ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்!

View previous topic View next topic Go down

கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்!

Post by சாமி on Sun Jun 09, 2013 7:23 am

முருகன் என்றாலே அழகன். அவன் கோவில் கொண்டுள்ள தலங்களும் அழகானவை என்று சொல்லவா வேண்டும்! அத்தகையதோர் எழில்மிக்க தலம் வயலூர். எங்கெங்கும் பசுமை தவழும் வயல்கள்... இனிய சூழல்... இயற்கையாகவே இறைநாட்டம் நம்மைவந்து அரவணைக்கும் உணர்வு.

வயலூர் என்றாலே நமக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவுக்கு வருவார். சில நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்த அருணகிரியாரும் மனதில் தோன்றுவார். சித்தர்கள் தேடிவந்து முக்திபெற விரும்பும் தலம் வயலூர் என்பார்கள். இங்கே ஆலயம் அமைந்த வரலாறு என்ன?

முற்காலத்தில் சோழமன்னன் ஒருவன் வேட்டையாடுவதற்காக இப்பகுதியின் வழியே சென்றான். அப்போது கரும்புத் தோட்டத்தில், ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்று அதை வெட்டியபோது, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன் அங்கே நிலத்தை அகழ்ந்தபோது, உள்ளே தான்தோன்றியாக (சுயம்புமூர்த்தியாக) சிவலிங்கம் இருப்பதைக் கண்டு ஆனந்த முற்றான். அவருக்கு ஆதிநாதர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்தான். அம்பாள் சிலை அமைத்து ஆதிநாயகி என பெயர் சூட்டி நிறுவி வழிபாடு செய்தான்.

இவ்வாறு உருவான இத்தலத்தில் விநாயகர், முருகர் உள்ளிட்ட தெய்வ சந்நிதிகளும் அமைக்கப்பட்டன. தந்தைக்கு பாடம் சொன்ன சுவாமிநாதனான முருகன், இத்தலத்தில் தந்தையையும் மிஞ்சிய புகழுடன் சுப்பிரமணியனாக- முத்துக்குமாரசுவாமியாகத் திகழ்கிறான்.

முருக அடியாரான அருணகிரிநாதர் இறுதியில் திருவண்ணாமலையில் முருகன் அருள்பெற்றார். முருகன் அடியெடுத்துக் கொடுக்க "முத்தைத் தரு பத்தித் திருநகை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடினார். அதன்பின் அவர் பாடல் எதுவும் பாடாமலிருந்த நிலையில், வயலூர் முருகன் வானொலி (அசரீரி) வாக்கால் தன் எல்லைக்கு அழைத்தார்.

அதைக் கேட்ட அருணகிரியார் மிகுந்த ஆவலுடன் வயலூர் வந்தார். ஆனால் அவருக்கு முருகனின் திருக்காட்சி கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த அருணகிரி, "வானொலி வாக்கு பொய்யா?'' என உரக்க கத்தினார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், "வானொலி வாக்கு உண்மையே'' என்று கூறி முருகப் பெருமானைக் காட்டியருளினார்.

அப்போது முருகன் அருணகிரியாரின் நாவில் தன் வேலால் "ஓம்' என்ற ஓம்கார மந்திரத்தை எழுதினார். அதன் பின்னர் அங்கு 18 பாடல்களைப் பாடிய அருணகிரியார், மேலும் பல தலங்களுக்குச் சென்று பாடினார். இவ்வாறு "திருப்புகழ்' என்னும் ஒப்பற்ற நூல் கிடைக்கக் காரணமானவர் இந்த முருகப் பெருமானே. அதனால்தான் கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற விரும்புவோர் வயலூர் முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

வாரியார் சுவாமிகள் வயலூர் முருகனின் அருள்பெற்றவர். அவர் சொற்பொழிவாற்றத் தொடங்கும் முன், "எல்லாம் வல்ல எம்பெருமான் வயலூர் முருகப் பெருமான் திருவடிகளை வணங்கி'... என்று சொல்லித் தொடங்கும் வழக்கம் கொண்டவர். அவர் 1934-ல் இந்தக் கோவிலுக்கு வருகைபுரிந்து முருகப் பெருமானை தரிசித்தார்.

( நன்றி - நக்கீரன் )


Last edited by சாமி on Sun Jun 09, 2013 7:37 am; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்!

Post by சாமி on Sun Jun 09, 2013 7:30 am

அப்போது முருகனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. அருகே "வெள்ளிக்கவசம் அணிவிக்க 50 காசுகள் கட்டணம்' என்ற அறிவிப்புப் பலகையைக் கண்டார். உடனே அர்ச்சகரின் தட்டில் 50 காசுகளைப் போட்டுவிட்டுத் திரும்பினார்.

அன்றிரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய முருகன், ""என் பக்தனிடம் 50 காசு வாங்கினாயே... அதைக் கொண்டு எனக்கு கோபுரம் கட்ட முடியுமா?'' என்று கேட்டுவிட்டு மறைந்தார். திடுக்கிட்டுக் கண்விழித்தார்

அர்ச்சகர். விடிந்ததும் முதல் நாள் வந்திருந்தவர் வாரியார் என்பதை அறிந்து, அந்த 50 காசை வாரியாருக்கு மணியார்டர்மூலம் அனுப்பிவைத்தார். விவரமறிந்த வாரியார் வியப்படைந்து, ராஜகோபுரம் கட்டவேண்டுமென்பது முருகனின் ஆணையெனக் கொண்டு, பலரிடமும் உதவிபெற்று வயலூர் ஆலயத்தில் கோபுரம் கட்டி குடமுழுக்கிற்கும் ஏற்பாடு செய்தார். சுமார் நாற்பது ஆண்டுகள் இவ்வாலயத் திருப்பணிக்காக பாடுபட்டவர் வாரியார் சுவாமிகள். இவ்வாலயப் பெருமையை அகிலமெங்கும் பரப்பியதில் வாரியாரின் பங்கு மிகப்பெரியது.

இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகர் பொய்யா கணபதி எனப்படுகிறார். மாயையான வாழ்வை உண்மையென்று நம்பி வாழ்பவர்களை மெய்ஞ்ஞான வழிக்குத் திருப்பி அருள்புரிவார் இந்த பொய்யா கணபதி.

அருணகிரியார் தனது திருப்புகழ் காப்புச் செய்யுளில் பாடியுள்ள கணபதி இவரே. இவர் சந்நிதியின் அருகே அருணகிரியாருக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. எதிரே கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அருள்கிறார் தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி).

இந்த கணபதி சந்நிதிக்கு அருகில்தான் வயலூரில் வரம்கொடுத்தருளும் முருகன் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளியுள்ளார். "வயலூர் முருகன் இருக்க அயலூர் எதற்கு?' என்று பக்தர்கள் சொல்லும் அளவுக்கு எண்ணிலாத ஏற்றத்தைத் தருபவர் இந்த முருகன். மயில் வாகனம், கடம்பமலர்மாலை, வடிவேல், சேவற்கொடி ஆகியவற்றுடன் காட்சிதரும் முருகப் பெருமானை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இந்த சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக உள்ளதால், செவ்வாய் தோசத்தால் திருமணத் தடை அடைந்தவர்கள் இவரை வந்து வழிபட்டுச் சென்று நலம்பெறுகின்றனர்.

கந்த சட்டியின்போது முருகன்- தெய்வானை திருமணமும்; பங்குனி உத்திரத்தன்று முருகன்- வள்ளி திருமணமும் விமரிசையாக நடைபெறும்.

மகா சிவனிரவு அன்று ஈசன் ஆதிநாதருக்கு சிறப்பாக பூஜைகள் நடக்கும்.

இவ்வாலயத்தில் காலைத் தூக்கியாடாத நடராஜரை தரிசிக்கலாம். இது தாண்டவத்துக்கு முந்தைய நிலையாகும். எனவே இவரது ஜடாமுடி முடியப்பட்ட நிலையிலேயே இருக்கும். காலுக்குக் கீழே முயலகனும் இல்லை. இவர் சதுரதாண்டவ நடராஜர் எனப்படுகிறார்.

குறைவற்ற பூஜைகளை ஏற்றுக் கொள்ளும் வயலூர் முருகன், பக்தர்களுக்கு நிறைவான வாழ்வைத் தருகிறார் என்பது சத்தியமான உண்மை. வயலூர் ஆறுமுகனை வணங்குவோர்க்கு என்றும் ஏறுமுகம்தான்!

திருச்சியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது வயலூர் தலம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம். காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
( நன்றி - நக்கீரன் )
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum