புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகோவின் எதிர்காலம்?  Poll_c10வைகோவின் எதிர்காலம்?  Poll_m10வைகோவின் எதிர்காலம்?  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
வைகோவின் எதிர்காலம்?  Poll_c10வைகோவின் எதிர்காலம்?  Poll_m10வைகோவின் எதிர்காலம்?  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோவின் எதிர்காலம்?  Poll_c10வைகோவின் எதிர்காலம்?  Poll_m10வைகோவின் எதிர்காலம்?  Poll_c10 
52 Posts - 59%
heezulia
வைகோவின் எதிர்காலம்?  Poll_c10வைகோவின் எதிர்காலம்?  Poll_m10வைகோவின் எதிர்காலம்?  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
வைகோவின் எதிர்காலம்?  Poll_c10வைகோவின் எதிர்காலம்?  Poll_m10வைகோவின் எதிர்காலம்?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வைகோவின் எதிர்காலம்?  Poll_c10வைகோவின் எதிர்காலம்?  Poll_m10வைகோவின் எதிர்காலம்?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோவின் எதிர்காலம்?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Mar 23, 2011 10:23 am

- எஸ்.கே. செந்தில்

கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம் அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. அரசியல் சுனாமி எந்த நேரத்தில் யாரை வீழ்த்தும் என்பதை அறிந்து கொள்ளவும், அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வெறும் அரசியல் அனுபவம் மட்டும் போதாதது. சடுதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்து, அதற்கு கட்சியினரையும் தயார் படுத்த வேண்டும் என்கிற அனுபவத்தை நீண்டகால அரசியல் அனுபவமும் தமிழகம் முழுக்க இளைஞர்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள வைகோ, குறிப்பிட்ட சாதிக் கட்சித் தலைவரான ராமதாஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலுமே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் விதமாக அல்லது சில ஆயிரம் வாக்குகளையாவது கொண்டுள்ள மதிமுக இனி வரும் காலத்தில் தனது இந்த வாக்கு வங்கியை தக்க வைக்குமா? அல்லது பெரும் போட்டியில் பெருங்கட்சிகளிடம் தன் தொண்டர் பலத்தை பறிகொடுத்து விடுமா? என்பதே இப்போதுள்ள கேள்வி. திமுகவிலிருந்து அவர் வெளியேறிய நேரம் சுமார் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக இளைஞர்களைத் திரட்டி சென்னையில் பிரமாண்ட பேரணியை நடத்திக் காட்டினார். தமிழக அரசியலில் திமுகவின் ஆதிக்கம் முடிந்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு 19 மாவட்ட செயலாளர்கள் வைகோவின் பின்னர் சென்றார்கள். கால ஓட்டத்தில் அரசியற் களத்தில் முடிவெடுப்பதில் நேர்ந்த தள்ளாட்டத்தின் பின்னர் இப்போது பெரும்பலானவர்கள் தாய் கழகம் என்று சொல்லிக் கொள்ளும் திமுகவிற்கே திரும்பிச் சென்று விட்டார்கள். இப்போது வைகோவிடம் எஞ்சியிருப்பவர்கள் நீண்ட கால அரசியல் அனுபவம் அற்ற வெகு சிலரே. ஜெயலலிதா, முதுகில் குத்திய துரோகத்தை தாங்க முடியாதவராக தனது அண்ணாநகர் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். யாருடனும் அவர் இரண்டு மூன்று நாட்களாக பேசவில்லை. நாளை சென்னை மெரீனா கடற்கரையில் பார்வதியம்மாளின் அஸ்திக் கரைப்பில் தன் சகாக்களுடன் கலந்து கொள்கிறார்.
தேர்தலிலும், சினிமாவிலும் ஒரே பார்முலாதான். பந்தயத்தில் ஓடுகிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்கள். வைகோவும் ஓடுகிற குதிரைதான். ஆனால் குதிரை ஓடுவது பெரிதல்ல எதை நோக்கி ஓடுகிறோம் என்பதும் முக்கியம். தனக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற எண்ணம் வேண்டும். வைகோ தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராகப் போராடினார். அந்த ஆலை நிர்வாகம்தான் ஜெயலலிதாவின் தேர்தல் செலவுகளுக்கு திமுகவை தாக்குப் பிடிக்கும் வகையில் கொட்டிக் கொடுக்கிறது. அந்த நிர்வாகம் போட்ட ஒரே கண்டிஷன் வைகோ கூட்டணியில் இருக்கக் கூடாது என்று. ஆக ஜெயலிதா முதலில் ஒப்பந்தம் போட்டது தேர்தலுக்கு நிதி தருகிறவர்களோடு. இரண்டாவது நிதி தருகிறவர்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் கூட்டணியை அமைப்பது என்று. அதற்கான தரகர்கள் மூலம் விஜயகாந்தின் தேமுதிக வுடன் கூட்டணி பேரங்களை நடத்தி முடித்து விட்டு, ஆனால் அதை ரகசியமாக வைத்து ஏனைய கட்சிகளையும் பேசி விட்டு, வைகோ திமுக பக்கம் சாய வாய்ப்புக் கொடுக்காதவாறு காய் நகர்த்தினார் ஜெயலலிதா. அதாவது தானும் சீட் கொடுக்காமல் அவர் எதிரணிக்கும் போய்விடாமல் பார்த்துக் கொண்டார். அதனால்தான் ஐந்து தொகுதியில் தொடங்கி எட்டுக்கு வந்து 12 – ஐத் தாண்டாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள ரமதாசின் பமக 30 தொகுதிகளில் போட்டியிடும் போது பரவலாக வாக்கு வங்கியைக் கொண்ட மதிமுக இருபதுக்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமமானதுதான். அதனால் அவரது முடிவு சரி பிழைகளுக்கு அப்பால் இனி வைகோவுக்கு வேறு வழியில்லை. ஜெயலலிதாவின் இந்த வஞ்சகமான சூழ்ச்சியை அவர் அறிந்து கொள்வதற்குள் திமுகவில் சீட் பேரங்கள் முடிவுக்கு வந்து விட்டது.
தேமுதிகாவை அழைத்துப் பேசிய உடனேயே வைகோ வேறு மூவ் செய்திருந்தால் ஒரு வேளை திமுக தலைமையில் காங்கிரஸ் தவிர்த்த சிறந்த கூட்டணி ஒன்று உருவாகியிருக்கக் கூடும். இரு கட்சிகளுக்குள்ளும் நிலவிய ரகசிய பேரங்கள் வைகோவின் அரசியல் வாழ்வில் விளையாடி விட்டது. இனி என்ன செய்வது கட்சியை? தொண்டர்களை? எப்படிக் காப்பாற்றுவது?
எஞ்சியிருக்கும் கட்சியை திமுகவிடம் பறி கொடுக்குமா? அல்லது இனி வரப்போகும் நாட்களில் கட்சியை வளர்த்து மேலும் பலத்தை வளர்ப்பாரா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விதான். இன்றைய அரசியலில் ஆதாயம் இல்லாமல் எந்த தொண்டனும் லட்சியம் கொள்கை என்றெல்லாம் எந்த கட்சிக்கும் வரமாட்டான். எங்கும் வியாபித்து விட்ட ஊழல் தொண்டனிடமும் பற்றிக் கொண்டிருக்கும் சூழலில் அதிருப்தியடைந்து விட்ட மதிமுக தொண்டர்களை திமுக அபகரித்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. இந்நிலையில்தான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் கருணாநிதி வைகோவுக்கு செய்ததை எல்லாம் சுட்டிக் காட்டி ஆரிய மாயை முதுகில் குத்தி விட்டது என்று குத்திக்காட்டியிருக்கிறார். கருணாநிதியை ஆதரியுங்கள் என்பதை சுற்றிவளைத்துச் சொல்லும் வீரமணியின் கடிதத்தை இரண்டு விதமாகவும் பார்க்கலாம். வீரமணி மூலமாக கருணாநிதி வைகோவை என்னை ஆதரியுங்கள் அடுத்த தேர்தலில் உங்களை கவனிப்பேன் என்பது ஒன்று. இன்னொன்று என்னை ஆதரிக்க விட்டால் வரும் நாட்களில் உங்கள் கட்சியை இல்லாமல் ஆகி விடுவேன் என்பது இன்னொன்று. இப்போது வைகோவுக்கு வேறு வழியில்லை. திமுகவை அனுசரித்துச் செல்வதும் அதன் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து பேசுவதன் மூலம் நடைபெற இருக்கும் தேர்தலில் திமுகவை ஆதரித்து கட்சியை காப்பாற்றிக் கொள்வதும். இல்லை என்றால் இரண்டு அரசியல் ஆக்டோபஸ்களுக்கு மத்தியில் அவர் கட்சியை கலைத்து விடக் கூட நேரலாம். இது அரசியல் ஆருடம் அல்ல, அனுமானம்.
This entry was[b]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 23, 2011 10:32 am

சைக்கோவின் சாரி வைக்கோவின் எதிர்காலம் இனி தான் நல்லாயிருக்கும். அம்மாவிடமிருந்து மீண்டும் தனது அம்மாவிடம் சென்றுள்ளாரே? புன்னகை

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 23, 2011 10:33 am

கண்டிப்பா அவரோட எதிர்காலம் வைகோவின் எதிர்காலம்?  Question-mark

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 10:53 am

அந்தோ பரிதாபம்தான்



வைகோவின் எதிர்காலம்?  Uவைகோவின் எதிர்காலம்?  Dவைகோவின் எதிர்காலம்?  Aவைகோவின் எதிர்காலம்?  Yவைகோவின் எதிர்காலம்?  Aவைகோவின் எதிர்காலம்?  Sவைகோவின் எதிர்காலம்?  Uவைகோவின் எதிர்காலம்?  Dவைகோவின் எதிர்காலம்?  Hவைகோவின் எதிர்காலம்?  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 23, 2011 10:54 am

மிகவும் பரிதமாக உள்ளது!??

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Mar 23, 2011 11:02 am

அரசியல் ஒரு சாக்கடை , அடுத்தவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் காலில் விழுவதும் , மீண்டும் அவரை தூற்றுவதும் , எல்லாமே அரசியலில் சகயம் தானே ..
சிரி சிரி சிரி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
வைகோவின் எதிர்காலம்?  Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:45 pm

இதில் குறிப்பிடப்படாத மூன்றாவது வழியும் இருக்கிறதே..? அது தன்னம்பிக்கையுடன் தோற்றாலும் பிரச்சினை இல்லை என்று தனித்து தேர்தலில் நிற்பது.. செலவு செய்ய வேட்பாளர்களை பொறுப்பு ஒப்படைத்து தனது கட்சி இயக்கத்தில் உள்ளது என்பதைக் காட்டிக்கொள்ளவாவது தனித்து குறிப்பிட்ட சில தொகுதிகளில் நின்று இருக்கலாமே.

இப்படி புறமுதுகிட்டு ஒளியும் நிலையை விட அது மேலானதன்றோ,,>






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக