புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
62 Posts - 57%
heezulia
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
104 Posts - 59%
heezulia
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_m10நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 22, 2012 7:26 pm

First topic message reminder :

நாற்பதடி வெண்பா
நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம்


என் இனிய உறவுகளே,
நீண்ட நாட்களாக ‘’கவிதைக் களஞ்சியம்’’ பக்கமே வரமுடியவில்லை. கடந்த 18 ம் திகதி இனப்படுகொலை குறித்து அவசரஅவசரமாக ஒரு கவிதை எழுதினேன். அதிகமான வேலைப்பளுவின் காரணமாகவும் எனது உடல்நலக்குறைவினாலும் “பொழுதைக் கழிக்க ஒர்திரி” யும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை மீண்டும் துவக்க வேண்டும் என்று உறவுகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். விரைவில் அத்திரியை தட்டிஎழுப்ப உள்ளேன். இடையில், இயற்கை உணவின் நன்மைகள்/பெருமைகள் குறித்து ஒரு கவிதை எழுதும்படி எனது நண்பர்கள் கோவையில் இருந்து பணித்தார்கள். கசாப்புக்கடைகாரன் ஜீவகாருண்யம் குறித்து போசுவதுபோல் இருக்கும் என்றேன் நான். இல்லை...இல்லை, ஒரு கவிஞன் என்ற முறையில் இயற்கை உணவைப் பேணுபவனாக எண்ணிக்கொண்டு எழுதுங்கள் என்றார்கள். சரி என்று நானும் எழுத ஆரம்பித்தேன். பின்புதான் தெரிந்தது அது அவ்வளவு சுலபம் அல்ல என்று. முதலில் இயற்கை உணவு என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள படிக்கவேண்டி இருந்தது. அதன் நன்மைகள்/கடைப்பிடிக்க ஏற்ப்படும் சிரமங்கள் குறித்து அறிந்துகொண்டேன். முதலில் இயற்கை உணவு என்றால் சைவஉணவுதானே என்று நினைத்தேன். பின்புதான் புரிந்தது அதுவும் சரியல்ல என்று. படிக்கும்போதே என்னால் சிலவற்றை ஜீரணிக்க முடியவில்லை. எப்படியோ ஒருவழியாக எழுத ஆரம்பித்தேன். நீண்டுகொண்டே போவதால் ஒரு வழியாக முடித்துக்கொண்டேன். முறையாக முற்றுப்பெறவில்லை என்பதுதான் உண்மை.

கலிவெண்பாவில் எழுதியுள்ளேன். மொத்தம் நாற்பது அடிகள். எல்லாமே முச்சீர்களால் ஆன சொற்களையே உபயோகித்துள்ளேன். அதிலும் நேரில் துவங்கி நேரில் முடியும் காய்ச்சீர்கள். அதாவது, தேமாங்காய், கூவிளங்காய் மட்டுமே. எனவே, கவிதை முழுவதும் வெண்சீர் வெண்டளை வருமாறு அமைத்துள்ளேன். எல்லோருக்கும் புரியும்படியாக எளிய சொற்களையே கையாண்டுள்ளேன். இடையில் சில ஆங்கிலச் சொற்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்றால்கூட அதனால் அசை-சீர் கெடாமல் பார்த்துக்கொண்டேன். முடிவாக, இவ்வளவும் செய்துவிட்டு கவிதைக்கு பொருள் பொருந்தி வரவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை அல்லவா. என்னால் முடிந்தவரைக்கும் முயற்சி செய்துள்ளேன்.

உறவுகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: கவிதை பெரிதாக இருக்கிறது என்பதால் நுனிப்புல் மேயாமல், ஆரம்ப முதல் கடைசிவரையில் படித்தபின்பு உங்களின் கருத்துக்களை பின்னுட்டம் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.

இறுதியாக, இந்தக்கவிதையை எண்ட பிரியப்பட்ட அனியன் ஸ்ரீமான் கேசவன் நாயருக்கு அன்புப் படைப்பாக்குகிறேன் (அது வேறு யாரும் இல்லீங்கோ...நம்ம தம்பி emoticon பிரியன், சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கேசவன்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ... ஹி..ஹி..ஹி..)

[கலிவெண்பா]
அன்றெல்லாம் நம்முன்னோர் அக்களிப்பாய் வாழ்ந்திட்டார்
நன்றென்றே நல்லியற்கை நல்கியதை ஏற்றார்கள்
தேங்காயும் நற்பழங்கள் தேர்ந்தெடுத்துப் பூசித்தார்
மாங்காயும் நல்லபலா வாழைவகை உண்டுவந்தார்
அன்றவருக் கச்சமில்லை அல்சரென்றும் கேன்சரென்றும்
நன்றாக வாழ்ந்தார்கள் நல்லதையே சிந்தித்தார்.
பாலைவன நாடுகளில்* பல்திராட்சைச் சாறுடனே
சோலைவளர் பேரீச்சம் சோர்வின்றி உண்டார்கள்
எத்தகைய சூட்டினிலும் ஏதமிகும் மண்ணிடையில்
சித்தமதே குன்றாமல் சீர்மிகுந்தே வாழ்ந்தார்கள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* அத்தனைபேர் நல்லுயிரை
காப்பதுவும் யாதென்றீர்? வாழைமரக் காய்கனியே!
கேரளத்தைப் பாருங்கள் கப்பையுடன் நேந்திரமும்
தாரளமாய் காலையிலே தக்கபடி உண்ணுகின்றார்.
இப்படியாய் இங்கிருக்க இன்றிளைய செந்தமிழர்
எப்படித்தான் ஏற்றாரோ இத்தாலிப் பிஸ்சாவை!
சீனாவின் நூடுல்ஸ்சும் சில்லிகொபி என்றுசொல்லி
தானாய்கை யாட்டுமுன்னே தந்திடுவார் செய்ததனை!
இத்தகைய இல்லுணவை இங்கிவர்கள் உண்பதுடன்
மெத்தனமாய் பீடிசிகார் மேல்நாட்டுப் விஸ்கியென்பார்!
ஆட்டிறைச்சி, கோழிபுறா அக்கக்காய் வெட்டிவைத்தே
காட்டுமுயல் பன்றியுடன் கச்சிதமாய் ஓருணவாம்!
கூட்டமிடும் வெள்ளெலியைக் கூடயிவர் விட்டதில்லை!
மாட்டிறைச்சி போத்தென்றே* மச்சையையும்* விட்டகலார்
நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?
மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!
முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!
தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?
உண்மையிதே ஆனாலும் உண்பதற்கு என்னவென்பீர்?
திண்மையுடன் நான்சொல்வேன் தின்பதற்குண் டேராளம்
நல்லியற்கை தந்துள்ள நற்பழங்கள், கொட்டைகளும்
பல்விதமாம் கீரைகளும், பச்சைக்காய் நற்பருப்பும்
தாழ்வின்றி நற்தேங்காய் தாராள மாய்சேர்த்தே
வாழ்வோம்நாம் வையகத்தில் நன்கு.

[நேரிசை வெண்பா]
வாழ்த்திடுவோம் நல்லுணவை வந்தனங்கள் சொல்லித்தான்
தாழ்த்திடுவோம் நம்தலையை தண்டமிழா – பாழ்கொள்ளை
நோய்நொடிகள் நீங்கிநல்ல நுண்மையுற நாமுண்போம்
காய்கனிகள் கச்சிதமாய் சேர்த்து

-----------------------------------------------------------------------------------------------
பாலைவன நாடுகளில்* = அரேபிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* = கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி,ருவாண்டா
போத்தென்றே* = போத்து = பறவை, விலங்குகளின் ஆணினத்தைக் குறிக்கும்
சொல். கேரளத்தில் (மலையாளத்தில்) எருமை.
மச்சையையும்* = மஜ்ஜை = எலும்பின் உட்திசு (மச்சை) = marrow of the bone.
[ஆதாரங்கள்: சென்னை பேரகரமுதலி, வின்சுலோ அகரமுதலி]

-----------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கொண்டு படிப்பதற்கு:
1. டாக்டர் தேவேந்திர வோரா அவர்களின் “நம் நலம் நம் கையில் பாகம்-1 (தமிழ், ஆங்கிலம்), பாகம்-2, (ஆங்கிலம்).
2. இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - மூ.ஆ. அப்பன். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, மூலிகை விளக்கங்கள், இயற்கை உணவு செய்முறைகள்.
3. இயற்கை வாழ்வியல் கலை. கொ.எத்திராஜ், சித்த வித்தை தவ மையம், சித்தர் வழி சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம்
4. எளிய முறை உடற்பயிற்சி-வேதாத்திரி மகரிஷி
5. உலக சமாதானம்-வேதாத்திரி மகரிஷி


----- Dr. சுந்தரராஜ் தயாளன்,பெங்களூர்.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 24, 2012 10:36 pm

பிஜிராமன் wrote:ஐயா,
இதனை வெறும் மரபுக் கவிதை என்று நான் கூறேன்.
மக்கள் எத்தகைய உணவு முறையை பின்பற்ற வேண்டும், எதை செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை பற்றி ஆய்வு செய்து இயற்றப்பட்டுள்ள பா என்றே கூறுவேன்.
அருமையான மரபுக் கவிதை ஐயா, தக்க உதாரணங்களுடன் கருத்தினை எடுத்தியம்பியது பலவற்றை தெரிந்து கொள்ள உதவியது.
பெங்களூர் என்றுநீர் பின்குறிப்பில் இட்டாலும்
எங்களூர் என்றுரைப்போம் நன்கு

அருமை ஐயா, நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 10:56 pm

நுனிப்புல் மேயாமல், ஆரம்ப முதல் கடைசிவரையில் படித்தேன் அய்யா ..

பழைய உணவு முறை , மற்றும் இன்றைய உணவு மோரி அதன் முலம் ஏற்படும் விளைவுகள் .ஆரோக்கியமாக வாழ என்ன உணவு முறை என்று அழகா சொல்லி உள்ளீர் .

அருமையான வெண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பொழுதை கழிக்க ஒரு வழியில் சந்திப்போம் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 25, 2012 8:50 pm

சாமி wrote:கவிதை அருமையாக உள்ளது ஐயா!

அன்புடன்
சாமி
மிகவும் நன்றி...சாமி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 27, 2012 9:07 pm

கேசவன் wrote:ஐயா கவிதை மிக மிக அருமை ஐயா..அனைத்து வரிகளுமே சிறப்பாக உள்ளது...ஈகரையில் தாங்கள் இணைதது ஈகரையக்கு உண்மையாகவே யோகம் ஐயா...
நல்லியற்கை தந்துள்ள நற்பழங்கள், கொட்டைகளும்
பல்விதமாம் கீரைகளும், பச்சைக்காய் நற்பருப்பும்
தாழ்வின்றி நற்தேங்காய் தாராள மாய்சேர்த்தே
வாழ்வோம்நாம் வையகத்தில் நன்கு.

முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!
தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!

நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்
இனிமேல் யாராவது அசைவ உணைவு சிறந்தது என்று வாதிட்டால் இந்த கவிதையை எடுத்து காண்பித்துவிடுவேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
"மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!"

சரி சைவ உணவு சிறந்தது என்று சொல்பவருக்கு இதையும் எடுத்துக் காண்பிக்கவும். இல்என்கில் , வடிகொண்டு நிங்களை அடிக்கும் கேட்டோ...கேசவா மண்டையில் அடி உடுட்டுக்கட்டை அடி வ

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon May 28, 2012 9:52 am

சைவ உணவே சிறந்தது ....
அதை கவிதையாக்கி தந்த ஐயாவுக்கு நன்றி !! சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 29, 2012 9:11 am

ரா.ரா3275 wrote:மிக நல்ல கருத்துக்களை விதைக்கும் கவிதை...சைவம் பேசும் கவிதை அருமை அய்யா...
நன்றி...
நன்றி தம்பி ரா.ரா., மகிழ்ச்சி மகிழ்ச்சி சைவம் மட்டும் பேசவில்லை நான், சைவத்தை கொஞ்சம் ஏசியும் உள்ளேனே ...கவனிக்கவில்லையா நீங்கள் அதை. உங்களின் கருத்துக்கு என் பாராட்டுக்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 1:47 pm

கே. பாலா wrote:br>

அருமையான கவிதை ..நன்று தயாளன் ஐயா
மிகவும் நன்றி, தம்பி பாலா அவர்களே. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 10:05 am

naka wrote:தங்கள் கவிதை அருமை.
தயாளன் தந்த தண்கவிதை கண்டேன் தீரமுடன்
உயர்வாய் உரைத்தார் உணவு.
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை.
(ஐயா நான் இலக்கணம் முழுமையாக படித்தவனில்லை ! ஆர்வக்கோளாறாலும்
இறைஅருளாலும் கவிதை இயற்றுகிறேன். பிழை இருந்தால் மன்னித்து திருத்துமாறு
கேட்டுககொள்கிறேன்.)
ஈகரை உறவான நண்பன் நாகசுந்தரம்
மிகவும் நன்றி நாகசுந்தரம் ...வெண்பா எழுதுவது குறித்து விரைவில் விவாதிக்கலாம் ஒரு திரியில். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 02, 2012 8:35 am

கேசவன் wrote:
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை.
அருமை அருமை அருமை ,நாகசுந்தரம் அவர்களே இது திருகுறளா ?? .அப்படியானால் இது எந்த அதிகாரத்தில் வருகிறது
நன்று ...கேசவன் நாயரே மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 05, 2012 9:30 am

naka wrote:ஐயா இது திருக்குறள் அல்ல. என் மனதில் உதித்த கவிதைக் குறள்.
அன்பன் நாகசுந்தரம்.
நன்று நாக அவர்களே புன்னகை உங்களுக்கு ஒரு மடல் அனுப்பினேன் பார்த்தீர்களா?

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக