புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
24 Posts - 65%
heezulia
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
11 Posts - 30%
cordiac
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
1 Post - 3%
Geethmuru
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
152 Posts - 56%
heezulia
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
9 Posts - 3%
prajai
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
1 Post - 0%
cordiac
நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_m10நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலமெல்லாம் துயரம் - தீபச்செலவன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 24 May 2011 - 9:23

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே மாதம் என்பது துக்கங்கள்
நிறைந்த காலம். இழப்புக்களும் தோல்விகளும் அவலங்களும் உக்கிரம் கொண்ட அந்த
நாட்கள் கனவுக்காகப் போராடிய மக்கள் தோல்வியடைந்து நிலமற்ற அவலத்தைப்
பெரியளவில் சுமக்கத் தொடங்கிய நாட்கள். எத்தனையோ அவலங்களை எல்லாம் சுமந்து
இறுதிவரை முள்ளிவாய்க்கால் அவலத்தை சுமந்த மக்கள் இன்று மேலும்
ஒடுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும்தான் ஈழப்போரின் முடிவாக, முடிவற்ற
துயரமாக நீளுகிறது. ஈழப்போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகச்
சித்திரித்து அதன்மீது கொடுமையான இராணுவப் போரை ‘மனிதாபிமான நடவடிக்கை’
என்ற பெயரில் தொடுத்து கனவு மிகுந்த மக்களைக் கொன்ற இலங்கை அரசு, இன்று
அந்த மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் மேலும் தனது அரசியலுக்காகத்
துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

அரசாங்கம் நடத்திய மூர்க்கத்தனமான போர் எங்கள் மக்களை மிகுந்த காயங்களுக்கு
உள்ளாக்கியிருக்கிறது. உறவுகளையும் உடல் உறுப்புக்களையும் நிலத்தையும்
இழக்க வைத்திருக்கிறது. கைகளை, கால்களை, கண்களை இழந்தவர்களும் பெரும்
காயங்களுக்கு உள்ளானவர்களும் தொடர்ந்து வாழ வழிதெரியாமல் துயர வெளியில்
நிற்கிறார்கள். இதில் பச்சிளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை
பேதமில்லாமல் போராயுதங்கள் சனங்களைத் தின்று காயப்படுத்தியுள்ளன. போர்
மனதாலும் உடலாலும் நிலத்தாலும் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உடலால்
ஏற்பட்ட காயங்களைத் தீர்க்க முடியாதிருக்கிறது. மனதால் ஏற்படுத்தப்பட்ட
காயங்கள் மேலும் மேலும் சிதைவுகளுக்கும் கிளறல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு
வலியெடுக்கும் காயங்களாகவே இப்பொழுதும் ஆறாதிருக்கின்றன.

அவலங்களுக்கு முடிவு கட்ட வேண்டிய மீள்குடியேற்றம் என்கிற நகர்வுகளில்
அரசாங்கம் செலுத்தியிருக்கும் அரசியல்களினால் எமது மக்கள் அனுபவிக்கும்
துன்பங்கள் இன்னும் கொடுமையானவை. ஈழத்து மக்களின் அரசியலையும் வரலாற்றையும்
கனவையும் நிலத்தையும் பல்வேறுவிதமாக சிதைக்கும் தந்திரங்களையும் போரையும்
மீள்குடியேற்றம் என்கிற நடவடிக்கை உள்ளடக்கி வைத்திருக்கிறது.

மீள்குடியேற்றத்தின் பொழுது தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
மக்கள் பேருந்துகளில் ஏற்றப்படுவார்கள். ஒரு நாள் முழுவதும் அந்தப்
பேருந்துக்களில் விசாரணைகளாலும் ஏத்தி இறக்கல்களாலும் அலைந்த பிறகு ஏதாவது
ஒரு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இறக்கி தடுத்து வைக்கப்படுவார்கள்.
அங்கு அந்த மக்கள் பற்றிய விபரங்கள் முழுவதும் துல்லியமாகப் பதிவு
செய்யப்படும். ஏற்கனவே தடுப்பு முகாம்களில் திரும்பத் திரும்பப் பதிவு
செய்த பொழுதும் மீண்டும் நடக்கும் இந்தப் பதிவில் புகைப்படம் பிடித்தல்தான்
அதிகமதிகம் அச்சத்தை தரும். குடும்பமாக நிறுத்தப்பட்டு வீட்டிலக்கம்
மற்றும் இராணுவப் பதிவிலக்கத்தை தூக்கி வைத்திருந்தபடி அந்தப் புகைப்படம்
எடுக்கப்படும். அவர்கள் இடையில் தங்க வைக்கப்படும் அந்தப் பாடசாலையில்
இரண்டு மூன்று நாட்கள் முதல் மாதக்கணக்கில் தடுத்து வைக்க நேரிடும்.
அதற்குப் பிறகு போரால் அழிந்த எதுவுமற்ற நிலத்தில் மக்கள் கொண்டு போய்
இறக்கி விடப்படுகிறார்கள்.

வீடுகள், கிணறுகள், மலசலகூடங்கள், கடைத்தெருக்கள், மரங்கள் எல்லாம் அழிந்து
அழிவு மேடாக இருக்கிற நிலத்தில் அழிந்த நகரத்தில் இருந்த எச்சங்களும்கூட
களவாடப்பட்டுள்ளன. மக்களின் தளவாடங்களில்தான் பெருமளவு இராணுவத்தின்
முகாங்களும் இராணுவத் தேனீரகங்களும் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. மக்கள்
தறப்பாள்களைக் கூடாரமாக இழுத்துக் கட்டிக் கொண்டு வாழ்க்கை தொடங்கினார்கள்.
சில நாட்களில் இந்திய மக்களின் அன்பளிப்பு என்று கூறப்பட்டு 12 தகரங்களும்
சில ரீப்பைத் தடிகளும் இருபத்தையாயிரம் ரூபா பணமும்
கொடுக்கப்பட்டிருந்தது. அதையும் பல இடங்களில் இதுவரையில் வழங்கவில்லை.
கடந்த 2010ஆம் ஆண்டு ஆறாம் மாதம் நிலத்திற்குக் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு
அண்மைய நாட்களில்தான் தகரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த சம்பவம் கிளிநொச்சி
நகரத்தில் நடந்திருக்கிறது. முல்லைத்தீவில் பல இடங்களில் இன்னும்
மீள்குடியேற்றம் நடைபெறவி;லலை. அந்தப் பகுதிகளில் வசித்த மக்கள்
முகாம்களில் வாடுகின்றனர். இதைவிட பெரும்துன்பம் மீள்குடியேற்றப்பட்ட பல
மக்கள் எந்த உதவிகளும் பெறாத நிலையில் இருக்கிறார்கள்.

இந்த மக்களின் வாழ்க்கையில் பொங்கும் துயரம் மிகவும் கொடுமையானது. ஏன் இந்த
வாழ்வு? ஏன் முள்ளிவாய்க்காலில் தப்பினோம்? இப்படி ஒரு வாழ்வு தேவையா?
செத்துப் போயிருக்கலாம்! என்று விரக்தி மிக்க கேள்விகள் அவர்களிடமிருந்து
வெளிப்படுகின்றன. நீட்டி நிமிர முடியாத இறப்பர் தறப்பாள் கூடாரங்களில்
வருடக்கணக்கில் மழைக்கும் வெயிலுக்கும் முகம் கொடுத்தபடி எமது மக்கள் ஏன்
இப்படி துன்புறுத்தப்படுகிறார்கள்? மக்களுக்கு வழங்க வேண்டி மிகுதி நிதிக்
கொடுப்பனவு வழங்கப்படவில்லை. மழைக்கும் வெயிலுக்கும் ஓரளவு
பாதுகாப்பாயிருக்க தற்காலிக வீடுகள் கூட கட்டிக் கொடுக்கப்படவில்லை. நாளை,
நாளை என்று வெறும் நாட்கள் கழிகின்றன. முள்ளிவாய்யக்கால்வரை போரால் மெலிந்த
மக்கள், தடுப்புமுகாமில் சிறையால் மெலிந்த மக்கள், இப்பொழுது சொந்த
நிலத்தில் புறக்கணிப்புக்களால் மெலிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏ-9 பாதையை ஒட்டியே ஓரளவு மீளக்குடியமர்வு வேலைகள் நடைபெற்றிருக்கின்றன.
ஏ-9 பாதையைத் தாண்டி கிராமங்களுக்குச் சென்றால் அரைக் கிலோ மீற்றர்
தூரத்திலியே மீள்குடியேற்றத்தின் விசித்திரங்களின் அவலங்களைக் காண
முடியும். கணவனை இழந்து, உழைக்கும் துணையை இழந்து, பிள்ளைகளை இழந்து,
சொத்தை இழந்து ஒவ்வொரு மக்களும் நாட்களைக் கடத்த அல்லாடுகிறார்கள்.
போருக்கு முகம் கொடுத்து எல்லாவற்றையும் இழந்து மெலிந்த உடல்களில் ஒட்டிக்
கொண்டிருக்கிற உயிரை வைத்திருக்கிற இந்த மக்களிடம் இன்னும் இருக்கிற
எதையெல்லாம் பிடுங்கலாம் என்கிற திட்டத்தில்தான் அரச செயல்படுகிறது. அந்த
மக்களுக்கான நிவாரணங்களைத் திருடுவதும் அந்த மக்களின் காணிநிலங்களைத்
திருடவும் கிள்ளிக் கொடுப்பதை ஆக்கிரமிப்பு அரசியலாக்கவும் தீவிரமான
நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

மக்களுக்கு ஒதுக்கப்பட்ட உழவு இயந்திரங்கள், தகரங்கள் என பல நிவாரணப்
பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட செயலாளர்
அலுவலகத்திலிருந்து சுமார் நானூறு தகரங்கள் கொள்ளையடித்த விடயங்கள்
வெளியில் தெரிய வந்திருந்தது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வழங்க
ஒதுக்கப்பட்டிருந்த உழவு இயந்திரங்களை சிங்களவர்களுக்கு வழங்கிய பொழுது
செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.

இனத்தின் விடுதலைக்காகப் போராடிய ஈழத்து மக்களின் கனவு முறியடிக்கப்பட்டு
பேரவலத்திற்கு உள்ளாக்கப்பட்டு நொந்து போயிருக்கிற மக்களிடத்தில் அவர்களின்
மீள் வாழ்க்கையைத் தடுத்து அதன் வேகத்தைக் குறைத்து நிவாரணங்களில் அரசியல்
செய்கிற நிலைமை எந்த மாற்றமுமின்றி அதிகாரத்தனமாக நீடித்து வருகிறது.
பசியுடன் வாழும் மக்களிடத்தில் அவர்கள் நம்பி வாழுகிற அதற்காய் போராடுகிற
நிலையில் ஆதாரமாயுள்ள அவர்களின் காணிநிலங்களையும் பறிப்பதற்குப் பல
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கியமாக விடுதலைப்புலிகளின்
காலத்தில் உருவாக்கப்பட்ட காணிகள், வீட்டுத் திட்டங்கள் என்று காரணம்
கூறப்பட்டு அவற்றை இராணுவத்தின் பாவனைக்கு எடுக்க முயற்சிக்கப்படுகிறது.
இதனால் வன்னியில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலத்திற்காகப்
போராடுகிறார்கள்.

கிளிநொச்சி நகரத்தை அண்டிய கிராமங்களை இராணுவ வசமாக்க இப்படி முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. சாந்தபுரம், பொன்னகர், இரத்தினபுரம் போன்ற கிராமத்து
மக்களின் காணிகளை அபகரிக்க முற்பட்ட பொழுது மக்கள் அதைக் கடுமையாக
எதிர்த்துப் போராடி நிலங்களை வென்றிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள்
தங்கியிருந்த இடங்களிலெல்லாம் இப்பொழுது இராணுவத்தினர்
முகாமிட்டிருக்கிறார்கள். மக்களுக்குரிய பல இடங்கள் இராணுவத்தினரால்
பாதுகாப்பு வலயங்களாக ஆளுகை செய்யப்படுகிறது. முல்லைத்தீவு மற்றும்
கிளிநொச்சியின் முக்கிய இடங்கள் பல இப்படி மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகரத்தில் பரவிப்பாஞ்சான் பாதுகாப்புத் தரப்பின் உயர்பாதுகாப்பு
வலயமாக்கப்பட்டு மக்கள் வாழ மறுக்கப்பட்டுள்ளது.

புலிகள் கொடுத்த காணிகள். புலிகள் உருவாக்கிய கிராமங்கள். அரசுக்குச்
சொந்தமான காணிகள், மக்கள் வசிக்க உகந்த காணிகள் அல்ல என்று பல காரணங்கள்
சொல்லி மக்களின் காணிகளை அபகரிக்க நிற்கிறார்கள். கிளிநொச்சி
இரத்தினபுரத்தில் நடந்த நிலப்பிரச்சினையில் வேறு இடங்களில்
குடியமர்ந்தால்தான் வீடு கட்டித் தருவோம் என்று கூறப்பட்டிருந்தது. காணி
நிலத்திற்குப் பதில் வீடு என்று பாதிக்கப்பட்டு நொந்து போன மக்களிடம் பேரம்
பேசுகிறார்கள். மக்களோ காலாவதியாகிக் கிழிந்த கூடாரங்களில் வாழும்
நாட்களைக் கொடுமையாகக் கழித்து வருகிறார்கள். அதற்குள் குழந்தைகள்,
படிக்கும் மாணவர்கள், நலிவடைந்தவர்கள், முதியவர்கள் என்று எல்லோரும்
தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். மழையும் வெயிலும் தொடர்ந்தும் மக்களை
வதைக்கிறது. இரக்கமற்ற வகையில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவுப் பொருட்களும் நிறுத்தப்பட்டு
வருகிறது. இதனால் ஏதுவுமற்ற இந்த மக்கள் பட்டினியை எதிர்கொள்ளப்
போகிறார்கள். இந்த நிவாரணப் பொருட்களால் ஓரளவு பசியைத் தீர்த்து மக்கள்
வாழ்ந்தவர்கள். இந்தியாவில் அழிந்த வீடுகளைத் திருப்பி அமைக்க வழங்கப்பட்ட
வீட்டுத்திட்ட நடவடிக்கை பூசை போட்டு அடிக்கல்லு நாட்டியதுடன் இருக்கிறது.
அதை நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்துக்
கொடுக்கப்படவில்லை. முதலில் இந்த மக்கள் அமைதியாக ஆறுதலாக தஞ்சமடைய
காயங்களை ஆற்ற ஒரு இருப்பிடம் தேவைப்படுகிறது. இந்த நிவாரணங்களே
மறுக்கப்படும் நிலையில் எங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையும்
தீர்வும் எப்பொழுது கிடைக்கப்போகிறது? கண்ணீரையும் இரத்தத்தையும்
உயிர்களையும் சிந்தி மக்கள் போராடிய போராட்டத்திற்குக் கிடைக்கும் தீர்வே
எல்லாத் துயரங்களையம் ஆற்றக் கூடியதாக இருக்கும். நிலத்திற்காகப் போராடும்
ஈழத்து மக்களின் நிலமெல்லாம் இப்படிச் சுமக்க முடியாத துயரமாகவே கொட்டி
அதிகமதிகம் விளைந்து கிடக்கிறது.

நன்றி : உயிரோசை


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 24 May 2011 - 9:47

ஈழ மக்களின் தற்போதைய நிலைமை மிகுந்த வேதனை அளிக்கிறது சோகம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 24 May 2011 - 10:46

இதற்க்கு ஒரு விடிவு கட்டாயம் வரும்.....
புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Tue 24 May 2011 - 14:15

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது உலகத்தின் பார்வைக்கு இந்த அநியாயங்களை எடுது காண்பிபதாகும் ...

அதற்கான தொடர் போராட்டங்களை ஆரம்பிக்க வேணும் ...புலம் பெயர் தமிழர் அந்த வழியில் தான் நன்றாக சென்று கொண்டு இருக்கிறார்கள்...
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக