புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
17 Posts - 4%
prajai
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
jairam
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for ஆவணப்படம்

“ஆஸ்கர் விருது கெடச்ச இந்த நேரத்துல கூட ரகு இல்லையே!” – நெகிழும் பொம்மன் பெள்ளி

Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் 4b30bc30-c146-11ed-95f8-0154daa64c44

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.

"ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது பொம்மன் நெகிழ்ந்து கூறினார்.

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியுளது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும் அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.

தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு, இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.

யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள். இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது.

ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும்போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.

ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றபோது பொம்மன், பெள்ளியிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் அவர்களை தொடர்புகொண்டபோதும் பொம்மன் யானையுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தார். `நேரம் ஆகிருச்சு சீக்கிரம் கிளம்பு` என்று பெள்ளியின் குரல் மட்டும் பிண்ணனியில் ஒலித்தது.

யானையுடன் சென்றுகொண்டே பொம்மன் நம்மிடம் பேசியபோது, “இந்த ஆவணப்படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்டநாட்களாக தெரிந்தவர்தான். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க துவங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போதுதான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறி இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பை அவர்கள் ஆரம்பித்தனர்,” என்று கூறினார்.

Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் 5d6a4330-c146-11ed-95f8-0154daa64c44

“இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பை மேற்கொண்டனர். ஒவ்வொரு முறை வரும்போது வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்கள் வருவார்கள். அவ்வபோது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறுது நேரம் என படப்பிடிப்பைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து வந்தவர்கள் என நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சர்வதேச அளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ஆஸ்கற் தற்போது இந்த ஆவணப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

அதுகுறித்துப் பேசியவர், “அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில் நாங்கள் அதை மிகவும் சாதாரணமாகத்தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையைப் பார்த்துவந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்கச் செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,” என்று நெகிழ்கிறார் பொம்மன்.

ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்துப் பேசிய பொம்மன், “என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆஸ்கர் விருதைப் பெறும் என்று எதிர்பாக்கவே இல்லை. மிக மகிழ்ச்சியாக உள்ளது.

ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பதும் சிறிது வருத்தமாக உள்ளது,” என்றார்.

இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தனது விருது ஏற்புரையில், “இன்று நான் இங்கு நிற்கிறேன். நமக்கும் நமது இயற்கை உலகுக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பழங்குடி சமூகங்களின் மரியாதைக்காகவும் மற்ற உயிரினங்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் பச்சாதாபத்திற்காகவும் இறுதியாக சகவாழ்வுக்காகவும் பேசுகிறேன்,” என்று கூறினார்.

தயாரிப்பாளர் குணீத் மோங்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெற்றிச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய தயாரிப்புக்கான முதல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ். இதற்கு முன்பு 1969இல் வெளியான தி ஹவுஸ் தட் ஆனந்தா பில்ட், 1979இல் வெளியான ஆன் என்கவுன்டர் வித் ஃபேசஸ் ஆகிய இரண்டு படங்கள், சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்திய மக்கள் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் வெற்றியைப் பாராட்டி வருகின்றனர்.

“நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்,” என்று ஒரு பயனர் பாராட்டியுள்ளார். மற்றொருவர், “இந்த விருதை தனது தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணித்ததற்காக” இயக்குநரை பாராட்டியுள்ளார்.

குறிச்சொற்கள் #The_Elephant_Whisperers #தி_எலிபென்ட்_விஸ்பரர்ஸ் #பொம்மன் #பொம்மி  #நீலகிரி_மாவட்டம் #முதுமலை #ஆவணப்படம் #ஆஸ்கார்_விருது

பிபிசி தமிழ்
Topics tagged under ஆவணப்படம் on ஈகரை தமிழ் களஞ்சியம் MV5BMWU2ODNlYzctYTA1NC00MGQ2LTkwM2ItYmU5Mzc1Yjk2NWVkXkEyXkFqcGdeQXVyMTU3NjkxMjAy

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் எனும் இந்திய ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பிறந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி.

அவர்கள் இந்த யானை குட்டிகளை எவ்வாறு வளர்த்தார்கள் என்பது குறித்த ஆங்கில ஆவணப்படம் ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற பெயரில் எடுத்து வெளியிடப்பட்டது.

இந்த ஆவணப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், இந்த ஆண்டுக்கான திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இதில், ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு இந்தியாவின் "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" படம் ஆவணப்படமும் போட்டியிட்டது.

இந்நிலையில், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆஸ்கர் வென்று சாதனை படைத்துள்ளது.

முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்த இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி, தயாரித்த குனீத் மோங்க விருதை பெற்றனர்.

குறிச்சொற்கள் #The_Elephant_Whisperers #தி_எலிபென்ட்_விஸ்பரர்ஸ் #பொம்மன் #பொம்மி #நீலகிரி_மாவட்டம் #முதுமலை #ஆவணப்படம் #ஆஸ்கார்_விருது

Back to top