புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Page 2 of 2 Previous  1, 2

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 28, 2012 6:34 am

First topic message reminder :

"அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்"

மக்களை தேவனிடமிருந்தும் அவருடைய சத்தியம், இயேசு கிறிஸ்து மூலமாய்க் கிடைத்த இரட்சிப்பு, சுதந்திரம் மற்றும் நித்திய ஜீவன் - இவை எல்லாவற்றிலிருந்தும் விலகச் செய்வதே சாத்தான் மற்றும் பிசாசு உலகத்தின் செயல்முறைத் தந்திரமாகும்.

இந்த போதனையில் , அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப்பற்றி வேதாகமம் வெளிப்படுத்துவது என்ன என்பதை ஆராய்வோம். அதன் குணங்களையும் வஞ்சகத்தையும் , தவறான நடத்துதல் மூலம் அது எப்படிக் கிரியை செய்கிறது என்பதையும் காண்போம்.

நீங்கள் படிக்கும்போது, கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேதவசனக் குறிப்பையும் கவனமாக வாசியுங்கள். வேதாகமம் இல்லாதவர்கள் இந்த பகுதியில் சென்று http://www.eegarai.net/t86304-topic தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு பரிசுத்த வேதாகமம் மென்பொருள். உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்பெறுங்கள். இந்திய மொழிகள் அனைத்திலும் வேதாகமம் மென்பொருளை இணைத்துள்ளேன். மேலும், அதே பகுதியில் உள்ள வேதாகம வரைபடம் மென்பொருள் இரக்கிறது. அதையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள். வேதாகம ஆய்வு செய்ய அதில் ஏராளமான உபகரணங்கள் இருக்கிறது.

எந்த அளவுக்கு நீங்கள் தேவனுடைய வசனத்தையும் தமது சத்தியத்தை நமக்குக் கொடுத்த, நம் தேவனையும் புரிந்து கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு அந்திக்கிறிஸ்துவின் ஆவியை நீங்கள் இனங்கண்டு கொண்டு அவனுடைய தந்திரங்களால் வஞ்சிக்கப்பட்டுப் போகாமல் இருப்பீர்கள். (எபிரேயர்: 4 :12 ).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 11:03 pm

தொடர்ச்சி...

இருப்பினும், நம்முடைய பாவம் நம்மை தேவனை விட்டு பிரிக்கிறது என்று வேதம் வெளியரங்கமாக கூறுகிறது. ஒரே ஒரு பொய், ஒரு பொல்லாத சிந்தனை, ஒரு கலக மனப்பான்மை, ஒரு கோபமான, ஒரு இச்சையான பொருளாசையான நினைவு - ஒரு பரிபுரண தேவன் முன்பாக நம்மை ஆக்கினைக்குள்ளாக்க இவைகளில் ஏதாவது ஒன்று போதும்.

யாக்கோபு: 2:10 - ல் "எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்" என்று கூறுகிறது. ஆகவே, தேவனுடைய முழு நியாயப்பிரமாணத்தையும் (இயேசு கிறிஸ்து ஒருவர் தவிர) ஒருவர் கூட பரிபுரணமாக நிறைவேற்ற முடியாது எனக் காண்கிறோம். இப்படி முழு மனுக்குலம் மரணத்துக்கெனவும், நித்திய தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டும் ஆக்கினைத் தீர்ப்படைகிறது. ஆனால், தேவன் தம் மாபெரும் அன்பினால் மனுக்குலத்தை அந்த பரிதாப நிலையில் விடுகிறதில்லை.

நம்முடைய பாவத்திற்கான தண்டனையாகிய மரணத்தை உத்தரித்து முழு மனுக்குலத்திற்கும் இரட்சிப்புக்கான ஒரே வழியை வழங்கும்படி தேவனாகிய குமாரனை அனுப்புவது, தேவனாகிய பிதாவின் அநாதி நோக்கமாக இருந்தது. (ஆதியாகமம்: 2:17; எசேக்கியேல்: 18:20; யோவான்: 3:16,17; ரோமர்: 6:23; 1பேதுரு: 1:18-21). தாம் சிந்திய தமது சொந்த இரத்தத்தினாலும் மரணத்தினாலும், முழு மனுக்குலத்தின் தோல்விக்கான தண்டனையைக் கிறிஸ்து செலுத்தித் தீர்த்தார்.

இப்படி, இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, அவர்களுக்காக அவர் செய்ததை பெற்றுக் கொள்ளும் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். (ரோமர்: 10:11-13). மேலும், தேவனோடு பழைய (முந்தைய) உறவு நிலைக்கு கொண்டு வரப்படுவார்கள். (2கொரிந்தியர்: 5:18; கொலோசெயர்: 1:19-23). விசுவாசிக்கிற விசுவாசிகள் அனைவரின் கடந்த காலமும் மன்னிக்கப்படுகிறது. மேலும், இனி வருங்காலத்தில் அறிக்கை செய்யும் பாவங்களை அவர் மன்னிப்பார் என்ற தேவனுடைய வாக்குத்தத்தமும் அவர்களுக்கு இருக்கிறது. (1யோவான்: 1:9). அல்லேலூயா!

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 11:29 pm

கிறிஸ்துவின் மூலம் நமக்குக் கிடைக்கும் இந்த அபரிதமான ஏற்பாட்டை நாம் சம்பாதிக்க முடியாது. அது இலவசமான ஈவு. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, சிலுவையில் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் நமக்கு நித்திய இரட்சிப்பையும் தேவன் நம்மை அங்கீகரித்தலையும் - அவர் இலவசமாக கொடுத்திருக்கிறார்.

அவசியமான இந்த கோட்பாட்டைப் பற்றிய தெளிவாக புரிந்து கொள்ளுதல் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமாகும். இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலம், கிருபையினாலே இரட்சிப்பு உண்டு. கிரியையினால் அல்ல என்ற மைய சத்தியமே நற்செய்தியின் உயிர்நாடியாகும்.

நற்கிரியைகளை செய்து தேவன் ஏற்றுக் கொள்ளும்படி இரக்க முயல்வது 'சுயநீதி' க்கு வழிநடத்துகிறது. "நம்முடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தை " (ஏசாயா: 64:6) என வேதம் வெளிப்படையாகச் சொல்கிறது. நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக ஆக்கக்கூடிய ஒரே நீதி கிறிஸ்துவில் நமக்கு இலவசமாகக் கொடுக்கப்டுகிறது. (1கொரிந்தியர்: 1:30; ரோமர்: 5:17-21; தீத்து: 3:4,5).

மனிதனது கிரியைகள் அல்லது வெளிப்பிரகாரமான செயல்கள் மனிதனது பாவ சுபாவத்தை ஒரு போதும் மாற்றாது.

வேதாகமக் கிறிஸ்தவம் மனிதனது இருதயத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த இருதயம் தேவனுடைய வல்லமையினால் மாற்றப்படுகிறது. (ரோமர்: 12:12). இந்த செயல் முறை இரட்சிப்பில் துவங்குகிறது. அப்பொழுது பாவத்தின் வல்லமை முறிக்கப்படுகிறது. (கொலோசெயர்: 2:13-15). ஒரு புதிய சுபாவம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. (2கொரிந்தியர்: 5:17). பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து பாவத்தைக் குறித்த உணர்வையும், அதை வெறுக்க பெலத்தையும், தேவனுக்கு கீழ்படிந்து தேவனுடைய சித்தத்தைச் செய்ய திறனையும் தருகிறார். (யோவான்: 14:26; 16:5-14; 1கொரிந்தியர்: 12:11; எபேசியர்: 2:10). இப்படி, விசுவாசிப்போர் தேவனுக்கும், வார்த்தைக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் கீழ்ப்படியும்போது , அவர்கள் இருதயமும் சுபாவமும் தொடர்ந்து மாற்றம் அடைவதை உணருகிறார்கள். உள்ளான அந்த மாற்றம், மாற்றப்பட்ட நடத்தையிலும் மனப்பான்மைகளிலும் வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 11:55 pm

நாம் கிறிஸ்துவில் வைத்துள்ள விசுவாசத்தை நற்கிரியைகள் மூலம் வெளிக் கொணர வேண்டும் என வேதம் நமக்கு புத்தி சொல்வது மெய்தான் (எபிரேயர்: 10:24; 1பேதுரு: 2:12). ஆனால், நாம் அந்த நற்கிரியைகளினால் இரட்சிக்கப்படுவதில்லை. நற்கிரியைகளுக்காக (செய்வதற்காக) இரட்சிக்கப்டுகிறோம் (எபேசியர்: 2:10). நாம் கிறிஸ்துவின் நாமத்தினால் செய்யும் நற்கிரியைகளும்கூட அவருடைய வல்லமையினால், நம்முடைய பெலத்தால் அல்ல - ஆண்டவரடைய கிருபையால் பெலத்தால், ஞானத்தால் செய்யப்பட வேண்டும். (மாற்கு: 10:27; யோவான்: 15:5).

ஏசாயாவின் காலத்திய யுதர்கள் வெறுமையான பக்திக்கடுத்த கிரியைகளுக்காகக் கடிந்து கொள்ளப்பட்டார்கள் (ஏசாயா: 1:11-15; 29:13). இயேசுவானவரின் காலத்திலிருந்த பரிசேயர்களும் அப்படித்தான் இருந்தார்கள் (மத்தேயு 23 ம் அதிகாரத்தை வாசிக்கவும்). இயேசுவானவரின் ஆதி யுத சீடர்கள் நீதியைப் பெற்றுக் கொள்ள நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை செய்வதற்குப் பழக்கப்பட்டவர்களாயிருந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் "தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்." (யோவான்: 6:28,29).

வீணான மதச் சடங்குகளுக்கும் வெளிப்பிரகாரமான முறைமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட, தேவன் மக்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார். கிறிஸ்து அளிக்கும் இரட்சிப்பினால் ஏற்படும் தனிப்பட்ட மனிதனோடு இருக்கக்கூடிய உறவில் தேவன் பிரியப்படுகிறார்! கிறிஸ்துவின் மரணமும், உயிர்த்தெழுதலும் கிருபையினாலுண்டாகும் இரட்சிப்புக்கு வழி பிறந்தது. "ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர்: 2:9; ரோமர்: 3:27-28; 4:1-8).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 30, 2012 6:42 am

3. அந்திக்கிறிஸ்துவின் ஆவி, ஒரே மெய்யான தேவனோடு நாம் உண்மையான உறவு கொள்வது சாத்தியம் என்பதை மறுக்கிறது:

"புறஜாதிக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." (கொலோசெயர்: 1:27).

"கிறிஸ்துவானவர் உங்களுக்குள்" - இது தேவன் தம்முடைய ஆவியானவரால் தனிப்பட்ட விசுவாசிகளுக்குள் வாசம் பண்ண வருகிறார் என்று அறிவிக்கிறது. கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் தேவனை அறிந்து கொள்ளவும், நம் பிதாவோடு தனி உறவு கொள்ளவும் முடியும்!

விசுவாசிகளாக, இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு தேவனுடைய பிரசன்னம் கிடைக்கிறது! தேவனுடைய மெய்யான பிரசன்னத்தால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் இருதயங்களில் அவர் வாழ்கிறார். தம்மோடு அவர்கள் உறவைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். அவர் எங்கெல்லாம் வரவேற்கப்பட்டு ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கப்படுகிறாரோ, அங்கெ அவருடைய மகிமையும் பிரசன்னமும் வருகிறது. (மத்தேயு: 18:20௦; யோவான்: 4:23,24).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 30, 2012 6:56 am

4. அந்திக் கிறிஸ்தவின் நோக்கமெல்லாம் மக்களை வஞ்சகத்திற்குள் நடத்தி தேவனிடமிருந்து நித்தியமாய் பிரிந்திரக்கச் செய்வதாகும்:

இயேசு கிறிஸ்து சிலுவையிலே சாத்தானுடைய சகல வல்லமையையும் உடைத்துப் போட்டார். நியாயத்தீர்ப்பின் நாளிலே சதாகாலங்களிலுமாய் அக்கினிக் கடலிலே தேவன் தள்ளப் போகிறதற்காக படைக்கப்பட்டவன்தானே சாத்தான். (வெளிப்படுத்தல்: 20:10).

சாத்தான் தேவனை பகைக்கிறான். எதிர்க்கிறான். ஆனால், அவருக்கு அவனால் தீங்கு விளைவிக்க முடியாது. ஆகவே, மனிதன் எதன்மேல் அன்பை வைத்திருக்கிறானோ அதை - முழு மனுக் குலத்தை - வஞ்சகத்தை அவனது முதன்மையான ஆயுதமாகப் பயன்படுத்தி, அழிக்கிறான். மக்கள் மனதைக் குழப்பி, ஒரே மெய்யான தேவனை விட்டும், அவருடைய இரட்சிப்பின் திட்டத்தை விட்டும் சாத்தான் மக்களை வழி தப்பிப் போகச் செய்கிறான்.

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 30, 2012 7:20 am

"வஞ்சகத்தில் மனிதனின் பங்கு"

நாம் வஞ்சிக்கப்பட்டுப் போகாதபடிக்கு நம் எதிராளியை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென பவுல் நம்மை எச்சரிக்கிறார். "சாத்தானாலே நாம் மோசம் போகாதபடிக்கு ... அவனுடைய தந்திரங்கள் நமக்கு தெரியாதவைகள் அல்லவே." (2கொரிந்தியர்: 2:11).

மக்கள் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்வதற்கு பிசாசையும் பொல்லாத ஆவிகளையும் குறைகூற முயலுவது சரியல்ல. துரதிர்ஷ்டவசமாக, (எபிரேயர்: 4:18) இருளடைந்த மனிதர்களின் சுயநலம் நிறைந்த இருதயங்களினால் பாவம் செய்யும் மனிதனைத் தான் நாம் அதிகமாகக் குறைகூற வேண்டியுள்ளது. ரோமர்: 1:16-32 - வரை படித்தால் மனிதனது கலகக்குணமும் எதிர்க்கும் சுயசித்தமும் பற்றிக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்:

- இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பு உண்டு.

- வீழ்ச்சியுற்ற சுயநலம் பிடித்த மனித இனம் - பொல்லாத ஆவி உலகோடு ஒன்று சேர்ந்து - இந்த சத்தியத்தை அடக்கி வைக்கிறது (வசனம்: 18).

- தேவனுடைய சுபாவம், தேவத்துவம் மற்றும் வல்லமை உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளாலே "தெளிவாய்க் காணப்படுகிறது" (வசனம்: 20௦).

- பாவமுள்ள மனித இனம் இந்த அறிவுக்காக நன்றியற்றதாயிருந்தது. (வசனம்: 21) அதைப் பொய்யாக மாற்றியது. (வசனம்: 23,25).

- வீழ்ச்சியுற்ற மனித இனம் "தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி" (வசனம்: 22) தேவனை அறியும் அறிவைப் பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லை. (வசனம்: 28).

- மனித இனம் தேவனுடைய வார்த்தையில் காணப்படும் அவருடைய கட்டளைகப் பிடிவாதமாக எதிர்க்கிறது. (வசனம்: 25).

- இப்படி, தேவன் தமது அன்பான கட்டுப்பாட்டைக் கை கழுவிவிட்டு விடுகிறார் (கலகம் பண்ணுவோரை அவர்கள் இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுக்கிறார்) (வசனம்: 24:26,28).

- அப்பொழுது மனித இனம், பொய்யுக்கும் இருளுக்கும் அதிபதியினிடமிருந்து வரும் யோசனைகள் சோதனைகளுடன்:

.. - தாறுமாறான சடங்குகளைக் கைக்கொள்ளுகிறது (வசனம்: 24,25).

..- தாறுமாறான பாலுறவுப் பழக்கங்கள் (வசனம்: 26,27).

..- தாறுமாறான வாழ்க்கை முறைகள் (வசனம்: 28-32).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 30, 2012 7:46 am

மக்களைப் பாவத்திலிருந்து விடுதலையாக்க இயேசு கிறிஸ்து வந்தார். ஆனால், பாவமுள்ள மனித இனம் சில சமயங்களில் இந்த விடுதலையை விரும்புகிறதில்லை. தங்கள் முரட்டாட்டத்தினால் இருளையும் தங்கள் சொந்த வழியையுமே பின்பற்றிப் போகிறார்கள். கர்த்தரை அறிந்தவர்கள் கூட, வீழ்ச்சியடைவும் (எபிரேயர்: 10:26-28) பிசாசின் வஞ்சகம் அவர்கள் வழிதப்பிச் செல்வதையும் தாங்களே தெரிந்து கொள்ளக் கூடும். "ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்" (1தீமோத்தேயு: 4:1).

"பிற்காலங்களிலே" - என்பது கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம். நாம் வாழும் இந்தக் காலம்தான் அது.

- நாம் தேவ பக்தியற்றவர்களாயிருந்தோம் - ஆயினும் கிறிஸ்து நமக்காக மரித்தார். (ரோமர்: 5:6).

- நாம் பாவிகளாயிருந்தோம் - ஆயினும் அவருடைய இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்டோம் (ரோமர்: 5:8,9).

- நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருந்தோம் - ஆனால், இப்பொழுது கிறிஸ்துவினால் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் (ரோமர்: 5:10).

மெய்யாகவே, பாவத்திலும் அவர்களுடைய சொந்த முரட்டாட்டத்திலும் கட்டப்பட்டுள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

பாவத்திலே மரித்திருக்கிற நாம் - இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும்போது அவர் மீது வைத்த விசுவாசத்தின் மூலமாய் கிருபையினாலே - இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய கிரியைகளினாலல்ல. (எபேசியர்: 2:1-10).

வஞ்சகம், பாவம் ஆகிய நம் கட்டுகளிலிருந்து நம்மை விடுதலையாக்கவும் சரீர மரணத்திற்குப் பின் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கவும் கிறிஸ்து வந்தார். கிறிஸ்து சிலுவையிலே செய்த கிரியையின் மூலமாக மட்டுமே இந்த மகிமையான விடுதலை வருகிறது. தேவனுடைய வழிகளுக்கும் அவருடைய வார்த்தைக்கும் கீழ்படிந்து அவரை பின்பற்றுவதில் நமக்குள்ள உண்மைத் தன்மை, நம்மை பலத்தில் வளரச் செய்து, நம்முடைய சத்துருவாகிய பிசாசையும் அந்திக் கிறிஸ்துவின் ஆவியையும் இனம் கண்டு கொண்டு அவனது உபாய தந்திரங்களை எதிர்க்கச் செய்யும்.

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jul 01, 2012 6:08 am

மனிதன் தன்சொந்த முயற்சியால் தேவனைக் கிட்டிச் சேர முடியாது. தேவன் மனிதனண்டை தமது குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாய் வந்தார் (ரோமர்: 5:6-௧௦; 1யோவான்: 4:9,10). வேதாகமக் கிறிஸ்தவத்தில் மட்டுமே இரட்சிப்பு தேவனால் இலவசமாய் கொடுக்கப்படும் ஈவாக இருக்கிறது. "பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர்: 6:23; 3:21-24). இயேசு கிறிஸ்துவின் மூலம் நித்திய இரட்சிப்பு உண்டாயிருக்கிறது. (அப்போஸ்தலர்: 4:12).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jul 01, 2012 6:25 am

"பிதாவினிடம் சேர வழி..."

இயேசு கிறிஸ்துவில் கிடைக்கும் இரட்சிப்பு என்னும் ஒரே வழியின் மூலமாக மட்டுமே தேவனிடம் சேர அல்லது அவரை அறிய முடியும். இயேசுவானவர் மிகத் தெளிவாக , "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான்: 14:6) என்று கூறினார்.

புதிய ஏற்பாட்டுச் சபை அப்போஸ்தலர்களும் பிரசங்கிகளும் கூட இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கும் என தெளிவாக போதித்தார்கள் (அப்போஸ்தலர்: 4:12; ரோமர்: 1:16; 1தீமோத்தேயு: 2:5,6).

சில பக்தி மார்க்கத்தவர்கள் தேவனை நாங்கள் விசுவாசிப்பதாகக் கூறுவார்கள். ஆனால், இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க மாட்டார்கள். ஆனால், வேதாகமம் வெகு தெளிவாக, நீங்கள் ஒரே மெய்யான தேவனிடம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக அல்லாமல் வர முடியாது எனக் கூறுகிறது. (1யோவான்: 2:23; யோவான்: 5:23; 14:6; 15:23; 17:3; 1யோவான்: 4:15).

விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பின் ஆசீர்வாதம் உண்டாகும். (ரோமர்: ௧:௧௬). ஆனால், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கா விட்டால் தேவனுடைய நியாயத் தீர்ப்பில் அவன் இழந்துபோனவனாவான். (யோவான்: 3:18; 1யோவான்: 5:11-12). நித்திய காலமாய் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுப் போவான் (வெளிப்படுத்தல்: 20:6,11-15; 21:8).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jul 01, 2012 6:44 am

"அவருடைய வெளிச்சம் பிரகாசிக்கட்டும்"

"இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார்!" நம்முடைய உயிரோடுள்ள இரட்சகராகிய கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாய் நாம் தேவனால் சுவீகாரம் பண்ணப்பட்ட குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறபடியால் தேவனுடைய "கிறிஸ்துவுக்காக ஸ்தானபதிகளாக" இருக்கும் சிலாக்கியம் பெற்றோம் (2கொரிந்தியர்: 5:20).

ஒவ்வொருவரோடும் (மாற்கு: 16:15) அவர் - வியாபரியாகவோ, ஆசிரியரோ, விவசாயியோ, இளைஞனோ, வயதானவரோ, பணக்காரனோ ஏழையோ, ஆணோ பெண்ணோ - யாராயிருந்தாலும் அவரிடம் அன்போடு நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கட்டளை பெற்றிருக்கிறோம். "திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுவதில்" நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும் (2தீமொத்தேயு: 4:1,2). பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களைத் திறந்து , பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் (யோவான்: 16:7-14). தேவன் அவர்கள் மேல் வைத்த மாபெரும் அன்பையும், அவர்களை விடுதலையாக்கும் சத்தியத்தையும் (யோவான்: 8:32) காணும்படியாக அவர்கள் கண்களைத் திறப்பார்.

நாம் ஒரு வல்லமையான தேவனை சேவிக்கிறோம். அவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். அவருடைய வெளிச்சத்தில் வாழுங்கள். அவரடைய ஒளியிலே நடவுங்கள். உலகமும் பிதாவை மகிமைப்படுத்தும்படியாக அவருடைய ஒளி உங்கள் மூலமாய் உலகத்தில் பிரகாசிக்கட்டும். (மத்தேயு: 5:14-16).

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 39245844137198254264880

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக