புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
mohamed nizamudeen
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:24 pm

"பலவகை மரணங்கள்"

எல்லாரும் மரிக்கிறார்கள். ஆயினும் அனைவரும் ஒரேவிதமாக மரிப்பதில்லை. மரணத்தை தேவன் உண்டு பண்ணவில்லை. மரணம் தேவனிடமிருந்து வந்ததும் அல்ல. மரணத்துக்கு அதிகாரி 'பிசாசு' என்று வேதம் கூறுகிறது. (எபிரேயர்: 2:14). ஆதாம் செய்த ஒரே பாவத்தின் காரணமாக உலகில் மரணம் ஆண்டு கொண்டது. (ரோமர்: 5:17).

"...கர்த்தர் அவரை அடித்து அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய" (1சாமுவேல்: 26:10).

வேத ஒழுங்கின் படி மரணம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. அவை:

1. தீர்க்காயுசு - காலம் வந்து மரித்தல்

2. யுத்தத்தில் மரிக்கிறவர்கள்

3. அகால மரணம் - இவைகளை சற்று விளக்கமாக பார்ப்போம்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:50 pm

1. தீர்க்காயுசு - காலம் வந்து மரித்தல்:

மனிதன் தேவனால் உண்டாக்கப்பட்டவன். ஒவ்வொருவருக்கும் தேவன் பூரண ஆயுளை கட்டளையிட்டிருக்கிறார். அகால மரணத்திற்கென்று தேவன் ஒருவரையும் குறித்து வைக்கவில்லை. தேவ ஒழுங்கின் பிரகாரம் ஆவிக்குரிய விதிகளின்படி (Spiritual Laws ) நடக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பூரண ஆயுளுடன் ஜீவிப்பார்கள். தேவனுடைய வசனத்தை கவனமாக காத்து நடப்பவர்களுக்கு 'தீர்க்காயுசு' உண்டு.

"உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக. நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்." (உபாகமம்: 5:32,33).

"என் மகனே என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்." (நீதிமொழிகள்: 3:1,2).

அவ்விதமே பொருளாசையை விரும்பாமல் தவறான வழியில் கிடைக்கும் சகல வருமானங்களையும் வேண்டாம் என்று வெறுப்பவர்களுக்கும் தீர்க்காயுசு பலிக்கும். "...பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்" (நீதிமொழிகள்: 28:16).

தீர்க்காயுளை அநுபவிப்பதற்கான தேவனுடைய வாக்குத்தத்தங்கள் பல சத்திய வேதாகமத்தில் உண்டு. அந்த வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பதற்கான விதிகளும் அதில் அடங்கியிருக்கிறது. அந்த வாக்குத்தத்திற்குரிய விதிகளை கைக் கொள்ளுபவர்கள் மட்டுமே பூரண ஆயுளுடன் உலகில் ஜீவிக்க முடியும்.

தேவன் மனிதனுக்கு பூரணமான தீர்க்காயுளைக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், ஜீவியத்திலும், ஊழியத்திலும் பூரணத்தை அடைகிறவர்கள் தங்களுக்கு உரிய காலத்தில் மரணமடைகிறார்கள். தேவனுடைய பிள்ளைகளும்கூட முதிர்வயது அடையும் முன்பு மரிக்கக்கூடும். தேவனால் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காரியங்களை தங்கள் ஜீவியத்திலும் - ஊழியத்திலும் நிறைவேற்றி ஓட்டத்தை முடிப்பவர்கள் மரணத்தின் மூலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள்.

"அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்று போடும்" (வெளிப்படுத்தல்: 11:7).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 12:05 am

2. யுத்தத்தில் மரிக்கிறவர்கள்:

நாட்டின் நலனுக்காக யுத்தம் செய்வதன் மூலம் மரணம் அடைகிறவர்கள் அனைவரையும் இதில் குறிப்பிடலாம்.

3. அகால மரணம்:

தேவனுடைய விதிகளுக்கு விரோதமாக மனிதர் செயல்படும் பொழுது தேவ தீர்மானம் சிதைந்து போகும். இதன் காரணமாக மனிதர் தேவ சித்தத்தை அவமாக்கி விடவும் முடியும்! தீர்காயுளைப் பெற்றிருக்கும் மனிதன் தன் மனம்போல் ஜீவிக்கும்பொழுது அகால மரணங்கள் சம்பவிக்கும். அகால மரணம் ஏற்படுவதற்கான சில குறிப்பிட்ட காரணங்களை இங்கு காண்போம்.

இன்றைய பத்திரிக்கை செய்திகளை நாம் கவனிப்போம் என்றால், அநுதினமும் அகால மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போவதைக் காணலாம். பலவகை வாகன விபத்துக்கள் மூலம் ஏற்படும் மரணங்கள், இடி, மின்னல், புயல், வெள்ளம், வெயில், குளிர் இவை போன்ற இயற்கையின் அகோரங்களால் ஏற்படும் மரணங்கள்; சண்டை விரோதம், கள்ள நட்பு காரணமாக ஏற்படும் மரணங்கள்; வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி, வறுமை, கடன் தொல்லைகள், கவலை, பயம், வியாதியின் அகோரம், அவமானம் காரணமாக நடக்கும் தற்கொலைகள் - இவை போன்ற சம்பவங்கள் நம் தினசரி பத்திரிக்கைகளை நிரப்புகின்றன.

இவ்வித அகால மரணங்களுக்கு பற்பல காரணங்களை மனிதராகிய நாம் கூறினாலும், பரிசுத்த சத்திய வேதாகமத்தில் தேவன் கூறும் காரணங்களே உண்மையானவைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 12:27 am

மற்றவர்களை துன்புறுத்தி அவர்கள் இரத்தத்தைச் சிந்துவதில் மகிழ்ச்சியடைகிறவர்களும், தங்கள் உள்ளத்தில் கபடமும், சூதும் உள்ளவர்களும் அகால மரணமடைவார்கள் என்று சத்திய வேதம் கூறுகிறது.

"தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப் பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்க மாட்டார்கள்" (சங்கீதம்: 55:23).

வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகவே தோன்றினாலும் உள்ளத்தில் சுதுள்ளவர்களாக ஜீவிக்கிற ஜீவியம் பாதி வயது கூட நீடிக்காது என்பது எவ்வளவு பயங்கரமான காரியம்! இந்த இடத்தில் நம்மைநாமே சோதித்து அறிவத நல்லது.

"மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டி வைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள், அவர்கள் வாலவயதிலே மாண்டு போவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்" (யோபு: 36:13,14).

அவ்விதமே துஷ்டத்தனமும் அதிக பேதைமையும் கூட அகால மரணத்தை உண்டாக்கும். " "மிஞ்சின துஷ்டனாயிராதத் அதிக பேதையுமாயிராதே. உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாக வேண்டும்" (பிரசங்கி: 7:17).

சிறுவயதிலிருந்தே பிள்ளைகள் துஷ்டத்தனத்திற்கு விலக வேண்டும். தாய் தகப்பனை கனம் பண்ணுகிறவர்களாகவும், அவர்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்த போம்" (நீதிமொழிகள்: 20:20).

"உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவி கொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே" (நீதிமொழிகள்: 23:22).

"தகப்பனைப் பரியாசம் பண்ணி, தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும். கழுகின் குஞ்சுகள் தின்னும்." (நீதிமொழிகள்: 30:17).

இவை போன்ற சத்தியங்கள் வேத வசனங்களை சிறுவர்கள், வாலிபர்கள் கற்றுக் கொண்டு பெற்றோருக்கும், பெரியோருக்கும், தேவனுக்கும் அடங்கி நடப்பது அவசியம். அப்பொழுது துஷ்டத்தனத்திற்கு விலக்கிக் காக்கப்படுவார்கள். அகால மரணத்திற்கும் தப்பித்துக் கொள்வார்கள்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 12:42 am

துரோகம், ஏமாற்று, திருட்டு, லஞ்சம், பரிதானம், கொள்ளை, கலப்படம், பதுக்கல், அநியாய வட்டி, சதி, நம்பிக்கை துரோகம், மோசடி, கள்ள மார்க்கெட், கள்ளக் கடத்தல், கள்ள நோட்டு, கள்ளக் கணக்கு போன்ற தகாத வழிகளில் பணம் சேர்ப்பதும், பிறரை வஞ்சித்து, ஏமாற்றி, நியாயத்தைப் புரட்டி, தகாத ஆலோசனைச் சொல்லி, அநியாயமான வழிகளில் பணத்தை சேர்ப்பதும் அகால மரணத்தை கொண்டு வரும்.

"அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ:சு பொரிக்காமற் போகிற கவுதாரிக்கு சமமாயிருக்கிறான்; அவன் அதன் பாதி வயதிலே அதை விட்டு தன் முடிவிலே மூடனாயிருப்பான்." (எரேமியா: 17:11).

"பொய் நாவினால் பொருளை சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற பொய் சுவாசம் போலிருக்கும்." (நீதிமொழிகள்: 21:6).

" பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே. இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்" (நீதிமொழிகள்: 1:19).

யூதாஸ் பண ஆசையால் நான்று கொண்டு செத்தான். (மத்தேயு: 27:4,5). பிலேயாம் என்னும் தீர்க்கதரிசி பண ஆசையால் வெட்டி கொல்லப்பட்டான். (எண்ணாகமம்: 31:8; 2பேதுரு: 2:15).

பண ஆசை பொருளாசை மனிதருக்கு எவ்வளவு பெரிய சேதத்தை உண்டாக்குகிறது! ஆனாலும், இதை கவனித்து நடக்க விடாதபடி இன்றும் சாத்தான் ஜனங்களை மோசம் போக்குகிறான்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 12:55 am

விதவைகளையும், திக்கற்ற ஏழைகளையும் ஒடுக்குகிறவர்கள் அகால மரணமடைவார்கள். "விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக. அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம் மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலை செய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்." (யாத்திராகமம்: 22:22-24).

எதையும் செய்ய திராணியற்ற திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் நன்மை செய்யுங்கள், அவர்களுக்கு தீங்கு செய்யாதபடி ஜாக்கிரதையாயிருங்கள். அவர்கள் விஷயத்தில் தேவன் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மறவாதிருங்கள்.

விபச்சாரமும், வேசித்தனமும் அகால மரணத்தை உண்டாக்கும் என்று பரிசுத்த சத்திய வேதாகமம் எச்சரிக்கிறது. "அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரே நாளில் இருபத்தி மூவாயிரம்பேர் விழுந்து போனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம் பண்ணாதிருப்போமாக" (1கொரிந்தியர்: 10:8). "அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டு போய் விடும்." (நீதிமொழிகள்: 7:27).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 1:03 am

தேவனால் பன்முறை எச்சரிக்கப்பட்டும் சீர் திருந்தாதவர்களும் அகால மரணமடைய நேரிடும். "அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியை கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடுதியில் நாசமடைவான்" (நீதிமொழிகள்: 29:1).

பெற்றோர் செய்யும் தவறுகளும் அக்கிரமங்களும் பிள்ளைகளின் அகால மரணத்திற்கு காரணமாக அமையலாம். (2சாமுவேல்: 13,14 அதிகாரங்கள்).

வேறு சில காரணங்களையும் பரிசுத்த சத்திய வேதாகமம் வெளிப்படுத்துகிறது. இவ்விதமாக பல்வேறு காரணங்களால் மனிதருக்கு அகால மரணம் சம்பவிக்கும்.

அகால மரணம் நேரிடுவதற்கான சில காரணங்களை வேதத்தின் வெளிச்சத்தில் நாம் பார்த்தோம். பார்வைக்கு நல்லவர்களாக காட்சியளிக்கிறவர்கள் உள்ளத்தில் எப்படிப்பட்டவர்கள் என்பதை தேவன் மாத்திரம் அறிவார்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 1:22 am

அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள் பூமியில் பேயாக அலைந்து திரிகின்றன என்பது முற்றிலும் தவறாகும். அவ்விதம் கூறுவதற்கான எவ்வித சான்றும் பரிசுத்த சத்திய வேதாகமத்தில் இல்லை. அதைக்குறித்த பின்பு நாம் பார்க்கலாம். "துன்மார்க்கனுக்கு நல் முடிவு இல்லை" (நீதிமொழிகள்: 24:20). "...நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்" (நீதிமொழிகள்: 14:32).

பாவியான ஒரு மனிதன் மூலமாக, குடும்பத்தில், ஐக்கியத்தில், சபையில், யுத்தத்தில், ஊழியத்தில், பலர் சடுதியில் மரணத்தை சந்திக்க நேரிடலாம். (நீதிமொழிகள்: 9:18; யோசுவா: 7:1).

தேவனுக்கு விரோதமாக முறுமுறுப்பதும், தேவனைப் பரீட்சை பார்ப்பதும் அகால மரணத்தை உண்டாக்கும் (1கொரிந்தியர்: 10:9,10).

தேவனுடைய ஊழியர்களை குற்றம் சாட்டுதல், பரிகசித்தல், அவர்களுக்கு இடறல் உண்டாக்குதல் மூலம் அகால மரணம் சம்பவிக்கும் (2இராஜாக்கள்: 2:23,24; மத்தேயு: 18:6,7).

தன்னை மிகவும் நேசித்து அன்பு கூர்ந்த தன் தகப்பனாகிய தாவீதுக்கு விரோதமாக எழும்பிய அப்சலோமின் அகால மரணத்தை 2சாமுவேல்: 17, 18 ம் அதிகாரங்களில் வாசிக்கிறோம். உலக கவலைக்கு இடம் கொடுப்பதன் மூலம் திடீர் மரணம் சம்பவிக்கலாம். "லௌகீக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது" (2கொரிந்தியர்: 7:10).

அவ்விதமே, பயத்துக்கு இடம் கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் அகால மரணங்கள் சம்பவிக்கலாம். யோபின் பயம் அவருடைய பிள்ளைகளுக்கு அகால மரணத்தை உண்டாக்கியது.

தவறான அறிக்கைகள் அகால மரணத்தை உண்டாக்கும். "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." (நீதிமொழிகள்: 18:21).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 7:46 am

"சாத்தானின் நோக்கம்"

மனிதன் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவன் அவனுக்குள் விலையேறப்பெற்ற ஜீவ ஆத்துமா இருக்கிறது. இந்த விலையுயர்ந்த ஆத்துமாவை கறைபடுத்தி தன்னைப் போன்ற சாப நிலைக்கு மனித வர்க்கத்தை கொண்டு வர வேண்டுமென்பதே சாத்தானுடைய ஒரே நோக்கமாகும்.

தன்னை உண்டாக்கிய தேவனை சிந்திக்க விடாதபடி மனிதனை தேவனைவிட்டு வழிவிலகச் செய்து தன்னைப் பின்பற்றி, தன்னையே தெய்வமாக ஆராதிக்கச் செய்ய வேண்டும் என்பதுவும் சாத்தானின் முக்கிய நோக்கமாகும். தன்னுடைய நோக்கத்தை மனிதரில்நிறைவேற்றும் பொருட்டு, தேவனால் சிருஷ்டிக்கப்படாத சில நூதனமான காரியங்களைச் சாத்தான் பூமியில் உண்டு பண்ணி வைத்திருக்கிறான்.

"ஏனெனில், மாமிசத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல. அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்." (1யோவான்: 2:16).

எனவே, ஆணவம் - ஆகாமியம் - மாயை - பொல்லாத ஆவிகள் ( ) மூலமாய் இக்காரியத்தை மனிதரில் நிறைவேற்றுவதில் இரவு பகலாக சாத்தான் ஈடுபட்டிருக்கிறான். இந்த அசுத்த ஆவிகளின் பற்பல பெயர்களையும், பெயருக்கேற்ற அவைகளின் செயல்களையும் பின்வரும் நாட்களில் பார்ப்போம்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 8:32 am

தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின் மூலம் மனிதருக்கு கிடைக்கும் வெளிச்சம், ஆசீர்வாதம், நன்மைகள் நித்திய ஜீவன் ஆகிறவைகளை மனிதர் அறிந்து கொள்ள விடாதபடி தடை செய்து அவர்கள் மனக் கண்களை சாத்தான் குருடாக்குகிறான். "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2கொரிந்தியர்: 4:4).

சாத்தான் தன்னுடைய பொல்லாத ஆவிகளின் மூலம் மனிதரை வஞ்சித்து பூமியில் இறந்த போனவர்களின் பெயரைத் தரித்துக் கொண்டு, பெயர் சொல்லி மக்களை ஏமாற்றி முடிவில் அவர்கள் தன்னை ஆராதிக்கும்படி செய்கிறான்.

எனக்கு 'பலி கொடு' - 'காணிக்கை கொடு' - 'கோவிலைக் கட்டு' - 'கொடை கொடு' - 'என்னைக் கும்பிடு' - என்று பிசாசின் ஆவிகள் மக்களை பயமுறுத்துவதின் பலனாக அவர்கள் பயந்து அந்த ஆவிகளை சாந்தப்படுத்தும் வகையில் அநேக காரியங்களை அவைகளின் விருப்பப்படி செய்கிறார்கள். தன்னுடைய இந்த முயற்சியில் சாத்தான் மக்களை மோசம் போக்குகிறான் என்பதையும், இது சாத்தானின் மாபெரும் தந்திர செயல் என்பதையும் அறிந்தவர்கள் வெகுசிலரே.

தன்னுடைய தந்திர செயல்களை நடப்பிக்க சாத்தான் பல பெயர்களை தரித்துக் கொள்ளுவான். குறிப்பாக அகால மரணமடைந்தவர்களின் பெயரையும் தரித்துக் கொண்டு , அவர்களைப் போல பேசி மக்களை ஏமாற்றுவது சாத்தானின் மோசம் போக்கும் செயலாகும்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக