ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்....

View previous topic View next topic Go down

ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்....

Post by பிரசன்னா on Thu Feb 02, 2012 12:10 pm

ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்....எண்-1

ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்து உயிர்களும் சூரியனின் ஒளியும் உஷ்ணமும் இன்றி உயிர் வாழ முடியாது என்பது உலகறிந்த உண்மை. ஆக, உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே.


இச்சூரியனைக் குறிக்கும் எண்-1 என்றால், இந்த எண்-1 எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறாகவே 1-ஆம் எண்ணில் இம்மண்ணில் பிறக்கும் மனிதர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ்கின்றனர்.

நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களின் பிறந்த தேதி 19-11-1917 என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அவர் 19-ஆம் தேதி எப்படி பிறந்தார்? எங்கிருந்து வந்தது இந்த அமைப்பு என்று வினா எழுப்புவோமே யானால், அதற்கு எண்ணியல் (நியூமராலஜி) மூலமாகவே விடையளிக்க இயலும்.

திருமதி. இந்திராகாந்தி அவர்களின் தந்தையாகிய நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தேதி 14-11-1889. இதில் அவரது பிறவி எண்-5. விதி எண்-6. ஜவஹர்லால் நேரு அவர்களின் துணைவியார் திருமதி. கமலா அவர்களின் பிறந்த தேதி 1-8-1899. இதில் அவரது பிறவி எண்-1, விதி எண்-9. திருமதி. இந்திராகாந்தி அவர்களின் பிறந்த தேதியான 19-11-1917-ல் பிறவி எண் அம்மாவின் எண்ணாகவும், விதி எண்-3 ஆகவும் உள்ளது. இந்த 1-ஆம் எண் அவரது தாயார் கமலா அம்மையாரின் பிறவி எண்ணுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

பிறவி எண், விதி எண் இரண்டுமே இயற்கையாக அமையப் பெற்றது. இவை இரண்டும் தாய்- தந்தையரின் பிறவி எண் மற்றும் விதி எண்ணுக்கு உட்பட்டது என்பதைக் கண்டோம். ஆனால், பெயர் எண்ணை அவரவர் பிறவி எண் மற்றும் விதி எண்ணுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள இயலும். உதாரணமாக 1-ஆம் எண்ணில் பிறந்த ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனித உயிர்களைக் காக்கும் மருத்துவராகவும் மாறலாம்.

எனவே, மண்ணில் பிறந்த அனைவருக்கும் அவரவர் பெற்றோரின் பிறந்த தேதியின் அடிப்படையிலும், பெற்றோரின் திருமணத் தேதியின் அடிப்படையிலும்தான் பிறவி எண்ணும், விதி எண்ணும் அமைகிறது என்பது திண்ணமாகிறது. ஆனால், அறுவை சிகிச்சைமூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு இது பொருந்தாது.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் எண்-1-க்கு சொந்தக்காரர்கள். இவர்கள் சூரியனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இவர்கள் பொதுவாக வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள். மனதில் பட்டதை பட்டென சொல்லிவிட்டு, பின்னர் பரிதாபத்திற்குரியவராகின்றனர். மன சாட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள். ஏதேனும் சிறு தவறு செய்தாலும், அவர்களின் மனசாட்சியே தண்டித்து விடும். இத்தகைய குணங்கள் கொண்ட 1-ஆம் எண்ணின் ஆதிக்கர்களில் அநேகர் இரக்க சுபாவத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்து விட்டு, அதனால் உபத்திரவப்படுபவர்களும் இவர் களே. ஆனால், 1-ஆம் எண்ணில் பிறந்தவர் களின் ஆதரவு மற்றவர்களுக்குத் தேவைப் படுகிறது. அதனால் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தொழில்களைப் பொறுத்தவரை மக்களைத் தன்வசப்படுத்தும் அரசியல், பத்திரிகை நடத்துதல், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், மின்சாரம் தொடர்புடைய அனைத்து துறை, மற்றும் அரசுத்துறையில் உயர்பதவி முதல் கீழ்மட்டப் பதவி வரை அனைத்து பதவிகளிலும் பணி புரிகின்றனர். இவர்களில் ஜோதிடம், எண்ணியல் (நியூமராலஜி), கைரேகை போன்றவற்றிலும் வெற்றியடைந்துள்ளனர். இத்தகையவர்களின் கைரேகையை ஆராய்ந்தோமேயானால் இதய ரேகைக்கும், புத்தி ரேகைக்கும் இடைப்பட்ட செவ்வாய் வெளியில் ஒரு தனிப்பட்ட கூட்டல் குறியோ அல்லது பெருக்கல் குறியோ இருந்தால் இவர்கள் கூறும் பலன்கள் அனைத்தும் பலிதமாகும்.

1-ஆம் எண்ணில் ஆதிக்கத்தின்கீழ் வரும் சூரியனின் முழு பலம் பெற்றவர்களுக்கு திருமண வாழ்க்கை சிக்கலாக இருக்கும். மற்றபடி அனைத்தும் மேலோங்கியே காணப்படும். சூரியனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி கோபப்படுதல், நினைத்த காரியம் நிறைவேறாமல் காலதாமதம் ஆகிறதேயென்ற ஆதங்கம், படபடப்பு, மற்றவர்கள் செய்யும் சிறு தவறுக்கும் கடிந்து கொள்ளுதல் போன்ற குணாதிசயங்களுடன் காணப்படுவர்.

அப்படிப்பட்டவர்கள் தங்களின் ஆதிக்க பலத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக ஒருவரின் பிறந்த தேதி 1-12-1959 என வைத்துக் கொண்டால், அவரின் பிறவி எண்-1, விதி எண்-1. பெயர்-

M. S E L V A K U M A R
4 3 5 3 6 1 2 6 4 1 2 = 37-10-1

என்று வருமேயானால், இதை எளிமை யாகப் புரிந்து கொள்ள 1-1
1
என்ற சமன்பாடு வரும்படி அமைத்துக் கொள்வோம். இந்த ஆதிக்கர் மேற்கூறிய குணங்களுடன் கடுகடுப்பான மனிதராகவே எப்போதும் காணப்படுவார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெயர் மாற்றம் ஒன்றினால் மட்டுமே தீர்வுகாண முடியும். பிறவி எண்-1, விதி எண்-1 என்று அமையப் பெற்றவர்களுக்கு 4-ஆம் எண் நன்மை செய்கிறது. அது சூரியனின் ஆதிக்க பலத்தை சமமாக்கி, சமுதாயத்தின் போக்கில் நடந்து கொள்ள வழிவகுக்கிறது. மேலும், 4-ஆம் எண் வரிசையில் 31-ஆம் எண்ணையும், 13-ஆம் எண்ணையும் முக்கியமாகக் கொள்ள லாம். வேறு தேதியில் பிறந்தவர்கள் 13-ஆம் எண்ணையும், 31-ஆம் எண்ணையும் பெயர் எண்ணாக வைத்துக் கொள்ளக்கூடாது. ஒருவேளை வேறு எண்ணில் பிறந்தவர்களின் விதி எண்-1 என அமையுமேயானால் மேற்சொன்ன 31, 13 எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டால் நன்மையை அளிக்கும். அதேசமயம் 28-ஆம் தேதி பிறந்த ஒருவரின் கூட்டு எண் 2- ஆகவோ, அல்லது 3- ஆகவோ, 4 மற்றும் 8- ஆகவோ அமைந்திருப்பின், அவரது பெயர் எண்ணை சூரியனின் ஆதிக்க பலம் மிகுந்த 19, 37, 46, 55, 64 போன்ற எண்களில் மாற்றம் செய்து கொள்ளலாம். அல்லது கூட்டு எண்ணின் வலிமைக்கேற்ப பெயரை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

1-ஆம் எண் வரிசையில் 1, 19-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு சூரியனின் முழு ஆதிக்க பலம் அமைந்து காணப்படும். பொதுவாக இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் பொறுமையற்றவர்களாகவும், பிறர் கூறும் அறிவுரையை எளிதில் ஏற்க மறுப்பவர் களாகவும் காணப்படுவர். வரவேற்பது, புறக்கணிப்பது இவர்களின் பார்வை மூலமே வெளிப்படும். மிக எளிதாக காதல் வசப்படக் கூடியவர்கள். அதில் சிலருக்கு பெரும் சிக்கல்களும் வந்துசேரும். மேலும், துடுக்கான பார்வையும், மிடுக்கான நடையும் எண் 1-ன் ஆதிக்கர்களின் வெளி அடையாளங்கள். உதாரணமாக நடிப்புலக இமயம் மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் பிறந்த தேதி 1-10-1928. இதில் இவரது பிறவி எண்-1, விதி எண்-4, பெயர் எண்-5.

S H I V A J I G A N E S A N
3 5 1 6 1 1 1 3 1 5 5 3 1 5 = 41.

இதை ஒரு சமன்பாடாக எடுத்துக் கொண்டால் 1-4

5

என்று அமைந்துள்ளதைக் காணலாம்.

19-2-1630-ல் பிறந்துள்ள மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி அவர்களின் சமன்பாட்டினை ஆராய்ந்தால் பிறவி எண்-1, விதி எண்-4, பெயர் எண்-4.

C H A T H R A P A T H I S H I V A J I
3 5 1 4 5 2 1 8 1 4 5 1 3 5 1 6 1 1 1 - 58- 13 - 4

என அமையுமானால் 1-4
4
என்ற சமன்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.

1-4
5
என்ற சமன்பாட்டில் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்புலகின் முடிசூடா மன்னனாகவும்; 1-4
4

என்ற சமன்பாட்டில் சத்ரபதி சிவாஜி அவர்கள் மராட்டியத்தின் வீர மன்னனாகவும் வாழ்ந்து மறைந்ததைக் காணலாம்.
அடுத்ததாக 1-ஆம் எண் வரிசையின் 10-ஆம் தேதி பிறந்தவர்களின் ஆதிக்க பலன்களைக் காண்போம். இவர்கள் சூரியனின் ஆதிக்கத் தோடு. 0 ஆகிய புவியின் ஈர்ப்பு சக்தியினாலும் பெருமளவு ஈர்க்கப்படுகின்றனர். பெயர் எண்-10-ஆக வந்தாலும், மேற்கூறியபடியே புவியின் ஈர்ப்புக்குட்படுகின்றனர்.

புவிவாழ் உயிர்களின் அக்கறையும், கருணையும் உடையவர்கள். இரக்க குணம் இவர்களிடமே சரணடைந்து காணப்படும். இதற்கு உதாரணமாக அன்னை தெரசாவைக் கூறலாம். இவரது பிறந்த தேதி 10-8-1910. இவரது இயற்பெயர்.

A G N E S G O N X H A B O J A X H I U

1 3 5 5 3 3 7 5 5 5 1 2 7 1 1 5 5 1 6 -71

அதாவது 1-2
8
என்ற சமன்பாடாக இருந்தது. அதன்பிறகு

T E R E S A
4 5 2 5 3 1 - 20

1-2
2-ஆக அமைந்தது.

M O T H E R T E R E S A
4 7 4 5 5 2 4 5 2 5 3 1 -47 - 2

1-2
2

மேற்கண்ட சமன்பாடுகளின் மூலமாக உலகில் எவரும் அநாதையாக இருக்கக் கூடாது என்று முடிவு கட்டி, அநாதைகளுக்கு எல்லாம் அன்னையாக வாழ்ந்தவர்; கருனை யும், இரக்கமும் இவரிடம் சிறைப்பட்டு இருந்தது எனலாம்.
1-ஆம் எண்ணில் 28-ஆம் தேதி பிறந்த வர்கள் சூரியனின் ஆதிக்க பலம் குறைந்த வர்கள். மென்மையானவர்கள். கோபமும், கூடவே நிதானமும் இவர்களின் உடன் பிறந்தவை. சற்று தன்னம்பிக்கையற்றவர்கள். பிறரைச் சார்ந்தே செயல்படுவார்கள். பெயர் எண்ணை வலிமையாக்கிக் கொண்டால், இத்தகையவர்களின் வாழ்வில் தங்குதடை யின்றி வெற்றிகள் வந்துசேரும். 28-1-1920-ல் பிறந்த விட்டலாச்சார்யா மற்றும் 28-6-1915-ல் பிறந்த சாண்டோ சின்னப்பா தேவர் அவர் களையும் உதாரணமாகக் கூறலாம்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் 4, 13, 22, 31, 8, 17, 26, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த எதிர்பாலரிடம் காதல் வசப்படு கின்றனர். இதில் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களை மணம் புரிந்தால், இருவரும் ஒரே மனநிலையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்றி காணப்படுவதால் திருமண வாழ்க்கை மிகுந்த வெற்றியை அளிக்காது. எனவே, அவர்களது திருமணத்தைத் தடுப்பது நல்லது. மற்றபடி 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் 3, 12, 21, 30, 6, 15, 24, 5, 14, 23 போன்ற தேதிகளில் பிறந்தவர்களை மணக்கலாம். அவர்களது வாழ்க்கை கணவன்- மனைவி என்ற கடமை உணர்வுடன் நடக்கும். மேற்கூறிய எண்களைப் போல் ஈர்ப்புடையதாக இருக்காது. திருமணத் தேதியைப் பொறுத்த வரை 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் திருமணம் செய்து கொள்ளலாம். மற்றபடி அன்றைய தினத்தின் கூட்டு எண்-5 அல்லது 8 வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்! காரணம், திருமணத் தேதியை அனுசரித்தும் குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஆக, திருமண நாளின் தேதி எண், அன்றையதின கூட்டு எண்ணும் பெற்றோர் களின் பிறவி எண், விதி எண்ணுக்குட்பட்டது. இதன் அடிப்படையில் ஆராய்ந்தால், குழந்தை பிறக்கப்போகும் தினத்தையும் முன்கூட்டியே எண்கணிதம் மூலம் கணிக்கலாம் என்பதும் தெளிவாகிறது.

1-ஆம் எண்காரர்களுக்கு திருமணத் தடை ஏற்பட அவர்களின் பெயர் எண்களே முக்கிய காரணமாக அமைகிறது. மற்றும் பெற்றோரின் பிறவி மற்றும் விதி எண், பெயர் எண் இவை ஒவ்வொன்றிற்கும் தொடர்பு உடையதாகவும், அதிர்ஷ்டகரமாகவும் அமைந்திருந்தால், தங்கள் பிள்ளைகளின் திருமணம் தடைப்படாது நன்கு நிறைவேறி விடும். பெயர் எண் துரதிர்ஷ்டகரமாக அமையுமானால் பிள்ளைகளின் திருமணமும் தடைப்படும். ஆராய்ச்சிப் பூர்வமாக தந்தையின் பெயர் எண்-8-ல் அமைந்திருந் தாலோ அல்லது அவரின் பிறவி எண்-8-ல் அமைந்திருந்தாலோ அவர் துயரப்பட வேண்டியவராகிறார். அத்துயரத்தில் தன் பிள்ளைகளுக்குத் தகுந்த காலத்தில் தகுந்த வரன் அமையவில்லையே என்ற துயரமும் அடங்கும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பெயரை அதிர்ஷ்டகரமாக மாற்றி கையெழுத்து போட்டு வந்தாலே, தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைந்து வாழ்க்கை பிரகாசமாக அமையும்.

எண்-1-ல் பிறந்தவர்கள், காதல்வசப் படுபவர்களின் பெயர் எண், விதி எண் மற்றும் பிறவி எண்களும் ஒன்றுக்கொன்று ஈர்ப்பு உடையதாக அமையும். அப்படி ஈர்ப்பு உடையதாக அமைந்தாலே அவர்களின் திருமணப் பொருத்தம் சரியானதாகவே அமையும். ஆனால், ஜாதக முறைப்படி பொருத்தம் பார்த்தோமானால் மாறுபாடாக அமையக் கூடும். ஆகவே, காதலர்கள் எண்கணித முறைப்படியே (நியூமராலஜி படியே) நல்ல அதிர்ஷ்டகரமான தேதியில் திருமணம் செய்து கொண்டால் நன்மையே நடைபெறும். காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் செய்து கொள்ளக் கூடாது. குறிப்பாக, கணவனின் முதல் எழுத்தை மனைவி இன்ஷியலாகப் பயன் படுத்தக் கூடாது; அப்படி பயன்படுத்தி னாலும் பொருத்தம் மாறுபடும்.

கணவன் பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாகப் போட்டுக் கொள்ள விரும்பு பவர்கள் எண்கணித நிபுணர் ஒருவரின் ஆலோசனைப்படியே திருத்தம் செய்து கொள்ளவேண்டும். அப்படி திருத்தம் செய்து கொள்ளும்பட்சத்தில் பொருத்தம் மாறு படாது என்பது திண்ணம்.

(தொடரும்)
செல்: 99400 78841

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - நன்றி பாலஜோதிடம்...
http://www.nakkheeran.in/users/frmMagazine.aspx?M=3


Last edited by பிரசன்னா on Thu Feb 02, 2012 12:14 pm; edited 1 time in total
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்....

Post by பது on Thu Feb 02, 2012 12:13 pm

சூப்பருங்க

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum