ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி
 ayyasamy ram

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 SK

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 SK

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 ravikumar.c

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 SK

எண்ணிப் பார்க்க வைத்த மீம்ஸ்
 T.N.Balasubramanian

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 SK

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 SK

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 SK

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 SK

**வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 SK

வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ஜாஹீதாபானு

சமையல் – டிப்ஸ்
 ஜாஹீதாபானு

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 SK

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 SK

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 SK

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 Mr.theni

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 Mr.theni

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 deeksika

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 SK

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 SK

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 SK

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 SK

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 SK

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 SK

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 SK

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒருவனின் கதை ....!

View previous topic View next topic Go down

ஒருவனின் கதை ....!

Post by ஜாஹீதாபானு on Mon Nov 21, 2011 4:12 pmஒரு கரப்பான்பூச்சியைக் கொல்வதென்ன சாதாரண காரியமா..? அதுவும் என் போன்றொரு
பயந்தாங்கொள்ளிக்கு. என் வீட்டின் பரண்தான் அதன் வாழ்விடமாக இருந்திருக்க
வேண்டும். எங்கள் வீட்டு ஓனர் ஒரு மாங்கா மடையன். ஒன்றாம் தேதியானால்,
மிகச் சரியாக நான் பல்விளக்கி, வாய் கொப்பளிக்கும் நேரத்தில் வாட‌கை
ரசீதோடு வந்து நின்று சிரிப்பான். வீட்டில் ஏதாவது குறை சொன்னால் மட்டும்
தண்ணீரில் போட்ட கல்லாகிவிடுவான் கல்லூளி மங்கன். நான் இங்கு வந்து
குடியேறிய மூன்று வருடங்களின் ஒரு பொங்கலுக்குக் கூட வெள்ளையடிக்கவில்லை.
இத்தனைக்கும் அது ஒரு முன்னறை மற்றும் ஒரு சமையலறை கொண்ட
மிகச்சிறியவீடுதான். அதை வீடு என்று சொல்வதே ”வீடு” என்ற சொல்லுக்கு
அவமானம்.

என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளி அவனுக்கு
குடித்தனக்காரானாகக் கிடைத்தற்கு, முன் ஜனனத்தில் அவன் புண்ணியம் ஏதாவது
செய்திருக்க வேண்டும். அதானாலேயே அவன் என் தலையில் மிளகாய் அரைத்துக்
கொண்டிருக்கின்றான். நான் பெரும்பாலும் அவனிடம் வீட்டைப்பற்றிய குறைகளைச்
சொன்னதேயில்லை. சொன்னாலும் அதே தண்ணீரில் போடப்பட்ட‌ கல் கதைதான். அதனால்
அவனை மேற்சொன்ன வார்த்தைகளிலும், கொஞ்சம் கோபம் அதிகமானால் எனக்கு தெரிந்த
மிகச் சிற்சில கெட்ட வார்த்தைகளிலும் அவனைத்திட்டி வஞ்சம் தீர்த்துக்
கொள்வேன். சில சமயம் அவனுடை செருப்பை என் வெற்றுக்காலால் மிதித்தும்
எத்திவிட்டும் பழி தீர்ப்பேன். சிலசமயம தலையணையை அவனாக பாவித்து, ஓங்கி ஒரு
குத்து விட்டு கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.இப்படி ஒருவனிடம் எப்படி என்
கரப்பான் பூச்சித் தொல்லைப் பிரச்சனையைச் சொல்ல முடியும். ..?

ஏன் சொல்ல வேண்டும்..? நீயே
பூச்சிக்கொல்லி மருந்து வாங்க வேண்டியதுதானே ..! என்ற கேள்வி உங்களுக்கு
எழலாம். ஆனால் பரண் மேலிருக்கும் பொருட்களில்ஒரு குண்டுமணி கூட எனக்குச்
சொந்தமானது கிடையாது. பிறகெப்படி அந்த கரப்பான்பூச்சி மட்டும் என்னுடைய
சொத்தாகும்..?”பேகான் ஸ்பிரே” வாங்கலாம்தான். ஆனால், வேலை இல்லாத நான் அந்த
அறுபது ரூபாயில் ஒரு நாள் முழுவதும் சாப்பிட்டு விடுவேன் என்பதால் அந்த
திட்டம் இல்லை. அதனாலேயே ஒரு கட்டையோ அல்லது கையில் சிக்கும் ஏதோ ஒன்றை
வைத்து அதனை வதம் செய்து விட திட்டம் வகுத்தேன். ஆனால், அந்த கரப்பானைப்
பார்த்தவுடன் வரும் அருவருப்பு கலந்த பயத்தினால் அதை செயல்படுத்த முடியாமல்
தவித்தேன்.

அந்த கரப்பான்பூச்சிதான் பாவம். ஒரு ஹோட்டலிலோ அல்லது
ஏதோ ஒரு பணக்கார வீட்டின் சமையலறையிலோ, ஒரு ஸ்டோர் ரூமிலோ தங்கியிருந்தால்
அதற்கு சாப்பாடாவது கிடைத்திருக்கும். ஆனால் என் வீட்டில் எனக்கே
வழியில்லை. அதற்கு எங்கிருந்து சாப்பாடு கிடைக்கின்றது...? ஒரு வேளை என்
வீட்டை தங்குமிடமகவும் இனப்பெருக்கம் செய்யுமிடமாகவும் மட்டும்
உபயோகிக்கித்துக் கொண்டிருக்கக் கூடும். மனிதனாக இருந்தாலாவது, வாடகையில்
பங்கு பணம் கேட்கலாம். அந்த பாழாய்ப்போன கரப்பானிடம் எதைக் கேட்பது..?
கேட்டாலும் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கும். இதை நினைக்கும் போது
மிக ஆவேசமாக தரையிலோ சுவற்றிலோ ஓங்கி குத்திகொள்வேன்.

சென்றவாரம் கூட, சமையலறையின் கதவிடுக்கில் அந்த
துரோகியைப் பார்த்தேன். உடனே ஓடிச்சென்று கதவைச் சாத்தினால் அது இறந்து
விடுமென்றெண்ணி, மிக தைரியமாக ஓடிச் சென்று சாத்தினேன். சனியன்
தப்பிவிட்டது. மாறாக, என் கையில் பலத்த அடி பட்டு, சதை கிழிந்து ரத்தம்
வடியத்ட் தொடங்கி விட்டது. பின் என் வீட்டு எதிரேயுள்ள டீக் கடையில்
காபிப்பொடி வாங்கி போட்டுக் கொண்ட பின்தான் இரத்தம் நின்றது. டீக் கடைக்
காரர் என்னை நாயைப் பார்ப்பது போல் பார்த்தது வேறு விடயம். அனைத்திற்கும்
காரணம் அந்த கருமம் பிடித்த கரப்பான் பூச்சிதான். அந்த சனியனை எப்படியாவது
கொல்ல வேண்டும்.

எப்போதாவது என் வீட்டருகே உள்ள ஃபர்னிசசர் கடையின்
ஷோகேஸ் டிவி பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அங்கு கிரிக்கெட்தான் ஓடும்.
எனக்கோ அந்த பந்து விளையாட்டு பிடிப்பதில்லை. கிரிக்கெட் இல்லாத நாட்களில்
சில சமயம் அனிமல் பிளனட், டிஸ்கவரி போன்ற சேனலகளைப் போடுவார் அந்த கடையின்
முதலாளி. அந்த பாழாய்ப்போன சேனலில் கூட சிங்கத்தை எப்பிடி பிடிப்பது,
பாம்புகளை எப்படி பிடிப்பது என்றே போடுகின்றனர். இந்த கரப்பான் பூச்சியை
எப்படி கொல்வது..? என்று என்றாவது ஒரு நிகழ்ச்சி போடுவார்களா என்று எதிர்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர்களும் கைவிட்டு என் காலை வாரி விட்டு விட்டார்கள் பாவிகள்.

நான்
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியில் செல்வதில்லை. ஏனெனில் வேலை தேட
எந்தவொரு அலுவலகமும் திறந்திருக்காது. அன்று மட்டும் எனக்கு காலை 11
மணிக்குதான் விடியும். அன்று ஒரு நாளாவது காலைச் சாப்பாட்டுக்கான பணத்தை
மிச்சம் செய்ய வேண்டியே அவ்வழக்கம். நான் உறங்கும் போது அந்த கரப்பான் என் மீது ஏறி விளையாடுமோ
என்ற அச்சம் வருகின்றது. நான் எழுந்த பிறகு அதை பார்ப்பதற்கு பகீரத தவம்
செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், மற்ற நாட்களில் அது சகஜமாக ஏதோ என் அறை
உறவு போல சகஜமாக முன்னறையில் உலா வருகின்றது. உற்சாகமான சில சம்யங்களில்
பறந்து கொண்டு அட்டூழியம் செய்கின்றது.
அநேகமாக,நான் பயந்தாங்கொள்ளி என்று அதனிடம் யாராவது சொல்லியிருக்கக்கூடும்.

அது
இனப்பெருக்கம் செய்வது போலவும் தோணவில்லை.துணை வேண்டுமே.. ! நான்
பார்த்தவரையில் அது ஒன்று மட்டுமே என் சமையலறையின் ராஜாவாக இருந்து
கொண்டிருக்கிறது. அதன் ராணிகளையோ வாரிசுகளையோ யாரையும் நான் இதுவரையில்
பர்த்ததே கிடையாது. அதற்கு தேவையான ஏதோ ஒன்று என் அறையில் இருக்க வேண்டும்.
அந்த பொருள் எதுவெனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதைக் கொல்ல வேண்டும் என்ற
எண்ணத்தை விட‌
சற்றே மேலோங்கி நிற்பதை தற்போது அடிக்கடி உணர்கின்றேன். அதை ஏன் கொல்ல வேண்டும் என்ற எண்ணமும்.
ஆனால் ஏதேதோ காரணம் சொல்லி என்னை, நானே சமாதானம் செய்து கொள்கிறேன். கொலைவெறி..!

அந்த
கரப்பான் பூச்சியால் என் நிம்மதியே போய்விட்டது. காதலிப்பவன் தன் காதலியை
நினைத்துக் கொண்டிருப்ப்தைப் போல எப்போதும் அதன் நினைவாகவே இருக்கின்றது.
சென்றமுறை நேர்முகத் தேர்வு சென்ற போது கூட, ”எக்ஸ்கியூஸ் மீ” என்று
சொல்வதற்கு பதில் “கரப்பான் பூச்சி” என்று சொல்லிவிட்டேன். அந்த தேர்வு
அதிகாரியின் பெயர் ”கருப்பசாமி” என்று இருந்தது என் குற்றமா..? நீக்கி
விட்டார்கள். அந்த கோபத்துடனேயே இரவு வீட்டிற்கு வந்தவுடன் கதவைத்
தாழிட்டுவிட்டு ஒரு பெரிய உலக்கையை கையில் எடுத்துக் கொண்டு அதைக் கெட்ட
வார்த்தையில் திட்டிக் கொண்டே ”வெளியே வா”என்று ஆவேசமாக கத்தி அழைத்துப்
பார்த்தேன். மானங்கெட்ட அந்த கரப்பான்பூச்சி வெளியே வரவேயில்லை. நாளை
வெள்ளைக் கொடியுடன் சென்று சாமாதானமாவது பேசிப் பார்க்க வேண்டும். இன்று
இரவாவது நிம்மதியாக உறங்குவேன் என்றே நினைக்கிறேன்.
-♠ராஜூ♠
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30375
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: ஒருவனின் கதை ....!

Post by முஹைதீன் on Mon Nov 21, 2011 4:26 pm

நல்ல நகைச்சுவை கதை
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ஒருவனின் கதை ....!

Post by ரேவதி on Mon Nov 21, 2011 4:27 pm

ஒரு கரப்பான்பூச்சிக்கு இவளோ அலபறையா..
நல்ல நகைச்சுவை கதை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒருவனின் கதை ....!

Post by கேசவன் on Mon Nov 21, 2011 6:36 pm

கதை அருமைங்க,
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ஒருவனின் கதை ....!

Post by ஜாஹீதாபானு on Tue Nov 22, 2011 11:47 am
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30375
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: ஒருவனின் கதை ....!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum