புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
59 Posts - 50%
heezulia
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
13 Posts - 3%
prajai
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
9 Posts - 2%
jairam
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_m10கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா?

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Wed Nov 07, 2012 10:32 pm

கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா?

நான்கு நபர்களிடம் நான் கண்களில் வலி கண்டிருக்கிறேன்.

ஒன்று: உடல் ஊனமுற்றவர்களை நாம் வித்தியாசமாகப் பார்க்கும்போது நம் பார்வை போகிற இடம் அறிந்து வேதனையுடன் பார்ப்பார்கள். அதில் அவமானமும் வலியும் சேர்ந்திருக்கும்.

இரண்டு: முதியோர் இல்லங்களில் வாழும் இதயங்கள். நாம் உள்ளே வருகையில் நம் முகங்களில் அவர்களுடைய பிள்ளைகளைத் தேடும் அவர்களது கண்களில் தெரியும் வலி.... ஆண்டவா..

மூன்று: தனது வீட்டுப் பொருட்களை விற்க ஆரம்பித்த பின் அவ்வீட்டுப் பெண்களின் கண்களில் தெரியும் வெறுமையும் வலியும் (எனக்கு எடுத்துக்காட்டியது: எழுத்தாளர் திரு. எஸ்ரா)

நான்கு: சொந்த ஊர் விட்டேகும் ஒவ்வொருவரின் கண்களிலும் ஒரு வலி இருக்கும். அந்த வலியில் ஒரு ஏக்கம் இருக்கும். பிழைப்பிற்காக என்று சமாதானம் செய்து கொண்டாலும், அந்த வலி கொடுமையானது.

முதல் அனுபவம்:
நான் சென்னைக்கு வந்த புதிதில், பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்ப்பது போல் சென்னையின் ஒவ்வொரு இடங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தேனாம்பேட்டை சந்தையில் நடந்து போகையில், ஒரு குடிசையின் முன், திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான குள்ள மனிதர் ஒருவர், அவர் பெயர் நினைவில்லை, கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியின் காரைக் கிண்டலடித்தபடி வருவாரே, அவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்கள் விரியப் பார்த்து விட்டு, இவர்தானே சினிமாவில் நடிச்சது? என்று என் அருகில் வந்தவரைக் கேட்டபடி திரும்பத் திரும்பப் பார்த்தபடி சென்றேன். அவர் அப்பொது லேசாகத் தலை சாய்த்து என் பார்வையைச் சந்தித்தபடி இருந்தார். அவரது கண்களில் அப்போது தெரிந்த வலி, இன்னும் கூட என்னைப் பெரும் அவஸ்தைக்குள்ளாக்குகிறது.

அவரை சமீபத்தில் இப்படிக்கு ரோஸ் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தேன். தன் வலிகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அன்று நான் பார்த்த பார்வை பற்றியும் சொல்வாரோ? என்று ஒரு குற்ற உணர்ச்சியுடனே அவரை படப்பிடிப்பு முடியும் வரை மறைவாக நின்று பார்த்தபடி இருந்தேன். கடைசி வரை அவர் அதை சொல்லவேயில்லை; அதுதான் என்னை இன்னும் வேதனைப் படுத்தியது.

இரண்டாவது அனுபவம்:
என் நண்பர் வேளச்சேரியில் நடத்திவரும் முதியோர் இல்லத்துக்கு நண்பர்களின் பிறந்த நாட்களில் சென்று வேண்டுவன கொடுத்துப் பேசிவிட்டு வருவது வழக்கம்.

அப்படிச் செல்லும்போதெல்லாம், பலர் முகங்கள் மலரும்; ஆனால் ஒரு சிலர், அருகில் வந்து அவர்கள் கைகளை கண்களுக்கு மேல் கவசம் போல் வைத்து நம் முகங்களை உற்றுப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து விடுவார்கள். அந்த அனுபவத்தை இங்கு யாரேனும் சந்தித்திருப்பீர்களேயானால் மனதைத் தொட்டு சொல்லுங்கள், அன்று நிம்மதியாக சாப்பிட்டீர்களா? இளைஞர்கள் அன்று உங்கள் பெற்றோரிடம் குறைந்த பட்சம் அலைபேசியிலாவது அன்பாகப் பேசாமல் உறங்கச் சென்றிருப்பீர்களா?

இன்னொன்று தெரியுமா? அவர்களில் சிலர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சு இலக்கற்றதாக இருக்கும். என்னுடன் புதிதாக வந்த மொழி புரியாத தோழி, ஆச்சரியமாகக் கேட்டாள்: "இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?" நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்துவிட்டுச் சொன்னேன்: "இறைவனுக்கும் இவர்களுக்கும் இடையில் எத்தனையோ இருக்கும், வா!"

மூன்றாவது அனுபவம்:
எஸ்ராவின் துணையெழுத்து புத்தகத்தில் எண்ணும் எழுத்தும் என்ற கட்டுரையில் வீட்டுப் பொருட்களை விற்க ஆரம்பித்து விட்ட பின்னர் பெண்களின் முகங்கள் மாறிவிடுவது பற்றிச் சொல்லியிருப்பார்: "வெளிப்படுத்தப்படாத துயரம் கத்தியின் கூர்மைபோல் பளிச்சிடும்" என்பதாக. படித்த போது புரியவில்லை.

சென்னையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கென்று எனக்கொரு கடை இருக்கிறது. அங்கு ஒரு வாடிக்கையாளர் பழைய காலத்து ஊஞ்சல் வேண்டும் என்று கேட்டார். தாம்பரத்தில் ஏதோ ஒரு வீட்டில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே நானும் என் சகோதரியின் கணவருமாகச் சென்றோம்.

நாங்கள் சந்தித்த அந்த வீட்டுப் பெண்மணிக்கு 50 வயதிருக்கலாம். அவரின் குரலிலும் விழியிலும் தெரிந்த விரக்தி கூர்மையாக இருந்தது.

வெறுப்பாகப் பேசிய பெண்மணியிடம் கேட்டேன்: "அம்மா, தவறா எடுத்துக்காதீங்க, நாங்க வாங்க வந்திருக்கோம்; நீங்க இப்படி வெறுப்பா பேசினா எப்படிங்க வாங்கறது?"
அந்த அம்மா உடனே, "பின்ன என்னங்க? எங்க அம்மாவுக்கு அவங்க அம்மா வீட்ல கொடுத்த சீருங்க இது, என் வீட்ல இருந்து எனக்கு சீராக் குடுத்தது, ஆளாளுக்கு ஒரு விலை சொல்றாங்க, இது பெருமை எனக்குத்தாங்க தெரியும்!" என்று சொல்லி அழவே ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த பொருளுக்கு ஒரு விலை சொல்லிக் கொடுத்து விடலாம்; அவருடைய உணர்வுகளுக்கு என்ன விலை கொடுத்துவிட முடியும்? வேண்டாமென்று சொல்லி விட்டு வந்து விட்டோம்..

நான்காவது அனுபவம்:
பலரைப் பற்றியது, என்னையும் சேர்த்து.

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். என் சகோதரியின் கணவருடைய தாயாரும், தகப்பனாரும் அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்தார்கள். சொந்த ஊரான பழனியில் நிகழ்ந்த மரணங்களுக்கு, என் சகோதரியின் கணவரால் இறுதி நேரத்தில்தான் போய்ச் சேரமுடிந்தது. அவருடைய தாயாரின் மறைவுக்காவது, உடல் நிலை சரியில்லாமல் மரணப்படுக்கையில் இருந்தார்கள்; கிளம்புவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தபடி இருந்தோம். ஓரிரவு உடலைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். ஆனால், மனைவின் மறைவு இரண்டாமவரை மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கி, உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் அதிரடியாக ஒருநாள் அதிகாலை மாரடைப்பில் காலமானார்.

அந்தச் செய்தியை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவசர அவசரமாகக் கிளம்பி பகல் முழுக்கப் பயணம் செய்து, ஊருக்குச் சென்றும், அவரைக் குளிப்பாட்டி இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்த போதுதான் போய்ச் சேர்ந்தோம். அவரது முகத்தை நாங்கள் பார்த்தது வெறும் 5 நிமிடங்கள் தான். அப்போதுதான் எதற்கும் உணர்வுகளை வெளிக்காட்டாத என் சகோதரியின் கணவர் அழுததைப் பார்த்தேன்.

அதிலிருந்து அவர் இன்றும் "ஊருக்கே போயிடலாம் ராஜா" என்று விரக்தியோடு சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவருக்காவது இறுதியாகத் தந்தையின் முகத்தைப் பார்க்க முடிந்தது. வெளி நாடுகளில் வாழ்ந்து எந்த நல்லது, கெட்டதுக்கும் ஊருக்கு வர இயலாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?

சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து, எப்போதாவது ஊர்ப் பேரையோ, தன் மொழியையோ கேட்டவுடன், சிலிர்த்துத் திரும்பிப் பார்க்கும் மக்களின் கண்கள் வலி மிகுந்தவையே.

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 08, 2012 6:45 am

நேற்று என் காதலியைக் கண்டேன்
கண்களில் ஒளி
அவள் என்னைக் கடந்து சென்ற பின்
கண்களில் வலி

கவிதை எப்படி இருக்கு?

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Thu Nov 08, 2012 7:53 am

கவிதை நன்றாக இருக்கிறது நண்பர் நடேசன்..

ஆனால் கவிதைக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.. புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 3:42 pm

மாணிக்கம் நடேசன் wrote:நேற்று என் காதலியைக் கண்டேன்
கண்களில் ஒளி
அவள் என்னைக் கடந்து சென்ற பின்
கண்களில் வலி

கவிதை எப்படி இருக்கு?

இது வெறும் கவிதைக்காக மட்டும் என்று தெரியலையே அய்யா ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக