புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:24 pm

First topic message reminder :

கமலுக்கு எதிரான அரசின் கடுமையான நிலைக்கு 'அந்தப் பேச்சு' காரணமா?

சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது.

அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்...

நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்,

சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார்.

இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.

கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்' அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்.

தட்ஸ்தமிழ்



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:59 pm

ராமநாதபுரம் - 2 விஸ்வரூபம் தியேட்டர்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட 2 தியேட்டர்களில் இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஸ்வரூபம் படம் திரையிடப்படலாம் என்று நேற்றே உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டபோதிலும் தமிழக அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் எங்குமே படத்தை இன்று திரையிட முடியவில்லை. அத்தனை தியேட்டர்களும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

மேலும் ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. இதில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. ராமநாதபுரத்தில் டி-சினிமா என்ற தியேட்டரில் இன்று காலை விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்பட இருந்தது.

இந்நிலையில் படத்துக்கு மேலும் தடை நீடித்ததால், படம் திரையிடப்படவில்லை. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தத் திரையரங்கின் இன்னொரு புறத்தில் ஜெகன் திரையரங்கம் உள்ளது. இரு திரையரங்குகளும் சகோதரர்களுக்குச் சொந்தமானது.

இந்நிலையில், இன்று பிற்பகல், போலீஸ் காவலையும் மீறி திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது. முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் இதுவரை கைதாகவில்லை.




விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:59 pm


திருச்சியில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள கலையரங்கம் தியேட்டரில் விஸ்வரூபம் படம் வெளியாக இருந்தது. இதற்காக நேற்று நள்ளிரவு முதலே அங்கு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இன்று அதிகாலை கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் 100-க்கும் மேற் பட்ட ரசிகர்கள் டிக்கெட் கவுண்டர் முன்பு தயார் நிலையில் இருந்தனர்.

இதற்கிடையே காலை 10 மணி முதல் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படம் பார்க்க குவிந்தனர். தொடர்ந்து ரசிகர்மன்ற காட்சிக்காக அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை மன்ற நிர்வாகிகள் விநியோகித்தனர். ஆனால் காலை 11 மணி வரையிலும் படம் திரையிடப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர் முன்பு கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் இங்கு கோஷம் போடக்கூடாது, கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். உடனே ரசிகர்கள் படத்தை திரையிடுங்கள் அல்லது எங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தாருங்கள் என்று கூறினர்.

ஆனால் தியேட்டர் நிர்வாகம் சார்பில் அரசு அனுமதி அளித்த பின்னரே படம் திரையிடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்ற ரசிகர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலையரங்கம் தியேட்டர் வழியாக சத்திரம் செல்லும் பேருந்துகள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் பேருந்துகளை பெரியார் சிலை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.




விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 5:59 pm


தென்காசி தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு

தென்காசி அருகே உள்ள சுரண்டையில் விஸ்வ ரூபம் திரைப்படம் காலையில் திரையிட பட்டு சுமார் ஒருமணி நேரம் படம் ஓடி கொண்டிருந்தது அப்போது திடீர் என மேலிடத்திலிருந்து தகவல் வந்ததை தொடர்ந்து படம் ஓடுவது நிறுத்தபட்டு படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்பட்டது .மேலும் தென்காசியில் தாய்பாலா, பீ.எஸ்.எஸ்.ஆகிய இரு தியேட்டர்களில் படம் திரையிடப்படும் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அங்கு எராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காவண்ணம் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 30, 2013 6:00 pm

யினியவன் wrote:அம்மணியின் அட்டகாசத்திற்கும், அடக்குமுறைக்கும்,
ஆணவத்துக்கும் அளவில்லாம போச்சு என்பதற்கு
இதுவும் உதாரணம் அதனால் எத்துனை பேருக்கு ரணம்!!!!

பிரதமர் கனவில் இருக்கும் அவருக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.(புகட்டுவார்களா ஒன்னும் புரியல )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 30, 2013 6:01 pm

தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியிட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல்- பேனர்கள் எரிப்பு

சென்னை: சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது சிலர் கல்வீசியும், தீவைத்து எரித்தும் தாக்குதல் தொடுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் விஸ்வரூபம்திரைப்படம் திரைக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டுள்ளனர். அத்தனை தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் எழும்பூரில் உள்ள ஆல்பட் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பேனரைசிலர் தீவைத்து எரித்து விட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ பரவமால் தடுக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

தேவி தியேட்டரிலும் தீவைப்பு

இதேபோல இன்று காலை, அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் முன்பு மத்திய சென்னை மாவட்ட கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் ரசிகர்கள் விஸ்வரூபம் படத்துக்கான பேனரை காலை 6 மணி அளவில் வைத்தனர். அதை அங்கு வந்த ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி பேனரை எரித்து விட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தியேட்டரின் மெயின் வாசல் அருகில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

விஸ்வரூபம் படத்தின் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் தேவி தியேட்டர் முன்பு கமல் ரசிகர்களும் திரண்டனர். அவர்கள் பேனர் எரிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் அப்படியெல்லாம் தீவைப்பு சம்பவங்கள் நடக்கவில்லையே என்று போலீஸார் மகா அமைதியாக பதிலளித்தனர். உண்மையில் தீயில் எரிந்த பேனரை போலீஸாரே எடுத்து மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் தியேட்டர் மீது கல்வீச்சு

அதேபோல சென்னை வில்லிவாக்கத்தி்ல் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் இன்று சிலர் திரண்டு வந்து கல்வீச்சில் இறங்கினர். இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.மேலும் தியேட்டருக்கு முன்பு டயர்களையும் போட்டுத் தீவைத்து எரித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்

சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் படம் நிறுத்தப்பட்டது. தாக்குதலை தடுக்க தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருப்பூரில் உஷா மெகா, எஸ்.ஏ.பி, ஸ்ரீசக்தி, யுனிவர்சல் உள்ளிட்ட 7 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படுவதை ஒட்டி காலை முதலே ரசிகர்கள் திரண்டனர்

ரசிகர் மன்ற காட்சி

காலை 6 மணிக்கு எஸ்.ஏ.பி தியேட்டரில் ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. பிற தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். படம் திரையிடப்படவில்லை. சில தியேட்டர்களில் ப்ளக்ஸ் பேனர்களை கூட வைக்க அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டரின் அனுமதி கிடைத்தபின்னர்தான் படம் திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

திருப்பூரில் அனைத்து தியேட்டர் வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலும் பேனர்கள் எரிக்கப்பட்டதாலும் இங்கும் அதுபோல சம்பவங்களை ஏற்படாமல் தடுக்க போலீஸ் காவல் நிற்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் பாதியில் நிறுத்தம்

ஈரோட்டில் மிகமுக்கியமான பகுதியில் உள்ள திரையரங்கில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 15 நிமிடத்தில் திரைப்படம் நிறுத்தப்பட்டது.

நாகையிலும் சிக்கல்

இதேபோல நாகப்பட்டினம் பாண்டியன் திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. விஸ்வரூபம் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர். ஆனால் திடீரென அங்கு வந்த வட்டாட்சியர், திரையரங்கு உரிமையாளரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி, திரைப்படத்தைப் பாதியில் நிறுத்தச் சொன்னார். இதை அடுத்து, படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் கலைவாணியிலும் படம் நிறுத்தம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கலைவாணி திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி உடனே நிறுத்தும்படி கட்டளை வந்ததால், படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகள் பெரும் கோபம் அடைந்து பிரச்னையில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் குதித்தனர்.

தேவி, மகாராணி, எம்எம், கமலா தியேட்டர்கள் மீது தாக்குதல்

சென்னையில் விஸ்வரூபம் வெளியான பல தியேட்டர்களில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதுமே அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்க வளாகத்தை ஒரு கும்பல் தாக்கியது.

அதே நேரத்தில் வட சென்னையில் உள்ள மகாராணி மற்றும் எம்எம் திரையரங்குகளிலும் வன்முறையை அரங்கேற்றியது, முகத்துக்கு கறுப்புத் துணி போர்த்திய ஒரு கும்பல். இதனால் மக்கள் தெறித்து ஓடினர். தியேட்டர்கள் விஸ்வரூபம் போடுவதில்லை என்று உறுதி கூறிவிட்டனர்.

இந்த நிலையில் சென்னையின் மையப்பகுதியான வடபழனியில் உள்ள கமலா திரையரங்கிலும் புகுந்தது ஒரு கூட்டம். அங்கிருந்த விஸ்வரூபம் பேனர்களை தீயிட்டுக் கொளுத்தியது. தியேட்டர் மீது கல்வீசினர். இதனால் தியேட்டர் நிர்வாகம் பதறிப் போய் படத்தை நாங்கள் திரையிடவில்லை.

இந்த அரங்குகளுக்கு நேர்ந்ததைக் கேள்விப்பட்ட மற்ற அரங்குகள், வேக வேகமாக விஸ்வரூப அடையாளங்களை அப்புறப்படுத்தினர்.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 30, 2013 6:24 pm

இந்த வன்முறையால் சட்டம் ஒழுங்கு பாதிக்க படாத
என்னா ஞாயம் என்று தெரியவில்லை.! என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 10:08 am

விஸ்வரூபத்தை வெளியிட அனுமதியுங்கள்: மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்கை

கோலாலம்பூர்: விஸ்வரூபம் படத்தில் எந்த மதத்திற்கும் எதிராக எதுவும் இல்லை என்றும் அதனால் அதை மலேசியாவில் திரையிட அனுமதி அளிக்குமாறும் அந்நாட்டு அரசுக்கு இந்திய வம்சாவளி கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கமலின் விஸ்வரூபம் மலேசியாவில் கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் அங்கு அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் படத்தை ரத்து செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்தில் எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் எந்த காட்சியும் இல்லை என்றும், அதனால் அப்படத்தை வெளியிட அனுமதி அளிக்குமாறும் அந்நாட்டு அரசுக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வேண்டும் என்றால் உள்துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் மற்றும் அவரது அமைச்சக அதிகாரிகளுக்காக விஸ்வரூபம் படத்தை திரையிடுகிறோம். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு அதில் இஸ்லாத்திற்கு எதிரான காட்சிகள் உள்ளதா என்று முடிவு செய்யட்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 11:21 am

நடிகர் கமல்ஹாசனை ஆட்டுவிக்கும் 'வி', ரா;'ஜ'!

சென்னை: சில நேரங்களில் நம்மை நாமே கிள்ளிப் பார்ப்பது போன்ற ஆச்சரியங்கள் நடந்தேறும்... நடிகர் கமல்ஹாசன் விவகாரத்திலும் அப்படி ஒரு 'ஆச்சரியமான சுவாரசியமான வில்லங்க'த்தை நமது வாசகர்களுக்காக தருகிறோம்.. ஆமாங்க கமலுக்குப் பிடிக்காத அந்த 'வி', ரா, ஜ' என்னனு அவசியம் நீங்க தெரிஞ்சுக்குங்க..

நடிகர் கமல்ஹாசன் தம்மை முற்போக்குவாதியாக, பெரியார் பற்றாளனாக சொல்லிக் கொள்பவர். அவர் தமக்கு எந்த மதம் மீதும் நம்பிக்கை இல்லை.. சாதி மீதும் நம்பிக்கை இல்லை என்பவர். ஆனால் அவரது தேவர் மகனாக இருக்கட்டும், உன்னைப் போல் ஒருவனாகட்டும், 'வி'ஸ்வரூபமாகட்டும் வில்லங்கங்களாக வீடு கட்டி வெளுத்து வாங்குகிறது.

'வி'ஸ்வரூபம் படம்தான் வில்லங்கம் என்றில்லை. சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடித்த 'வி'க்ரம் படமும் இப்போது அரசியல் பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறது. அப்போது கமல்ஹாசனை ஒருமையில் திட்டி எம்.ஜி.ஆருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியதாக கருணாநிதி சொல்லப் போய் அவதூறு வழக்கு ரேஞ்சுக்கு ஜெயலலிதா எகிறிவிட்டார். ஆனாலும் விடாது கறுப்பு என்கிற வகையில் கருணாநிதியோ ஆதாரமெல்லாம் இருக்கிறது.. நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறேன் என்று சொல்லி பதிலடி கொடுத்திருக்கிறார்.

அனேகமாக வி, ரா, ஜ பற்றிய ஒரு யூகத்துக்கு ரெடியாகி இருப்பீர்கள் அல்லவா? சஸ்பென்ஸ் நீடிக்க வேண்டியதில்லை..



விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Feb 01, 2013 12:35 pm


விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 53916259739787695381611z

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 01, 2013 12:40 pm

டார்வின் wrote:விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்! - Page 2 53916259739787695381611z

சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக