புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_m10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10 
21 Posts - 66%
heezulia
இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_m10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_m10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10 
63 Posts - 64%
heezulia
இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_m10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_m10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_m10இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இந்தியா-இலங்கை மோதல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 7:22 am

First topic message reminder :

ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. சமீபத்திய முத்தரப்பு தொடரில் இலங்கை அணியை புரட்டி எடுத்த விராத் கோஹ்லி, மீண்டும் இந்தியாவுக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து மண்ணில் பங்கேற்ற ஒருநாள் தொடரில் முழு தோல்வி, ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் 8 போட்டியில் 3 வெற்றி மட்டும் பெற்று, தோனியின் அணி சோகத்தில் உள்ளது. அடுத்தடுத்து அன்னிய மண்ணில் நடந்த தொடரில் அடைந்த தோல்வியால், ஆசிய கோப்பை தொடரில் முதல் அடியே, கவனமாக எடுத்து வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

சிறிய மாற்றம்:

இந்திய அணியில் சேவக், ஜாகிர் கான் நீக்கப்பட்டு, யூசுப் பதான், டின்டாவுக்கு இத்தொடரில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதனால் துவக்க வீரர்களாக காம்பிர், சச்சின் களமிறங்குவது <உறுதி. 100வது சதம் அடிக்கும் சச்சினின் முயற்சி கைகூடும் என்று நம்பலாம்.

இம்முறை துணைக் கேப்டன் அந்தஸ்தில் களமிறங்குகிறார் விராத் கோஹ்லி. இவர், சமீபத்திய முத்தரப்பு லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 86 பந்தில் 133 ரன்கள் விளாசினார். இவரது அதிரடியை இலங்கை அணி மறக்க வாய்ப்பில்லை. இவர் இன்றும் அசத்தினால் இந்தியா எளிதான வெற்றி பெறலாம். ரோகித் சர்மா, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அஷ்வின் தலைமை:

வேகப்பந்து வீச்சில் பிரவீண் குமார், வினய் குமார் ஆகியோருடன் டின்டாவும் இணைந்து கொள்கிறார். தவிர, "ஆல் ரவுண்டர்' இர்பான் பதானும் தன்பங்கிற்கு ஆறுதல் தர முயற்சிப்பார். சுழலில் வழக்கம் போல அஷ்வின் தான் தலைமை. ஒருவேளை ஆடுகளத்தின் தன்மை பொறுத்து ராகுல் சர்மாவும் களம் இறங்கலாம்.

புதிய எழுச்சி:

முத்தரப்பு தொடரில் அசத்திய போதும், கோப்பையை நழுவ விட்ட சோகத்தில் இலங்கை அணி உள்ளது. தவிர, தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருவதால் வீரர்களும் சோர்வாக உள்ளனர்.

பேட்டிங்கில் கேப்டன் ஜெயவர்தனா தில்ஷன், சண்டிமால், சங்ககரா, திரிமான்னே மற்றும் தரங்கா ஆகியோரது அபார ஆட்டம் தொடரும் எனத் தெரிகிறது. "ஆல் ரவுண்டர்' மாத்யூஸ், பெரேரா காயம் குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது பலம் தான்.

மலிங்கா பலம்:

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் "யார்க்கர்' மலிங்காவுடன் இணைந்து குலசேகரா, மகரூப் ஆகியோர் உதவ தயாராக உள்ளனர். சுழலில் ஹெராத்துக்குப் பதில் இடம் பெற்ற லக்மல், சேனநாயகே இருவரும் எப்படி செயல்படுவர் என்பது இன்று தான் தெரியும்.

வெற்றி முக்கியம்:

ஆசிய கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் ஒருமுறை தான் மோத வேண்டும். இதனால் பைனலுக்கு செல்ல வெற்றி முக்கியம். இதனால் இரு அணிகளும் எளிதாக விட்டுத்தராது என்பதால், விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

12 மாதங்கள் போதுமா சச்சின்

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கடைசியாக தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், மார்ச் 12ல் சதம் அடித்து இருந்தார். டெஸ்ட் (51), ஒருநாள் போட்டிகளை (48) சேர்த்து, இது 99 வது சதமாக இருந்தது. இதையடுத்து விரைவில் சர்வதேச அளவில் 100வது சதம் அடித்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் இப்போது ஆண்டுகளானது தான் மிச்சம். மார்ச் 11, 2011 போட்டிக்குப் பின், இதுவரை சச்சின், தலா 11 டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என மொத்தம், 32 (21+11) இன்னிங்ஸ்கள் விளையாடி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இதில் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் (91), வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மும்பை டெஸ்டில் (94) இரு முறை சதத்தை நெருங்கினார். சமீபத்திய சிட்னி டெஸ்டில் 80 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான, உலக கோப்பை அரையிறுதியில் 85 ரன்கள் எடுத்தார். இதன் பின் ஒருநாள் போட்டிகளில், சச்சின் இதுவரை 48 (பெர்த், இலங்கை, 2012) ரன்களை தாண்டவில்லை.

தவிர, இவர் சதம் அடித்து ஒரு 12 மாதங்கள் (ஒரு ஆண்டு) முடிந்து விட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடர் நடக்கும் வங்கதேசத்தில், ஆடுகளங்கள் சாதகமாக இருப்பதால், சச்சின் சாதனை படைப்பார் என்று நம்பப்படுகிறது.

---

17 மாதங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், தனது முதல் சதத்தை, ஆக., 1990ல் இலங்கை அணிக்கு எதிராக அடித்தார். பின் இரண்டாவது சதத்தை, 17 மாதங்கள் கழித்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி (ஜன., 2, 1992) டெஸ்டில் தான் அடித்தார். இப்போது 99வது சதம் அடித்து 12 மாதங்கள் ஆன நிலையில், சச்சின் விரைவில் 100வது சதம் அடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

---

வெற்றி அதிகம்

மிர்புரில், இந்திய அணி இதுவரை பங்கேற்ற 11 ஒருநாள் போட்டிகளில், 8ல் வெற்றி பெற்றது.

* இலங்கைக்கு எதிராக இங்கு விளையாடிய 3 போட்டிகளில், 2ல் தோற்றுள்ளது.

* கடைசியாக கடந்த உலக கோப்பை தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 370/4 ரன்கள் குவித்துள்ளது.

* இந்திய அணியின் காம்பிர், இங்கு விளையாடிய 11 போட்டிகளில், தலா 2 சதம், 2 அரைசதம் உட்பட 508 ரன்கள் எடுத்துள்ளார்.

---

பாக்., அணிக்கு அபராதம்

வங்கதேச அணிக்கு எதிரான, ஆசிய கோப்பை முதல் லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் குறிப்பிட்ட நேரத்துக்குள் 2 ஓவர்கள் குறைவாக வீசியதால், பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக்கிற்கு 40, மற்ற வீரர்களுக்கு தலா 20 சதவீதம், போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.



தினமலர்


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 5:06 pm

இந்தியா 304-3
50

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Mar 13, 2012 5:08 pm

இந்தியா 304/3

India innings (50 overs maximum) R B 4s 6s SR
G Gambhir c Tharanga b Maharoof 100 118 7 0 84.74
SR Tendulkar c Jayawardene b Lakmal 6 19 1 0 31.57
Kohli c Thirimanne b Maharoof 108 120 7 0 90.00
MS Dhoni*† not out 46 26 6 1 176.92
SK Raina not out 30 17 3 1 176.47
Extras (lb 7, w 7) 14
Total (3 wickets; 50 overs) 304 (6.08 runs per over)


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 5:12 pm

கடைசி பத்து ஓவருக்கு 95 ரன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 6:16 pm

Sri Lanka 43/1 (7.0 ov)

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 9:09 pm

இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 9:12 pm

சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 9:58 pm

இன்று இந்தியா-இலங்கை மோதல் - Page 3 143495

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 13, 2012 10:08 pm

மகிழ்ச்சி 🐰 நடனம் குதூகலம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 11:09 pm

பாவம் சச்சின் இந்த முறையும் சதம் அடிக்க முடியாமல் தவறிவிட்டது. சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 14, 2012 1:11 pm

அதிபொண்ணு wrote:பாவம் சச்சின் இந்த முறையும் சதம் அடிக்க முடியாமல் தவறிவிட்டது. சோகம்

இருவர் சதம் அடிதார்களே.... ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக