புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
46 Posts - 47%
heezulia
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
17 Posts - 2%
prajai
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சன்யாட்ஸென்! Poll_c10சன்யாட்ஸென்! Poll_m10சன்யாட்ஸென்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன்யாட்ஸென்!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 20, 2009 10:58 pm

சீன தேசத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் சீனாவின் கந்தகப் புயல் சன்யாட்ஸென் சீன மக்களை அந்நிய சக்திகளிடமிருந்து மீட்டுக் கொடுத்த மாபெரும் புரட்சி வீரராவார்.



சீனாவில் இவரது தலைமையில் 1911 அக்டோபரில் வெடித்த புரட்சியே 1917ல் ருஷ்யாவில் வெடித்த புரட்சிக்கு முன்னோடியாகும்.



சீனாவில் சூயி ஹெங் எனும் சிறிய கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் தான் சன்யாட்ஸென். இவர் 1866ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதியன்று சண்டாவ் சுவான் எனும் விவசாயியின் மகனாகப் பிறந்தார். பள்ளியில் சேர்க்கப்பட்ட போது அவரது பெயர் சண்டை சியோங். பெரியவனான போது தான் சன்யாட்ஸென் ஆனார். சன் என்பது அவரது குடும்பப் பெயர். சன்யாட் ஸென்னின் அண்ணன் ஆமி என்பவர் ஹவாய் தீவில் ஒரு சிறிய கடை நடத்தி வந்தார். அதற்கு உதவியாக பதின்மூன்று வயது நிரம்பிய சன்யாட் ஸென்னை அழைத்துச் சென்றார்.


ஹானலூலு நகரில் உள்ள அயோலானி கல்லூரியில் சன்யாட்ஸென் உயர் கல்வி கற்றார். கிராமத்தில் நிலவிய வறுமையும் அறியாமையும் மூட நம்பிக்கைகளும் சன்யாட் ஸென்னுக்கு வெறுப்பூட்டின. அரசாங்க அதிகாரிகளுடைய செயல்பாடுகள் முழுக்க முழுக்க அருவெறுப்பூட்டுவதாயிருந்தது. சன்யாட்ஸென் ஹாங்காங் நகரம் சென்று அங்கிருந்த கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கலானார். சார்லஸ் ஹாகர் என்ற அமெரிக்கப் பாதிரியாரின் தொடர்பு சன்யாட் ஸென்னுக்குக் கிடைத்தது.


டாக்டர் ஜே.ஜி.சென் உதவியுடன் சன்யாட்ஸென் டாக்டர் பட்டம் பெற்றார். 1891ல் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஸன்போ என்று அக்குழந்தைக்கு பெயரிட்டனர். டாக்டர் பட்டம் பெற்ற சன்யாட்ஸென் அரசியலில் பிரவேசித்தார். சீனாவில் மஞ்சூ வம்ச முடியாட்சியை எதிர்த்து மேடைகளில் பேசியும் கட்டுரைகளாக எழுதியும் வந்தார். பல நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறுகளை படித்து தன்னையும் அதற்குத் தயார்படுத்திக் கொண்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 20, 2009 10:58 pm

சீனாவில் பல்வேறு போராட்டக் குழுக்கள் ஆங்காங்கே ரகசியமான முறைகளில் இயங்கி வந்து கொண்டிருந்தன. சன்யாட்ஸென் "முற்போக்கு சீனர்கள் சங்கம்' என்று ஒரு புரட்சி அமைப்பை உருவாக்கினார். ஹானலூலு நகரத்து இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றி புரட்சிக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரிக்க ஏற்பாடு செய்தார் அவர். ஐரோப்பிய அரசியல் பார்வையாளர்கள் "சீனாவும் துருக்கியும் சாகும் தருவாயிலுள்ள நாடுகள்' என்று வர்ணித்தனர்.


அந்நிய வல்லரசுகள் தங்களின் சீன நாட்டினைத் துண்டு போடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்து வந்தார் சன்யாட்ஸென். அதன்படியே நான்கு ஆண்டுகளில் தெற்கு சீனாவை பிரான்சும் மத்திய சீனாவை பிரிட்டனும், வடகிழக்கு சீனாவை ஜெர்மனியும், மஞ்சூரியாவை ரஷ்யாவும் தங்களது செல்வாக்கு மிக்க பகுதி என்று அறிவித்தன. சீனாவுக்கான ஆதரவைத் திரட்டும் பணியில் சன்யாட்ஸென் பல நாடுகளுக்கும் சென்றார்.



சின்னஞ்சிறு நாடான ஜப்பானிடம் சீனா தோற்று சில பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. மிகப் பெரிய அவமானகரமான செயலாக சன்யாட்ஸென் கருதினார். சன்யாட்ஸென் புரட்சிக்கு படைகள் திரட்டவும் ஆயுதங்கள் திரட்டவுமாகப் பாடுபட்டார். துப்பாக்கி வெடி மருந்துகளோடு கத்தரிக்கோல்களும் ஏராளமாக வாங்கினார்.


தங்களுக்கு கட்டுப்பட்ட சீனர்கள் எல்லாரும் தலைவாரி பின்னால் சடை போட்டுத் திரிய வேண்டும் என்று மஞ்சூ ஆட்சியினர் சட்டமியற்றியதால் சீனர்கள் சடையுடன் அலைந்தனர். அதனை முதலில் கத்தரிக்க வேண்டும் என்பதற்காக சன்யாட்ஸென் கத்திரிகளை வாங்கியிருந்தார்.



சன்யாட்ஸென் சேகரித்த ஆயுதங்கள் யாவற்றையும் ஹாங்காங்கிலிருந்து ஷாங்காய்க்கு கப்பல் மூலம் அனுப்புவதற்காக சிமென்ட் அனுப்பும் பீப்பாய்களில் வைத்து மூடி சீலிட்டு துறைமுகத்துக்கு அனுப்பிய போது ஒரு பீப்பாயிலிருந்த வெடி மருந்து துறைமுகத்திலேயே வெடித்துச் சிதறியது.



அதிகாரிகள் உஷாராகி அந்தப் பீப்பாய்களில் இருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்து புரட்சி இயக்க வீரர்களைக் கைது செய்தனர். சன்யாட்ஸென் முன்னதாகவே தப்பித்துவிட்டார். அங்கிருந்த காண்டன் நகர் சென்று கால் நடையாகவே மாக்கோ தீவை அடைந்தார் சன்யாட்ஸென். மாறுவேடத்தில் ஹாங்காக் சென்று அங்கிருந்து ஜப்பானில் உள்ள கோப் நகரம் அடைந்தார். ஜப்பானில் தன் தலைமுடிப் பின்னலை வெட்டி விட்டு ஜப்பானியரைப் போலவே மாறுவேடமிட்டு ஹானலூலு போய்ச் சேர்ந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 20, 2009 10:58 pm

பின்னர் 1896ல் அமெரிக்கா சென்று அதன் பின் லண்டன் சென்றார். லண்டனில் சீன தூதரக அதிகாரி சன்யாட்ஸென்னை அடையாளம் கண்டு கொண்டார். அவரைப் பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டனர். ஆனால், எப்படியோ தப்பிவிட்டார். அப்போது சீன நாட்டு மன்னராக இருந்தவர் குவாங்ஷு பெயருக்குத்தான் மன்னர். அதிகாரம் எல்லாம் அவனது பாதுகாவலராக இருந்த யெகோஸா என்பவளிடம்தான். அவள் அனைத்து கேடு கெட்ட குணங்களுக்கும் சொந்தக்காரி. மன்னனே உத்தரவிட்ட பல சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்து மன்னனையும் சிறையில் அடைத்தாள். புரட்சிக்காரர்களை நாடு கடத்தினாள்.



அதன் பின் 1908ல் குவாங்ஷு மன்னனும் யெகோஸாவும் இறந்துவிட்டனர். பூமி என்ற மூன்று வயதுச் சிறுவன் தான் மஞ்சூ வம்சத்து கடைசி மன்னன். இதற்கிடையில் சன்யாட்ஸென் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்கே புரட்சி இயக்கங்களை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். பல முறை புரட்சிகளை மேற்கொண்டும் சன்யாட்ஸென் தோல்வி முகமே தொடர்ந்து கண்டு வந்தார். 1907ம் ஆண்டு நான்கு தடவைகளும் 1908ம் ஆண்டு இரண்டு தடவைகளும் 1909ம் ஆண்டு இரு தடவைகளும் சீனாவில் புரட்சி செய்து தோற்றார்.



இறுதியாக 1911ம் ஆண்டு அக்டோபர் திங்களில் நடத்திய பதினோராவது புரட்சிதான் வெற்றி பெற்றது. உடனே சன்யாட்ஸென் லண்டன் புறப்பட்டு சென்றார். சீன நாட்டு மன்னன் லண்டனில் உள்ள கூட்டு ஸ்தாபனத்தில் பெருந்தொகை கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தான். சன்யாட்ஸென் அங்கு சென்று சீனாவில் புரட்சி வெற்றி பெற்று விட்டது என்றும் குடியரசு ஆட்சி விரைவில் ஏற்பட இருக்கிறது என்றும் மஞ்சூ அரசனுக்கு இனி மேல் கடன் ஏதும் கொடக்கக் கூடாது என்றும் கூறித் தடுத்தார்.


தேசிய சபையில் சன்யாட் ஸென்னைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்து உடனடியாக வரும்படி அழைப்பு விட்டனர். 1912 ஜனவரி முதல் தேதியன்று சன்யாட்ஸென் நான்கிங் அடைந்தார். 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் குடியரசுத் தலைவர் பொறுப்பை அன்றே ஏற்றுக் கொண்டார் சன்யாட்ஸென். சீனதேசம் முழுவதற்கும் குடியரசுத் தலைவராக 1912 மார்ச் 11ம் தேதியில் ராணுவ தளபதி யுவான் ஷிகாய் பதவி ஏற்பதற்கு வசதியாக தமது குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சன்யாட்ஸென்.


ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது வேறு. வஞ்சக எண்ணம் கொண்ட யுவான் ஷினாய் புரட்சிக் குடியரசு பிரகடனம் செய்த 56 அம்ச திட்டத்தைப் புறக்கணித்து விட்டு புரட்சிப் படைகளை எல்லாம் ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டான். வேறு வழியின்றி சன்யாட்ஸென் அவனை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்கு ஆளானார்.



அதன்பின் 1924ல் ஒன்றுபட்ட தேசமாக சீனாவை உருவாக்கும் முயற்சியில் சன்யாட்ஸென் பீகிங் நகருக்குச் சென்றார். ஆனால், சன்யாட்ஸென் தன்னுடைய ஆத்மார்த்தக் கனவை நிறைவேற்றுவதற்கு இடம் தராத காலதேவன் அவரைப் புற்று நோய்க்கு பலியாக்கி 1925ம் ஆண்டு மார்ச் 12ம் தேதியன்று அழைத்துக் கொண்டான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக