புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
46 Posts - 40%
prajai
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%
prajai
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for நாகப்பாம்பு

Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Snakebite

பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்பு கடிக்கான சிகிச்சை முறைகள் என்ன?

இந்தக் கேள்விகள் நம்மில் பலருக்கும் பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்பட்டிருக்கும். #பாம்புகள் என்றதும் நமக்குள் கலவையான உணர்வுகள் எழுவதுண்டு. இருப்பினும் பாம்புக்கடியை நாம் இன்னும் எச்சரிக்கையின்மையுடனே அணுகுகிறோம். இது எந்த அளவுக்குச் சரி?

பாம்புக் கடியால் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது.

2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதற்குச் சில முக்கியமான காரணங்கள் உண்டு. #பாம்புக்கடி உயிரிழப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, நஞ்சுமுறி மருந்துகளின் பற்றாக்குறை என பாம்புக்கடி விவகாரத்தில் இதுபோன்று பல சவால்கள் உண்டு.

இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்?

ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 50 லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் நச்சுப்பாம்புகளின் கடியால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 81,000 முதல் 1,38,000 பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாகப் பல்வேறு அறிக்கைகள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையைத் தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பது இல்லை.

இந்தியாவில் 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்திருப்பதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 58,000 உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகின்றன.

பாம்புகள் பழிவாங்குமா?

பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களைத் தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டது உண்டு. இதுவொரு மோசமான கட்டுக்கதை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக ஒருவர் ஒரு நாகப்பாம்பை அடித்துக் கொன்றுவிட்டால் அந்தப் பாம்பின் துணை அடித்துக் கொன்றவரைத் தேடி வந்து பழிவாங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இது மோசமான கட்டுக்கதை என்கிறார் கஜ்பி. இதுபோன்ற சில மூட நம்பிக்கைகளும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன.

கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல்

இந்தியாவின் சில இடங்களில் #பாம்பு கடித்தால் மருத்துவர்களைப் பார்க்காமல் மந்திரவாதிகளைப் பார்ப்பதுண்டு.

அது மட்டுமின்றி முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது, நிறுவப்படாத மூலிகைகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களும் பரவலாக உண்டு.

பாம்பு கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுப்பதைப் போல் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நிச்சயமாக அப்படி செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்த உடனே அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக்கூடாது.

பாம்புக்கடிக்கு உள்ளானவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்குப் போகக்கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்திலோ பாதுகாப்பாகப் போகவேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள், இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும்.

காயங்களைக் கழுவுதல், கீறி விடுதல், துணியை வைத்து இறுக்கமாகக் கட்டுதல், ஏதேனும் மூலிகைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகள்தான் அதிகம்.

குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் போதுமான நஞ்சுமுறி மருந்துகள் உள்ளனவா?

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வதைப் போல் பாம்பின் நஞ்சை முறிப்பதற்கும் அதன் நஞ்சுதான் பயன்படுத்தப்படுகிறது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் நஞ்சை வைத்துதான் நஞ்சுமுறி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

1895ஆம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பின் நஞ்சுக்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் நஞ்சுமுறி மருந்தை உருவாக்கினார்.

ஆனால், இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளைப் பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார்.

மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், நஞ்சுமுறி மருந்துகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார்.

இதுமட்டும் அல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமான நான்கு பாம்புகள்

நீங்கள் பார்க்கும் அனைத்துப் பாம்புகளுக்கும் மனிதர்களைக் காவு வாங்கும் அளவுக்கு வீரியமிக்க நஞ்சு இருக்காது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு வகைகள் உள்ளன. அதில் 60 வகையான பாம்புகள் தான் நஞ்சுள்ளவை. அதில் குறிப்பாக நான்கு பாம்புகள்தான் பெரும்பாலான பாதிப்புகளுக்குக் காரணம்.

கண்ணாடி விரியன்

இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.

கட்டு விரியன்

அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்தப் பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாகத் தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

இந்திய நாகம்

#நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்களில் இது பொதுவாகக் காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதைப் பார்க்க முடியும்.

சுருட்டை விரியன்

இறுதியாக சுருட்டை விரியன். இதன் அளவு சிறியதாக இருந்தாலும் தாக்கும் திறன் மிகவும் அபாயகரமானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனால், இதன் நஞ்சு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாம்பு கடித்த உடனேயே பதற்றப்படாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்தில் பாம்புகளின் அழிவைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையாக உள்ளது.

பிபிசி தமிழ்
Topics tagged under நாகப்பாம்பு on ஈகரை தமிழ் களஞ்சியம் Vikatan%2F2023-03%2Fdffa9aad-4e9a-40ee-93ec-005cde651b00%2F640570f7cd416

புதுச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில், பூந்துறை கிராமம் செல்லும் வழியில் ஓர் அதிசயமான தலம் உள்ளது. தென்கயிலாயநாதர் தலம் என்கிறார்கள். வனப் பகுதிபோலக் காணப்படும் இந்த தலத்தில் 1008 சிவலிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களைப் பாதுகாக்க இங்கே கருநாகங்கள் உலவுகின்றனவாம்!

புதுச்சேரியில் இருந்து பூந்துறை கிராமம் செல்லும்போது லாரி முனையத்திலிருந்து பிரியும் மண் சாலையில், சுமார் 700 மீட்டர் பயணித்தால் இந்த இடத்தை அடைந்து விடலாம். சுற்றிலும் முந்திரி மற்றும் பல மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவேதான் தென் கயிலாயநாதர் கோயில் அமைந்துள்ளது. திறந்த வெளியிலேயே தென் கயிலாயநாதர் அருள்பாலிக்கிறார்.

அந்த ஈசனைச் சுற்றி 1008 சிவ லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அன்பர் ஒருவரே இந்தத் தென்கயிலாய நாதரை நிறுவி வழிபட்டு வருகிறார். இவர் ராணுவத்தில் பணியாற்றிய போது இமயமலைப் பகுதியில் கிடைத்த சிவலிங்கம் இது என்கிறார்.

காசி, கயா, ஸ்ரீசைலம், ராமேஸ்வரம் என இந்தியாவின் முக்கியமான சிவத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் ஈசனின் திருப் பெயர்களோடு அந்தத் தலங்களில் இருப்பதைப் போன்றே லிங்கத்திருமேனிகள் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த சிவலிங்கக் கோயிலைச் சுற்றிப் பாதுகாப்புக்காக எந்த வேலியும் இடப்படவில்லை. காரணம் இங்கே சிவபெருமானின் ஆபரணமாகத் திகழும் நாகங்கள் பல சுற்றி வந்து இந்த லிங்கங்களைப் பாதுகாப்பதோடு வழிபட்டும் செல்கின்றன என்கிறார்கள்.

ஒருமுறை இங்குள்ள சிவலிங்கம் ஒன்றைத் தூக்கிச் செல்ல முயன்றார் ஒருவர். அப்போது நாகப்பாம்பு ஒன்று அவரைத் துரத்தத் தொடங்கியது. செய்வதறியாது அவர் லிங்கத்தை அப்படியே வைத்துவிட்டு ஓட்டம் பிடித்தார் என்கிறார்கள் ஊர் மக்கள்.

இங்கே ஏராளமான நாகப்பாம்புகள் சுற்றித் திரிந்தாலும் அவை இதுவரை பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ததில்லை. என்றாலும் பக்தர்கள் ஒரு குழுவாக வந்து வழிபட்டுச் செல்வதே பாதுகாப்பானது என்கிறார்கள். அதுவும் பகலில் வந்து வழிபடுவதே சிறப்பு என்கிறார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துவிடும் என்பதால், பக்தர்கள் அந்த நேரத்தில் வருவதைத் தவிர்ப்பது நல்லது.

இது சித்தர்கள் வந்து வழிபடும் பூமி என்றும் நம்பப்படுகிறது. சித்தர்கள் அரூபமாக வந்து செல்லும்போது நல்ல வாசனை பரவும் என்பது நம்பிக்கை. அப்படி இந்தப் பகுதியில் அவ்வப்போது நல் வாசனை தோன்றிப் பரவும் என்கிறார்கள். எனவே இங்கு வழிபாடு செய்தால் ஈசனின் ஆசியோடு சித்தர்களின் அனுக்கிரகமும் நமக்கு வாய்க்கும்.

இங்கு வந்து வழிபட்ட பக்தர்களின் துயர்கள் உடனே நீங்குகின்றனவாம். கடன் பிரச்னை, குடும்பச் சிக்கல்கள் ஆகியன இந்த ஈசனின் கருணையால் முற்றிலும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கிறது என்கிறார்கள்.

ஒரே இடத்தில் 1008 சிவலிங்கங்களை தரிசனம் செய்வது பரவச அனுபவம். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை இந்த இடத்துக்குச் சென்று சிவலிங்கங்களை தரிசனம் செய்து நற்பலன்களை அடையலாம்.

குறிச்சொற்கள் #1008_சிவலிங்கங்கள் #தென்_கயிலாயநாதர்_கோயில் #சிவலிங்கம் #நாகப்பாம்பு #சிவபூமி

விகடன்

Back to top