ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -1

Post by பாலாஜி on Sun Mar 17, 2013 6:11 pm

வணக்கம் .

இது ஈகரையின் புதிய பகுதி ....

நான் ஈகரையில் செய்த திரிகளில் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான திரி . எப்பொழுதும் சவால் , படம் என்ற எனது திரிகள் இருக்கும் ஆனால் இந்த திரி பங்கு வர்த்தகம் பற்றி.

அனைத்து செய்தி தாள்களிலும் , தொலைக்காட்சி செய்திகளிலும் பங்கு சந்தை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றது .அதை போல ஈகரையிலும் இடம் செய்ய வேண்டும் என்று எனது விருப்பம் .

உடன் அனுமதி அளித்து தனிபகுதியாக தொடங்க உதவிய சிவா மற்றும் இராஜா அவர்களுக்கும் அன்பு நன்றிகள் .

பங்கு சந்தை பற்றி எழுதும் அளவுக்கு நான் வரவில்லை என்பதே உண்மை .

இந்த திரி பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்தைய திரி என்று கொள்ளலாம் .

நான் 2008 முதல் நாணய விகடன் தொடர்ந்து படித்து வருகின்றேன் . அதன் அடிப்படையில் இந்த திரி தொடங்கி உள்ளேன் .

இது முற்றிலும் பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்திய பகுதியாக இருக்கும் .


நன்றியுடன்
வை.பாலாஜிLast edited by பாலாஜி on Sun Mar 17, 2013 7:24 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை -பகுதி -1

Post by பாலாஜி on Sun Mar 17, 2013 6:14 pm

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை -பகுதி -1


பங்கு சந்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ள தேவை இல்லாதவர்கள் .

1 . மகன்/மகள் திருமண செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .

2 .மகன்/மகள் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .(காரணம் சில சமயங்களில் பணத்தை நமக்கு தேவைப்படும் போது சட்டென்று எடுக்க இயலாது .ஏன் என்று பின்பு பார்ப்போம் .)

3 . கடன் வாங்கி செய்ய வேண்டாம்.

4 . வரவுக்கும் , செலவுக்கும் பற்றாக்குறை உள்ளவர்கள் .சில அடிப்படை தகவல் பற்றி பார்ப்போம் .


index என்றால் என்ன ?


இன்றைய தொலைகாட்சி மற்றும் செய்திதாள்களில் சென்செக்ஸ் & நிப்படி இவ்வளவு புள்ளிகள் ஏறின என்றும் இறங்கின என்று சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் குறிப்பிடுவர் .பச்சை என்றால் சந்தை மேலே சென்று உள்ளது பொருள். சிவப்பு சந்தை கீழே சென்று விட்டது என்று பொருள். .

இன்டெக்ஸ் என்பது ,ஓர் குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல , பங்கு சந்தையில் உள்ள பல இலட்சம் கணக்கான பங்குகளில் இருந்து ஓர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .

கணக்கிடபடும் முறை :-

-> இன்டெக்ஸ் - யை கணக்கிட , base year எனப்படும் அடிப்படை ஆண்டை தேர்வு செய்வர் ,

-> பின்பு சந்தையில் வணிகத்தில் இருக்கும் , மொத்த பங்குகளில் ,சில விதிமுறைகளை பின்பற்றி ,குறிப்பிட்ட பங்குகளை தேர்வு செய்வர் ,

->இந்த குறிப்பிட்ட பங்குகளின் , குறிப்பிட்ட நாளில் விலையில் ஏற்படும் ஏற்ற ,இறக்கங்களின் கூட்டு சாரசரியே அந்நாளில் அதிகரித்த அல்லது குறைந்த புள்ளிகள் ஆகும் .

->தினம் இவ்வாறு தோன்றும் புள்ளிகளை ,அடிப்படை ஆண்டின் புள்ளிகளோடு இணைத்து இன்டெக்ஸ் - யை கணக்கிடுவர் .

சென்செக்ஸ் - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்


ACC LTD.
BHARAT HEAVY ELECTRICALS LTD.
BHARTI AIRTEL LTD.
CIPLA LTD.
DLF Ltd.
HDFC BANK LTD
HERO HONDA MOTORS LTD
HINDALCO INDUSTRIES LTD
HINDUSTAN UNILEVER LTD.
HOUSING DEVELOPMENT FIN. CORPN. LTD
ICICI BANK LTD.
INFOSYS TECHNOLOGIES LTD.
ITC LTD.
JAIPRAKASH ASSOCIATES LIMITED
JINDAL STEEL & POWERS LTD.
LARSEN & TOUBRO LTD.
MAHINDRA & MAHINDRA LTD
MARUTI SUZUKI INDIA LIMITED
NTPC LTD.
ONGC CORPN
RELIANCE COMMUNICATIONS LTD.
RELIANCE INDUSTRIES LTD.
RELIANCE INFRASTRUCTURE LTD
STATE BANK OF INDIA
STERLITE INDUSTRIES.
TATA CONSULTANCY SERVICES LIMITED
TATA MOTORS LTD.
TATA POWER CO. LTD.
TATA STEEL LIMITED.
WIPRO LTD.


நிப்படி - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்


ABB
ACC
AMBUJACEM
AXISBANK
BHARTIARTL
BHEL
BPCL
CAIRN
CIPLA
DLF
GAIL
HCLTECH
HDFC
HDFCBANK
HEROHONDA
HINDALCO
HINDUNILVR
ICICIBANK
IDEA
IDFC
INFOSYSTCH
ITC
JINDALSTEL
JPASSOCIAT
KOTAKBANK
LT
M&M
MARUTI
NTPC
ONGC
PNB
POWERGRID
RANBAXY
RCOM
RELCAPITAL
RELIANCE
RELINFRA
RPOWER
SAIL
SBIN
SIEMENS
STER
SUNPHARMA
SUZLON
TATAMOTORS
TATAPOWER
TATASTEEL
TCS
UNITECH
WIPRO

பங்குச்சந்தை என்றால் என்ன?

பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். இதை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.

பங்கு என்றால் என்ன ?

ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள் அவர்கள் நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக அவர்கள் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை ஏற்படும்போது...

அப்பொழுது பணத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கியாகவேண்டும். அதைக் கடனாக வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டிவரும். அதற்குபதிலா நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தந்து , ஒரு பங்கு விலை இவ்வளவு என்று வெளியிடுவார்கள் அதுதான் ஷேர் அல்லது பங்கு. ( முகப்பு விலை , முகப்பு விலையை விட அதிக விலை வைத்து விற்பது "பிரிமியம் என்று பெயர் -- பின்பு விவரமாக பார்ப்போம் )

ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம்(டிவிடன்ட்) முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன..


பங்கு வர்த்தகத்தில் இடுபட கீழ் கண்டவை மிக அவசியம் .


1 . வங்கி கணக்கு

2. ஒரு டிமேட் கணக்கு

3. 50,000 மேல் ஷேர்களுக்கு விண்ணப்பிப்பது என்றால் , தங்களின் வருமான வரிக் கணக்கு எண்(பான் கார்டு)

Demat Account என்றால் என்ன?

வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பயன்படுத்த படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும்.


மேலும் சில அடிப்படை தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காண்போம்.


Last edited by பாலாஜி on Mon Mar 18, 2013 10:46 am; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by பூவன் on Sun Mar 17, 2013 6:33 pm

மிகவும் புதுமையான பயனுள்ள பதிவு , பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் , செய்ய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ...

வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by Muthumohamed on Sun Mar 17, 2013 11:26 pm

@பூவன் wrote:மிகவும் புதுமையான பயனுள்ள பதிவு , பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் , செய்ய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ...

வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க

உங்களின் கருத்தே எனது கருத்து
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by அருண் on Mon Mar 18, 2013 12:44 am

மிகவும் சிறப்பான திரி அண்ணா! சூப்பருங்க

ஒவ்வொரு திரியும் வெற்றிகரமாக அமைந்தது போல் இந்த திரியும் அமைய வாழ்த்துக்கள்.! ஜி!

நாங்களும் பங்கு சந்தையை பற்றி அறிய ஆவலாய் உள்ளோம்.! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by பாலாஜி on Mon Mar 18, 2013 10:49 am

@Muthumohamed wrote:
@பூவன் wrote:மிகவும் புதுமையான பயனுள்ள பதிவு , பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் , செய்ய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ...

வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க


உங்களின் கருத்தே எனது கருத்து

பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் இந்த திரி போதாது . இதில் சொல்லப்படும் யாவும் அடிப்படை விசயங்கள் மட்டுமே. இந்த திரி புதிதாக நுழைய இருப்பவர்களுக்கு பங்கு வர்த்தகம் பற்றி அடிப்படை பற்றிய புரிதல் மட்டுமே .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by mbalasaravanan on Mon Mar 18, 2013 1:53 pm

சூப்பருங்க
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by ராஜா on Mon Mar 18, 2013 2:02 pm

வாழ்த்துகள் தல , திரி மிகச்சிறப்பாக வெற்றி பெரும்.

இந்த முறை எப்படியாவது பங்கு சந்தை பற்றி தெரிந்துகொள்ளணும் சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by பாலாஜி on Mon Mar 18, 2013 2:07 pm

மிக்க நன்றி பூவன், முத்துமுஹம்மத் , அருண் ,பாலசரவணன் மற்றும் இராஜா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by சதாசிவம் on Mon Mar 18, 2013 5:22 pm

பயனுள்ள தொடர், பயணிக்கிறோம் தங்களுடன்,,தொடருங்கள் .. சூப்பருங்க
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by பாலாஜி on Mon Mar 18, 2013 8:12 pm

@சதாசிவம் wrote:பயனுள்ள தொடர், பயணிக்கிறோம் தங்களுடன்,,தொடருங்கள் .. சூப்பருங்க

நன்றி அய்யா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by சிவா on Mon Mar 18, 2013 11:15 pm

வாழ்த்துகள் ஜீ! தொடர்ந்து எழுதுங்கள், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by பாலாஜி on Sun Mar 24, 2013 1:53 pm

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

பங்குச்சந்தை இரண்டு வகைப்படும்

முதன்மை பங்குச்சந்தை (Primary Market) :

ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம்(Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பெயர்.

IPO பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பின்னர் பாப்போம் .விண்ணபித்த அனைவருக்கும் சில நேரங்களில் கிடைக்காது . அப்போ நீங்க இரண்டாம் நிலை பங்குச்சந்தையில் பெற்றுகொள்ளலாம் .

இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)

முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை( STOCK EXCHANGE ) அணுக வேண்டும். ஒரு கம்பனிஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்புவிலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.

பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)

பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) விற்பனை செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோனா விலை (பிரிமியம்)கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.

பங்கு தரகர்கள் ? (Stock Brokers)


பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளைவாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.இதற்கு என்ன என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை முதல் பகுதியில் பாருங்கள்.

பங்குச்சந்தை பற்றி மேலும் சில தகவல்களை அறியுமுன், நாம் நடைமுறையில் உள்ள நிறுவனங்களின் வகைகள் குறித்துச் தெரிந்துகொள்வோம்


தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :

ஒரே ஒருவர், தன்னுடைய பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) வைத்து ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் , அந்நிறுவனத்தின் இலாபமோ நஷ்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சேர்ந்தது . இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று சொல்லுவார்கள் . அதன் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.


கூட்டு நிறுவனம் (Partnership company) :

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் தன்னுடன் சிலரை சேர்த்து (partners) ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் . இலாபம், நஷ்டமோ எதுவாயினும், சமமாகக் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளுக்கு அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு முழு உரிமை உண்டு.

வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :

மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப்
பகுக்கலாம். அவையாவன:

தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :

அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.

பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :

தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்...

பொது நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வெவ்வேறானவை. பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாகவோ பகுதியோகவோ அரசுடமையாக்கப்பட்டவை ஆகும்.

ஷேர் செய்வபர்களின் வகைகள்

1 . முதலீடு செய்பவர்கள் (இன்வேஷ்டர்ஸ்)

2. வியாபாரம் செய்பவர்கள்(ட்ரடெர்ஸ் )

3. எதாவது ஒரு யுகத்தின் அடிபடையில் வியாபாரம் செய்பவர்கள். ("SPECULATORS")

உதாரணம் :

அபுதாபியை சேர்ந்த "எதியட் " நிறுவனம் , இந்தியாவில் உள்ள ஜெட் நிறுவனத்தை வாங்க போவதாக தகவல் வெளியான உடன்(உண்மையான தகவல என்று பார்க்காமல் ஒரு யுகத்தின் அடிபடையில் ) ஜெட் நிறுவன பங்குகளை வாங்குவார்கள் .இதனால் ஜெட் நிறுவன பங்குகள் விலை ஏறும். ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை (இதுவரை ) . ஆகவே மீண்டும் அந்நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்தன . சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் . எனவே புதியவர்கள் முன்றாவது முறையை நினைத்து கூட பார்க்க வேண்டாம் .

பங்குகள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை விசயங்கள்

1 . நல்ல டிவிடன்ட் தரும் நிறுவனம் .

2 . நல்ல நிறுவனம் .

3. விலை குறைவாக உள்ள நேரம் (52 வார அதிகம் /52 வார குறைவு - இதை பின்னர் விளக்கமாக பார்ப்போம் .)அடுத்த வாரம் சந்திப்போம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by rajenderam40 on Thu May 23, 2013 3:53 am

பயனுள்ள தொடர், பயணிக்கிறோம் தங்களுடன்,,தொடருங்கள் .. அருமையிருக்கு

rajenderam40
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by T.N.Balasubramanian on Thu May 23, 2013 7:48 am

நன்றி பாலாஜி !
யாவரும் பாமரரும் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான திரி. தொடருங்கள்.
என்னுடைய ஓரிரு சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.
பங்கு சந்தையில் ஈடுபட்டால் லாபமும் வரலாம் நஷ்டமும் வரலாம் என்ற உண்மையை தெரிந்து கொண்டு விளையாடவேண்டும்.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by பாலாஜி on Thu May 23, 2013 11:48 am

மன்னிக்கவும் நண்பர்களே

எழுத நேரம் கிடைக்கவில்லை , ஐ.பி.எல் முடிந்தவுடன் இந்த திரி நிச்சயம் தொடரும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by rajenderam40 on Thu May 23, 2013 12:41 pm

திரு பாலாஜி!! அவர்களே ஐரோப்பாவில் வாழும் எமக்கு எமது சேமிப்புக்களை பங்கு வணிகத்தில் முதலிட விரும்புகிறோம். இருப்பினும் அது தொடர்பான சில அடிப்படை தகவல்களை அறியாது உள்ளோம். அதாவது எங்கு, எப்படி, எவ்வாறு, யாரிடம் தொடங்குவது என்று சில தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இதற்க்கான விளக்கத்தை தமிழ் மொழியில் அறிய விரும்புகிறோம். நன்றி

rajenderam40
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by positivekarthick on Thu May 23, 2013 12:50 pm

முக்கியம்.கவனம் இதில் முக்கியம்.நன்கு உணர்ந்து முதலீடு செய்யவும்.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by rajenderam40 on Sun Jun 23, 2013 2:52 am

வணக்கம். இங்கு மேலே எழுதிய அணைத்து தகவல்களும் மிகவும் பிரயோஜனமானது. அத்துடன் இலகுவில் புரிந்துகொண்டு  தொழில்படக்கூறிய, பங்குச் சந்தை தொடர்பான  மென்பொருள் இருப்பின் அதையும் இங்கு தந்தாள் நன்றாக இருக்கும். 

rajenderam40
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by ராஜு சரவணன் on Sun Jun 23, 2013 7:35 am

பங்க சந்தையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள

பங்கு சந்தை பற்றிய இணையதளங்கள்

பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .

தமிழ் இணையதளங்கள் :
http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/
ஆங்கில இணையதளங்கள் :
http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/

நன்றி வேடுஎம்சிஎக்ஸ் பிளாக்ஸபாட்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by ராஜு சரவணன் on Sun Jun 23, 2013 7:38 am

பாலாஜி அண்ணா இந்த பதிவு உண்மையில் சிறந்த ஒன்று தொடருங்கள் வாழ்த்துகள் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by யினியவன் on Sun Jun 23, 2013 9:00 am

சூப்பர் நம்ம ராஜூ மேத்தா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by atoz forex details on Thu Oct 01, 2015 8:07 pm

பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

2.  எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம்  பண்ணலாம் என்பவர்கள்  உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை  வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக  இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா....  ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

4. தினமும் கட்டாயம்  இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல.   ஓவர்  ஆல் நீங்கள்  எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள்.  காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை.

6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

avatar
atoz forex details
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by T.N.Balasubramanian on Thu Oct 01, 2015 8:21 pm

நன்றி A to Z ............................details .
நல்லதொரு அறிவிப்பை  ஆணித்தரமாக சொல்லி உள்ளீர்கள் .

உங்கள் வருகைக்கு நன்றி .
உங்கள் பெயர் ,மற்றும் மேலதிக விவரங்களை அறிமுகப் பகுதி சென்று தரவும் .
ஈகரை விதிமுறைகளை படித்து , அதை அனுசரிக்கவும் .
வலைப்பூ முகவரி ,பதிவில் இருக்கக்கூடாது / உங்கள் signature இல் இருக்கலாம்
blog address நீக்கப் படுகிறது .

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by SARATHI NEGAMAM on Thu Oct 01, 2015 9:06 pm

@atoz forex details wrote:பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

2.  எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம்  பண்ணலாம் என்பவர்கள்  உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை  வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக  இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா....  ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

4. தினமும் கட்டாயம்  இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல.   ஓவர்  ஆல் நீங்கள்  எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள்.  காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை.

6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1165818மிக சரியான பதிவு ,நானும் கூட சில பல ஆயிரங்களை இழந்து இருக்கிறேன்
avatar
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum