புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
68 Posts - 59%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
110 Posts - 60%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 2 of 84 Previous  1, 2, 3 ... 43 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 11:14 am

சிறப்பான தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி....

உங்களின் அனைத்து திரிகளையும் இணைத்துவிட்டேன் .

தொல்காப்பியம் குறித்து தாங்கள் தரும் தகவல்களை ஒரே திரியில் தொடராக வழங்கவும்.... வாசிப்பவருக்கு அனைத்தையும் படிக்க வசதியாக இருக்கும் .

" மறுமொழியிட " என்பதை பயன்படுத்தி "தொடத் தொடத் தொல்காப்பியம்" என்ற திரியை ஒரே திரியாக நீங்க வழங்கலாம்.





[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 15, 2013 7:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (8)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

”மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” (உரியியல் 96)

- இதற்கு விளக்கம் கூறும்போது,”ஒரு சொல் எப்படி வந்தது என்ற காரணத்தைக் கூறமுடியாது” என்று சிலர் கூறுகிறார்கள்!
சொல் வந்த காரணத்தைக் கூற முடியாதா?
செம்மை நிறமுள்ள கல் - செங்கல்
வெட்டுவதால் - வேட்டி
புழல் உள்ளதால் - புடலங்காய்
(புழல்-உள் துளை)
பாகு அல் - பாகல்
(’இனிப்பு அற்றது’;
பாகு-இனிப்பு)
குதித்து ஓடுவதால் - குதிரை
உண்பதால் -உணவு
நாணுவதால் - நாணல்
(நாணுதல்-வளைதல்)

இப்படி எத்தனையோ கூறலாமே?
அப்படியானால் தொல்காப்பியம் தவறா?
அல்ல!
இந்த நூற்பா இடம் பெற்ற இயல்-உரியியல்!தொல்காப்பியர் கூறியவிதி உரிச்சொற்களுக்கே! “உரிச்சொல் எப்படி வந்தது என்று கூற முடியாது!” என்பதே தொல்கப்பியர் கூறவந்தது! அது சரிதான்!
உறு, தவ, நனி, அலமரல், எறுழ், கமம், விழுமம், அழுங்கல், பையுள், முரஞ்சல் –இச் சொற்கள் எல்லாம் எப்படி வந்தன என்று நம்மால் கூறமுடியாது! மேலும் இவற்றைப் பெயர், வினை, இடைச் சொற்களில் அடக்கவும் இயலாது! அதனால் இவை உரிச்சொற்கள்!
தொல்காப்பியம், சரிதானே?
* * *


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 16, 2013 8:00 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (9)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

”எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே “ (இடையியல் 35)

-இது தொல்காப்பியம்!

வாக்கிய நுட்பம் கூறும் இடம் இது !

1. ’இராமனும் வந்தான் சோமனும் வருவான் ‘
- சரியான தொடர்தான்!
இதில் இரண்டு உம்மைகள் உள! (உம்மைகள்- ‘உம்’கள்)

முதலாவது உம்மையால்,’இராமனும் வந்தான்’ எனும்போது, ‘அப்படியானால் வேறு ஆளும் வருவார்போலும்’என்ற மீதிப்பொருள்(எச்சப் பொருள்) வருகிறது;இதனால் இந்த உம்மை எச்ச உம்மை!
இரண்டாவது உம்மையால்,’சோமனும் வருவான்’எனும்போது,’அப்படியானால் யாரும் வரக்கூடும் ’ என்ற எச்சப் பொருள் வருகிறது;இதனால் இந்த உம்மையும் எச்ச உம்மையே!

அஃதாவது, எச்ச உம்மைகள் ஒரே தொடரில் அடுத்தடுத்துப் பயிலலாம்!

2. ‘மீனாள் வருவதும் உண்டு,வராதிருப்பதும் உண்டு’
- இதுவும் சரியான தொடர்தான்!
இதிலும் இரண்டு உம்மைகள் உள!
முதல் எதிமறை உம்மையால்,’மீனாள் வருவதும் உண்டு’ எனும்போது, ’மீனாள் வராதிருப்பதும் உண்டு’என்ற எதிர்மறைப் பொருள் வருகிறது;எனவே,இந்த உம்மை எதிர்மறை உம்மை!

இரண்டாம் எதிர்மறை உம்மையால்,’மீனாள் வராதிருப்பதும் உண்டு’ எனும்போது,’மீனாள் வருவதும் உண்டு’என்ற எதிர்மறைப் பொருள் வருகிறது;எனவே இந்த உம்மை எதிர்மறை உம்மை!
(’வருவதும்’ என்பதற்கு எதிர்மறை – ‘வராதிருப்பதும்’;’வராதிருப்பதும்’ என்பதற்கு எதிர்மறை – ‘வருவதும்’)

இரண்டு எதிர்மறை உம்மைகள் ஒரே தொடரில் அடுத்தடுத்து வரலாம் என்பதற்கு இத் தொடர் சான்று!
‘அடுத்தடுத்து’ என்றோமல்லவா? இதுவே ’மயங்குதல்’! (’மயங்குதல்’ என்றதும் குடித்துவிட்டு மயங்குதல் என எண்ணவேண்டாம்!)

3. ‘சுமதியும் வருவதும் உண்டு’
-இது பிழையான தொடர்!

‘சுமதியும்’ என்ற எச்ச உம்மையால், ‘இன்னும் யாரோ வர உள்ளார் ’ என்ற பொருள் வருகிறது;ஆனால்,இதற்கு அடுத்த ‘வருவதும்’ என்பதிலுள்ள உம்மையால்,’வராதிருப்பதும் உண்டு’என்ற எதிர்மறைப் பொருள் தோன்றிவிடுகிறது! அஃதாவது,’சுமதியும் வருவார்,மற்றவரும் வருவார்,சுமதி வராமலும் இருப்பார்’ என்ற குழப்பமான தொடர்தான் நமக்குக் கிடைக்கிறது! எனவேதான், இது பிழைத்தொடர்!
‘உடனிலை இலவே’- என்று தொல்காப்பியர் கூறியது,தொடர் மூன்றில்
விளக்கியபடி,’எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் ஒரே தொடரில் வாரா!’ என்பதைத் தெரிவிக்கவே!

* * *


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 17, 2013 8:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (10)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

அச்சுத் தொழிலில்தான்
வச்சுப் படிக்கலாம்
தச்சுத் தொழிலில்தான்
மிச்ச மில்லையே !

- இச் செய்யுளில் முதற் சீர்களில் எதுகை உள்ளது; இதனை ‘எதுகைத் தொடை’ என்பர்.

’அன்று அணைத்தான் அவளை’ -இங்கு முதல் எழுத்துக்கள் ஒன்றாக இருப்பதால் இது ‘மோனைத் தொடை’!

‘வரூஉ’ – இதில்,’உ’ சேர்ந்து, ஓசை நீட்டத்தைத் தருவதால்,இஃது அளபெடைத் தொடை!

இவ்வாறு எத்தனையோ ‘தொடைகள்’ தமிழில் உள்ளன!

மொத்தம் எத்தனை என்பதற்குத் தொல்காப்பியர் ஒரு கணக்குத் தருகிறார்:

“மெய்பெறு மரபின் தொடை வகை தாமே
ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ் ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூறு
ஒன்றும் என்ப உணர்ந்திசி னோரே” (செய்யுளியல் 100)

இதற்கு இளம்பூரணரின் கணக்குக் குறிப்பு-

ஐ ஈராயிரத்து = 5 × 2000 = 10000
ஆறு ஐஞ்ஞூற்றொடு = 6 × 500 = 3000
தொண்டு = 9 = 9
பத்துக்குறை எழுநூறு = 700 –10 = 690
.............
13699
..............

பேராசிரியர், நூற்பாவின் மூன்றாம் அடியை,’தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூற்று ஒன்பஃது’ எனப் பாடம் கொண்டு போட்ட கணக்கு,

ஐ ஈராயிரத்து = 5 × 2000 = 10000
ஆறு ஐஞ்ஞூற்றொடு = 6 × 500 = 3000
தொண்டு தலையிட்ட
பத்துக் குறை
எழுநூற்று ஒன்பஃது =9+(709-10)= 708
.............
13708
..............

நச்சினார்க்கினியர்,பேராசிரியர் பாடத்தையே கொண்டாலும் வேறு உரை எழுதிப் புதுக் கணக்குச் சிட்டை தருகிறார்:

ஐ ஈராயிரத்து = 5 × 2000 = 10000
ஆறு ஐஞ்ஞூற்றொடு = 6 × 500 = 3000
ஒன்பது தலையிலே
வைத்துப் பத்துக் குறைந்த
எழுநூற்றொன்பது =9×(709-10)= 6291
...........
19291
............

இவற்றில், நச்சர் உரை மிகைப்படுத்திக் கூறப்பட்டதாக உள்ளது.

கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்;பேராசிரியர் கி.பி.14- நூற்றாண்டைச் சேர்ந்தவர். காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் உரையே பொருந்துவதாகவும் உள்ளது.

இங்கு, கணக்கு ஒருபுறம் இருக்கட்டும் ;தொல்காப்பியர் காலத்திலேயே,மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பழந்தமிழர்கள் கணக்கறிவில் எப்படிச் சிறந்திருந்தார்கள் என்பதை அறியும்போது மெய்ச்சிலிர்ப்பு ஏற்படுகிறது அல்லவா?
* * *

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 18, 2013 10:43 am

அருமையான பதிவு,,,,தொடருங்கள் அய்யா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 18, 2013 9:34 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (11)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


”அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
அது என் உருபுகெடக் குகரம் வருமே” (வேற்றுமை மயங்கியல் 11)

அஃதாவது, என் தம்பி - வேற்றுமைத் தொகை ;இதற்கு விரி- எனது தம்பி.

இத் தொகை உயர்திணைக்கு உரியது ஆதலால் ‘அது’வுக்குப் பதிலாகக் ’கு’வரும் என்பதே மேலைத் தொல்காப்பிய நூற்பாவிற்குப் பொருளாகும்.

இவ் விதிப்படி, என் தம்பி √

எனக்குத் தம்பி √

எனது தம்பி × - என ஆகும்.

ஆனால் இவ்விதி ,மேலே காட்டியவாறு ,தொகைச் சொல்லுக்கு மட்டுமே பொருந்தும்; தொடருக்குப் பொருந்தாது!

என் மனைவி வந்தாள் √

எனது மனைவி வந்தாள் √

எனக்கு மனைவி வந்தாள் ×

-ஏனெனில்,முதல் இரு எடுத்துக்காட்டுக்கள் மனைவியின் இயல்பான வருகையைக் குறிக்கின்றன;பேசுவோனது கருத்தைத் தெளிவாகவும் கூறுகின்றன;ஆனால் மூன்றாம் தொடர், ‘யாரோ ஒரு பெண் அப்போதுதான் மணமுடித்து அவனுக்கு மனைவியாக அமைந்தாள்’ என்ற பிழையான கருத்தை நல்கிவிடுகிறது!


குமணனது மகன் தந்தான் - நமக்குத் தந்தவன் குமணனின் மகன் என்ற பொருள் இங்கு தெளிவாக உள்ளது.
குமணனுக்கு மகன் தந்தான் – மகன் நமக்குத் தரவில்லை, குமணனுக்கே தந்தான் என்ற பொருளல்லவா வருகிறது?


இதிலிருந்து உயர்திணையாக இருந்தாலும், தொடராயின், ‘அது’வுக்குப் பதிலாகக் ‘கு’கரம் சேர்க்க இயலாது என்பது விளங்குகிறது அல்லவா?

தொல்காப்பியர் வகுத்த விதி ,தனித் தொகைச் சொல்லுக்கு மட்டுமே பொருந்தும் , தொடருக்குப் பொருந்தாது என்பது விளங்குகிறது அல்லவா?
* * *


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 19, 2013 10:33 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (12)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் ,வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம் என்ற இரு விகாரங்களைத் தெரிவிக்கிறார் :-

”அந்நாற் சொல்லும் தொகுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
... ... ...
நாட்டல் வலிய என்மனார் புலவர் “ (எச்சவியல் 7)

தொல்காப்பியரே ஒரு நூற்பாவில் (வினையியல் 6 ), ‘குற்றியலுகரம்’ என்பதற்குப் பதிலாகக் ‘குன்றியலுகரம்’ என்று எழுதி மெலித்தல் விகாரம் காட்டுகிறார்!

ஆனால் இந்த விகாரங்கள் செய்யுளில் மட்டுமே வரக்கூடிய ‘செய்யுள் விகாரங்கள்’ என்றே பலரும் பாடம் நடத்துகின்றனர்!

இது சரியல்ல!

வழக்கிலும் இவ் விகாரங்கள் பயிலுகின்றன! :-

1. இரும்புச் சட்டியை ‘இருப்புச் சட்டி’ என்பதுண்டு; இது வலித்தல் விகாரம்.

2. கரும்புச் சாற்றைக் ‘கருப்பஞ் சாறு’ எனவும் கூறுவர் ; இதுவும் வலித்தல் விகாரம்.

3. உழுந்தம் பருப்பு, ‘உழுத்தம் பருப்பு’ என்றும் எழுதப்படுகிறது; இதுவும் வலித்தல் விகாரம்.
4. ஈத்தம் பழத்தை ‘ஈந்தம் பழம்’ எனும்போது அது மெலித்தல் விகாரம்.

5.சத்தடி இல்லாமல் என்பதே ‘சந்தடி இல்லாமல்’ என்றானது! இது மெலித்தல் விகாரம்.

6. சித்தன் என்ற இயற்பெயர் ‘சிந்தன்’ எனவும் வழங்கக் காண்கிறோம் ;மெலித்தல் விகாரம்தான் இது.

7. குத்தவைத்தான் = உட்கார்ந்தான் ; தன்வினைச் சொல் . இதுவே மெலித்தல் விகாரமாகிக் ‘குந்த வைத்தான்’ எனப் பிறவினையில் பயிலுகிறது.

8. தண்ணீர்ப் பத்தல் என்பதே ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! இதுவும் மெலித்தல் விகாரம்.

‘நீர்ப் பத்தல் ’ என்று சங்க இலக்கியத்தில் வருகிறது ; நீர் வைத்திருக்கும் பெரிய பாண்டம் என்பது பொருள்; பழங்காலத்தில் அதை வைத்து அதிலிருந்து வழிப்போக்கர்களுக்கு நீர் கொடுத்தார்கள்; அத் தண்ணீர்ப் பத்தலே பிறகு ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! நாம் நினைப்பதுபோல கிடுகால் வேயும் பந்தலால் ‘தண்ணீர்ப் பந்தல்’ என்ற பெயர் வரவில்லை!


இந்த ஆய்வால் வலித்தல் மெலித்தல் விகாரங்கள் செய்யுளில் மட்டுமல்லாது வழக்கிலும் வருவனவே என்பது பெறப்படுகிறதல்லவா?


* * *

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 19, 2013 10:53 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (12)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் ,வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம் என்ற இரு விகாரங்களைத் தெரிவிக்கிறார் :-

”அந்நாற் சொல்லும் தொகுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
... ... ...
நாட்டல் வலிய என்மனார் புலவர் “ (எச்சவியல் 7)

தொல்காப்பியரே ஒரு நூற்பாவில் (வினையியல் 6 ), ‘குற்றியலுகரம்’ என்பதற்குப் பதிலாகக் ‘குன்றியலுகரம்’ என்று எழுதி மெலித்தல் விகாரம் காட்டுகிறார்!

ஆனால் இந்த விகாரங்கள் செய்யுளில் மட்டுமே வரக்கூடிய ‘செய்யுள் விகாரங்கள்’ என்றே பலரும் பாடம் நடத்துகின்றனர்!

இது சரியல்ல!

வழக்கிலும் இவ் விகாரங்கள் பயிலுகின்றன! :-

1. இரும்புச் சட்டியை ‘இருப்புச் சட்டி’ என்பதுண்டு; இது வலித்தல் விகாரம்.

2. கரும்புச் சாற்றைக் ‘கருப்பஞ் சாறு’ எனவும் கூறுவர் ; இதுவும் வலித்தல் விகாரம்.

3. உழுந்தம் பருப்பு, ‘உழுத்தம் பருப்பு’ என்றும் எழுதப்படுகிறது; இதுவும் வலித்தல் விகாரம்.
4. ஈத்தம் பழத்தை ‘ஈந்தம் பழம்’ எனும்போது அது மெலித்தல் விகாரம்.

5.சத்தடி இல்லாமல் என்பதே ‘சந்தடி இல்லாமல்’ என்றானது! இது மெலித்தல் விகாரம்.

6. சித்தன் என்ற இயற்பெயர் ‘சிந்தன்’ எனவும் வழங்கக் காண்கிறோம் ;மெலித்தல் விகாரம்தான் இது.

7. குத்தவைத்தான் = உட்கார்ந்தான் ; தன்வினைச் சொல் . இதுவே மெலித்தல் விகாரமாகிக் ‘குந்த வைத்தான்’ எனப் பிறவினையில் பயிலுகிறது.

8. தண்ணீர்ப் பத்தல் என்பதே ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! இதுவும் மெலித்தல் விகாரம்.

‘நீர்ப் பத்தல் ’ என்று சங்க இலக்கியத்தில் வருகிறது ; நீர் வைத்திருக்கும் பெரிய பாண்டம் என்பது பொருள்; பழங்காலத்தில் அதை வைத்து அதிலிருந்து வழிப்போக்கர்களுக்கு நீர் கொடுத்தார்கள்; அத் தண்ணீர்ப் பத்தலே பிறகு ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! நாம் நினைப்பதுபோல கிடுகால் வேயும் பந்தலால் ‘தண்ணீர்ப் பந்தல்’ என்ற பெயர் வரவில்லை!


இந்த ஆய்வால் வலித்தல் மெலித்தல் விகாரங்கள் செய்யுளில் மட்டுமல்லாது வழக்கிலும் வருவனவே என்பது பெறப்படுகிறதல்லவா?


* * *



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 20, 2013 10:28 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (13)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து இறுவதை உல்ளுறை உவமம் (அகத்திணையியல் 48)

-இதுவே ‘உள்ளுறை’ பற்றிய தொல்காப்பியர் இலக்கணம்!

இந்த ‘உள்ளுறை’ பற்றி விளக்கி விளக்கி , அப்போதும் விளங்கவைக்க இயலாமல் ஓய்ந்துபோனவர்கள் பலர்!

வேறு ஒன்றுமில்லை! ‘உள்ளுறை’ என்பது ,நம்மூர்ச் ‘சாடை பேசுதல்’ ! அவ்வளவுதான்!

நேரடியாகக் கூறாமல், மறைவாகக் (சாடையாக) குறிப்பிடுவதே ‘சாடை பேசுதல்’ !

அதுபோல , நேரடியாகக் கூறாது உள்ளுக்குள்ளே ஒன்றை மறைத்துக் கூறுவதே ‘உள்ளுறை’ !

ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், “ பெற்ற குட்டியைத் தாய் முதலை சாப்பிடும் ! அப்படிப்பட்ட முதலைகள் இருக்கக்கூடிய ஊர்தானே நம் தலைவன் ஊர் ?” என்று தலைவி கூறுவாள்; இதில், தலைவி மறைமுகமாகக் கூறுவது,“ அந்தத் தாய் முதலைபோல இரக்கமில்லாக் கொடுமனம் கொண்டவரல்லவா நம்மைவிட்டுப் பிரிந்த தலைவன்?” என்பதுதான்!

கிராமங்களில் மூதாட்டிகள் சாடை பேசுதலில் வல்லவர்கள்! அவர்கள்தான் வல்லவர்கள் என்றால், அதனைப் புரிந்துகொள்ளும் திறமைகொண்டவர்களாகவும் குறைந்த வயதுப் பெண்கள் இருக்கின்றனர்!

“சேவல்தான் கோழியை விரட்டும் ! நான் பார்த்திருக்கிறேன்! இங்கு கோழியல்லவா சேவலை விரட்டுகிறது? – ஒரு கிழவி கூறுவாள்! “இவ் வீட்டில் மருமகள் கை ,மகன் கையைவிட ஓங்கியுள்ளது” என்பதைச் சாடையாகத் (உள்ளுறையாக) தெரிவிக்கிறாள் கிழவி!


“பால் பாத்திரத்தை நல்லாக் கழுவுடா ! பால் நல்லா இருந்தாலும் ,பாத்திரம் நல்லா இல்லைனா கெட்டுடும்!” –மூதாட்டி சாடை பேசுவாள்! “என் மகன் நல்லவந்தான் ;மருமகள்தான் அவனைக் கெடுத்துவிட்டான்!” என்பதையே அவள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள்!

இச் சாடைகளை எல்லாம் கவனித்துக்கொண்டே வருவாள் மருமகள்; நேரம் வரும்போது பிடிபிடி என்று பிடித்துவிடுவாள்! பல குடும்பங்களில் பர்க்கிறோமல்லவா?

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே நம் முன்னோர்களிடம் சாடை பேசுதல் இருந்திருக்கிறது என்பதற்கு மேலே நாம் பார்த்த தொல்காப்பிய வரிகளே சான்று!

முடிக்கும் முன் ,ஒன்றை நான் குறிப்பிடவேண்டும்!

“தொல்காப்பியர், கற்பனையாகப் புலவர்கள் எழுதிய பாடல்களுக்குத்தான் விதிகள் வகுத்தார்” – என்று ஓரிருவர் எழுதியுள்ளனர்! இது மிகவும் தவறானது!

“பழந்தமிழர் வாழ்க்கைதான் தொல்காப்பியத்திற்கு அடிப்படை! கற்பனைப் பாடல்கள் அல்ல!” – என்பதற்கு இந்த நமது ஆய்வே சான்று!
* * *


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 20, 2013 3:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்
படிக்கப் படிக்க சுவாரஸ்யம்

நல்ல பதிவிற்கு நன்றிகள் கோடி.




[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 84 Previous  1, 2, 3 ... 43 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக