேட்கவுமில்லை

இடையே நாத்திக திராவிடம் வேறு வந்து நிலமையினை மோசமாக்கிற்று

"ஏரோட்டும் மக்கள் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் உனக்கு தேவையா" என திருவாரூர் நாதனையே பேசிய கோஷ்டி, திருவரங்க நாதனையே பீரங்கி வைத்து பிளப்போம் என்ற கோஷ்டி எப்படி ஓடவிடும்

அப்படியே 1970ம் வருடமாயிற்று, திருவாரூர் பக்கம் வடபாதிமங்கலத்தில் தியாகராசர் என்றொரு பக்திமிக்க பணக்காரர் இருந்தார் அவர்தான் இத்தேர் மறுபடி ஓட ஆசை கொண்டார், அப்பொழுது மாநில முதல்வர் கருணாநிதி

அவருக்கும் தன் நாத்திக இமேஜை மாற்றவேண்டும் என்ற ஆசை இருந்தது, கூடவே தன் முன்னோர்கள் வழிபட்ட ஆலயம் எனும் ஒரு பக்தியும் மனதில் இருந்தது

உண்மையில் அவரும் திருவாரூர் தேரின் ரசிகன், தன் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல இடங்களிலும் பள்ளி பாடபுத்தகத்திலும் அந்த தேர்படம் வருமாறு கவனமாக பார்த்துகொள்வார்

அவருக்கு தேர் ஓடவேண்டும் எனும் ஆசை இருந்தது, அப்பொழுது திருச்சி பெல் நிறுவணமெல்லாம் தலையிட்டு பிரேக் சிஸ்டமெல்லாம் மாற்றி, 10 சக்கரம் 4 சக்கரமாக குறைக்கபட்டு இன்றிருக்கும் தேர் வந்தது

அதிலிருந்து அது ஓடிகொண்டிருக்கின்றது, நிச்சயம் இது ஆதிகால தேர் அல்ல அது இதைவிட பெரியது. இத்தேர் 96 அடி உயரமும் சுமார் 300 டன்கள் எடையும் கொண்டது

இந்த 3ம் தேரின் தேரோட்டம் இப்பொழுது வருடா வருடம் நடக்கின்றது, ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது

அதாவது ஆகம விதிபடி அந்த தேர் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் ஓடி 3 நாட்களில் அதாவது பங்குனி உத்திரம் அன்று நிலைக்கு வரவேண்டும் அப்பொழுது உத்திரம் கொண்டாட்டம் நடக்கும்

ஆனால் 30 ஆண்டுக்கு மேலாக அது அந்த முறைபடி நடக்கவில்லை, பக்தர்கள் கத்தினாலும் அரச காதுக்கு எட்டவில்லை

கருணாநிதியோ பார்ப்ண கோரிக்கை என அவர்போக்கில் இருந்தார், ஜெயா அரசும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை

பள்ளி தேர்வுகள் உள்பட பல காரணங்களை சொல்லி தவிர்த்தார்கள்

கடந்த வருடம் அது மிக சரியாக ஆயில்ய நட்சத்திரம் அன்று ஓட இருக்கின்றது, உத்திரம் அன்று மிக பிரசித்தி பெற்ற அந்த தேர் வீதிக்கு வந்தது

இந்தவருடம் எப்படி இழுத்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை

அந்த தேர் அவ்வளவு அழகு, கயிலாயமே அசைந்து ஆடிவருவது போல் வரும் அந்த தேரை காண கண்கோடி வேண்டும், அதுவும் போதாது

அந்த தேரில் சோழர்களும், நாயன்மார்களும், மாபெரும் சிவபக்தர்களும் அது மீண்டெழ காரணமான தியாகராஜ முதலியார் மட்டுமல்ல இன்னொருவரும் தெரிவார்

அவர் பெயர் முத்து கொத்தனார்

கொத்தனார் என்றால் தேரின் மேல் கூரையினை கட்டி அலங்கரிக்கும் கொத்தனார், 1926ல் அவர்தான் அந்த கூரையினை அமைத்திருந்தர்

அந்த கொடிய தீ ஏற்பட்டபொழுது உயிருக்கு அஞ்சாமல் துணிந்து ஏறி புனிதமான தியாகேஸ்வர சிலையினை காப்பாற்றியவர் அவரே

மிக கனமான அந்த சிலையினை நகர்த்தி தனி மனிதனாக அவர் போராடி காத்தது வரலாறு, அந்த தேரின் வரலாற்றில் அவருக்கும் இடம் உண்டு

இன்றும் தேர் கட்டும் பணியினை அவரின் வாரிசுகளே செய்கின்றார்கள்

தஞ்சை கோவில் போல அந்த தேரும் ஒரு கம்பீர அடையாளம். செழித்திருந்த தமிழகத்தில் ஓங்கியிருந்த சைவத்தின் தனிபெரும் அடையாளம்

திருவாரூர் எனும் சிவனின் பிரசித்தி பெற்ற தலத்தின் கம்பீரமுமான அந்த தேரினை தரிசித்து பலன் பெற போகும் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்

உலகின் மிகபெரிய தேர் இறைவனை சுமந்து ஆடி அசைந்து வந்து அருள் கொடுக்கபோகும் காட்சியினை ஒவ்வொரு தமிழக இந்துவும் மிக பெருமையாகவும் நன்றியோடும் வணங்குதல் வேண்டும்.

இந்த பெருமை உலகில் எந்த இனத்துக்கும் இல்லை, நம்மை தவிர எவனுக்குமில்லை

ஒரு காலம் வரும் அன்று அந்த தேர் சோழமன்ன காலம் போல 10 சக்கரத்துடனும் 108 அடி உயரத்துடனும் மிக பிரமாண்டமாக மறுபடியும் உலா வரும், நிச்சயம் வரும்

வரலாறு என்பது எப்பொழுதும் சுழல்வது, இந்துக்கள் ஒடுக்கபட்டு தாழ்த்தபட்ட இந்த ஆயிரம் ஆண்டுகளில் அந்த தேர் சுருங்கியிருக்கலாம்

இப்பொழுது நடக்கும் இந்து எழுச்சியில் அந்த தேர் மறுபடி தன் அதிஉன்னத நிலையினை அடைந்தே தீரும் இது சத்தியம்

"ஆரூர் தியாகேசா" என்ற கோஷம் முழங்க உலகின் மிகபெரிய தேரும், இந்துக்களின் மிகபெரிய அடையாளமும், தமிழக இந்துக்களின் வரலாற்று பெரும் பெட்டகமுமான அந்த தேர் இன்று அசைகின்றது

அது வெறும் அசைவல்ல, திருவாரூர் நாதன் பவனிவரும் அழகு மட்டுமல்ல, அது இந்து தமிழர் பெரும் வரலாறும் பக்தியும் கண்முன் அசைந்து வரும் பெரும் அடையாள வடிவம், அந்த தேரை வணங்கி உலகில் எவனுக்கும் இல்லா பக்தி கலாச்சார பெருமை எங்களுக்கு உண்டு என கம்பீரமாக சொல்கின்றது பாரதத்தின் தமிழகம்

#பிரம்ம_ரிஷியார்
சிவா
Fri Mar 31, 2023 4:46 pm

Search in: இந்து
Topic: காசி வாழ தேசம் வாழும்
Replies: 0
Views: 356
Topics tagged under பிரம்ம_ரிஷியார் on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 4 Fb_img24

காஷ்மீரம் இந்துக்களின் பெரும் அடையாளம், நேபாள ஆலயங்கள் பத்ரிநாத் போன்ற தலங்கள் ஆகியன போல காஷ்மீரிலும் இந்த் அடையாளம் நிரம்ப உண்டு

அதில் சாரதா பீடம் முக்கியமானது, இந்துக்களின் பக்தி மற்றும் கல்வியின் அடையாளமாக இருந்தது, யுவான் சுவாங் இந்தியா வந்தபொழுது அங்கு தங்கியிருக்கின்றான் அதன் சிறப்புக்கள் அவன் நூலில் உண்டு

சந்தண மரத்தில் செய்யபட்ட சரஸ்வதி சிலையும் நல்ல அழகான கட்டமாகவும் இருந்த இநத ஆலயம் வேதபாட சாலையாக இருந்தது

காஷ்மீரின் மிக மிக பிரசித்தியான ஆலயமாகவும் இந்துக்களின் அடையாளமாகவும் காஷ்மீர் பண்டிட்டின் பெருமையாகவும் அது கருதபட்டது

14ம் நூற்றாண்டில் இருந்து இது பாழ்பட தொடங்கிற்று, அந்நிய ஆக்கிரமிப்புகள் அதை செய்தன, மொகலாயரிடம் சிக்கி இன்னும் அழிந்தது எனினும் சீக்கிய மன்னன் குலாப்சிங் ஆட்சியில் இந்த ஆலயம் புதுபிக்கபட்டது

ஆனால் இந்திய பாகிஸ்தான் பிரிவினையிலும் பின்னர் எழுந்த குழப்பங்க‌ளிலும் பாகிஸ்தான் இந்திய காஷ்மீர் எல்லையின் மிக அருகில் இருந்ததாலும் இது முற்றிலும் பாழ்பட்டது

அழிந்துவிட்ட அந்த ஆலயத்தின் கற்கள் மட்டுமே எஞ்சியிருந்தது

இந்நிலையில்தான் மோடி அரசு காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தது, அதற்கு முன் காஷ்மீரின் தனி அந்தஸ்து காரணமாக எதும் யாரும் காஷ்மீரில் செய்யமுடியாதபடி சிக்கல்கள் இருந்தன‌

மோடியின் துணிச்சலான நடவடிக்கையால் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்து இப்பொழுது ரயில் சேவை பனிசறுக்கு பொழுதுபோக்கு மையம் என காஷ்மீரின் முகமே மாறிகொண்டிருக்கின்றது

இந்நிலையில் சாரதாபீடமும் புதுபிக்கபட்டிருக்கின்றது

மிக மிக சுவாரஸ்யம் அல்லது ஆச்சரியம் என்னவென்றால் இந்த கோவில் இருக்குமிடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி

மிக மிகசரியாக காய்நகர்த்திய இந்திய அரசு இந்த பகுதிகளை மிக லாகவகமாக எடுத்திருக்கின்றது இதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்களும் உதவியிருக்கின்றார்கள்

எப்படி இதனை திரும்ப பெற்றார்கள் எனபது பெரும் ஆச்சரியம் எந்த தவலும் வரவில்லை, அப்பகுதி மக்களுக்ககும் இந்த ஆலயம் என்றால் மரியாதை இருக்கின்றது

இப்பொழுது 80 ஆண்டுக்குபின் அந்த சரஸ்வதி கோவில் மீண்டும் திறக்கபட்டு பக்தர்களுக்கு திறந்துவிடபட்டிருக்கின்றது, இனி அமர்நாத் யாத்திரை செல்வோர் இந்த சாரதாபீடத்தையும் தரிசித்துவிட்டு வரலாம்

ஆக ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பரிபூரண அமைதிக்கு இந்துமதமும் இந்து ஆலயங்களும் திரும்பி கொண்டிருக்கின்றன, காலமெல்லாம் தான் நடத்திய போரில் தர்மம் வென்று நின்று சிரிக்கின்றது

காசி வாழ தேசம் வாழும் என்பது இதுதான்

தமிழகத்திலும் பிரிட்டிஷ், காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்ட் கூட்டணியில் சிதைந்த ஆலயம் உண்டு, கேரள எல்லையில் இருக்கும் கண்ணகி ஆலயம் அப்படியானது, அந்த ஆலயமும் இப்படி துலங்க உரிய காலம் வந்துகொண்டே இருக்கின்றது என்பதுதான் ஆறுதலான செய்தி...

Back to top

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next