புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 3:57 am

First topic message reminder :

ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.

அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.

மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க

சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.

மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.

சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.

அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 425716_444270338969161_1637635055_n

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 09, 2013 3:26 pm

நல்லா போய்ட்டு இருக்கு உங்க கதை, சந்திரசேகரன்.
ஒவ்வொரு வரமும் உங்க கதைய படிச்சுட்டு வரேன். ஆனால் பின்னுட்டம் தான் போட முடியலை .

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Uஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Dஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Aஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Yஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Aஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Sஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Uஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Dஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 Hஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 A
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 10, 2013 12:58 am

பூவன் wrote:உறவின் உண்மையை உன்ன்னதமாய் சொன்ன விதம் நன்று சந்திரசேகர் சூப்பருங்க
உறவுகளின் சூழ்நிலையை நாம் அவரின் இடத்திலிருந்து யோசித்தால், உறவுகள் விரிசல் இல்லாது ஆரோக்கியமாக இருக்கும் என்பது சரிதானே பூவன்.
உதயசுதா wrote:நல்லா போய்ட்டு இருக்கு உங்க கதை, சந்திரசேகரன்.
ஒவ்வொரு வரமும் உங்க கதைய படிச்சுட்டு வரேன். ஆனால் பின்னுட்டம் தான் போட முடியலை .
நன்றி உதயசுதா. உங்களின் ஒருவரி பின்னூட்டம் என் வாட்டத்தை போக்கி, என் கதையின் ஓட்டத்தை அதிகரிக்க எனக்கு ஊட்டம் தருகிறது.

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 10, 2013 6:21 pm

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-12 (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-11வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூறுகிறார்.

கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்து கைப்பேசியில் பேசுகிறார். கலா தன் அனுபவங்களின் கசப்பைக் கூறக்கூற கோபத்தில் சீதா கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு உடனே, தன் அண்ணன் மகேஷிடம் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்க எண்ணிய சீதா மகேஷை அழைக்க, மகேஷ் தன் குழந்தை சுகமில்லாத காரணத்தால் மறுநாள் பேசுவதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், மறுநாள் காலையிலும் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதால் மகேஷ் சீதாவை கைப்பேசியில் அழைக்கவில்லை. மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார்.

இனி ......//

சந்திரனின் வீட்டில் அவரின் இரு மகன்களும் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் உள்ளனர். மித்ராவின் கைப்பேசியில் அவரின் தங்கை (மகேஷின் மனைவி) பார்கவி அழைக்கிறார்.

மித்ரா: கொஞ்சம் டீவியை ம்யூட்டில் (ஒலிகுறைத்து) வைக்கிறீர்களா. நான் என் உடன்பிறப்பு கூட பேசிக்கிறேன்.

சந்திரன்: (டீவியின் ஒலியைக்குறைத்துவிட்டு மனதிற்குள்) நான் கல்யாணமான அன்றைக்கு ம்யூட்டாகி (ஒலிகுறைத்து அதாவது வாயடைத்து) இன்று வரை அப்படியே இருக்கிறேன்.

மித்ரா: சொல்லு பார்கவி, என்ன விஷயம்?

பார்கவி (மகேஷின் மனைவி) : அக்கா, குழந்தை நேற்று ராத்திரி முழுக்க தூங்காம ஒரே பாடாப்படுத்திட்டா. ஒரே அழுகை.

மித்ரா: ஏன்? என்னாச்சி?

பார்கவி: வயிற்றுவலி போல.

மித்ரா: தண்ணி குடுத்தியா?

பார்கவி: இல்லக்கா. நேற்று "கண்ணா லட்டு தின்ன ஆசையா?" படம் பார்க்கப் போனோம். போகும் அவசரத்தில் தண்ணீர் சூடு பண்ணி எடுத்துக்க மறந்துட்டேன். அதனால சினிமாவில பால் பாட்டில இருந்த பாலைக் கொடுத்து தூங்க வச்சிட்டேன்.

மித்ரா: வீட்டுக்கு வந்து தண்ணீர் கொடுத்தாயா?

பார்கவி: வந்ததும் களைப்பிலே தண்ணீர் சூடு பண்ணாததாலே, பாலைக் கொடுத்து தூங்க வச்சிட்டேன். திடீர்னு ஒரு மணி நேரம் கழிச்சி எழுந்து காத்த ஆரம்பிச்சவ காலை வரை ஓயலை.

மித்ரா: உங்க ரெண்டு பேரோட சோம்பேறித் தனத்தால குழந்தை கஷ்டப்பட்டிருக்கா? பால்மாராமல் யாராவது தண்ணீரை சுடவைத்து கொடுத்திருந்தால், குழந்தைக்கு ஒன்னும் ஆகியிருக்காது. மொத்தத்தில் இவ்வளவு சிறிய குழந்தையோடு சினிமாவுக்குப் போறதே தப்பு.

பார்கவி: டாக்டரும் அதத்தாங்கா சொன்னாரு.

மித்ரா: இப்போ எப்படி இருக்கு.

பார்கவி: காலைல டாக்டர் கொடுத்த மருந்தை கொடுத்து பின்னர்தான் இப்ப ஒரு மணிநேரமா தூங்கறா.

மித்ரா: சரி, சரி இனியாவது இதுபோல் ஆகாமல் பார்த்துக்கொள்.

பார்கவி: சரிக்கா. வைக்கிறேன்.

மித்ரா: (கைப்பேசியை துண்டித்துவிட்டு, கணவனிடம்) டீவியை ம்யூட் வைக்கச் சொன்னா என்ன முணுமுணுன்னு ஏதோ சொன்னீங்க.

சந்திரன்: ஒண்ணுமில்ல. பையன்கிட்ட ம்யூட் வைக்கச் சொன்னேன். அவ்வளவுதான்.

மித்ரா: அதுதானே பார்த்தேன்.

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்திரனின் வீட்டுக்கு சந்திரனின் அக்கா கலா வருகிறார்.

மித்ரா: வாங்க சித்தி, வாங்க. எப்படி இருக்கிறீங்க. பொண்ணு எப்படி இருக்கா?

கலா: சௌக்கியம்தான். நீங்களெல்லாம் எப்படி இருக்கிறீர்கள்?

சந்திரன்: எல்லோரும் சௌக்கியம்தான். நீ பேசிக்கிட்டிருக்கா. நான் பசங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்.

கலா: சரிப்பா.

சந்திரன் குழந்தைகளை தன் வாகனத்தில் ஏற்றி பள்ளிக்குச் செல்கிறார். மித்ரா ஒரு கையில் வெந்நீரும் மறுகையில் தேநீருமாக கலாவிடம் கொடுக்க

கலா: உன்னைப்போல் ஒரு தம்பி பொண்டாட்டி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.

மித்ரா: என்ன சித்தி, இதுலே என்ன இருக்கு. என் அம்மா வந்தா நான் கவனிக்க மாட்டேனா? நீங்களும் அதுபோல்தான் எனக்கு.

கலா: உண்மையில் மனசுக்கு தெம்பா இருக்கு. இந்த தெம்புதான் என்னை இவ்வளவு காலமாக வாழவச்சிக்கிட்டு இருக்கு. உன்னிடம் முக்கியமா ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன்.

மித்ரா: என்ன விஷயம் சித்தி?

கலா: நீ கூறியதுபோல் நேற்று இரவு சீதாவிடம் பேசினேன். ஆனால், சீதா என் சில அனுபவங்களை கூறியபோது கோபம் வந்து கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டாள்.

மித்ரா: சாரி சித்தி. என்னால தானே உங்களுக்கு இந்த கஷ்டம்?

கலா: இதிலே என்ன இருக்கு. உடன்பிறந்தவங்களை பற்றி கொஞ்சம் தவறாகப் பேசினால் யாருக்குத்தான் கோபம் வராது.
இவ்வாறு கூறி, தான் சீதாவிடம் பேசிய விஷயங்களை தெளிவாக மித்ராவிற்கு விளக்கினார் கலா. சந்திரனும் வீடு வந்து சேர்ந்தார்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 425716_444270338969161_1637635055_n
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Mon Feb 11, 2013 1:15 pm

எப்பொழுது அடுத்த வாரம் வரும் கதையை படிக்கலாம் என்று ஆர்வமாக உள்ளது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 11, 2013 1:25 pm

முதலில் இருந்து படித்துவிட்டு வருகின்றேன் ஜாலி குதூகலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 11, 2013 3:27 pm

அருமை நன்றிகள் தொடருங்கள் அன்பு மலர்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Feb 12, 2013 10:25 pm

slmkarthi wrote:எப்பொழுது அடுத்த வாரம் வரும் கதையை படிக்கலாம் என்று ஆர்வமாக உள்ளது.
நன்றி கார்த்தி. உங்கள் ஆர்வத்திற்கு.
பாலாஜி wrote:முதலில் இருந்து படித்துவிட்டு வருகின்றேன் ஜாலி குதூகலம்
கதை எப்படி?
Priya Tharsni wrote:அருமை நன்றிகள் தொடருங்கள் அன்பு மலர்
நன்றிகள் பிரியா.

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 1:49 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-13 (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-12வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.

மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூறுகிறார்.

கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்து கைப்பேசியில் பேசுகிறார். கலா தன் அனுபவங்களின் கசப்பைக் கூறக்கூற கோபத்தில் சீதா கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு உடனே, தன் அண்ணன் மகேஷிடம் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்க எண்ணிய சீதா மகேஷை அழைக்க, மகேஷ் தன் குழந்தை சுகமில்லாத காரணத்தால் மறுநாள் பேசுவதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், மறுநாள் காலையிலும் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதால் மகேஷ் சீதாவை கைப்பேசியில் அழைக்கவில்லை. மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார்.

இந்நிலையில் சந்திரனின் அக்கா கலா சந்திரன் வீட்டுக்கு வந்து சீதாவிடம் பேசியதையும் சீதா கோபத்தில் கைப்பேசி இணைப்பை துண்டித்ததையும் விளக்கமாக கூறுகிறார்.
இனி ......//

கலா மித்ராவிடம் சீதாவிடம் பேசியதை விளக்க, சந்திரனுக்கு மித்ரா விளக்கி அடுத்து என்ன செய்யலாம்? என யோசிக்கலானார்கள்.

சந்திரன்: (தன் அக்கா கலாவிடம்) அக்கா நீ என்ன கூறியபோது சீதா கோபப்பட்டாள் என தெளிவாகக் கூறு?

கலா: சீதாவின் உடன் பிறந்தவர்களுக்கென்று ஒரு குடும்பம் உள்ளதால் அவர்கள் சீதாவை அரவணைத்துச் செல்வதெல்லாம் நாள்படக் குறைந்துவிடும் என்றும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் சீதா தன் குடும்பச் சுமையை தானே சுமக்க நேரிடும் என்பதையும் சொன்னபோது சீதா என்னிடம் தன் சகோதரர்களிடமிருந்து தனக்கு கிடைக்கும் அன்பு என்றும் மாறாது என்றும், நான்தான் இப்படியெல்லாம் சொல்லி அவர்களை பிரிக்க நினைப்பதாகவும் சொல்லி என்னிடம் கோபம் கொண்டாள்.

சந்திரன்: அப்படியா. நான் இப்போது சீதாவிடம் கைப்பேசியில் சாதாரணமாக பேசிக்கொண்டே உன்மேல் உள்ள கோபம் தெளிந்து விட்டதா? எனப் பார்க்கிறேன்.

கலா: வேண்டாம் தம்பி. நீயே எரியும் விளக்கில் எண்ணெயை ஊற்றியதுபோல் ஆகிவிடப்போகிறது.

மித்ரா: இல்லையெனில் நான் பேசவா?

சந்திரன்: என்ன பேசுவாய்?

மித்ரா: சீதாவின் அண்ணனின் குழந்தைக்கு உடம்பு சுகமில்லை என்ற விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே, பின்னர் மெதுவாக விஷயத்திற்கு வருகிறேன்.

கலா: மித்ராவா கொக்கா, இதுதான் சரி. நீ பேசும்மா.

மித்ரா கைப்பேசியில் சீதாவை அழைக்க, மறு முனையில் சீதாவின் மகன் வைத்யா பேசுகிறான்.

வைத்யா: ஆண்டீ, சொல்லுங்க ஆண்டீ, சௌக்கியமா?

மித்ரா: நான் சந்திரன் அங்கிளோட மனைவி மித்ரா பேசுறேம்பா.

வைத்யா: தெரியுது ஆண்டீ. எல்லோரும் எப்படி இருக்கீங்க? அம்மா கிச்சென்ல குக் பண்ணிக்கிட்டிருக்காங்க.

மித்ரா: எல்லோரும் சௌக்கியம்பா. அம்மாகிட்ட பேசணும். எப்போ பேசலாம்?

வைத்யா: இதோ, அம்மாவே வந்துட்டாங்க. பேசுங்க.

சீதா: சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?

மித்ரா: சௌக்கியம்தான். நீங்க இப்ப பிசியா இருக்கீங்க போலிருக்கு. நான் அப்புறம் கூப்பிடட்டுமா?

சீதா: இப்ப பையனுக்கு சமையல் ஆயிட்டிருக்கு.

மித்ரா: பையன் +2 தானே. ஸ்டடி ஹாலிடேஸ் விட்டாச்சா?

சீதா: விட்டாச்சி. இன்னைக்கு ஸ்கூலிலே ஹால் டிக்கெட் வாங்கப் போறான்.

மித்ரா: சரி நீங்க வேலையைப் பாருங்க. நான் சும்மாத்தான் கூப்பிட்டேன். அப்புறமா கூப்பிடுறேன்.

சீதா: பையன ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஒரு பத்தரை பதினொரு மணிக்கு நானே கூப்பிடுறேன்.

மித்ரா: சரிங்க. வைக்கிறேன். (கைப்பேசியை துண்டித்தாள்)

கலா: என்னாச்சி.

மித்ரா: ஒண்ணுமில்ல சித்தி. பையன் ஸ்கூல் போகணுமாம். சமையல்ல பிசியா இருக்காங்க. பத்தரை பதினொரு மணிக்கு கூப்பிடறேன்னு சொன்னாங்க.

கலா: சரிம்மா. பேசி சமாளி. நானும் கிளம்பறேன். அப்புறமா எனக்கு விஷயத்தை சொல்லு.

சந்திரன்: இருக்கா. நான் ஒரு பதினைந்து நிமிடத்துல கிளம்பிடுவேன். நானே உன்னை டிராப் பண்ணிடறேன்.

அடுத்த 20 நிமிடங்களில் இருவரும் கிளம்பினார்கள்.

சந்திரனின் அலுவலகம். காலை 11.35 மணி. சந்திரன் வேலையில் மும்முரமாக இருந்த சமயத்தில் பியூன் சதாசிவம் சந்திரனிடம் வருகிறார்.

பியூன் சதாசிவம்: சந்திரன் சார். என்ன சார், உங்க மொபைல்ல சிக்னல் இல்லையா?

சந்திரன்: ஏன் கேட்குறீங்க சதாசிவம்? (என்று கேட்டுக் கொண்டே தன் கைப்பேசியை எடுத்து நோக்க, காலையில் வண்டியில் ஏறும்போது சைலெண்ட் மோடில் வைத்ததை மாற்ற மறந்தது ஞாபகத்துக்கு வந்து அதை சைலெண்ட் மோடில் இருந்து மாற்றுகிறார். அப்போதுதான், தன் சகலை கொடுத்திருந்த 4 மிஸ்-கால்களை கவனிக்கிறார்.)

பியூன் சதாசிவம்: உங்க சகலை ஒரு மணி நேரமா உங்களுக்கு கால் போட்டுப் பாத்துட்டு, இப்போ உங்களை பார்க்க வந்து வெளியே காத்திருக்கிறார். போங்க போய் பேசுங்க.

சந்திரன்: அடடே. அப்படியா? (என்று கூறிக்கொண்டே சகலை மகேஷை காண அலுவலகத்தின் வாசலுக்குச் செல்கிறார்).

சந்திரன்: வாங்க மகேஷ். கைப்பேசியை சைலெண்ட் மோடில் வைத்து மாற்ற மறந்து விட்டேன். சாரி.

மகேஷ்: பரவாயில்லை. நான் ரொம்ப முக்கியமான விஷயமா உங்களை பார்க்க வந்தேன்.

சந்திரன்: சரி. வாங்க கேண்டீன்ல ஒரு டீ குடிச்சிக்கிட்டே பேசுவோம். (என்று கூறி சகலைக்கும் தனக்கும் ரெண்டு டீ சொல்லிவிட்டு மகேஷிடம்) சரி, குழந்தை எப்படி இருக்கா? இப்போ பரவாயில்லையா? காலைல மித்ராதான் சொன்னா, உடம்பு சரியில்லேன்னு?

மகேஷ்: அதை ஏன் கேட்கிறீங்க, நேற்று ராத்திரி முழுக்க குழந்தை தூங்கவேயில்லை. வயிற்று வலியால துடிச்சுப் போயிட்டா. பின்னர், காலைலே தான் டாக்டர்கிட்ட காண்பிச்சிட்டு வீட்டிலே விட்டுட்டு வரேன்.

சந்திரன்: இப்போ, பரவாயில்லையா?

மகேஷ்: பரவாயில்லை. நல்லா தூங்கறா.

சந்திரன்: அப்போ நீங்க வந்த விஷயம்?

மகேஷ்: நேற்று, குழந்தை அழுதுக்கிட்டிருந்தப்போ, என் தங்கை சீதா போன் பண்ணினா. நான் தூக்கக் கலக்கத்திலும், குழந்தை அழுத வெறுப்பிலும் இருந்ததால், அவ சொல்ல வந்ததை காது கொடுத்துக் கேட்கவில்லை. காலையில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவள் என்ன நினைத்துக் கொண்டாலோ தெரியவில்லை, இப்போ கூப்பிட்டா போனை எடுக்கவே மாட்டேங்குறா.

சந்திரன்: அடடே, அப்படியா? (என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சந்திரனின் அடிமனதில் அந்த ஐடியா உருப்பெற்றுக் கொண்டிருந்ததை மகேஷ் அறியவில்லை).

அது என்ன ஐடியா? நீங்கள் யூகித்து பின்னூட்டம் இடுங்கள் பார்ப்போம்.

(தொடரும்)

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 425716_444270338969161_1637635055_n
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Feb 20, 2013 2:08 pm

இந்த வாரம் கதை தாமதமாகிவிட்டதா??

ஆரோக்கியமான உறவுகள் - 13 இனிமை.

என் யூகம்: மகேஷ் தன் தங்கை சீதாவை வேண்டுமென்றே avoid பண்ணுவது.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 6:04 pm

slmkarthi wrote:இந்த வாரம் கதை தாமதமாகிவிட்டதா??

ஆரோக்கியமான உறவுகள் - 13 இனிமை.

என் யூகம்: மகேஷ் தன் தங்கை சீதாவை வேண்டுமென்றே avoid பண்ணுவது.
தாமதத்திற்கு மன்னிக்கவும். மகன் +2 படிப்பதால் அவனுக்கே இன்டர்நெட் உபயோகிக்க முதலுரிமை.

உங்கள் யூகம் சரிதான்.

பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 5 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக