புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
97 Posts - 52%
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
37 Posts - 60%
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:15 am

First topic message reminder :

அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது.

இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம். இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் ‘இறை நம்பிக்கையாளன் இல்லை’ என இஸ்லாம் அறிவிக்கிறது.

மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் ‘அல்லாஹ்’வையும் கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.

அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று தான் கூறுவார்கள்… (அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 31:25. 39:38)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:47 am

யஹ்ஜுஜ் - மஹஜுஜ் மனித இனமே!

அவர்கள் மனித இனத்தை விட்டும் அப்புறப்படுத்தி, மறைக்கப்பட்டிருப்பதால் அவர்களை ஏதோ ஒரு புது இனம் என்று விளங்கிவிடக்கூடாது, அவர்களும் மனித இனமே!.

யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - அஹ்மத், தப்ரானி.

அவர்களின் உருவம்

‘யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்) வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : காலித் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள் - அஹ்மத், தப்ரானி.

18:99 வது வசனத்தில் உள்ள ‘அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோத விடுவோம்’ என்ற வாசகப்படி நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டமாக இருப்பர் என்பது புரிந்தாலும், அவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பதும் புரிகிறது.

இதே போல் புகாரீ ஹதீஸ் (எண் 3348) ‘நரகத்தில் நாம் ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்’ என்று கூறுகிறது. இந்த வாசகம் மூலமும் அவர்களின் எண்ணிக்கை கூடுதலானது. அதே வேளையில் உயரமும் குறைவானது என்பதைப்புரியலாம்.

இது போல் ஒரு நபர் ஆயிரம் குழந்தைகளை வாரிசாகப் பெறுவார்’ என்ற வாசகம் மூலம், அவர்களின் பிறப்பின் போதே உயரம் மிகச்சிறியதாக இருக்கும் என்றும் புரியலாம். இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 21:96 வது வசனத்தில் உள்ள ‘விரைந்து வருவார்கள்’ என்ற வாசகம் மூலம், அவர்கள் அதிவேகமாக இயங்குவார்கள் என்பதும் விளங்குகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:47 am

ஈஸா நபியின் பிரார்த்தனையால் அழிவர்!

‘யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக்கண்டு அதன் நீரைப்பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு) ‘அந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது’ என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள ஒரு மலையை அடைவார்கள்.

‘பூமியில் உள்ளவர்களைக் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம்’ என்று கூறுவார்கள், தங்கள் அம்புகனை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசி அல்லாஹ் திருப்பி அனுப்புவான். பிறகு அவர்கள் ஈஸா நபியையும், அவரின் தோழர்களையும் முற்றுகையிடுவார்கள்.

பின்னர், ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். அல்லாஹ் புழுக்களை அவர்களிடம் அனுப்புவான். அந்தப் புழுக்களின் தாக்குதல் காரணமாக அனைவரும் ஒரேடியாக செத்து விடுவார்கள். பின்னர். ஈஸா நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு வருவார்கள். யுஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தரின் (பிணங்களின்) நாற்றமும், நெருக்கடியும் ஒரு சாண் அளவு இடத்தைக் கூட விடாது பரவி நிற்கும். பின்னர் ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பறவைகள் பிணங்களை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடங்களில் போட்டுவிடும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கடும் அமளி – துமளியில் ஈடுபடும் யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டம், இறுதியில் ஈஸா நபியிடமும் போருக்கு நிற்பார்கள். அவர்களை முற்றுகையிடும் வேளையில் அவர்களின் பிரார்த்தனை காரணமாக அழிவார்கள். இந்தக் கூட்டத்தினர் வெளியேறிய நாட்களில் கடும் பஞ்சமும் ஏற்படும் என்பதையம் இந்த ஹதீஸில் புரிய முடிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:48 am

யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ்களின் அழிவுக்குப் பின்...

(யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அழிவுக்குப் பின்) அவர்கள் (பயன்படுத்திய) அம்புகள், வில், அம்பாரத் தூளிகள் போன்றவற்றை முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளுக்கு விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான், அனைத்து வீடுகளையும் பூமியையும் அந்த மழை கண்ணாடி போல் கழுவி விடும். பின்னர் ப+மியை நோக்கி, ‘உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த பரக்கத்தையும் திரும்பக்கொடு’ என்று கூறப்படும். (நல்ல விளைச்சல் ஏற்படும்) அந்நாளில் ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே உண்பார்கள். அதன் தொலி மூலம் (குடை போல் அமைத்து) நிழல் பெறுவார்கள். அந்த அளவுக்கு அது பெரிதாக இருக்கும். பாலிலும் பரக்கத் செய்யப்டும். ஒரு ஒட்டகத்தில் கறக்கப்படும் பால், ஒரு பெரிய கூட்டத்தாருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கப்டும் பால் ஒரு சமூக மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். மக்களின் இந்த வளமான வாழ்க்கையின் போது, அல்லாஹ் ஒரு சுகமானக் காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள்வரை செல்லும். மூஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடுவர். கெட்டமக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போதுதான் மறுமைநாள் நிகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - திர்மிதீ.

இந்த ஹதீஸ் மூலம், யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தாரின் மறைவுக்குப் பின், மக்களிடையே செல்வம் பெருகி, வளமாக வாழ்வு ஏற்படும் என்பதைப் புரிய முடிகிறது. வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் காலத்தில் முஸ்லிம்களின் உயிர்கள் மட்டும் கைப்பற்றப்பட்டுவிடும் என்பதும், அதன்பின்னர் இறைமறுப்பாளர்களும் தீய நடத்தை உள்ளவர்களும் வாழும் போதே உலகம் அழியும் என்பதும் தெரிகிறது. தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் வருகை என இம்மூன்றும் அடுத்தடுத்து நடைபெறும் என்பதும் நமக்குத் தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:48 am

(7) கிழக்கே ஒரு பூகம்பம்

(8) மேற்கே ஒரு பூகம்பம்

(9) அரபு நாட்டில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள்


‘(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள் - நில நடுக்கம் ஏற்படும் அதை நீங்கள் காணும் வரை மறுமை நாள் நிகழாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹ{தைபா (ரலி) நூல் - முஸ்லிம்.

பூகம்பங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன இதுவும் மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்று. நாம் முன்னரே கண்டோம், இங்கே குறிப்பிடப்படும் பூகம்பங்கள் மூன்றும் பெரிய அளவில் இருக்கும் என்பதையே நமக்கு விளக்குகிறது.

மூன்று பூகம்ப நிகழ்வுகளையும் மூன்று அடையாளங்களாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதால், ஒரே நேரத்தில் இந்த மூன்று பூகம்பங்களும் நிகழாது என்பதையும், அடுத்தடுத்து இந்த பூகம்பங்கள் ஏற்படும் என்பதையும் நாம் விளங்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:49 am

(10) பெரும் நெருப்பு

‘யமனிலிருந்து நெருப்புத் தோன்றி மக்களை அவர்களின் மஹ்ஷரின் பால் விரட்டிச்செல்லும். அது நிகழும் வரை மறுமை நாள் நிகழாது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹ{ihபா (ரலி) நூல் - முஸ்லிம்.

யமனில் தோன்றும் இந்த நெருப்பு மக்களை நாலா திசைகளிலும் சூழ்ந்து கொள்ளும். இந்த நெருப்பின் வளையத்திற்குள் மக்கள் சிக்கிக்கொள்வர். மக்கள் ஓவ்வெடுக்க எண்ணும் போது, அந்த தீயும் ஓய்வெடுக்கும், உண்ணும் வரைக்காத்திருக்கும், பிறகு துரத்தும்.

அவர்களில் மீதாமான (மூன்றாம் பிரிவி)னர்களை (பூமியில் ஏற்படும் பெரும்) தீ நெருப்பு ஒன்று திரட்டும். அவர்கள் மதியம் ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அவர்கள் அடையும் போதும், மாலை நேரத்தை அவர்கள் அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்கின் போதும்) அந்த நெருப்பு அவர்களுடனேயே இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் - புகாரீ 6522.

மறுமை நாளின் அடையாளமாக மக்களை நாலா திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டும் வகையில் உள்ள பெரும் நெருப்பும் ஒன்றாகும்.

‘ஹிஜாஸ் பகுதியலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, ஷாம் நாட்டின் புஸ்ரா (ஹவ்ரா) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் நிகழாது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் - புகாரீ 7118.

இந்த ஹதீஸல் கூறப்படும் தீவிபத்து என்பது வேறு. பெரும் அடையாளங்களில் ஒன்றாகக் கூறப்படும் ‘பெரும் நெருப்பு’ என்பது வேறு.

‘இந்த நெருப்பு ஹிஜ்ரி 654 நடந்து முடிந்து விட்டது. ஹிஜாஸ் பகுதியில் இந்த தீவிபத்து ஏற்படும் முன் பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்திற்குப் பின் ‘அல்ஹர்ராப்’ பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, எரிமலை ஒன்றும் வெடித்தது. இந்த நெருப்பு, புஸ்ரா நகரின் எல்லை வரைத் தெரிந்தது’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, சிறிய அளவில் அணைக்க இயலாத அளவுக்கு ஏற்படும் நெருப்பை மறுமை நாளின் அடையாளம் எனக்கருதத் தேவை இல்லை. இதே வேளையில் மறுமை நாளின் அடையாளமாக பெரும் தீவிபத்து ஏற்படும். அது அணைக்க இயலாத அளவுக்கு இருக்கும். இந்த நெருப்பின் வேகம் கூடுதலாக இருக்கும் என்பதோடு, அது மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும். மக்கள் உண்ண, உறங்க விரும்பினால் அதற்காக சிறிது அவகாசம் தரும். அதன்பின் மீண்டும் துரத்தும். எனவே, மறுமை நாளின் அடையாளமாக ‘பெரும் நெருப்பு’ ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வோமாக!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:50 am

வேண்டுகோள்!

இதுவரை மறுமை நாள் ஏற்பட உள்ளது என்பதை உணர்ந்திட சில அடையாளங்கள் உண்டு என்று நமக்கு நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள அடையாளங்களைக் கண்டோம். அவற்றில் பல முடிந்துவிட்டன, நிகழ்ந்து விட்டன, கண்கூடாக நாமும் கண்டுள்ளோம்.

பெரும் அடையாளங்களாக உள்ள ‘புகை மூட்டம், சூரியன் மேற்கே உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ் மறறும் மஹ்ஜுஜ் கூட்டம் வருகை, கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபுப் புகுதியில் ஒரு பூகம்பம், பெரும் நெருப்பு’ ஆகிய பத்து அடையாளங்கள் பற்றியும் அறிந்து கொண்டோம். இவை வெகு விரைவில் நிகழும் என்பதையும் அறிந்து கொண்டோம்.

மறுமை நாள் வெகுவிரைவில் வர உள்ளது. மறுமை வாழ்வே நிலையானது என்பதால் மறுமை நாள் சிறப்புற அமைய முயற்சிப்பதே சரியான அணுகுமுறையாகும்.

‘உலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமேயன்றி வேறில்லை. இறையச்சமுடையோருக்கு மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் அதை சிந்திக்க வேண்டாமா?... (அல்குர்ஆன் 6:32)

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும் ஒரு (வானவர்) அனைவரையும் அழைத்து, ‘சொர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்போதும் வாழ்வீர்கள். ஒரு போதும் மரணிக்க மாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு போதும் நோயாளியாக ஆக மாட்டீர்கள், மேலும் நீங்கள் இங்கு இளமையிலே இருப்பீர்கள். ஒரு போதும் முதுமையடையமாட்டீர்கள். மேலும் நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிப்பீர்கள். ஒரு போதும் கஷ்டப்பட மாட்டீர்கள்’ என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்கள் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அபூஹ{ரைரா (ரலி) நூல் - முஸ்லிம்.

எனவே மறுமையும், அதில் கிடைக்கும் சொர்க்க வாழ்க்கையுமே நிரந்தரமானது என்பதை உணர்ந்து, இந்த உலகில் வாழும்போதே நற்செயல் புhநிது, நல்லடியார்களில் ஒருவராக நாமும் மறுமைநாளில் சேர்ந்திருக்க முயற்சிப்போமாக!

அல்லாஹ் போதுமானவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:51 am

நன்றி: கே.எம்.முஹம்மது மைதீன்


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 12:04 pm

ரொம்ப விரிவான அழகான பதினை தந்த சகோதன் சிவக்கு நன்றி ஐ லவ் யூ அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 19, 2010 1:21 pm

மிக்க நன்றி தல உங்கள் பதிவுக்கு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 6 Logo12
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Oct 17, 2010 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக