புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
67 Posts - 55%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
35 Posts - 29%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
3 Posts - 2%
Barushree
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
cordiac
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
194 Posts - 55%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
118 Posts - 33%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
12 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
6 Posts - 2%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
cordiac
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 7 of 36 Previous  1 ... 6, 7, 8 ... 21 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Aug 19, 2013 6:57 am

வேலனின் கோலம்

(அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
மா மா காய் மா மா காய் நிரல்)

பாலும் தேனும் வேண்டேன்நான்
. மௌனம் கிட்ட வேண்டுவனே
வேலன் பார்வை பட்டாலே
. வேண்டும் மாற்றம் வாராதோ?
வேலன் பார்வை படுவதற்கே
. மேலும் கீழும் பார்க்கின்றேன்
ஆலை உள்ளம் கட்டுண்டால்
. ஐயன் பார்வை வருமென்றார்.

ஆலை உள்ளம் கட்டுண்ண
. ஆன மட்டும் முயன்றேனே
வேலை ஓய்வு பெற்றிடினும்
. வேறோர் பக்கம் உளம்செலுதே
வேலை வேண்டி வழிபட்டால்
. ஏறும் பேய்கள் இறங்கிவிடும்
கோலம் போடும் மனத்துள்ளே
. வேலால் கோலம் போட்டுவிடு!

வேலால் கோலம் போட்டாலே
. வேண்டும் நேர்மை வந்துவிடும்
காலைக் கையை அசைக்காது
. காணும் கோலம் அமர்ந்தேபார்
ஏலம் போடும் மனத்துள்ளே
. ஏதும் எண்ணம் தொடராதே
ஓலம் தன்னால் அடங்கிவிடும்
. ஓசை யெல்லாம் ஓமாகும்.

--ரமணி, 18/08/2013, கலி.02/05/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Aug 21, 2013 10:03 am

அறுசீர் விருத்தப் பயிற்சி 2
(விளம் மா தேமா விளம் மா தேமா நிரல்)


அத்தனுக்கு அரங்கம் அமைப்போம்!

வடவரை கடைந்த நஞ்சை
. மகிழ்வுடன் பருகிக் காத்த
நடமிடும் நீல கண்டன்
. நம்முளம் வந்து ஆட
உடமைகள் குன்றச் செய்து
. மடமைகள் மங்கச் செய்து
கடமைகள் முடித்து விட்டுக்
. காத்திருப் போமே இங்கு.

யாதொரு வழியு மின்றேல்
. நாமுளம் வருந்த வேண்டாம்
மாதொரு பாகன் நம்முள்
. வரவழி செய்தால் போதும்
பாதமே பணிந்து நின்று
. பன்மைகள் குறைத்து விட்டால்
வேதனை தீர்த்து வைத்தே
. வேண்டிய நன்மை செய்வான்.

வான்வரும் கதிரும் அத்தன்
. கானுறை உயிர்கள் சம்பு
தேன்தரும் மலர்க பாலி
. நெருஞ்சியும் முள்ளும் பித்தன்
ஊன்தரும் உணவும் ஈசன்
. உயிரிலாப் பொருளும் தாணு
நானிதை அறியா தின்னும்
. நாட்களைக் கழித்தல் ஏனோ?

--ரமணி, 19/08/2013, கலி.03/05/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Aug 26, 2013 12:32 pm

திருத்திணை நாயகன் பஞ்சகம்

அறுசீர் விருத்தம்
(விளம் விளம் மா விளம் விளம் மா)


விருந்துணத் தாமுணும் இணையர்க்
. கிரங்கியே விருந்தென நின்று
இருகரம் உழுகலம் ஓட்ட
. திணைவிளை செய்தபின் உண்டாய்
உருவினைக் காட்டியே இணையர்
. உய்வுற முத்தியும் தந்தாய்
வருவினை வல்வினை யாவும்
. திருத்திணை யீசனாற் போமே! ... 1.

சுந்தரர் உன்புகழ் பாட
. வந்தருள் லிங்கமாய் நின்றாய்
தம்பிரான் காலடி மாலும்
. சங்கினை ஊதியே நிற்க
அம்புஜம் மேலமர் அயனும்
. மத்தளம் தட்டியே ஆட
எம்பிரான் ஆடிடும் ஆட்டம்
. நம்புதற் கரியவோர் காட்சி! ... 2.

கருவரை சுற்றிடும் சுவரில்
. தாமரை ஆசனத் தமர்ந்து
திருவருள் கூட்டிடும் அரிய
. தென்றிசைக் கடவுள் காட்சி
உருத்திர னுடனுறை யன்னை
. ஒப்பிலா நாயகி யாவாள்
வருபவர் மூழ்கியே பாவம்
. உருவற ஜாம்புவின் தடாகம். ... 3.

உழவனாய் அருளிய சிவனின்
. உழுபடை இறைகலம் இங்கே
வழுவறப் பங்குனி மாதம்
. வழுத்திடும் ஆதவன் ஒளியே
உழுதொழில் சிறப்பினில் உணவு
. ஓங்கிட வேண்டுவர் இங்கே
பொழுதெலாம் இன்னிசை பயில்வோர்
. பூசைகள் செய்வதும் இங்கே. ... 4.

சிவன்கொழுந் தீசராய் அருளும்
. திருத்திணை திருத்தலம் சென்றே
உவந்திடும் கலையெலாம் ஓங்க
. உணவுகள் விளைச்சலிற் பெருக
பவவினை வருவினை மாளப்
. பலவிதப் பண்களில் போற்றித்
தவமுடன் தானமும் சிறந்து
. தரணியில் தழைத்திடக் கேட்போம். ... 5.

--ரமணி, 26/08/2013,  கலி.10/05/5114

மேல்விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=847

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Aug 30, 2013 9:07 am

ஒரே ஈற்றடிக்குப் பலவித நோக்கில் முதலடி வருமாறு எழுதிய குறட்பாக்கள். நீங்களும் முயன்று பாருங்களேன்?

1. எங்கனம் பெய்யும் மழை?

அங்கணண் போற்றாது இங்கவன் தோழனாக
எங்ஙனம் பெய்யும் மழை? ... 1.
[அங்கணன்=கடவுள், சிவன், திருமால்]

எங்கும் பிறன்மனைப் பேறுகள் ஒப்பிடுவான்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 2.

அங்குமிங்கும் வானத்தில் ஐயோடைட் தூவினாலும்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 3.

தங்காத இல்லாள் தகாத பொருட்செல்வம்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 4.

வங்கப் புயற்சின்னம் எங்கோ நகர்ந்திட
எங்ஙனம் பெய்யும் மழை? ... 5.

பொங்கும மங்கல மெங்கணும் தங்கிட
எங்ஙனம் பெய்யும் மழை? ... 6.

பங்குச்சந் தைப்பொரு ளாதாரம் கோலோச்ச
எங்ஙனம் பெய்யும் மழை? ... 7.

அங்கண் விசும்பெலாம் ஆலகால நஞ்சாக
எங்ஙனம் பெய்யும் மழை? ... 8.

சிங்கங்கள் மாளச் சிறுநரி யாட்சியில்
எங்ஙனம் பெய்யும் மழை? ... 9.

சங்கினை ஊதுவாய் சண்முகன் மாமனே
எங்ஙனம் பெய்யும் மழை? ... 10.

--ரமணி, 30/08/2013, கலி.14/05/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Sep 03, 2013 5:13 pm

14. தமி நிற்கும் ழகரம்
(அறுசீர் விருத்தம்: விளம் விளம் தேமா விளம் விளம் தேமா)

முத்தமிழ்க் காவல ரெல்லாம் மூக்குமேல் அங்குலம் வைத்த
வித்தகம் தமிழினில் காட்டி பெரியவர் வியப்புறச் செய்வார்
இத்தமிழ் இப்பெயர் எங்ஙன் பெற்றது தெரியுமா என்றார்
அத்தனைத் தமிழும் ஆய்ந்த கிவாஜகந் நாதனி டத்தே.

அருமறை சமஸ்கிரு தம்பேர் அழகுறச் செய்வதா லன்றோ?
பொருளெனத் தமிழ்மொழி பேரில் இருப்பதி யாதெனக் கேட்டார்.
பெரியவா சொல்வதென் றால்நான் தெரிந்துகொள் வேனென பக்தர்
அருமையா யெளிமையாய்ச் சொன்னார் பணிவுடன் திருமுகம் நோக்கி.

எம்மொழி யிலுமிலாச் சீர்மை யெழுத்தென ழகரமா யிங்கு
நம்மொழி தமிழ்மொழிப் பேரில்! நலமெழில் இனிமையா மர்த்தம்!
அம்மொழிச் சொற்களின் பாங்கு! குழந்தைம ழலைப்பழம் யாழே!
தமியெனும் ழகரவெ ழுத்தால் தமிழ்-எனும் பெயர்வரக் காணீர்!
[தமி = ஒப்பற்றது, தனித்து நிற்பது--unique]

அதன்பினே பெரியவர் யாமா* மாலைமாற் றுப்பதி கத்தைப்
பதம்பிரித் துப்பொருள் சொன்னார் பதங்களை எளிமையில் தோய்த்தே
கதம்பமாய்ப் பாடிய காளி தாசனின் காலரைச்* செய்யுள்
இதம்விரி விதங்களைச் சொல்லி அதனழ கினிமையி லாழ்ந்தார்.

பெரியவர் பொழிவினைக் கேட்ட பெருமொழிப் புலமையோ ரெல்லாம்
அரியதோர் பேறினைப் பெற்ற அருமையில் களிப்புடன் சென்றார்
பொருந்திடும் தமிழ்மொழிப் பேரின் பொருளினைக் கிவாஜகந் நாதன்
பெருமையா யினிவரும் மேடைப் பேச்சிலே விளக்குவே னென்றார்.

--ரமணி, 03/09/2013, கலி.18/05/5114

குறிப்பு:
1. யாமா மாலைமாற்றுப் பதிகம்:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
--திருஞானசம்பந்தர், சீகாழிப் பதிகம், முதல் பாடல்
[பொருள்: http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=31170]

2. காளிதாசனின் காலரைச் செய்யுள்

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது.
[பொருள்: http://www.visvacomplex.com/BinnanggaLin_Pinnal_Paattu.html]

3. உதவி:
http://www.periva.proboards.com/thread/5056/
https://groups.google.com/forum/#!topic/sathvishayam/v1O7mK62X2I

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 08, 2013 10:01 am

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

60. பிள்ளையார் போற்றுவோம்
(அறுசீர் விருத்தம்: காய் மா விளம் காய் காய் காய்)

ஆனைமுகம் பார்த்தால் தடையெலாம் .. காலடியில் மூஞ்சூறாய் ஓடிவிடும்
பானைவயின் பார்த்தால் பகையெலாம் .. ஆதவன்முன் பனியெனவே ஓடிவிடும்
கானமதைக் கேட்டால் பிள்ளையார் .. காதுகளில் தேனருவி வந்துவிழும்
நானவனை இன்றே போற்றுவேன் .. பானகமும் மோதகமும் முன்வைத்தே.

மாணவரின் கல்வி யோங்குமே .. காணவரின் பிள்ளையாரின் உருவினையே
கோணலெலாம் மாறிச் சீர்ப்படும் .. கோலவிழிக் கோமகனை வழிபடவே
சாணேறில் மீண்டும் சறுக்கிடும் .. சாதனைகள் கொடிமரமாய் உயர்ந்திடுமே
நாணமுறும் மாதர் வாழ்வினில் .. நாலுவகைப் பேறுகளும் கூடிடுமே.

கணபதியை நாளும் போற்றுவோம் .. காலமெலாம் கவலையின்றி வாழ்வோமே
குணநலன்கள் யாவும் சேருமே .. கூப்பிட்டுத் துதிசெய்து பாடிடவே
கணப்பொழுதில் நீங்கும் தடையெலாம் .. கணபதியே சுற்றமெனக் கொண்டாலே
வணங்கிடுவோம் சென்னி நிலம்பட .. மணமெல்லாம் வாழ்வினிலே பெற்றிடவே.

--ரமணி, 09/09/2013, கலி.24/05/5114
--(பிள்ளையார் சதுர்த்தி தினம்)

*****


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 08, 2013 10:11 am

அழகிய பிள்ளையார் கவிதை நண்பரே! பாராட்டுக்கள். தொடர்ந்து அயராது கவிதைகளை பதிந்துவரும் உங்களுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் அயராத தமிழ் பணி.

அன்புடன்
அசுரன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 08, 2013 10:18 am

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

அசுரன் wrote:அழகிய பிள்ளையார் கவிதை நண்பரே! பாராட்டுக்கள். தொடர்ந்து அயராது கவிதைகளை பதிந்துவரும் உங்களுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் அயராத தமிழ் பணி.

அன்புடன்
அசுரன்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 08, 2013 10:20 am

இந்தியாவில் அனைத்து இந்துக்களும் வணங்கும் பிள்ளையார் பற்றிய அழகான வழிபடு கவிதை அருமை.

விரும்பினேன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 08, 2013 1:30 pm

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

ராஜு சரவணன் wrote:இந்தியாவில் அனைத்து இந்துக்களும் வணங்கும் பிள்ளையார் பற்றிய அழகான வழிபடு கவிதை அருமை.

விரும்பினேன்


Sponsored content

PostSponsored content



Page 7 of 36 Previous  1 ... 6, 7, 8 ... 21 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக