புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
46 Posts - 41%
prajai
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
4 Posts - 4%
Jenila
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
1 Post - 1%
kargan86
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
1 Post - 1%
jairam
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
94 Posts - 56%
ayyasamy ram
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
8 Posts - 5%
prajai
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_m10 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

நென்மேலி - பிண்டம் வைத்த நல்லூர் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 12:42 pm

நென்மேலி !

 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! KDJ7Fy8RdyjzlaOQQTFR+Tamil-Daily-News-Paper_2217479944230

பிண்டம் வைத்த  நல்லூர்- ஸ்ராத்த ஸம்ரட்சண  நாராயணன் !

பெற்றேர்களை உயிரோடு இருக்கும் வரை காப்பதற்க்குப்பெயர் கடமை அவர்கள் காலமானவுடன் அவர்களுக்கு செய்வதற்கு பெயர் கடன் கடனை அடைக்கவில்லையென்றால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து நம் குட்டிகள் தலையில் தான் விழும் அப்படி விழாமல் இருக்க பித்ரு கர்மக்களை விடாமல் செய்யவேண்டும். ஷேத்திரங்களுக்கும் சென்று  பித்ரு பரிகாரங்கள் செய்யலாம் 

முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா  மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதிகள் அமையாது.

செங்கல்பட்டு அருகில் நென்மேலி  என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றி சிறு குறிப்பு.

செங்கல்பட்டு அருகே நென்மேலி  என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள  
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது. மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய  கயா என்றும் வழங்கப்படுகிறது.

இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்தஸ்ரீ யாக்ஞவல்கியரைக்  குருவாகக் கொண்ட சுக்ல யஜுர்  வேதத்தை  சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.

மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும்  தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க  விரும்பாமல்  திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.

அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள்  இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.

இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும்.

ஸ்வாமி  இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.

தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை  ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி  போஸ்ட், நத்தம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053.

இந்த தலம்  செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து  ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.

பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும். அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வாட்சப் பகிர்வு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 12:44 pm

நீத்தார் கடன் நிறைவேற்றும் நாராயணன் : நென்மேலி ! - தினகரன் பகிர்வு !

 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! LmHUSiSuR42rNVQp6nNo+download(1)

சாதாரணமாக முன்னோர்களுக்கு வருடா வருடம் அவர்கள் மறைந்த தினத்தில் திதி கொடுப்பது என்பது நம் மரபில் வேரூன்றிய விஷயம். ஆனால், தெய்வமே கருணையோடு இறங்கி வந்து மனிதர்களுக்காக திதி கொடுக்கும் அற்புதத் தலம் ஒன்று உள்ளது! அது, நென்மேலி. 17ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் செங்கல்பட்டு உள்ளிட்ட பிரதேசத்தை ஆண்டு வந்தான். ஊருக்கு ஊர் திவான்களை நியமித்து அவர்கள் மூலம் வரி வசூல் செய்தான். அவர்களில் ஒருவர் யக்ஞநாராயண சர்மா. அவரது மனைவி, சரசவாணி. குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணனிடம் அளவு கடந்த பக்தி. அந்த நாராயணனையே தம் மகனாக எண்ணி வாழ்ந்தனர். நென்மேலியில் நாராயணன் கோயிலை நிர்மாணிக்கும் பணியை அந்த தம்பதியர் மேற்கொண்டனர். எந்த கட்டத்திலும் போதும் என்று அவர்களால் திருப்தியடைய இயலாததால் மேலும் மேலும் செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. 

திவானாக இருப்பவர், வரி வசூலிக்கும் அதிகாரம் உள்ளவர், அந்த வசூல் பணத்தில்தானே கோயில் கட்டுமான செலவை சரிகட்டுகிறார் என்ற சந்தேகம் தம்பதியைச் சுற்றிப் படர ஆரம்பித்தது. அதுவே கேள்வியாகக் கேட்கப்பட்டபோது, ‘இவ்வூரையே காத்து பரிபாலிப்பவனுக்குத்தானே செய்தேன்?’ என்று அப்பாவியாகக் கேட்டார்கள் அவர்கள். தகவல் அறிந்து மக்களின் வரிப்பணத்தை தன் இஷ்டப்படி கோயிலுக்குச் செலவழிப்பதா என்று கோபமானான் நவாப். சிறிதும் யோசிக்காமல் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தான். வம்பு பேசிய ஊர்தான் யக்ஞசர்மா தம்பதி மீது அளவற்ற அன்பும் கொண்டிருந்தது. காட்டுத்தீயாக, மரண தண்டனை  விஷயம் காஞ்சிபுரம் தாண்டி நென்மேலியை வந்தடைந்தது. 

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 12:44 pm

 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! Ix7PIt50QtaEkOjlq44e+23032008944

தனக்கான தண்டனையை அறிந்த யக்ஞநாராயணர் தம்பதி, லட்சுமி நாராயண பெருமாள் சந்நதியின் முன்பு கண்களில் நீர் பெருக நின்றனர். மௌனமாக பெருமாளுடன் பேசினர். அவர்கள் மனசுக்குள் திருவிடந்தை ஆதிவராஹரை சுட்டிக் காட்டினார் நாராயணர். உடனிருந்தவர்களிடம், ‘நாங்கள் திருவிடந்தை செல்கிறோம். மரண தண்டனையை அங்கே ஏற்றுக்கொள்ளப் போகிறோம்’ என்றார்கள். அதற்குள் நவாபிற்கு யக்ஞநாராயண சர்மாவின் பக்தி ஈடுபாடு பற்றித் தெரியவந்தது. கோயில் பணி என்பது நவாப் தானாக செய்யவேண்டிய கடமை என்று புரிந்தது. நவாப் கண் கலங்கினார். உடனே நென்மேலியை அடைந்தார். 
அதேசமயம் திருவிடந்தை திருக் குளத்தின் படித்துறையில் கைகள் இரண்டையும் சிரசுக்கு மேல் கூப்பி யக்ஞநாராயண சர்மாவும், சரசவாணியும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். ‘‘முன் ஜென்ம பாவமோ, வினையோ தெரியவில்லை. நாங்கள் இறந்தால் எங்களுக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு மகன் இல்லை. 

ஒரு சொட்டு நீரும், எள்ளும் விடக்கூட வாரிசில்லாமல் இப்படி அனாதைகளாக இறக்கிறோமே என்கிற வேதனை எங்களை வாட்டுகிறது. இறப்பது பற்றி கவலையில்லை. ஆனால், அதற்குப்பின் சாஸ்திரம் சொல்லும் கர்மாக்களை எங்களுக்குச் செய்ய யார் இருக்கிறார்கள்? இறப்புக்குப் பின் பூரணத்வம் பெறாத நிலையில், எங்கள் ஆத்மாக்கள் வேதனையுறத்தான் வேண்டுமா? நாராயணா, எங்களுக்கு நீதான் மகன். உன் மனைவி மகாலட்சுமி, எங்கள் மருமகள். இருவரும் எங்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, எங்கள் நிலையில் யார் இருந்தாலும் உன் சந்நதிக்கு வந்துவிட்டால் அவரவர்களின் முன்னோர்களுக்கு நீயே சிராத்தம் எனும் நீத்தார் கடனை செய்துவிடு’’ என்று உள்ளம் உருகிக் கரைந்தார்கள். பிறகு திருக்குளத்தில் இறங்கி மறைந்தார்கள். நாராயணன் திருவடி சேர்ந்தார்கள்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 12:45 pm

 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! 2e15Q1R8QFyfuEmz5TL8+maxresdefault

நவாப் மாபெரும் தவறு செய்துவிட்டேனே என்று கவலையுற்றார். இதற்கென்ன பிராயசித்தம் என்று லட்சுமி நாராயணப் பெருமாளை நோக்கி கைகூப்பினார். அப்போது லட்சுமி நாராயணர் முன்பு ஒரு பெருஞ்சோதி தோன்றி அசரீரியாகப் பேசியது: ‘‘யக்ஞநாராயண சர்மா தம்பதியைப் பற்றி கவலை வேண்டாம். நானே அவர்களுக்கு மகனாக இருந்து எல்லா ஈமக்கிரியைகளையும் செய்கிறேன். அவர்கள் ஆத்மா சாந்தியடையும். இத்தலத்தில் யார் வந்து, இறந்தோர் ஈமக்கிரியைகளை செய்ய வேண்டினாலும் நானே அவர்களுக்காக அந்தக் கடன்களை நிறைவேற்றுவேன்.’’ ஊர்மக்கள் வியப்பு தாங்காமல் வெகுநேரம் அமைதி காத்தனர். நவாப் கைகள் இரண்டையும் கூப்பித் தொழுதான். அதன்படி இத்தலத்தில் சிராத்தம் எனும் நீத்தார் கடன் நிறைவேற்றும் ‘சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள்’ எனும் திருநாமத்தோடு நாராயணன் சேவை சாதிக்கிறார். 

நென்மேலி தென்றல் தாலாட்டும் அழகிய கிராமம். மத்தியில் குடி கொண்டிருக்கிறார் லட்சுமி நாராயணப் பெருமாள். சிறிய கோயிலாக இருந்தாலும் கீர்த்திக்கு குறைவில்லை. கருவறையில் பிராட்டியை மடியில் அமர்த்திக்கொண்டு தரிசனம் அருள்கிறார். வைகானஸ ஆகம மகான்களால் ஆராதிக்கப்பட்ட இந்த மூர்த்தி. காந்தம் இரும்பைக் கவர்வதுபோல தரிசிப்போரை கருணையால் ஈர்த்துப் பிணைக்கிறார். தாயாருக்கு தனி சந்நதி இல்லை. ஆனால், அபூர்வமாக சாளக்கிராம வடிவில் தாயார் அருள்பாலிக்கிறாள். அருகேயே இந்தத் தலத்தின் சிறப்பு மூர்த்தியான சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவர்தான் இங்கு நீத்தார் கடன் நிறைவேற்றுகிறார். இக்கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர், அர்க்கிய புஷ்கரணி ஜீயர் குளம், சௌலப்பிய கயா என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. 

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 12:47 pm

 நென்மேலி - பிண்டம் வைத்த  நல்லூர் ! D5nrDyqGTeVDAy1UIRwZ+p96

திவசம், திதி, சிராத்தம் என்று பலவிதமாக அழைக்கப்படும் நீத்தார் கடனை ‘அபர காரியங்கள்’ என்பார்கள். அதாவது, சுபமற்ற காரியங்கள். ஆனால், இக்கோயிலில் அதெல்லாம் சுபமான, நல்ல கிரியைகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அதைச் செய்பவர் பெருமாளே அல்லவா? அதனால், ‘சுப சிராத்தம்’ என்கிறார்கள். பித்ருவேளை எனும் பிற்பகல் 12 முதல் 1 மணிக்குள் இந்தக் கிரியைகளை பெருமாள் செய்கிறார். இந்த ஒரு காலம்  மட்டும் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். பெருமாள் திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நதிக்கு வந்து விடுகிறார்கள். மஞ்சள் அட்சதையைத்தான் இங்கு பயன்படுத்துவர். எனவே, மஞ்சள் அட்சதை, எள், தர்ப்பைப் புல், விரலில் அணிந்துகொள்ளும் பவித்ரம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளுக்கு முன்பு வைத்து சங்கல்பம் செய்து கொள்கிறார்கள். 

அதற்குப் பிறகு, கோயிலின் பின்புறத்திலுள்ள விஷ்ணுபாதம் எனும் பெருமாளின் திருவடிக்கருகே சாஸ்திர பண்டிதர் வழிகாட்ட, திதி கொடுக்க வந்தவர்கள் அமர்ந்து தங்கள் மூதாதையருக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிக்கிறார்கள். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிராத்த ஸம்ரக்ஷணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நதிக்கு வருகிறார்கள். பெருமாளுக்கு மகாசங்கல்பமும், சகல உபசாரங்களுடன் பூஜைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இறுதியில் சம்பிரதாயமான திவச சமையல் போலவே வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டை-எள் துவையல் போன்றவை நைவேத்யம் செய்யப்படுகின்றன. இந்த எளிமையான உணவுகளை ஏற்று நம் மூதாதையர்களின் ஆத்மாக்களை பெருமாள் திருப்தி செய்வதாக ஐதீகம்.

இன்றும் இத்தலத்தில் தந்தையை இழந்த மகன், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள், பெற்றோரை நிர்க்கதியாக விட்டுவிட்டு, அவர்கள் மறைவுக்குப் பின் மனம் திருந்தி அவர்களுக்காக திதி கொடுக்க வரும் மகன் என்று விதவிதமாக யார் வந்தாலும் அவர்கள் சார்பில் தானே அவர்கள் ஸ்தானத்தில் நின்று திதி கொடுக்கிறார், சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள். கருணை கடலினும் பெரிது என்பார்கள்.

ஆனால், இத்தலத்தை பொறுத்தவரையிலும் நாராயணன் கருணைக் கடலாகவே திகழ்கிறார். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், 
செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்திலிருந்து பேருந்து வசதிகள் நிறைய உண்டு. மேலும் விவரங்களுக்கு ஆலயத் தொலைபேசி - 04427420053.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக