புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 1:31 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
D. sivatharan
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10 
97 Posts - 57%

46 Posts - 27%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10 
8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை Poll_c10 
2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 2:48 pm

பிருந்தாவின் கதை

பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை.

தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா.

நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் அவள் உடல் தீ பற்றி எரியும் அவஸ்தையை மகாவிஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறாள்.

அவள் சாபப்படி மகாவிஷ்ணுவுக்கு உடல் பற்றி எரிய தொடங்கியது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிருந்தாவின் சிதை சாம்பலுக்குள் ஒளிந்து கொள்ள சொன்னார்

மஹா விஷ்ணுவும் அப்படியே செய்ய அவர் உடல் வெப்பம் தணிந்தது. மாதக்கணக்கில் சாம்பலை விட்டு வெளியே வராமல் அங்கேயே படுத்துக்கொண்டார்.

மகாவிஷ்ணுவை காணாமல் லக்ஷமி, பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும் எல்லா உலகங்களிலும் தேடினார்கள். கடைசியில் சிவ பெருமான் விஷயத்தை சொல்ல, பிருந்தாவின் சிதை சாம்பல் அருகே வந்தார்கள்.

தேவியர் மூவரும் பிருந்தாவின் சிதையில் மண்டியிட்டு மகாவிஷ்ணுவுக்கு சாப நிவர்த்தி வேண்டினர். பிருந்தாவும் மகாவிஷ்ணுவை மன்னித்தாள். மனம் மகிழ்ந்த தேவியர் பிருந்தவுக்கு சமாதி கட்டி அதில் ஒரு துளசி செடியை நட்டனர்.

சமாதியை சுற்றி வலம் வந்து தொழுதனர். பூஉலகில் பெண்கள் கற்பில் சிறந்த பிருந்தாவை போற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வைத்து பிருந்தாவை வழிபடுவார்கள் என்று தேவியர் மூவரும் பிருந்தாவிடம் உறுதி அளித்தனர்.

பிருந்தாவின் நினைவாக பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ref.sacred trees of india,culcutta review,year 1905பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை ZsEV1btR0SToPrajvxVT+IMG_0375

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 3:42 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை.................ஆனால் துளசி இன் கதையை நான் வேறு விதமாய் கேட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 7:03 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா புன்னகை.................ஆனால் துளசி இன் கதையை நான் வேறு விதமாய் கேட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159351
அதை இங்கு தெரிவிக்கலாமே. நானும் அறிந்து கொள்கிறேன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 9:30 pm

முதல் முறையாக கேட்கிறேன் ,பிருந்தாவின் கதையை .

நன்றி ,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 9:59 pm

T.N.Balasubramanian wrote:முதல் முறையாக கேட்கிறேன் ,பிருந்தாவின் கதையை .

நன்றி ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159411
வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 10:34 pm

துளசியை ஏன் பூஜிக்கிறோம்?

தெரிந்த புராணம்... தெரியாத கதை

- டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

இறைவனை வழிபட, பகவத்கீதையில் ஒரு எளிய மார்க்கத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். பத்ரம், பலம், புஷ்பம், தோயம் என்ற நான்கினாலோ, இவற்றில் ஏதாவது ஒன்றாலோ, சிரத்தா பக்தியுடன் இறைவனைப் பூஜித்தால், அதுவே அவன் பூரண அருளுக்குப் பாத்திரமாக வழிசெய்யும் என்ற தத்துவத்தை அப்போது எடுத்துரைத்தார்.

(பத்ரம்) ஏதாவது ஒரு இலை, (பலம்) ஏதாவதொரு பழம், (புஷ்பம்) பூ வகைகளில் ஏதாவது ஒரு பூ, (தோயம்) சுத்தமான தண்ணீர் ஆகியவை மட்டுமே இறைவனைப் பூஜிக்கத் தேவையானது என்ற எளிய தத்துவத்தைக் கண்ணன் கீதையில் எடுத்துக்காட்டினார். இவற்றில் அவர் இலை என்று குறிப்பிட்டது துளசி, வில்வம், அருகம்புல், வேப்பிலை முதலானவற்றை குறிக்கும்.

சிவனுக்கு வில்வ இலை, அம்பாளுக்கு வேப்ப இலை, கணபதிக்கு அருகம்புல், விஷ்ணுவுக்கு துளசி இலை என்று வரையறுத்து, காலம்காலமாக நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டையும், வீட்டில் பூஜையையும் செய்து வந்திருக்கிறார்கள். அதனால் பெரும் பலனையும் பெற்றிருக்கிறார்கள். விஷ்ணுவுக்கு உகந்ததாக துளசி இலை ஏன் கருதப்படுகிறது என்பதற்கு ஆதாரமான ஒரு புராணக்கதையை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

விஷ்ணு புராணம், துளசி மஹாத்மியம், துளசி ராமாயணம் ஆகிய நூல்களின் அடிப்படையில் துளசியின் பெருமை இதோ...

சத்ய யுகத்தில் ஜலந்திரன் என்ற கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்து பிரம்மா, சிவனிடம் பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். இந்திரனுக்கு சமமான செல்வங்களையும், சிவபெருமானுக்குச் சமமான சக்தியையும் பெற்று மூவுலகையும் ஆளும் பேராசையால், கொடுமைகள் பல புரிந்தான். தேவர்களையும், மகரிஷிகளையும் இம்சித்துக் கொடுமை செய்தான்.

ஒருமுறை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஜகஜோதியான பொலிவுடன் மகாலட்சுமி தோன்றினாள். அவளது தோற்றப்பொலிவில் மயங்கி நின்ற தேவர்களில் சிலரும் அசுரர்கள் பலரும் அவளை அடைய விரும்பினார்கள். அவர்களில் ஜலந்திரனும் ஒருவன். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, மகாலட்சுமிதேவி ஸ்ரீமகாவிஷ்ணுவையே சரணடைந்து, அவரையே பதியாக ஏற்றுக்கொண்டாள். ஏமாற்றம் அடைந்த ஜலந்திரனின் கோபமும் ஆத்திரமும் கொழுந்துவிட்டு எரிந்தது. தனது விருப்பப்படியே அவள் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தாள் என்பதை உணராத ஜலந்திரன், விஷ்ணுவைத் தன் எதிரியாகக் கருதினான்.

இதையடுத்து, மகாலட்சுமிக்கு நிகரான அழகும், தேஜஸும் கொண்ட ஒரு தேவி தனக்கு மனைவியாக வர வேண்டும் என்ற ஆசையில் பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சாகா வரம் கேட்டால் அது கிடைக்காது என்று ஊகித்து ஒரு விசித்திரமான வரத்தைக் கேட்டுப்பெற விரும்பினான். பதிவிரதையான ஒரு மனைவி அமைந்தால், அவளது மாங்கல்ய பலத்தாலும், பதிவிரதா தர்மத்தாலும் தனக்கு மரணம் நேரா வண்ணம் காத்துக்கொண்டு, பல ஆயிரம் ஆண்டுகள் அழிவில்லாமல் வாழலாம் என்று கணக்குப் போட்டான்.

ஜலந்திரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார். தான் விரும்பியதை வரமாகக் கேட்டான் ஜலந்திரன். பிரம்மதேவனும் அவன் விருப்பப்படியே மகாலட்சுமிக்கு நிகரான ஒரு அழகான தேவதையை உருவாக்கி அவளுக்கு 'பிருந்தா’ என்ற பெயர் சூட்டி, அவளை ஜலந்திரனுக்கு மனைவியாக்கி ஆசி கூறினார். பவித்ரமான பிருந்தா, தன் பதிவிரதா தர்மத்தில் இருந்து தவறாத வரையில் ஜலந்திரனுக்கு மரணம் நிகழாது என்றும் கூறி மறைந்தார்.

நினைத்தது கிடைத்த பெருமிதத்தில் ஜலந்திரனின் அகங்காரம் தலைக்கேறியது. அவன் கொடுமைகள் அதிகமாயின. பதிவிரதா தர்மத்தில் இருந்து சிறிதும் பிறழாத பிருந்தாவை மனைவியாகப் பெற்றதால், தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற இறுமாப்பில் மேன்மேலும் கொடுமைகள் செய்தான். தர்மத்தை முற்றிலுமாக அழிக்க நினைத்தான். எப்போதெல்லாம் அதர்மத்தின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் விஷ்ணு அவதரித்து, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கை, தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், தர்மத்தை ரக்ஷிப்பவர்களுக்கும் இருந்தது.

தேவாசுரப் போரில் திருப்பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தித் தங்களைக் காத்த சிவபெருமானையும் அவர்கள் மறக்கவில்லை. இருவரிடமும் தஞ்சமடைந்தனர், தேவர்களும், மகரிஷிகளும்! தனக்கு நிகரான சக்திபெற்றவன் ஜலந்திரன் என்பதால், அவனோடு போரிட்டு அவனை சம்ஹாரம் செய்யும் பொறுப்பை ஏற்றார் சிவபெருமான். ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு க்ஷணமாவது தடுமாற்றம் ஏற்பட்டு, அது பிருந்தாவின் பதிவிரதா தர்மத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டால்... அந்த விநாடியிலேயே ஜலந்திரன் அழியும் நிலை ஏற்படும் என்பதை விஷ்ணு ஊகித்தார்.

இதற்கிடையில், ஜலந்திரனுடன் போர் தொடங்கினார் சிவபெருமான். தனது தவத்தால் பெற்ற மாயா சக்திகளைக் கொண்டு சிவபெருமானை எதிர்த்துப் போரிட்டான் ஜலந்திரன். வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாத நிலையில் பல நாட்கள் போர் நடந்தது. சிவபெருமானுக்கு உதவி செய்ய மகா விஷ்ணுவும் தன் சகோதரி மாயாதேவியின் சக்தியால் ஒரு வியூகம் அமைத்தார்.

பிரம்மாவால் படைக்கப்பட்ட பிருந்தா, தான் தோன்றிய நாள் முதலே விஷ்ணுவிடம் பக்தி செலுத்தி வந்தாள். கணவனையே தெய்வமாகக் கருதும் பதிவிரதா தர்மம் தவறாமல், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கருதி தன் கணவனின் நீண்ட ஆயுளுக்காக அவரை வழிபட்டாள். ஒருநாள் அவளது விஷ்ணுபூஜை முடிந்ததும் விஷ்ணு அவள் முன்பு தோன்றினார். விஷ்ணுவின் சகோதரி மாயாதேவியும் ஜலந்திரனை அழிக்கும் வேள்வியில் பங்குபெற விரும்பினாள். அவளது சக்தியால் பிருந்தா முன் தோன்றிய மகாவிஷ்ணு, ஒரு கணம் அவள் கண்களுக்கு ஜலந்திரனைப் போல் தோற்றமளித்தார்.

இதனால், தன் கணவன் சிவனையும் ஜெயித்து வந்துவிட்டான் என்று கருதி, புன்முறுவலுடன் வரவேற்றாள் பிருந்தா. அந்த ஒரு கணம் அவளின் பதிவிரதா தர்மத்துக்கு பங்கம் ஏற்பட்டது. இந்தக் கணத்தில் சிவபெருமான் தன் சூலத்தைச் செலுத்தி ஜலந்திரனை சம்ஹாரம் செய்தார். தர்மம் காப்பாற்றப்பட்டது.

தோற்றப்பிழை ஏற்படுத்தி, தன் பதிவிரதா தர்மத்தைச் சோதித்து, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன் கணவனை அழித்த விஷ்ணு மீது பிருந்தா கடும் கோபம் கொண்டாள். தான் உபாஸித்து வழிபட்டு வந்த தெய்வமான விஷ்ணுவுக்கே சாபம் தந்தாள்.

மாயத் தோற்றத்தை உருவாக்கி, தன் கணவனை தன்னிடமிருந்து பிரித்த பாவத்துக்காக மகாவிஷ்ணுவும் தன் பத்தினி மகாலட்சுமியைப் பிரிந்து சில காலம் துயரம் அனுபவிக்க வேண்டும் என்பதே அவள் இட்ட சாபம். இதன் காரணமாகத்தான் ராமவதாரத்தில் ஸ்ரீராமர், சீதாதேவியைப் பிரிந்து சிலகாலம் துயருற்றதாக ராமாயணம் கூறுகிறது.

பதிவிரதா தர்மம் தவறாமல் எவ்வாறு சதிதேவி தட்சனின் யாகத் தீயில் உயிர் நீத்தாளோ, அதுபோலவே பிருந்தாவும் உயிர்நீத்து, தன் பதிவிரதா தர்மத்தை நிலை நாட்டினாள். சிறந்த விஷ்ணு பக்தையாகவும், பதிவிரதையாகவும் வாழ்ந்த பிருந்தாவுக்கு மரணமில்லா பெருவாழ்வு வழங்க விரும்பினார் மகாவிஷ்ணு. அவளது உடலை இப்பூவுலகில் ஓடும் ஒரு புண்ணிய நதியாக்கினார். அவள் சக்தி அனைத்தையும் ஒரு புனிதமான செடியாக்கினார். அவர் உருவாக்கிய நதி- புண்ணிய பாரதத்தின் வட பகுதியில், நேபாளத்தில் உற்பத்தியாகி ஓடும் கண்டகி நதி. புனிதமான செடி- துளசி. இதோடு, பிருந்தாவின் விஷ்ணு பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்க, அந்த பரமாத்மாவே சாளக்ராம வடிவில் கண்டகி நதியில் வியாபித்தார்.

விஷ்ணு சாளக்ராமமும், துளசி தளமும் பகவானுக்கும் பக்தைக்கும் உள்ள பவித்ரமான தெய்வீக பந்தத்துக்கு இன்றும் சான்றாக விளங்குகின்றன. இந்துக்கள் பலரின் வீட்டில் இன்றும் துளசியை ஒரு மாடத்தில் வைத்து நித்ய பூஜை செய்வதின் தாத்பர்யம் இதுதான். துளசி மாடம் 'பிருந்தாவனம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

சாளக்ராம வழிபாடு செய்பவர்கள், அதை பூஜித்து, துளசி வைத்து வழிபடுவது, ஒரு பதிவிரதையை வணங்கி, பகவான் விஷ்ணுவின் அருளுக்கு பாத்திரமாகும் தத்துவத்தையே குறிக்கிறது. விஷ்ணு ஆலயங்களில் வழங்கப்படும் துளசி தீர்த்தமும் பிருந்தாவை பெருமைப்படுத்த ஏற்பட்ட சம்பிரதாயம்தான். மரணத்தைக் கடந்து மோட்ச வாயிலை மனிதன் அடைவதற்காகத்தான் துளசி தீர்த்தம் ஒருவனின் கடைசி மூச்சு அடங்குமுன் அவன் வாயில் ஊற்றப்படுகிறது.

ஏகாதசி விரதம் முடித்து துவாதசியன்று உணவு உட்கொள்ளும் முன்பு துளசி தீர்த்தம் அருந்துவதும் விஷ்ணுவுக்கு பிரீதியாகச் செய்யப்படும் பூஜா விதிதான். துளசியைப் பூஜிக்க பல நாமங்கள் உண்டு. பிருந்தாவனீ! விஷ்ணுப்ரியா! விஸ்வபவானி! புஷ்பசாரா! நந்தினி! கிருஷ்ண ஜீவினி! துளசி மாதா ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

துளசி மாடத்திலிருந்து துளசியைப் பறிக்கும்போது கூட பரிசுத்தமான எண்ணங்களும், உடல் சுத்தமும் வேண்டும். அப்போது, 'துளசி மாதா! ஸ்ரீ விஷ்ணுவின் பக்தை. ஒரு பதிவிரதை. நீ பவித்திரத்தின் அடையாளம். உன்னை விஷ்ணு பாதத்தில் சேர்க்கவே இந்தச் செடியிலிருந்து பறிக்கிறேன். என்னை ஆசீர்வதிப்பாயாக. எல்லா மங்கலங்களையும் தருவாயாக...' என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத ஆராய்ச்சிகளில் துளசி இலை சர்வரோக நிவாரணியாகப் புகழப்படுகிறது. துளசிச்செடியின் தண்டுகளை மணியாக்கி மாலையாகப் போட்டுக்கொள்வது தூய பக்தி உணர்வை வளர்க்க வழிசெய்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாக வளர்ந்தது, துளசிச் செடிகளால் நிறைந்த பிருந்தாவனத்தில்தான்! பக்திக்கு இலக்கணமாகத் திகழ்ந்த கோபியர், கண்ணனை பிரேம பக்தியால் வழிபட்ட பூமி பிருந்தாவனம். வட இந்தியாவில் ஆக்ராவுக்கு அருகே உள்ள பிருந்தாவனம் இன்றைக்கும் ஒரு பதிவிரதையை வழிபடும் புண்ணிய பூமியாகத் திகழ்கிறது.

விகடன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 10:40 pm

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா புன்னகை.................ஆனால் துளசி இன் கதையை நான் வேறு விதமாய் கேட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159351
அதை இங்கு தெரிவிக்கலாமே. நானும் அறிந்து கொள்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1159398

இதோ போடுகிறேன் ஐயா, விகடனில் விரிவாக போட்டிருக்காங்க பாருங்க.......'விஷ்ணு புராணத்திலும்' இது விரிவாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 3:24 am

மிக நல்ல பகிர்வு .
நன்றி நமசிவாயம் அய்யா .
நன்றி க்ரிஷ்ணாம்மா .
ஆனாலும் அந்த பெண்ணை இப்படி சோதித்துவிட்டார்களே .... சோகம் சோகம் சோகம் பாவம் .
கடவுளின் லீலைகளில் இதுவும் ஒன்று .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 4:25 am

shobana sahas wrote:மிக நல்ல பகிர்வு .
நன்றி நமசிவாயம் அய்யா .
நன்றி க்ரிஷ்ணாம்மா .
ஆனாலும் அந்த பெண்ணை இப்படி சோதித்துவிட்டார்களே .... சோகம் சோகம் சோகம் பாவம் .
கடவுளின் லீலைகளில் இதுவும் ஒன்று .
மேற்கோள் செய்த பதிவு: 1159446

ஆமாம் ஷோபனா, எனக்கு மிகவும் வருத்தமாய் இருக்கும் இந்த கதை எப்பவும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 9:50 am

krishnaamma wrote:துளசியை ஏன் பூஜிக்கிறோம்?

தெரிந்த புராணம்... தெரியாத கதை

- டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

இறைவனை வழிபட, பகவத்கீதையில் ஒரு எளிய மார்க்கத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். பத்ரம், பலம், புஷ்பம், தோயம் என்ற நான்கினாலோ, இவற்றில் ஏதாவது ஒன்றாலோ, சிரத்தா பக்தியுடன் இறைவனைப் பூஜித்தால், அதுவே அவன் பூரண அருளுக்குப் பாத்திரமாக வழிசெய்யும் என்ற தத்துவத்தை அப்போது எடுத்துரைத்தார்.

(பத்ரம்) ஏதாவது ஒரு இலை, (பலம்) ஏதாவதொரு பழம், (புஷ்பம்) பூ வகைகளில் ஏதாவது ஒரு பூ, (தோயம்) சுத்தமான தண்ணீர் ஆகியவை மட்டுமே இறைவனைப் பூஜிக்கத் தேவையானது என்ற எளிய தத்துவத்தைக் கண்ணன் கீதையில் எடுத்துக்காட்டினார். இவற்றில் அவர் இலை என்று குறிப்பிட்டது துளசி, வில்வம், அருகம்புல், வேப்பிலை முதலானவற்றை குறிக்கும்.

சிவனுக்கு வில்வ இலை, அம்பாளுக்கு வேப்ப இலை, கணபதிக்கு அருகம்புல், விஷ்ணுவுக்கு துளசி இலை என்று வரையறுத்து, காலம்காலமாக நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டையும், வீட்டில் பூஜையையும் செய்து வந்திருக்கிறார்கள். அதனால் பெரும் பலனையும் பெற்றிருக்கிறார்கள். விஷ்ணுவுக்கு உகந்ததாக துளசி இலை ஏன் கருதப்படுகிறது என்பதற்கு ஆதாரமான ஒரு புராணக்கதையை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

விஷ்ணு புராணம், துளசி மஹாத்மியம், துளசி ராமாயணம் ஆகிய நூல்களின் அடிப்படையில் துளசியின் பெருமை இதோ...

சத்ய யுகத்தில் ஜலந்திரன் என்ற கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்து பிரம்மா, சிவனிடம் பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். இந்திரனுக்கு சமமான செல்வங்களையும், சிவபெருமானுக்குச் சமமான சக்தியையும் பெற்று மூவுலகையும் ஆளும் பேராசையால், கொடுமைகள் பல புரிந்தான். தேவர்களையும், மகரிஷிகளையும் இம்சித்துக் கொடுமை செய்தான்.

ஒருமுறை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஜகஜோதியான பொலிவுடன் மகாலட்சுமி தோன்றினாள். அவளது தோற்றப்பொலிவில் மயங்கி நின்ற தேவர்களில் சிலரும் அசுரர்கள் பலரும் அவளை அடைய விரும்பினார்கள். அவர்களில் ஜலந்திரனும் ஒருவன். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, மகாலட்சுமிதேவி ஸ்ரீமகாவிஷ்ணுவையே சரணடைந்து, அவரையே பதியாக ஏற்றுக்கொண்டாள். ஏமாற்றம் அடைந்த ஜலந்திரனின் கோபமும் ஆத்திரமும் கொழுந்துவிட்டு எரிந்தது. தனது விருப்பப்படியே அவள் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தாள் என்பதை உணராத ஜலந்திரன், விஷ்ணுவைத் தன் எதிரியாகக் கருதினான்.

இதையடுத்து, மகாலட்சுமிக்கு நிகரான அழகும், தேஜஸும் கொண்ட ஒரு தேவி தனக்கு மனைவியாக வர வேண்டும் என்ற ஆசையில் பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சாகா வரம் கேட்டால் அது கிடைக்காது என்று ஊகித்து ஒரு விசித்திரமான வரத்தைக் கேட்டுப்பெற விரும்பினான். பதிவிரதையான ஒரு மனைவி அமைந்தால், அவளது மாங்கல்ய பலத்தாலும், பதிவிரதா தர்மத்தாலும் தனக்கு மரணம் நேரா வண்ணம் காத்துக்கொண்டு, பல ஆயிரம் ஆண்டுகள் அழிவில்லாமல் வாழலாம் என்று கணக்குப் போட்டான்.

ஜலந்திரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார். தான் விரும்பியதை வரமாகக் கேட்டான் ஜலந்திரன். பிரம்மதேவனும் அவன் விருப்பப்படியே மகாலட்சுமிக்கு நிகரான ஒரு அழகான தேவதையை உருவாக்கி அவளுக்கு 'பிருந்தா’ என்ற பெயர் சூட்டி, அவளை ஜலந்திரனுக்கு மனைவியாக்கி ஆசி கூறினார். பவித்ரமான பிருந்தா, தன் பதிவிரதா தர்மத்தில் இருந்து தவறாத வரையில் ஜலந்திரனுக்கு மரணம் நிகழாது என்றும் கூறி மறைந்தார்.

நினைத்தது கிடைத்த பெருமிதத்தில் ஜலந்திரனின் அகங்காரம் தலைக்கேறியது. அவன் கொடுமைகள் அதிகமாயின. பதிவிரதா தர்மத்தில் இருந்து சிறிதும் பிறழாத பிருந்தாவை மனைவியாகப் பெற்றதால், தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற இறுமாப்பில் மேன்மேலும் கொடுமைகள் செய்தான். தர்மத்தை முற்றிலுமாக அழிக்க நினைத்தான். எப்போதெல்லாம் அதர்மத்தின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் விஷ்ணு அவதரித்து, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கை, தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், தர்மத்தை ரக்ஷிப்பவர்களுக்கும் இருந்தது.

தேவாசுரப் போரில் திருப்பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தித் தங்களைக் காத்த சிவபெருமானையும் அவர்கள் மறக்கவில்லை. இருவரிடமும் தஞ்சமடைந்தனர், தேவர்களும், மகரிஷிகளும்! தனக்கு நிகரான சக்திபெற்றவன் ஜலந்திரன் என்பதால், அவனோடு போரிட்டு அவனை சம்ஹாரம் செய்யும் பொறுப்பை ஏற்றார் சிவபெருமான். ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு க்ஷணமாவது தடுமாற்றம் ஏற்பட்டு, அது பிருந்தாவின் பதிவிரதா தர்மத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டால்... அந்த விநாடியிலேயே ஜலந்திரன் அழியும் நிலை ஏற்படும் என்பதை விஷ்ணு ஊகித்தார்.

இதற்கிடையில், ஜலந்திரனுடன் போர் தொடங்கினார் சிவபெருமான். தனது தவத்தால் பெற்ற மாயா சக்திகளைக் கொண்டு சிவபெருமானை எதிர்த்துப் போரிட்டான் ஜலந்திரன். வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாத நிலையில் பல நாட்கள் போர் நடந்தது. சிவபெருமானுக்கு உதவி செய்ய மகா விஷ்ணுவும் தன் சகோதரி மாயாதேவியின் சக்தியால் ஒரு வியூகம் அமைத்தார்.

பிரம்மாவால் படைக்கப்பட்ட பிருந்தா, தான் தோன்றிய நாள் முதலே விஷ்ணுவிடம் பக்தி செலுத்தி வந்தாள். கணவனையே தெய்வமாகக் கருதும் பதிவிரதா தர்மம் தவறாமல், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கருதி தன் கணவனின் நீண்ட ஆயுளுக்காக அவரை வழிபட்டாள். ஒருநாள் அவளது விஷ்ணுபூஜை முடிந்ததும் விஷ்ணு அவள் முன்பு தோன்றினார். விஷ்ணுவின் சகோதரி மாயாதேவியும் ஜலந்திரனை அழிக்கும் வேள்வியில் பங்குபெற விரும்பினாள். அவளது சக்தியால் பிருந்தா முன் தோன்றிய மகாவிஷ்ணு, ஒரு கணம் அவள் கண்களுக்கு ஜலந்திரனைப் போல் தோற்றமளித்தார்.

இதனால், தன் கணவன் சிவனையும் ஜெயித்து வந்துவிட்டான் என்று கருதி, புன்முறுவலுடன் வரவேற்றாள் பிருந்தா. அந்த ஒரு கணம் அவளின் பதிவிரதா தர்மத்துக்கு பங்கம் ஏற்பட்டது. இந்தக் கணத்தில் சிவபெருமான் தன் சூலத்தைச் செலுத்தி ஜலந்திரனை சம்ஹாரம் செய்தார். தர்மம் காப்பாற்றப்பட்டது.

தோற்றப்பிழை ஏற்படுத்தி, தன் பதிவிரதா தர்மத்தைச் சோதித்து, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன் கணவனை அழித்த விஷ்ணு மீது பிருந்தா கடும் கோபம் கொண்டாள். தான் உபாஸித்து வழிபட்டு வந்த தெய்வமான விஷ்ணுவுக்கே சாபம் தந்தாள்.

மாயத் தோற்றத்தை உருவாக்கி, தன் கணவனை தன்னிடமிருந்து பிரித்த பாவத்துக்காக மகாவிஷ்ணுவும் தன் பத்தினி மகாலட்சுமியைப் பிரிந்து சில காலம் துயரம் அனுபவிக்க வேண்டும் என்பதே அவள் இட்ட சாபம். இதன் காரணமாகத்தான் ராமவதாரத்தில் ஸ்ரீராமர், சீதாதேவியைப் பிரிந்து சிலகாலம் துயருற்றதாக ராமாயணம் கூறுகிறது.

பதிவிரதா தர்மம் தவறாமல் எவ்வாறு சதிதேவி தட்சனின் யாகத் தீயில் உயிர் நீத்தாளோ, அதுபோலவே பிருந்தாவும் உயிர்நீத்து, தன் பதிவிரதா தர்மத்தை நிலை நாட்டினாள். சிறந்த விஷ்ணு பக்தையாகவும், பதிவிரதையாகவும் வாழ்ந்த பிருந்தாவுக்கு மரணமில்லா பெருவாழ்வு வழங்க விரும்பினார் மகாவிஷ்ணு. அவளது உடலை இப்பூவுலகில் ஓடும் ஒரு புண்ணிய நதியாக்கினார். அவள் சக்தி அனைத்தையும் ஒரு புனிதமான செடியாக்கினார். அவர் உருவாக்கிய நதி- புண்ணிய பாரதத்தின் வட பகுதியில், நேபாளத்தில் உற்பத்தியாகி ஓடும் கண்டகி நதி. புனிதமான செடி- துளசி. இதோடு, பிருந்தாவின் விஷ்ணு பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்க, அந்த பரமாத்மாவே சாளக்ராம வடிவில் கண்டகி நதியில் வியாபித்தார்.

விஷ்ணு சாளக்ராமமும், துளசி தளமும் பகவானுக்கும் பக்தைக்கும் உள்ள பவித்ரமான தெய்வீக பந்தத்துக்கு இன்றும் சான்றாக விளங்குகின்றன. இந்துக்கள் பலரின் வீட்டில் இன்றும் துளசியை ஒரு மாடத்தில் வைத்து நித்ய பூஜை செய்வதின் தாத்பர்யம் இதுதான். துளசி மாடம் 'பிருந்தாவனம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

சாளக்ராம வழிபாடு செய்பவர்கள், அதை பூஜித்து, துளசி வைத்து வழிபடுவது, ஒரு பதிவிரதையை வணங்கி, பகவான் விஷ்ணுவின் அருளுக்கு பாத்திரமாகும் தத்துவத்தையே குறிக்கிறது. விஷ்ணு ஆலயங்களில் வழங்கப்படும் துளசி தீர்த்தமும் பிருந்தாவை பெருமைப்படுத்த ஏற்பட்ட சம்பிரதாயம்தான். மரணத்தைக் கடந்து மோட்ச வாயிலை மனிதன் அடைவதற்காகத்தான் துளசி தீர்த்தம் ஒருவனின் கடைசி மூச்சு அடங்குமுன் அவன் வாயில் ஊற்றப்படுகிறது.

ஏகாதசி விரதம் முடித்து துவாதசியன்று உணவு உட்கொள்ளும் முன்பு துளசி தீர்த்தம் அருந்துவதும் விஷ்ணுவுக்கு பிரீதியாகச் செய்யப்படும் பூஜா விதிதான். துளசியைப் பூஜிக்க பல நாமங்கள் உண்டு. பிருந்தாவனீ! விஷ்ணுப்ரியா! விஸ்வபவானி! புஷ்பசாரா! நந்தினி! கிருஷ்ண ஜீவினி! துளசி மாதா ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

துளசி மாடத்திலிருந்து துளசியைப் பறிக்கும்போது கூட பரிசுத்தமான எண்ணங்களும், உடல் சுத்தமும் வேண்டும். அப்போது, 'துளசி மாதா! ஸ்ரீ விஷ்ணுவின் பக்தை. ஒரு பதிவிரதை. நீ பவித்திரத்தின் அடையாளம். உன்னை விஷ்ணு பாதத்தில் சேர்க்கவே இந்தச் செடியிலிருந்து பறிக்கிறேன். என்னை ஆசீர்வதிப்பாயாக. எல்லா மங்கலங்களையும் தருவாயாக...' என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத ஆராய்ச்சிகளில் துளசி இலை சர்வரோக நிவாரணியாகப் புகழப்படுகிறது. துளசிச்செடியின் தண்டுகளை மணியாக்கி மாலையாகப் போட்டுக்கொள்வது தூய பக்தி உணர்வை வளர்க்க வழிசெய்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாக வளர்ந்தது, துளசிச் செடிகளால் நிறைந்த பிருந்தாவனத்தில்தான்! பக்திக்கு இலக்கணமாகத் திகழ்ந்த கோபியர், கண்ணனை பிரேம பக்தியால் வழிபட்ட பூமி பிருந்தாவனம். வட இந்தியாவில் ஆக்ராவுக்கு அருகே உள்ள பிருந்தாவனம் இன்றைக்கும் ஒரு பதிவிரதையை வழிபடும் புண்ணிய பூமியாகத் திகழ்கிறது.

விகடன்.
[url=http://www.eegarai.net/t123538-topic#1159416]மேற்கோள் செய்த பதிவு: 1159416[/url

நன்றி.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக