புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_m10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_m10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_m10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_m10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_m10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_m10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_m10பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 24, 2011 9:22 am

மது பாட்டில்கள், கற்கள் வீசி தாக்கியதில் பெண் துணை கமிஷனர் உள்பட 35 போலீசார் காயம்



சென்னையில் நேற்று நடந்த பஸ் தின ஊர்வலம் பயங்கர கலவரமாக வெடித்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் துணை கமிஷனர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 35 போலீசாரும், பொதுமக்கள் 6 பேரும் காயமடைந்தனர்.

பஸ் தினம்

சென்னையில் போலீஸ் தடை உத்தரவை மீறி ஐகோர்ட்டு கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் பஸ் தின விழாவை பஸ்களில் ஊர்வலமாக சென்று கொண்டாடி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகுகிறார்கள். சென்னையில் இது அன்றாட காட்சியாக அரங்கேற்றப்படுகிறது.

நேற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15பி மாநகர பஸ்சில் பஸ் தின விழா கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தனர்.

முதலில் சென்னை பாரிமுனையில் இருந்து மாணவர்கள் 15பி பஸ்சில் ஊர்வலமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வழி நெடுக பாரிமுனையில் இருந்து ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையிலும், கீழ்ப்பாக்கம் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊர்வலம்

இறுதியில் பகல் 11 மணி அளவில் சுமார் 300 மாணவர்கள் எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கூடினார்கள். முதலில் அவர்களுக்கு பஸ்களை வழங்க மாநகர போக்குவரத்துக்கழகம் மறுத்தது. ஆனால் போலீசாரிடம் பேசி ஏற்பாடு செய்து அமைதியாக செல்வோம் என்று மாணவர்கள் உறுதி கொடுத்ததால் 3 பஸ்கள் வழங்கப்பட்டன.

அந்த 3 பஸ்களிலும் மாணவர்கள் ஏற்றப்பட்டு துணை போலீஸ் கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் விஜயராகவன், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் போலீஸ் படையோடு மாணவர்கள் சென்ற பஸ்களுக்கு பின்னால் பாதுகாப்புக்காக சென்றனர்.

மாணவர்களும் ஆட்டம் பாட்டத்தோடு கட்டுக்கோப்பாக சென்றனர். சில குறும்புக்கார மாணவர்கள் அவ்வப்போது சேட்டையில் ஈடுபட்டார்கள். போலீசார் அதை சமாளித்தபடி சென்றனர். பகல் 12.30 மணி அளவில் மாணவர்கள் ஊர்வலமாக சென்ற பஸ்கள் பச்சையப்பன் கல்லூரி வாசலை சென்றடைந்தது.

மாணவர்கள் நடனமாடியபடியும், உற்சாகமாக கோஷம் போட்டபடியும் ஆட்டம் பாட்டத்தோடு பஸ்களை விட்டு இறங்கினார்கள். ஒரு பகுதி மாணவர்கள் அமைதியாக கல்லூரிக்குள் சென்று விட்டனர்.

வாக்கு வாதம்

ஆனால் மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரிக்குள் போக மறுத்து தொடர்ந்து கல்லூரி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். "ஊர்வலம்தான் நல்லபடியாக முடிந்து விட்டதே பின்னர் ஏன் இங்கு நிற்கிறீர்கள்? அமைதியாக கலைந்து கல்லூரிக்கு செல்லுங்கள்'' என்று போலீசார் திரும்பத் திரும்ப கூறினார்கள்.

ஆனால் மாணவர்கள் எங்களை சந்தோஷமாக பஸ் கூரையில் நடனமாடுவதற்கும், ரோட்டில் நடனமாடி வருவதற்கும் எங்களை அனுமதிக்கவில்லை. பஸ் தினம் கொண்டாடுவது எங்களது உரிமை. எவ்வளவோ ஊர்வலம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அப்போது மட்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லையா? வருடத்தில் ஒரு நாள் நாங்கள் சந்தோஷமாக இந்த விழாவை கொண்டாடுகிறோம். பொதுமக்கள் எங்களுக்காக கஷ்டத்தை பொறுத்துக்கொள்வார்கள். எங்களை சந்தோஷமாக விழாவை கொண்டாட போலீசார் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்? என்று வாக்குவாதம் செய்தனர்.

கோர்ட்டு கண்டனம்


உடனே துணை கமிஷனர் லட்சுமி இப்போது நாங்கள் ஏற்பாடு செய்துதானே நீங்கள் பஸ்சில் ஊர்வலமாக வந்தீர்கள், நீங்கள் பஸ்சில் ஊர்வலமாக வருவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் ரோட்டில் நடனமாடி சென்று பஸ் நிறுத்தங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பெண்களை கிண்டல் செய்கிறீர்கள், வழியில் இருக்கும் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டுகிறீர்கள், இது எந்த வகையில் நியாயம்? இது சட்டத்திற்கு புறம்பானது அல்லவா? அதனால்தான் நாங்கள் நடனமாடி செல்வதற்கு அனுமதி மறுக்கிறோம். ஒருநாள் என்றால் பரவாயில்லை. கடந்த 15 நாட்களாக ஒவ்வொரு பிரிவினராக ஊர்வலம் செல்கிறீர்கள். நாங்களும் பொறுமையோடு உங்களை காவல் காத்து வருகிறோம். ஆனால் ஐகோர்ட்டு கடுமையாக கண்டித்துள்ளது. போக்குவரத்துக்கு இடைïறு செய்யப்படுவதாலும், பொதுமக்களுக்கு இடைïறு செய்யப்படுவதாலும் பஸ் தின ஊர்வலத்திற்கு ஏன் அனுமதிக்கிறீர்கள் என்று ஐகோர்ட்டே போலீசை கண்டித்துள்ளது. ஐகோர்ட்டுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டவர்கள். இருந்தாலும் மாணவர்களின் சந்தோஷத்திற்காக பஸ்களை ஏற்பாடு செய்து உங்களை ஊர்வலம் வருவதற்கு அனுமதித்துள்ளோம் என்று மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

மாலை, மது பாட்டில் வீச்சு


இந்த நேரத்தில் திடீரென்று துணை கமிஷனர் லட்சுமி மீது மாலைகளும், மதுபாட்டில்களும் வீசப்பட்டன. மாணவர்களில் சிலர் அவரை நோக்கி தள்ளியபடி வந்தார்கள்.

துணை கமிஷனர் தாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உதவி கமிஷனர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் குறுக்கே புகுந்து மாணவர்களை தடுத்தார்கள்.

அப்போது அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. டிïப் லைட்களையும் அவர்களை நோக்கி வீசினார்கள். இதில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு தலையில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது. அவர் ரத்தம் கொட்ட, கொட்ட மாணவர்களோடு போராடியபடி இருந்தார். உதவி கமிஷனர் விஜயராகவனும் கையில் விரல்களில் காயம் ஏற்பட்டது.

பஸ்கள் மீது கல்வீச்சு

அப்போது ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. போலீசார் மீது வீசப்பட்ட கற்கள் ரோட்டில் சென்ற வாகனங்கள் மீது விழுந்தன. ஒரு பஸ் மீதும் கல்வீசப்பட்டது. இதில் வாகனங்கள் சேதமடைந்தன. அதில் பயணம் செய்த பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது.

அதே நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் இருந்து சரமாரியாக கற்களும், செருப்புகளும், உடைந்து போன டிïப் லைட்களும், இரும்பு பைப்களும் வீசப்பட்டன.

நிலைமை மோசமானதால் போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினார்கள். மாணவர்களை லத்தியால் அடித்து விரட்டியபடி சென்றனர்.

போலீசார் விரட்ட ஆரம்பித்ததும் கல்லூரி முன்பு திரண்டிருந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு உள்ளே ஓடினார்கள். கல்லூரி வளாகத்திற்குள் சுமார் 50 அடி தூரம் இரண்டு பக்கங்களிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த 50 அடி தூரம் மட்டும் போலீசார் விரட்டிச் சென்றனர். மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்திற்கு போய் விட்டனர். துணை கமிஷனர் லட்சுமியும், உதவி கமிஷனர் விஜயராகவனும், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியும் போலீஸ் படையினர் அத்துமீறாமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள்.

போர்க்களம் போல

துணை கமிஷனர் லட்சுமி போலீஸ் படைக்கு நேரடியாக தலைமை தாங்கியிருந்தார். மாணவர்களின் தாக்குதலை நாம் தாங்கிக்கொள்வோம். அவர்களை யாரும் லத்தியால் அடிக்கக் கூடாது என்று ஆவேசமாக கத்தியபடி போலீஸ் படையை கட்டுப்படுத்தினார்.

இதனால் போலீஸ் படையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை காயப்படுத்தவில்லை. சத்தம் போட்டபடி விரட்டி சென்றார்கள். போலீசார் 50 அடி தூரம் விரட்டி செல்வதும், அதன் பிறகு வெளியே வருவதும், போலீசார் வெளியே வந்தவுடன் மாணவர்கள் மீண்டும் திரண்டு வந்து கற்களையும், கட்டைகளையும் வீசுவதும் தொடர்ந்து அங்கு ஒரு போர்க்களக் காட்சி போல நடந்து கொண்டிருந்தது.

கல்லூரி வாசல் முன்பு கற்களும், செருப்புகளும், இரும்பு பைப்களும், டிïப் லைட்களும் சிதறி கிடந்தன. தொடர்ந்து கற்கள் வீசப்பட்டதால் ஏராளமான போலீசார் தலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஆம்புலன்ஸ் வேனில் ஆஸ்பத்திரிக்கு ஏற்றி செல்லப்பட்ட வண்ணம் இருந்தனர்.

பிற்பகல் 12.45 மணியில் இருந்து 2.30 மணி வரை இந்த போர்க்களக் காட்சி தொடர்ந்து அரங்கேறியபடி இருந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்து கற்கள் பறந்து, பறந்து வந்து போலீசார் மீது விழுந்தன. போலீசார் இரும்பு தடுப்புகளை கொண்டு தாங்கியபடி இருந்தனர்.

முதல்வர் சமரசம்

நீண்ட போர் முடிந்த பிறகு கல்லூரி முதல்வர் சேகர் ஆசிரியர்களோடு அங்கு வந்தார். அவர் மாணவர்களை சமாதானப்படுத்தி பார்த்தார். ஆனால் மாணவர்கள் கேட்டபாடில்லை. அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்து போலீசாரை கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு துணை கமிஷனர் லட்சுமி மாணவர்களை கற்கள் வீசுவதை நிறுத்தச் சொல்லுங்கள். அமைதியாக கல்லூரியை விட்டு வெளியே போகச் சொல்லுங்கள். நான் உறுதி கொடுக்கிறேன். அவர்கள் கலைந்து செல்லும் போது நாங்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம். பிரச்சினை இத்தோடு முடியட்டும். ஆனால் தொடர்ந்து கற்கள் வீசப்படுவதால் ரோட்டில் செல்லும் பொதுமக்களும், வாகனங்களும் தாக்கப்படுகின்றன. இதை நாங்கள் எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்று கல்லூரி முதல்வரிடம் கேட்டார்.

அதன் பிறகு கல்லூரி முதல்வர் சேகர் மாணவர்களை பார்த்து பேசுவதும், அதன் பிறகு போலீஸ் அதிகாரிகளை சந்திப்பதுமாக அங்கும், இங்கும் வந்து போய் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் மத்திய சென்னை இணை கமிஷனர் சாரங்கன் அங்கு போலீஸ் படையோடு வந்து சேர்ந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் உடனடியாக வரமுடியவில்லை என்று அவர் கூறினார். அவர் கல்லூரி முதல்வர் சேகரை அழைத்து கடுமையாக எச்சரித்தார்.

கட்டுப்படுத்துங்கள்

கல்லூரி முதல்வரிடம் அவர் கூறும்போது, துணை கமிஷனர் லட்சுமியை மாணவர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி இழிவாக திட்டியுள்ளனர். மது பாட்டில்களை வீசியிருக்கிறார்கள். தண்ணீர் பாட்டில்களையும், பால் பாக்கெட்டுகளையும் வீசியுள்ளனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை ஒரு பெண் என்றும் பார்க்காமல் கற்களை வீசி தாக்கி காயப்படுத்தியுள்ளனர். கல்வீச்சில் போலீஸ் தரப்பில் உதவி கமிஷனர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். டி.பி. சத்திரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்கும் வயிற்றில் கல் எறி பட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்ட போலீசார் ரத்தக் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக மாணவர்களின் பஸ் தின ஊர்வலத்தை அனுமதித்து நாங்கள் பொறுமை காத்திருந்தோம். இதற்கு மேலும் நாங்கள் எப்படி பொறுமை காக்க முடியும். இவ்வளவு நடந்த பிறகும் மாணவர்கள் மீது பெரிய அளவில் தடியடி நடத்தப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி அவர்களுடைய தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். மாணவர்களை நீங்கள் கட்டுப்படுத்துங்கள் அல்லது எங்கள் கையில் பொறுப்பை ஒப்படையுங்கள், நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். 15 நிமிடம் கால அவகாசம் தருகிறேன். அதற்குள் மாணவர்களை கட்டுப்படுத்துங்கள் என்று கண்டிப்பாக கூறினார்.

அதன் பிறகு ஜெயக்குமார் என்ற மாணவரை போலீசார் கைது செய்து வைத்துள்ளார்கள் என்றும், அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர் சேகர் கேட்டுக்கொண்டார். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். முதலில் மாணவர்களை கலைந்து போகச் சொல்லுங்கள் என்று சாரங்கன் கூறினார்.

கலைந்தனர்

இதையொட்டி கல்லூரி முதல்வர் மீண்டும் மாணவர்களோடு சமாதானப் பேச்சு நடத்தினார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் சுமார் 600 பேர் கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தார்கள். போலீசார் அவர்களை எதுவும் செய்யவில்லை. மாணவர்கள் கலைந்து சென்ற பிறகு அந்த பகுதியில் பஸ் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. அதுவரை பஸ்கள் உள்பட வாகனங்கள் நியூ ஆவடி ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். சுமார் 2 மணி நேரம் அந்த பகுதி ஒரு போர் நடந்தது போல போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் நடந்து முடிந்தது.

மாணவர்கள் கலைந்து சென்ற பிறகு அமைதி திரும்பிய போர்க்களத்தைப் போல அந்த பகுதி காணப்பட்டது. கல்லூரி வளாகத்திற்குள்ளும், கல்லூரி வாசல் முன்பு மெயின் ரோட்டிலும் கற்களும், செங்கல்களும் குவிந்து கிடந்தன. தொடர்ந்து துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நின்றனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

காயமடைந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்ட 35 போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதிக காயம் பட்டவர்களுக்கு கட்டு போடப்பட்டது. லேசான ரத்த காயத்தோடு வந்தவர்களுக்கு சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. பொது மக்களில் 6 பேர் காயம் அடைந்தனர். கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், இணை கமிஷனர் சாரங்கன் ஆகியோர் காயமடைந்த போலீசாரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

மாணவர்களுக்கும், போலீசாருக்கும் நடந்த இந்த மோதல் போருக்கு பிறகும் பஸ் தின ஊர்வலங்கள் இனிமேலும் அனுமதிக்கப்படுமா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

தினதந்தி



பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 24, 2011 9:22 am

பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் First24

பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Cni01


பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Cni02

பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Cni03



பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 24, 2011 9:31 am

இவனுங்க எல்லாம் படிக்க வராங்களா இல்லை ரௌடி தானம் பண்ண வாரங்களா என்று தெரியவில்லை .....
ஏற்க்கனவே இங்கே போக்குவரத்து நெரிசல் ரொம்ப கம்மி ... இதில் இவங்க பண்ணுற அட்டகாசத்தில் இன்னும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தான் மிச்சம்...
போலீஸ்காரங்களும் மனிதர்கள் தானே ... அவர்களுக்கும பொறுமை ஒரு எல்லை வரையில் தானே உண்டு ...

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 24, 2011 11:52 am

கோர்ட் தட விதிச்ச பின்ன போலீஸ் ஏன் இவால பஸ் டே நு ஒரு போராட்டதுக்கு அனுமதிச்சாகா???



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் 812496
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Feb 24, 2011 11:54 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 24, 2011 11:59 am

எதுக்கு போலீஸ் அனுமதி கொடுக்கணும்,கல்லடி படணும்.அந்த மாணவர்களின் பெத்தவங்களை கொண்டு வந்து ஒரு மணி நேரத்துக்கு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கணும்.அப்பதான் மத்தவங்களுக்கு பயம் வரும்




பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Uபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Dபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Aபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Yபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Aபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Sபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Uபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Dபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் Hபஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 24, 2011 12:04 pm

பெத்தவக என்ன பாவம் பன்னீனாக ? எல்லாரும் உங்க தம்பீ மாத்ரி வீட்டுக்கு அடைங்கீ ஒடுங்கீ இருபாகலா? புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம் 812496
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 24, 2011 12:11 pm

கோவணம் மாற்றக் கூடக் காசில்லாமல் தன் பிள்ளைகளிப் படிக்க வைக்கும் தந்தைக்க்கு மகன் ஆற்றும் உதவி இதுவாகத்தான் இருக்கும் சுதா அக்கா!எல்லாம் நேரம்.இவர்களெல்லாம் படித்து கிழித்து..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Feb 24, 2011 7:20 pm

போலீசார்களும் மனிதர்கள் தானே அதுவும் பெண் யென்றும் பாராமல் ரௌடி தனம் செய்த மாணவர்களை பார்த்து வெட்கப் படுகிறேன் வேதனை படுகிறேன். கஷ்டப் பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இது தானா? தப்பு தம்பிகளா ஒரு கேஸ் ரிக்கார்ட் ஆனா உங்க எதிர்காலம் என்ன ஆகும் தெரியுமா? மானவர் சமுதாயம் வருங்கால தூண்கள் இது உங்களுக்கு தெரியுமா? படிப்பு மட்டுமே போதுமா? பண்பு வேண்டாமா?கலாம் அவர்கள் கனவு இது தானா?

போலீசார்களின் கஷ்டங்கள் உங்களுக்கு தெரியுமா? இருதலைகொல்லி எறும்பு போல ஒரு பக்கம் அரசியல் தலைவர்கள் மறுபக்கம் அதிகாரிகள் இருவருக்கும் பதில் சொல்ல வேண்டும்.விதிவிலக்காக சில கருப்பு ஆடுகள் இருந்தாலும் நேர்மையான பல போலீஸ் அதிகாரிகள் இருப்பதால் தான் நாம் யெல்லாம் நிம்மதியாக வெளியில் சென்று வருகிறோம்.அரசியல் காரணங்களால் இன்று போலீசார்கள் பலி கடா ஆக்கப் பட்டு இருக்கிறார்கள்.

நீங்கள் உண்மையான மனசாட்சிக்கு பயந்த கலாம் கனவு கண்ட மாணவர்களாக இருந்தால் மானசீகமாக மன்னிப்பு கேளுங்கள் .சில அரசியல் களிசடைகளின் வாரிசுகளின் பேச்சை கேட்டு எதிர் காலத்தை வீண் செய்து விடாதீர்கள்.பச்சையப்பன் கல்லூரியில் படித்த பல தலைவர்களை போல் தொலில் அதிபர் போல் நீங்கள் வர வேண்டும்.செய்வீர்களா ?



🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu Feb 24, 2011 11:03 pm

படித்த மிருகங்க்களா?இல்லை படித்த பாமரர்களா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக