புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
56 Posts - 50%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
12 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
9 Posts - 2%
jairam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 33 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 33 of 84 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 58 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 07, 2014 10:33 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (257)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  ‘பல’ எனும் அகர ஈற்றுப் பெயர்சொற்களின் புணர்ச்சி விதிகளைப் பார்த்தோம் !

ஒருவழியாக அகர ஈற்றுப் பெயர்களை முடித்த தொல்காப்பியர் , ஆகார ஈற்றுப் பெயர்களைக் கையில் எடுக்கிறார் ! :-

“ஆகார விறுதி யகர வியற்றே ” (உயிர்மயங் . 19)

‘ஆகார இறுதி’ -  ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் , வல்லெழுத்துச் சொற்களுடன் புணரும்போது ,
‘ அகர இயற்றே’ – ‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணர்ந்ததுபோலப் புணரும் !
   ‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணரும் இலக்கணத்தைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 1இல் விளக்கியதை நாம் விரிவாகப் பார்த்துள்ளோம் (விள + குறிது = விளக் குறிது)!

ஆகார ஈற்றுச் சொற்களின் புணச்சிகளை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் காண்போம் !-


1. ஆரா + கடிது = ஆரா கடிது ×
  ஆரா + கடிது = ஆராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

ஆரா + சிறிது = ஆரா சிறிது ×
ஆரா + சிறிது = ஆராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

ஆரா + தீது = ஆரா தீது ×
ஆரா + தீது = ஆராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

ஆரா + பெரிது = ஆரா பெரிது ×
ஆரா + பெரிது = ஆராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

(ஆரா – பாம்பு)


2 . தாரா + கடிது = தாரா கடிது ×
   தாரா + கடிது = தாராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                                புணர்ச்சி)

தாரா + சிறிது = தாரா சிறிது ×
தாரா + சிறிது = தாராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

தாரா + தீது = தாரா தீது ×
தாரா + தீது = தாராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

தாரா + பெரிது = தாரா பெரிது ×
தாரா + பெரிது = தாராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

(தாரா – குள்ள வாத்து)

இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இளம்பூரணர் கூற , நச்சினார்க்கினியர் ‘மூங்கா’என்ற இன்னொரு ஆகார ஈற்றுப் பெயரை அறிமுகப்படுத்துகிறார் !-

   மூங்கா + கடிது = மூங்கா கடிது ×
   மூங்கா + கடிது = மூங்காக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                                புணர்ச்சி)

மூங்கா + சிறிது = மூங்கா சிறிது ×
மூங்கா + சிறிது = மூங்காச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

மூங்கா + தீது = மூங்கா தீது ×
மூங்கா + தீது = மூங்காத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

மூங்கா + பெரிது = மூங்கா பெரிது ×
மூங்கா + பெரிது = மூங்காப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது)    
(அல்வழிப் புணர்ச்சி)

(மூங்கா – கீரி)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 08, 2014 8:43 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (258)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 அகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள், ஆகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகளோ
டு எப்படிப் புணரும் எனக் காட்டினார் தொல்காப்பியர் !

இப்போது , வினையெச்சச் சொற்களைக் கையில் எடுக்கிறார் !

‘உண்ணாது சென்றான்’ என்ற பொருளில் வரும்,

‘உண்ணாச் சென்றான்’ – இது சரியா?
‘உண்ணா சென்றான்’ – இது சரியா?

- தொல்காப்பிய விதி யாது?

விதி –
“செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்”  (உயிர்மயங் . 20)

  ‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் ’ – ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் வரக்கூடிய வினையெச்சச் சொல்லும் ,

‘அவ்வியல் திரியாது  என்மனார் புலவர்’ – முன் நூற்பாவில்  (உயிர்மயங். 19) கூறியபடி , வல்லெழுத்துச் சந்தி பெறுவதில் மாறாது என்று புலவர்கள் கூறுவார்கள்!  

உண்ணா + கொண்டான் = உண்ணா கொண்டான் ×
உண்ணா + கொண்டான் = உண்ணாக் கொண்டான் √ (க்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + சென்றான் = உண்ணா சென்றான் ×
உண்ணா + சென்றான் = உண்ணாச் சென்றான் √ (ச்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + தந்தான் = உண்ணா தந்தான் ×
உண்ணா + தந்தான் = உண்ணாத் தந்தான் √ (த்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + போயினான் = உண்ணா போயினான் ×
உண்ணா + போயினான் = உண்ணாப் போயினான் √ (ப்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே , இளம்பூரணர் ஓர் உரை நுட்பம் கூறுகிறார் !-

“ செய்யா என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியுமெனக் கொள்க !”

‘சாப்பிடாத கொற்றன்’ என்ற பொருளில் வருவது – ‘உண்ணாக் கொற்றன்’ .

இங்கே ‘உண்ணா’ எனும் சொல்,  ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் உள்ளது ;அவ்வளவுதன் !

உண்ணா + கொற்றன் = உண்ணா கொற்றன் ×
உண்ணா + கொற்றன் = உண்ணாக் கொற்றன் √(க்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + சாத்தன் = உண்ணா சாத்தன் ×
உண்ணா + சாத்தன் = உண்ணாச் சாத்தன் √(ச்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + தேவன் = உண்ணா தேவன் ×
உண்ணா + தேவன் = உண்ணாத் தேவன் √(த்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + பூதன் = உண்ணா பூதன் ×
உண்ணா + பூதன் = உண்ணாப் பூதன் √(ப்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

 
பார்த்தீர்களா?

தொல்காப்பியர் , வினையெச்சத்தை வைத்து விதி எழுதினால் , உரையாசிரியர்கள் ஒரு படி மேலேபோய் , அந்த விதி பெயரெச்சத்திற்கும் பொருந்துமா எனச் சிந்தித்துள்ளார்களே ?

இதுதான் உரைக்கோட்பாடு (Theory of Commentary) என்பது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 09, 2014 4:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (259)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘இரவும் பகலும்’ என்ற பொருளைத் தெரிவிக்க,
‘இரா பகல்’ – இது சரியா?
‘இராஅப் பகல்’ – இது சரியா?

- தொல்காப்பிய விதி யாது ?

இதோ விதி ! :-

 “உம்மை எஞ்சிய விருபெயர்த் தொகைமொழி
  மெய்ம்மை யாக வகர மிகுமே ”                     (உயிர்மயங். 21)

‘உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி’ – ‘உம்’
என்ற சொல் இல்லாது , ஆகர ஈற்று நிலைமொழிச் சொல்லோடு, இன்னொரு  பெயர்ச் சொல்  சேர்ந்து ஒரு தொகைச் சொல்லாக நிற்கும்போது,

‘மெய்ம்மையாக  அகரம் மிகுமே’ – உண்மையில் சந்தியாக ‘அ’ தோன்றும் !

உவா + பதினான்கு = உவாப் பதினான்கு ×
 உவா + பதினான்கு = உவா +அ + பதினான்கு (அ- தோன்றியது) =    
                                  உவாஅப் பதினான்கு √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
[உவா – பௌர்ணிமை (Full moon) யையும் , அமாவாசை(New moon)யையும் குறிக்கும் பொதுச் சொல் ]

இரா + பகல் = இராப் பகல் ×
இரா + பகல் = இரா +அ + பகல் (அ- தோன்றியது) =    
                                  இராஅப் பகல் √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே இளம்பூரணர் , “இம் முடிபு இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கும் கொள்க .” என்கிறார் !

என்ன பொருள்?
அரா + குட்டி = அராக் குட்டி ×
அரா + குட்டி = அராஅக் குட்டி √ (அ - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
‘அராஅக் குட்டி’ = குட்டியாகிய பாம்பு ; இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ‘ஆகிய’ என்ற பண்பு உருபு மறைந்து வந்ததைக் கவனிக்க !

அடுத்து , இளம்பூரணர் , “எழுவாய் முடிபிற்கும் அகரப் பேறு கொள்க” என்கிறார் !

என்ன பொருள்?
   உவா + கொடிது = உவாக் கொடிது ×
  உவா + கொடிது = உவாஅக் கொடிது √(அ - தோன்றியது) (அல்வழிப்
                                              புணர்ச்சி)
‘உவாஅக்  கொடிது’ என்பதில் ,  ‘உவா’ – எழுவாய் ; ‘உவாஅக்  கொடிது’ – எழுவாய்த் தொடர் .

அடுத்து , இளம்பூரணர் , “பெயரெச்சத்திற்கும்  அகரப்  பேறு கொள்க” என்கிறார் !

என்ன பொருள்?

உவா + காக்கை = உவாக் காக்கை ×
உவா + காக்கை = உவாஅக் காக்கை √(அ - தோன்றியது) (அல்வழிப்
                                              புணர்ச்சி)
உவாஅக் காக்கை – உவா நாளில் வரும் காக்கை ; எனவே,
‘உவாஅக் காக்கை ’ என்பதில் , ‘உவா’ , பெயரெச்சம் !
‘உவாஅக் காக்கை ’ – பெயரெச்சத் தொடர் .

மேலை எடுத்துக்காட்டுகளில் , வருமொழிகள் யாவையும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைக் கவனியுங்கள் !

எனவேதான்  இளம்பூரணர் , “இயல்புக் கணத்துக் கண்ணும் அகரப் பேறு கொள்க” என்றார் !

என்ன பொருள்?
இறா + வழுதுணங்காய் = இறா வழுதுணங்காய் ×
இறா + வழுதுணங்காய் = இறாஅ  வழுதுணங்காய் √(அ - தோன்றியது)
                                          (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே , ‘வழுதுணங்காய்’ என்ற வருமொழி முதல் எழுத்து, இடையின எழுத்து என்பதைக் கவனியுங்கள் !
(இறாஅ  வழுதுணங்காய் – இறா மீனும் கத்தரிக்காயும்)

‘இராஅப் பகல்’ என்ற தொல்காப்பிய விதியைப்  பார்த்தோம் ! ஆனால் , இன்று இப்புணர்ச்சி இல்லை ! ‘இராப் பகலாக உழைக்கிறாள்’ என்றுதானே இன்று எழுதுகிறோம் ?

இராப் பகல்’ என்றால், ‘இல்லாத பகல்’ என்றொரு பொருளும் ஏற்படுமல்லவா? இதைத் தவிர்க்கவே, தொல்காப்பியர் நாளில், ‘அ’ சேர்த்து எழுதும் முறை தோன்றியது ! ஆனால் எழுதும்போது ‘அ’வைஎழுதிவிடலாமே தவிர சொல்லும்போது தனியாக நிறுத்தி ‘அ’வை மட்டும் உச்சரிக்கமுடியாது ! இதனால்தான்  ‘அ’ சேர்வது வழக்கொழிந்தது !

எனவே ,
இரா பகல் ×
இராஅப் பகல் √
இராப்  பகல் √

    ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 10, 2014 7:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (260)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 உயிர் மயங்கியலில் ,  உயிர் எழுத்துகளை ஈற்றிலே  கொண்ட  சொற்கள் பிறசொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்துவருகிறோம் !

சந்தி பெற்றுப் புணரும் சில சொற்களை முன் ஆய்வில் பார்த்தோம் !

இப்போது தொல்காப்பியர் சந்தி எதுவும் பெறாது , இயல்பாகப் புணரும் சொற்களைப் பட்டியல் இடுகிறார் ! :-

1 . பசுவைக் குறிக்கும் ‘ஆ’ என்ற சொல் –

ஆ + குறிது = ஆக் குறிது ×
ஆ + குறிது = ஆ குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

ஆ + சிறிது = ஆச் சிறிது ×
ஆ + சிறிது = ஆ சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

ஆ + தீது = ஆத் தீது ×
ஆ + தீது = ஆ தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

ஆ + பெரிது = ஆப் பெரிது ×
ஆ + பெரிது = ஆ பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)


இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளது ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லுக்கான புணர்ச்சி பற்றியது அல்ல ! ‘ஆ’ என்ற தனிச் சொல்லின் புணர்ச்சி பற்றியதாகும் ! இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது !
’ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லானால், சந்தி வரும் ! தாரா + குறிது = தாராக் குறிது(அல்வழிப் புணர்ச்சி) !

2 .  விலங்கைக் குறிக்கும் ‘மா’ எனும் சொல் !:-

மா + குறிது = மாக் குறிது ×
மா + குறிது = மா குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)

மா + சிறிது = மாச் சிறிது ×
மா + சிறிது = மா சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)

மா + தீது = மாத் தீது ×
மா + தீது = மா தீது √ (அல்வழிப் புணர்ச்சி)

மா + பெரிது = மாப் பெரிது ×
மா + பெரிது = மா பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)

3. விளித்தலை உடைய பெயர்ச்சொல்லாகிய உயர்திணைச் சொல் !:-

ஊரா + கொள் = ஊராக் கொள் ×
ஊரா + கொள் = ஊரா கொள் √(அல்வழிப் புணர்ச்சி)


ஊரா + செல்= ஊராச் செல் ×
ஊரா + செல் = ஊரா செல் √(அல்வழிப் புணர்ச்சி)


ஊரா + தா = ஊராத் தா ×
ஊரா + தா = ஊரா தா √(அல்வழிப் புணர்ச்சி)

ஊரா + போ = ஊராப் போ ×
ஊரா + போ = ஊரா போ √ (அல்வழிப் புணர்ச்சி)

(ஊரா – ஊரனே; ஊரன் – பெயர்ச் சொல்)

4 . வினாப் பொருளில் வரும் ‘யா’ என்ற பெயர்ச் சொல் !:-

யா + குறிய = யாக் குறிய ×
யா + குறிய = யா குறிய √(அல்வழிப் புணர்ச்சி)

யா + சிறிய = யாச் சிறிய ×
யா + சிறிய = யா சிறிய √(அல்வழிப் புணர்ச்சி)

யா + தீய = யாத் தீய ×
யா + தீய = யா தீய √(அல்வழிப் புணர்ச்சி)

யா + பெரிய = யாப் பெரிய ×
யா + பெரிய = யா பெரிய √ (அல்வழிப் புணர்ச்சி)

      (யா – யாவை ;  யா குறிய – எவை குட்டையானவை ?)

5 .  ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , பன்மையை உணர்த்தும், வினை முற்று !:-

உண்ணா + குதிரை = உண்ணாக் குதிரை ×
உண்ணா + குதிரை = உண்ணா குதிரை √ (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + செந்நாய் = உண்ணாச் செந்நாய் ×
உண்ணா + செந்நாய் = உண்ணா செந்நாய் √ (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + தகர் = உண்ணாத் தகர் ×
உண்ணா + தகர் = உண்ணா தகர் √ (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + பன்றி = உண்ணாப் பன்றி ×
உண்ணா + பன்றி = உண்ணா பன்றி √ (அல்வழிப் புணர்ச்சி)

 (உண்ணா – உண்ண மாட்டா; உண்ணா -   ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட ,           பன்மையை உணர்த்தும், வினை முற்று)

6 . ‘மியா’ என்ற, முன்னிலை வினைச் சொல்லைக் குறித்துவரும் , ஏவல் ,        
                உரையசைச் சொல் !:-

கேண்மியா + கொற்றா = கேண்மியாக் கொற்றா  ×
கேண்மியா + கொற்றா = கேண்மியா கொற்றா  √(அல்வழிப் புணர்ச்சி)

கேண்மியா + சாத்தா = கேண்மியாச் சாத்தா  ×
கேண்மியா + சாத்தா = கேண்மியா சாத்தா  √ (அல்வழிப் புணர்ச்சி)

கேண்மியா + தேவா = கேண்மியாத் தேவா  ×
கேண்மியா + தேவா = கேண்மியா தேவா  √ (அல்வழிப் புணர்ச்சி)

கேண்மியா + பூதா = கேண்மியாப் பூதா  ×
கேண்மியா + பூதா = கேண்மியா பூதா  √ ( அல்வழிப் புணர்ச்சி)

 (கேண்மியா – ‘கேள்’ என்ற வினைச் சொல்லோடு , ‘மியா’ என்ற அசைச் சொல் ஈறாக  வந்துள்ளதைக் கவனிக்க ; ‘மியா’ என்பது  தனிச் சொல்லாக இது வராது !  )

7 .  ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , தனது தொழிலைச் சொல்லும், வினா !:-

உண்கா + கொற்றா = உண்காக் கொற்றா ×
உண்கா + கொற்றா = உண்கா கொற்றா √ ( அல்வழிப் புணர்ச்சி)

உண்கா + சாத்தா = உண்காச் சாத்தா ×
உண்கா + சாத்தா = உண்கா சாத்தா √ ( அல்வழிப் புணர்ச்சி)

உண்கா + தேவா = உண்காத் தேவா ×
உண்கா + தேவா = உண்கா தேவா √ ( அல்வழிப் புணர்ச்சி)

உண்கா + பூதா = உண்காப் பூதா ×
உண்கா + பூதா = உண்கா பூதா √ ( அல்வழிப் புணர்ச்சி)

 (உண்கா – உண்பேனோ ? ‘உண்பேனோ’ என்பது தன் வினையைக் குறிக்கும் என்பதைக் கவனிக்க !)

   மேலே  7 சொற்களும் இயல்பாகப் புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?

இதைக் கூறும் தொல்காப்பிய நூற்பா !  -

“ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த வுரையசை மியாவும்
தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ
டன்றி யனைத்து மியல்பென மொழிப”  (உயிர்மயங் . 22)

 பெயர்ச்சொல், வினைச்சொல்லோடு நிற்காது அசைச்சொல்லையும் கணக்கில் கொண்டு தொல்காப்பியர் விதி கூறியுள்ளது – வியப்பு ! வியப்பு !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 11, 2014 11:23 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (261)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தாரா + குறிது = தாராக் குறிது
- இப் புணர்ச்சியை முன்பே இதே இயலில் பார்த்தோம்! நினைவிருக்கிறதா?

இப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி !

இதே  ‘ஆ’ ஈற்றுத் ‘தாரா’ , வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படிப் புணரும் ?

இதற்கு விடைகூறுவதுதான் நமது அடுத்த நூற்பா !:-

“வேற்றுமைக் கண்ணு  மதனோ ரற்றே” (உயிர்மயங். 23)

‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் புணர்ச்சியிலும்,

‘அதனோர் அற்றே’ – முன்னே உருபியல் நூற்பா 19இல் கூறியபடியே வல்லெழுத்துச் சந்தி பெறும் !

1. தாரா + கால் = தாரா கால் ×
   தாரா + கால் = தாராக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

தாரா + சிறகு = தாரா சிறகு ×
தாரா + சிறகு = தாராச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)

தாரா + தலை = தாரா தலை ×
தாரா + தலை = தாராத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

தாரா + புறம் = தாரா புறம் ×
தாரா + புறம் = தாராப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

(தாரா – குள்ள வாத்து ; இது முன்பும் கூறப்பட்டது)

2. மூங்கா + கால் = மூங்கா கால் ×
   மூங்கா + கால் = மூங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

மூங்கா + சிறகு = மூங்கா சிறகு ×
மூங்கா + சிறகு = மூங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)

மூங்கா + தலை = மூங்கா தலை ×
மூங்கா + தலை = மூங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

மூங்கா + புறம் = மூங்கா புறம் ×
மூங்கா + புறம் = மூங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

(மூங்கா – கீரி ; இது முன்பும் கூறப்பட்டது)

3. வங்கா + கால் = வங்கா கால் ×
   வங்கா + கால் = வங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

வங்கா + சிறகு = வங்கா சிறகு ×
வங்கா + சிறகு = வங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)

வங்கா + தலை = வங்கா தலை ×
வங்கா + தலை = வங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

வங்கா + புறம் = வங்கா புறம் ×
வங்கா + புறம் = வங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

(வங்கா – கொக்கு வகை )

‘ஆ’ ஈற்றுச் சொல் என்றால் விலங்குகள் , பறவைகள் மட்டும்தான் எனக் கொள்ளற்க !

பலா + சுவை = பலாச் சுவை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பலா + சக்கை = பலாச் சக்கை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

- எனவும் புணரும் !
மேல் ‘வங்கா’ , நச்சினார்க்கினியர் உரையில் உள்ளதாகும் !

நச்சினார்க்கினியர் குறித்த வங்காவைப் பார்க்க ஆசையா?

[You must be registered and logged in to see this image.]

Courtesy –  carolinabirds.org

இதுதான் வங்கா!

இது ‘வக்கா’ எனவும் அறியப்படும் !

இதன் விலங்கியல் பெயர் – Ardea nivea

இதன் வடமொழிப் பெயர் – தாபஸ்

  ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 14, 2014 10:28 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (262)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தனிக்குறிலை அடுத்து ‘ஆ’ஈறு வரும்  பெயர்சொற்கள்  தமிழில் பல உள !-

சுறா , பலா, மிடா, உலா,விளா , இரா, அவா, உசா,உகா,மரா – ஆகியவற்றைக் காணலாம் !

ஓரெழுத்து ஒருமொழியாக நிற்கும் ‘ஆ’ஈற்றுப் பெயர்ச் சொற்களும் சில உள ! -

பா , கா, நா , மா – ஆகியவற்றைக் காணலாம் !

இந்த இருவகைச் சொற்களையும் ஆய்வுக்கு எடுக்கிறார் நாம் காணப்போகும் நூற்பவில் தொல்காப்பியர் !

அஃதாவது , இவ்விருவகைச் சொற்களும் , வேற்றுமைப்  புணர்ச்சியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடு போய்ப் புணர்ந்தால் என்ன நடக்கும் என்று காட்டுகிறார் ! –

“குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்று மகரக் கிளவி ” (உயிர்மயங். 24)

1. பலா + கோடு = பலா + அ + கோடு (அ- சேர்ந்தது) = பலாஅக் கோடு √
(வேற்றுமைப் புணர்ச்சி)
 
பலா + செதிள் = பலா + அ + செதிள் (அ- சேர்ந்தது) = பலாஅச் செதிள் √
(வேற்றுமைப் புணர்ச்சி)

பலா + தோல் = பலா + அ + தோல் (அ- சேர்ந்தது) = பலாஅத் தோல் √
(வேற்றுமைப் புணர்ச்சி)

பலா + புறம் = பலா + அ + புறம் (அ- சேர்ந்தது) = பலாஅப் புறம் √
(வேற்றுமைப் புணர்ச்சி)

2. கா + குறை = கா + அ + குறை (அ- சேர்ந்தது) = காஅக் குறை √
(வேற்றுமைப் புணர்ச்சி)

  கா + செய்கை = கா + அ + செய்கை (அ- சேர்ந்தது) = காஅச்  செய்கை √
(வேற்றுமைப் புணர்ச்சி)

கா + தலை = கா + அ + தலை (அ- சேர்ந்தது) = காஅத்  தலை √
(வேற்றுமைப் புணர்ச்சி)

கா + புறம் = கா + அ + புறம் (அ- சேர்ந்தது) = காஅப் புறம் √
(வேற்றுமைப் புணர்ச்சி)
(கா - சோலை)

இவ்விடத்தில் இளம்பூரணர் உரைக்கும் கருத்து – ஓரெழுத்து ஒருமொழியைப்   பொறுத்தவரையில் , அகரப் பேறு சிறுபான்மையாகத்தான் வரும் !

அப்படியாயின் , ஓரெழுத்து ஒருமொழியைப் பொறுத்தவரை , பெரும்பாலும், ‘அ’ இடையே வராது என்றாகிறது !

அடுத்ததாக இளம்பூரணர்  ‘அவ்வீற்று வேற்றுமையுள் எடுத்தோதாதவற்றின் முடிபும் ’ கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் !

அஃதாவது ?

அஃதாவது-
வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘ஆ’ஈற்றுப் பெயர்ச்சொற் புணர்ச்சியைப் பொறுத்தவரை , நாம் பார்த்துவரும் இந்த நூற்பாவில் (உயிர்மயங். 24) கூறியபடி , தனிக்குறிலை அடுத்த ‘ஆ’ஈற்றுச்சொல்லானது, புணரும்போது ‘அ’ பெற்றதுபோலப் பெறாது , சாரியை பெற்றுப் புணரும் எனச் சான்றுகள் காட்டுகிறார் இளம்பூரணர் !

அதன்படி-

1 . அண்ணா + குளம் = அண்ணா + அத்து + குளம் (அத்து – சாரியை சேர்கிறது)=அண்ணாத்துக் குளம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

                              (அண்ணா – தனிக்குறிலை அடுத்து ‘ஆ’ஈறு வந்துள்ளதைக் கவனிக்க)

2 . உவா + ஞான்று = உவா + அத்து + ஞான்று (அத்து – சாரியை சேர்கிறது)= உவாஅத்து ஞான்று √ (வேற்றுமைப் புணர்ச்சி)

                               (உவா – தனிக்குறிலை அடுத்து ‘ஆ’ஈறு வந்துள்ள பெயர்ச்சொல்; இங்கு , மெல்லெழுத்தை முதலாகக்கொண்ட                      வருமொழியையும் காண்க!)

3 . உவா + கொண்டான் = உவா + அத்து +ஆல் + கொண்டான் (அத்து – சாரியை   ; ஆல் – முன்றாம் வேற்றுமை உருபு )
                                                                                                                        = உவாஅத்தாற் கொண்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

4. யா + கோடு = யா + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது)= யாவற்றுக் கோடு  √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இதே நூற்பாவில் (உயிர்மயங் . 24) , ஓரெழுத்து ஒருமொழி ‘கா’வானது , ‘அ’ பெற்றுக் ‘காஅக் குறை’ ஆனதல்லவா? இங்கு ஓரெழுத்து ஒருமொழி , வேறுமுடிபுகொண்டு,  ‘அ’பெறாமல் ,சாரியை பெறுதலைக் காண்க !

(யா –  ‘ஆ’ஈறு பெற்ற ஓரெழுத்து ஒருமொழியாகிய பெயர்ச்சொல்; யா – யா மரம்)

அடுத்து இளம்பூரணர், ‘இவ்வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்வு ’ கொள்ளுமாறு தெரிவிக்கிறார் !

அஃதாவது –

மூங்கா + தோல் = மூங்காத் தோல்  (இயைபு வல்லெழுத்து வந்தது)(வேற்றுமைப் பொருட்புணர்ச்சி)

இதில், இடையே  ‘இன்’ சாரியையானது , ‘த்’ஐ  வீழ்த்திவிட்டு , வேறொரு வேற்றுமை உருபு தேவையில்லாவாறு தானே வேற்றுமைப் பொருளையும் தந்து , ‘மூங்காவின் தோல்’ என்றாகிறது !

அடுத்து , இளம்பூரணர் ,  ‘இவ் வுயிரீற்றில்வரும் உருபீற்றுச் செய்கையும் கொள்க’ என்றார் !

அஃதாவது-

இடா + உள் + கொண்டான் = இடா + இன் + உள் + கொண்டான் (உள்- ஏழாம் வேற்றுமை உருபு; இன் – சாரியை) = இடாவினுள் + கொண்டான் = இடாவினுட் கொண்டான்√ ( ‘உள்’ எனும் வேற்றுமை உருபின் ‘ள்’ , ‘ட்’ ஆனதைக் காண்க !)

(இடா - நீர் இறைக்கும் பனையோலைக் கூடை)

இளம்பூரணர் குறித்த யா என்ற மரத்தைக் காண ஆசையா ?


[You must be registered and logged in to see this image.]

Courtesy - [You must be registered and logged in to see this link.]

இதுதான்  யா மரம் ! இதன் தாவரவியல் பெயர் Caryota urens

இதன் வேறு தமிழ்ப் பெயர்கள் – கூந்தல் பனை ; உலத்தி

    ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 15, 2014 9:39 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (263)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

              என்னதான் தொல்காப்பியர் விதிகளை அமைத்து அவற்றுக்குள் சொற்களை அமிழ்த்தினாலும் சில சொற்கள் அவற்றை மீறிப் பிய்த்துக்கொண்டு வெளியே வந்துவிடுகின்றன!

                தனிக் குற்றெழுத்தை அடுத்த ‘ஆ’ஈற்றுச் சொற்களுக்கு விதி வகுத்தபோது, இடையே ‘அ’வரும் என அவர் விதி வகுத்ததைச் சற்றுமுன்தான் பார்த்தோம் !
               
                அதற்குள் விதி விலக்குக் கூறவேண்டி வந்துவிட்டது !

               ‘இரா’ என்பது தனிக் குற்றெழுத்தை அடுத்து ‘ஆ’ஈறு கொண்ட சொல்லாக இருப்பினும் , ‘பலா’வுக்குக் கூறிய விதி இதற்குப் பொருந்தாது என்கிறார் அவர் !:-

“இராவென் கிளவிக் ககர மில்லை” (உயிர்மயங். 25)

இரா + கொண்டான் = இராஅக் கொண்டான் ×
இரா + கொண்டான் = இராக் கொண்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு ஒரு வினா எழலாம் !

‘இராஅப் பகல்’  என்பதுதான்  தொல்காப்பிய விதி என முன்பு (உயிர்மயங். 21) பார்த்தோமே ? அதற்கும் இதற்கும் இடிக்கிறதே ?

இராஅப் பகல் √ – அல்வழிப் புணர்ச்சி !
இராக் கொண்டான் √ -  வேற்றுமைப் புணர்ச்சி !

இப்படிப் பார்த்தால் இடிக்காது !

            இவண் நச்சினார்க்கினியர் தந்த  வேறு சில எடுத்துக்காட்டுகளையும் வருமாறு தரலாம் !:-

இரா + சென்றான் = இராஅச் சென்றான் ×
இரா + சென்றான் = இராச் சென்றான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இரா + தந்தான் = இராஅத் தந்தான் ×
இரா + தந்தான் = இராத் தந்தான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இரா + போயினான் = இராஅப் போயினான் ×
இரா + போயினான் = இராப் போயினான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

நச்சினார்க்கினியர், இவ்விடத்தில் எழுதும் வேறொரு விளக்கம் – “இராஅக் காக்கை , இராஅக் கூத்து எனப் பெயரெச்ச மறைப்பொருள் தராது , இராவிடத்துக் காக்கை , இராவிடத்துக் கூத்து என வேற்றுமை கருதியவழி , இராக்காக்கை , இராக்கூத்து என அகரம் பெறாதென்று உணர்க ”.

அஃதாவது –

1.இராஅக் காக்கை – இராத காக்கை – பெயரெச்சத் தொடர்- எனவே  இடையே ‘அ’ வரும் !

  இராக் காக்கை – இராவிடத்துக் காக்கை – வேற்றுமைத் தொடர்- எனவே இடையே ‘அ’ வராது!

2.இராஅக் கூத்து – இராத கூத்து – பெயரெச்சத் தொடர்- எனவே  இடையே ‘அ’ வரும் !

  இராக் கூத்து – இராவிடத்துக் கூத்து – வேற்றுமைத் தொடர்- எனவே இடையே ‘அ’ வராது!

      நச்சினார்க்கினியர் உரை நமது ஐயப்பாடுகளைக் களைவதாக உள்ளதல்லவா?


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 16, 2014 11:02 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (264)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தனிக் குறிலை அடுத்து ‘ஆ’ஈறு வரும் சொற்களைப் பார்த்துவருகிறோம் !

பலா + கோடு = பலாஅக் கோடு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

இரா + கொண்டான் = இராக் கொண்டான் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

- என்பதையும் பார்த்தோம் !

‘அ’ , இடையே வந்ததற்கும் வராததற்கும் சான்றுகள் இவை !

அடுத்து , இதே வகைத் தனிக்குறிலை அடுத்து ‘ஆ’ஈறு வரும் சொற்புணர்ச்சியில் ‘அத்து’இடையே வரும் ஒரு புணர்ச்சி வகை உண்டு எனக் காட்டுகிறார் ! :-  

“நிலாவென் கிளவி யத்தொடு சிவணும்” (உயிர்மயங். 26)

1. நிலா + கொண்டான் = நிலாஅக்  கொண்டன் ×
  நிலா + கொண்டான் = நிலாக்  கொண்டன் ×
  நிலா + கொண்டான் = நிலாஅத்துக்   கொண்டன் √(அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)


2. நிலா + சென்றான் = நிலாஅச்  சென்றான் ×
  நிலா + சென்றான் = நிலாச்  சென்றான் ×
  நிலா + சென்றான் = நிலாஅத்துச்   சென்றான்√ (அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)


3. நிலா + தந்தான் = நிலாஅத்  தந்தான் ×
  நிலா + தந்தான் = நிலாத்  தந்தான் ×
  நிலா + தந்தான் = நிலாஅத்துத்   தந்தான் √(அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே , இளம்பூரணர் உரை எழுதுகிறார் இப்படி –

“நிலைமொழித் தொழில் , நிலைமொழித் தொழிலை விலக்குமாகலின் , அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது !”

என்ன பொருள்?

நிலைமொழித் தொழில் –   அத்துச் சாரியை வருதல் !
நிலைமொழித் தொழிலை – இடையே ‘அ’ வருதலை !
அத்து வகுப்ப – அத்துச் சாரியை வந்து சேர !
அகரம் வீழ்ந்தது – ‘அ’ கெட்டது !

மேலே நாம் பார்த்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும் , வருமொழிகள் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட எழுத்துகள் என்பதைக் கவனிக்க !

நச்சினார்க்கினியர் , “ நிலாஅத்து ஞான்றான்  என இயல்புக் கணத்துக் கண்ணும் ஏற்பன கொள்க !” என்கிறார் !

இதன்படி-

நிலா + ஞான்றான் = நிலாஅ ஞான்றான் ×
நிலா + ஞான்றான் = நிலாஞ் ஞான்றான் ×
நிலா + ஞான்றான் = நிலாஅத்து  ஞான்றான் √(அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(நிலாஅத்து  ஞான்றான் – நிலவு ஒளியில் தூக்குப் போட்டுக்கொண்டான் )

நச்சினார்க்கினியர் சொன்ன அந்த ஆளின் நிலை இப்படியா முடிய வேண்டும் ?

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 18, 2014 10:58 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (265)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘யா’ என்ற ஓரெழுத்து ஒருமொழி , ‘வற்று’ச் சாரியை பெற்று, ‘யாவற்றுக் கோடு’ எனவந்ததை முன்பு  (உயிர்மயங். 24) பார்த்தோம் !

அதே கையோடு , ‘யாஅங்கோடு’ எனவும் கூறலாம் என்று இப்போது நாம் காணப்போகும் சூத்திரத்தில் கூறுகிறார் !

இதைப்போலவே , அதே முன் நூற்பாவில் (உயிர்மயங். 24)  பார்த்த தனிக்குறிலை அடுத்த ‘ஆ’ஈற்றுச் சொல்லான ‘பலா’, வேற்றுமைப் புணர்ச்சியில் ‘பலாஅக் கோடு’ என ‘அ’பெற்றுப் புணரும் எனக் காட்டிய கையோடு , தனிக்குறிலை அடுத்த ‘ஆ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களான ‘பிடா’  ‘தளா’ ஆகியன ‘பிடாஅங் கோடு’ , ‘தளாஅங் கோடு’ என்று புணரும் எனவும்  இப்போது நாம் காணப்போகும் சூத்திரத்தில் கூறுகிறார் ! :-

“யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும்
ஆமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங். 27)

இந்த நூற்பாவை எழுதிய எழுத்தாணிச் சூடு குறைவதற்குள்  ‘யாஅக் கோடு’ , ‘பிடாஅக் கோடு’ என்றும் புணரலாம் என ஒரு விதி விலக்கையும் தீட்டிவிடுகிறார் ! :-

“வல்லெழுத்து மிகினு மான  மில்லை ” (உயிர்மயங். 28)

இவற்றின் அடிப்படையில் –

1.யா + கோடு = யாக் கோடு ×
 யா + கோடு = யாவற்றுக் கோடு √ (வற்று - சாரியை)(உயிர்மயங்.24 இளம். உரை)
யா + கோடு = யாஅங் கோடு √ (உயிர்மயங்.27)
யா + கோடு = யாஅக் கோடு √ (உயிர்மயங்.28)
யா + கோடு = யாவின்  கோடு √ (உயிர்மயங்.28 இளம். உரை)
யா + கோடு = யாஅத்துக் கோடு √ (அத்து - சாரியை)(உயிர்மயங்.28 இளம்.உரை)


யா + செதிள் = யாச் செதிள் ×
யா + செதிள் = யாவற்றுச் செதிள் √ (வற்று - சாரியை)(உயிர்மயங்.24 இளம்.உரை)
யா + செதிள் = யாஅஞ் செதிள் √ (உயிர்மயங்.27)
யா + செதிள் = யாஅச் செதிள் √ (உயிர்மயங்.28)
யா + செதிள் = யாவின்  செதிள் √ (உயிர்மயங்.28 இளம். உரை)
யா + செதிள் = யாஅத்துச் செதிள் √ (அத்து - சாரியை)(உயிர்மயங்.28 இளம்.உரை)


 யா + தோல் = யாத் தோல் ×
 யா + தோல் = யாவற்றுத் தோல் √ (வற்று - சாரியை)(உயிர்மயங்.24 இளம்.உரை)
  யா + தோல் = யாஅந் தோல் √ (உயிர்மயங்.27)
 யா + தோல் = யாஅத் தோல் √ (உயிர்மயங்.28)
 யா + தோல் = யாவின்  தோல் √ (உயிர்மயங்.28 இளம். உரை)
 யா + தோல் = யாஅத்துத் தோல் √ (அத்து - சாரியை)(உயிர்மயங்.28 இளம். உரை)


 யா + பூ = யாப் பூ ×
 யா + பூ = யாவற்றுப் பூ √ (வற்று - சாரியை)(உயிர்மயங்.24 இளம். உரை)
  யா + பூ = யாஅம் பூ √ (உயிர்மயங்.27)
 யா + பூ = யாஅப் பூ √ (உயிர்மயங்.28)
 யா + பூ = யாவின்  பூ √ இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)
யா + பூ = யாஅத்துப் பூ √ (அத்து - சாரியை)(உயிர்மயங்.28 இளம்.உரை)



2. பிடா + கோடு = பிடாங்கோடு ×
   பிடா+ கோடு = பிடாவற்றுக் கோடு √ (வற்று - சாரியை)(உயிர்மயங்.24 இளம். உரை)
   பிடா + கோடு = பிடாஅங்கோடு √ (உயிர்மயங்.27)
   பிடா + கோடு = பிடாஅக் கோடு √ (உயிர்மயங்.28)
   பிடா + கோடு = பிடாவின் கோடு √ (இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)
   பிடா + கோடு = பிடாஅத்துக் கோடு √ (அத்து - சாரியை)(உயிர்மயங்.28 இளம். உரை)



   பிடா + செதிள் = பிடாஞ் செதிள் ×
   பிடா + செதிள் = பிடாவற்றுச் செதிள் √ (வற்று - சாரியை) (உயிர்மயங்.24  இளம். உரை)
   பிடா + செதிள் = பிடாஅஞ் செதிள் √ (உயிர்மயங்.27)
   பிடா + செதிள் = பிடாஅச் செதிள் √ (உயிர்மயங்.28)
   பிடா + செதிள் = பிடாவின் செதிள் √ (இன் - சாரியை)  (உயிர்மயங்.28  இளம். உரை)

   பிடா + செதிள் = பிடாஅத்துச் செதிள் √ (அத்து - சாரியை) (உயிர்மயங்.28 இளம். உரை)



   பிடா + தோல் = பிடாந் தோல் ×
   பிடா + தோல் = பிடாவற்றுத் தோல் √ (வற்று - சாரியை) (உயிர்மயங்.24 இளம். உரை)
   பிடா + தோல் = பிடாஅந் தோல் √ (உயிர்மயங்.27)
   பிடா + தோல் = பிடாஅத் தோல் √ (உயிர்மயங்.28)
   பிடா + தோல் = பிடாவின் தோல் √ (இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)
   பிடா + தோல் = பிடாஅத்துத்  தோல் √ (அத்து - சாரியை) (உயிர்மயங்.28இளம். உரை)



   பிடா + பூ = பிடாம் பூ ×
   பிடா + பூ = பிடாவற்றுப் பூ √ (வற்று - சாரியை)(உயிர்மயங்.24 இளம். உரை)
   பிடா + பூ = பிடாஅம் பூ √ (உயிர்மயங்.27)
   பிடா + பூ = பிடாஅப் பூ √ (உயிர்மயங்.28)
   பிடா + பூ = பிடாவின் பூ √(இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)
   பிடா + பூ = பிடாஅத்துப் பூ √ (அத்து - சாரியை) (உயிர்மயங்.28 இளம். உரை)



3. தளா + கோடு = தளாங் கோடு ×
    தடா + கோடு = தடாவற்றுக் கோடு √ (வற்று - சாரியை) (உயிர்மயங்.24இளம். உரை)
    தளா + கோடு = தளாஅங் கோடு √ (உயிர்மயங்.27)
   தளா + கோடு = தளாஅக் கோடு √ (உயிர்மயங்.28)
   தளா + கோடு = தளாவின் கோடு √ இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)
   தளா + கோடு = தளாஅத்துக் கோடு √ (அத்து - சாரியை)(உயிர்மயங்.28 . இளம். உரை)



  தளா + செதிள் = தளாஞ் செதிள் ×
  தளா + செதிள் = தளாவற்றுச் செதிள் √ (வற்று - சாரியை) (உயிர்மயங்.24 இளம். உரை)

  தளா + செதிள் = தளாஅஞ் செதிள் √ (உயிர்மயங்.27)
  தளா + செதிள் = தளாஅச் செதிள் √ (உயிர்மயங்.28)
  தளா + செதிள் = தளாவின் செதிள் √ (இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)

  தளா + செதிள் = தளா அத்துச் செதிள் √ (அத்து - சாரியை) (உயிர்மயங்.28இளம். உரை)



   தளா + தோல் = தளாந் தோல் ×
   தளா + தோல் = தளாவற்றுத் தோல் √ (வற்று - சாரியை) (உயிர்மயங்.24இளம். உரை)
   தளா + தோல் = தளாஅந் தோல் √ (உயிர்மயங்.27)
   தளா + தோல் = தளாஅத் தோல் √ (உயிர்மயங்.28)
   தளா + தோல் = தளாவின் தோல் √ (இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)
   தளா + தோல் = தளாஅத்துத்  தோல் √ (அத்து - சாரியை) (உயிர்மயங்.28 இளம். உரை)



   தளா + பூ = தளாம் பூ ×
   தளா + பூ = தளாவற்றுப் பூ √ (வற்று - சாரியை) (உயிர்மயங்.24 இளம். உரை)
  தளா + பூ = தளாஅம் பூ √ (உயிர்மயங்.27)
  தளா + பூ = தளாஅப் பூ √ (உயிர்மயங்.28)
  தளா + பூ = தளாவின் பூ √(இன் - சாரியை)  (உயிர்மயங்.28 இளம். உரை)
   தளா + பூ = தளாஅத்துப் பூ √ (அத்து - சாரியை) (உயிர்மயங்.28 இளம். உரை)

இன்னும் இளம்பூரணர் , தம் உரையில் , ‘இராவிற் கொண்டான்’ , ‘நிலாவிற் கொண்டான்’ எனும் புணர்ச்சி வடிவுகளையும் கொள்ளலாம் என்கிறார் !

அஃதாவது, தொல்காப்பியர் நூற்பவையும் இளம்பூரணர் உரையையும் சேர்த்துக் கூறுவதானால் –

1. இரா + கொண்டான் = இராஅக் கொண்டான் ×(உயிர்மயங். 25 )
   இரா + கொண்டான் = இராக் கொண்டான் √ (உயிர்மயங். 25 இளம்பூரணர்  எடுத்துக்காட்டு)
  இரா + கொண்டான் = இராவிற் கொண்டான் √ (உயிர்மயங். 28 இளம்பூரணர் உரை)

  இரா + சென்றான் = இராஅச் சென்றான் ×(உயிர்மயங். 25 )
   இரா + சென்றான் = இராச் சென்றான் √ (உயிர்மயங். 25 இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
  இரா + சென்றான் = இராவிற் சென்றான் √ (உயிர்மயங். 28 இளம்பூரணர் உரை)

    இரா + தந்தான் = இராஅத் தந்தான் ×(உயிர்மயங். 25 )
   இரா + தந்தான் = இராத் தந்தான் √ (உயிர்மயங். 25 இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
  இரா + தந்தான் = இராவிற் றந்தான் √ (உயிர்மயங். 28 இளம்பூரணர் உரை)

    இரா + போயினான் = இராஅப் போயினான் ×(உயிர்மயங். 25 )
   இரா + போயினான் = இராப் போயினான் √ (உயிர்மயங். 25 இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
  இரா + போயினான் = இராவிற் போயினான் √ (உயிர்மயங். 28 இளம்பூரணர் உரை)


2. நிலா + கொண்டான் = நிலாஅக் கொண்டான் ×
  நிலா + கொண்டான் = நிலாஅத்துக் கொண்டான் √ (உயிர்மயங். 26 )                                                                
  நிலா + கொண்டான் = நிலாவிற் கொண்டான் √ (உயிர்மயங். 28 இளம்பூரணர் உரை)


   நிலா + சென்றான் = நிலாஅச் சென்றான் ×
  நிலா + சென்றான் = நிலாஅத்துச் சென்றான் √ (உயிர்மயங். 26 )                                                                
  நிலா + சென்றான் = நிலாவிற் சென்றான் √ (உயிர்மயங். 28 இளம்பூரணர் உரை)


தொல்காப்பியர் குறித்த பிடா , தளா மரங்களைக் காண ஆவலா?

(1)

[You must be registered and logged in to see this image.]

Courtesy - [You must be registered and logged in to see this link.]

இதுதான் பிடா ! பிடவம் என்பதும் இதுவே !

கபிலர் குறிஞ்சிப் பாட்டில் குறித்த ‘பிடவம்’ இதுவே ! ஒருவகைப் பாக்கு மரம் என்பர் !

இதன் தாவர இயல் பெயர் - Randia malabarica

(2)

[You must be registered and logged in to see this image.]

Courtesy - [You must be registered and logged in to see this link.]


இதுதான் தளா !

இதன் தாவரவியல் பெயர் – Jasminum humile

இதன் பழந்தமிழ்ப் பெயர் – செம்முல்லை

மல்லிகை இனமாகவும் மஞ்சளாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதனை Yellow  jasmine  (மஞ்சள் மல்லிகை) என்றனர் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 19, 2014 1:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (266)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஆ’ ஈற்றுச் சொற்களில் மூன்றை எடுத்துக்கொள்கிறார் !-

மரத்தைக் குறிக்கும் – மா
பொதுவாக விலங்கைக் குறிக்கும்- மா
பசுவைக் குறிக்கும்- ஆ

இம் மூன்றும் , வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருசொற்களுடன் புணரும்போது எப்படிப் புணரும் ?

இப்படி –

“மாமரக் கிளவியு மாவு மாவும்
ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன
அகரம் வல்லெழுத் தவையவ  ணிலையா
னகர மொற்று மாவு மாவும்”        (உயிர்மயங். 29)

’ மாமரக் கிளவியும் மாவும் ஆவும்’ – மரத்தைக் குறிகும் ‘மா’, விலங்கைக் குறிக்கும் ‘மா’, பசுவைக் குறிக்கும் ‘ஆ’,
‘ஆமுப் பெயரும் அவற்றோர் அன்ன’ – இந்த மூன்று பெயர்களும் , உயிர்மயங்கியல் நூற்பா 27இல் கூறியபடி ‘அ’ , மெல்லெழுத்து ஆகியவற்றை இடையிலே பெறும் !

‘அகரம் வல்லெழுத்து அவை அவண்  நிலையா
னகரம் ஒற்றும்  மாவும்  ஆவும்’ -   விலங்கைக் குறிக்கும் ‘மா’ , பசுவைக் குறிக்கும் ‘ஆ’ ,இந்த இரண்டைப் பொறுத்தவரையில் , உயிர்மயங்கியல் நூற்பா 28இல் கூறியபடி , ‘அ’ , வல்லெழுத்து ஆகியவற்றை இடையிலே பெறாது, அந்த இடத்தில் ‘ன்’னைப் பெறும் !

         1. மா + கோடு = மாஅங் கோடு √ (உயிர்மயங். 27, 29)
           மா + கோடு = மாங் கோடு √    (உயிர்மயங். 29 இளம். உரை)

         மா + செதிள் = மாஅஞ் செதிள் √ (உயிர்மயங். 27, 29)
        மா + செதிள் = மாஞ் செதிள் √     (உயிர்மயங். 29 இளம். உரை)

           மா + தோல் = மாஅந் தோல் √ (உயிர்மயங். 27, 29)
        மா + தோல் = மாந் தோல் √      (உயிர்மயங். 29 இளம். உரை)

      மா + பூ = மாஅம் பூ √ (உயிர்மயங். 27, 29)
        மா + பூ = மாம் பூ √ (உயிர்மயங். 29 இளம். உரை)
(மா - மாமரம்)

2. ஆ + கோடு = ஆன் கோடு (உயிர்மயங். 29)
ஆ + கோடு = ஆவின் கோடு (உயிர்மயங். 29இளம்.உரை)

ஆ + செவி = ஆன் செவி (உயிர்மயங். 29)
ஆ + செவி = ஆவின் செவி (உயிர்மயங். 29இளம்.உரை)

ஆ + தலை = ஆன் தலை (உயிர்மயங். 29)
ஆ + தலை = ஆவின் தலை (உயிர்மயங். 29இளம்.உரை)

ஆ + புறம் = ஆன் புறம் (உயிர்மயங். 29)
ஆ + புறம் = ஆவின் புறம் (உயிர்மயங். 29இளம்.உரை)
(ஆ- பசு)

3. மா + கோடு = மான் கோடு (உயிர்மயங். 29)
மா + கோடு = மாவின் கோடு (உயிர்மயங். 29இளம்.உரை)

மா + செவி = மான் செவி (உயிர்மயங். 29)
மா + செவி = மாவின் செவி (உயிர்மயங். 29இளம்.உரை)

மா + தலை = மான் தலை (உயிர்மயங். 29)
மா + தலை = மாவின் தலை (உயிர்மயங். 29இளம்.உரை)

மா + புறம் = மான் புறம் (உயிர்மயங். 29)
மா + புறம் = மாவின் புறம் (உயிர்மயங். 29இளம்.உரை)
(மா - விலங்கு)

இளம்பூரணர் உரையால் மேலும் மூன்று மரப்பெயர்ப் புணர்ச்சிகளை அறியவருகிறோம் ! –

1. காயா + கோடு = காயாஅங் கோடு ×
காயா + கோடு = காயாக் கோடு ×
காயா + கோடு = காயாங் கோடு √  (உயிர்மயங். 29 இளம்.உரை)

2. ஆணா + கோடு = ஆணாஅங் கோடு ×
ஆணா + கோடு = ஆணாக் கோடு ×
ஆணா + கோடு = ஆணாங் கோடு √  (உயிர்மயங். 29 இளம்.உரை)

3. நுணா + கோடு = நுணாஅங் கோடு ×
நுணா + கோடு = நுணாக் கோடு ×
நுணா + கோடு = நுணாங் கோடு √  (உயிர்மயங். 29 இளம்.உரை)

(காயா, ஆணா , நுணா – மூன்றும் ‘ஆ’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் என்பதைக் கவனிக்க !)

அடுத்து , இளம்பூரணர் நான்கு இடைச்சொற்களை எடுத்துக்கொள்கிறார் !-
அங்கா . இங்கா, உங்கா, எங்கா!
இவை நான்கும் 7ஆம் வேற்றுமைப் பொருளில் வரும் இடைச்சொற்கள் என்பது அவரது உரையால் தெளிவாகிறது !

அங்கா – அவ்விடத்திலே !
இங்கா – இவ்விடத்திலே !
உங்கா – உவ்விடத்திலே !
எங்கா – எவ்விடத்திலே !

1. அங்கா + கொண்டான் = அங்காங் கொண்டான் ×
அங்கா + கொண்டான் = அங்காக் கொண்டான் √(வல்லெழுத்துச் சந்தி)


2. இங்கா + கொண்டான் = இங்காங் கொண்டான் ×
இங்கா + கொண்டான் = இங்காக் கொண்டான் √(வல்லெழுத்துச் சந்தி)

3. உங்கா + கொண்டான் = உங்காங் கொண்டான் ×
உங்கா + கொண்டான் = உங்காக் கொண்டான் √(வல்லெழுத்துச் சந்தி)

4. எங்கா + கொண்டான் = எங்காங் கொண்டான் ×
எங்கா + கொண்டான் = எங்காக் கொண்டான் √(வல்லெழுத்துச் சந்தி)
(இந்த நான்கு இடைச்சொற்களும் ‘ஆ’ஈற்றன என்பதைக் கவனிக்க !)

இளம்பூரணர் குறித்த ‘காயா’ , ‘நுணா’ ஆகிய மரங்களைக் காண ஆசை உள்ளதா?

(1)

[You must be registered and logged in to see this image.]

Courtesy – flickr.com

இதுதான் காயா மரம் !

இதன் தாவரவியல் பெயர் - Memecylon edule

(2)

[You must be registered and logged in to see this image.]

Courtesy – commons.wikimedia.org

இதுதான் நுணா மரம் !

மஞ்சணாறி எனவும் அறியப்படும் !

இதன் தாவரவியல் பெயர் – Morinda citrifolia

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 33 of 84 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 58 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக